Jump to content

"சுவாமி நித்தியானந்தாவின் சில்மிஷம்" கள்ளச் சுவாமி மாட்டுப் பட்டார்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு அவர் செய்த எதுவும் தப்பா தோணல அவரை ஒரு சாதாரண மனிதராகத் தான் பார்க்கிறன்.பெற்ற தாய் தந்தையைத்தவிர மற்ற யாரும் சாமியாகப்பார்த்ததில்லை . சாதரணமனிதனுக்கு இயல்பாக இருக்க கூடிய உணர்வு தான் இது.முட்டாள் சனம் அவரை சாமியாக்கி உயரத்தில வைத்து பார்கிறது பிறகு அவர் அப்படி பண்ணிட்டாரே என்று கோபப்படுரதில எந்த அர்த்தமும் இல்ல.அவர் யாரையாவது கட்டாயப்படுத்தி ஏதாவது செய்தால் தப்பு சொல்லலாம் .ஆனா ஒரு பெண் விரும்பி போகும் போது அவரை தப்பு சொல்ல எதுவும் இல்லை. ஒருவருடைய தனிப்பட்ட படுக்கையறையில் நடந்ததை வீடியோ எடுத்து போட்ட மனநோயாளியின் மனநிலையை என்னவென்று சொல்ல :)

பொது வாழ்கைக்கு வந்து விட்டால் ஒழுக்கம் என்பது மிக மிக முக்கியமானது, இவர் தன்னை ஒரு பிரமச்சாரி என பொய்சொல்லி இருகிறார், ஒட்டுமொத்த பிரமச்சாரிகளுக்கும் கழங்கம் விளைவித்து இருகிறார். அசாபாசத்தை அடக்கத்தெரியாதவர் சாமியாராக வேடம் போட்டு மக்களை ஏமாற்றத்தேவையில்லை சாதாரன மனிதனாகவே வாழ்ந்து இருக்கலாம், குறுகியகாலத்தில் பணம் சம்பாதிப்பதே இவரது நோக்கமாக இருகிறது. கட்டாயபடுத்தாமல் பெண்கள் வந்தால் நாட்டின் முதல் குடிமகன்களும்,பிரதமர்களும் யாருடன் எத்தனை தடவை வேணுமெண்றாலும் போகலாம் என்கிறீர்களா? :):D:huh:

Link to comment
Share on other sites

  • Replies 99
  • Created
  • Last Reply

பொது வாழ்கைக்கு வந்து விட்டால் ஒழுக்கம் என்பது மிக மிக முக்கியமானது, இவர் தன்னை ஒரு பிரமச்சாரி என பொய்சொல்லி இருகிறார், ஒட்டுமொத்த பிரமச்சாரிகளுக்கும் கழங்கம் விளைவித்து இருகிறார். அசாபாசத்தை அடக்கத்தெரியாதவர் சாமியாராக வேடம் போட்டு மக்களை ஏமாற்றத்தேவையில்லை சாதாரன மனிதனாகவே வாழ்ந்து இருக்கலாம்.

Link to comment
Share on other sites

கடவுளைப்பற்றிய அறிவியல் தேடலே இன்னும் முடிவில்லாமல் தொடரும்போது மக்கள் சாமியார்களை தொடர்ந்து நம்புவது கவலை தருகின்றது.

மக்களின் அறிவை அடைவு வைக்கும் சினிமாக்கள் தொலைக்காட்சிகளும் இதற்கு கரணங்கள்.

குடும்ப நிகழ்ச்சி நேரம் இதை பிரசுரித்தது கிட்டத்தட்ட ஒரு ஆபாசப் படத்தை பிரசுரித்ததுக்குச் சமன்.

இவ்வாறு விபரமாகக் காட்டவேண்டியதில்லை.. அது சரி இப்போது வரும் சினிமாக்களை விட இதன் பாதிப்பு குறைவானதாக இருக்குமோ என்னமோ.

எமதுமக்கள் சாரை சாரையாக கொல்லப்படும்போது மானாட மயிலாட போன்ற நிகழச்சிகளை பிரசுரித்த இந்த தொலைக்காட்சி நிறுவனம் எம் மக்களின் அழிவை கொஞ்சமேன்னும் பிரசுரிக்கவில்லை..

ஆனால் இந்த செய்திக்கு கொடுத்த முக்கியத்துவத்தின் அடிப்படையில் பார்த்தால் இது ஒரு பெரம்பெசல் மற்றும் பழிவாங்கல் போலுள்ளது.

எல்லா சாமியார்களின் வீட்டிலும் கமிரா வைத்தால் நீலப்படத்துறை கவுழ்ந்து விடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு அவர் செய்த எதுவும் தப்பா தோணல. சாதரணமனிதனுக்கு இயல்பாக இருக்க கூடிய உணர்வு தான் இது.முட்டாள் சனம் அவரை சாமியாக்கி உயரத்தில வைத்து பார்கிறது பிறகு அவர் அப்படி பண்ணிட்டாரே என்று கோபப்படுரதில எந்த அர்த்தமும் இல்ல.அவர் யாரையாவது கட்டாயப்படுத்தி ஏதாவது செய்தால் தப்பு சொல்லலாம் .ஆனா ஒரு பெண் விரும்பி போகும் போது அவரை தப்பு சொல்ல எதுவும் இல்லை. ஒருவருடைய தனிப்பட்ட படுக்கையறையில் நடந்ததை வீடியோ எடுத்து போட்ட மனநோயாளியின் மனநிலையை என்னவென்று சொல்ல :D

பலருக்கும் தமது இயலாமையை, பலவீனத்தை, முட்டாள்தனத்தை வெளிப்படுத்துவதற்கு நல்லதொரு கிழங்கு மாட்டியிருக்கு. நீங்கள்தான் சாமி என்று மரியாதை கொடுத்து சால்வை போர்த்தி விட்டீங்கள், மேடையில ஏற்றிவிட்டீங்கள். பிறகு நீங்கள்தான் அவருக்கும் மற்ற ஆக்கள் மாதிரி கக்கூசுக்கு போகிது என்று சொல்லி தூற்றுகிறீங்கள். ஆக மொத்தத்தில மனிசனை மனுசன் மனுசனாக இனம் காணத்தெரியாவிட்டால் இப்பிடித்தான்.. :)

இந்த செய்தியில் பணம் புகழ் லஞ்சம் ஊழல் ...... என்று எவ்வளவோ சிக்கல்கள் உள்ளன

இவற்றை நாம் சாதாரண பொதுமக்கள் அறியோம்

ஆனால் இதையெல்லாம் கடந்து இது வெள்வந்துள்ளது என்றால்....???

