Jump to content

தமிழர்கள் தனித் தாயகக் கோரிக்கையைக் கைவிட்டனர் -பி பி சி


Recommended Posts

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்......பாட்டு வரி கொஞ்சம் நினைவுக்கு வருது.....

மானம் பெரிதென சொல்லிடுவான்

மற்ரோரை தூண்டி செயல்படுவான்

மாண்டபின் துயாபோல் நடித்திடுவான்

மணியடித்து துட்டு கறந்திடுவான்

Link to post
Share on other sites
 • Replies 120
 • Created
 • Last Reply

எனக்கும் இது சரி என்று தோன்றுது.இப்ப எங்களிடம் இராணுவப்பலமோ அரசியல் பலமோ இல்லை.இருப்பது பொருளாதாரப்பலம் ஒன்றுதான்.இதைப்பயன்டுத்தி அங்குள்ள மக்களின் வாழவாதரத்தை மேம்படுத்த வேண்டும்.இப்பொழுது உள்ள நிலையில் இலங்கை அரசின் அனுமதி இல்லாமல் வாசிகசாலை கூட கட்ட முடியாது.இலங்கை அரசுடன் ஏதா ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்தி அங்கு பொருளாதாரத்தை கட்டி எழுப்பி மக்களுக்குவாழவில் பிடிப்பை ஏற்படுத்த வேண்டும்.

அதனையும் சுரண்ட சிங்களவன் வழி மேல் விழி வைத்து இருக்கிறான். தனது இழந்த பொருளாதாரத்தை புலம் பெயர் தமிழர்களின் பணத்தை கொண்டு மேம்படுத்த சிங்கள கூட்டம் தயார் நிலையில் உள்ளது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாயகக் கோட்பாடு கைவிடப்படுவதன் மூலம் எவ்வாறு அங்கிருக்கும் மக்களின் இருப்பு உறுதிபடுத்தப் படும் என்பதை நீங்களாவது சொல்வீர்களா? நான் மானம் மரியாதை பற்றி எதுவுமே பேசவில்லை. நான் தாயக மக்களின் இருப்பைப் பற்றியே பேசுகிறேன்.புலம் பெயர்ந்தவர் பற்றியும் நான் பேசவில்லை.எவர் உங்களுக்கு என்ன உறுதி மொழிகளைத் தந்துள்ளார்கள் என்றாவது சொல்வீர்களா?ஏன் எல்லாம் பெரிய மூடு மந்திரம் போல் சொல்லப்படுகிறது?

நாரதர் அண்ணா,

கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கு மேல் தாயகக்கோட்பாட்டுக்காய் அரசியல் இராணுவ ரீதியாக பலமான நிலையில் இருந்த போதே தாயக்கோட்பாட்டை யாரும் அங்கீகரிக்காத போது இனி மேல் யார் வந்து தமிழினத்தின் தாயகக் கோட்பாட்டை ஆதரிக்கப் போகிறார்கள்?? பலமான நிலையில் கூட எம்மால் தாயகக்கோட்பாட்டுக்கான ஆதரவைத்திரட்ட முடியவில்லையே!

பொருளாதாரநலன் சார்ந்து இயங்கும் அரசியலில்(இதைப்பற்றி பலரும் விரிவாக எழுதியதால் எழுத வேண்டாம் என நினைக்கிறேன்) தமிழரிடம் என்ன இருக்கு எமக்கு சார்பாக குரல் கொடுப்பதற்கும், எமக்கு ஒரு தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கு வலியுறுத்தவும்??

பிச்சைக்காரனுக்கு யாராவது பிச்சை போடவேண்டுமாயின் பிச்சை போடுபவன் இரக்கப்பட்டு,கருணை காட்டினால் தான். நாமும் அதே போல் இன்று பிச்சைக்காரனின் நிலையில் தான் இருக்கிறோம். எந்த தீர்வையும் சிங்களம் தராவிட்டாலும் அடித்துப் பறிக்கும் அதிகாரமும்,தகுதியும் பறி போய்விட்டதே.

இன்றும் தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு வழங்க கிடைத்த சந்தர்ப்பங்களை தமிழ்தலைமைகள் தவறவிட்டுவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டே பரவலாக உள்ளது.

இந்திய இலங்கை ஒப்பந்தப்படி மாகாணசபைத்தீர்வையாவது பெற்றிருக்கலாம் என்று பலரின் வாதம் இருக்கிறது. அதைவிட இன்றை எமது பேரிழப்புக்கும் தமிழர்கள் ஒரு தீர்வுக்கு வரமறுத்தமையையே காரணம் காட்டுகிறார்கள். ஏன் விடுதலைப்புலிகள் கூட ஒஸ்லோ பேச்சுவார்த்தயில் எட்டப்பட்ட சமஸ்டி முறையில் ஒரு தீர்வைப்பெற்று பின்னர் தம்மை முழுமையாகப் பலப்படுத்திய பின்னர் போரிட்டால் இவ்வளவு இழப்புகளையும் ச்சந்தித்திருக்க தேவையில்லை என்பதும் பலரின் கருத்து.

ஆக,

இங்கு தாயகக்கோட்பாட்டை விடவேண்டுமென்பது கருத்தோ,வாதமல்ல..

தமிழர்கள் ஒரு தீர்வுக்கு வந்து அதைப்பெற்ற பின்பு படிப்படியாக தமது இலக்கு நோக்கிய காய்நகர்த்தலை செய்யவேண்டுமே தவிர தாயகக்கோட்பாட்டை முற்றிலுமாக விட வேண்டும் என யாரும் நினைக்கவில்லை.

நாரதர் அண்ணா,

முதலில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தயாரித்திருக்கும் தீர்வுத்திட்டமே நடைமுறைப்படுத்தப்படுமோ தெரியாது அதற்குள்ளே அவசரப்பட்டால் என்ன???

பொறுத்திருந்து தான் பார்ப்போமே.

ம்......பாட்டு வரி கொஞ்சம் நினைவுக்கு வருது.....

மானம் பெரிதென சொல்லிடுவான்

மற்ரோரை தூண்டி செயல்படுவான்

மாண்டபின் துயாபோல் நடித்திடுவான்

மணியடித்து துட்டு கறந்திடுவான்

உங்க பாட்டுவரி எனக்கு பிடிச்சிருக்கு...

பச்சைப்புள்ளி குத்தி இருக்கு....

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறிலங்கா ஏற்றுக் கொள்ளாத தீர்வைக் கூட்டமைப்பு முன் வைத்திருப்பதன் நோக்கம் என்ன?

இந்தியாவும் மேற்குலகமும் அதனை ஏற்றுக் கொள்லும் படி செய்யும் என்னும் நம்பிக்கையில் தானே?

அப்படியாயின் மேற்குலகமும் இந்தியாவும் இணைந்து இந்த தீர்வுத் திட்டத்கை நடிமுறைப்படுத்த சிறிலங்காவிற்க்கு அழுத்தத்தைக் கொடுக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்.அப்போது சிறிலங்கா முற்று முழுதாக சீனா இரான் பாக்கிஸ்த்தான் என்று சாய்ந்து விடும்.இது மேற்குலகிற்கும் இந்தியாவுக்கு தெரியும்.ஆகவே அவர்கள் என செய்வார்கள் சிறிலங்காவிடம் பேரம் பேசுவார்கள், தமிழரின் தீர்வு உடன்படிக்கை மேலும் கீழ் இறக்கப்படும்.கடைசியில் ஒரு மாகண சபையோ கிராம்சபையோ ஒரு சில நாற்காலிகளுடன் வழங்க்கப்படும்.அதில் சம்பந்தன் அய்யா இருந்து என்ன செய்வார்?

மாற்றாக நாங்கள் எங்கள் அடிப்படைக் கோரிக்கைகளை விட்டுக் கொடாமல் தொடர்ந்தும் இருந்தோமானால், இன்று இரு துருவ அரசியலை நோக்கிச் செல்லும் உலகில் மேற்குலகமோ இந்தியாவோ, சீனவோ எமது நிலைப்பாட்டை ஆதரித்துச் செயற்பட வேண்டிய தருணம் ஏற்படும். நிலமைகள் எப்போதுமே ஒரே மாதிரி இருக்கப் போவதில்லை.சிங்களவரின் இராஜதந்திர நகர்வுகளைக் குறைத்து மதிபிடும் வழமையான அரசியலே கூட்டமைவின் அண்மைய நகர்வுகள்.எது சரி எது பிழை என்பதை காலம் சொல்லும்.அதற்காக பல்வேறு சிந்தனை உடையோர் எல்லோரும் ஒன்றாக இருந்து தமிழருக்கான இன்னொரு புதை குழியைத் தோண்ட வேண்டிய அவசியம் இல்லை.எந்த வழி சரியானது என்பதைக் காலம் தீர்மானிக்கட்டும்.அதுவரை உரையாடுவோம்.சிந்திப்போம் செயற்படுவோம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு இந்திய நிகழ்ச்சி நிரலில் செயற்படுகிறது என்கிறார்கள். அப்படியென்றால் ஏனைய தமிழ்ப்பிரிவினர் இலங்கையரசின் நிகழ்ச்சி நிரலில் செயற்படுகிறார்களா? என்று கேட்கத் தோன்றுகிறது.

அதைத்தான் குறிப்பிட்டுள்ளேன் தானே மாறிக்கொள்வார். புதியவர்தானே. ஆரம்பத்தில் வேகம் இருக்கும். ஒட்டுக்குழுக்களும் படையினரும் நெருக்குதல் கொடுக்கும் போது குடும்பத்திரே மாற்றிவிடுவார்கள்.

முதலில் ததேசியமு வேட்பாளர் வரதராஜன் பற்றி இப்படி சொன்னீர்கள்

ஒன்றுமட்டும் புலப்படுகிறது, தேசிய முன்னணி வெற்றிபெற்றால் புலம் பெயர் மக்களால் நடத்தப்படும் இப்போதைய வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கான மீள் வாக்கெடுப்பில் ஈடுபடும் பகுதியினர் அவர்களோடு இணைந்து நிற்பர். அவ்வாறில்லாது கூட்டமைப்பு வெற்றி பெறுமானால் இவர்களது நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பது தெரியவில்லை.

