Jump to content

கடவுள் நல்லவரா? சாத்தான் நல்லவனா?


Recommended Posts

கடவுள் நல்லவரா? சாத்தான் நல்லவனா? (முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்.)

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம்.

சிறிய வயது பள்ளிக்கூட விவாதம் ஒன்றை வழங்குகின்றேன்.

அறிவியலுக்கு அனைத்திற்குமே ஆதாரம் வேண்டும். கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதைப் பற்றி உங்களுக்காக நமது முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் சிறிய வயது பள்ளிக்கூட விவாதம் ஒன்றை வழங்குகின்றேன்.

(இந்த விவாதம் இணையத்திற்கு வந்து வெகு நாட்களாகிவிட்டது. இது அவரது பள்ளியில் ஒரு ஆசிரியருக்கும் அவருக்குமிடையே நிகழந்த வாதம்.)

ஆசிரியர்: ஆக, கடவுள் இருப்பதை நீ நம்புகின்றாயா?

கலாம்: கண்டிப்பாக ஐயா

ஆசிரியர்: கடவுள் நல்லவரா?

கலாம்: சந்தேகமேயில்லை

ஆசிரியர்: கடவுள் அனைத்து சக்திகளும் பெற்றவரா?

கலாம்: ஆமாம்.

ஆசிரியர்: என்னுடைய தம்பிக்கு புற்றுநோயால் மரணம் வந்தது. அவன் கடவுளை மிகவும் நேசிப்பவன். கடவுளிடம் ஓயாமல் பிரார்த்தித்திருந்தான். நம்மில் பலர் உடல்நிலை சரியில்லாதவருக்கு நம்மாலான உதவிகளை செய்வோம். அப்படி செய்யாத எல்லாம் வல்ல கடவுள் நல்லவரா?

கலாம்: (மெளனம்)

ஆசிரியர்: உன்னால் பதில் சொல்ல முடியவில்லை

இளைஞனே அப்படித்தானே? நாம் மறுபடியும் முதலிலிருந்து ஆரம்பிக்கலாம். கடவுள் நல்லவரா?

கலாம்: ஆம்.

ஆசிரியர்: சாத்தான் நல்லவனா?

கலாம்: இல்லை.

ஆசிரியர்: சாத்தான் எங்கிருந்து வந்தான்?

கலாம்: (தயக்கத்துடன்) கடவுளிடமிருந்து

ஆசிரியர்: ரொம்ப சரி. இந்த உலகத்தில் கெட்டது இருக்கிறதா?

கலாம்: ஆமாம்.

ஆசிரியர்: கெட்டது எங்கும் நிறைந்திருக்கிறது இல்லை? கடவுள்தானே அனைத்தையும் படைத்தார்?

கலாம்: ஆமாம்.

ஆசிரியர்: ஆக, கெட்டவற்றை படைத்தது யார்?

கலாம்: (பதிலில்லை)

ஆசிரியர்: இந்த உலகத்தில் உடல்நிலைக் கோளறுகள், ஒழுக்கமின்மை, பழியுணர்ச்சி, மோசமான நிலை என அனைத்தும் உள்ளது தானே?

கலாம்: ஆம் ஐயா.

ஆசிரியர்: அப்போ, யார் இதையெல்லாம் உருவாக்கியது?

கலாம்: (பதிலில்லை) — (இங்கிருந்து கவனமாக படியுங்கள்) —

ஆசிரியர்: உன்னைச் சுற்றியிருக்கும் உலகத்தை உணர்ந்து பார்க்க ஐந்து அடிப்படை உணர்வுகள் வேண்டும் என்று அறிவியல் கூறுகிறது. நீ கடவுளை கண்டிருக்கின்றாயா?

கலாம்: இல்லை ஐயா

ஆசிரியர்: எப்போதாவது கடவுளின் குரலை கேட்டிருக்கின்றாயா?

கலாம்: இல்லை ஐயா

ஆசிரியர்: எப்போதாவது கடவுளை தொட்டிருக்கிறாயா, இல்லை ருசித்துப் பார்த்திருக்கின்றாயா அல்லது மோப்பம் பிடிப்பதுபோல் முகர்ந்தாவது இருக்கிறாயா? ஏதேனும் ஒரு உணர்ச்சியில் கடவுளை உணர்ந்திருக்கின்றாயா?

கலாம்: இல்லை ஐயா

ஆசிரியர்: அப்படியிருந்தும் கடவுளை நீ இன்னமும் நம்புகின்றாயா?

