Jump to content

தமிழர்கள் தனித் தாயகக் கோரிக்கையைக் கைவிட்டனர் -பி பி சி

Recommended Posts

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

பவர் இருக்கேக்க தானே சனம் நிம்மதியா இருந்தம் எண்டு சொல்லுது? பவர் இல்லாம உலகத்தில எங்கை யாவது அரசு எண்டது இருக்கா? உயிரைக் கொடுத்துப் போராடினவங்கள்,உயிர் இல்லாம பவரை வச்சு என்ன நாக்கு வழிக்கிறதோ? பவர் தான் நோக்கம் எண்டா எண்டைக்கோ நாக்காலி கிடைச்சிருக்கும் இந்தியாவின்ர தயவில.டக்கிளசு,பெருமாள் முதல் கருணா வரை மேனி நோகாம உயிர் போகாம லேசா பவர் எடுக்கிற வழி இருக்கேக்க ஏன் உயிரைக் கொடுத்து இல்லாமப் போவான். இப்படிச் சின்ன விசயம் கூடத் தெரியாத நீங்கள் எந்த நேசறிக்கிப் போனணியள்? பவரோட இப்ப ஒருத்தரும் இல்லைத் தானே அப்ப ஏன் இன்னும் உங்கட மகிந்த ராசா சனத்தை சிறைக்குள்ள வச்சு ஊரெல்லாம் பாதுகாப்பு வலயம் அமைச்சு இருக்கிறார்? சனத்தை விட்டா திருப்பித் தங்கட பவரைக் காட்டிப் போடும் எண்டு பயமே.சனத்தை அடக்கி ஆள நினைச்சா சனம் தங்கட பவரைக் காட்டும் தானே.சிறிலஙாவின்ற சரித்திரம் உங்களுக்கு வடிவாத் தெரியாது போல.இப்ப மில்லி பாண்டிட்ட கேட்டாலும் உங்களுக்கு விவரமாச் சொல்லுவார்.அந்தளுவுக்கு உலகம் முழுக்க உங்கட வண்ட வாளங்கள் தெரின்ச்சு போச்சுது, பாவம் நீங்கள் இங்க யாழ்க்களத்துக்க நிண்டு குத்தி முறியிறியள்.84 க்கு முன்னம் நீங்கள் என்ன விரல் சூப்பிக் கொண்டே இருந்தனியள்? அப்ப செத்த சனம் எல்லாம் என்னண்டு செத்ததுகள்?

எங்கயண்ண உயிர குடுத்து போராடின ஆக்கள்? பாஸ்போட் அலுவலகத்திலயும் எயாப்போட்டிலயும் ஓமந்தை சென்றியளிலயும் நிக்கினமே?

பவரில இருக்கேக்க 2 12 லச்சகம் கணக்கில இல்லாமல்போனது உங்களுக்கு தெரியேல்லயோ? இந்த தலைப்ப எடுங்கோ பவரில இருந்தா இப்பிடி ஒரு தலைப்பு வருமோ? போராட வெளிக்கிட்ட எல்லாரும் ஒரு நோக்கத்துக்காகத்தான் போராட வெளிக்கிட்டவை , எது சாத்தியம் எது சாத்தியமில்லை எண்டது இப்ப எழுதுற அறிக்கையளில தெரியிது. தாங்கள் பவரில இல்லாததால எல்லாருக்கும் துரோகிப்பட்டம் குடுத்து .... நடக்கிறதை பாத்தீங்கள்தானே! அரசியல் அநாதையளாலதான் முள்ளிவாய்க்காலில் இப்பிடி நடந்ததெண்டு எழுதுறினம்.

