Sign in to follow this  
வலைஞன்

கறுப்புப் பட்டியல்

Recommended Posts

யாழ் இணைய உறவுகளுக்கு வணக்கம்.

இன்று விரிந்து வரும் தமிழ் இணைய ஊடகப் பரப்பில் பல்வேறுபட்ட போக்குகள் உள்ளன. அதில் மிக முக்கியமானது செய்தி/கட்டுரை/எழுத்தாக்க திருட்டு. உரிமையாளர் வேறொருவராக இருக்க, அதை பிரதியெடுத்து தமதாகக் காட்டிக்கொள்ளும் மிகக் கீழ்த்தரமான செயல் இன்று பரவலாக இடம்பெறுகிறது. ஆக்கங்களைத் திருடி, உரிய மூலத்தைக் குறிப்பிடாது தமது இணையத்தளங்களில் இணைப்பதும் - அதனூடாக தமது இணையத்தளங்களுக்கு விளம்பரம் தேடுவதும் இவர்களின் வேலை. இதன் விளைவாக அதிக வாசகர்களை தமது தளத்துக்கு திருப்பி - கூகிள் போன்ற விளம்பர சேவைகளினூடாக பணம் சம்பாதிப்பதும் நடைபெறுகிறது. ஒரு செய்தியைப் பெறுவதற்கு பின்னால் உள்ள உழைப்பு அல்லது ஒரு கட்டுரையை எழுதுவதற்கு பின்னால் உள்ள உழைப்பு - இவைபற்றி இவர்கள் யோசிப்பதில்லை. ஊடக அறத்தை மீறியவர்களாக - நேர்மையற்ற செயல்களை இவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். இதனை முழுமையாக எம்மால் தடுக்க முடியாது - எனினும் யாழ் இணையத்தில் இதுபோன்ற - ஊடக அறத்தை மீறி செயற்படும் - இணைய ஊடகங்களை தடைசெய்ய எண்ணியுள்ளோம். தடைசெய்யப்படும் ஊடகங்கள் இங்கு பட்டியலிடப்படும். அப்படிப் பட்டியலிடப்படும் இணைய ஊடகங்களிலிருந்து செய்திகளையோ ஆக்கங்களையோ யாழ் கருத்துக்களத்தில் இணைக்கவேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம். இதன்மூலம் கீழ்தரமான - ஊடக அறத்தை மீறும் செயல்களை - யாழ் இணையத்திலாவது மட்டுப்படுத்த முடியுமென நம்புகிறோம். குறித்த ஊடகங்களை இனங்காண யாழ் கள உறவுகளாகிய நீங்கள் உங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். நன்றி.

Edited by வலைஞன்

Share this post


Link to post
Share on other sites

1. அதிர்வு

2. தமிழ் வின்

3. தினமுரசம்

Edited by வலைஞன்
 • Like 3

Share this post


Link to post
Share on other sites

4. ஈழம் ஈ நியூஸ் (eelamenews)

குறித்த இணையத்தளம் யாழ் இணையத்தில் தடை செய்யப்படுகிறது. பிற இணையத்தளங்களின் செய்திகளை திருடி இணைத்தமை, சரியான மூலத்தைக் குறிப்பிடாமல் அவற்றை பயன்படுத்தியமை போன்ற காரணங்களால் தடை செய்யப்படுகிறது. எனவே, யாழ் இணைய உறவுகளே, குறித்த இணையத்தளத்திலிருந்து செய்திகளையோ, ஆக்கங்களையோ இங்கு இணைக்கவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.

 • Like 6

Share this post


Link to post
Share on other sites

மேலே குறிப்பிட்ட இணையத்தளங்களுடன் பின்வரும் தளங்களும் சேர்க்கப்படுகின்றது.

5. jaffnawin + tamilenn

6. tamilcnn

7. ethirinews

இதன்படி இன்றுமுதல் எந்த ஒரு செய்தியும் இத்தளங்களில் இருந்து யாழ கருத்துக்களம் பகுதியில் இணைக்க முடியாது.

Share this post


Link to post
Share on other sites

மேலே குறிப்பிட்ட இணையத்தளங்களுடன் பின்வரும் தளங்களும் சேர்க்கப்படுகின்றது.

8. விறுவிறுப்பு

9. நெருப்பு

10. தேனி

இன்றில் இருந்து இவற்றின் பதிவுகளும் செய்திகளும் நேரடியாகவோ மறைமுகமாகவோ யாழ் கருத்துக்களம் பகுதில் இணைக்கப்படல் ஆகாது.

