• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

புரட்சிகர தமிழ்தேசியன்

செஞ்சி கோட்டை - சிதலமடையும் வரலாற்று சின்னம்..

Recommended Posts

செஞ்சி கோட்டை - சிதலமடையும் தமிழக வரலாற்று சின்னம்..

gingee-fort-2465_m.jpg

வரலாற்றில் செஞ்சி

தமிழக வரலாற்றில் செஞ்சிக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு, கோட்டைகள் எல்லாம் கட்டுவதற்கு முன்னரே கோட்டையுடன் வலிமையாக திகழ்ந்த ஊர் செஞ்சி. மராட்டிய மன்னரான சிவாஜி, "இது இந்தியாவிலுள்ள எவரும் உட்புகமுடியாத கோட்டைகளுள் சிறந்தது" எனக் கூறுமளவுக்கு அரண் செய்யப்பட்ட கோட்டையாக இது இருந்தது. பிரித்தானியர் இதனைக் "கிழக்கின் ட்ரோய்" என்றனர். முகலாயர்களால் பாதுஷாபாத் என்றும் ,சோழர்களால் சிங்கபுர நாடு என்றும் பெயர் வாங்கியது.

இயற்கையோடு ஒன்றிய மூன்று பெரிய மலைகள், இரண்டு சிறிய குன்றுகள் 12 கி.மீ., நீளமுள்ள மதில் சுவர்களால் இணைத்தது செஞ்சிக்கோட்டை. பல போர்களை சந்தித்த பிறகும், இன்றும் கம்பீரமாக காட்சி தருகிறது.சோழர் காலத்தில் செஞ்சிக்கு பெயர் சிங்கபுரி, சிங்கபுரி கோட்டம் என்பார்கள் அதுவே பின்னாளில் செஞ்சி ஆகிவிட்டது. இப்பொழுதும் செஞ்சிக்கு அருகே சிங்கவரம் என்ற ஊர் உள்ளது, அது செஞ்சி அந்த காலத்தில் பெரிய நிலபரப்பு கொண்ட ஊராக இருந்து இருக்கலாம் என்பதற்கு சான்று.

செஞ்சிக் கோட்டையை, 13ம் நூற்றாண்டில் கோனார் வம்சத்தினர் கட்ட துவங்கினர். அடுத்து வந்த பல மன்னர்கள் செஞ்சிக் கோட்டையை பலம் பொருந்திய கோட்டையாக மாற்றினர். குறிப்பாக, விஜயநகர மன்னர்களின் ஆளுகையில் செஞ்சிக்கோட்டை இருந்த போது, 1509ம் ஆண்டு முதல் 1529ம் ஆண்டு வரை, தொடர்ந்து 20 ஆண்டு கோட்டையை விரிவுபடுத்தினர்.

இந்த கோட்டையில் உள்ள கோவில்கள், மண்டபங்கள், குளங்கள், சுனைகள், படைவீரர்கள் தங்கும் பகுதி, நெற் களஞ்சியம், எதிரிகள் கடக்க முடியாத ஆழமான, அகலமான அகழிகள் போன்றவை, தென்னிந்திய மன்னர்களுக்கு கட்டடக் கலையில் இருந்த ஆற்றலை வெளிப்படுத்துகிறது.

ஜைனர்கள்

செஞ்சியின் வரலாறு பற்றி அதில் கிடைக்கும் கல்வெட்டுக்களின் அடிப்படையில்

கி.மு. முதல் கி.பி 6 வரை இங்கு ஜைனர்கள் வாழ்ந்தனர் என்று கல்வெட்டுக்கள் சொல்கின்றன.

பல்லவர் காலத்தில் செஞ்சி (கிபி 600-900)

பல்லவர் காலத்தில் சிங்கபுரதில் (சிங்கவரம்) ஒரு குகைகோவில் கட்டப்பட்டது, செஞ்சி தெற்கே பனமலை பகுதியில் ஒரு கோயில் கட்டப்பட்டது , அதன் பின்னர் மண்டகப்பட்டு என்னுமிடத்தில் ஒரே கல்லில் குடைந்து செய்யப்பட்ட குகை கோயில் உருவாக்கப்பட்டது , இந்த இடம் செஞ்சில் இருந்து பதினேழு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது , 580-630 பல்லவ மகேந்திரவர்மன் விசித்ரசித்தன் ஆக அழைக்க பட்டார், மேலும் பல்லவர்களின் ஆளுகைக்கு உட்பட்ட சிங்கவரம் மற்றும் மேலச்சேரி பகுதிகளில் உள்ள பழங்கால கோயில் முலம் செஞ்சி பல்லவர்களின் ஆளுகையில்ருந்ததாக சொல்கிறது .