அடக்குமுறைக்குள்ளதான் இவளவுசனம் தேர்தலில போட்டியிடுது.... சரத்து ஜனாதிபதி தேர்தலில தமிழ்ப்பகுதியளில வெண்டதுகூட அடக்குறைக்குள்ளதானோ? ஸ்ரீலங்கா சரித்திரம் எனக்கு தெரியாட்டிலும் அப்பருக்கு தெரியும் , எந்தெந்த அரசியல்வாதியள யார் யார் போட்டுத்தள்ளினது எண்ட சரித்திரம் கேள்விப்பட்டிருக்கிறன் அதுகளே போதும் யார் யார் பவருக்கு அலைஞ்சவை எண்டு தெரிய.

மில்லிபாண்டு தேர்தல் காலத்தில சொல்லவேண்டியத சொல்லுது வீதிமறியல் செய்ததால அப்ப அப்பிடி சொல்லிச்சு , தேர்தல் முடிய பாருங்கோ கமரண சுத்தி வருவினம் நம்மட ஆக்கள். மிலிபான்டென்ன முழு உலகமே வீதிக்கு இறங்கின நேரத்தில அடி ஆனா மெதுவா அடியெண்டுதான் சொல்லிச்சுது , நிப்பாட்டு எண்டு சொல்லேல்ல ,

நாடு தேவையெண்டதில யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது , அதுக்காக தமிழன தமிழனே அழிக்கிறத ஏத்துக்கொள்ள முடியாது.

Link to post
Share on other sites
 • Replies 120
 • Created
 • Last Reply
 • கருத்துக்கள உறவுகள்

சிறைய உடைக்க போராடினவையோ? தங்கட பவர தக்க வைக்கத்தான் போராடினவை , 84 ல இருந்து ஒண்டொண்டா அழிச்சு சனத்தையும் சீரழிச்சதத்தானே செய்தவை. 3 1/2 லச்சத்த தள்ளிக்கொண்டு போன நேரத்திலும் சனத்த காப்பாத்தத்தான் றோட்டுக்க வந்தம். :wub:

100 வீதம் உண்மையானது. துணிவுள்ளவர்காலேயே இப்படி எழுதமுடியும் பயந்தவர்கள் மூடிகொண்டு இருக்கிறார்கள் என்பதே உண்மை.

மதிவறண்டனாங்கள் உண்மைகள் என்பது நீங்கள் வாய்திறந்தால் மட்டுமே வெளிவருவேன் என்று அடம்பிடித்துகொண்டு நிற்கின்றது. தயவு செய்து எதிர்காலம் நோக்கி சிந்தித்து உங்களது வாய் உபாதைகளை பொருட்டபடுத்தாது திறந்தே வைத்திருப்பீர்கள் என்று எதிர்பார்த்து நிற்கின்றது தமிழ்இனம். தொடர்ந்தும் எழுதுங்கள் தயவு செய்து சளைத்துவிடாதீர்கள் உங்கள் பணி கடைமை என்பதிலேயே வாழ்வும் உள்ளதால் தொடர்ந்தும் எழுதுங்கள். மங்கிபோன உலகில் உண்மைகளும் உலாவரட்டுமே?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் என்ற தமிழினசாபக்கேடு தோற்கடிப்பட வேண்டும்

நீங்கள் சொன்னதெல்லாத்தையும் கூட்டிகளிச்சுப்பார்த்தால் கடிசியா நீங்கள் சொன்னதைத்தான் முதலிலே சொல்லியிருந்திருக்கலாம். அதுக்காக எவ்வளவோ தேவையில்லாத விசயங்களை தொடாமலே இருந்திருக்கலாம்.

சம்பந்தரை தோற்கடிக்கப்படவேண்டும் என்று நீங்கள் விருபுகிரீகள் அது சரி உங்களின் தெரிவு. ஆனால் அதுக்காக என்னோருத்தரை நல்லவரெண்டு சொல்வதை ஏற்கமுடியாது.

முடிவை மக்களிடம் விடுங்கள். நாங்கள் இங்கே விவாதிப்போம் யாருக்காகவும் பிரச்சாரம் செய்யவேண்டாம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொன்னதெல்லாத்தையும் கூட்டிகளிச்சுப்பார்த்தால் கடிசியா நீங்கள் சொன்னதைத்தான் முதலிலே சொல்லியிருந்திருக்கலாம். அதுக்காக எவ்வளவோ தேவையில்லாத விசயங்களை தொடாமலே இருந்திருக்கலாம்.