இறைவன்

இப்போது இப்படிச் சொல்லுகின்றீர்கள் ????

கருனாநிதி கட்டையில போறநேரத்தில் கதிரையைக் கட்டிக்கொண்டு அழுகின்றார் என்று எல்லோரும் கத்தினார்கள்

சம்பந்தன் என்ன பதினாறு வயது இளைஞனா ? அவருக்கு கட்டையில போறவயது தானே ? கயேந்திரன் போன்ற துடிப்பான இளைஞர்களிடம் ஒப்படைத்து விட்டு தாங்கள் விலகியிருக்கலாமே ? ஏன் தாங்கள் இருந்து கொண்டு அவர்களை விலத்தினார்கள் ? தமிழ்த்தேசியமோ ?

கருனாநிதிக்கு ஒன்று சம்பந்தனுக்கு ஒன்றா ?

ஆக வேண்டாப்பொண்டாட்டி கைபட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம் ?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கனடிய தமிழ் வானொலியில் கயேந்திரன் ஒலிவடிவம்

http://www.ctr24.com/newctr/player/player.htm?plaurl=../Archivesongs/370.mp3

இது கயேந்திரனால் வழங்கப்பட்ட பேட்டி இதில் கயேந்திரன் ததேகூ வாலுகள் எவ்வாறு கத்தினாலும் எப்படி நாணயமாகவும் நிதானமாகவும் உரையாடுகின்றார் ஆனால் பழுத்த அரசியல்விஞ்ஞானி என்று மார்தட்டும் சம்பந்தர் கத்தி ஆவேசமாக இணைப்பைத் துண்டித்ததும் புலம் பெயர்ந்த தமிழர்கள் எங்களுக்கு சொல்ல யார் என்று சொன்னதும் நினைவிருக்கின்றதா ?

ஆனால் புலம் பெயர்ந்த தமிழர்களின் நிதிமட்டுமே வேண்டுமாம் ?

Link to post
Share on other sites

கனடிய தமிழ் வானொலியில் கயேந்திரன் ஒலிவடிவம்

http://www.ctr24.com/newctr/player/player.htm?plaurl=../Archivesongs/370.mp3

இது கயேந்திரனால் வழங்கப்பட்ட பேட்டி இதில் கயேந்திரன் ததேகூ வாலுகள் எவ்வாறு கத்தினாலும் எப்படி நாணயமாகவும் நிதானமாகவும் உரையாடுகின்றார் ஆனால் பழுத்த அரசியல்விஞ்ஞானி என்று மார்தட்டும் சம்பந்தர் கத்தி ஆவேசமாக இணைப்பைத் துண்டித்ததும் புலம் பெயர்ந்த தமிழர்கள் எங்களுக்கு சொல்ல யார் என்று சொன்னதும் நினைவிருக்கின்றதா ?

ஆனால் புலம் பெயர்ந்த தமிழர்களின் நிதிமட்டுமே வேண்டுமாம் ?

தந்தை செல்வநாயகம் கூட 1947 வரைக்கும் ஒரு புலம்பெயர்ந்த தமிழன் தான் எண்டதை அவர் வளி வந்ததாக சொல்லிக்கொள்ளும் SMS குழுவுக்கு ஞாபகம் இருக்குமோ தெரியாது...?

இப்பவானால் தமிழர்களுக்கு எல்லாம் தந்தை ஆக புலம் பெயந்த செல்வநாயகம் யார் எண்டு கேப்பார்கள்...

Link to post
Share on other sites

இறைவன்,

தாயகக் கோட்பாட்டைக் கைவிடுவதன் மூலம் எங்கனம் வன்னியில் உள்ள மக்களும் போராளிகளும் பாதுகாக்கப்படுவார்கள் என்பதை விளக்கினால் ,தாயகக் கோட்பாட்டைக் கைவிடுவது சரியான அரசியல் நிலைப்பாடு என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.ஆனால் இதுவரை அதற்கான பதிலை தாயகக் கோட்பாட்டைக் கைவிட்டுள்ள எவரும் சொல்லவில்லை.இன்று மகிந்தவுடன் கூட்டுச் சேர்ந்தவர்களும் வன்னி மக்களையும் போராளிகளையும் சொல்லியே தமது செயல்களை நியாயப்படுதுகிறார்கள்.இதனையும் நீங்கள் அங்கீகரிக்க வேண்டும்.மக்களின் நீண்டகால நலனை அடிப்படியாக வைத்து அரசியலை முன் நோக்கி நகரத்தவே மக்களுக்கு அரசியற் தலமை என்பது அவசியம்.சலுகைகளைப் பெற தமிழர்களிடம் பலர் உண்டு.

முதலில் ததேசியமு வேட்பாளர் வரதராஜன் பற்றி இப்படி சொன்னீர்கள்

இப்போது இப்படிச் சொல்லுகின்றீர்கள் ????

கருனாநிதி கட்டையில போறநேரத்தில் கதிரையைக் கட்டிக்கொண்டு அழுகின்றார் என்று எல்லோரும் கத்தினார்கள்

சம்பந்தன் என்ன பதினாறு வயது இளைஞனா ? அவருக்கு கட்டையில போறவயது தானே ? கயேந்திரன் போன்ற துடிப்பான இளைஞர்களிடம் ஒப்படைத்து விட்டு தாங்கள் விலகியிருக்கலாமே ? ஏன் தாங்கள் இருந்து கொண்டு அவர்களை விலத்தினார்கள் ? தமிழ்த்தேசியமோ ?

கருனாநிதிக்கு ஒன்று சம்பந்தனுக்கு ஒன்றா ?

ஆக வேண்டாப்பொண்டாட்டி கைபட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம் ?

தமிழர் கோடபாடு கைவிடப்பட வேண்டும் என்று சொல்ல வரவில்லை. அதற்கான தேவை எப்போதும் தமிழன் இருக்கும்வரை இருந்து கொண்டேயிருக்கும். ஆனால் இன்றைய சூழ்நிலை தாயகக் கோட்பாட்டை முன்னெடுத்து செல்வது என்பதைவிட, கொஞ்சம் தணிந்து செயல்பட வேண்டுமென்கிறேன்.

ஏன் தனிநாடு, தமிழீழம் என்ற கோரிக்கைகள் தாயகத்து அனைத்துத் தமிழ் அரசியல்வாதிகளாலும் வார்த்தைப் பிரயோகம் கூடச் செய்ய முடியாதிருப்பதை நீங்கள் அவதானிக்கவில்லையா? இவைகளெல்லாம் சூழ்நிலை அரசியல்கள். எதைக் கையிலெடுக்கவேண்டும் எதில் தணிவு பெறவேண்டும் என்பதெல்லாம் இப்படித்தான் அடங்கும்.

தனித் தமிழீழம் எந்தத் தமிழனுக்குத்தான் விருப்பமில்லை. எதிர்நிலைகொண்ட தமிழனும் தமிழீழத்தை விரும்புவான். அது அவனது உரிமையல்ல, உணர்ச்சி. ஒவ்வொரு தடவையும் புண்படும் போது, தனித் தமிழீழம்தான் கண்முன் வரும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

தனித் தமிழீழம் எந்தத் தமிழனுக்குத்தான் விருப்பமில்லை. எதிர்நிலைகொண்ட தமிழனும் தமிழீழத்தை விரும்புவான். அது அவனது உரிமையல்ல, உணர்ச்சி. ஒவ்வொரு தடவையும் புண்படும் போது, தனித் தமிழீழம்தான் கண்முன் வரும்.

ம்..... உதத்தாதன் சொல்லுறது உணர்ச்சி அரசியலெண்டு “ தமிழீழம் ” எண்ட பதத்தை வச்சு இவளவுகாலமும் ஓட்டினாக்களால நடந்து முடிஞ்சதுகள பாத்திடீங்களல்லோ! பவரில இருந்துகொண்டு செய்த அநியாயங்களின்ட இறுதி அத்தியாயம்தான் முள்ளிவாய்க்கால். 3 1/2 லச்சத்த இறுதிவரை கொண்டுபோட்டு எங்கள வீதிக்கு இறக்கினது மக்கள காப்பாத்தவோ அல்லது தமிழீழம் கிடைக்கும் எண்ட நம்பிக்கையிலோ இல்ல , தங்களது பவர தக்கவச்சுக்கொள்ள. இப்ப நடக்கிறதும் அதின்ர தொடர்கதைதான் , பத்மினியக்காவோ கஜேந்திரனண்ணையோ இப்ப பேசுறேல்ல , கஜேந்திரகுமார்தான் பேசுறார். தேர்தல் முடிய பாருங்கோ வித்தைய. :rolleyes:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மருதங்கேணி அண்ணா,

வெறும் உசுப்பேத்தும்,உணர்ச்சிவசப்படும் கருத்துக்களை விடுத்து யதார்த்தமாக சிந்தித்து பாருங்கள்,

புலம்பெயர்ந்து பாதுகாப்பான இடத்தில் இருந்து கொண்டு உங்கள் அக்கா,தங்கை பெற்றோரையும் கூடவே பாதுகாப்பாக வைத்திருப்பவர்களால் தான் இப்படி தன் மானம்,இனமானம் என்று உசுப்பேத்த முடியும்..

ஊரிலை பெற்றோர்,சகோதரர்கள் இருக்கும் உறவுகளால் இப்படி சொல்லமுடியாது(ஒருவேளை நீங்கள் ஊரில்லிருந்து எழுதி இருந்தால் மன்னித்துக்கொள்ளுங்க).

தமிழினம் தன் இருப்பையே தக்கவைத்துக் கொள்ள முடியாமல் இருக்கும் போது மானம்,அவமானம் ஒரு கேடா???

இல்லை மானம்,தன் மானம் என்று இருந்து அழிவைத் தவிர சாதித்தது தான் என்ன??

CNN இல் வந்த ஆய்வுச்செய்தியையாவது படித்து பாருங்க எங்களுடைய மக்களின் துயரங்களை

எத்தனை சிறுவர்கள்,குழந்தைகள்,முதியவர்கள் என அங்கவீனம் ஆனவர்களுக்கு எல்லாம் என்ன பதில் சொல்ல??

ஒவ்வொருவருக்கும் விரும்பினால் பணம்,உணவு கொடுக்கலாம் ஆனால் அவர்கள் ஒவ்வொருத்தரினதும் ஆசைகள் இலட்சியங்கள்,கனவுகளை திருப்பிக்கொடுக்க முடியுமா???

