Jump to content

ரம்பாவுக்கு ரூ 1 கோடி மதிப்பில் மோதிரம் அணிவித்த இந்திரன்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ரம்பாவுக்கு ரூ 1 கோடி மதிப்பில் மோதிரம் அணிவித்த இந்திரன்!

வெள்ளிக்கிழமை, ஜனவரி 29, 2010, 11:17[iST]

'அடப்பாவி... எப்படி கவுந்தான் இந்தாளு' என்று படிப்பவர்கள், கேள்விப்படுபவர்கள் கமெண்ட் அடிக்கும் அளவுக்கு சீரும் சிறப்புமாக நடந்து முடிந்துவிட்டது ரம்பா நிச்சயதார்த்தம்.

இதுவரை மணமகன் புகைப்படத்தைக் கூட வெளியிடாமல் பொத்திப் பொத்தி வைத்திருந்த ரம்பா, ஒருவழியாக இவர்தான் மாப்பிள்ளை என்று ஒரு தமிழ் தொழிலதிபரைக் காட்டியுள்ளார். அவர்தான் இந்திரன். கனடாவில் மேஜிக்வுட்ஸ் எனும் நிறுவனத்தை நடத்துபவர். இதன் தொழிற்சாலை இந்தியாவில், சென்னையில் உள்ளது.

விளம்பரத் தூதராக ரம்பாவை ஒப்பந்தம் செய்தார் இந்திரன்... ரம்பாவோ அவரை வாழ்க்கைத் துணைவராகவே ஒப்பந்தம் செய்து அன்லிமிடட் கால்ஷீட் கொடுத்துள்ளார்.

இவர்களின் நிச்சயதார்த்தம் சென்னை அடையாறு கேட் ஹோட்டலில் நடந்தது.

நிச்சயதார்த்தத்துக்கு இந்திரன் அளித்த வைர மோதிரத்தின் விலை ரூ 1 கோடிக்கும் அதிகம் என்பதுதான் கோடம்பாக்க நடிகைகளை வாய்பிளக்க வைத்துள்ளது (இந்திரனை ரம்பா பொத்தி வைத்ததன் ரகசியம் இதுதானோ!).

தானும் இந்திரனுக்கு சளைத்தவரல்ல என்பதைக் காட்டும் விதமாக வைர மோதிரம் பரிசளித்தாராம் ரம்பா.

மார்ச் 27ம் தேதி இருவருக்கும் திருப்பதியில் கல்யாணம் நடக்கிறது. திரையுலகில் ரொம்ம்ப செலக்டிவாக மட்டுமே ஆட்களை அழைக்கப் போகிறார்களாம். கண்டிப்பாக பத்திரிகையாளர்கள் யாரும் பங்கேற்கக் கூடாதாம்.

நல்லாருந்தா சரி.

தகவல் தட்ஸ் தமிழ் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

எனது கனவுக்கன்னி :lol: ரம்பாவுக்கு கலியாணமா...... :lol:

எனக்கு ஹாட் அட்டாக் வரப்போகுது. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் இரண்டு தடவை பதிந்து விட்டது ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் அந்த மனிதர். ஏமாறப்போறார். ஏமாற்றப்படப்போறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குட்டி ......மேலதிக தகவல், படங்களுடன் போட்டமைக்கு மிக்க நன்றி.

Link to comment
Share on other sites

குட்டி ......மேலதிக தகவல், படங்களுடன் போட்டமைக்கு மிக்க நன்றி.

படங்கள் போட்டது எல்லாரும் பார்க்கத் தானே நிலாமதி அக்கா... இதுக்கெல்லாம் ஏன் நன்றி?

பாடல் வரிகள் சிறி அண்ணாவின் சார்பிலை போட்டது....... :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

SalakkuSalakku.GIF

குட்டி,

சலக்கு சலக்கு ஜங்

ஜங் ஜக்கு ஜங், ஜாய் ஜங்கக்கு ஐங் ஐங் சையா...... என்றால் என்ன? :lol:

Link to comment
Share on other sites

குட்டி,

சலக்கு சலக்கு ஜங்

ஜங் ஜக்கு ஜங், ஜாய் ஜங்கக்கு ஐங் ஐங் சையா...... என்றால் என்ன? :lol:

சிறி அண்ணா, சத்தியமா எனக்கு அர்த்தம் எல்லாம் தெரியாது. :lol: :lol: அந்தப் பாடலை எழுதிய பொன்னியின் செல்வனிடம் கேட்டால் தான் அர்த்தம் தெரியும்.

