Jump to content

இலக்கணாவத்தை!!!


Recommended Posts

எல்லோருக்கும் வணக்கமெங்க!

என்னங்க பெயரை பார்த்தவுடனேயே மூளையைப்போட்டு குழப்புறீங்க? சத்தியமா சொல்றேனெங்க உதுதானெங்க நான் பிறந்த ஊர் இலக்கணாவத்தை.

தமிழீழத்தின் வடபகுதியான யாழ்ப்பாணத்தில் வடமராட்சி பகுதியிலை சமரபாகு என்ற குறிச்சியிலை ஒரு சின்ன கிராமம் பாருங்கோ. தென்மேற்குத்திசையாக 1.25 மைல் தொலைவில் உடுப்பிட்டி என்ற ஊரும், வடமேற்குப்பக்கமாக 1.5(ஒன்றரை) மைல் தொலைவில் வல்வெட்டித்துறையும் தென் கிழக்குத்திசையாக 1.5 (ஒன்றரை) மைல் தொலைவில் நவிண்டில்,நெல்லியடி, கரவெட்டி போன்ற ஊர்களும், வடகிழக்குத்திசையாக 2,3 மைல் தொலைவில் பொலிகண்டி போன்ற ஊர்களினால் சூழ்ந்திருக்கும் ஒரு சிறு ஊர்தான் பாருங்கோ நான் பிறந்தவூர் இலக்கணாவத்தை.

அதாவது பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பல இலக்கணங்களை படைத்ததாலை தான் இந்தவூருக்கு இலக்கணாவத்தை என்ற பெயர் வந்ததாக முதியோர் கூறுகின்றனர்.

இலக்கணாவத்தையிலை பாருங்கோ நான் புலம்பெயர்ந்த காலத்திலை ஏறக்குறைய ஒரு முப்பது குடும்பம் தான் இருந்திருக்கும், இப்போ கணக்கு நிறைய வித்தியாசம், கனடாவிலையே நாற்பது(40) குடும்பத்திற்கு மேலாக இருக்கிறம், அதற்காக எண்ணுக் கணக்கில்லாது இன அபிவிருத்தி செய்யும் ஊர் என்று தப்பாக விளங்கிக் கொள்ளாதையுங்கோ.

ஏனென்றால் நான் புலம்பெயர்ந்து முப்பத்தியிரண்டு(32) வருடமாகிட்டதெல்லோ, அப்போ என்னுடைய கணக்கிலை சந்தேகம் இருக்காது தானே.

24818113011291265618222.jpg

எங்களது ஊருக்கென்று ஒரு பிள்ளையார்கோயில், சனசமூகநிலையம் போன்றன பிரத்தியேகமாக உள்ளது.

இதைவிட இலக்கணாவத்தையின் நினைவுச்சின்னமாக பெரிய ஆலமரம் ஒன்று ஊரின் நுளைவாசலில் அதாவது பிள்ளையார் கோயிலின் பின்வாசலில் அடர்ந்து, படர்ந்து ஊருக்குள் வருவோரை வரவேற்பது போன்ற தோற்றத்தில் உள்ளது.

நாங்கள் ஒருத்தருக்கொருவர் சந்திப்பதோ, கூட்டங்கள் கூடுவதோ, பொழுதுபோக்குவதோ இந்த ஆலமரத்தின் கீழ் தான்.

23864101501202221100727.jpg

இலக்கணாவத்தை மக்கள் எதை மறந்தாலும் இந்த ஆலமரத்தை மறப்பதிற்கு தயாரில்லை.

நாங்கள் வல்வெட்டித்துறை, உடுப்பிட்டி போன்ற ஊர்களைத்தான் முகவரியாக பாவிக்கின்றோம் அதாவது இரண்டிலொரு ஊரைப்போட்டால் கடிதம் எங்கவூருக்கு வந்து சேரும் பாருங்கோ.