அங்கிருக்கும் மக்கள் சொல்கிறார்கள்,

நாங்கள் கடுமையாக உழைத்தோம்,எங்கள் இனத்தின் விடுதலைக்காய் எல்லாத்தையும் இழந்தோம்..கடைசியில் கண்டதென்ன??

எதுவுமே இல்லாமல் முடிந்ததை எப்படிச்சொல்ல??

அவர்களுடைய மனநிலைகளையும் தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள். அல்லது அவர்களுடைய இப்படியான

கேள்விகளுக்கு என்ன தான் பதில் வைத்துள்ளீர்கள்????

வெற்று வீரவசனங்களாலும்,உசுப்பேத்தல்களையும் விடுத்து அங்கிருக்கும் மக்களின் இருப்பை உறுதிப்படுத்துவதும்,ஆகக்குறைந்த அடிப்படைத்தேவைகளையாவது பூர்த்திசெய்ய ஆவன செய்வதே தற்போதைக்கு மேல்.

"தன்னிலை தாழாமையும் அந்நிலை தழுமிடத்து உயிர் வாழாமையும் மானம் எனபடும்"

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஏன் புத்திசாலிகளென்றால் போரிடுவதுதான் ஒரே வழியா? இராஜதந்திரம் என்பது காலில் விழுதல் என்றுமட்டும் அர்த்தப்படாது. முஸ்லிம்களின் அரசியல் முறைத் தன்மையைத்தான் இங்கு சுட்டிக்காட்டினேன். அதற்காக அக்கா தங்கைமாரை நீங்கள் கூட்டிக் கொடுக்கத் தேவையில்லை.

வாழ்வதற்கு மக்கள் தவித்துக் கொண்டிருக்கும் போது அவர்களைக் காக்கும் வழிபற்றிச் சிந்தியுங்கள். வளைந்து கொடுக்கவேண்டிய இடங்களில் வளையாமல் நிற்பதால் எதுவும் நடந்தேறிவிடாது. அழிவு மட்டுமே மிஞ்சியிருக்கும்.

தாயகக்கோட்பாட்டை கையில் எடுப்பதற்கு தமிழர்கள் பலமுடனிருக்க வேண்டும். இன்று என்ன பலம் எம்மிடமுண்டு. தன்மானம் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறீர்கள். மானமிழந்து அங்கே தமிழன் தவிக்கின்றான். மானம்பற்றி அங்கு சிந்திக்கப்படுகிறதா? இழப்புக்கள் மேலும் இழப்புக்கள்.

ஒருவழி திறக்க வேண்டும். தமிழர் பலம் மட்டுமல்ல, ஒற்றுமையும் சிதைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நேரமிது.

35 வருடங்களுக்கு முன்பு சிங்களவன் எதைசெய்தான் என்று இனி நாம் சேர்ந்துவாழ முடியாது. பிரிந்தே போகிறோம் அல்லது செத்து மடிகிறோம் என்று ஆயுதங்களை தூக்கி சண்டைக்கு..... நீங்கள் போகவில்லை யாரோதான் போனார்கள் என்பதால்தான் உங்களால் 35 வருடமாக கைதட்ட முடிநந்தது.

தன்னிலைக்கே தமிழன் வெடிசுமந்து வெடித்தான்.

அந்நிலையை விலைபேசி விற்கமுடியுமென்றால்................................?

முள்pவாய்க்காலோடு தமிழன் அழிந்துவிட்டான் என்று எழுதிவையுங்கள். அதுவே தமிழனுக்கு நீங்கள் செய்யும் மிகபெரிய கருமம்.

மற்றபடி எமது சொந்த குணங்களை வைத்தே எமக்குரித்தான் இனப்பெயரை உலகம் இட்டுகொள்ளும்............. நாம் பெயருக்கேற்றால்போல் இரஜதந்திர அரசியல் செய்து வாழ்வோம் வழமுடன்.

முடியாவிட்டால் முடியவில்லை என்னால் முயற்சிசெய்ய கூட முடியவில்லை என்று உண்மையை எழுதுங்கள். அதற்றகாக அடுத்தவன் செய்தால் விபச்சாரம் என்றும் அதை நாமே செய்யும்போது இரஜதந்திர அரசியல் என்று கதை அவிக்காவதீர்கள்.

மேலே இன்னொரு உறவு எழுதியுள்ளது அங்கே அக்கா தங்கைமார் இல்லை என்றால்தான் எழுத முடியும் தன்நிலை பற்றி எழுத முடியும் என்று.

ஆம் இல்லைதான் இருந்தவர்கள் கிட்டதட்ட 35ஆயிரம் பேர் இருந்தவர்கள் எல்லோரும் வெடித்து வெடியோடு கலந்து போய்விட்டார்கள்.

அவர்களின் தியாகங்களையும் விலைபேசி விற்கலாம் என்று முடிவு செய்தபின்................... அங்கு யாரும் இல்லாது இருப்பNது எனக்கு சாரியானது.

ஆனால் இராஜதந்திரிகளுக்கு அது பிழையானதுதான்!

Link to post
Share on other sites

தமிழர்கள் உரிமை குறித்து புலிகளுக்கு பின்னரான காலம் ஒன்றில்லை அதுசார்ந்த அரசியல் இராஜதந்திரம் என்று எதுவும் இல்லை. தாயகக் கோட்பாடு என்பது ஒரு ஆதங்கக் கருத்தேயன்றி அதற்கான அடித்தளம் எதுவும் இல்லை. தமிழர்களின் இருப்பை பலப்படுத்துவது தக்கவைப்பது கூட பலவீனமான நிலையிலேயே இருக்கின்றது. செயற்பட்டிற்கும் முயற்சிக்குமாக இருக்கும் ஒரே வழி போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மனிதாபிமான உதவிகள் செய்வது குறித்து மட்டுமே.

சிங்களத்தின் நேரடி ஒடுக்குமுறையில் இருந்து தப்பிநிற்கும் புலம்பெயர்வாழ்மக்கள் தமிழர் உரிமை குறித்து குரல்தரவல்லவர்களாக இருக்கின்றனர். முள்ளிவாய்க்கால் முடிவுக்கு பின் உடனடியாக நாடுகடந்த அரசு தாயகக் கோட்பாடு வாக்கெடுப்பு முயற்சிகளே நடந்தது. சிறைப்பட்ட மக்களை விடுவித்தல், மீள் குடியேற்றம், போர்க்குற்ற விசாரணை போன்றவற்றிற்காக குரல்கொடுக்க மறுத்தபோதே தாயகக் கோட்பாட்டில் இருந்து குரல்தரவல்லவர்கள் விலகிவிட்டார்கள். இங்கே தாயகம் அதன் அவசியம் என்பது மக்களின் அன்றாட வாழ்க்கை நெருக்கடிகளை துச்சமாக தூக்கியெறிந்து அலட்சியப்படுத்தி புறம்புபட்டு நிற்கின்றது. நாடுகடந்த அரசுக்கான முயற்சியையும் சிறையில் வாடும் பல்லாயிரம் உயிர்களையும் எங்கனம் தொடர்புபடுத்துவது?

எம்மிடம் ஒரு வீடு குறித்த அமைப்பும் வரைவும் இருக்கின்றது. கனவு இல்லம். அது குறித்து உறுதியுடன் இருக்கின்றோம். அத்திவாரம் தோண்டு ஒவ்வொரு கல்லாக அடுக்கி வீட்டை உருவாக்குவதில் எமக்கு உடன்பாடு இல்லை. முகடுவரை கட்டி எழுப்பிய வீட்டை இடித்து தரைமட்டமாக்கியாச்சு இருந்தும் முகடுகட்டுவதிலே குறியாக நிற்கிறோம்.

Link to post
Share on other sites

35 வருடங்களுக்கு முன்பு சிங்களவன் எதைசெய்தான் என்று இனி நாம் சேர்ந்துவாழ முடியாது. பிரிந்தே போகிறோம் அல்லது செத்து மடிகிறோம் என்று ஆயுதங்களை தூக்கி சண்டைக்கு..... நீங்கள் போகவில்லை யாரோதான் போனார்கள் என்பதால்தான் உங்களால் 35 வருடமாக கைதட்ட முடிநந்தது.

தன்னிலைக்கே தமிழன் வெடிசுமந்து வெடித்தான்.

அந்நிலையை விலைபேசி விற்கமுடியுமென்றால்................................?

முள்pவாய்க்காலோடு தமிழன் அழிந்துவிட்டான் என்று எழுதிவையுங்கள். அதுவே தமிழனுக்கு நீங்கள் செய்யும் மிகபெரிய கருமம்.

மற்றபடி எமது சொந்த குணங்களை வைத்தே எமக்குரித்தான் இனப்பெயரை உலகம் இட்டுகொள்ளும்............. நாம் பெயருக்கேற்றால்போல் இரஜதந்திர அரசியல் செய்து வாழ்வோம் வழமுடன்.

முடியாவிட்டால் முடியவில்லை என்னால் முயற்சிசெய்ய கூட முடியவில்லை என்று உண்மையை எழுதுங்கள். அதற்றகாக அடுத்தவன் செய்தால் விபச்சாரம் என்றும் அதை நாமே செய்யும்போது இரஜதந்திர அரசியல் என்று கதை அவிக்காவதீர்கள்.

மேலே இன்னொரு உறவு எழுதியுள்ளது அங்கே அக்கா தங்கைமார் இல்லை என்றால்தான் எழுத முடியும் தன்நிலை பற்றி எழுத முடியும் என்று.

ஆம் இல்லைதான் இருந்தவர்கள் கிட்டதட்ட 35ஆயிரம் பேர் இருந்தவர்கள் எல்லோரும் வெடித்து வெடியோடு கலந்து போய்விட்டார்கள்.

அவர்களின் தியாகங்களையும் விலைபேசி விற்கலாம் என்று முடிவு செய்தபின்................... அங்கு யாரும் இல்லாது இருப்பNது எனக்கு சாரியானது.

ஆனால் இராஜதந்திரிகளுக்கு அது பிழையானதுதான்!

