Jump to content

ஜாவாவில் 1,100 ஆண்டுகளுக்கு முந்தைய இந்து கோவில் கண்டுபிடிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜாவாவில் 1,100 ஆண்டுகளுக்கு முந்தைய இந்து கோவில் கண்டுபிடிப்பு

யோக்யகர்த்தா : இந்தோனேசியத் தீவுகளில் ஒன்றான ஜாவாவில், 1,100 ஆண்டுகள் பழமையான இந்துக் கோவில், அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகில், முஸ்லிம்கள் அதிகமாக வாழும் நாடுகளில் ஒன்றாக தற்போது இந்தோனேசியா இருக்கிறது. ஆனால், அதன் தீவுகளில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் புத்த மதமும், இந்து மதமும் இருந்தன என்பது வரலாறு.

அதற்குச் சான்றாக இந்தோனேசியாவின் பல இடங்களில் இரு மதங்களின் கோவில்கள் இன்றும் இருக்கின்றன. சில அகழ்வாய்வில் வெளிப்பட்டிருக்கின்றன.

ராஜராஜசோழனின் மகன் ராஜேந்திரன், மலேசியாவிலுள்ள கடாரத்தை வென்று, "கடாரம் கொண்டான்' என்ற பட்டத்தைச் சூட்டிக் கொண்டான்; மேலும் அவன் முன்னேறி, இந்தோனேசியாவிலுள்ள சில தீவுகளையும் வென்றான் என்பது வரலாறு. புத்த மதம் வந்து 300 ஆண்டுகளுக்குப் பின், கி.பி., 5ம் நூற்றாண்டில் இந்து மதம் இந்தோனேசியாவில் பரவியது. பின், வந்த இந்தோனேசிய மன்னர்கள் இருமதங்களையும் தழுவியவர்களாகவே இருந்திருக்கின்றனர். கடைசியாக கி.பி., 15ம் நூற்றாண்டில் இஸ்லாம் வந்தது. தற்போது இந்தோனேசியாவில் 90 சதவீதம் முஸ்லிம்களும், 10 சதவீதம் பவுத்தர்கள், இந்துக்களும் வாழ்கின்றனர்.

ஜாவாவில், யோக்யகர்த்தா என்ற இடத்தில் "இந்தோனேசிய இஸ்லாமியப் பல்கலைக் கழகம்' இருக்கிறது. இந்த வளாகத்தில் ஒரு பிரம்மாண்டமான மசூதியும் உள்ளது. இதன் அருகில் உள்ள இடத்தில் நூலகம் அமைப்பதற்காக, 2009 டிசம்பர் மாதம் வேலைகள் துவங்கின. அஸ்திவாரத்துக்காக மண் தோண்டும் போது, கல் சுவர் தென்பட்டது. அரசு தொல்பொருள் துறையினர் இதைக் கேள்விப்பட்டு நேரில் வந்து களப்பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து 35 நாட்களாக நடந்த அகழ்வாய்வில், 1,100 ஆண்டுகளுக்கு முந்தைய இரண்டு கோவில்கள் வெளிப் பட்டன. முதல் கோவில் ஆறு மீட்டர் நீள உயரத்துக்கு அமைந்துள்ளது.

இதில் ஒரு விநாயகர் சிலை, ஒரு லிங்கம், ஒரு யோனி பீடம் (இது சக்தி வழிபாட்டைக் குறிப்பது) ஆகியவை இருந்தன. இந்தக் கோவிலின் அருகில் அமைந் துள்ள, ஆறு மீட்டர் நீளமும் நான்கு மீட்டர் உயரமும் கொண்ட மற்றொரு கோவிலில் ஒரு லிங்கமும், யோனி பீடமும், இரண்டு பலி பீடங்களும், இரண்டு நந்திகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகள் அனைத்தும் தொல் பொருள் அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லப் பட்டுள்ளன. கோவிலைச் சுற்றி வேலி போடப்பட்டு, பாதுகாப்பும் பலப்படுத்தப் பட்டுள்ளது. "இக்கோவில் எல்லாரும் பார்க் கும்படியாக கண்காட் சிக்கு அமைக்கப் படும்' என்று பல்கலையின் அதிகாரியான சுவர்சோனோ முகமது தெரிவித்தார்.

