Jump to content

சமையல் உதவி தேவை


Recommended Posts

அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியா சமையல் பகுதிக்கும் வந்தாச்சு :D

இங்கதான் சமையல் வல்லுனர்கள்/சமையல் கலைஞர்கள் இருக்கிறீங்களே ^_^ . எனக்கும் கொஞ்சம் சுவையா சமைக்க உதவி செய்யுங்கோ. என்ர நிறுவனத்தில எங்கட குழுவில 5 பேர் இருக்கிறம். ஒவ்வொரு வியாழக் கிழமையும் ஒராள் சமைக்கவேணும். வாற வியாழன் திரும்ப என்ர முறை. ஏற்கனவே இரண்டு தரம் ஏதோ தட்டுத் தடுமாறி எனக்கு தெரிஞ்சத வைச்சு சமைச்சுக் குடுத்திட்டன். இரண்டு தரமும் கோழியை வைச்சு விளையாடியாச்சு. இனி வேற ஏதாவது புதுசா செய்ய வேணும் :lol: . சுலபமா - கனநேரம் செலவளிக்காமல் (30 - 50 நிமிடங்களுக்குள்) செய்யக் கூடிய ஒரு உணவுக்கு செய்முறை சொல்லுங்கோ. புண்ணியமாப் போகும் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அய்யோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ. இ. சமைக்கத் தெரியாதே.இந்தா பாருங்கோ..smiley-char025.gif :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

இளைஞன், இரண்டு முறை கோழி சமைத்துள்ளீர்கள் , இனியும் கோழி சமைத்தால் அவர்களுக்கு ஒரு மாதிரி இருக்கும்.

இதனை செய்து பாருங்கள்.

spaghetti-carbonara-su-1598630-l.jpg

Spaghetti 750 கிராம்

கரட் 8

உருளைகிழங்கு 4

லீக்ஸ் 5 ( பச்சை இலை மட்டும் )

ஏதாவது இறைச்சி

சீஸ் பவுடர்

Maggi

செய்முறை

Spaghettiஐ அவிய விடவும்

கரட், உருளை கிழங்கு, லீக்ஸ் பச்சை இலை போன்றவற்றை நடுவால் வெட்டி சிறு சுண்டுகளாக வெட்டி தனித்தனியே பொரிக்கவும்.

இறைச்சியையும் சிறு துண்டுகளாக வெட்டி கொஞ்சம் உப்பும், மிளகாய் தூளும் போட்டு பொரித்து எடுக்கவும்.

இப்போ பொரித்த பொருட்களை ஸ்பக்கேற்ரியுடன் கலந்து சீஸ் பவுடர் தூவி பரிமாறவும்.

சிலருக்கு மகி பிடிக்கும் அதனை சாதுவாக தெளிக்கவும்.

MaggiSeasoning200.jpgkaese_gerieben.jpggeriebener hartkäse

Link to comment
Share on other sites

இளைஞன், அப்ப சமையலிலை ஒரு கரைகாண போறீங்களோ?

கடலுணவு, இறைச்சி போன்றவற்றை சாப்பிடாத படியால், அவற்றை அதிகம் சமைப்பதில்லை. ஆனால் நண்பர்களை எப்பவாவது சாப்பிட கூப்பிட்டால், அவர்களுக்கு சமைத்து கொடுப்பதுண்டு.

நான் சமைக்க பாவித்தது சல்மன் மீன் துண்டுகள், ( சுப்பா மார்கெட்டில் துப்பரவாக்கி, தனி தனி துண்டுகளாக பிரீசரில் இருக்கும். இதனால் வெட்டி, துப்பரவாக்கும் வேலை, கையால் அழைய வேண்டிய தேவை எதுவும் இல்லை.