2004ம் ஆண்டு யுத்தநிறுத்த காலத்திலை தான் எங்கவூர்(இலக்கணாவத்தை கற்பகவிநாயர்) ஆலயம் புதிப்பித்து பெரிசாக கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

14048005.jpg

வடமாகாணத்தில் பிரபல்யமான பாடசாலைகளில் பெயர் குறிப்பிடக்கூடிய உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி, உடுப்பிட்டி மகளிர் கல்லூரி போன்றவை தான் இலக்கணாவத்தைக்கு அருகாமையில் உள்ள பாடசாலைகளாகும்.

75140031.jpg

இவை உடுப்பிட்டி முக்கிய அதாவது பிரதான சந்தியில் ஒன்றை ஒன்று பார்த்தவண்ணம் அமைந்துள்ளன. நான் படித்த காலத்திலையே இந்த இரு பாடசாலைகளிலும் முறையே கிட்டத்தட்ட 1500 மாணவர்கள் கல்வி கற்றுக்கொண்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அதிகளவான புத்தகங்கள், பேப்பர்கள் இலகுவாக கிடைப்பதினால் வல்வெட்டித்துறைச் சந்தியிலை இருக்கிற சனசமூக நிலையத்தை தான் அதிகளவிலை நாடுவோம்.

அந்தக்காலத்திலை அதாவது ஊர்ப்பிரச்சினை, எல்லைப்பிரச்சினைகள் ஏற்படும் காலத்திலை பாருங்கோ எங்கவூர் இலக்கணாவத்தை தான் எல்லா ஊர் மக்களுடனும் நட்புடனும் பிரச்சினையில்லாமலும் இருந்துள்ளது.

வடமராட்சியிலை கட்டிடங்கள், வாகனங்கள் போன்றவற்றிற்கு வர்ணம் பூசுவதிலை இலக்கணாவத்தை தான் மிகவும் பிரபல்யம் ஆகும்.

இலக்கணாவத்தை சிறிதாக இருந்தாலும் கலைஞர்களுக்கு பஞ்சமில்லை, எழுபதுகளில் வடமராட்சியில் இடம்பெறும் நாடகப்போட்டிகளில் பங்குபற்றி பலதடவை முதல்பரிசான தங்கப்பதக்கம் பெற்ற கலைஞரான உடுப்பிட்டியூர் யோகன் என்பவர் பிறந்த ஊரும் இலக்கணாவத்தை ஆகும். இவர் தயாரித்து நடித்த நாடகங்களில் அணையாத தீபங்கள், கறைபடிந்த கண்ணீர் போன்றவை எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவையாகும். இதைவிட தொண்டமானாறு செல்வச்சந்நிதியிலை இவரது வில்லிசையை பார்க்கவென்றே பல்லாயிரக்கணக்கான மக்கள் குவிவது வழமை. இவரது இறுதிக்காலங்களில் தாயக சம்பந்தமாக தனது கலைப்பயணத்தை தொடர்ந்துள்ளார்.

இதைவிட பெயர்கள் குறிப்பிட முடியாதளவிற்கு விடுதலைப்போராளிகள், ஊடகவியலாளர்கள், பல பட்டதாரிகள் போன்றவர்களையும் இலக்கணாவத்தை தன்வசமாக கொண்டுள்ளதும் குறிப்பிட்டாகவேண்டும்.

இலக்கணாவத்தையிலை தான் நான் பிறந்தேன் என்பதிலை அதாவது நான் பிறந்த ஊர் இலக்கணாவத்தை தான் என்பதிலை பெருமைப்படுகிறேன்.

Link to comment
Share on other sites

  • Replies 59
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நீங்களும் ஒரு கெட்டிக்காரன் தான் :lol:

வாழ்த்துக்கள் :lol:

Link to comment
Share on other sites

வல்வை அண்ணை, உங்க ஊர் பற்றிய குறிப்பு அருமை. பேஸ்புக்கிலை நீங்கள் போட்ட காணொளியையும் ஏற்கனவே பார்த்து இருந்தன். ஆலமரத்தை பார்க்கவே ஆசையாய் இருக்கிது. மிச்ச ஆக்களும் உங்க ஊர்கள பற்றி வசதிப்படும்போது எழுதினால் அறிஞ்சு கொள்ளலாம்.