கலாம்: ஆம்.

ஆசிரியர்: ஆக, அனுபவத்திலிருந்தும், ஆய்வுகளிலிருந்தும், சோதனை நடத்திக் காட்டக்கூடிய வழிகளிலிருந்தும் அறிவியல் உனது கடவுள் இல்லை என்று கூறுகிறது.

நீ அதற்கு என்ன பதில் தருவாய் மகனே?

கலாம்: ஒன்றுமில்லை ஐயா. எனக்கு நம்பிக்கை மட்டும் உள்ளது.

ஆசிரியர்: ஆம் நம்பிக்கை. அறிவியலுக்கும் அதற்கும் நிறைய பிரச்சினை இருக்கிறது.

கலாம்: ஐயா, வெப்பம் இருக்கிறதா?

ஆசிரியர்: ஆமாம்.

கலாம்: அப்படியென்றால் குளிர் இருக்கிறதா?

ஆசிரியர்: ஆமாம்.

கலாம்: இல்லை ஐயா, குளிர் என்பது இல்லை.

(மாணவர்கள் இதுவரை சுவாரசியம் காட்டாமலிருந்தவர்கள் இப்போது இருவரையும் கூர்ந்து கவனிக்கின்றார்கள்)

கலாம்: ஐயா, நம்மிடம் பல்வேறு வகைப்பட்ட வெப்பம் இருக்கிறது, மிகு வெப்பம், தாழ் வெப்பம், குறைந்த வெப்பம், வெள்ளை வெப்பம், மிகப்பெரிய வெப்பம் அல்லது வெப்பமே இல்லை என்று. ஆனால் குளிர் என்ற ஒன்று கிடையாது.

நம்மால் பூஜ்ஜியத்திற்கும் கீழே 458 டிகிரி வரை (வெப்பமே இல்லை) போக முடியும்

அதற்கு மேல் அளவு இல்லை. குளிர் என்ற ஒன்று கிடையாது. குளிர் என்பது வெப்பம் இல்லாமையைக் குறிக்கும் ஒரு சொல் அவ்வளவே. குளிர் என்பது வெப்பத்தின் எதிர்ப்பதம் இல்லை வெப்பத்தின் தன்மை இல்லாமை அவ்வளவே.

கலாம்: சரி ஐயா, இருளைப் பற்றி கேட்கலாம். இருள் என்ற ஒன்று இருக்கிறதா?

ஆசிரியர்: கண்டிப்பாக. இருள் இல்லையென்றால் இரவு என்பது எப்படி இருக்கும்?

கலாம்: மறுபடியும் தவறு ஐயா. இருள் என்பது வெளிச்சம் இல்லாமை. உங்களால் குறைந்த வெளிச்சம், சாதாரண வெளிச்சம், பளிச்சிடும் வெளிச்சம், பிரகாசமான வெளிச்சம் என்று வரையறுக்க முடியும். ஆனால் வெளிச்சமே இல்லாததை? அதைத்தான் நீங்க[1] அதைத்தான் நீங்கள் இருள் என்று கூறுகின்றீர்கள் இல்லையா?

இருளை இன்னமும் இருண்டுபோக உங்களால் செய்யமுடிந்தால் செய்வீர்கள்தானே?

ஆசிரியர்: என்ன சொல்லவருகின்றாய் மகனே?

கலாம்: நான் கூற வருவது உங்களின் அறிவியல் கூற்றில் பிழையிருக்கிறது என்பதுதான்.

ஆசிரியர்: என்ன பிழை? விளக்கமாக சொல் பார்க்கலாம்?

கலாம்: ஐயா, உங்களின் அறிவியல் இருமை தத்துவத்தை ஏற்றுக்கொள்கிறது. நீங்கள் வாழ்வும் சாவும் இருக்கிறது நல்ல கடவுள் கெட்ட கடவுள் என்று இருக்கிறதாகவும் வாதிடுகிறீர்கள்.

கடவுள் என்கிற விஷயத்தை நீங்கள் ஒரு ஆதாரபூர்வ (அளவெடுக்க முடிகின்ற) முடிவுபெற்ற விஷயமாக எதிர்பார்க்கின்றீர்கள்.

ஐயா, அறிவியலால் மனிதர்களின் எண்ணத்தை விளக்க முடியவில்லை.

மின்சாரத்தையும் காந்தத்தையும் வைத்துதான் அளவிடுகிறது. ஆனால் இந்த இரண்டில் ஒன்றையும் அது உண்மையில் பார்த்ததோ முழுதுமாக புரிந்துகொண்டதோ இல்லை.