சம்பந்தரை தோற்கடிக்கப்படவேண்டும் என்று நீங்கள் விருபுகிரீகள் அது சரி உங்களின் தெரிவு. ஆனால் அதுக்காக என்னோருத்தரை நல்லவரெண்டு சொல்வதை ஏற்கமுடியாது.

முடிவை மக்களிடம் விடுங்கள். நாங்கள் இங்கே விவாதிப்போம் யாருக்காகவும் பிரச்சாரம் செய்யவேண்டாம்.

பிரச்சாரத்தை நீங்களே மறைமுகமாக செய்துகொண்டிருக்கின்றீர்கள் என்பதே உங்களுக்கு புரியாது உள்ளது.

மக்களிடம் விட்டுபார்ப்போம் என்று பல சித்தாந்திகளும் எழுதுகிறார்கள் ஆனால் அவர்கள் எதை எழுதுகிறார்க்ள என்பதுதான் புரியவில்லை.

கிட்டதட்ட மக்களை இவர்கள் இப்போது கடவுள் என்று முடிவுகொண்டுவிட்டார்கள்போல். விளிப்புணர்வுடன் மக்கள் இருந்திருந்தால் இந்த நிலை என்பது கனவிலும் வந்திருக்காது. ஆக விளிப்புணர்பு அற்ற மக்களிடம் ஏமாற்று நாடகத்தை அரங்கேற்றிவிட்டு............. முடிவில் ஏதோ பரம ரகசியம் இருப்பதாக இவர்கள் பினாத்துவதன் நோக்கம் புரியகூடியதாக இல்லை. உண்மைகள் இருப்படிப்பு செய்யபட்ட நிலையில் மக்களின் முடிவில் என்ன இருக்கபோகிறது. அத்தனை வசதிகளும் உள்ள உங்களின் எழுத்துகளிலேயே பிரச்சாரம் மறைந்திருக்கும்போது??????

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நான் செய்வது பிரச்சாரம் என்று கண்டு பிடிச்சதுக்கு நன்றிகள்.

கடவுளே இல்லை என்றபின் மக்களை கடவுளாக நிச்சயம் நான் பார்க்க மாட்டேன்.

ஓ.. ஒருவேளை நீங்கள் மக்களுக்கு விளிப்பூட்டத்தான் எழுதுகிறீகள் என்று தெரியாமல் நீங்களும் பிரச்சாரம் தான் செய்கிரீகளோ என்று நினைத்தேன். இப்போதுதான் தெரிகிறது நீங்கள் வாதம்தான் செய்கிறீகள் என்று.

எனக்குத்தெரிந்து எம் மக்கள் ஓரளவுக்கு விளைப்படைந்தவர்கள் தான்..

உங்களின் பார்வையே விளிப்பு என்றால் அநேகமான மக்களுக்கு விழிப்பு இருக்காதுதான்.

உங்களுடைய கையெழுத்தாக் இருக்கும் வாக்கியங்களுக்கும்...........

உங்களுடைய தற்போதைய கருத்துக்களுக்கும் ஏதும் தொடர்பிருந்தால் அதை பற்றி எழுதுங்கள் நாங்கள் விவாதத்திற்கு செல்வோம்.

விளங்காத விடயங்களை நாம் தீண்டுவதால் வீணான பகையுணர்வை எமக்குள் ஏற்படுவதை நான் விரும்பவில்லை.

மறைமுகமாக உங்கள் கருத்துக்கள் விளம்பரமாகின்றன எக்பது என்னால் சுட்டிகாட்டபட்டபோது அதை உங்களால் புரிந்துகொள்ள முடியாது உள்ளது. எனது கருத்தில் எதையாவது சுரண்டி ஒரு கருத்தை முன்வைக்கலாம் என்று உங்களுக்க தோன்றுகிறது..........