நன்றி

 • Like 4

Share this post


Link to post
Share on other sites

வணக்கம்,

 

 

அண்மைக்கால செய்திகள் மற்றும் தகவல்களது தர அடிப்படையில் கறுப்புப்பட்டியலில் உள்ள தளங்களை மீள் பரிசீலனை செய்தோம். இதனடிப்படையில் தமிழ்வின் இணையத்தளத்தினை கறுப்புப் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு தீர்மானித்துள்ளோம். இதன் மூலம் இனி தமிழ்வின் செய்திகள் யாழின் பொதுவான கருத்துக்கள விதிகளுக்கு ஏற்ப இணைக்க முடியும்.

 

நன்றி

Share this post


Link to post
Share on other sites

வணக்கம்,

அண்மைக்காலங்களில் குறுகிய மற்றும் மலினமான அரசியல் காரணங்களுக்காக முற்றிலும் பக்கச்சார்பான செய்திகளையும், மிகவும் பொய்யான விடயங்கள் அடங்கிய சோடிக்கப்பட்ட தகவல்களையும் தொடர்ந்து பிரசுரித்து வந்தமையாலும், சகல ஊடக நெறிகளையும் தர்மங்களையும் மீறி புனைவுகளை செய்திகளாக்கியமையாலும் பின்வரும் இணையத்தளமும்

1. பதிவு:www.pathivu.com

செய்திகளை அதன் உண்மைத்தன்மைகளுக்கு அப்பால் சென்று வணிக நோக்கங்களுக்காக மிகவும் தரக்குறைவாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பிரசுரிப்பதாலும், பொய்யான பல தகவல்களை தொடர்ந்து பிரசுரிப்பாதலும் பின்வரும் இணையமும்

2. ஜேவிபி செய்தித் தளம்: http://www.jvpnews.com/

இன்றிலிருந்து கறுப்புப்பட்டியலில் இடப்படுகின்றன.

இனிமேல்

1. இத்தளங்களில் இருந்து செய்திகள் யாழில் காவப்படுவதும்

2. இத் தளங்களை பிரதி பண்ணி இடும் ஏனைய தளங்களின் செய்திகளை பிரசுரிப்பதும்

களவிதிகளை மீறிய செயற்பாடுகளாக கருதப்படும் என்றும், இவ்வாறு செயற்படுகின்றவர்களின் செய்திகளை பதியும் உரிமை மட்டுப்படுத்தப்படும் என்று அறிவிக்கின்றோம்.

யாழ் இணையம் பலதரப்பட்ட சமூக மட்டங்களில் நிலையான மதிப்பையும் நம்பகத்தன்மையையும் தொடர்ந்து பேணி வரும் என்றும் இதனூடாக ஆரோக்கியமான உரையாடல் வெளியினை தமிழ் தேசிய அரசியல் மட்டத்தில் உருவாக்குவதில் தன் செல்வாக்கினை தொடர்ந்து காத்து வரும் என்றும் உறுதி அளிக்கின்றோம்.

