Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

கோபம் ஏன் ஏற்படுகின்றது?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கோபம் ஏன் ஏற்படுகின்றது?

உண்மையான பலசாலி யாரெனில் தன் வலிமையால் மக்களை அடக்குபவன் அல்ல. மாறாக கோபம் வரும்போது தன்னை அடக்கிக் கொள்பவனே ஆகும்

"ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு, ஆத்திரம் அழிவைத் தரும்" என்பதெல்லாம் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து சொல்லப்படும் வழக்குகள்.

கோபம் ஏன் ஏற்படுகின்றது?

கோபம் என்பது உடல் ரீதியாக, மன ரீதியாக, சமூக ரீதியாக, உளவியல் ரீதியாக, உணர்ச்சிப் பூர்வமான, சுற்றுச்சூழல் சார்ந்த பல விஷயங்களுடன் நமக்கு உண்டாகும் எதிர்மறையான சூழ்நிலை காரணமாக உண்டாகிறது. நாம் சொல்வதை (நம்மைவிட எளியவர்கள் என்று நாம் நினைக்கும்) மற்றவர்கள் மதிக்காத போது...

நம்முடைய பிரச்சனைகளை உரியவர்கள் உடனே நிவர்த்தி செய்யாத போது... நாம் சொல்வது (தவறாகவே இருந்தாலும்) தவறு என்று பலர் முன்னிலையில் விமர்சிக்கப்படும் போது... எதிர்பார்த்த மரியாதை கிடைக்காத போது ...

இப்படியே பல காரணங்கள் உள்ளன.

ஒருவன் நம்மைப் பார்த்து "கழுதை" என்று திட்டும்போது நாம் "குரங்கு" என்று பதிலுக்குத் திட்டினால் அந்தச் செயல்தான் reaction ஆகும். ஆக உடனே சிந்திக்காமல் ஏற்படும் ஒரு வித அதிருப்தியான வெளிப்பாடு தான் கோபம். அல்லது நம்மை நாமே தாழ்த்திக் கொண்டு சிந்திக்கும் போது ஏற்படும் எதிர் விளைவு கோபமாகும். கோபம் தன்னையே அழித்து விடும்

மனிதத்துவம் என்பது சமூகத்துடன் ஒன்றி வாழ்வதாகும். ஒருவருக்கொருவர் அனுசரித்து - பாராட்டி - உதவி செய்து வாழ்வதாகும். இதற்கு பொறுமை இன்றியமையாததாகும். ஒரு மனிதனின் வெற்றிக்கு தடையாத இருப்பதில் மிக முக்கியமானது கோபமாகும். கோபம் கொள்வதால் நமது சிந்தனை, கவனம் போன்றன சிதறடிக்கப்படுகின்றன. சரியான சமயத்தில் செய்ய வேண்டிய செயல்கள் இதனால் பாதிக்படுகின்றன. நம்மை சுற்றி இருப்பவர்களைப் பற்றியும் சூழ்நிலையையும் உணராது நமது செயல்கள் பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன.

வாழ்வின் சந்தோசத்தை பறித்து விடும். (கோபமும் சந்தோசமும் ஒன்றுக்கொன்று எதிரானவைகள்) திருமணம் மற்றுமுள்ள தொடர்புகளை அழித்து விடும். தொழிலை முடக்கி விடும். காரணம் தொழில் என்பது தொடர்புகளுடன் சம்பந்தப்பட்டது. மனஇருக்கத்தை ஏற்படுத்தி இருதய வியாதிக்கு வழிவகுக்கும். முறையாக சிந்தித்து செயல்படுவதை தடுத்து நமது செயல்களை தவறானதாக்கி விடுகின்றது. கோபம், மாரடைப்பு முதலான இருதய நோய்களை உண்டாக்கி உயிரைப் பறித்து விடும் என்று வல்லுநர்கள் கூறுகின்றார்கள. 55வயதுக்கு கீழே உள்ளவர்கள் கோபப்பட்டால் அவர்கள் மாரடைப்பு உள்ளிட்ட இருதய வியாதிகளால் உயிரிழப்பதற்கான வாய்ப்பு 3 மடங்கு ஆகும்.

ஆனால் 55 வயதுக்கு கூடுதலாக இருந்தால் உயிரிழப்பு ஆபத்து 6 மடங்காக உயர்கிறது. கோபமானது இதய ரத்த நாளங்களை கடினமாக்கும் அடைப்புகளை திடீரென சிதைப்பதால், அங்கே அடைப்பு வேகமாக உண்டாக வாய்ப்பு ஏற்படும். இது மாரடைப்பில் விட்டு விடும். இதயத் தசைகளில் வலிப்பு, இதயத் துடிப்பில் பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், ஆஞ்சைனா எனப்படும் நிலையற்ற நெஞ்சுவலி போன்ற சிக்கல்களும் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் தான். மூளையை தாக்கும் பக்கவாதத்துக்கு கூட கோபம் காரணமாக அமைவதுண்டு. ஆக, கோபம் உங்களை அழிப்பதற்கு முன் நீங்கள் அதை அழித்து விட வேண்டியது முக்கியம்.