நீங்களும் ஒரு கெட்டிக்காரன் தான் :lol:

வாழ்த்துக்கள் :lol:

நானும் பச்சை குத்தி ஆமோதிக்கின்றேன்.

Link to comment
Share on other sites

நீங்களும் ஒரு கெட்டிக்காரன் தான் :lol:

வாழ்த்துக்கள் :lol:

வணக்கம் சகோதரம் நலமா? எதை வைத்து நான் கெட்டிக்காரன் என்று பொய்சொல்கிறீர்கள்?

நான் பல விடயங்களை பகிர்ந்து கொள்ளவேண்டும் என்பதிற்காக எனது முகத்திரையை கிழித்துவிட்டேன் என்பதை எனது பெயர் மாற்றத்தில் இருந்து புரிந்திருப்பீர்கள் தானே?

Link to comment
Share on other sites

வல்வை அண்ணை, உங்க ஊர் பற்றிய குறிப்பு அருமை. பேஸ்புக்கிலை நீங்கள் போட்ட காணொளியையும் ஏற்கனவே பார்த்து இருந்தன். ஆலமரத்தை பார்க்கவே ஆசையாய் இருக்கிது. மிச்ச ஆக்களும் உங்க ஊர்கள பற்றி வசதிப்படும்போது எழுதினால் அறிஞ்சு கொள்ளலாம்.

நானும் பச்சை குத்தி ஆமோதிக்கின்றேன்.

முரளி பல விடயங்கள் உங்களிடம் இருந்து கற்றவை என்பதை இந்த சந்தர்ப்பத்தில் கூறுவதில் மகிழ்ச்சி!

எங்கவூர் சார்பாக facebook இல் ஒரு group தொடங்கியுள்ளேன், இதில் ஆச்சரியம் என்னவென்றால் மிகச்சிறிய குழந்தைகள் என்ன அழகாக தமிழில் பதிவு செய்யுதுகள் தெரியுமோ.

Link to comment
Share on other sites

அருமை வல்வை லிங்கம்.வல்வெட்டி வரை வந்துள்ளேன்.கரவெட்டி ,நெல்லியடி அத்துப்படி. மயிர்கூச்செறிகிறது உங்கள் சிறு கிராமத்தை பார்க்கும் போது.இணைப்புக்கு நன்றி. :lol:

Link to comment
Share on other sites

அருமை வல்வை லிங்கம்.வல்வெட்டி வரை வந்துள்ளேன்.கரவெட்டி ,நெல்லியடி அத்துப்படி. மயிர்கூச்செறிகிறது உங்கள் சிறு கிராமத்தை பார்க்கும் போது.இணைப்புக்கு நன்றி. :lol:

நன்றி நுனாவிலான்!

வல்வெட்டி, நெல்லியடி வரை வந்துள்ளீர்கள் அதிலை இருந்து ஒரு குரல் கொடுத்திருந்தாலே கேட்டிருக்கும். அடுத்தமுறை வரும்போது அந்த தவறை செய்யாதீர்கள்.

Link to comment
Share on other sites

நன்றி நுனாவிலான்!

வல்வெட்டி, நெல்லியடி வரை வந்துள்ளீர்கள் அதிலை இருந்து ஒரு குரல் கொடுத்திருந்தாலே கேட்டிருக்கும். அடுத்தமுறை வரும்போது அந்த தவறை செய்யாதீர்கள்.

குரலென்ன பூஞ்செட்டே கொண்டு வருகிறேன்.

