Archived

This topic is now archived and is closed to further replies.

nochchi

ஜாவாவில் 1,100 ஆண்டுகளுக்கு முந்தைய இந்து கோவில் கண்டுபிடிப்பு

Recommended Posts

ஜாவாவில் 1,100 ஆண்டுகளுக்கு முந்தைய இந்து கோவில் கண்டுபிடிப்பு

யோக்யகர்த்தா : இந்தோனேசியத் தீவுகளில் ஒன்றான ஜாவாவில், 1,100 ஆண்டுகள் பழமையான இந்துக் கோவில், அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகில், முஸ்லிம்கள் அதிகமாக வாழும் நாடுகளில் ஒன்றாக தற்போது இந்தோனேசியா இருக்கிறது. ஆனால், அதன் தீவுகளில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் புத்த மதமும், இந்து மதமும் இருந்தன என்பது வரலாறு.

அதற்குச் சான்றாக இந்தோனேசியாவின் பல இடங்களில் இரு மதங்களின் கோவில்கள் இன்றும் இருக்கின்றன. சில அகழ்வாய்வில் வெளிப்பட்டிருக்கின்றன.

ராஜராஜசோழனின் மகன் ராஜேந்திரன், மலேசியாவிலுள்ள கடாரத்தை வென்று, "கடாரம் கொண்டான்' என்ற பட்டத்தைச் சூட்டிக் கொண்டான்; மேலும் அவன் முன்னேறி, இந்தோனேசியாவிலுள்ள சில தீவுகளையும் வென்றான் என்பது வரலாறு. புத்த மதம் வந்து 300 ஆண்டுகளுக்குப் பின், கி.பி., 5ம் நூற்றாண்டில் இந்து மதம் இந்தோனேசியாவில் பரவியது. பின், வந்த இந்தோனேசிய மன்னர்கள் இருமதங்களையும் தழுவியவர்களாகவே இருந்திருக்கின்றனர். கடைசியாக கி.பி., 15ம் நூற்றாண்டில் இஸ்லாம் வந்தது. தற்போது இந்தோனேசியாவில் 90 சதவீதம் முஸ்லிம்களும், 10 சதவீதம் பவுத்தர்கள், இந்துக்களும் வாழ்கின்றனர்.

ஜாவாவில், யோக்யகர்த்தா என்ற இடத்தில் "இந்தோனேசிய இஸ்லாமியப் பல்கலைக் கழகம்' இருக்கிறது. இந்த வளாகத்தில் ஒரு பிரம்மாண்டமான மசூதியும் உள்ளது. இதன் அருகில் உள்ள இடத்தில் நூலகம் அமைப்பதற்காக, 2009 டிசம்பர் மாதம் வேலைகள் துவங்கின. அஸ்திவாரத்துக்காக மண் தோண்டும் போது, கல் சுவர் தென்பட்டது. அரசு தொல்பொருள் துறையினர் இதைக் கேள்விப்பட்டு நேரில் வந்து களப்பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து 35 நாட்களாக நடந்த அகழ்வாய்வில், 1,100 ஆண்டுகளுக்கு முந்தைய இரண்டு கோவில்கள் வெளிப் பட்டன. முதல் கோவில் ஆறு மீட்டர் நீள உயரத்துக்கு அமைந்துள்ளது.

இதில் ஒரு விநாயகர் சிலை, ஒரு லிங்கம், ஒரு யோனி பீடம் (இது சக்தி வழிபாட்டைக் குறிப்பது) ஆகியவை இருந்தன. இந்தக் கோவிலின் அருகில் அமைந் துள்ள, ஆறு மீட்டர் நீளமும் நான்கு மீட்டர் உயரமும் கொண்ட மற்றொரு கோவிலில் ஒரு லிங்கமும், யோனி பீடமும், இரண்டு பலி பீடங்களும், இரண்டு நந்திகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகள் அனைத்தும் தொல் பொருள் அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லப் பட்டுள்ளன. கோவிலைச் சுற்றி வேலி போடப்பட்டு, பாதுகாப்பும் பலப்படுத்தப் பட்டுள்ளது. "இக்கோவில் எல்லாரும் பார்க் கும்படியாக கண்காட் சிக்கு அமைக்கப் படும்' என்று பல்கலையின் அதிகாரியான சுவர்சோனோ முகமது தெரிவித்தார்.