இந்த செய்தியைக்கேட்டதும் நான் நேற்று திண்ணையில் எழுதியது இது

எனது கருத்து சாமியையும் பக்தியையும்வேறு எல்லாவற்றையும் போட்டுக்குழப்புபவர்கள் நாமே...

அது அது நடந்த வண்ணமே உள்ளது

நாம் இதைப்பிடிக்காவிடில் எம்மை பாதுகாத்துக்கொள்ளலாமே தவிர..

வலியப்போய் விழுபவர்களையோ

வேடம் போட்டு ஏமாற்றுபவர்களையோ எம்மால் ஒன்றும் செய்து விட முடியாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டி.வி.யில் அருவருக்கத்தக்க படம்-செய்தி: கருணாநிதி கடும் கண்டனம்

kalaigar12.jpg

சென்னை, மார்ச். 4-

முதல்-அமைச்சர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பகலில் சாமி யாகவும்- இரவில் காமி யாகவும் வாழ்க்கை நடத்தி-பாமர மக்களின் வாழ்வையும் அறிவையும் பாழாக்கி வருகின்ற-பணக் கொள்ளை அடிக்கின்ற பகல்வேடக்காரர்களை; பாமர மக்களுக்கு அடையாளம் காட்ட-பகுத்தறிவு இயக்கம் பல்லாண்டு காலமாக, பல சான்றுகளைக் காட்டி; பலத்த எதிர்ப்புக்கிடையிலேயும் பிரச்சாரம் செய்து வந்தும் கூட, படக்காட்சிகள், நாடகங்கள் இவற்றின் வாயிலாக எண்ணற்ற எடுத்துக்காட்டுகளை சித்திரித்தும் கூட, உதாரணமாக படமாக வெளிவந்த சந்திரகாந்தா- சொர்க்கவாசல்- மனோகரா- வேலைக்காரி-பராசக்தி- தூக்குமேடை போன்றவற்றில் அந்தக் காவியுடைதாரிகளின் கபட நாடகத்தை எடுத்துக் காட்டியும் கூட, இன்னமும் புரிந்து கொள்ள முடியாத- புரிந்து கொண்டாலும் திருந்திக் கொள்ள இயலாத- மௌடீகத்தில் மூழ்கியோர்- நாட்டில், சமூகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

சமூக நலனும், கண்ணியமும் காக்கப்பட வேண்டு மென்று, அவற்றில் அக்கறை காட்டுகிற ஒரு மக்கள் நல அரசு அண்மையில் நடை பெற்றதாக கூறப்படுகிற; காட்சியாக்கி காட்டப்படுகிற; கயமைத்தன சாமியார்களின் ஏமாற்று வித்தைகளை பொறுத்துக் கொண்டிருக்க முடியாது.

அதே நேரத்தில் குற்றங்கள் நடைபெறுவதை விட அந்தக் குற்றங்கள் எப்படி நடைபெற்றன-எங்கே யாரால் நடத்தப்பட்டன-எந்த முறையில் நடத்தப்பட்டன என்பதைச் சான்றாகக் காட்ட- வெளியிடப்படுகின்ற படங்களாயினும், செய்திகளாயினும் அவை அளவுக்கு மீறும்போது அவற்றை தொலைக் காட்சியிலோ பத்திரிகைகளிலோ படங்களாகப் பார்த்திடும் இளையோர் நெஞ்சங்களில் எத்தகைய மாறுதல்கள் ஏற்படும் என்பதையும் - அது இளைய சமுதாயத்தை எங்கே கொண்டு போய் நிறுத்தும் என்பதையும் எதிர்காலத் தலைமுறையின் மீது அக்கறை கொண்டோர் அனைவரும் எண்ணிப் பார்த்து நடந்திட வேண்டுமென்று கேட்டுக் கொள்வது ஓர் அரசின் கடமையாகும்.

அந்தக் கடமையை செய்கின்ற அரசு-அந்தக் கடமையைச் செய்கின்ற நேரத்தில்-அந்தக் கடமை வெற்றி பெற அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டியது தான் அனைவரும் மேற்கொள்ளும் சூளுரையாக இருக்க வேண்டுமே யல்லாமல் ஒரு தீமையை விவரிப்பதின் மூலம்-அது மற்றொரு பெரிய தீமைக்கு வித்திடுவதாக ஆகக் கூடாது.

அண்மையில் வெளிவந்துள்ள செய்திகள், அதனைத்தொடர்ந்து வெளிவருகின்ற செய்திகள் எவையாயினும் அவற்றை விவரம் உணர்ந்தோர் அரசுக்கும்-அரசின் காவல் துறைக்கும் தெரிவிக்க வேண்டுமேயல்லாமல்- தாங்களே முன்னின்று அவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டுவது தேவையற்றது என்பது மட்டுமல்ல; இத்தகைய தீயவர்களுக்கு தங்கள் செயலை நியாயப்படுத்த வலிமை சேர்ப்பதாகவும் ஆகிவிடும்.

அருவருக்கத்தக்க செய்திகளை மற்றும் படங்களை வெளியிடுவது முள்ளை முள்ளால் எடுக்கும் காரியம் தானே” என்று சில ஏடுகளும், தொலைக் காட்சி நிறுவனங்களும் வாதிடலாம். முள்ளை முள்ளால் எடுக்கலாம். ஆனால் போதையேற்றும் கள்ளை அருந்தியவனை; மேலும் கள்ளையூற்றி திருத்த முடியுமா? அது போலத்தான் இந்தச் செய்திகளும் படங்களும் சமூகத்தை மேலும் சீரழித்து விடக் கூடாதே என்ற கவலையோடு அரசின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இது போன்ற ஏமாற்று வித்தைக்காரர்களையும், பக்தி வேடம் பூண்டு பாமர மக்களை படுகுழியில் தள்ளுகின்ற பகல் வேடக்காரர்களையும் அவர்களிடம் பலியாகி சமுதாயத்தைச் சீரழிக்கின்ற சபல புத்தி உடையவர்களையும் இந்த அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது.