சோழர்கள் காலத்தில் செஞ்சி (900-1103)

செஞ்சி கிழக்கு பகுதில் காணப்படும் ஆனங்கூர் கல்வெட்டுக்களின் படி செஞ்சி பல்லவர்களின் காலத்திற்கு பின் சோழர்கள் ஆண்டதாக சொல்கிறது 871 முதல் 907 ஆதித்ய சோழன் 2 முறையே ஆட்சி செய்திருகின்றனர். அவன் தம்பி ராஜராஜன் சோழன் 1 (987-1014) காலத்தில் சிங்கபுரம் என்று அழைக்கப்பட்டுள்ளது.

பாண்டியர்கள் காலத்தில் செஞ்சி (1014-1190)

1014-1190 களின் செஞ்சி பாண்டியர்களின் கையில் இருந்தததாக கல்வெட்டுகள் சொல்கிறது.

விஜயநகரப் பேரரசுக் காலத்தில்

13 ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பெரரசுகளின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது.தமிழ் நாட்டில் நாயக்கர்களின் ஆட்சிக்காலத்தில் செஞ்சி நாயக்கர்களின் தலைமையிடமாகவும் இது விளங்கியது.மராட்டியர்களிடம் இருந்த இக் கோட்டையை பீஜப்பூர் சுல்தானின் படைகள் கைப்பற்றின. இக் கோட்டையை கி.பி 1677 இல் மீளக் கைப்பற்றிய(மீட்ட) மராட்டிய மன்னர் சிவாஜி இதனை மேலும் பலப்படுத்தினார். ஔரங்கசீப்பின் தக்காணப் படையெடுப்பின் போது மராட்டிய மன்னனாக இருந்த, சிவாஜியின் இரண்டாவது மகனான சத்ரபதி ராஜாராம் தப்பிச் செஞ்சிக் கோட்டைக்கு வந்து அங்கிருந்து முகலாயர்களுடன் போரிட்டான். முகலாயர்கள் இக்கோட்டையைச் சுற்றி முற்றுகை இட்டிருந்தபோதும் ஏழு வருடங்களாக இதனைக் கைப்பற்ற முடியவில்லை. இறுதியில் 1698 ஆம் ஆண்டில் இக்கோட்டை கைப்பற்றப்பட்டது. ஆனால் அதற்கு முன்னரே சத்ரபதி ராஜாராம் அங்கிருந்து தப்பி விட்டான். பின்னர் இக் கோட்டை கர்நாடக நவாப்புக்களில் கைக்கு வந்தது. அவர்கள், 1750 இல் இதனை பிரெஞ்சுக்காரரிடம் தோற்றனர். இறுதியாக 1761 இல் பிரித்தானியர் இதனைக் கைப்பற்றிக் கொண்டனர். எனினும் சிறிதுகாலம் இதனை ஹைதர் அலியும் கைப்பற்றி வைத்திருந்தான்.

அமைப்பு

செஞ்சிக் கோட்டை அமைப்புசெஞ்சிக் கோட்டை மூன்று குன்றுகளையும் அவற்றை இணைக்கும் சுவர்களையும் உள்ளடக்கியது. இவற்றுள் 7 சதுர கிலோமீட்டர்மீட்டர் (800 அடி) உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த இக் கோட்டை 24 மீட்டர் (80 அடி) அகலமுள்ள அகழியினால் காப்புச் செய்யப்பட்டிருந்தது. இது எட்டு மாடிகளைக் கொண்ட கல்யாண மஹால், தானியக் களஞ்சியம், சிறைச் சாலை, படையினர் பயிற்சிக்கூடம், செஞ்சியம்மன் கோயில் என்பவற்றைக் கொண்டிருந்தது. இந்த அரணுக்குள் ஆனைக்குளம் எனப்படும் புனிதக் குளம் ஒன்றும் இருந்தது. இக் கோட்டைக்கான அரணாக இயற்கையாக அமைந்த கிருஷ்ணகிரி, சக்கிலிதுர்க், ராஜகிரி ஆகிய குன்றுகள் இருந்தன.