அது சரிதான் 35 வருடகாலப் போராட்டத்தின் தழும்புகள் முதலில் ஆற்றப்பட வேண்டும். அதற்கு ஆவன செய்யவேண்டும். இதுதான் தற்போதைய செயற்பாடு. புலத்திலிருந்து கொண்டு இன்னமும் போராடு, போராடி மடிந்துபோ இப்படியெல்லாம் கூறலாம். அது தப்பில்லை. ஏனென்றால் நாங்கள் பாதுகாப்பாக இருக்கின்றோம். அதன் வலி எம்மால் புரிந்து கொள்ள முடியாதது.

கவரிமானினங்கள் மயிரெல்லாம் கொட்டிவிட்டுத்தான் புலத்தில் வந்து நிக்குதுகள். தாயகத்து மான்களெல்லாம் மானமிழந்து தவிக்கிறார்கள். அதைக் கண்டுகொள்ள முடியவில்லையா? ஒரு மக்கள் போராட்டத்தை முன்னெடுக்கத் தேவையில்லை, ஒரு குழுநிலைப் போராட்டத்தைக் கூட முன்னெடுக்க முடியாத நிலையில் தமிழர்கள் கொடூரமாக அடக்கப்பட்டுள்ளார்கள். அந்தத் தமிழன் நாமாக இருக்கவில்லை. அதனால் எம்மால் வலிகள் புரிந்து கொள்ள முடியவில்லை.

முள்வேலிக்குள் இருந்தாலென்ன, சிறைகளுக்குள் கிடந்தாலென்ன? அவர்களெல்லாம் நாமா? இல்லையே வேறு யாரோதான். அவர்கள் எப்படிப் போனாலென்ன? நமக்குத் தேவை கோட்பாட்டைக் கட்டிக்காப்பதுதானே. யாருக்குத் தேவை அவைகள் நமக்குத்தானே. அங்கிருப்பவர்கள் எக்கேடாவது கெட்டுப் போகட்டும். நமக்கா வலிக்கப்போகிறது?

இன்னும் சில நாள்களில் சிறையிலிருக்கும் போராளிகளில் முக்கியமானோர் தாயகக் கோட்பாட்டுக்கெதிரான கருத்துக்களை முன்னெடுக்கப் போகிறார்கள். அவர்களையெல்லாம் நாம் எப்படி நோக்கப்போகிறோம்?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

1977 ஆம் ஆண்டு தமிழ்மக்கள் தனிஈழத்தனியரசுக்கு ஒரு மனதாக ஆணை வழங்கினார்கள்.அப்படி ஒரு ஆணையை இந்தத் தேர்தலிலும் மக்கள் ததேகூட்டமைப்புக்கு வழங்கினால் ததேகூட்டமைப்பு தன் புதிய கொள்கையை வைத்து அரசியல் செய்யலாம்.(1 தொகுதியை விட எல்லாத்தொகுதிகளிலும் தவிகூ வென்றது போல்)அப்படி ஓரு பெரும்பான்மையான ஆணையை ததேகூ பெறத் தவறினால் தொடர்ந்து வரும் காலங்களில் தமிழர்களுக்கு தலைமை தாங்குபவர்கள் எப்படியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பதை வரும் தேர்தல் முடிவுகளில் இருந்து கற்றறிய வேண்டும்.அதை விட்டு இப்பொழுதே ததேகூட்டமைப்பு சரியான நிலைப்பாட்டை உளப்பூர்வமாக எடுத்திருக்கிறது.தமிழர் நலனுக்காகப் பாடுபடும் என்று நம்பிக்கை வைக்க முடியாது.மக்கள் கொடுத்த ஆணையை மக்களே மாற்ற வேண்டும் ஒரு சில தலைவர்கள் அதைச் செய்ய எந்த அதிகாரமும் இல்லை.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தமிழ் வொய்ஸ்,

கஜேந்திரன் போன்ற இளைஞர்களை தலைவராக்கினால் வருசப்பிறப்பிற்கிடையில் தமிழீழம் என்கின்றீர்கள்.

நல்லா வீரவசனம் பேசுகின்றார் அவரை வச்சு படம் தான் எடுக்கலாம்,அரசியலுக்கும் அவருக்கும் வெகுதூரம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அது சரிதான் 35 வருடகாலப் போராட்டத்தின் தழும்புகள் முதலில் ஆற்றப்பட வேண்டும். அதற்கு ஆவன செய்யவேண்டும். இதுதான் தற்போதைய செயற்பாடு. புலத்திலிருந்து கொண்டு இன்னமும் போராடு, போராடி மடிந்துபோ இப்படியெல்லாம் கூறலாம். அது தப்பில்லை. ஏனென்றால் நாங்கள் பாதுகாப்பாக இருக்கின்றோம். அதன் வலி எம்மால் புரிந்து கொள்ள முடியாதது.

கவரிமானினங்கள் மயிரெல்லாம் கொட்டிவிட்டுத்தான் புலத்தில் வந்து நிக்குதுகள். தாயகத்து மான்களெல்லாம் மானமிழந்து தவிக்கிறார்கள். அதைக் கண்டுகொள்ள முடியவில்லையா? ஒரு மக்கள் போராட்டத்தை முன்னெடுக்கத் தேவையில்லை, ஒரு குழுநிலைப் போராட்டத்தைக் கூட முன்னெடுக்க முடியாத நிலையில் தமிழர்கள் கொடூரமாக அடக்கப்பட்டுள்ளார்கள். அந்தத் தமிழன் நாமாக இருக்கவில்லை. அதனால் எம்மால் வலிகள் புரிந்து கொள்ள முடியவில்லை.

முள்வேலிக்குள் இருந்தாலென்ன, சிறைகளுக்குள் கிடந்தாலென்ன? அவர்களெல்லாம் நாமா? இல்லையே வேறு யாரோதான். அவர்கள் எப்படிப் போனாலென்ன? நமக்குத் தேவை கோட்பாட்டைக் கட்டிக்காப்பதுதானே. யாருக்குத் தேவை அவைகள் நமக்குத்தானே. அங்கிருப்பவர்கள் எக்கேடாவது கெட்டுப் போகட்டும். நமக்கா வலிக்கப்போகிறது?

இன்னும் சில நாள்களில் சிறையிலிருக்கும் போராளிகளில் முக்கியமானோர் தாயகக் கோட்பாட்டுக்கெதிரான கருத்துக்களை முன்னெடுக்கப் போகிறார்கள். அவர்களையெல்லாம் நாம் எப்படி நோக்கப்போகிறோம்?

நாட்டு பிரச்சனை என்பதும் தாயக விடுதலை என்பதும்................ தூரத்து இடிமுழக்கமாக இருந்தபோது. உங்களால் சுயநிர்யணம் பற்றிபேசவும் தன்மானம்பற்றி கதையளக்கவும் முடிந்து. காரணம் வெடியாக வெடித்துகொண்டிருந்தவர்கள் நீங்களோ உங்கள் குடும்பமோ இல்லைதானே?

இப்போது நாட்டுபிரச்சனை நெருங்கி நெருங்கி உங்கள் வீட்டு காணிக்குள் வந்த பின்தான்.

விட்டுகொடுப்பும் இராஜதந்திர அரசியலும் தேவைபடுகின்றது.

வலிகள் என்பது 83ம் ஆண்டிலிருந்து எங்களோடு ஒட்டிவிட்டது............... அதனாலோ என்னவோ இப்போதுதான் ஏதோ புதிதாக வலிவந்தமாதிரி துடிக்க எங்களால் முடியவில்லை.

இனமானத்தைவிற்று பிழைப்பு நடத்தவும் நாம் தயார் என்று சொல்லுங்கள்................. கூடிபிறந்த சகோதரிகளை கூட்டிகொடுத்தாவது நாம் வாழ துடிக்கிறோம் என்று சொல்லுங்கள்.

அதற்காக உண்மையை கொன்றுவிட்டு இராஜதந்திரம் என்று பூசிமெழுகாதீர்கள். எல்லாம் திறந்துதான் கிடக்கின்றது ............. இனி பூட்டுபோட்டு பூட்ட ஏதும் இல்லை.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

உதத்தாதன் சொல்லுறது உணர்ச்சி அரசியலெண்டு “ தமிழீழம் ” எண்ட பதத்தை வச்சு இவளவுகாலமும் ஓட்டினாக்களால நடந்து முடிஞ்சதுகள பாத்திடீங்களல்லோ! பவரில இருந்துகொண்டு செய்த அநியாயங்களின்ட இறுதி அத்தியாயம்தான் முள்ளிவாய்க்கால். 3 1/2 லச்சத்த இறுதிவரை கொண்டுபோட்டு எங்கள வீதிக்கு இறக்கினது மக்கள காப்பாத்தவோ அல்லது தமிழீழம் கிடைக்கும் எண்ட நம்பிக்கையிலோ இல்ல , தங்களது பவர தக்கவச்சுக்கொள்ள. இப்ப நடக்கிறதும் அதின்ர தொடர்கதைதான் , பத்மினியக்காவோ கஜேந்திரனண்ணையோ இப்ப பேசுறேல்ல , கஜேந்திரகுமார்தான் பேசுறார். தேர்தல் முடிய பாருங்கோ வித்தைய

இதைத் தான் ஆடு நனையுது என்று ஒநாய்[கருணாய்] அழுகுது என்று சொல்வார்களோ ? :rolleyes:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கஜேந்திரன் போன்ற இளைஞர்களை தலைவராக்கினால் வருசப்பிறப்பிற்கிடையில் தமிழீழம் என்கின்றீர்கள்.

இதைத் தான் வீரவசனம் என்பார்கள்

நல்லா வீரவசனம் பேசுகின்றார் அவரை வச்சு படம் தான் எடுக்கலாம்,அரசியலுக்கும் அவருக்கும் வெகுதூரம்.

இப்போது படம் நடித்தவர்கள் தான் தலைவர்கள் பாருங்கோ

உதைத்தான் உங்கள் கூட்டணித்தலைவர்கள் அமிர்தலிங்கம் ஆனந்த சங்கரி முதல் அவர்களின் பாசைறையில் படுத்து வந்த சம்பந்த வேந்தர்கள் காலம் காலமாகச் சொல்லிவருகின்றார்கள் :rolleyes:

கயேந்திரனுக்கு நீங்கள் அரசியல் பாடம் எடுக்கலாமே ?