இந்த அரசு எடுக்கின்ற நடவடிக்கைகளுக்கு உண்மையிலேயே பகுத்தறிவு வளர்த்து, ஊருக்கு உபதேசிகளை ஒழித்துக் கட்ட வேண்டு மென்று எண்ணுகின்ற ஒவ்வொருவரும் உறுதுணையாக இருக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி கூறி உள்ளார்

maalaimalar.com

"ஊருக்கு உபதேசம் உனக்கல்லடி மகளே"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொளத்தூர் மணி சொன்னதைப்போல "கறுப்பனைக் கட்டி வைத்து அடிக்கிற அடியில் வேலன் வேலியை முறித்துக்கொண்டு ஓட வேண்டும்" :)

Link to comment
Share on other sites

இதில் என்ன கிடக்கு மண் தின்றதை மனிதன் திண்டுட்டு போறா.

சாமியார் வேடம் போட்டாத்தான் நடிகையை தொடலாமென்றால் அதில் பிழை இல்லை.

கருநாநிதி நடன் நிகழ்ச்சி என்று நடிகைகளை கூப்பிட்டு யாருடைய மார்பு நல்லா ஆடுது எண்டு வீணி ஊத்தி கொண்டு

கறுத்த கண்ணாடியால பார்க்கிறதை விட

சாமியார் பரவாயில்லை.

இவர் மாத்திரம் 3 பெண்டாட்டி பிறகு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாழாப்போன கணணித் துறைக்கு வந்ததுக்கு பதிலாக சாமியாராகி அப்படியே தமிழகத்தில் கட்டில்..மன்னிக்கவும் செட்டிலாயிருக்கலாம் (ம்ம்... வயிற்றெரிச்சலில் என்னத்தை எழுதுவது என்று தெரியவில்லை...)

பெண்ணாசை யாரை விட்டது, ரண்டு மூண்டு பிள்ள பெத்த நிழலியே இப்பிடி அம்மணக்கட்டையா அலையேக்க, பாவம் பிரம்மச்சரிய விரதம் இருந்து காயுற சாமிக்கு எப்பிடி இருக்கும் என்டு ஒருக்கா யோசிச்சுப் பாருங்கோவன்! :):D

Link to comment
Share on other sites

தமிழகத்தில் ஏற்பட்டு இருக்கும் விலைவாசி ஏற்றம் சீற்றமாக உருவாகாமல் தடுத்து நல்ல ஒரு விடயத்தை சனத்தின் கவனைத்தை திசை திருப்பினாங்கள் சன் குழுமம்... எல்லாத்தையும் மறக்கடித்து வரும் தேர்தலில் சாதகாமான போக்கை கொண்டுவந்த கலைஞர் இப்ப அறிக்கை விடுகிறார் தான் நல்லவர் தனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை எண்டு... அந்தாள் சாணக்கியன் தான்...

Link to comment
Share on other sites

.

ஆங்காங்கே இருக்கிற சாமிகள் எல்லாம் அலேர்ட் ஆகி தமது படுக்கை அறையை அங்குலம் அங்குலமாக சோதனை இடுவதாகச் செய்தி...

பசியை வென்றவனால் மட்டுமே காமத்தை வெல்ல முடியும். மீதி எல்லாரும் நித்தியானந்தா தான்.

Link to comment
Share on other sites

பொது வாழ்கைக்கு வந்து விட்டால் ஒழுக்கம் என்பது மிக மிக முக்கியமானது, இவர் தன்னை ஒரு பிரமச்சாரி என பொய்சொல்லி இருகிறார், ஒட்டுமொத்த பிரமச்சாரிகளுக்கும் கழங்கம் விளைவித்து இருகிறார். அசாபாசத்தை அடக்கத்தெரியாதவர் சாமியாராக வேடம் போட்டு மக்களை ஏமாற்றத்தேவையில்லை சாதாரன மனிதனாகவே வாழ்ந்து இருக்கலாம், குறுகியகாலத்தில் பணம் சம்பாதிப்பதே இவரது நோக்கமாக இருகிறது. கட்டாயபடுத்தாமல் பெண்கள் வந்தால் நாட்டின் முதல் குடிமகன்களும்,பிரதமர்களும் யாருடன் எத்தனை தடவை வேணுமெண்றாலும் போகலாம் என்கிறீர்களா? :):D:huh:

ஒழுக்கம் என்பது எல்லோருக்கும் ஒன்று .பொது வாழ்க்கைக்கு வாரவை மட்டும் தான் ஒழுக்கத்தோடு இருக்கோனம் என்று இல்லை.முழு ஒழுக்கம் கெட்டதுகள் தான் பொது வாழ்க்கையான அரசியலிலும் சாமியாராகவும் இருக்கினம்.இவர்களை ஏன் நாம் நம்பவேணும். இவர்களை நம்பாத ஒருவனுக்கு அவர்கள் செய்கிற தப்புகள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது . இப்படியான வீடியோ காட்சிகளை போடுறதால எங்கட சனம் திருந்தும் என்று நினைக்கிறிங்க.இந்தசாமியார் இல்லாட்டி இன்னொரு ஆசாமியிட்ட போகுங்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ரை பெயரும் சாமி எண்டுதான் கடைசியிலை முடியுது

நாசமறுப்பு இண்டுவரைக்கும் ஒருசின்னத்திரை சின்னக்கிளியைக்கூட அமுக்கேலாமல் கிடக்கு mad02171.gif

எல்லாம் போலந்து,துருக்கி,உக்கிரையின்,ரஷ்யா,கொசோவோ எண்டு கையுக்கையும் காலுக்கையும் கிடந்து மிதிபடுதுகள்

மனுசனுக்கு வாழ்க்கை வெறுக்குதப்பா sign0186.gif

Link to comment
Share on other sites

.

ஆங்காங்கே இருக்கிற சாமிகள் எல்லாம் அலேர்ட் ஆகி தமது படுக்கை அறையை அங்குலம் அங்குலமாக சோதனை இடுவதாகச் செய்தி...

:):D

அது மட்டுமா? வாசலில நிக்கிற கூர்க்காவில இருந்து, உள்ள வரும் அனைவருக்கும் Naked Body Scanner வைச்சு சல்லடை போட்டு செக்கிங் நடத்தித் தான் சாமியளிண்டே ஆசிரமத்துக்குள்ளே அனுமதி அளிக்கிற அளவுக்குப் போனாலும் ஆச்சரியப் பட ஒன்றும் இல்லை... :)

என்ரை பெயரும் சாமி எண்டுதான் கடைசியிலை முடியுது

நாசமறுப்பு இண்டுவரைக்கும் ஒருசின்னத்திரை சின்னக்கிளியைக்கூட அமுக்கேலாமல் கிடக்கு mad02171.gif

எல்லாம் போலந்து,துருக்கி,உக்கிரையின்,ரஷ்யா,கொசோவோ எண்டு கையுக்கையும் காலுக்கையும் கிடந்து மிதிபடுதுகள்

மனுசனுக்கு வாழ்க்கை வெறுக்குதப்பா sign0186.gif

:huh: முதல்ல இருக்கிற இடத்தை விட்டு வேற ஊருக்கு போங்கோ குசாமி அண்ண... :D

Link to comment
Share on other sites

நாகரீகம் இப்படி வளர்ந்து போனால் இதுகள் எல்லாம் சகஜம்..