இந்தக் கோவிலின் அருகில் ஒரு நதி ஓடுகிறது. கோவிலுக்கு வடக்கில், 12 கி.மீ., தூரத்தில் மெரபி என்ற எரிமலை இருக் கிறது. இந்தக் கோவில் கட்டப்பட்ட 100 ஆண்டுகளுக்குள் இந்த எரிமலையிலிருந்து வெளிப்பட்ட தீக்குழம்பு, அருகிலுள்ள நதியின் வழியாக வந்து இந்தக் கோவிலை மூடியிருக்கலாம்; அதனால் தான் இந்தக்கோவில் பெருமளவில் எந்தப் பாதிப்பும் இல்லாமல் இருக்கிறது என்று தொல்பொருள் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

தொல்பொருள் ஆய்வாளரான இன்டுங் பஞ்ச புத்ரா என்பவர், "இந்தக் கோவிலில் கிடைத்துள்ள விவரங்கள் இதுவரை நடந்த அகழாய்வுகளில் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது' என்கிறார்.

"கி.பி., 15ம் நூற்றாண்டில் இங்கு அடியெடுத்து வைத்த இஸ்லாம், இங்கு ஏற்கனவே இருந்த புத்த, இந்து மதக் கலாசாரங்களை உள்வாங்கித்தான் வளர்ந்தது' என்று கதீஜா மாதா பல்கலைக் கழகத்தின் தொல்பொருள் துறைப் பேராசிரியரும் தெற்காசியாவில் இந்துமத ஆய்வில் சிறந்த நிபுணருமான திம்புல் ஹர்யோனா தெரிவித்தார். மேலும் அவர், "இந்தோனேசியா மூன்று மதங்களும் கலந்த கலவையாக இன்று வரை இருக் கிறது. அகழாய்வில் வெளிப்பட்ட சிலகோவில்கள், பாதி இந்துக் கோவில் அமைப்பிலும், பாதி புத்தக் கோவில் அமைப் பிலும் இருக் கின்றன.

சில நூற்றாண்டுப் பழமையான மசூதிகளின் கூரைகள், இந்துக் கோவில் களைப் போலவே இருக்கின்றன. அதேபோல் அவை மெக் காவை நோக்கி அமைக் கப்படாமல் இந்துக் கோவில்களைப் போலவே கிழக்கு அல்லது மேற்கு நோக்கி அமைக்கப் பட்டுள்ளன. இந்தோனேசியக் கலைகள், முஸ்லிம் களின் வாழ்க்கை முறை, உணவு, உடை, சடங்குகள் ஆகியவை முந்தைய இந்து, புத்தக் கலாசாரத்தின் அடையாளங்களைக் கொண்டிருக்கின்றன. இந்து மதம் 1,000 ஆண்டுகளாக இங்கு இருந்துள்ளது. அதன் தாக்கமும் ஆழமாகத் தான் இருக்கும்' என்கிறார்.

நன்றி - தினமலர்

Share this post


Link to post
Share on other sites

UNESCO நிதி உதவியுடன் அனுராதபுரம் ஜெடவனராமைய விகாரை புணரமைப்பின் போது 18 அடி ஆழத்தில் கிடைத்த நடராஜர், நந்தி சிலைகளும், கோமுகி அமைப்புக்களும். இதுபற்றிய செய்தி 2004 daily news பத்திரிகையில் படங்களுடன் வெளிவந்தது. பின்னர் அவை மறைக்கப்பட்டு, சிலைகள் கொழும்பு நூதனசாலைக்கு எடுத்துச் சென்று மறைக்கப்பட்டதாக தெரிகிறது.