எனது தந்தையார் கரவெட்டியை சேர்ந்தவர் என்பதால், வடமராட்சி, குறிப்பாக கரவெட்டி ,நெல்லியடி வதிரி,வல்வெட்டி.உடுப்பிட்டி ,தும்பளை. கரணவாய் என பல இடங்கள் இலங்கை இராணுவம் தொடக்கம் இந்திய இராணுவம் வரை ஓடியது இன்றும் பசுமரத்து ஆணியாக உள்ளது.

மேலும் இலங்கையில் தமிழர் பகுதியில் போகாத இடம் நயினாதீவு மட்டகளப்பு.அம்பாறை மிக அண்மையில் பார்த்த இடம். என்னால் மறக்க முடியாத இடம் பதுளை மாவட்டம் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வல்வை

பெயர் மாறியவுடன் எழுத்துக்களிலும் வித்தியாசம் தெரிகின்றது.

கிராம வாழக்கையை மறக்க முடியுமா?

Link to comment
Share on other sites

ஊரைப் பற்றி ஊர்ப் பேச்சுவழக்கிலேயே எழுதியது வாசிக்க இனிமையைத் தருகின்றது

நல்லதொரு பதிவு

Link to comment
Share on other sites

குரலென்ன பூஞ்செட்டே கொண்டு வருகிறேன்.

எனது தந்தையார் கரவெட்டியை சேர்ந்தவர் என்பதால், வடமராட்சி, குறிப்பாக கரவெட்டி ,நெல்லியடி வதிரி,வல்வெட்டி.உடுப்பிட்டி ,தும்பளை. கரணவாய் என பல இடங்கள் இலங்கை இராணுவம் தொடக்கம் இந்திய இராணுவம் வரை ஓடியது இன்றும் பசுமரத்து ஆணியாக உள்ளது.

மேலும் இலங்கையில் தமிழர் பகுதியில் போகாத இடம் நயினாதீவு மட்டகளப்பு.அம்பாறை மிக அண்மையில் பார்த்த இடம். என்னால் மறக்க முடியாத இடம் பதுளை மாவட்டம் தான்.

என்னெங்க உடுப்பிட்டி, வல்வெட்டி வரை வந்திட்டு இலக்கணாவத்தை மட்டும் வராமல் போகுமளவிற்கு அப்படி என்னதான் கோபமோ?

Link to comment
Share on other sites

வணக்கம் வல்வை

பெயர் மாறியவுடன் எழுத்துக்களிலும் வித்தியாசம் தெரிகின்றது.

கிராம வாழக்கையை மறக்க முடியுமா?

உண்மைதானெங்க, அதாவது சில சட்ட பிரச்சினைகள் நிமிர்த்தமும், அரசியலில் அதிக ஆர்வம் இருந்தபடியினாலும் முகமூடி போடவேண்டிய கட்டாயம் இருந்தது.

இனிமேல் அரசியல் கலப்படமில்லாது வாழ்க்கையை போக்கி பார்ப்போமென்ற ஒரு நட்பாசை தான் இந்த மாற்றமெல்லாத்திற்கும் காரனம் பாருங்கோ.

உங்க கருத்துக்கு நன்றியெங்க!

ஊரைப் பற்றி ஊர்ப் பேச்சுவழக்கிலேயே எழுதியது வாசிக்க இனிமையைத் தருகின்றது

நல்லதொரு பதிவு

நன்றி நிழலி!

நாங்கள் எத்தனை பக்கங்களை எழுதி கிழித்தாலும், நாம் பிறந்த ஊர், வாழ்ந்த ஊர், படித்த பாடசாலை போன்றவற்றைப்பற்றி எழுதுவதிலும், கருத்தாடல் செய்வதிலும் உள்ள சந்தோஷம் வார்த்தையால் விபரிக்கமுடியாதுங்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி உங்கள் ஊரைப்பற்றி அறியத்தந்தமைக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமது அடையாளததையே தொலைத்து விட்டு வாழும் மக்களுக்கு ......ஊர் பற்றுடன் , பதிவெழுதும் பதிவருக்கு நன்றி. இன்னும் விபரமாக் நீண்ட பதிவைக் எழுதுவது சிறந்தது .பின் வரும் சந்ததிக்கு உதவும். மேலும் தொடருங்கள் .