இந்த கூட்டணிக்கூட்டம் சம்பந்த வேந்தர்கள் தான் அரசியல் சாபக்கேடுகள்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இன்றைய சூழ்நிலை தாயகக் கோட்பாட்டை முன்னெடுத்து செல்வது என்பதைவிட, கொஞ்சம் தணிந்து செயல்பட வேண்டுமென்கிறேன்.

ததேமுண்ணனி கயெந்திரன் தணிந்து போனால் என்ன நன்மை ? அல்லது மறுதலையாக என்ன தீமை வந்து விட்டது ? சம்பந்தர் போல் கைவிட்டு விட்டோம் என்று அறிவிக்க வேண்டும் என்கிறீர்களா ?

சம்பந்தர் எப்போதே கைவிட்டவர் தானே சொல்லப்போனால் :)அவர் அதைக் கையில் எடுக்கவே இல்லையே கைவிடுவதற்கு ஆனால் அதை உலக ஊடகங்கள் உச்சரிக்கின்றன

ஆக கனவிலும் தமிழர்கள் தனிநாடு என்று உச்சரிக்கக் கூடாது என்று உலகம் உன்னிப்பாக இருக்கின்றது சரி இந்த உலகத்தால் ஒரு சொதி கூட தமிழர்களுக்கு கொடுப்பதற்கு இவர்களிடம் இல்லையே

:rolleyes:தமிழர்கள் கோவனத்துடன் தான் இப்போது இருக்கின்றார்கள் அதையும் உடுக்கவேண்டாம் என்று சொல்ல வருகின்றீர்களா ?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள்

தங்களது புதுக்கண்டுபிடிப்பு பற்றி விளக்கம் அபாரம்

என்ன கண்ணாடி வீட்டுக்குள் நின்று கல் எறியும்வேலைதான்

கொஞ்சம் பார்த்து எறியுங்கள்

எறிந்த கல் திரும்பிவராது

அடுத்தவனுக்கு அது பலம்சேர்க்கும்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இறைவன்,

நான் எழுதியவற்றைக் கவனமாகப் படிக்கவும், நான் தனி நாடு பற்றியோ தமிழீழம் பற்றியோ எழுதவில்லை.தமிழருக்கென வட கிழக்கில் இருக்கும் தாயகம் பற்றியே பேசுகிறேன்.தாயகக் கோட்பாடு என்பது ஒரு குறிப்பிட்ட இனத்துவ சமூகத்துக்கு அதன் பரம்பரையான வாழ்விடம் ஒன்று இருக்கிறது என்பதை ஒத்துக் கொள்வது.தமிழருக்கான தீர்வுகள் என்று பேசும் போது தாயகம் ஒன்று இருக்கிறது என்று சொல்வதன் மூலம் வடகிழக்குக்கு தமிழர்களது பூர்வீக பூமி என்பதுவும் அதில் ஆழுகை செய்வதற்க்கு அவர்களுக்கு சகல உரிமைகளும் இருக்கின்றன என்பதுவும் அதில் இருந்து பிறக்கும் முடிவுகள்.இதன் அடிப்படியிலையே த தே ம முன்னணி இரண்டு தேசங்கள் ஒரு நாடு என்னும் கோட்பாட்டை முன் வைக்கிறது.இங்கே இரண்டு தேசங்களும் அதன் அதன் பூர்வீக நிலங்களில் இறமை கொண்டவையாகவும் சம உரிமைகளை உடையனவாகவும் இருக்கும்.த தே கூட்டமைவு ஏற்றுக் கொண்ட வரபை ஆளமாக வாசித்துப் பாருங்கள்.அதில் சிறிலங்கா அதிபருக்கு விசேட அதிகாரங்களும் மத்திய அரசுக்கு விசேட அதிகாரங்களும் இருக்கும்.இதில் சட்டவாக்க அதிகாரம் பிரதேச சபையை கலைக்கும் அதிகாராம் என பல விசேட அதிகாரங்கள் இருக்கின்றன.இதில் இருந்து தெரியவருவது என்ன.தமிழருக்கு என விசேடமான உரிதுரிமைகள் அவர்களின் பூர்வீக பூமியில் அவர்களுக்குக் கிடையாது.தமிழர்களுக்கு சிறிலங்கா பாராளுமன்றத்தின் இறமையின் கீழ் சில அதிகாரங்கள் பரவலாக்கல் மூலம் வழங்க்கப்படுகின்றன என்பதே.இது நிச்ச்யமாகா தமிழர்களுக்கு ஒரு தாயகம் இருக்கிறது என்பதையோ அதில் அவர்களுக்கு இறமை இருக்கிறது என்பதன் அடிப்படையிலோ அமையப் பற்ற வரைபு அல்ல.

அடுததாக இந்த வரைபு சிறிலங்கா அரசால் ஏற்றுக் கொள்ளபடுகிறது என்று வைதுக் கொள்வோம். நடைமுறையில் அது எவ்வாறு செயற்படும்.அதி உயர் பாதுகாப்பு வலயம் என்னும் பெயரில் ஏற்படுதப்படிருக்கும் சிங்களக் குடியேற்றங்கள் நிரந்தரமாக்கடும்.தமிழரின் தாயக பூமியின் தொடர்பை அறுக்கும் வண்ணம் முகியமான கேந்திர இடங்களில் இவை அமைக்கப்படும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது தமிழர்களால் முன்வைக்கப்பட்ட ஒரு திட்ட வரைபு, அதனையே சிறிலங்கா அரசு ஏற்றுக் கொண்டது.இதில் இருந்து தமிழர்கள் எங்கனம் பின் வாங்கமுடியும்.இப்போது எதையாவது பெற்றுக் கொண்டு பின்னர் பார்க்கலாம் என்று சொல்பவர்கள், எவ்வாறு பின்னர் இதனை மாற்ருவார்கள் என்று அவர்களிடம் எதாவது திட்டம் இருக்கிறதா? அவர்களிடம் என்ன பலம் இருக்கிறது என்று இவ்வாறு கூறுகிறார்கள்.இன்று தமிழருக்கான ஒரு தீர்வு அவசியம் என்னும் நிலைப்பாடு அனேகமான சர்வதேசமெங்கும் சொல்லப்படும் நிலையில் நாங்கள் ஒன்றையும் சரியாகச் சிந்திக்காமால் செயற்பட்டு, இந்தியா சொல்கிறது என்பட்தற்காக எமது நீண்ட கால நலனைக் கருத்தில் கொள்லாமல் அறிவிலிகளாகச் செயற்படப் போகிறோமா?.அல்லது சிங்களப் பேரின்வாத்தின் திட்டங்களை, பிராந்திய ஏகாதிபதியத்தின் திட்டங்களை அதனை முன் நிறுதும் இந்திய ஆளும் வர்க்கத்தின் நோக்கங்களைக் கருத்தில் கொண்டு, எமக்குச் சாதகமாக இருக்கும் சர்வதேச நிலைகளைப் பயன் படுத்தப் போகிறோமா? எது புத்தியான செயற்பாடு?

வீடு கட்டுவதற்க்கு உறுதியான அதிவாரம் அவசியம்.தாயகக் கோட்பாடு என்பது அத்திவாரம்.உறுதியான அத்திவாரத்தை இடுவதன் மூலம் நாம் இப்போது ஒரு சிறிய குடிலைக் கட்டினாலும் பின்னர் அதனை மாற்றிக் கட்டலாம். நாம் தமிழருக்கான நிரந்தரச் சிறைக்கான அதிவாரத்தைப் போட்டு விட்டு அதில் இருந்து எக்காலத்திலும் ஒரு வீட்டைக் கட்ட முடியாது.உறுதியன அத்திவாரம் இல்லாத எந்த வீடும் பொல பொல என உடைந்து விடும், தமிழர்சுக் கட்சியின் வீட்டுக்கும் அது தான் நடக்கப் போகிறது.அது இந்தத் தெர்தலாக இல்லாமல் போகலாம் ஆனால் அத்திவாரம் இல்லாத இவர்களின் வீடு ஒரு நாள் உடையத் தான் போகிறது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

குழந்தைப் பிள்ளைகள் இங்கு பலர் விளக்கம் எழுதுகின்றார்கள்.ஏதோ கொள்கை அடிப்படையில் தான் டீ.என் ஏ இற்குள் பிளவு வந்த மாதிரி.எல்லோருமே சீட்டிற்குதான் அடிபடுகின்றார்கள்.கஜேந்திரனுக்கு சீட் கிடைத்திருந்தால் இப்ப குமாரும்,பத்மினியும் அவருக்கு துரோகிகள் ஆகியிருப்பார்கள்.இது கஜேந்திரனுக்கு மட்டுமல்ல முழுத்தமிழ் எம்.பீ மாருக்கும் பொருந்தும்.டீ.என்.ஏ உடையக்கூடாது என்று நான் சொல்வதற்குக் காரணம் உலகமே எங்களை பார்த்து சிரிக்கின்றது.சிங்களம் சிரியோ சிரியென சிரிக்குது.எங்களுக்குள் எவ்வளவு பிரிவு இருந்தாலும் இதுவல்ல நேரம் எமது பிளவை வெளிக்காட்ட.

வீட்டிற்குள் எவ்வளவு சண்டை பிடித்தாலும் போகுமிடத்தில் ஒற்றுமை மாதிரி காண்பிக்க வேண்டியது மாதிரித்தான் இதுவும்.

நடுச் சந்தியில் வந்து நின்று சண்டை பிடித்து தாங்களும் நாறி புலம் பெயர்ந்த தமிழரையும் நாறடிக்கின்றார்கள்

உண்மையில் இவர்கள் ஒருவருமே சுத்தமானவர்களல்ல,தமிழரின் உரிமைக்காக தம்மை அர்ப்பணித்து உழைப்பவர்களுமல்ல.இதில் எவருமே விலை போகக் கூடியவர்கள்.நாட்டை விட்டு ஓடிவந்த நாம் நடப்பதை பார்த்துக்கொண்டுதான் இருக்கமுடியும்.அதுதான் முடிந்த அளவு ஒற்றுமையாக இருங்கள் என்று கேட்டுக்கொள்கின்றோமே தவிர இவர்கள் நல்லவர்கள் என்று நாம் நம்பவில்லை.