இந்த வழியால்போய் நாம் ஒரு நல்ல இடத்தை சேர முடியாது.

எனது கையெழுத்து எனது நிலைப்பாட்டை இன்றும் பிரதி பலிக்கின்றது.

முடிந்து போனதை வைத்து தோண்டுவதால் எதையும் செய்யமுடியாது.. எங்களுது விடுதலைப்பயணம் எமக்கு முன்னரே தொடங்கப்பட்டாச்சு இன்னும் தொடர்கிறது. பல திருப்பு முனைகள பல பாதைகள் என்று மாறி மாறி செல்கிறது. ஒவ்வொரு காலத்திலும் நின்று கொண்டு கடந்தகால செயர்பாடை விமர்சித்தால் சேரவேண்டிய இடத்துக்கு போய்ச்சேர முடியாது தனால் தான்

தொடர்ந்து சென்றால் முடிவையாவது மாற்றலாம்.. இடையில் விட்டால் நம் இனம் அழியும் முடிவை கூட மாற்ற முடியாது.

இறுதியாக தலைவர் என்ன சொன்னாரோ அதுவே இன்னும் என் காதுகளில் கேட்கிறது.

வரலாறு விட்ட வழியில்இ காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பு அகலும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்.

இலக்கு அடையும் வரை பயணம் தொடரும்.

போராடம் என்பது வெறும் ஆயுதத்தோடுதான் என்றில்லை... ஆயுதங்கள் என்பது இயந்திரங்கள் மட்டும்தான் என்பததல்ல.

புலிகளின் தலைமை அறியாமல் வேறு வழியில்லாமல் கூட்டமைப்பை உருவாக்கவில்லை.. அது அன்றைய தேவை கருதித்தான் உருவாக்கப்படாது. அதிலும் தேவை இல்லாத கூட்டத்தை சேர்க்கவும் இல்லை. அப்படியான ஒரு அமைப்பை குலைப்பது தவறு. கூட்டமைப்பின் பாதைகள் மாறினாலும் இலக்கு எட்டப்படும் வரை கூட்டமைப்பே விலக முடியாது. கருத்து முரண்பாடுகள் ஏற்படுவது ஒன்று புதிதில்லை அதை களைய அனைத்து தரப்பினரும் தவறி விட்டார்கள். நான் எப்போதும் கூட்டமிப்பை நியாயப்படுத்தவில்லை அவர்கள் விட்ட தவறுகளை மறுக்கவும் இல்லை. அனால் பிரிந்து நின்று மாறி மாறி கல்லெறிந்து எம் இனத்தை மேலும் பலவீனமாக்குவதில் உடன்பாடில்லை.

இறுதியாக நீங்கள் சொன்னதை நானும் வரவேற்கிறேன்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

புதிய உலக ஒழுங்கிற்கு மேற்குலக ஊடகவியலாளர்களினால் உதாரணம் காட்டப்படும் கேணல் சார்லி பெர்த் என்பவரினால் எழுதப்பட்ட கவுட்டு விகம் சுப்பர் பவர் என்ற நூல் எமது போராட்டத்தின் அழிவிற்கான காரணத்திற்கு கருத்திணைவது குறிப்பிடத்தக்கது,

1980 இல் அமைதியாக இருந்த தெற்காசியாவில் இலங்கையில் முதலில் தலையிட்டு பின்னர் பாகிஸ்தான் விவகாரத்தில் தலையிட்டு பின்னர் அதுவே அவர்களுக்கு எல்லை கடந்த பயங்கரவாதமாக உருவெடுக்கவைத்து எப்படி உலக பொலிஸாக அமெரிக்கா உள்ளதோ அதே போல் தெற்காசியாவில் பயங்கரவாதத்தைக்கட்டுப்படுத்தி பிராந்திய வல்லரசாக வேண்டும் என்ற கனவினைத்தகர்த்த புலிகளை இந்தியாவிற்கு தலையிடியானார்கள்.