இதையும் பார்க்கவும்: http://www.yarl.com/forum3/index.php?showtopic=68834 (பதிவு #3)

Share this post


Link to post
Share on other sites

இந்து சமயத்திற்கு 5000 ஆண்டுகளுக்கான ஆதாரங்கள் இருக்கின்றன.

Share this post


Link to post
Share on other sites

இந்து சமயத்திற்கு 5000 ஆண்டுகளுக்கான ஆதாரங்கள் இருக்கின்றன.

அவங்கள் அடியும் முடியும் இல்லை என்கிறாங்கள்..............

நீங்கள் 5000ம் ஆண்டு என்று இடையில தொங்கிறீங்கள்..................... நீங்கள் கிறிஸ்தவரோ?

Share this post


Link to post
Share on other sites

இந்து தேசம், இந்தொநேசியாவாக மாறியது. அவர்களது விமான நிறுவனத்தின் பெயர் கருடா. பாளி தீவில் நமது கோவில்களை காணலாம். நமது சாவகச்சேரி, ஜாவா சேரியாக இருந்து மாறியது.

http://tamilnet.com/art.html?catid=98&artid=22810

Share this post


Link to post
Share on other sites

  • Topics

  • Posts

    • அமெரிக்காவில் முதியவரை தள்ளி மண்டையை உடைத்த விவகாரம் : 57 போலீசார் கூண்டோடு ராஜினாமா   அமெரிக்காவில் முதியவர் ஒருவரை தள்ளிவிட்டு மண்டை உடைய காரணமான இரு போலீசார் மீதான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சக போலீசார் 57 பேர் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர். பதிவு: ஜூன் 06,  2020 15:00 PM வாஷிங்டன் வாகனங்களும், கடைகளும் தீக்கிரையாக்கப்பட்டன. கலவரத்தைக் கட்டுப்படுத்த முயன்ற 6 காவலர்கள் கொல்லப்பட்டனர்.போராட்டங்களைக் கட்டுப்படுத்த பல்வேறு நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும், அதனையும் மீறி பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாடு முழுவதும் கட்டுக்கடங்காமல் நடக்கும் போராட்டங்களைக் கட்டுப்படுத்த நியூயார்க் நகரில் பேரணியாகச் சென்றவர்கள் மீது போலீசார் கண்மூடித்தனமான தாக்குதலில் ஈடுபட்டனர்.மேலும் பேரணிகளைத் தலைமையேற்று நடததுபவர்களை உடனுக்குடன் கண்டறியும் போலீசார் அவர்களை கைவிலங்கிட்டு சாலையில் அமரவைத்து எச்சரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மான்ஹாட்டன் நகரில் இரவில் போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் கைதுசெய்யப்பட்டாலும், பகலில்ஆயிரக்கணக்கானோர் ஒன்றுகூடுவதைத் தடுக்க போலீசார் தடுக்க முடியவில்லை. வாஷிங்டன் நகரில் வெள்ளை மாளிகையை முற்றுகையிட்ட பொதுமக்கள் அங்கு செல்லும் பிரதான சாலையில் கருப்பர்களும் வாழவேண்டும் என்று பொருள்படும் BLACK LIVES MATTER என பிரமாண்டமாக எழுதியுள்ளனர்.  இந்த நிலையில் ராணுவத்தினர் பயன்படுத்தும் சில ஆயுதங்களை போலீசாருக்கும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 2015ல் கருப்பின இளைஞன் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து போலீசாருக்கு எதிராக போராட்டம் நடந்த நிலையில் நவீன ஆயுதங்களை போலீசார் கையாள அப்போதைய அதிபர் பாரக் ஒபாமா தடைவிதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் பப்பலோ பகுதியில் கலவர தடுப்பு போலீசார் குழு ஒன்று ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தது.