Link to comment
Share on other sites

அசத்திட்டீங்க மருமகன்.

கிட்டத்தட்ட காட்சியும் கானமும் மாதிரியுள்ளது, நிஷமாக ஒரு கிராமத்திலை கொண்டுபோய் நிறுத்திட்டீங்கள், எப்படி திரும்பி வாறதென்றுதான் யோசனை, அதையும் கொஞ்சம் விபரமாக சொல்லுங்களேன்.

பாராட்டுக்கள் மருமகன்.

Link to comment
Share on other sites

இலக்கணாவத்தை .... ஆரம்பத்தில் ரஞ்சனாவில் கள்ளப்படங்களுக்காக சைக்கிள் ஓடத்தொடங்கி .... 84ல் சிங்களவன் பள்ளிக்கூடத்தை கொழுத்தி விட்டான், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதப்போராட்டங்கள் என இப்பகுதிகளுக்கு வரத்தொடங்கி ... இதே ஆலமரத்தின் கீழ் விண்ணுலகம் சென்று விட்ட மறக்கமுடியாத எனது நண்பர்களுடனான சந்திப்பு ..... இனிமையான காலங்கள், இனி வருமா??????? ..... நன்றிகள் இணைப்பிற்கு!!

Link to comment
Share on other sites

உங்கள் பதிவின் மூலம் தான் இலக்கணாவத்தை என்ற ஊர் இருப்பதைபற்றி அறிந்தேன். உங்களை போன்று இயலுமானவர்கள் தங்கள் ஊரைப்பற்றி அறியத்தந்தால் வருங்கால சந்ததிக்கு ஈழத்தின் அருமை தெரிவதற்கும் மற்றும் என்னைப்போன்று பல ஊர்களை அறியாதவர்களுக்கு அவற்றை பற்றி அறிந்துகொள்ளவும் நல்ல வாய்ப்பாக அமையும்.

தங்கள் பதிவுக்கு நன்றி வல்வை அண்ணா.

Link to comment
Share on other sites

நன்றி உங்கள் ஊரைப்பற்றி அறியத்தந்தமைக்கு.

உங்க ஆதரவிற்கு நன்றியெங்க!!!

தமது அடையாளததையே தொலைத்து விட்டு வாழும் மக்களுக்கு ......ஊர் பற்றுடன் , பதிவெழுதும் பதிவருக்கு நன்றி. இன்னும் விபரமாக் நீண்ட பதிவைக் எழுதுவது சிறந்தது .பின் வரும் சந்ததிக்கு உதவும். மேலும் தொடருங்கள் .

உங்கள் கருத்துக்கு நன்றி அக்கா!

எனக்கு இதை தொடரும் எண்ணம் இருக்கிறது.

அசத்திட்டீங்க மருமகன்.

கிட்டத்தட்ட காட்சியும் கானமும் மாதிரியுள்ளது, நிஷமாக ஒரு கிராமத்திலை கொண்டுபோய் நிறுத்திட்டீங்கள், எப்படி திரும்பி வாறதென்றுதான் யோசனை, அதையும் கொஞ்சம் விபரமாக சொல்லுங்களேன்.பாராட்டுக்கள் மருமகன்.

நன்றியெங்க!

உங்களைப்போன்றோரின் பாராட்டுக்கள் தான் எங்களை ஊக்குவிக்கின்றன, உங்கள் கருத்தின் மூலம் நான் தவறவிட்ட விடயங்கள் நினைவூட்டுகின்றன, கவனத்தில் எடுக்கின்றேன்.