இந்த சமையல் முறை மேற்கத்தேய சுவைக்கு ஏற்ப சமைக்க

சல்மன் மீன் (சமையல் 25 நிமிடம் + 15 நிமிடம் முன் தயாரிப்பு+ 1 மணி நேரம் குளிரூட்டியில்) கேட்டது போல் 30 நிமிடம் தான் சமையல். :o

தேவையான பொருட்கள்

5 துண்டு சல்மன்

1/3 கப் தோடம் பழச்சாறு

1/3 கப் சோய் சோஸ்

3 மேசைக்கரண்டி கச்சான் பசை/ பட்டர் (Peanut butter)

3 மேசைக்கரண்டி கச்சப் (catsup)

1 மேசைக்கரண்டி தேன்

1/2 இஞ்சி

1 பல்லு உள்ளி,

செய்முறை

1. மீன் துண்டுகளை அறை வெப்ப நிலைக்கு கொண்டுவரவும் (1 நிமிடம், 30 செக்கன் மைக்கிரோ வேவில் வைக்கலாம்)

2.உள்ளி, இஞ்சி ஐ நன்கு பொடியாக வெட்டவும்/ பசையாக அரைக்கவும்/ கரட் சீவியால் சீவி எடுக்கவும்

3. தோடம் பழச்சாறு, சோய் சோஸ்,கச்சான் பட்டர், கச்சப், தேன், இஞ்சி, உள்ளி எல்லாவற்றையும் (5 மீன் துண்டுகளும் வைக்கக்கூடிய ஒரு பாத்திரத்தில் )நன்கு கலக்கவும்.

4. மீன் துண்டுகளை கலவையினுள் போட்டு நன்கு பிரட்டி, மூடி, குளிரூட்டியில் 1 மணி நேரம் வைக்கவும்.

5. ஒவனை 200 பகை செல்சியசுக்கு சூடக்கவும்,

6. மீன் துண்டுகளை ஓவனில் வைக்க கூடிய தட்டில் பரப்பி 15 நிமிடம் ஓவனில் வைத்து வேக விடவும், பின் மீன் துண்டை மறுபக்கம் திருப்பி, ஒரு 10 நிமிடம் வேக விடவும்.

7. இப்போது சுவையான (எனக்கு தெரியா - சாப்பிட்ட நண்பர்கள் சுவையாக இருக்கு என்றார்கள்) மீன் தயார்.

இதனை பாஸ்மதி அரிசி சோறும், சிறிய கீரை (Baby spinach) சலட் உடனும் பரிமாறுங்கள்.

மீன் ஓவனில் சமைக்க எடுக்கும் 25 நிமிடத்தில் நீங்கள் சோறும், சிறிய கீரை சலாட்டையும் செய்துவிடலாம்.

சிறிய கீரை சலட்

1 பாக் கீரை

சிறிதளவு உப்பு தூள்

சிறிதளவு மிளகு தூள்

1 உள்ளி பசை

சிறிதளவு வினாகிரி

சிறிதளவு ஒலிவ் எண்ணேய்

1.உள்ளி பசை, வினாகிரி, ஒலிவ் எண்ணேய் மூன்றையும் சேர்த்து கலக்கவும்

2. கீரையை கழுவி பாத்திரத்தில் இட்டு, மேலே சொன்ன கலவையை சேர்த்து, உப்பு தூள், மிளகு தூள் தூவினார் சிறிய கீரை சலாட் தயார்

விரும்பினால் வெட்டிய சிவப்பு பெரிய வெங்காயம், செர்ரி தக்காளி என்பவை சேர்க்கலாம். சில நேரம் வெங்காயம் எல்லார்க்கும் பிடிக்காது.

இந்த மீன் சமையல் முறை இணையத்தில் சுட்டது. :rolleyes:

உங்களுக்கு தேவையென்றால் பின்னர் கோழி இறைச்சி கறி (ஒவனில் சமைப்பது) எப்படி என்று சொல்கிறேன். இந்த சமையலுக்கு 45 நிமிடங்கள் தேவை.

Link to comment
Share on other sites

வாசிக்கவே நல்லாத்தான் இருக்கு. என்ன சிக்கல் எண்டால் என்ர அறையில "அவனும் இல்ல அவளும் இல்ல". :rolleyes:

Link to comment
Share on other sites

வாசிக்கவே நல்லாத்தான் இருக்கு. என்ன சிக்கல் எண்டால் என்ர அறையில "அவனும் இல்ல அவளும் இல்ல". :o

:rolleyes:

ஓ, அப்பிடி எண்டா, பொரிக்கிற சட்டிலை கொஞ்சம் கனோல எண்ணேய் ஊற்றி துண்டு உடைந்து விடாமல் பொரிச்சு எடுங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு தரமும் கோழியை வைச்சு விளையாடியாச்சு. இனி வேற ஏதாவது புதுசா செய்ய வேணும்.