நன்றி

 • Like 9

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this  

 • Topics

 • Posts

  • இதனை வாசிக்க சிரிப்பு வந்தது.   இதை வாசிக்க பிடித்தது, லைக்க போட்டன். தப்பா?! (மாரி2 பட ஹீரோயின் சொல்ற மாதிரி இல்ல!)
  • காலையில் எழுந்து கோவிலுக்கு போவோமென்றால் ஆக்கள் கூடினால் அவர் குளிக்கட்டும் இவர் குளிக்கட்டும் என்று ஆளையாள் சாட்டி வெளிக்கிட்டு போகவே நேரம் போய்விட்டது.                                               கோவிலில் நிறைய கூட்டம்.வெக்கை வேற பிள்ளைகள் களைப்பாக இருக்கிறது போவோம் என்றார்கள்.விரைவாகவே வந்துவிட்டோம்.அடுத்தடுத்த நாள் பயண ஏற்பாடும் உறவினர்களின் பிரியாவிடையுடன் கொழும்பு வந்து இருநாட்கள் கொழும்பில் நின்று சுற்றி பார்த்துத்தோம்.கொழும்பில் நின்ற காலத்தில் யூபர் கணக்கு பிள்ளைகளிடம் இருந்ததால் அதிலேயே எல்லா இடமும் போனோம்.ஏறத்தாள ஆட்டோவுக்குண்டான கட்டணம் தான் இதற்கும்.ஏசி போடுவார்கள் பாதுகாப்பானதுமாக இருந்தது.                        ஊரில் நின்றவேளைகளில் நான் தான் மாடு மேச்சலுக்கு கொண்டுபோய் வாறது.ஒருநாள் நான் மாடு கொண்டுவர போகிறேன் என்று மருமகனும் கொண்டுவந்தார்.அவர் மாடு மேய்க்கும் படத்தைக் கண்டதும் தான் இதை எழுத தூண்டியது.                       எப்படித் தான் 70 நாட்கள் போனதோ தெரியவில்லை.அவர்கள் சன்பிரான்சிஸ்கோவுக்கும் நாங்கள் நியூயோர்க்குக்குமாக வெவ்வேறு விமானங்களில் புறப்பட்டு பிறந்த ஊரிலிருந்து புகுந்தவீடு வந்து சேர்ந்தோம்.                      இத்தனை நாளாக பச்சை புள்ளிகளாலும் பின்னூட்டங்களாலும் சில உறவுகள் கட்டாயம் ஊக்கம் கொடுக்க வேண்டுமென்றும் உற்சாகப்படுத்தி இதனை எழுதி முடிக்க ஒத்தாசையாக இருந்த உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். வணக்கம். முற்றும்.
  • யாழ்ப்பாணத்துக்கான விமான சேவை- முதலீடு செய்ய தனியாருக்கு அழைப்பு   யாழ்ப்பாணம் மற்றும் இந்தியாவுக்கான விமான சேவையில் முதலீடு செய்யுமாறு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனியார் துறையினருக்கு அழைப்பு விடுத்துள்ளார். கொழும்பில் நடந்த வணிக மாநாடு ஒன்றில், தம்மிக பெரேரா என்ற வணிகர், கட்டுநாயக்க விமான நிலையதம்தில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு விமானங்கள் இயக்கப்படுவதில்லை என்றும், இது புலம்பெயர் தமிழர்களின் முறைப்பாடு என்றும், கூறியிருந்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள தமது உறவுகளை பார்க்க செல்லும் போது, கட்டுநாயக்கவில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு விமானத்தில் செல்ல முடியாதிருப்பதாக அவர்கள் முறையிடுகின்றனர் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலளித்து உரையாற்றிய சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க, “யாழ்ப்பாணத்துக்கோ, இந்தியாவுக்கோ யாரேனும் விமான சேவைகளை நடத்த முடியும். அதற்கான கதவுகளை அரசாங்கம் திறந்தே வைத்திருக்கிறது. தனியார் துறையினர் இதற்கான முயற்சிகளை எடுக்கலாம்” என்று குறிப்பிட்டார். இந்த நிகழ்வில் உரையாற்றிய சிறிலங்காவுக்கான துருக்கி தூதுவர், “ ஐரோப்பாவில் இருந்து கொழும்புக்கு விமானத்தில் பயணம் செய்ய 10 மணிநேரம் ஆகிறது. ஆனால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கல்கிசையில் உள்ள விடுதிக்கு, தரை மார்க்கமாக செல்வதற்கு, வெறும் 43 கி.மீ பயணம் செய்வதற்கு 1 மணித்தியாலம் 40 நிமிடங்கள் தேவைப்படுகிறது. விமான நிலையத்தில் இருந்து கட்டுநாயக்கவில் அருகில் உள்ள பேருந்து நிலையத்துக்கு செல்வதற்கு உள்ளூர் போக்குவரத்து வசதிகள் இல்லை.” என்றும் சுட்டிக்காட்டியிருந்தார். http://www.puthinappalakai.net/2019/03/21/news/37000
  • ஜெனிவாவில் ஒருமனதாக நிறைவேறியது சிறிலங்கா குறித்த தீர்மானம்   ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான புதிய தீர்மானம் சற்று முன்னர் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரித்தானியா மற்றும் அயர்லாந்து, ஜேர்மனி, கனடா, மொன்ரெனிக்கோ, மசிடோனியா ஆகிய நாடுகள் இணைந்து ‘சிறிலங்காவில் நல்லிணக்கத்தையும் பொறுப்புக்கூறலையும் ஊக்குவித்தல்’ என்ற தலைப்பிலான  40/1 இலக்க தீர்மானத்தை முன்வைத்திருந்தன. இந்த தீர்மானத்துக்கு சிறிலங்கா இணை அனுசரணை வழங்கியிருந்தது. இந்த நிலையில்,  தீர்மானம் மீது  சற்று முன்னர் வரை  பேரவையில் விவாதம் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு உரையாற்றினர். இதனையடுத்து, சிறிலங்காவின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன உரையாற்றினார். அதையடுத்து, தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்த எந்த நாடும் கோராத நிலையில், ஒருமனதாக தீர்மானம் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது. http://www.puthinappalakai.net/2019/03/21/news/37002