கோபத்தைக் கட்டுப்படுத்துதல்:

கோபம் வரும்போது குறிப்பிட்ட மனிதன் தன்னிலை இழக்கிறான். இதனால் தான், கோபத்தில் கொந்தளிப்பவர்களுக்கு வியர்வை, நடுக்கம், மூக்கு விடைத்துக் கொள்தல், தூக்கமின்மை, ஓய்வின்மை, நெஞ்சுவலி, மாரடைப்பு, ரத்த அழுத்தம் திடீரென அதிகரித்தல், எரிச்சல், தசைகள் கெட்டித்தன்மை ஆவது, தலைவலி போன்ற பல பிரச்சினைகள் தோன்றுகின்றன.

கோபத்தை குறைக்க சில வழிகள்:

கோபத்தின் முக்கிய காரணியான வெறுப்பை கைவிடுங்கள். மற்றவர்களையும் அன்போடு பாருங்கள். நிதானமாக கோபமூட்டிய நபரின் சூழ்நிலையை சிந்தியுங்கள். கோபத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை தவிர்த்திடுங்கள். உடனே உங்கள் மனதை வேறு விசயத்தில் திருப்புங்கள்.

கோபம் வருகிறது என்று தெரிந்ததும், ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள் அவசரம் ஒருபோதும் வேண்டாம். பொறுமையாக இருங்கள் நேரம் மேம்பாடு மற்றும் சுய கட்டுப்பாட்டை கடைப்பிடியுங்கள். செய்யும் வேலையை நேசத்துடனும், நேர்மையுடனும், குழப்பம் இல்லாமலும் செய்யுங்கள். கோபம் வருகிற சூழ்நிலைகளில் அதிகம் பேசாதீர்கள். மெளனமாக இருங்கள் நமது கெளரவம் பாதிக்கப்பட்டதை மறந்து மற்றவர்களை விட நமக்கு இறைவன் அளித்த வாய்ப்புகளை நினைத்து இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.

எவ்வளவு கோபம் ஏற்படுகிறதோ, அதைப் பொறுத்து 1 முதல் 100 வரையிலான எண்களை எண்ணிடுங்கள். சில நிமிடத்திற்கு உங்களது சூழ்நிலையை மாற்றுங்கள். அமர்ந்திருந்தால் எழுந்து நடங்கள். நடந்து கொண்டிருந்தால் சற்று நின்று கொள்ளுங்கள்.

முகத்தை கழுவுங்கள். அல்லது ஒரு சுகமான குளியல் போடுங்கள். நீண்ட நாள் சந்தோசமாக வாழ வேண்டுமானால் நிச்சயம் நாம் கோபத்தை குறைத்தாக வேண்டும ....

தகவல் ........வீரகேசரி ( கலைக்கேசரி)

Link to comment
Share on other sites

எனக்கெண்டால் கோபத்தை அடக்க வேண்டும் என்ற கோட்பாட்டில் உடன்பாடு இல்லை. கோபம் அற்ற மனிதன் வெறும் சடம் என்றே நினைக்கின்றேன். தன் மீதான / தன் இனத்தின் மீதான அநீதியைக் கண்டு வெகுண்டெழுபவரே இனத்தின் விடுதலைக்கான முதல் படியை எடுத்து வைக்கின்றார்.

சிரிப்பு, அழுகை, காமம், சந்தோசம் போல் கோபமும் ஒரு உணர்வுதானே. ஏன் அடக்க வேண்டும்? அதனை அடக்கின்றோம் என்று உண்மையில் அடை காக்கவே முயல்வோம். கோபம் வந்தவுடன் கொட்டித் தீர்த்து விட்டால் வஞ்சம் வைப்பதும், பழி உணர்சியை காவிக்கொண்டு பல காலத்துக்கு வாழ்வதும் தவிர்க்கப்பட்டு விடும் என்பது என் தனிப்பட்ட அனுபவம். பல தடவை கோபத்தில் நிறையப் பேரின் முகத்தை பதம் பார்த்திருந்தாலும், அவை எல்லாம் எனக்கு நன்மையையே தந்துள்ளது (பதம் பார்க்கப்பட்டவர் அதற்கு பிறகு நிறைய கவனமாக பழகுவார் :huh: )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

எனக்கு கோபம் ஏற்பட்டால், அதனை நேரடியாகவே சம்பந்தப் பட்டவரிடம் நிதானமாக தெரிவித்து விடுவேன்.

அதனையும் மீறி எனக்கு கோபம் ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை ஏற்படுத்தினால் எனது குரலை உயர்த்தி நியாயத்தை சொல்வேன்.

அவர் ஏற்றுக்கொண்டால் தொடர்ந்து பழகுவேன். இல்லையேல் ஒரே காய் வெட்டு வெட்டி விடுவேன்.

பிறகு அவருக்கு எனது மனதில் இடம் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோபத்துக்கு பிரதான காரனி தாழ்வு மனப்பாண்மை என்பது எனது

தனிப்பட்ட கருத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதிர் பார்த்து கிடைக்காத போது " கோபம்" வரும் என்பது என் கருத்து .....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.