தேர்தல் முடிய 3,4 ஆண்டுகள் செல்ல ஒரு நல்ல தலைமையில் ஒரு அமைப்பு உருவாகும் என நம்புகின்றேன் அவர்களுக்கு புலம் பெயர்ந்தோரின் ஆதரவும் கிடைக்கும் என நம்புவோம்.

இந்த கிறுக்கர்களும் புலம் பெயர்ந்த லூஸுகளும் காலப் போக்கில் மறையப் போவது நிட்சயம்

Link to post
Share on other sites

.டீ.என்.ஏ உடையக்கூடாது என்று நான் சொல்வதற்குக் காரணம் உலகமே எங்களை பார்த்து சிரிக்கின்றது.சிங்களம் சிரியோ சிரியென சிரிக்குது.எங்களுக்குள் எவ்வளவு பிரிவு இருந்தாலும் இதுவல்ல நேரம் எமது பிளவை வெளிக்காட்ட.

புலிகளின் இருந்து பிரிந்து போனவர்களை ஆதரித்து கருத்து எழுதினீர்களே... அது என்ன ஆச்சு...?? அப்போ சிங்களமும் உலகமும் உங்களை பாத்து சிரிச்சதாக அறியவில்லையோ...???

Link to post
Share on other sites

நாட்டு பிரச்சனை என்பதும் தாயக விடுதலை என்பதும்................ தூரத்து இடிமுழக்கமாக இருந்தபோது. உங்களால் சுயநிர்யணம் பற்றிபேசவும் தன்மானம்பற்றி கதையளக்கவும் முடிந்து. காரணம் வெடியாக வெடித்துகொண்டிருந்தவர்கள் நீங்களோ உங்கள் குடும்பமோ இல்லைதானே?

இப்போது நாட்டுபிரச்சனை நெருங்கி நெருங்கி உங்கள் வீட்டு காணிக்குள் வந்த பின்தான்.

விட்டுகொடுப்பும் இராஜதந்திர அரசியலும் தேவைபடுகின்றது.

வலிகள் என்பது 83ம் ஆண்டிலிருந்து எங்களோடு ஒட்டிவிட்டது............... அதனாலோ என்னவோ இப்போதுதான் ஏதோ புதிதாக வலிவந்தமாதிரி துடிக்க எங்களால் முடியவில்லை.

இனமானத்தைவிற்று பிழைப்பு நடத்தவும் நாம் தயார் என்று சொல்லுங்கள்................. கூடிபிறந்த சகோதரிகளை கூட்டிகொடுத்தாவது நாம் வாழ துடிக்கிறோம் என்று சொல்லுங்கள்.

அதற்காக உண்மையை கொன்றுவிட்டு இராஜதந்திரம் என்று பூசிமெழுகாதீர்கள். எல்லாம் திறந்துதான் கிடக்கின்றது ............. இனி பூட்டுபோட்டு பூட்ட ஏதும் இல்லை.

வெடித்தவர்கள் நாமா? நாமெல்லாம் இங்கு சுகமாக அல்லவா இருக்கிறோம். நேரத்திற்கு நேரம் போட்டுக் கொள்கிறோம். கூடுமிடங்களில் அரசியல் பேசிக் கொள்கிறோம். இப்படியெல்லாம் வாழ்ந்து கொண்டு மானம்பற்றியும் பேசுகிறோம். வருந்தும் தாயகத்தில் வாழும் தமிழனைவிடவும், அவர்களை அதிலிருந்து மீட்பதைவிடவும் வேறெதுவும் பெரிதாகத் தெரியவில்லை.

தாயகத்தில் வாழும் தமிழர்கள் தங்களைத்தாங்களே இந்தத் துன்பத்திலிருந்து மீட்டுக் கொள்வதற்குத் தாயகக் கோட்பாட்டை கொஞ்சம் தூரத்தில் வைத்தால் அதை நான் ஏற்றுக் கொள்வேள். நீங்களும் உங்கள் குடும்பமும் சொகுசாகப் போராடுங்கள்.

இப்போது இனமானம் காக்கத் துணிந்த நீங்கள் அன்று களத்தில் நின்றிருக்க வேண்டும். அங்கே வாழ்ந்த மக்களோடு துயரைப் பகிர்ந்திருக்க வேண்டும். மானமழிந்த பெண்களின் அவலக் குரல்களைக் காதில் வாங்கியிருக்க வேண்டும். இதில் எதுவுமில்லையே. நாமெல்லாம் சொகுசு போராட்ட வீரர்களில்லையா?

இன்றும் கூட கதியிழந்த தமிழரைப்பார்த்து கொள்கைப்படி நட, போராடு, மடிந்துபோ என்கிறோமே எவ்வளவு சுயநலம் நமக்கு. என்னோடு ஒட்டிய சோகத்திற்கு நாமல்லவா போராடியிருக்கவேண்டும். இங்குவந்ததே நாம் தாயகத்தில் போராட்டத்தை முன்னெடுப்பதற்கென்றுதான் நினைக்கின்றேன்.

வெடியாய் வெடித்தவர்கள் நாமில்லை. வெடிசுமந்தவர்களின் ஏழைக் குடும்பங்கள் நாமில்லையே. அவர்கள் வாழும் நிலையும் நமது மண்டு மூளைக்குப் புரிவதில்லை. ஏனென்றால் அவர்கள் நாமில்லை. அவர்கள் போராட வேண்டும். மானத்தை இழக்க வேண்டும். வேறுவழிகள் பற்றிச் சிந்திக்கவே கூடாது. இவையெல்லாவற்றையும் இங்கிருந்து நாங்களே தீர்மானிப்போம்.

ஏனென்றால் 83 ஆம் சோகங்கள் ஒட்டிக் கொண்டதால் நாமிங்கு வந்துவிட்டோம்.