தற்போதைய நிலை.

இக் கோட்டை இறுதியாகப் பிரித்தானியர் வசம் சென்ற பின்னர் முக்கியமான படை நடவடிக்கைகள் எதுவும் இங்கே நிகழவில்லை. 1921 ஆம் ஆண்டில் இது ஒரு தேசிய நினைவுச் சின்னம் என அறிவிக்கப்பட்டு தொல்லியற் துறையின் கீழ் கொண்டுவரப் பட்டது. அதிலிருந்து பழங்கால சுவர்களில் கிறுக்குவதும்..ஞாயிற்று கிழமை டாஸ்மார்க் பார் .. காதலர்களுக்கான கடலை மையமாக இப்போது விளங்கிவருகிறது..

இருப்பிடம்

மாநிலத் தலைநகரமான சென்னையில் இருந்து 160 கிமீ (100 மைல்கள்) தொலைவில் அமைந்துள்ள இது யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரிக்கு அண்மையில் உள்ளது.

புகைபடங்கள்

15.jpg

gingee-fort-2462_m.jpg

%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%881.jpg

2.jpg

6.jpg

17.jpg

18.jpg

pic.jpg

chengi.jpg

நன்றி: தமிழ் வீக்கிலிபிடியா

நன்றி:www.gingeefort.com

Share this post


Link to post
Share on other sites

முகலாயர்கள் இக்கோட்டையைச் சுற்றி முற்றுகை இட்டிருந்தபோதும் ஏழு வருடங்களாக இதனைக் கைப்பற்ற முடியவில்லை. இறுதியில் 1698 ஆம் ஆண்டில் இக்கோட்டை கைப்பற்றப்பட்டது. ஆனால் அதற்கு முன்னரே சத்ரபதி ராஜாராம் அங்கிருந்து தப்பி விட்டான்.

வஞ்சிகோட்டை வாலிபன் தான் இதுவரை நான் அறிந்திருந்த்தது,இன்று செஞ்சிகோட்டை அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி இணைப்புக்கு நன்றிகள்...

வன்னி மன்னனும் தப்பியிருப்பார் என்றுதான் நினக்கிறன் ,அந்த காலத்தில எழு வருடம் முற்றுகைக்குள் இருந்து மன்னன் தப்பினவர் என்றால் இந்த காலத்தில் 30 வருடமாக முற்றுகைக்குள் இருந்த்தவர் தப்ப ஏலாதோ??????????????????????