இறப்பு என்பதை உயிரின் எதிர்ப்பதமாக பார்ப்பது இறப்பு என்பது ஒரு தனிப்பட்ட பொருளாக இருக்க முடியாது என்பதை மறந்துவிட்டுக் கூறுவது.

இறப்பு என்பது உயிரின் எதிர்ப்பதம் இல்லை ஐயா, இறப்பு என்பது உயிரில்லாதது அவ்வளவே. இப்போது என் கேள்விக்கு விடைதாருங்கள் ஐயா. உங்களின் மாணாக்கர்களுக்கு மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்று பாடம் நடத்துகின்றீர்கள் அல்லவா?

ஆசிரியர்: மனிதன் உருவான விதம் பற்றிய டார்வின் கூற்றைப் பற்றி நீ கூறுகின்றாய் என்றால் ஆம் நான் அதை நடத்துகின்றேன்.

கலாம்: மனிதன் உருவான விதத்தை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கின்றீர்களா?

(ஆசிரியர் விவாதம் எங்கே போகின்றது என்பதை உணர்ந்து புன்சிரிப்புடன் தலையாட்டிக்கொள்கிறார்)

கலாம்: ஆக இதுவரை எவரும் மனிதன் உருவான விதத்தை ஆதாரபூர்வமாக கண்டதில்லை. அதுமட்டுமின்றி உயிரியல் மாற்றம் என்பது இன்னமும் நிகழ்ந்துகொண்டிருக்கின்ற ஒன்று என்பதையும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கவில்லை. ஆக நீங்கள் உங்களின் கருத்துக்களைத்தான் பாடமாக நடத்துகின்றீர்கள்

அப்படித்தானே? நீங்கள் ஆசிரியரா விஞ்ஞானியா?

(வகுப்பு முழுவதும் சலசலக்க ஆரம்பித்துவிடுகிறது)

கலாம்: இந்த வகுப்பில் இருக்கும் எவரேனும் நமது ஆசிரியரின் மூளையை பார்த்திருக்கின்றீர்களா?

(வகுப்பில் இப்போது சிரிப்பலை ஆரம்பித்துவிட்டது)

கலாம்: இங்கே இருக்கும் எவரேனும் ஆசிரியரின் மூளையை கண்டோ, கேட்டோ, தொட்டோ, உணர்ந்தோ அல்லது ருசித்தோ இருக்கின்றீர்களா?

எவரும் அவ்வாறு செய்திருப்பதாக தெரியவில்லை. ஆகவே ஐயா, அனுபவத்திலிருந்தும், ஆய்வுகளிலிருந்தும், சோதனை நடத்திக் காட்டக்கூடிய வழிகளிலிருந்தும் அறிவியல் உங்களின் மூளை இல்லையென்று கூறுகிறது.

தவறாயிருப்பின் மன்னித்துவிடுங்கள் ஐயா, நாங்கள் எவ்வாறு உங்களின் போதனைகளை நம்புவது?

(வகுப்பு அமைதியாகிவிட. ஆசிரியரின் முகம் இருண்டுவிட்டது)

ஆசிரியர்: எனக்கு மூளை இருக்கிறது என்பதை நீ நம்பித்தான் ஆகவேண்டும் மகனே…

கலாம்: அதேதான் ஐயா… மனிதருக்கும் கடவுளுக்கும் இருக்கும் ஒரே இணைப்பு அதுதான், நம்பிக்கை. அந்த நம்பிக்கைதான் நம் வாழ்வில் நம்மை வழிநடத்துகின்றது நாமனைவரையும் உயிருடனும் வைத்திருக்கின்றது.

http://vanjoor-vanjoor.blogspot.com/2009_02_01_archive.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை. மாணவனால் ஆசிரியரின் கண்கள் திறக்க் பட்டன. பதிவுக்கு நன்றி. .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி, கடவுள் எண்டா 'அவர்', 'இவர்' மரியாதையாதை குடுக்கினம், சாத்தான் எண்டா 'அவன்', 'இவன்' எண்டு கொஞ்சமும் மரியாதை இல்லாமல்.... சாத்தானுக்கு மட்டும் ஏன் இந்த பாகுபாடு காட்டினம்? :)

Link to comment
Share on other sites

இதனை கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு முன்னமே ஆங்கிலத்தில் வாசித்துள்ளேன். இந்தியர்கள், அப்துல் கலாமுக்கிடையில் நடந்த உரையாடலாக வழக்கம் போல தம் போலிப் பெருமை பேசுகின்றனர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நிழலி உங்கள் தகவலுக்கு. நான் இணையத்தில் தேடி அந்த ஆங்கில மூலத்தை வாசித்தேன். முட்டாள் இந்தியர்கள் தாமும் முட்டாளாகி மற்றவர்களையும் முட்டாளாக்க பார்க்கின்றனர்.