இந்தியாவில் கலாச்சாரத்துக்குப் பெயர்போன தேசத்தில் இப்பிடியா இருக்கு நிலைமை.

Link to comment
Share on other sites

தமிழகத்தில் ஏற்பட்டு இருக்கும் விலைவாசி ஏற்றம் சீற்றமாக உருவாகாமல் தடுத்து நல்ல ஒரு விடயத்தை சனத்தின் கவனைத்தை திசை திருப்பினாங்கள் சன் குழுமம்... எல்லாத்தையும் மறக்கடித்து வரும் தேர்தலில் சாதகாமான போக்கை கொண்டுவந்த கலைஞர் இப்ப அறிக்கை விடுகிறார் தான் நல்லவர் தனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை எண்டு... அந்தாள் சாணக்கியன் தான்...

பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டிவிட கலைஞரை தவிர எந்த கொலைஞராலும் முடியாது.

Link to comment
Share on other sites

. அதை அலசி ஆராய இந்த சாக்கடைகள் நிறைந்த இந்திய சமுதாயத்திற்கு கலாசாரத்திற்கு என்ன தேவை இருக்கிறது என்பதுதான் அடுத்த கேள்வி..??! :)

இதை அதிகமாக அலசி ஆராயச்சி செய்வது நம்மட புலம்பெயர் பொம்மனாட்டிகலாம் . :D:huh:

Link to comment
Share on other sites

இளையோர் நெஞ்சங்களில் எத்தகைய மாறுதல்கள் ஏற்படும் என்பதையும் - அது இளைய சமுதாயத்தை எங்கே கொண்டு போய் நிறுத்தும் என்பதையும் எதிர்காலத் தலைமுறையின் மீது அக்கறை கொண்

அப்ப கிழடுகளின் நெஞ்சு எப்படி பாடுபடும் என்று

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் சிலவேளை இவர்களைப்பற்றி நினைப்பது என்னவெண்டால், இந்தக் கள்ளர்களது பெயரில் ஊரை ஏமாத்திப்பிழைப்பு நடாத்தும் கறுப்புப் பணம் வெளியேவந்து ஒருசில ஏழைகட்கு உணவாகுதே, அதுவரைக்கும் வந்தவரை இலாபமென. அதைவிடுத்து இவர்கள்மேல் மதிப்பும், நல்லெண்ணமும், நம்பிக்கையும் வைத்திருப்பவர்களதான் இச்செய்திபற்றிக் கவலைப்படல் வேண்டும் மற்றம்படி இந்தியாவில் இதுவெல்லாம் அல்வாசாப்பிடுவதுபோல் சாதாரண விடையங்கள். மாறாக, தன்னை உணர்நதவர்கள் ஞானப்போக்குள்ளவர்கள் உண்மையானவர்கள் யாரும் இவர்கள்போல் வெளிப்படையாக நானே கடவுள் அல்லது கடவுள் அவதாரமெனக் கூறிக்கொள்ளமாட்டார்கள. அத்தேவை அவர்கட்கு இல்லவே இல்லை, அதுக்காகப் போலிகளைக்கண்டு ஏமாறாதீர்கள் என அவர்களே விளம்பரம் கொடுக்கவேண்டுமென்பதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட

கடலில் கப்பல் போனா என்ன அடையாளமா தெரியப் போகுது.

சும்மா விடுங்கப்பா.

அதுதானே!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெங்களூர்: நித்யானந்த சாமியார்-ரஞ்சிதா செக்ஸ் வீடியோ காட்சிகள் வெளியானது எப்படி என்பது குறித்து பல்வேறு விதமான வதந்திகள் செய்திகளாக உலா வருகின்றன.

வதந்தி 1:

இந்த வீடியோவை எடுத்தவர்கள் ஆசிரமத்தைச் சேர்ந்த ஊழியர்களே. சாதாரண பக்தையாக ஆசிரமத்துக்குள் நுழைந்த ரஞ்சிதா, கிடுகிடுவென நித்யானந்த சாமியாரின் அந்தரங்க அறைக்குள் புகுந்து அவரை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளும் அளவு சக்தி மிக்கவராக மாறியதால் கடுப்பான, சாமியாரின் முன்னாள் அந்தரங்க தோழி ஒருவர் செய்த வேலைதான் இது என்கிறார்கள்.

வதந்தி 2:

கர்நாடகத்தைச் சேர்ந்த விவிஐபிக்கும் நித்யானந்தாவுக்கும் ரியல் எஸ்டேட் பிஸினஸில் மகா போட்டி. இதனால் கடுப்பான விவிஐபி, ஆசிரமத்தின் முக்கியப் பொறுப்பில் இருந்த ஒரு பெண்மணிக்கு கணிசமாகப் பணம் கொடுத்து, இந்த காம லீலைகளை படம் பிடித்துவிட்டாராம்.

வதந்தி 3:

கணவனைப் பிரிந்த ரஞ்சிதா, ஒரு யோகா வீடியோவுக்காக நித்யானந்தனின் ஆசிரமத்துக்குச் செல்ல, சாமியாரின் திரண்ட சொத்துக்களைக் கண்டு கொஞ்சம் மிரண்டு போய்விட்டாராம். சாமியாரின் பிரமச்சரியமும் ரஞ்சிதாவின் வனப்பில் கொஞ்சம் ஆடித்தான் போனதாம். இருவரும் கிட்டத்தட்ட கணவன் மனைவி மாதிரி குடித்தனம் நடத்த, ஒரு கட்டத்தில் சாமியாரை முழுமையாக தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, தனக்கு மிக நெருக்கமான ஒரு பெண் மூலம் இந்த வீடியோவை எடுக்க வைத்தாராம். அந்தப் பெண்ணோ இந்த வீடியோவை வைத்து 'டபுள் கிராஸ்' செய்துவிட, விஷயம் வெளியில் வந்து நாறிப்போனதாம்.

இப்படி பல விதமான விதவிதமான யூகங்களும், வதந்திகளும் செய்திகளாக வலம் வருகின்றன.