இளைஞன் இரண்டு தரம் கோழியை வைச்சு விளையாட்டுக் காட்டிடீங்கள், இனி புதுசா ஆடு, மாடு, கோழி, காடை, கவுதாரி எண்டு வகைவகையாக வைச்சு விளையாட்டு காட்டவேண்டியது தானே!

வாசிக்கவே நல்லாத்தான் இருக்கு. என்ன சிக்கல் எண்டால் என்ர அறையில "அவனும் இல்ல அவளும் இல்ல". :rolleyes:

அவன் இல்லாட்டியும் பறவாயில்லை இளைஞன், அவள் கொஞ்ச(ம்) இருந்தால் நல்லது. பிழையா நினைக்காதேயுங்கோ, நான் அவல் கொஞ்சம் இருந்தா நல்லது எண்டுதான் சொன்னான். அவலை தண்ணிக்க ஊறப் போட்டிட்டு, அளவா தேங்காப்பூவும் சீனி இல்லாட்டி சக்கரை போட்டு ஒரு அவசரத்துக்கு சாப்பிடலாம் தானே?

Link to comment
Share on other sites

...

எனக்கும் கொஞ்சம் சுவையா சமைக்க உதவி செய்யுங்கோ. என்ர நிறுவனத்தில எங்கட குழுவில 5 பேர் இருக்கிறம்.

...

இவர்கள் இலங்கையர்களா? அல்லது வேற்று இனத்தவரா?? ஏன் கேட்கிறேன் என்றால், யார் என்று தெரிந்தால் அவர்களுக்கு ஏற்றது போல கொஞ்சம் மாத்தி அமைத்து பதிவிடலாம், வேற்று இனத்தவர் அதிகம் உறைப்பை விரும்ப மாட்டார்கள், நமவர்களுக்கு உறைப்பில்லாமல் சமைத்தால் விரும்ப மாட்டார்கள் என்று தான் கேக்கிறேன். தெரியப் படுத்தினால், அதற்கு ஏற்றது போல குறிப்புகள் தர முயற்சிக்கிறேன்.

இந்த திரியில் இணைத்த பதிவு, நான் செய்து பார்த்த பின்பு இங்கே பதிந்தது. நீங்கள் கோழிக்குப் பதிலாக ஆட்டிறைச்சி அல்லது மாட்டிறைச்சியையும் சேர்க்கலாம். ஆனால் அவிய விடவேண்டிய நேரம் கொஞ்சம் அதிகமாக விடவேணும். உதாரணம்: கோழிக்கு 10-15 நிமிடங்கள் அவிய விடும் படி எழுதி உள்ளேன், ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சிக்கு குறைந்தது 30 நிமிடங்களாவது அவிய விடவேணும் அதிலும் 5 , 6 பேருக்கு சமைக்கும் போது அளவுகள் கூடுவதால் குறைந்தது 40 நிமிடங்கள் என்றாலும் அவிய விடுங்கள்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=69554&pid=571455&st=0&#entry571455

Link to comment
Share on other sites

இவர்கள் இலங்கையர்களா? அல்லது வேற்று இனத்தவரா?? ஏன் கேட்கிறேன் என்றால், யார் என்று தெரிந்தால் அவர்களுக்கு ஏற்றது போல கொஞ்சம் மாத்தி அமைத்து பதிவிடலாம், வேற்று இனத்தவர் அதிகம் உறைப்பை விரும்ப மாட்டார்கள், நமவர்களுக்கு உறைப்பில்லாமல் சமைத்தால் விரும்ப மாட்டார்கள் என்று தான் கேக்கிறேன். தெரியப் படுத்தினால், அதற்கு ஏற்றது போல குறிப்புகள் தர முயற்சிக்கிறேன்.

இதே கேள்வி எனக்கும் இருந்தது.

அது தான் குத்து மதிப்பா மேற்கத்தேய சுவைக்கு ஏற்ப ஒரு குறிப்பை போட்டேன்.