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • நன்றி பகிர்வுக்கு, இனிய புத்தாண்டு வாழ்த்துகள் உங்களுக்கு
  • தமிழ் புதுவருட வாழ்த்துக்கள் கூறிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்    24 Views அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தமிழ், கேரளா, பெங்காலி, நேபாளி உள்ளிட்ட பல்வேறு தரப்பு மக்களுக்கு புதுவருட வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். உலக முழுவதும் உள்ள தமிழர்கள், தமிழ் புதுவருடம்  இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புதுவருடம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.   இது தொடர்பாக அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், வைஷாகி, நவராத்திரி, சாங்ரன் மற்றும் வரும் வாரத்தில் புதுவருடம் கொண்டாடும் தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய சமூக மக்களுக்கு நானும் ஜுல்லும் (பைடனின் மனைவி) வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். இனிய பெங்காலி, கம்போடியன், லியோ, மியான்மரிஸ், நேபாளி, சின்ஹலிசி, தமிழ், தாய் (தாய்லாந்து), விஷூ புதுவருட வாழ்த்துக்கள்’ என தெரிவித்துள்ளார்.   https://www.ilakku.org/?p=47311
  • வெளிநாடு, பணம் இருக்கிறது,   என்று சொல்லி இவற்றை (கை விசேடம் ..)  கைவிடாதீர்கள். ஈழத்தமிழரின் தேசத்தின் முக்கிய  அடையாளம்.
  • இலங்கையில் 11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை விதிப்பு: அரசு அதிகாரபூர்வமாக அறிவிப்பு    20 Views இலங்கை அரசு 11 இஸ்லாமிய அமைப்புகளை தடைசெய்வதாக தெரிவித்து, வர்த்தமானி அறிவித்தல் ஒன்றினை நேற்று புதன்கிழமை, ஏப்ரல் 13 நள்ளிரவு வெளியிட்டுள்ளது. குறித்த அமைப்புகளை தடைசெய்வதற்கான அனுமதியினை சட்ட மா அதிபர் கடந்த வாரம் வழங்கியிருந்த நிலையிலேயே, தற்போது அந்த அமைப்புகளை தடைசெய்யும் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் வெளியாகியுள்ளது. 1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ், 11 அமைப்புகளும் தடைசெய்யப்படுவதாக, அந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. தடை விதிக்கப்பட்டுள்ள அமைப்புகள் 1. ஐக்கிய தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (UTJ) 2. சிலோன் தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (CTJ) 3. சிறீலங்கா தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (SLTJ) 4. அகில இலங்கை தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (ACTJ) 5. ஜம்மியதுல் அன்ஸாரி சுன்னதுல் மொஹமதியா (JASM) மறுபெயர் ஜம்மாஅத் அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹமதியா ஒழுங்கமைப்பு மறுபெயர் அகில இலங்கை ஜம் – ஈ – அது அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹம்மதியா மறுபெயர் அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹம்மதியா கழகம் மறுபெயர் ஜமாஅத் அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹம்மதியா 6. தாறுல் அதர் மறுபெயர் ஜாமிஉல் அதர் பள்ளிவாசல் மறுபெயர் தாறுல் அதர் குரான் மத்ரச மறுபெயர் தாறுல் அதர் அத்தபாவிய்யா 7. சிறீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் (SLISM) மறுபெயர் ஜம்இய்யா 8. இராக் மற்றும் சிரியா இஸ்லாமிய அரசு (ISIS) மறுபெயர் அல் – தௌலா அல் – இஸ்லாமியா தௌலா இஸ்லாமியா 9. அல்கய்தா அமைப்பு 10. சேவ் த பேர்ள்ஸ் அமைப்பு மறுபெயர் சேவ் த பேர்ள் சங்கம் 11. சுப்பர் முஸ்லிம் அமைப்பு ஆகியவை நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மூலம் தடைசெய்யப்பட்டுள்ளன. நாட்டின் சமாதானத்தைத் தொடர்வதை உறுதிப்படுத்தும் பொருட்டு நன்நோக்குடனும் தேசிய பாதுகாப்பு, பொதுமக்கள் ஒழுங்கு மற்றும் சட்டவாட்சி என்பவற்றின் நலனிலும் மேற்கொள்ளப்பட்ட இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளை முன்னெடுப்பதில், மேற்படி அமைப்புகள் தடைசெய்யப்படுவதாக அந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2019 ஈஸ்டர் தாக்குதலுக்கு பின் இஸ்லாமியவாத அமைப்புகளை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது.   https://www.ilakku.org/?p=47290  
  • 2021ஆம் ஆண்டு ஐ.நா.மனிதஉரிமைகள் சபைத் தீர்மானப் பலன் – சூ.யோ.பற்றிமாகரன் April 14, 2021     Share      82 Views சிறீலங்காவின் இறைமை இழப்பு பயன்படுத்தி உரிமைபெற ஈழத்தமிழர்க்குப் புதியவழி இது ஈழத்தமிழர்களின் உள்ளக தன்னாட்சியின் மூலம் உலகநாடுகள் அவர்களுக்கான பாதுகாப்பான அமைதியை சிறீலங்காவிடம் பெற்றுக் கொடுக்க இயலாத நிலையின் வெளிப்பாடு. ஆதலால் இது ஈழத்தமிழர்களின் வெளியக தன்னாட்சி உரிமையினை உலகநாடுகள் ஏற்று, அவர்களுக்கான அரசியல் எதிர்காலத்தை அவர்களே அமைத்துக் கொள்வதற்கான அனுமதியை வழங்க வைப்பதற்கான திறவுகோலாக அமைகிறது. இப் பெருங்கலக்கத்தில் சிறீலங்கா உள்நாட்டுத் தூண்டுதல்கள், அயல்நாட்டுத் துணைகள் மூலம் தீர்மானத்தைச் செயலிழக்கவைக்க தனது முயற்சிகளைத் தொடங்கியுள்ளது. இதனை எதிர்த்து தீர்மானத்தை உறுதியாகச் செயற்பட வைக்க வேண்டிய புலம் பதிந்த தமிழர்களோ, தீர்மானம் தமக்கு முழுஅளவில் சாதகமில்லையென விமர்சித்துக் காலத்தை வீணடிக்கின்றனர். இந்த நடைமுறைத் தன்மையை உணர்ந்து ஈழத்தமிழர்கள் தாயகத்திலும், புலத்திலும் சிறீலங்காவிடம் மண்டியிட்டு உரிமை கோரும் அரசியலை விடுத்து, உலகத்திடம் வெளியக தன்னாட்சி உரிமையை ஏற்கக் கோரும் ஒன்றுபட்ட முயற்சிகளை காலதாமதமின்றி வேகப்படுத்த வேண்டும். “2.8 மில்லியன் டொலரைச் செலவழித்து சிறீலங்காவின் முப்படையினரையும் கைது செய்து சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தும் செயல், இலங்கையில் மனித உரிமை மீறல்கள் நடைபெறும் என ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமை ஆணையகம் கருதுகிறது. சிறீலங்காவிற்கான சட்டங்களை உருவாக்குவது, அரசியல் அமைப்பில் மாற்றங்களைக் கோருவது முப்படையினரதும் நியமனங்களை விமர்சிப்பதன் மூலம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை இலங்கையின் உள்விவகாரத்தில் தலையிடுகிறது. இதனை அனுமதிக்க வேண்டுமா? இது குறித்து நாடாளுமன்றத்தின் பங்களிப்பு என்ன? இவைகளைப் பொதுமக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்” என சிங்கள மக்களிடம் ஐக்கியநாடுகள் சபையின் தீர்மானத்தை இலங்கைக்கு எதிரான தீர்மானமாக மடைமாற்றுச் செய்து காட்டி பௌத்த சிங்கள பேரினவாதத்தைத் தூண்டி அதன்வழி கட்சி பேதமற்ற முறையில் தீர்மானத்திற்கு எதிரான சிங்கள பௌத்த நிறவெறியைக் கட்டியெழுப்பும் பேருரையைச் சிறீலங்காவின் கல்வி அமைச்சரும் சட்டத்துறைப் பேராசிரியருமான ஜி. எல். பீரிஸ் சிங்கள பௌத்தத்தின் வரலாற்றுச் சின்னமாக விளங்கும் கண்டியில் வைத்து நிகழ்த்தியுள்ளார். சட்டரீதியாக அனைத்துலக சட்டங்களுக்கு எதிராகக் குற்றமிழைத்தவர்களை சிங்கள மக்கள் சக்தியைக் கொண்டும், பாராளுமன்ற சட்டவாக்க அதிகாரத்தைப் பயன்படுத்தியும் பாதுகாப்பதற்கான சூழ்ச்சியாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் தீர்மானத்தை, இவ்வகையில் சிறீலங்காவின் கல்வி அமைச்சர் திரிபுவாதம் செய்துள்ளார். கூடவே இது குறித்து நாடாளுமன்றத்தின் பங்களிப்பு என்னவெனக் கேள்வியும் எழுப்பிப் பாராளுமன்றத்தின் சட்டவாக்க அதிகாரத்தைப் பயன்படுத்தி தீர்மானத்தினை சிறீலங்காவின் ஆதிபத்திய இறைமையுள்ள இலங்கைக்குள் நடைமுறைப்படுத்தப்படாது தடுக்கக் கூடிய வகையில் அரச அதிபருக்கு அரசியலமைப்பால் அளிக்கப்பட்டுள்ள தண்டனை விலக்குப் பாதுகாப்பை படையினருக்கும் வழங்குவதற்கு புதிய அரசியலமைப்பு ஆவன செய்ய வேண்டும் என்னும் அரசகொள்கை உருவாக்கத் திட்டத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஏனெனில் ஐ.நா. தீர்மானத்தின்படி இனஅழிப்புச் செய்த தனி ஆட்கள் மேலேயே அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற விசாரணை நெறிப்படுத்தப்படும். ஆகவே தங்களது படையினரைப் பாதுகாக்க ஜி எல். பீரிஸ் படையினருக்கும் தண்டனை விலக்களிக்கும் முறைமையை அரசியலமைப்புச் சட்டமாக்க முயல்கின்றார். மேலும் மனித உரிமைகள் ஒழுங்காற்றலுக்கான நெறிப்படுத்தலை சிறீலங்காவின் இறைமையுள் தலையிடுவதாக மடைமாற்றம் செய்து, அதன்வழியாக ஐக்கியநாடுகள் சபை ஒரு நாட்டின் இறைமைக்குள் தலையீடு செய்யக் கூடாதென்ற இறைமைப் பாதுகாப்பு விலக்கை சிறீலங்காவுக்குச் சாதகமாகப் பயன்படுத்தவும் சட்டத்துறைப் பேராசிரியரான ஜி.