இந்த மூன்று வதந்திகளிலுமே, ரஞ்சிதா தவிர்த்து, முகம் தெரியாத பெண் ஒருவர் பெரும் வில்லியாக வந்து போகிறார். யார் அந்தப் பெண் என்பது இன்னும் ஓரிரு நாளில் வெளிச்சத்துக்கு வரும் என்கிறார்கள் இந்த விவகாரத்தை 'ஆழ்ந்து ஆராய்ந்து' வருவோர்.

அந்தப் பெண் யாரோ?

thatstamil.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நித்தியாநந்தனின் காமம்- காரணம்? மாறுபட்ட கோணத்தில்!!

நித்தியானந்தன் காமத்துக்கு என்ன காரணம்? சாதாரண இளைஞனுக்கு இந்த வயதில் உண்டாகும் காமம்தான் என்று நாம் சமாதானம் செய்து கொள்ளலாம். ஆனால் அப்படி அல்ல.

நித்தியானந்தனின் “கதவைத் திற………. வரட்டும்” என்ற புத்தகத்தில் உள்ள பிற்சேர்க்கை-1 பக்கம் 301,302 ல் உள்ள ஆய்வுச் செய்தி வித்தியாசமாக உள்ளது. அதாவது நித்தியானந்தனின் மூளைப்பகுதியை நவீன் ஸ்கேன் மூலம், சாதாரண நிலை, தவம் செய்யும் நிலை போன்ற நிலைகளில் சோதித்துள்ளனர்.

அப்படி என்ன அதில் உள்ளது என்கிறீர்களா? அதில்

“D- Spot- என்ற மூளையின் பகுதியில் சுரக்கும் டோபமைனைப் பற்றிக் கொடுக்கப்பட்டுள்ளது.

”டி-ஸ்பாட் என்பது மனிதன் எவ்வளவு இன்பப்படுகிறான், ஆனந்தப்படுகிறான் என்பதைக் குறிக்கும் பகுதி என்று எடுத்துக்கொள்ளலாம், அல்லது டோப்பமின் பகுதி( ஆனந்தத்தின்போது மனிதனுள் சுரக்கும் வேதிப்பொருள் / அல்லது தெய்வீகத் தன்மையின் இருப்பிடம் என்று எப்படி வேண்டுமானாலும் புரிந்து கொள்ளலாம்.

நித்தியா- விடம் இந்த டி-ஸ்பாட்டை அளக்கும்பொழுது கணக்கிடமுடியாத அளவு டோப்பமின் அல்லது டோப்பமைன் சுரந்து கொண்டே இருப்பது நவீன சோதனைகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது”

அந்தப்புத்தகத்தின் குறிப்பிட்ட பக்கம்:

NITHYANANTHA_thumb2.jpg?imgmax=800

என்ற மேல்குறிப்பிட்ட செய்தி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் என்ன ஆச்சரியம் என்கிறீர்களா?

டோபமைன் செக்ஸ் உணர்வுகளைத் தூண்டும் வஸ்து. இது அதிகம் சுரந்தால்….. ஆனந்த நிலை அடைகிறோமோ இல்லையோ கீழ்க்கண்டவை ஏற்படும்:

EXCESS DEFICIENT "NORMAL"

Anxiety Anhedonia - No Pleasure, World Looks Colorless Motivated

Psychosis Inability To "Love" Feelings Of Well-Being, Satisfaction

Aggression No Remorse About Personal Behavior Pleasure, Reward In Accomplishing Tasks

Schizophrenia Depression Healthy Libido

Addictions, Compulsions Addictions (seeking relief from depression) Good Feelings Toward Others

Paraphilias (Sexual Fetishes) Antisocial behavior Healthy bonding

Sexual Addiction Low Libido Maternal/Paternal Love

Unhealthy Risk-Taking Erectile dysfunction Healthy risk taking

Gambling Lack Of Ambition And Drive Sound choices

Impulsive Sensation-Seeking Realistic expectations

Compulsive Activities Social anxiety disorder

dopamine drives you to have sex over most other activities. With dopamine as the driving force, biology has designed you to engage in fertilization behavior to make more babies, and urges you to move on to new partners to create greater genetic variety among your offspring.

Your primitive brain accomplishes these goals of more progeny and promiscuity by manipulating your brain chemistry, and thus your desires and thoughts. High levels of dopamine increase sexual desire, encouraging you to behave recklessly. The thrill of a new affair and the rush from using pornography are examples of high dopamine. Unfortunately, consistently high levels of dopamine lead to erratic behavior and compulsions that are not conducive to survival.

இதற்கான சுட்டி:

1.http://www.entelechyjournal.com/pulling_away_after_sex1.htm

2.http://www.reuniting.info/science/sex_in_the_brain

* அதாவது டோபமைன் அதிகம் சுரந்தால் காம எண்ணங்கள் அதிகம் வரும்.

* புதிய உறவுகளின் மீது ஆர்வம் உண்டாகும்.

* அதிக உணர்ச்சி வயப்படுதல் ஏற்படும்.

* செக்ஸ் அடிக்‌ஷன்

* சிசோஃபிரினியா- மனப்பிறழ்வு ஆகியவை கூட ஏற்படலாம்.

நித்தியானந்தன் மூளையில் அளவுக்கதிகமாக டோபமின் சுரப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது.

மனப் பதட்டம், சைக்கோஸிஸ், போன்ற பல பிரச்சினைகளுக்கு இது காரணமாக அமையலாம்.

என்னவோ எழுத வந்தேன்! கடைசியில் இதுவும் ஒரு அறிவியல் பதிவு போல் ஆகிவிட்டது. ஆயினும் டோபமைனைப்பற்றி உங்களுக்கு விளக்க முடிந்தது. நித்தியானந்தன் போன்ற சாமியார்களின் பிரச்சினைகளுக்கு நாம் முடிவு கூற முடியாது. ஆயினும் தொடர்ந்து எழுதுவோம். நன்றி!!

thx to:

http://abidheva.blogspot.com/2010/03/blog-post.html

கதவை திறவுங்கள்.... நித்யா நாற்றம் போகட்டும்

சிக்கிகொண்ட ஒரு கருப்பு ஆட்டின் இரத்தத்தை எல்லா நரிகளும் குடித்து கும்மாளமிட்டு கொண்டிருக்கையில் நானும் ஒரு பதிவு எழுத வேண்டுமா என்று தான் யோசித்தேன். சந்தர்ப்பம் கிடைக்கும் வரை எல்லா நரிகளும் இங்கு உத்தமர் வேஷம் பூண்டிருப்பதை சௌகர்யமாக நாம் மறந்து விடுகிறோம். ஏற்கனவே இவர்கள் சாமியார்கள் அல்ல என்னும் தலைப்பில் ஒரு பதிவு போட்டிருந்தேன். வழக்கம் போல அது உண்மையை பேசியதால் சொல்லிகொள்ளும்படி பின்னூட்டத்தையோ, ஓட்டுகளையோ பெறமுடியாது ஒரே நாளில் இணையத்தில் முடங்கிவிட்டது. அதன் கோபத்தில் நான் எழுதிய ரம்பாவுக்கு கல்யாணம் என்னும் பதிவு தமிலிஷில் பிரபலம் ஆகி ஓட்டுகளையும், பின்னூட்டத்தையும் வாரி குவித்தது வேறு கதை.