அப்போது அவர்களிடம் கேள்வி எழுப்பிய 75 வயது முதியவர் ஒருவரை சில போலீசார் மூர்க்கத்தனமாக தள்ளிவிட்டதில், அவர் கீழே விழுந்தார்.  அதில் அவரது மண்டை உடைந்தது. இந்த விவகாரம் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல் பூதாகரமாக மேலும் வெடிதத்து. இந்த  சம்பவத்தில் தொடர்புடைய இரு போலீசார் மீது நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.அந்த போலீசார் இருவர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.  இதற்கு பப்பலோ கலவர தடுப்பு போலீசார் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதன் ஒருபகுதியாக பப்பலோ கலவர தடுப்பு போலீசார் குழுவில் மொத்தமுள்ள 57 பேரும் தங்கள் பொறுப்புகளில் இருந்து திடீர் ராஜினாமா செய்துள்ளனர்.இதனிடையே மண்டை உடைந்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்துவரும் அந்த முதியவர் குணமடைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.   https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/06150013/Buffalo-officers-quit-special-team-after-2-officers.vpf
    • இவர்களுக்கு நீங்கள் வாக்களிக்க கூடாது – பெரமுனவை கடுப்பேற்றிய ஹூல் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான இரட்ணஜீவன் ஹூல் நேற்று (05) யாழ்ப்பாண ஊடகம் ஒன்றுக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியிருந்தார். இதன்போது தன் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள், அவதூறுகள் தொடர்பில் பதிலளித்த அவர், ‘தேர்தலில் பலர் அளாப்புவது (ஏமாற்றுவது) வளமை. அந்த அளாப்பத்தை தடுப்பது எமது கடமை. எனவே அளாப்புபவர்கள் எங்களை மிரட்டினால், தாம் அளாப்புவதை தடுக்க மாட்டோம் என்று நினைக்கின்றனர். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை ஆதரிக்கும் சில ஊடகங்கள் பச்சையாக பொய்களை எழுதி வருகின்றார்கள். இவர்கள் ஜனநாயகத்துக்கு எதிரானவர்கள். இவர்களுக்கு நீங்கள் வாக்களிக்க கூடாது. உங்களது வாக்குகளை கெடுக்க பிரச்சாரம் செய்பவர்களுக்கு நீங்கள் ஏன் வாக்களிக்க வேண்டும். இப்படி பொய் சொல்பவர்கள் யாரை ஆதரிக்கிறார்களோ அவர்களுக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டாம்.’ – என்றார். இந்நிலையில் இவ்வாறு கருத்துகூறியதன் மூலம் தேர்தல் ஆணைக்குழுவின் சுயாதீன உறுப்பினர் நிலையை ஹூல் இழந்துள்ளார் என்று பெரமுனவின் நாடாளுமன்ற வேட்பாளரும் ஜனாதிபதி ஆலோசகருமான அலி சப்ரி குற்றம்சாட்டியுள்ளார். அத்துடன் ஹூல் அரசியல் செய்ய வேண்டும் அல்லது சுயாதீன உறுப்பினராக இருக்க வேண்டும் என்றும் சப்ரி காட்டமாக தெரிவித்திருக்கிறார்.   https://newuthayan.com/இவர்களுக்கு-நீங்கள்-வ/
    • நல்ல கருத்துக்கள் நெடுக்ஸ் ஆனால் தாராக்கள் பன்றிகள் சேற்றில் வாழ்பவை, அது வாங்குபவர்களுக்கும்  தெரியும்.தோலுரித்தால் இறைச்சி சுத்தமாய் இருக்கும்......மேலும் தாராக்களுக்கு நீச்சல் பழக்குவது பற்றித்தான் அப்போதில் இருந்து யோசித்து கொண்டிருக்கிறன்.....!   🤔   
    • நான் வாசிக்கவில்லை. ஆனாலும், காரணத்தினை விளங்கிக் கொள்கிறேன்.