எல். பீரிஸ் முயற்சிக்கின்றார். இதன்வழி சிறீலங்கா மனித உரிமை வன்முறைகள் மீறல்கள், யுத்தக்குற்றங்கள், மனிதாயத்திற்கு எதிரான குற்றங்கள், இனஅழிப்பு என்பவற்றையயே தனது அரசியல் நோக்காகவும், நிர்வாகப் போக்காகவும்,  சட்ட அமுலாக்கச் செயலாகவும் கொண்டு செயற்பட்டுத்  தானே தனது இறைமையை இழக்க வைத்துள்ளது என்ற உண்மையை முழுப்பூசணிக்காயைச் சோற்றுக்குள் புதைப்பது போல ஜி. எல். பீரிஸ் அவர்கள் சிங்களப் பேரினவாதம் என்னும் தனக்கு உணவளிக்கும் சோற்றுக்குள் புதைத்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபை இறைமை இழப்பை ஏற்படுத்தி வருவதாகக் குற்றம்சாட்ட முற்பட்டுள்ளார். சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சோ கலக்கத்தில் ஒருபடி மேலே போய்,  ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் சபைத் தீர்மானத்தை நிறவெறியாகவும், ஆசிய ஊடுருவலாகவும் காட்டி ஈழத்தமிழர்களின் மனித உரிமைப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளைப் பகிரங்கமாகக் கொச்சைப்படுத்தி வருகின்றது. “வெள்ளையினத்தவர்கள் வாழும் 35 நாடுகளை ஒன்றிணைத்து குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர். இந்தியாவின் பிரதிநிதி நாடுகளை இலக்கு வைக்கும் தீர்மானமென இதனைத் தெரிவித்து வாக்கெடுப்பைத் தவிர்த்துக் கொண்டார்” என்னும் சிறீலங்காவின் வெளிவிவகாரச் செயலாளர் ஜயநாத் கொலம்பகேயின் யேர்மன் தொலைக்காட்சிக்கான செவ்விப் பேச்சு இதனைத் தெளிவுபடுத்தியுள்ளது. ஒரு நாட்டின் பொறுப்புமிகு பதவியில் உள்ளவர் வெள்ளையின முயற்சி எனப் பச்சை நிறவாதத்தைக் கக்கி, ஆசிய மேற்குலகப் பகைமையை உருவாக்கி உலகின் பாதுகாப்புக்கும், அமைதிக்கும் ஊறுவிளைவிக்க – வளர்க்க முயற்சிப்பதை உலகு கூர்மையாக அவதானிக்கிறது. அதேவேளை பௌத்த சிங்கள நாட்டை வெள்ளையர்கள் நடத்த முற்படுகிறார்கள் என்ற சிங்கள பௌத்த இனவெறியைச் சிங்களர்களிடை தூண்டி, தீர்மானத்தின் நடைமுறைச் செயலாக்கத் திறனை இலங்கைக்குள் தடுக்க முயற்சிக்கும் இக்கூற்றுக்கள் எந்த அளவுக்குச் சிறீலங்கா ஐ.நா. தீர்மானத்தால் கலங்கிப் போயுள்ளது என்பதை உலகுக்குப் படம்பிடித்துக் காட்டுகிறது. அதேவேளை ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியப் பிரதிநிதி நாடுகளை இலக்கு வைக்கும் தீர்மானம் எனக் கூறியிருப்பதாக ஜயநாத் கொலம்பேயின் கூற்று ஐக்கிய நாடுகள் சபைத் தீர்மானத்தை ஆசிய நாடுகளாக உள்ள இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஸ், யப்பான், இரஸ்யா, சீனா போன்றனவும் மற்றும் சில ஆபிரிக்க நாடுகளும் ஏன் எதிர்த்தும், நடுநிலையாக வாக்களிக்காமல் விட்டும் எதிர் கொண்டன என்பதற்கான அவரின் விளக்கமாக அமைகிறது. இந்த விளக்கத்தின் மூலம் ஆசிய, ஆபிரிக்க நாடுகளைத் தன் சிங்கள பௌத்த பேரினவாதக் கோட்டையின் முன்னரங்கக் காவற்காரர்களாக வைத்துத், தங்களின் ஈழத்தமிழினத்தின் மீதான இனஅழிப்பை முன்னெடுப்பதே இதன் பின்னணியாக உள்ளது. உண்மையில் இங்குதான் உலகத் தமிழர்கள் இந்தியா உட்பட்ட ஆசிய நாடுகளுடனும், ஆபிரிக்க நாடுகளுடனும் சரியான முறையில் ஈழத்தமிழர்கள் இனங்காணக் கூடிய அச்சத்திற்குள் சிறீலங்காவால் நாளாந்த வாழ்வில் வாழவைக்கப்பட்டு, உயிருக்கும், உடைமைகளுக்கும், நாளாந்த வாழ்வுக்கும்  பாதுகாப்பு ஏதுமற்ற முறையில் வாழ்ந்து வரும் அவல வாழ்வை வெளிப்படுத்தத் தவறியதன் விளைவாகவே இனஅழிப்புக்குள்ளாகும் மக்களை இந்நாடுகள் தங்கள் நாடுகளின் பாதுகாப்புக்குள் மேற்குலகத் தலையீட்டிற்கான வழியாக அமைந்து விடும் என அச்சப்படுகின்றன என்கிற உண்மை தெளிவாகிறது. அத்துடன் சிறீலங்கா செய்தது போன்ற மனிதத்துவத்தையே தலைகுனிய வைக்கும் செயற்பாடுகளை எந்த நாடு செய்தாலும் அதன் விளைவை அவர்கள் அனுபவிக்க வேண்டி வருமே தவிர, ஈழமக்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான முயற்சி எவ்வாறு அந்த நாடுகளை இலக்காக்கும் எனக் கூற முடியுமென்ற கேள்வியை உலகத் தமிழர்கள் இந்த நாடுகளிடம் சரியான முறையில் முன்வைக்கத் தவறிவிட்டனர் என்பதே உண்மை. இதனை உணர்ந்து உலகெங்கும் வாழும் ஈழத்தமிழர்கள் ஆசிய, ஆபிரிக்க நாடுகளுக்கு ஈழத்தமிழர் பிரச்சினையில் அவர்களின் அச்சங்களைச் சந்தேகங்களைப் போக்கக் கூடிய வகையில் இந்நாடுகளுடன் தோழமையை வளர்க்கக் கூடிய ஓரு உயராய்வு மையத்தை நிறுவ வேண்டிய காலமாக இது உள்ளது. அதேவேளை  உள்நாட்டு மனித உரிமைப் பிரச்சினைகளுள் அனைத்துலகத் தலையீட்டை விரும்பாத இந்தியாவின் போக்குத்தான் ஈழத்தமிழர்களின்  பிரச்சினையை மனித உரிமை மீறல் விசாரணையாக அனைத்துலக நாடுகளால் முன்னெடுக்க விடாது, தமிழரின் அரசியல் பிரச்சினையாக அதனை வெளிப்படுத்தி, இதற்கு அரசியல் தீர்வு காணப்பட்டாலே மனித உரிமைகள் ஒழுங்காற்றப்படுமென்னும் தனது கொள்கையை வெளியிட வைத்துள்ளது.  இதன்வழி ஈழத்தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டிய சிறீலங்காவின் பொறுப்புத் தான் இந்தியப் பிரதிநிதியின் பேச்சில் முதன்மைப்படுத்தப்பட்டது. தமிழர்களைச் சமத்துவமும் கண்ணியமுமாக வாழ வைத்தல் என்பதை முதலிலும்  சிறீலங்காவின் ஒருமைப்பாட்டையும் இறைமையையும் பேண உதவுதல் என்பதை அடுத்தும் எடுத்துக்கூறி இவ்இருதளப் பொறுப்புக்கள் தங்களுக்கு உண்டெனவே இந்தியப்பிரதிநிதி ஐக்கிய நாடுகள் சபையில் விளக்கம் அளித்தார். ஆனால் சிறீலங்கா தனக்களிக்கப்பட்ட, தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணுங்கள் என்பதே, இந்தியா சிறீலங்காவின் இறைமையையும், ஒருமைப்பாட்டையும் பேணுவதற்கான உதவிக்கான முன்நிபந்தனை என்பதை கவனத்தில் கொள்ளாது, இந்தியா வெறுமனே தன்னை ஆதரிப்பதாக உலகிற்குக் காட்ட முற்படுவதை ஜயநாத் கொலம்பகேயின் கூற்றுக்கள் நிரூபிக்கின்றன. சிறீலங்காவின் இந்த இலங்கைத்தீவின் இன்றைய அரசு என்ற பதவி வழி அதிகாரப்போக்கை ஈழத்தமிழர்களுக்கு எதிராகப் பயன்படுத்தும் நிலையை மாற்றி, ஈழத்தமிழர்களின் இலங்கைத்தீவில் உள்ள சமவலுத்தன்மையை உலகறிய வைப்பதாயின், ஈழத்தமிழர்கள் ஆசிய ஆபிரிக்க நாடுகளுடன் தங்களுக்கு தாங்கள் ஆசியாவின் தொன்மையும் தொடர்ச்சியுமான குடிகள் என்ற வகையில் அமைந்துள்ள வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலான பண்பாட்டு வர்த்தகத் தொடர்புகளை மீள்வாசிப்புச் செய்து கட்டி எழுப்பி,  அவர்களுக்கு ஈழத்தமிழர்களின் கோரிக்கை அவர்களின் வரலாற்றுத் தாயகத்தில் அவர்கள் தாயக தேசிய தன்னாட்சி உரிமைகளுடன் வாழ்வதற்கான அவர்களின் தேசிய விடுதலைப் போராட்டமே தவிர, இவர்களுக்கு இந்தச் சூழ்நிலையின் அடிப்படையில் அனைத்துலக மட்டத்தில் எடுக்கப்படும் எந்த முடிவுகளும் இந்த ஆசிய ஆபிரிக்க நாடுகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்பட இடமளிக்காது என்பதை உறுதி செய்ய வேண்டும். ஈழத்தமிழர் இந்தியா உட்பட ஆசிய, ஆபிரிக்க மக்களுடனான தங்கள் உறவாடல்களையும், உரையாடல்களையும் வளர்க்கக் கூடிய பண்பாட்டுப் பேரவைகளை உருவாக்கல், எல்லா மக்களும் ஒருங்கிணைந்து அவரவர்களின் சமூக, பொருளாதார, அரசியல், ஆன்மிக வளர்ச்சிகளை வேகப்பட வைக்கக் கூடிய கலைத்துவ பண்பாட்டு ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும். இதுவே ஈழத்தமிழர்களின் தாயகத்தின் கரையாக நீண்டு கிடக்கும் இந்துமா கடல் பிரதேசத்தையும் அமைதிப்பகுதியாக உலகில் நிலைநிறுத்த உதவும். இவை எல்லாமே ஈழத்தமிழர்களின் வெளியக தன்னாட்சியை இந்நாடுகளும் தங்களது கட்டமைப்புக்களுக்கு ஊறுவிளைவிக்காது என்ற நிலையில் ஏற்பதிலேயே வளமும் பலமும் பெறும். இந்தப் பெரும் தாயகக் கடமையை இன்றைய காலத்தில் நடைமுறைப்படுத்த வேண்டிய பெரும் பொறுப்பில் உள்ள ஈழத்தமிழினத்தின் உலகப் பரம்பலாக உள்ள புலம்பதிந்த தமிழர்கள், இதனை எதிர்த்து தீர்மானத்தை உறுதியாகச் செயற்பட வைக்க வேண்டிய புலம் பதிந்த தமிழர்களோ, தீர்மானம் தமக்கு முழுஅளவில் சாதகமில்லையென விமர்சித்துக் காலத்தை வீணடிக்கின்றனர். இதனை விடுத்து எந்த நாடாயினும் தனது சந்தை இராணுவ நலன்களின் பின்னணியிலேயே எந்தப் பிரச்சினையையும் அணுகும் என்னும் நடைமுறைத் தன்மையை உணர்ந்து, இந்தச் சூழலுள் எமக்கான ஆதரவாக அவர்களை எவ்வாறு செயற்பட வைப்பது என்ற தந்திரோபாய அணுகுமுறைகளை புலம்பதிந்த தமிழர்கள் அந்த அந்த நாட்டுச் சட்டங்கள் ஒழுங்குகள் முறைமைகளுக்குள் எடுக்க வேண்டும். இவ்விடத்தில் ஈழத்தமிழர்கள் தாங்கள் தங்களுக்குத் தன்னாட்சி உரிமையுண்டு என்றாலே மற்றவர்களும் அதுகுறித்துச் சிந்திப்பர். எனவே ஈழத்தமிழர்கள் தாயகத்திலும் புலத்திலும் சிறீலங்காவிடம் மண்டியிட்டு உரிமை கோரும் அரசியலை விடுத்து, உலகத்திடம் வெளியக தன்னாட்சி உரிமை தங்களுக்கு இருக்கும் இயல்புநிலையை விளக்கி அந்த தன்னாட்சி உரிமையின் உள்ளகத் தன்னாட்சியை சிறீலங்கா மறுத்து அதனை உலகநாடுகளும் அமைப்புக்களும் பெற்றுத்தர இயலாதநிலையில், வெளியக தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் தங்களுக்கான அரசியல் எதிர்காலத்தைத் தாங்களே நிர்ணயிக்கக் கூடிய அனைத்துலக சட்டங்கள், ஒழுங்குகளின் வழி தங்களுடைய சனநாயக உரிமையை நல்லாட்சியை வளர்ச்சியை ஏற்படுத்த உதவக் கோரும் ஒன்றுபட்ட முயற்சிகளை காலதாமதமின்றி வேகப்படுத்த வேண்டும். இதுவே ஈழத்தமிழர்களின் உரிமைகள் மீளவும் நிலைபெறுவதற்கான ஒரே வழியாக இன்று உள்ளது. சூ.யோ. பற்றிமாகரன்: BA (Political Science), Special Dip. (Politics & Economics), BSc (Politics), MA (Politics of Democracy).     https://www.ilakku.org/?p=47289  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.