Share this post


Link to post
Share on other sites

 • Topics

 • Posts

  • இராஜபக்சே மற்றும் கலைஞர் குடும்பங்கள் இருக்கும் ஆனால் இங்கில்லை. 
  • VPN என்னவென்று இன்றைய இளைஞர்களிடம் சொல்லித்தான் தெரியவேண்டும் என்றில்லை. பலரும் அதைப் பயன்படுத்திவருகின்றனர். ஆனால், அரசின் சில நடவடிக்கைகளால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தற்போது மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு, தொடர்ந்து பல விவாதத்துக்குரிய திட்டங்களை அமல்படுத்திவருகிறது. காஷ்மீரில் சட்டப் பிரிவு 370 நீக்கப்பட்டதும் அப்படியான ஒரு திட்டம்தான். இதனால், ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் சட்ட ஒழுங்குப் பிரச்னைகள் வருமெனக் காரணம் காட்டி இணையத்தை முடக்கியது அரசு. இப்போது, சமீபத்தில் இந்தக் குடியுரிமை சட்ட மசோதா நிறைவேறிய பிறகு, அஸ்ஸாமும் இந்தியாவின் பிற வடகிழக்குப் பகுதிகளும் காஷ்மீருடன் இணைந்திருக்கின்றன.   இப்படி, காஷ்மீரில் கடந்த ஆகஸ்ட் மாதம் முடக்கப்பட்ட இணையம் இந்த ஜனவரி மாதம்தான் மீண்டும் கொடுக்கப்பட்டது. அதுவும் 2G வேகத்தில்தான் தரப்பட்டது. அதிலும் பல கட்டுப்பாடுகள். மக்களுக்கு சில முக்கிய இணையதளங்களை மட்டுமே பயன்படுத்தும் அனுமதி தரப்பட்டிருக்கிறது. அந்த இணையதளங்களின் பட்டியல் (Whitelisted Websites), இணையதள சேவை நிறுவனங்களுக்குக் கொடுக்கப்பட்டு அதை மட்டுமே வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்குமாறு உத்தரவிட்டுள்ளது அரசு.   இந்தப் பட்டியலில் எந்தச் சமூக வலைதளங்களும் இடம்பெறவில்லை. கடந்த வாரம், இந்தத் தடையை மீறி VPN பயன்படுத்தியதற்காகப் பலர் மீதும் வழக்குத் தொடுத்துள்ளது காவல்துறை. இந்த VPN என்னவென்று இன்றைய இளைஞர்களிடம் சொல்லித்தான் தெரியவேண்டும் என்றில்லை. பலரும் அதைப் பயன்படுத்திவருகின்றனர். ஆனால், அரசின் இந்த நடவடிக்கைகளால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.   இது போன்ற VPN சேவைகளை இன்று எளிதாக பிரவுசர்களிலும் பிரத்யேக ஆப்கள் மூலமும் பெற முடியும். இதைப் பயன்படுத்தியதற்குத்தான் காஷ்மீரில் சிலர் மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், சட்டப்படி VPN பயன்படுத்தியதற்கெல்லாம் வழக்கு தொடர முடியுமா என்ற கேள்வி பலராலும் எழுப்பப்பட்டு வருகிறது. இதற்கு முதலில் எந்தெந்தச் சட்டங்களின்கீழ், ஜம்மு காஷ்மீர் காவல்துறை வழக்குப் பதிந்துள்ளது என்பதைப் பார்த்தோம். சட்டவிரோதச் செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் (Unlawful Activities (Prevention) Act (UAPA)) 13-வது பிரிவிலும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66A பிரிவின் கீழும், இபிகோ 188 மற்றும் 505-ம் பிரிவுகளின் கீழும் சுமார் 200-க்கும் அதிகமான பேர் மீது வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இதில் கேள்வி என்னவென்றால், சமூக வலைதளங்கள் பயன்படுத்தியதற்கே FIR போடப்பட்டதா அல்லது தவறாக அவதூறு பரப்பியவர்கள் மீது மட்டுமே வழக்கு பதிவுசெய்யப்பட்டதா என்பதுதான். UAPA சட்டம், இந்திய இறையாண்மைக்கும் ஒற்றுமைக்கும் பங்கம் விளைவிக்கும் செயல்களையே சட்டவிரோதச் செயல்பாடுகள் எனக் குறிப்பிடுகிறது. இது கருத்துச்சுதந்திரத்தை ஒடுக்குவதாகவும் இருக்கலாம் என்பதால் இந்தப் பதிவுகளில் பெரிய அளவில் அச்சுறுத்தல் இருக்கவேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே இந்தச் சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவுசெய்யமுடியும். பொதுமக்கள் இடையே பயத்தையும் இரு பிரிவினர் இடையே மோதலையும் வன்முறையையும் தூண்டும் செயல்களையே இபிகோ 505-ம் கீழ் தண்டிக்கமுடியும்.     