அதனால் வெகுஜன ரசிப்புதன்மை என்பது எது என்பது எனக்கு ஓரளவு புரிந்தது. மிகப்பெரிய அளவில் வளர்ந்து விட்ட தொழில் போட்டியை சமாளித்தாக வேண்டிய கட்டத்தில் இன்றைய எல்லா ஊடகங்களும் வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் இறங்கிவிட்டன. பல சமயங்களில் அதன் தரத்திலும் பல படிகள் இறங்கி வந்து போட்டியை சமாளிதாகவேண்டிய கட்டாயம்.

மிக எளிதில் மக்களை ஆட்கொள்ளும் விஷயங்கள் இரண்டு. அவ்வபோது சினிமா, எப்போதும் ஆன்மிகம்.

நடிகைக்கு மிகவும் பிடித்த உள்ளாடையின் நிறம் என்ன என்பதிலிருந்து, எல்லாவிதமான பேட்டிகளும், நடிகன் "குசு" விட்டால் கூட ஆளும்கட்சிக்கு எதிராக கொடிபிடிப்பவன் என கட்டம் கட்டி பரபரப்பு கூட்டி, கல்லா கட்டும் வியாபார உத்திகள் மெய்சிலிர்க்க வைக்கிறது. கூடிய விரைவில் அம்பானிகளை பின்னுக்கு தள்ளும் திறமை நம்மாட்களுக்கு உண்டு என்பது உலகிற்கு தெரியவரும். மிகவும் பிரபலமான ஒரு குடும்ப கட்சியிலிருந்தே அத்தகைய தொழிலதிபர் வரக்கூடும்.

அடுத்து ஆன்மிகம். ஒவ்வொரு சேனலும் கலந்து கட்டி அடிக்கும் கூத்து. பல நூறு வருடங்களாக பின்பற்றி வரும் நம்பிக்கைகள் நடந்தது என்ன...நிஜம் என்ற பெயரிலெல்லாம் களங்கபடுத்தப்பட்டு வருகிறது. இதை தவிர்க்க முடியாது. எதையாவது புதிது புதிதாக செய்தாக வேண்டும் என்ற வாழ்வாதார பிரச்சனைக்கு முன்னால் பாரம்பர்யம், சாதரனர்களின் நம்பிக்கைக்களுக்கு எல்லாம் மதிப்பு கொண்டுத்துகொண்டிருக்க யாரும் தயாரில்லை. ஊடகங்களுக்கு பின்னால் இருக்கும் அரசியல் செல்வாக்கு சாதரனர்களின் வாயை அடைத்துவிடுகிறது.

அபரிமிதமான தொழில் வளர்ச்சி, வெளிநாடுகளுக்கு இணையான இந்திய கல்வி முறையின் வளர்ச்சி எல்லாம் இருந்தும் நம் சமயத்தின் மீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கை, அதன் தத்துவார்த்த உண்மைகள் நம் இரத்தத்தில் கலந்து விட்டிருப்பதையே உணர்த்துகிறது. கருப்பர்கள் என்ற தாழ்வு மனப்பான்மையை எப்படி வெள்ளையர்கள் உலகம் முழுவதுமே ஏற்படுத்தினார்களோ அதை போல. எந்த ஒரு இந்தியருக்குள்ளும் ஏன் பிற மதத்தவராக இருந்தாலும் அவரிடம் இந்து மத நம்பிக்கைகள் உள்ளோடியிருப்பதை காணமுடியும். தன மகள் திருமணதிற்கு ஜாதகத்தை தூக்கி அலையும் எத்தனையோ இஸ்லாமிய / கிறிஸ்தவ பெரியவர்களை நான் பார்த்திருக்கிறேன்.

இந்த நம்பிக்கைகளையும், சாதரனர்களின் தேடல்களையும் தான் நித்தியானந்தன் போன்றவர்களை கபடதாரிகளாக்குகிறது. ஒரு சாதாரண அன்றாடங்காய்ச்சிகளுக்கே பெண் சுகம் தேவைப்படும்பொழுது, கோடிகளில் புரளக்கூடிய, ஏசி, லேப்டாப் வசதிகளுடன் சகல மரியாதைகளுடனும் திரியும் இவனை போன்றவர்களுக்கு "அரிப்பு" ஏற்படாது என்று நம்புவர்கள் தான் முட்டாள்கள். அது சாருவாக இருந்தாலும் சரி,சாதரனர்களாக

இருந்தாலும் சரி. "எல்லோரையும் போல் நானும் நம்பினேன். அதற்காக நான் தற்கொலையா செய்துகொள்ள முடியும்" என்று ஒரு அப்பாவியாய் கேள்வி கேட்டு ஒரு சமூக பொறுப்புள்ள எழுத்தாளன் தப்பித்து கொள்ள முடியாது. மாங்கு மாங்கென்று உருகி உருகி பதிவில் எழுதியதெல்லாம் ஒரு delit option - ல் இல்லையென்று ஆகிவிடாது.

கொலைவழக்குகளில் அடிபட்ட ஜெயந்திரன், கருவறையின் புனிதத்தை கேவலபடுத்திய தேவநாதன், தாசிகளை தழுவி மோட்சம் தேடும் நித்யனந்தர்களையும் உருவாக்குவது இன்றைய சமூக சூழல்தான். பேராசை, சுயநலம், காமவெறி கொண்டலைபவர்களுக்கு ஆன்மிகம் இறுதி அடைக்கலம் என்ற நிலைமை மாற வேண்டும். உண்மையான ஆன்மீகத்தையும், போலி சாமியார்களையும் பிரித்தறியும் வழிவகைகளை அறிவது மிக முக்கியம். நானொரு சாமியார் அல்ல. ஆனால் ஆன்மிகம் குறித்த தேடல் உள்ளவன். அந்த தேடலின் விளைவாக பல சன்யாசிகளையும், ஆன்மீக புத்தகங்களையும் வாசித்தரிந்தவன். என் பார்வையில் ஒரு ஞானியோ, சித்தனோ இப்படிதான் என்று உறுதியாக சொல்லிவிடமுடியாது. ஆனால் அவர்களுகென்று சில குண ஒற்றுமைகள் உண்டு. அது..