Link to comment
Share on other sites

இளைஞன் இரண்டு தரம் கோழியை வைச்சு விளையாட்டுக் காட்டிடீங்கள், இனி புதுசா ஆடு, மாடு, கோழி, காடை, கவுதாரி எண்டு வகைவகையாக வைச்சு விளையாட்டு காட்டவேண்டியது தானே!

அவன் இல்லாட்டியும் பறவாயில்லை இளைஞன், அவள் கொஞ்ச(ம்) இருந்தால் நல்லது. பிழையா நினைக்காதேயுங்கோ, நான் அவல் கொஞ்சம் இருந்தா நல்லது எண்டுதான் சொன்னான். அவலை தண்ணிக்க ஊறப் போட்டிட்டு, அளவா தேங்காப்பூவும் சீனி இல்லாட்டி சக்கரை போட்டு ஒரு அவசரத்துக்கு சாப்பிடலாம் தானே?

:o

இவர்கள் இலங்கையர்களா? அல்லது வேற்று இனத்தவரா?? ஏன் கேட்கிறேன் என்றால், யார் என்று தெரிந்தால் அவர்களுக்கு ஏற்றது போல கொஞ்சம் மாத்தி அமைத்து பதிவிடலாம், வேற்று இனத்தவர் அதிகம் உறைப்பை விரும்ப மாட்டார்கள், நமவர்களுக்கு உறைப்பில்லாமல் சமைத்தால் விரும்ப மாட்டார்கள் என்று தான் கேக்கிறேன். தெரியப் படுத்தினால், அதற்கு ஏற்றது போல குறிப்புகள் தர முயற்சிக்கிறேன்.

இந்த திரியில் இணைத்த பதிவு, நான் செய்து பார்த்த பின்பு இங்கே பதிந்தது. நீங்கள் கோழிக்குப் பதிலாக ஆட்டிறைச்சி அல்லது மாட்டிறைச்சியையும் சேர்க்கலாம். ஆனால் அவிய விடவேண்டிய நேரம் கொஞ்சம் அதிகமாக விடவேணும். உதாரணம்: கோழிக்கு 10-15 நிமிடங்கள் அவிய விடும் படி எழுதி உள்ளேன், ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சிக்கு குறைந்தது 30 நிமிடங்களாவது அவிய விடவேணும் அதிலும் 5 , 6 பேருக்கு சமைக்கும் போது அளவுகள் கூடுவதால் குறைந்தது 40 நிமிடங்கள் என்றாலும் அவிய விடுங்கள்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=69554&pid=571455&st=0&#entry571455

வேற்று இனத்தவர்கள். அதில ஒராள் மட்டும் நல்ல உறைப்பு சாப்பிடுவார். மற்றாக்கள் அளவான உறைப்புத்தான். அதால அளவான உறைப்போட இருந்தால் நல்லம். :rolleyes:

Link to comment
Share on other sites

தேவையான நேரம் ஒரு மணித்தியாலம்

தேவையான பொருட்கள்

ஆட்டிறைச்சி- 900g

வெங்காயம்- 2

தக்காளி- 3

இஞ்சி-5

உள்ளி-1/2

கறுவா-2

ஏலக்காய்-4

பெருஞ் சீரகம்-1 கரண்டி

மஞ்சள் தூள்-1/4 கரண்டி

பாப்ரிகா தூள் / கரும் மலசாலா தூள்- 2-3 கரண்டி/ தேவைக்கு ஏற்ப

கருவேப்பிலை-

ரம்பை இலை-

கொத்தமல்லி இலை-

தேசிக்காய்- 1/2

உப்பு- தேவைக்கு ஏற்ப

எண்ணெய்- 4கரண்டி

தயிர்- 2கரண்டி

செய்முறை

1) முதலில், ஆட்டிறைச்சி, வெங்காயம், தக்காளி இவற்றை சிறிய துண்டுகளாக வெட்டி தனித் தனியாக எடுத்துக் கொள்ளவும்.

2) இஞ்சி, உள்ளியை அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

3) ஆட்டிரைச்சியுடன் உப்பு, மஞ்சள் தூள் இஞ்சி உள்ளி என்பவற்றை ஒன்றாகக் கலந்து பத்து நிமிடங்கள் ஊற விடவும்.