இதனால் VPN மூலம் சமூக வலைதளங்கள் பயன்படுத்தியதற்காக மட்டும் இந்த UAPA மற்றும் இபிகோ 505-ம் பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவுசெய்துவிட முடியாது. இபிகோ 188-ம் பிரிவின்கீழ் வேண்டுமானால் வழக்கு பதிவுசெய்யலாம். இது அரசு அதிகாரி பிறப்பித்த ஆணை ஒன்றை மீறும் விதமாக நடந்துகொண்டதற்காகப் பதிவுசெய்யமுடியும். எப்படிப் பார்த்தாலும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66A பிரிவின்கீழ் காஷ்மீரில் பதிவுசெய்யப்பட்டிருக்கும் வழக்குகள் செல்லாது. ஏனென்றால் அப்படி ஒரு சட்டமே கிடையாது. தவறாகப் புரிந்துகொள்ளப்படுவதாலும், எளிதாகத் துஷ்பிரயோகம் செய்யமுடியும் என்பதாலும் இந்தச் சட்டம் 2015-ல் நீக்கப்பட்டது. ஆனால், இன்னும் இந்தப் பிரிவில் பல வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. கடந்த மாதம் கர்நாடகாவில் இப்படி நடந்த சம்பவம் ஒன்றில் கர்நாடக உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தியைத் தெரிவித்திருந்தது. "இப்படியாக FIR பதிவு செய்யப்பட்டது சட்டத்தை மீறியதாகவும் தேவையில்லாமல் குடிமகன்களுக்குத் தொல்லை கொடுப்பதாகவுமே எடுத்துக்கொள்ளப்படும்" எனக் காவல்துறை அதிகாரிகளுக்கு 10,000 ரூபாய் அபராதம் விதித்தது. இதுகுறித்த மேலும் விவரங்கள் தெரிந்துகொள்ள கோவையைச் சேர்ந்த சைபர் வழக்கறிஞர் சத்திய நாராயணனிடம் பேசினோம். "தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66A பிரிவு, தொலைத்தொடர்பு சேவைகள் வழி அவதூறு பரப்புவதைத் தடுப்பதற்கான சட்டப்பிரிவு. ஆனால், இந்தச் சட்டம் 2015-ல் ஸ்ரேயா சிங்கால் மற்றும் இந்திய அரசுக்கும் இடையே நடந்த வழக்கில் நீக்கப்பட்டது. நீக்கப்பட்ட இந்தச் சட்டத்தை வைத்து ஒருவரைக் கைது செய்யமுடியாது. இது காலாவதியான சட்டம். காஷ்மீரில் நடந்திருப்பது தெளிவான சட்ட துஷ்பிரயோகம்" என்றார். பொதுவாக VPN பயன்படுத்துவதில் ஏதேனும் சிக்கல் இருக்கிறதா என்ற கேள்வியையும் முன்வைத்தோம். இதற்கு ``VPN பயன்படுத்தக்கூடாது எனச் சட்டம் ஒன்றுமில்லை. ஆனால், தடைசெய்யப்பட்ட தளங்களுக்குச் செல்வது குற்றம்தான். அதனால் VPN மூலம் அந்த இணையதளங்களுக்குச் செல்வதும் சட்டவிரோதச் செயலாகிவிடும். ஆனால், பொதுவாக VPN பயன்படுத்துவது சட்டவிரோதம் ஆகாது" என்று பதிலளித்தார் அவர்.   இதனால் VPN பயன்படுத்துவதில் சிக்கலில்லை, எதற்காக அதைப் பயன்படுத்துகிறோம் என்பதில்தான் சிக்கல் இருக்கிறது என்பது தெளிவாகிறது   . மேலும் பேசுகையில், "இந்தியாவில் காவல்துறை மற்றும் அமலாக்கத்துறைகளில் இதுபோன்ற தேவையில்லாத, தவறான அணுகுமுறைகள் கொண்ட பல FIR-கள் பதியப்படுகின்றன. இதனால் இன்றைய இளைஞர்களின் எதிர்காலமும் முன்னேற்றமும் மிகவும் பாதிக்கப்படுகிறது. இந்த வழக்குகள் எதிர்கொண்டு நடத்தித் தீர்வு காண அவர்களுக்கு நீண்டகாலம் செலவழிக்க வேண்டியுள்ளது. எனவே, இது போன்ற FIR நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்" என அழுத்தமாகக் கூறினார் வழக்கறிஞர் சத்திய நாராயணன். https://www.vikatan.com/technology/tech-news/fir-registered-on-kashmir-people-using-vpn-is-it-even-legal