ஒன்றிணைந்த சோவியத்தின் கடைசி அதிபராகவிருந்த மிகைல் கோபர்ச்சேவினது "பெரெஸ்ரொஐகா" அமுல் படுத்தப்பட்டால் 5 வருடத்தில் உலகின் முதலாம் இடத்தை சோவியத் ஒன்றியம் எடுத்துவிடும் என சி ஐ ஏ கணித்தது நடைபெற இருந்த இராணுவப்புரட்சியை 8 நாட்களுக்கு முன்னதாக அறிந்திருந்தும் ரஸ்ய அதிபருக்கு அதை தெரியப்படுத்தாமல் விட்டு உலக நம்பர் வண்ணாகியது.

என்னதான் விடுதலைப்புலிகள் இந்தியாவிற்கு நேசக்கரம் நீட்டினாலும் அதன் நலன்கள் விடுதலைப்புலிகள் என்ற பலமிக்க சக்தியால் அடிபட்டு போகும் அதன் முதற்கட்டம் விடுதலைப்புலிகளை அழித்தாயிற்று இப்போது இந்தியாவின் கவனம் ஒற்றுமையாண ஈழத்தமிழர் பக்கம் விழுந்துள்ளது அவர்களை பிரிக்கும் வேலையை இந்த அரசியல்வாதிகளின் மூலம் நிறைவேற்றுகிறது.

வீணாக எமக்குள் ஏன் அடிபடவேண்டும் இந்த பிரஜோசனமற்ற பாராளுமன்ற தேர்தல் மூலம் எமது மக்களின் வாழ்க்கியில் மலர்ச்சியில்லை ஆனால் இந்த அரசியல்வாதிகளின் வாழ்க்கையை சொல்லத்தேவையில்லை

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நாரதர்

நான் செய்வது நிஐம்

நீங்கள் சொல்வது கனவு

நான் சோறு போடாது

தொழிலை ஏற்படுத்திக்கொடுக்க விழைகின்றேன்

அதேநேரம் நீங்கள் சொல்லும் அதிகாரவிடயங்களுக்கும் நான் செய்யும் சிறிய உதவிக்கும் இடைவைளி அதிகம்

அதை சம்பந்தப்பட்டவர்கள் பார்த்துக்கொள்வார்கள்

அதேநேரம் இந்த 10 ஏக்கர் நிலம்தான் இன்று நிஐம்.

அதேநேரம் இதற்காக எனக்கு விழுந்த சிவப்பு புள்ளிகள் யாழ். இணையத்தின் உறுப்பினர்களின் தன்மையை எடுத்துக்காட்டுகின்றன.

நன்றி

விசுகு,

நாம் எல்லோரும் இப்படி உதவினாலும் அந்த மக்களின் வாழ்க்கையை எம்மால் உயர்த்த முடியாது.ஏனெனில் உங்களின் நண்பரின் நிலையைப் பாருங்கள் அவர் வாழ்ந்த இடத்துக்கு அவரால் போக முடியாது.மக்கள் குடியிருப்புக்களை சிங்கள இராணுவ முகாம்க்கள் அதனை அண்டிய சிங்களக் குடியிருப்புக்கள் என மாறி மாறி அமைப்பதன் மூலம், தமிழர்களை நிரந்தர இராணுவ அடக்குமுறைக்குள் கண்காணிப்பினுள் வைப்பது.இதனை நீங்கள் எத்தினை ஆயிரம் யுரோக்கள் அனுப்பியும் இல்லாது செய்து விட முடியாது.தமிழர்கள் தங்கல் இறமையையை இந்தியாவிடமும் சிறிலங்காவிடமும் ஒப்படித்து விட்டு தமக்கான அபிவிருதியைப் பெற்ரு விட முடியாது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ்க்கோரிக்கையைக் கைவிட்டவர்கள் சம்பந்தர் தலைமையிலான கூட்டமைப்பினர் மட்டுமே.