இலக்கணாவத்தை .... ஆரம்பத்தில் ரஞ்சனாவில் கள்ளப்படங்களுக்காக சைக்கிள் ஓடத்தொடங்கி .... 84ல் சிங்களவன் பள்ளிக்கூடத்தை கொழுத்தி விட்டான், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதப்போராட்டங்கள் என இப்பகுதிகளுக்கு வரத்தொடங்கி ... இதே ஆலமரத்தின் கீழ் விண்ணுலகம் சென்று விட்ட மறக்கமுடியாத எனது நண்பர்களுடனான சந்திப்பு ..... இனிமையான காலங்கள், இனி வருமா??????? ..... நன்றிகள் இணைப்பிற்கு!!

ஓ, நீங்களும் அந்த ஆலமரத்தின் சுகத்தை அனுபவித்தீர்களோ, அந்த ஞாபகம் மனதில் ரொம்ப தொல்லை தருமே?

உங்களது கருத்துக்கு நன்றியெங்க.

Link to comment
Share on other sites

உங்கள் பதிவின் மூலம் தான் இலக்கணாவத்தை என்ற ஊர் இருப்பதைபற்றி அறிந்தேன். உங்களை போன்று இயலுமானவர்கள் தங்கள் ஊரைப்பற்றி அறியத்தந்தால் வருங்கால சந்ததிக்கு ஈழத்தின் அருமை தெரிவதற்கும் மற்றும் என்னைப்போன்று பல ஊர்களை அறியாதவர்களுக்கு அவற்றை பற்றி அறிந்துகொள்ளவும் நல்ல வாய்ப்பாக அமையும்.

தங்கள் பதிவுக்கு நன்றி வல்வை அண்ணா.

ஜயோ! உந்த வத்தை என்ற சொல்லைப்போல எங்கவூரைச்சுற்றி நிறைய வித்தியாசமான ஊர்கள் இருக்கெங்கோ, கொற்றாவத்தை, இமையாணன், கெருடாவில், கல்லுவம், கம்பர்மலை, கொம்மந்தரை, மயிலியதனை, இலந்தைக்காடு, நாவலடி,திருவானி இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் பாருங்கோ.

உங்கள் கருத்துக்கு நன்றி சகோதரி ஈழமகள்!

Link to comment
Share on other sites

ஜயோ! உந்த வத்தை என்ற சொல்லைப்போல எங்கவூரைச்சுற்றி நிறைய வித்தியாசமான ஊர்கள் இருக்கெங்கோ, கொற்றாவத்தை, இமையாணன், கெருடாவில், கல்லுவம், கம்பர்மலை, கொம்மந்தரை, மயிலியதனை, இலந்தைக்காடு, நாவலடி,திருவானி இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் பாருங்கோ.

உங்கள் கருத்துக்கு நன்றி சகோதரி ஈழமகள்!

இதில் இருக்கும் ஒரு ஊர் கூட எனக்குத்தெரியவில்லை... :)

வல்வை அண்ணா உங்கள் ஊர் பற்றி தெரிய தந்தமைக்கு நன்றி... இப்படி ஒரு ஊர் இருப்பது உங்கள் பதிவு மூலம்தான் எனக்கு தெரிய வந்தது...

Link to comment
Share on other sites

இதில் இருக்கும் ஒரு ஊர் கூட எனக்குத்தெரியவில்லை... :)

வல்வை அண்ணா உங்கள் ஊர் பற்றி தெரிய தந்தமைக்கு நன்றி... இப்படி ஒரு ஊர் இருப்பது உங்கள் பதிவு மூலம்தான் எனக்கு தெரிய வந்தது...

நன்றி சகோதரி!

உங்கள் பின்னூட்டல்கள் தான் என்னை தொடர்ந்து எழுத தூண்டுகின்றன, முயற்சிக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

படங்கள் , ஒளிப்பதிவுகள் மூலம் ஒரு அழகிய ஊரை எமக்கு அறியத்தந்தமைக்கு நன்றி வல்வை.

உங்கள் ஊர் ஆலமரத்தின் சூழல் எனக்கும் பிடித்துள்ளது.

.

Link to comment
Share on other sites

.