  • பொதுவாக உங்களின் உயிலில் இதைப்பற்றி எழுதலாம். எழுதினால் அவரவர் உறவுகளுக்கு முடிவுகளை எடுக்க இலகுவாக இருக்கும். - Real estate will - Medical will - Financial will
  • ப்ளூம்பர்க் நிறுவனம், 2019-ம் ஆண்டுக்கான டாப் 10 பணக்கார குடும்பங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. ப்ளூம்பர்க் நிறுவனம், 2019-ம் ஆண்டுக்கான டாப் 10 பணக்கார குடும்பங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இக்குடும்பங்கள் நிர்வகிக்கும் நிறுவனங்களின் சொத்து மதிப்பைக் கணக்கெடுத்து இப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், முதலிடத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த வால்டன் குடும்பம் உள்ளது. இக்குடும்பம் சர்வதேச சில்லறை விற்பனையகமான வால்மார்ட் நிறுவனத்தை நடத்தி வருகிறது. இவர்களின் சொத்து மதிப்பு 190.5 பில்லியன் டாலராகும். அரச குடும்பத்தைச் சேராத உலகின் ஒரே பணக்கார குடும்பம் இக்குடும்பம் என்பது குறிப்பிடத்தக்கது. 2-வது இடத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல சாக்லேட் நிறுவனமான மார்ஸ் நிறுவனத்தை நடத்திவரும் மார்ஸ் குடும்பம் உள்ளது. இவர்களின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 126.5 பில்லியன் டாலர். 3-ம் இடத்தில், அமெரிக்காவின் இரண்டாம் பெரிய தனியார் நிறுவனமான கோச் நிறுவனத்தை நடத்திவரும் கோச் குடும்பம் இருக்கிறது. இவர்களின் மொத்த சொத்து மதிப்பு 124.5 பில்லியன் டாலர். 4-ம் இடத்தில் சவுதியின் அரச குடும்பமான அல் சவூத் குடும்பம் உள்ளது. இக்குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 100 பில்லியன் டாலர். 5-வது இடத்தில் பிரான்ஸைச் சேர்ந்த பிரபல ஆடை நிறுவனமான சேனலின் வர்தைமர் குடும்பம் உள்ளது. இவர்களின் சொத்து மதிப்பு சுமார் 57.6 பில்லியன் டாலராகும். 6-வது இடத்தில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆடை நிறுவனமான ஹெர்ம்ஸை நிர்வகிக்கும் ஹெர்ம்ஸ் குடும்பம் உள்ளது. இதன் சொத்து மதிப்பு சுமார் 53.1 பில்லியன் டாலர்.7-வது இடத்தில், பெல்ஜியத்தைச் சேர்ந்த ஏபி இன்பேவ் நிறுவனத்தை நடத்திவரும் வான் டாம்மே, டி ஸ்போல்பெர்க், டி மெவியஸ் குடும்பம் உள்ளது. இக்குடும்பத்தின் சொத்து மதிப்பு சுமார் 52.9 பில்லியன் டாலர். 8-வது இடத்தில் ஜெர்மனியைச் சேர்ந்த போஹெரிங்கர், வான் பாம்பாக் குடும்பம் உள்ளது. இக்குடும்பம் போஹெரிங்கர் இங்கெல்ஹெய்ம் என்கிற நிறுவனத்தை நடத்திவருகிறது. இதன் மொத்த சொத்து மதிப்பு சுமார் 51.9 பில்லியன் டாலர். 9-வது இடத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தை நடத்திவரும் அம்பானி குடும்பம் உள்ளது. இக்குடும்பத்தின் சொத்து மதிப்பு சுமார் 50.4 பில்லியன் டாலர். டாப் 10 பட்டியலில் இடம்பிடித்துள்ள ஒரே இந்தியக் குடும்பம் அம்பானி குடும்பம்தான். பத்தாவதாக அமெரிக்காவைச் சேர்ந்த கார்கில் நிறுவனத்தை நடத்திவரும் கார்கில் மேக்மில்லன் குடும்பமாகும். இக்குடும்பத்தின் சொத்து மதிப்பு சுமார் 42.9 பில்லியன் டாலர். https://www.vikatan.com/news/international/the-only-indian-family-in-the-top-10-richest-families-in-the-world-list
  • எனது சொந்தம் ஒருவர் புற்று நோயால் வேதனை பட்டு இறந்தார்.  கடைசி இரு மாதங்கள் சுய நினைவு கூட இருக்கவில்லை.   எமது குடும்பத்திற்கு இந்த சந்தர்ப்பம் கிடைத்திருந்தால் கட்டாயம் பாவித்து அவரை வேதனையில் இருந்து காப்பாற்றி இருக்கலாம்.