1 . உண்மையான ஒரு ஞானி தன் நிலை குறித்தோ, தான் இருப்பு குறித்தோ எப்போதும் கவலைபடுபவனல்ல.

2 . தன்னை தேடி யாரும் வருவதையோ, தன்னை சுற்றி கூட்டம் சேருவதையோ எப்போதும் இவர்கள் விரும்புவதில்லை.

3 . லௌகீக சுகங்களில் நாட்டம் கொண்டவர்கள் ஒருக்காலும் சுத்த சன்யாசிகளாக இருக்க முடியாது. லௌகீகத்தில் உள்ளவர்களை தன்னருகில் வைத்துகொள்வதை கூட எந்த ஞானியும் விரும்பமாட்டார்.

4 . எல்லாம் வல்ல இறையை முன்னிலை படுத்தாமல், தானே இறைவன் அவதாரம் என்பவனை தைரியமாக செருப்பால் அடியுங்கள். அவன் நிச்சயம் பொம்பள பொறுக்கியாகவோ, கொலைக்கு அஞ்சாத படுபாதகனாகவோ தானிருப்பான். திருவண்ணாமலை யோகி ராம் சுரத்குமார் அவர்கள் தன்னை கடைசிவரை ஒரு பிச்சைகாரன் என்று தான் சொல்வார். அந்த பிரமாண்டமான ஆசிரமம் எல்லாம் அவர் விரும்பியதல்ல. அப்படியே ரமணரும். மிக மிக எளியவர்களாக கடைசி வரை வாழ்ந்து காட்டியவர்கள்.

5 . பொன்னோ, பொருளோ, ஆசிரம நிதியோ எதுவும் அவனக்கு தேவையில்லை. அவன் வாய் திறந்து கேட்கவும் மாட்டான். நீங்கள் அன்பு மிகுதியால் கொடுக்க கூடியதை கூட கை நீட்டி வாங்க வெட்கபடுவார். வேண்டாம் என்று சொன்னால் எங்கே உங்கள் மனது வேதனை படுமோ என்று அவர் துடிப்பார். அவனே உண்மையான ஞானி.

6 . இப்போது சொல்கிறேன் யோகம், தியானம் எல்லாம் உண்மையான தேடுதலோடு இருப்பவர்களுக்கு தானாகவே அமையும். அத்தகையோரை தேடி குருக்கள் வருவார்கள். அவர்களை மேல்நிலைக்கு கொண்டு செல்ல.

7 . ஒரு சன்யாசியை சுற்றி இருப்பவர்களில் 99 % பேர் ஏமாற்றுகாரர்கள் தான். எந்த விருப்பு வெறுப்பில்லாமல் வாழும் ஞானிகளை புகழ்ந்து, துதிபாடி

அவர்களை ஒரு வியாபார பொருளாக மாற்றும் வல்லமை இவர்களுக்கு உண்டு.

8 . தியானம் கற்றுகொடுக்க காசு வாங்குபன் நல்ல கதியை அடைவதில்லை.

9 . பூசை புனஸ்காரங்களிலும், ஹோம மந்திரங்களிலும் இறைவனை அடையவே முடியாது. சத்தியமான மனதில் உதிக்கும் எண்ணங்கள் பலிக்கும். இன்னும் சில காரணிகளை வைத்து நாம் ஞானிகளை கண்டறிய முடியும்.

10 . மூன்று வேலை நெய்யும் பாலும், பழுமுமாக தின்று கொழுத்து, ஓரடி உயர பஞ்சு மெத்தையில், சுகமான ஏசியில் படுத்துறங்கி பாருங்கள். உங்கள் முகத்திலும் ஒரு தேஜஸ் தெரியும். ஆனால் ஒரு உண்மையான ஞானி வருகையில் வீசும் திருநீறு வாசம் கண்டிப்பாக உங்களிடம் இருக்காது.

இந்த பதிவு ஒரு கோபத்தில் எழுதினாலும் முடிக்கையில் வெறுமையும் வேதனையுமே மிஞ்சுகிறது. உண்மையை ஏற்றுக்கொள்ளவோ, நல்லதை நாலு பேருக்கு சொல்லவோ யாருக்கும் நேரமும் இல்லை. மனமும் இல்லை. பணமே இங்கு பிரதானமாகிவிட்டதில் நாம் இழந்தது நிறைய. அமைதியான ஆன்மீகமான வாழ்க்கையையும் தொலைத்துவிட்டு, பெண்களின் கு++++ நக்கி கொண்டிருப்பவனைஎல்லாம் (நன்றி சாரு) கடவுள் என்று நம்பி மோசம் போய்கொண்டிருக்கிறோம்.

thx to:

http://nanbansuresh.blogspot.com/2010/03/blog-post_04.html

modiwithnityanandvisual-2.wmv_000006945.jpg

நரேந்திர மோடி

சுவாமியின் லீலை

nithyananda.jpg

இந்த மூன்று நாட்களாக உடல்நலக் குறைவினால் அலுவலகம் போகாமல் இருந்த நேரம் கொஞ்சம் பதிவுகள்,பழைய நூல்கள், தொலைகாட்சி,பங்கு சந்தை வர்த்தகம் என்று ஏதோ பொழுதைப் போக்காட்ட முயன்று கொண்டிருக்கிறேன்.

நித்தியானந்தா வீடியோ பரபரப்பு சுவாரஸ்யங்கள் நல்லாத் தானிருக்கு.. எப்போது தான் எம் சமூகம் திருந்துமோ?

இனிவரும் சில நாட்களுக்கும் நித்தியானந்தா - ரஞ்சிதா பரபரப்பு ஓயப்போவதில்லை.. ஏதோ நடக்கட்டும்..

எதுவேண்டுமானாலும் செய்ய எல்லோருக்கும் உரிமையுண்டு தான்.ஆனால் முகமூடி போட்டு அப்பாவிகளை ஏமாற்றாமல், செய்வதை யார் வேண்டுமானாலும் செய்துகொள்ளட்டும்.