" நாங்கள் எப்போதுமே தமிழீழக்கோரிக்கையை ஆதரிக்கவில்லை"..சம்பந்தர்.

கஜேந்திரகுமார் ஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பின் முடிவை ஏற்றுக்கொள்ளவில்லை.

"ஜனாதிபதி தேர்த்லைப்புறக்கணியுங்கள்"..கஜேந்திரகுமார்.

சம்பந்தர் தயாரித்த தீர்வுத்திட்டம் ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று.

இன்று கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய அனைவரும் அன்றே இந்த தீர்வுத்திட்டத்தை

உள்ளிருந்தே எதிர்த்தவர்கள்.வெளியே அதைப்பற்றிக்கூற கட்சியின் உள்விடயங்கள் என்று உரிமை

மறுக்கப்பட்டவர்கள்.இளையவர்கள் என்றமுறையில் அடக்கப்பட்டவர்கள்.

உண்மையில் மக்கள் தங்கள் இலக்கிலிருந்து என்றுமே மாறவில்லை.

தலைமைகளே மக்களை மாற்றமுயற்சிக்கின்றனர்.

காலத்திற்க்குக்காலம் தாங்கள் தடம்புரளும்போது மக்களும் பின்னால்

வரவேண்டும் என்று நினைக்கின்றார்கள்.

என்று ஒரு இனத்தின் தலைவன் தன் கொள்கையிலிருந்து விலகுகின்றானோ

அன்றே அவன் தலைவனுக்குரிய பண்பை இழந்துவிடுகின்றான்.

அன்றே மக்கள் தங்கள் எதிகாலத்திற்கான தலைவனை தேர்ந்தெடுக்க வேண்டும்.

வரும் தலைவன் மக்களின் கொள்கைகளுக்காகப்போராட வேண்டும்.

மக்களுக்காக வாழ வேண்டும். மக்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டும்.

ஈழத்தமிழ் மக்களின் இலட்சியம் என்றும் தமிழீழம் மட்டுமே.

அவர்கள் தேர்ந்தெடுக்கும் பிரதி நிதிகள் தம் மக்களின் இலட்சியத்தை எதிரொலிக்க வேண்டும்.

ஒரு மாதம் அல்ல ஒரு வருடம் அல்ல ஒவ்வொரு தமிழனும் தன் உயிர் இருக்கும் வரை தன்

இலட்சியமான தமிழீழத்தைக் கைவிடமாட்டான்.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் எதிர்காலத் தமிழினத்தின் தலைமையை

நோக்கித் தன் கரங்களை நீட்டும்.

நீங்கள் இதுவரை முளுமையாக அறியாத எதிர்பாராத இலட்சியத்திற்க்காக உயிரையும்

துச்சமாக நினைக்கும் ஒருவன் ஈழத்தமிழர்களுக்கு வழிகாட்டியாக வருவான்.

மக்களை அரசியல் போராட்டத்தினூடாக தமிழீழத்தை நோக்கி நகர்த்துவான்.

வாத்தியார்

................

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

//எங்கயண்ண உயிர குடுத்து போராடின ஆக்கள்?//

உயிரைக் கொடுத்தவன் எப்படி இன்னும் உயிரோட இருப்பான்.உமது கேள்வி பைதியக்காரத்தனமாக இல்லையா?

//நாடு தேவையெண்டதில யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது , அதுக்காக தமிழன தமிழனே அழிக்கிறத ஏத்துக்கொள்ள முடியாது.//