குத்து மதிப்பா ஊகிச்சால், அது காலில் உள்ள கொலுசின் ஓசை போலவே ஊகிக்க முடிகிறது. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி பொடியன்ரை முகத்தையும் பக்கத்திலை நிக்கிறவையையும் பாக்கேக்கை நம்ம ஊர்வாசனை அடிக்கிறமாதிரிக்கிடக்கு :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி பொடியன்ரை முகத்தையும் பக்கத்திலை நிக்கிறவையையும் பாக்கேக்கை நம்ம ஊர்வாசனை அடிக்கிறமாதிரிக்கிடக்கு :lol:

எனக்கும், அந்த பெடியனை புலம் பெயர் தேசத்திலை கண்ட மாதிரி கிடக்குது.

என்ன இருந்தாலும், ரம்பா இப்போ...... ஈழத்தமிழர்களுக்கு நெருங்கிய உறவா வந்த மாதிரி ஒரு சந்தோசம்.

Link to comment
Share on other sites

ஓ உதுதான் ரம்பாவோ. இவ மானாட மயிலாடவிட வாறவவோ. இல்லாட்டிக்கு அது வேற யாருமொ. இவ கார்த்திக்கோட நடிச்ச ஒரு படம் நினைவில இருக்கிது. அது சரி, மாப்பிள்ளையிண்ட தாடி சமச்சீர் இல்லாமல் இருக்கிதே? ஒரு பக்கம் கொஞ்சம் கூடவாய் வெட்டுப்பட்டுப்போச்சிது. தாடியை ஒழுங்காய் சீர் செய்ய தெரியாட்டிக்கு மழிச்சு விடுகிறதுதானே.

Link to comment
Share on other sites

ரம்பா நானிருக்கும் பகுதிக்கு அருகில்தான் குடிவரப்போகின்றா என்று ஒரு கதை பரவுது.... :lol:

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் இந்திரன்.

எனக்கு வடிவாக இவர்களை தெரியும்.பழையவைகளை கிளறுவது நல்லதில்லை.இருந்தாலும் ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கைகையுடன் விளையாடியவர் இவர்

Link to comment
Share on other sites

இந்த இந்திரன் மானிப்பாய் or சண்டிலிப்பாய். எங்கட புத்துஸ் சினேகினனாம். புத்து செய்தியை கேட்டதில இருந்து நித்திரையே இல்லை, தான் ரம்பாயை மிஸ் பண்ணிட்டன் என்று ஒரே புலம்பல்.

Link to comment
Share on other sites

.

எனது கனவுக்கன்னி :wub: ரம்பாவுக்கு கலியாணமா...... :D

எனக்கு ஹாட் அட்டாக் வரப்போகுது. :o

கனவே கலையாதே ரம்பா என்று பாடுங்கோ சிறி :D

அம்புலன்சுக்கு ரெலிபோனடிச்சிருக்கு வாசலைக் கவனியுங்கோ :D

.

ambulance-016.gifambulance-016.gifambulance-016.gif

.

வீட்டு வாசலுக்கு வந்திட்டுதோ அம்புலன்ஸ் :D

ரம்பா நானிருக்கும் பகுதிக்கு அருகில்தான் குடிவரப்போகின்றா என்று ஒரு கதை பரவுது.... :D

அப்ப வீட்டிலை பூசைநடக்கிறதும் கதையாகத்தான் போகுது :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் இந்திரன்.

எனக்கு வடிவாக இவர்களை தெரியும்.பழையவைகளை கிளறுவது நல்லதில்லை.இருந்தாலும் ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கைகையுடன் விளையாடியவர் இவர்

இப்ப மட்டும் என்னவாம். இதுவும் ஒரு விழையாட்டுத்தானே :D

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் இந்திரன்.