இந்த காம சுவாமியை குமுதம் கட்டுரைகளிலும், பல்வேறு இணையங்களிலும் பார்த்தபோதே இவர் உத்தமராக,சுத்தமானவராக இருக்க முடியாது என மனம் சொல்லியது.கண்களிலும்,உதடுகளிலும் நேர்மையில்லை.

இப்போது கதவு திறந்து சகலமும் விளங்கிப் போச்சு.

கடவுள்களும்,சமயங்களுமே உண்மையா இல்லையா என்று நிரூபிக்கப்படாத நிலையில் கடவுளகளை அடைய வழிகாட்டுகிறோம் என்று சப்பைக்கட்டு கட்டும் இந்தப் போலி ஆசாமிகளை எப்படித்தான் நம்பி நாம் இளிச்சவாயர் ஆகிறோம் என்று கொஞ்சமாவது சிந்திப்பதுண்டா?

இதற்கு ஊடகங்கள் வேறு விளக்குப்பிடித்து ஆலவட்டம் ஆட்டுகின்றன.

வெட்கித் தலைகுனிந்து தாம் தவறாக விளம்பரப்படுத்தி ஏமாற்றிய அப்பாவிகளிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும்.

இன்று இலங்கைப் பத்திரிகையொன்றில் நித்தியானந்தா-ரஞ்சிதா விவகாரத்தை செய்தியாக்கியுள்ள எதிர்ப் பக்கத்திலேயே இன்னொரு யாரோவொரு ஆனந்தா இலங்கை வந்து அருளாசி வழங்கவுள்ளதாக விளம்பரம்.

இன்னொரு தேசியப் பத்திரிகையில் கிட்டத்தட்ட முழுபக்கத்தில் மற்றொரு பகவான் பற்றிய ஜன்மதினக் கட்டுரை..

ம்ஹூம்.. திருந்த மாட்டோமே..

http://loshan-loshan.blogspot.com/2010/03/blog-post_7910.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போதனை செய்கிற போது மொட்டைத் தலையும், மழுங்க சிரைத்த முகமுமாக வந்து விட்டு, ஜில்பான்ஸ் வேலைகளுக்காக விக், மீசை எல்லாம் வைத்துக் கொள்ளலாம். உடையையும் லுங்கி முண்டா பனியன் என்று மாற்றிக் கொள்ளலாம். இதனால்,

வீடியோ எடுக்கப் பட்டால் அது நான் இல்லை என்று சொல்லலாம். ஜாடை இருப்பது தெரிந்தால் அவன் என் தம்பி என்று சொல்லலாம்.

சொற்பொழிவின் போதே இளம் பெண்கள் புடை சூழ, அவர்களின் பணிவிடைகளோடு மேடையில் தோன்றலாம். அவ்வப்போது அவர்களைச் செல்லமாகத் தட்டி ஆசி சொல்லலாம். இதனால்,

வீடியோ பார்க்கும் போது பெரிய வித்யாசம் எதுவும் தெரியாது.

படுக்கையில் கொசுவலை கட்டிக் கொள்வது மிகவும் நல்லது. கொசுவும் வராது வீடியோவிலும் ஒரு இழவும் விழாது.

படுக்கப் போகும் போது பளிச்சென்று மேக்-அப் போட்டுக் கொள்ளலாம். ஒவ்வொரு ஜில்பான்ஸ் செயலுக்குப் பிறகும் ஒரு முறை உரக்க “கட்” என்று சொல்லலாம். இதனால்,

சினிமாவுக்கோ, சீரியலுக்காகவோ எடுக்கப் பட்டது என்கிற பிரமையை உண்டாக்கலாம்.

அவ்வப்போது ‘இன்பவேதனாயோகா’, ‘இந்திரியச்செக்லோயோகா’,'இளம்பென்சிள்மிஷ்யோகா’,'இச்சுத்தாயோகா’ என்று தேங்காய் சீனிவாசன் பாணியில் உளறிக் கொண்டே இருக்க வேண்டும். இதனால்,

ஏதோ விசேஷமான யோகப் பயிற்சி தந்து கொண்டிருந்ததாகக் கூறலாம்.

ஆசிரமத்துக்குள் வரும் பெண்கள் எல்லாருமே ஆம்பிளை உடையில், மீசை ஒட்டிக் கொண்டுதான் வரவேண்டும் என்று சொல்லி விட வேண்டும். யாருக்கும் சந்தேகம் வராது, வீடியோ எடுக்கிற ஆர்வமும் வராது.

தடக்கென்று பூமிக்குள் போகிற கட்டில், ஜன்னல் ஓரங்களில் பிடரியில் அறைகிற செட் அப், காமிராக்களை செயலிழக்கச் செய்கிற சக்தி வாய்ந்த காந்த மண்டலங்கள், வெளிப்பக்கம் முழுக்க மிளகாய்த் தூளை காற்றில் தூவி விடுதல் உள்ளிட்ட யுக்திகள் வீடியோ எடுக்கிறவர்களை டென்ஷன் செய்யும்.

ரோஜர் மூர் படம் போல ஆசிரமத்தைச் சுற்றி பதினெட்டடி அகலமும் இருபதடி ஆழமும் இருக்கும் அகழி அமைத்து அதில் முதலைகளை நீந்த விட்டு பாதுகாப்பை உறுதி செய்யலாம்.

ஆசிரமத்தில் எப்போதும் ஆகாத சுருதியில், கர்ண கொடூரமான குரலில் ஒருவரை பஜனைப் பாடல்களைப் பாடச் செய்வது அந்தப் பக்கம் தலை காட்டவே பயப்பட வைக்கும்.

அரசாங்கத்துக்கு யோசனைகள் நாளைக்கு….

http://kgjawarlal.wordpress.com/2010/03/04/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

http://www.youtube.com/watch?v=RvOPP2GrwUQ

காவி உடை போட்டவர்கள், கோவணத்தையும் காவி நிறத்தில் தான் கட்டுவார்கள் என்று இவ்வளவு நாளும் நான் நினைத்திருந்தேன்,

நித்தியானந்தரின் கோவணம் வெள்ளை நிறத்தில் உள்ளதை பார்த்த பின், நான் நினைத்தது தவறு என்று இப்போ புரிந்து கொண்டேன்.

.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முள்ளிவாய்க்கால் அழிவிற்கு நன்றி சொல்லி பொன்னாடை போர்த்திய நிகழ்வுகளுக்கு ஊமையாக இருந்தோர் சீமான் விடயத்தில் கதறுவது ஏன்?  தமிழை விட திராவிடம் வலிமையானது என்றா?
    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.