4) வெட்டி எடுத்த வெங்காயத்தை சட்டியில் போட்டு எண்ணெய் சிறிதளவு விட்டு பொரிக்கவும். பொரிந்து வரும் போது தக்காளி, கருவேப்பிலை, ரம்பை இலை, பெரும் சீரகம், கறுவா, ஏலக்காய் இவற்றையும் பொரிந்து வரும் வெங்காயத்துடன் சேர்க்கவும்.

5) ஊற வைத்த இறைச்சியை சட்டியில் போட்டு மிதமான நெருப்பில் முப்பது நிம்மிடங்கள் அவிய விடவும்.

6) முப்பது நிமிடங்கள் கழித்து, பாப்ரிகா தூள் / கரும் மலசாலா தூள் இவற்றை தேவைக்கு அளவாக சேர்த்து(இந்த இரண்டு தூள்களும் சொல்லும் படியான உறைப்பு இல்லை, ஆனால் நிறம் மற்றும் வாசனைக்காக பாவிக்கப் படுகிறது), மூடியால் மூடி தொடர்ந்து பத்து நிமிடங்கள் அவிய விடவும்.

7) பத்து நிமிடங்களின் பின்பு, தயிர் இரண்டு கரண்டி சேர்த்து மேலும் இரண்டு நிமிடங்கள் அவிந்த பின்பு இறக்கவும். கொத்தமல்லி இலையை சிறிய துண்டுகளாக வெட்டி குழம்பின் மேல் தூவி மூடியால் மூடி விடவும்.

garammasalamuttonkuzham.jpg

இறைச்சி அவியும் அந்த முப்பது நிமிடத்தில் ஒரு salad செய்து விடலாம்.

தேவையான பொருட்கள்

பெரிய பச்சை மிளகாய்- 1

பெரிய சிவப்பு மிளகாய்- 1

வெள்ளரிக்காய்(cucumber)- 1/2

தக்காளி- 4

சிவப்பு வெங்காயம்- 1/2

கறுப்பு ஒலிவ்- 6

Feta சீஸ்- 100g

ஒலிவ் எண்ணெய்- 3 தேக்கரண்டி

தேசிக்காய்-1 /2

உப்பு & மிளகு- தேவைக்கு ஏற்ப

கொத்தமல்லி இலை- சிறிதளவு

புதினா இலை/(mint)- சிறிதளவு

1) மிளகாய்கள், வெங்காயம், cucumber இவற்றை சிறிய துண்டுகளாக வெட்டி ஒரு பெரிய பிளாஸ்டிக் பாத்திரத்தில் போடவும்.

2) கறுப்பு ஒலிவ்வை பாதியாக வெட்டி, உப்பு & மிளகு இவற்றை சேர்த்துக் கலக்கவும்.

3) Feta சீஸை சிறிதாக உருத்தி சலட்டின் மேல் போடவும்.

வேறு ஒரு சிறிய பாத்திரத்தில் தேசிக்காய் சாறையும், ஒலிவ் எண்ணெயையும் சேர்த்துக் கலக்கவும்

4) கொத்தமல்லி இலை, புதினா (mint ) இலை இவற்றை மிகவும் சிறிய அளவில் அரிந்து ஒலிவ் எண்ணெய்க் கலவையில் சேர்க்கவும்.

5) கடைசியாக இந்த ஒலிவ் எண்ணெய்க் கலவையை சலட்டின் மேல் ஊற்றி விடவும்.

greeksalad.jpg

இந்த இரண்டையும் நீங்கள் சோறு அல்லது naan bread உடன் அல்லது சிறி அண்ணாவின் Spaghetti உடனும் பரிமாறலாம். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறைச்சி அவியும் அந்த முப்பது நிமிடத்தில் ஒரு salad செய்து விடலாம்.

-----

3) Feta சீஸை சிறிதாக உருத்தி சலட்டின் மேல் போடவும்.

வேறு ஒரு சிறிய பாத்திரத்தில் தேசிக்காய் சாறையும், ஒலிவ் எண்ணெயையும் சேர்த்துக் கலக்கவும்

greeksalad.jpg

-----

குட்டி, எனக்கு மிகவும் பிடித்த சலாட் இது.