எனக்கு வடிவாக இவர்களை தெரியும்.பழையவைகளை கிளறுவது நல்லதில்லை.இருந்தாலும் ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கைகையுடன் விளையாடியவர் இவர்

... மானிப்பாயை சேர்ந்த நண்பர் ஒருவர் சொன்னார், உண்மை/பொய்மை தெரியவில்லை .... தாயகத்தில் அனாதை பிள்ளைகளுக்காக திரட்டப்பட்ட நிதியையும் பதம் பார்த்தவராம்!!!! .... உண்மையாயின் நல்லாக இருப்பார்!

Link to comment
Share on other sites

எல்லாம் இருக்கட்டும் சிநெகாவும் நமீகுட்டியும் குசுப்புவும் பிறீ தானே இல்லலலலல... :rolleyes: :rolleyes: :( :(

Link to comment
Share on other sites

ரம்பாவுக்கு அண்மையில் விலை மதிப்பான கார் ஒன்று கனடாவில் கிடைத்ததல்லோ? :lol: தகவல் சரியா?

Link to comment
Share on other sites

... மானிப்பாயை சேர்ந்த நண்பர் ஒருவர் சொன்னார், உண்மை/பொய்மை தெரியவில்லை .... தாயகத்தில் அனாதை பிள்ளைகளுக்காக திரட்டப்பட்ட நிதியையும் பதம் பார்த்தவராம்!!!! .... உண்மையாயின் நல்லாக இருப்பார்!

அடிக்கடி உங்களை ஒன்று கேட்க வேணும் என்று நினைக்கிறனான்...

திரியின் தலைப்பிற்கு சமந்தமில்லாதவாறு உங்கள் பதில்கள் இருப்பது ஏன்?

ரம்பாவுக்கு ரூ 1 கோடி மதிப்பில் மோதிரம் அணிவித்த இந்திரன்!

இந்த தலைப்பிற்கும், நீங்கள் எழுதி இருக்கும் பதிலுக்கும் ஏதும் சம்பந்தம் இருக்கா என்று எனக்கு விளங்கவில்லை.

தயவு செய்து நிர்வாகம் என்னை குறை நினைக்க கூடாது, நீண்ட காலமாக எனது மனதில் எழுந்த கேள்வியை இங்கே இணைத்து இருக்கிறேன்.

-நன்றி

சின்னப்பு அண்ணை எல்லாரும் ப்ரீ ஆக இருந்தாலும், நீங்கள் ப்ரீ ஆக இருக்கிறீங்களோ?? :lol:

Link to comment
Share on other sites

கனடா மேஜிக் வுட்ஸ் நிறுவன உரிமையாளர் இந்திரன், ரம்பா காதல் திருமணம், மார்ச் மாதம் திருப்பதியில் நடக்கிறது.

நாளை 27-ஆம் தேதி சென்னையில் அவர்களது திருமண நிச்சயதார்த்த விழா நடைபெறுகிறது. சில மாதங்களுக்கு முன், கனடா மேஜிக் வுட்ஸ் நிறுவனம், ரம்பாவை தங்கள் கம்பெனி விளம்பர தூதுவராக நியமித்தது. அந்நிறுவன உரிமையாளர் இந்திரன், ரம்பாவுக்கு ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள காரை அன்பளிப்பாக வழங்கினார். இதையடுத்து இந்திரனுக்கும், ரம்பாவுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்ய முடிவு எடுத்தனர். நாளை மாலை, சென்னையிலுள்ள நட்சத்திர ஓட்டலில் இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது. இதில் திரையுலகினர் கலந்து கொள்கின்றனர். திருமணம் மார்ச் மாதம் திருப்பதி கோயிலில் நடக்க உள்ளது. தேதி பின்னர் அறிவிக்கப்படும். திருமணத்துக்குப் பிறகு சினிமாவுக்கு முழுக்குப் போட்டுவிட்டு, கணவருடன் கனடாவில் குடியேறுகிறார் ரம்பா.

உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம், காதலா காதலா, குயிக் கன் முருகன் உட்பட தமிழ், தெலுங்கு, இந்தி, போஜ்புரி, கன்னடம், மலையாள படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ரம்பா. த்ரீ ரோஸஸ் படத்தை தயாரித்து நடித்த அவர், தற்போது விடியும் வரை காத்திரு படத்தை தன் அண்ணி பல்லவி பெயரில் தயாரித்து நடிக்கிறார்.

http://www.cmr.fm/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=2513

இது 26/01/2010 வெளியிடப்பட்ட செய்தி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. என்று......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.