இந்தக் கோவிலின் அருகில் ஒரு நதி ஓடுகிறது. கோவிலுக்கு வடக்கில், 12 கி.மீ., தூரத்தில் மெரபி என்ற எரிமலை இருக் கிறது. இந்தக் கோவில் கட்டப்பட்ட 100 ஆண்டுகளுக்குள் இந்த எரிமலையிலிருந்து வெளிப்பட்ட தீக்குழம்பு, அருகிலுள்ள நதியின் வழியாக வந்து இந்தக் கோவிலை மூடியிருக்கலாம்; அதனால் தான் இந்தக்கோவில் பெருமளவில் எந்தப் பாதிப்பும் இல்லாமல் இருக்கிறது என்று தொல்பொருள் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

தொல்பொருள் ஆய்வாளரான இன்டுங் பஞ்ச புத்ரா என்பவர், "இந்தக் கோவிலில் கிடைத்துள்ள விவரங்கள் இதுவரை நடந்த அகழாய்வுகளில் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது' என்கிறார்.

"கி.பி., 15ம் நூற்றாண்டில் இங்கு அடியெடுத்து வைத்த இஸ்லாம், இங்கு ஏற்கனவே இருந்த புத்த, இந்து மதக் கலாசாரங்களை உள்வாங்கித்தான் வளர்ந்தது' என்று கதீஜா மாதா பல்கலைக் கழகத்தின் தொல்பொருள் துறைப் பேராசிரியரும் தெற்காசியாவில் இந்துமத ஆய்வில் சிறந்த நிபுணருமான திம்புல் ஹர்யோனா தெரிவித்தார். மேலும் அவர், "இந்தோனேசியா மூன்று மதங்களும் கலந்த கலவையாக இன்று வரை இருக் கிறது. அகழாய்வில் வெளிப்பட்ட சிலகோவில்கள், பாதி இந்துக் கோவில் அமைப்பிலும், பாதி புத்தக் கோவில் அமைப் பிலும் இருக் கின்றன.

சில நூற்றாண்டுப் பழமையான மசூதிகளின் கூரைகள், இந்துக் கோவில் களைப் போலவே இருக்கின்றன. அதேபோல் அவை மெக் காவை நோக்கி அமைக் கப்படாமல் இந்துக் கோவில்களைப் போலவே கிழக்கு அல்லது மேற்கு நோக்கி அமைக்கப் பட்டுள்ளன. இந்தோனேசியக் கலைகள், முஸ்லிம் களின் வாழ்க்கை முறை, உணவு, உடை, சடங்குகள் ஆகியவை முந்தைய இந்து, புத்தக் கலாசாரத்தின் அடையாளங்களைக் கொண்டிருக்கின்றன. இந்து மதம் 1,000 ஆண்டுகளாக இங்கு இருந்துள்ளது. அதன் தாக்கமும் ஆழமாகத் தான் இருக்கும்' என்கிறார்.

நன்றி - தினமலர்

Link to comment
Share on other sites

UNESCO நிதி உதவியுடன் அனுராதபுரம் ஜெடவனராமைய விகாரை புணரமைப்பின் போது 18 அடி ஆழத்தில் கிடைத்த நடராஜர், நந்தி சிலைகளும், கோமுகி அமைப்புக்களும். இதுபற்றிய செய்தி 2004 daily news பத்திரிகையில் படங்களுடன் வெளிவந்தது. பின்னர் அவை மறைக்கப்பட்டு, சிலைகள் கொழும்பு நூதனசாலைக்கு எடுத்துச் சென்று மறைக்கப்பட்டதாக தெரிகிறது.

இதையும் பார்க்கவும்: http://www.yarl.com/forum3/index.php?showtopic=68834 (பதிவு #3)

Link to comment
Share on other sites

இந்து சமயத்திற்கு 5000 ஆண்டுகளுக்கான ஆதாரங்கள் இருக்கின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்து சமயத்திற்கு 5000 ஆண்டுகளுக்கான ஆதாரங்கள் இருக்கின்றன.

அவங்கள் அடியும் முடியும் இல்லை என்கிறாங்கள்..............

நீங்கள் 5000ம் ஆண்டு என்று இடையில தொங்கிறீங்கள்..................... நீங்கள் கிறிஸ்தவரோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்து தேசம், இந்தொநேசியாவாக மாறியது. அவர்களது விமான நிறுவனத்தின் பெயர் கருடா. பாளி தீவில் நமது கோவில்களை காணலாம். நமது சாவகச்சேரி, ஜாவா சேரியாக இருந்து மாறியது.

http://tamilnet.com/art.html?catid=98&artid=22810

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.