படங்கள் , ஒளிப்பதிவுகள் மூலம் ஒரு அழகிய ஊரை எமக்கு அறியத்தந்தமைக்கு நன்றி வல்வை.

உங்கள் ஊர் ஆலமரத்தின் சூழல் எனக்கும் பிடித்துள்ளது.

.

உங்கள் கருத்துக்கு நன்றி தமிழ் சிறி!

இன்னும் பலவிடயங்களை உள்ளடக்கியிருக்கலாம் ஆனால் அதற்குரிய நேரம் இதுவல்ல.

Link to comment
Share on other sites

அசத்திட்டீங்க மருமகன்.

கிட்டத்தட்ட காட்சியும் கானமும் மாதிரியுள்ளது, நிஷமாக ஒரு கிராமத்திலை கொண்டுபோய் நிறுத்திட்டீங்கள், எப்படி திரும்பி வாறதென்றுதான் யோசனை, அதையும் கொஞ்சம் விபரமாக சொல்லுங்களேன்.

பாராட்டுக்கள் மருமகன்.

ஜயோ பெரிய மாமி மன்னித்திடுங்கோ!

கொஞ்சம் வேலைப்பளுவிலை உங்களுக்கு உதவி பண்ணமுடியாமல் போச்சுது, அதாவது இலக்கணாவத்தையில் இருந்து எப்படி வெளியிலை வாறதெண்டு. உள்ளே போனீங்க கொஞ்சக்காலம் உங்கேயே இருந்துட்டு வாறது தானே? சரி உங்கே வரவேற்பு, உபசரிப்பு எல்லாம் எப்படியிருந்திச்சுது?

உண்மையைச் சொல்றன் பாருங்கோ உந்த உபசரிப்பு என்றால் என்ன என்று அறிய வேண்டுமென்றால் ஒருக்கால் இலக்கணாவத்தைக்கு வாருங்க அப்பதான் புரியும். எங்கவூருக்கை கால் வைத்தாலே போதும் போற வாறவன் எல்லாம் வலிய வந்து அண்ணை ஊருக்குப்புதிசுமாதிரி இருக்கு எங்கே போகவேணும் சொல்லுங்கோ கொண்டுபோய் விடுறன் என்பாங்க.

அதுமட்டுமல்லங்க போறவரை நீங்க சந்திக்காட்டியும் பறவாயில்லை உங்களை சந்திக்கிறவங்க யாராக இருந்தாலும் உங்களை சாப்பிடப்பண்ணாமல் வெளியிலை போகவே விடமாட்டாங்க பாருங்க, அதாவது நீங்க யாரிட்டை வந்தனிங்க என்று பார்க்கமாட்டாங்க தங்க ஊருக்கு வந்தனிங்க என்ற உரிமையிலை தான் பாருங்க உங்களை கவனிப்பாங்க.

இலக்கணாவத்தைக்கு நீங்க யாழ்பாணத்திலை இருந்து போறதாக இருந்தால் பருத்தித்துறைக்கு போகிற 751 இலக்கமுடைய

imagesbus.jpg

பேரூந்து எடுக்கவேணுமெங்க, நீங்க இலக்கணாவத்தை என்று சொன்னாலே கொண்டக்டர் அண்ணைக்கு உடனே புரிந்திடும் பாருங்க. உதுக்கு பலகாரனம் இருக்கெங்க, அதிலை முக்கியமாக நம்ம ஊரவங்க பலபேர் பேருந்து சாரதியாகவும், கொண்டக்டராகவும் தானெங்க வேலை செய்தாங்க

images2ls.jpg

இதிலை இன்னுமொரு வேடிக்கை என்னவென்றால் என்னுடைய அப்பாவும் கொண்டக்ரர் தானேங்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலக்கணாவத்தைக்கு வந்த ஞாபகம் இருக்கின்றது. ஆனால் ஆலமரம் மறந்துவிட்டது. நினைவூட்டியதுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.