இதோ அந்த ஆங்கில மூலத்தின் இணைப்பு

The Professor Teaches About Evil and Christianity

Link to comment
Share on other sites

ஆசிரியர்: டங்ஸ் கடவுள் எண்டு எப்பிடிச் சொல்கிறாய் மகனே..?

பையன்: அது ஒரு நம்பிக்கை.

ஆசிரியர்: அது என்ன பெரிய நம்பிக்கை தும்பிக்கை?

பையன்: குளிர், இருள் எண்டு ஒண்டுமில்லை. வெப்பம் இல்லாதது குளிர். ஒளி இல்லாதது இருள். அதுமாதிரிதான். மனிதருக்கும் கடவுளுக்கும் இருக்கும் ஒரே இணைப்பு அதுதான், நம்பிக்கை. அந்த நம்பிக்கைதான் நம் வாழ்வில் நம்மை வழிநடத்துகின்றது நாமனைவரையும் உயிருடனும் வைத்திருக்கின்றது. அதால டங்சும் ஒரு கடவுள்தான். நம்புங்கோ..! :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனிதருக்கும் கடவுளுக்கும் இருக்கும் ஒரே இணைப்பு அதுதான்இ நம்பிக்கை. அந்த நம்பிக்கைதான் நம் வாழ்வில் நம்மை வழிநடத்துகின்றது நாமனைவரையும் உயிருடனும் வைத்திருக்கின்றது

.

ஸ்ரோங்கான கருத்து

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல பதிவு கடவுளை கண்டீர்களா என வினாவுபவர்களிற்கு நல்ல தெளிவான விடை இதில் உள்ளது. நன்றி

Link to comment
Share on other sites

டங்சும் ஒரு கடவுள்தான். நம்புங்கோ..! :)

இதை ஏன் நீங்கள் சிரிச்சுக்கொண்டு சொல்லவேணும். இது உண்மைதானே.

Link to comment
Share on other sites

இதை ஏன் நீங்கள் சிரிச்சுக்கொண்டு சொல்லவேணும். இது உண்மைதானே.

ஆகா.. எனக்கு உதை..! உங்களுக்கு கலெக்ஷனா? :)

Link to comment
Share on other sites

ஆகா.. எனக்கு உதை..! உங்களுக்கு கலெக்ஷனா? :)

இந்த உலகத்தில படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் ஆகிய ஐந்து தொழிலையும் உங்களால செய்ய முடியும், செய்கிறீங்கள்.

ஓர் குழந்தைக்கு அப்பாவாக - படைத்தல்

அந்த குழந்தைக்கும், குடும்பத்துக்கு ஆதரவாக - காத்தல்

தவறான விசயங்களுக்கு எதிராக குரல்கொடுக்க - அழித்தல்

மற்றவர்களுக்கு உதவியாக - அருளல்

மறைத்தல் - இதுக்கும் உதாரணம் சொல்லலாம்.

கடவுளை - கட உள் என்று தானே அர்த்தம் சொல்லுறீனம். யாழில திண்ணையில நிக்கிறதால நீங்கள் கடவுள் இல்லை என்று சொல்ல ஏலாது. திண்ணையில நிக்கேக்க காத்தல், அருளல், மறைத்தல் தொழில் செய்கிறீங்கள்.

கழுத்தில பாம்பும், தலையில கொம்பும் உடையவர் மட்டுமா கடவுள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதால டங்சும் ஒரு கடவுள்தான். நம்புங்கோ..!

அப்ப டங்க்ஸ் ஒரு கடவுள் எண்டால் ஆர் சாத்தான்?

Link to comment
Share on other sites

அப்ப டங்க்ஸ் ஒரு கடவுள் எண்டால் ஆர் சாத்தான்?

சாத்தானும் அவரே..! ஆகமொத்தம் அவரும் ஒரு மனிசன்..! :wub:

Link to comment
Share on other sites

சாத்தான் யார் என்று இந்த திரியை ஆரம்பிச்ச நுணாவிலானைதான் கேட்கணும். டங்க்ஸ் சாத்தான் இல்லை. அவர் கடவுள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.