Feta சீஸ் வாங்கும் போது 40% கொழுப்பிலும் கிடைக்கின்றது. கொழுப்பு குறைந்த 3.5% Feta சீஸை வாங்கினால் நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திடீர் தோசை

தேவையான சாமன்கள்

கொஞ்ச கூப்பன் மா

கொஞ்ச உப்பு

ஒரு போத்தில் பிளேன் சோடா

மீன்சம்பல்

தேவையான சாமன்கள்

இரண்டு மீன்ரின்

இரண்டு வெங்காயம்

ஒரு குடைமிளகாய்(காரசாரமாய் இருக்கோணுமெண்டால் ஒரு யாழ்ப்பாணத்து கொச்சிக்காய்)

புளிவிடுறத்துக்கு ஒரு எலும்பிச்சங்காய்

இப்ப என்னவெண்டால்...

ஒருகிண்ணத்துக்கை கொஞ்ச கூப்பன் மாவை (ஒருகிலோ) போட்டு உங்கடை கணக்குக்கு ஒரு சொட்டு உப்பையும் போட்டுட்டு பிளேன்சோடாவை கொஞ்சம்கொஞ்சமாய் விட்டு ஏதாவது ஒண்டாலை கட்டிபடாமல் கலக்கி தோசைமாபதத்துக்கு கொண்டு வரரோணும்.

இதை அப்பிடியே வைச்சிட்டு....

மீன் ரின்னை திறந்து அதுக்கை கிடக்கிற எண்ணையை வெளியிலை ஊத்திப்போட்டு

மீனை இன்னுமொரு கிண்ணத்துக்கை போடுங்கோ

அதுக்கை வெங்காய்த்தையும் மிளகாயையும் நல்ல குறுணிகுறுணியாய் வெட்டிப்பொடவும்

அதுக்குப்பிறகு உங்கடை கணக்குக்கு கொஞ்ச உப்பும் எலும்பிச்சம்புளியையும் கலந்து சம்பல்மாதிரி பிரட்டி எடுக்கவும்.பினையக்கூடாது.கொஞ்சகாரசாரமாய் இருக்கோணுமெண்டால் கொச்சிக்காயையும் குறுணிகுறுணியாய் வெட்டிப்போட்டு.....

சரி இப்ப..

கலக்கி வைச்ச மாவை தோசை தட்டிலையோ இல்லாட்டி இவங்கடை தாச்சியிலையோ தோசைமாதிரி சுட்டெடுக்கவும்.

இவ்வளவுதான் வேலை

இதுக்குப்பிறகு

நீங்கள் சுட்ட தோசையை மீன்சம்பலோடை தொட்டும் சாப்பிடலாம்

இல்லாட்டி

மீன்சம்பலை தோசையிலை பரப்பிட்டு ரோல்மாதிரி சுருட்டிப்போட்டும் அமுக்கலாம்

இவ்வளவும் செய்யுறதுக்கு ஆகக்கூடினது 15 நிமிசம் திருப்தி

Guten Appetit!

Bon appétit!

Enjoy your meal!

:huh:

Link to comment
Share on other sites

குட்டி, எனக்கு மிகவும் பிடித்த சலாட் இது.

Feta சீஸ் வாங்கும் போது 40% கொழுப்பிலும் கிடைக்கின்றது.கொழுப்பு குறைந்த 3.5% Feta சீஸை வாங்கினால் நல்லது.

அறியத் தந்தமைக்கு நன்றி சிறி அண்ண :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கூப்பன் மா என்றால் என்ன ?

கூப்பன் மா என்றால்‍_ கோதுமை மா

நீங்க இலங்கையிலை இருக்கலையா??

இல்லை பல நோக்கு கூட்டுறவு சங்கம்(ப.நோ.கூ.ச) பக்கம் போகவே இல்லையா??? :lol:

உலர் உணவு அட்டைக்கு சங்கக் கடையில் குடுப்பதால் நம்ம ஆக்கள் கோதுமை மாவை கூப்பன் மா என அழைக்கிறார்கள்.

இதுக்கெல்லாம் வ‌ரிசையிலை கால் கடுக்க காலையிலையே போய் இடம் பிடித்து காத்திருந்ததும் ஒரு காலம்....