அட கொக்கா மக்கா, நாடு தேவையெண்டதில மாற்றுக் கருத்து இல்லையோ? அப்ப எப்படி நீங்கள் தேவையான நாட்டைப் பெறுவியள் எண்டு சொல்லுவியளோ? உங்களுக்கு ஒரு வழியும் இல்லை சும்மா இப்படி போராடிறவனைப் பார்த்து புலம்பிக் கொண்டு நக்கல் நையாண்டி செய்து கொண்டு பொழுதைப் போக்கிறது தான் மாற்றுக் கருத்தாப் போச்சுது. நாடு தேவையின்றால் அதற்காகப் போராட வேணும்.போராட்டத்தைச் சுய தேவைகளுக்காக அழித்தால் அவர்கள் தமிழர்களாயினும் அழிக்கப் படுவார்கள்.இல்லாது போனால் நாடு என்பது அழிக்கப்படும்.அப்படி எந்த அழிவுகளும் அற்று நீங்கள் எப்படி நாட்டைப் பெறுவீர்கள் என்று சொன்னால் மக்கள் உங்கள் பின்னால் அணிதிரளுவார்கள்.உங்களிடம் இருப்பதெல்லாம் நக்கலும் நளினமும் மற்றவன் துயரில் இன்பம் காணும் சிறுமையான எண்ணங்கள் மட்டுமே.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாரதர்

நான் செய்வது நிஐம்

நீங்கள் சொல்வது கனவு

நான் சோறு போடாது

தொழிலை ஏற்படுத்திக்கொடுக்க விழைகின்றேன்

அதேநேரம் நீங்கள் சொல்லும் அதிகாரவிடயங்களுக்கும் நான் செய்யும் சிறிய உதவிக்கும் இடைவைளி அதிகம்

அதை சம்பந்தப்பட்டவர்கள் பார்த்துக்கொள்வார்கள்

அதேநேரம் இந்த 10 ஏக்கர் நிலம்தான் இன்று நிஐம்.

அதேநேரம் இதற்காக எனக்கு விழுந்த சிவப்பு புள்ளிகள் யாழ். இணையத்தின் உறுப்பினர்களின் தன்மையை எடுத்துக்காட்டுகின்றன.

நன்றி

விசுகு,

கனவு என்பது வரும் காலம் எப்படி அமையப் பெற வேண்டும் என்னும் ஒரு எண்ணம்.வரும் காலம் வழமாக இருக்க வேண்டும் என்று கனவு காண்பதில் என்ன தவறு இருக்கிறது.இன்றைய நிஜம் தமிழரின் அடிமை வாழ்வு.அந்த நிஜமே தமிழருக்கான நிரந்தர வாழ்வாக இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்.தமிழர்கள் ஏன் அடிமையானார்கள் எவரால் அடிமைகள் ஆக்கப்பட்டனர் அவர்கள் நோக்கம் என்ன, நாம் இதில் இருந்து விடுபடுவதற்கான வழிமுறை என்ன? அந்த வழிமுறைகளை நாம் எவ்வாறு அடைவது என்பது பற்றி நான் பேசினால் அது உங்களுக்கு கனவாகத் தெரிகிறது.காட்டுமிராண்டியாக இருந்த மனிதன் இன்று வானிலும் விண்ணிலும் பறக்கிறான் என்றால் அதற்க்குக் காரணம் அவன் அவ்வாறு கனவு கண்டதே.

யாரோ எவரோ வந்து நாளைய கனவை நிஜமாக்குவார்கள் என்று நாங்கள் வெறும் பார்வையாளராக இருக்க முடியாது.எமது நிலத்தை எமது மக்களை அடிமைகள் ஆக்குபவரை நாங்கள் இனம் காண வேண்டும், நாம் வெல்வதற்கான வழிவகைகளை ஆராய வேண்டும்.அதற்கான சரியான தலமைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.தோல்வி மனப்பான்மையில் தன்னம்பிக்கை அற்ற சந்தர்ப்பவாதத் தலமைகளைத் தூக்கி எறிய வேண்டும்.இவற்றை நாம் தான் செய்ய வேண்டும்.வேறு எவரும் எமக்காகச் செய்யப் போவதில்லை.உங்களுக்கு அவ்வாறு செய்வதில் உடன் பாடு இல்லையென்றால் நீங்கள் ஒதுங்கி இருந்து உங்கள் சொந்த அலுவல்களைக் கவனிப்பதே பொருத்தமானது.என்ன நடக்கிறது என்ன நடக்க வேண்டும் என்பதைப் பற்ரி அரைகுறையாக விளங்கிக் கொண்டு கருதுக்களைக் கூறக் கூடாது.னா சிந்திக்க வேண்டும் செயற்பட வேண்டும்.தன்னம்பிக்கையுடன் கனவு காண வேண்டும்.இல்லாவிட்டல் நாங்கள் இந்த உலகில் நிரந்தர அடிமைகளாக இருக்க வேண்டும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