Link to comment
Share on other sites

கருவா

ஏலக்காய்

கருவேப்பிலை

ரம்பை இலை

கொத்தமல்லி இலை

இதுகள் கட்டாயம் போடணுமா குட்டி? :lol: இத நான் எங்க போய் தேட :D

ஆரும் "டுசல்டோர்வ்" பக்கம் தமிழ்க்கடை தெரிஞ்சா சொல்லுங்கோ :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆரும் "டுசல்டோர்வ்" பக்கம் தமிழ்க்கடை தெரிஞ்சா சொல்லுங்கோ :lol:

TRANSFOOD

ACKERstr_30

40223 düsseldorf

Link to comment
Share on other sites

கூப்பன் மா என்றால்‍_ கோதுமை மா

நீங்க இலங்கையிலை இருக்கலையா??

இல்லை பல நோக்கு கூட்டுறவு சங்கம்(ப.நோ.கூ.ச) பக்கம் போகவே இல்லையா??? :lol:

உலர் உணவு அட்டைக்கு சங்கக் கடையில் குடுப்பதால் நம்ம ஆக்கள் கோதுமை மாவை கூப்பன் மா என அழைக்கிறார்கள்.

இதுக்கெல்லாம் வ‌ரிசையிலை கால் கடுக்க காலையிலையே போய் இடம் பிடித்து காத்திருந்ததும் ஒரு காலம்....

நீங்கள் சொன்னதில் ஒரு சிறு திருத்தம்,

கூப்பன் மா எனும் பதம் உணவு அட்டைக்கு கோதுமை மா வினியோகித்ததால் வந்தது அல்ல.

வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கு இலவசமாக உணவு வழங்க உணவு முத்திரை/ கூப்பன் எனும் ஒன்றை கிராம சேவையாளர் மூலம் கொடுப்பார்கள். இத்திட்டம் சிறிமா அரசாங்க காலத்தில் ஆரம்பித்திருக்க வேண்டும் என நினைக்கிறேன் யாரும் தெரிந்தவர்கள் சொல்ல வேண்டும். சிறிமா காலத்தில் உணவு பொருட்கள் அனைத்தும் பங்கீட்டில் கொடுக்கப்பட்டதால், அனைவருக்கும் இந்த உணவு முத்திரை/ கூப்பன் இருந்திருக்க வேண்டும்.

பின்னர் அது வறுமை கோட்டின் கீழ் வாழுபவர்களுக்கு மட்டும் என மாற்றப்பட்ட்டிருக்க வேண்டும்.

கூப்பன் மா எனும் பெயர், அந்த உணவு முத்திரையை அடிப்படையாக வைத்தே வந்தது.ஒவ்வொரு மாதமும் கூப்பனை சங்க கடை/ பல நோக்கு கூட்டுறவு சங்கத்தில் கொடுத்து உணவு பொருடகள் வாங்க முடியும்.

Link to comment
Share on other sites

கருவா

ஏலக்காய்

கருவேப்பிலை

ரம்பை இலை

கொத்தமல்லி இலை

இதுகள் கட்டாயம் போடணுமா குட்டி? :D இத நான் எங்க போய் தேட :D

ஆரும் "டுசல்டோர்வ்" பக்கம் தமிழ்க்கடை தெரிஞ்சா சொல்லுங்கோ :lol:

இவை போட்டு சமைப்பதற்குக் காரணம் இறைச்சிக் கறி வாசனையாக இருப்பதற்கு. இவை கிடைக்காவிட்டால், ஜெர்மன் சூப்பர் மார்க்கட்டில் asian & indian spices section பகுதியில் பார்த்தீர்கள் என்றால் இருக்கும் என்று நினைக்கிறன்.

கறுவா-(Ground Cinnamon)

ஏலக்காய்-(cardamom)

கொத்தமல்லி இலை இது herbs இருக்கும் பகுதியில் வைத்து இருப்பார்கள்

ரம்பை இலைக்குப் பதிலாக bay leaves

பல வருடங்களுக்கு முன்னாலேயே ஆசிய நாட்டு spices ஜெர்மன் சூப்பர் மார்க்கட்டில் வாங்கிய ஞாபகம்.

தமிழ் கடைகளில் மட்டும் இல்லை, இந்தியன்/ பாகிஸ்தானி கடைகளில் இவைகள் கட்டாயம் இருக்கும்.

இது உங்க ஊருக்குக் கிட்டவா என்று பாருங்கோ... :lol:

http://www.indianfoodsguide.com/indian-food-guide/indian-restaurants/europe/germany/dusseldorf/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

pasta-with-marinara-pesto.jpg

300108900.jpg

அவனும் இல்ல அவளும் இல்ல

இளைஞன் இவை இரண்டும் கண்டிப்பா தேவை வேண்டுகிற வழியை பாருங்கோ

நான் உங்களுக்கு பாஸ்தா செய்யும் முறையை சொல்லுறன்

பாஸ்தா 400கிறாம்

ஸ்பகடி சோஸ்

பச்சை மிளகாய்3

வெங்காயம் 2

சோயா மீட்100கிறாம்

கரட்2

லீஸ்1

கோவா

மிளகு பவுடர்

கார்லிக் பவுடர்

புதினா இலை

செய்முறை

ஒரு பாத்திரத்தில் நீர் விட்டு கொதித்ததும் பாஸ்தாவை போட்டு அவிய விடவும்.அது வெந்து கொண்டு இருக்கும் போது நீங்கள் சோயா மீட்ரை கொதித்த நீரில் போட்டு விடம்.பச்சை மிளகாய்3

வெங்காயம் கரட் லீஸ் கோவ

இவற்ரை சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும் பின்னர் அடுப்பில் ஒரு தாச்சி வைச்சு கொஞ்சம் எண்ணை விடவும் அதில் வெங்காயம் போட்டு கொஞ்சம் வதங்கினதும் சோயா மீட்ரை போட்டு வதக்கவும்.பின்னர் பகடி சோஸ்சை உற்றி 5மினிற் வேகவிடவும் பின்னர் மீதமுள்ள மரக்கறிகளை போடவும் 5மினிற் முடி விடவும்.இதற்கிடையில் அவிய வைத்த பாஸ்தாவை பிறட்டி பிறட்டி விடவும். அவிந்ததும் நீர் இல்லாமால் எடுத்து இரண்டையும் கலக்கவும். பின்னர் புதினா இலை மிளகு கார்லிக் இவற்ரை துரவி சாப்பிடவும் எழுத்து பிளைக்கு மன்னிக்கவும்.

Link to comment
Share on other sites

தம்பி இளைஞா!!!

.... உந்த உதவி என்பது எல்லாம் நோயின் அறிகுறி!!!

.... நானும் இப்படித்தான் நோய் வந்து பல வருஷத்துக்கு முன்னம், என் அம்மாவிடன் ... "சாப்பாடு பிரட்சனையாக இருக்குது ..." ... என்றேன். அம்மாவோ ... "உங்கதானே நல்ல சாப்பாட்டுக்கடைகள் இருக்கும், சமைக்கிறது பிரட்சனையாயின், காசை பார்க்காதே வாங்கிச் சாப்பிடு. ..." .... நானும் விக்கிரமாதித்தன் சிந்தனையில் விடாமுயற்சியாக அடுத்ததையும் போட்டேன் ... "இல்லை அம்மா, எனக்கு எங்கடை சாப்பாடுதான் பிடிக்கும், அதுதான் ...." .... சொல்லுவதற்கு முன்னம் அம்மா திரும்பப்போட்டா ... "இங்கு என்னிடன் நல்ல விளக்கங்களுடன் எமது சமையல் எப்படி செய்வது பற்றிய புத்தகம் உள்ளது, வடிவாக வாசித்து சமைக்கப்பழகு" ...... ..... நான் சொல்ல வெளிக்கிட்டது ....?????

அன்று எனக்கு ஏற்பட்டத் நோய்தான் இன்று உங்களுக்கு இளைஞன்!! ... பக்குவமாக இதை கையாள வேண்டும்!! ... வெற்றி பெற வாழ்த்துக்கள்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓ ......நீங்கள் காப்புக்கையுதவி வேணும் என்று கேட்டு இருகிறீங்கள்.

இறுதியில் சுப காரிய முடிவாய் அமைய வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

காப்புக்கை உதவியோ? ... இப்ப எல்லாம் எங்களுக்கும் அகப்பை பிடிக்கத் தெரியுமோ என்றுதான் கேட்டு வருகிறார்கள்!! .... :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.