100 வீதம் உண்மையானது. துணிவுள்ளவர்காலேயே இப்படி எழுதமுடியும் பயந்தவர்கள் மூடிகொண்டு இருக்கிறார்கள் என்பதே உண்மை.

மதிவறண்டனாங்கள் உண்மைகள் என்பது நீங்கள் வாய்திறந்தால் மட்டுமே வெளிவருவேன் என்று அடம்பிடித்துகொண்டு நிற்கின்றது. தயவு செய்து எதிர்காலம் நோக்கி சிந்தித்து உங்களது வாய் உபாதைகளை பொருட்டபடுத்தாது திறந்தே வைத்திருப்பீர்கள் என்று எதிர்பார்த்து நிற்கின்றது தமிழ்இனம். தொடர்ந்தும் எழுதுங்கள் தயவு செய்து சளைத்துவிடாதீர்கள் உங்கள் பணி கடைமை என்பதிலேயே வாழ்வும் உள்ளதால் தொடர்ந்தும் எழுதுங்கள். மங்கிபோன உலகில் உண்மைகளும் உலாவரட்டுமே?

அக்கா செமகடுப்பில இருக்கிறா....போல. :rolleyes:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

View PostSooravali, on 18 March 2010 - 11:56 PM, said:

முடிவை மக்களிடம் விடுங்கள். நாங்கள் இங்கே விவாதிப்போம் யாருக்காகவும் பிரச்சாரம் செய்யவேண்டாம்.

நான் செய்வது பிரச்சாரம் என்று கண்டு பிடிச்சதுக்கு நன்றிகள்.

நீங்கள் சம்பந்தருக்கு பிரச்சாரம் செய்வதை நிறுத்தி விட்டு மற்றவர்களுக்கு அறிவுரை கூறுங்கள்

சரி விவாதிப்போம் என்று எதைப்பற்றி சுரக்காய்க்கு உப்பிருக்கின்றதா இல்லையா என்றா ? :D

Link to post
Share on other sites

சம்பந்தர் , கஜேந்திரன் என்றவிடயமா? அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற விடயமா? இங்கு பிரச்சனைக்குரியது. சம்பந்தருக்குப் பிரச்சாரம் செய்கிறார்கள் என்றால் அதை ஏற்காத மாற்றுக் கருத்தாளர்கள் கஜேந்திரனுக்குப் பிரச்சாரம் செய்கிறார்கள் என்றுதானே அர்த்தம்.

நீங்கள் சொல்வது லோஜிக் ரீதியாக உண்மைதான்.

ஆனால் உண்மை நிலை என்பது வேறாக உள்ளது. ஆதாவது இந்தியாவின் எடுபிடிகளால் ஈழதமிழருக்கு சதி செய்ய முடியுமே தவிர....... ஓரு விதி செய்ய முடியாது. இந்தியாவின் உள்நோக்கமாக இதுவரையிலும் இருந்து இப்போது எந்த ஒளிவுமறைவுமில்லாது இருக்கும் ஒரே எண்ணம் அதுதான். ஆக இந்தியாவின் நிகழ்சிநிரலில் தங்கி நிற்பவர்கள் இந்தியா பெரிய நாடு இந்தியாவோடு சேர்ந்து எமது சொந்த வாழ்வை தக்கவைக்க முடியும் என்று எண்ணுபவர்களாகத்தான் இருக்க முடியும். இத்தனைக்கு பிறகும் இந்தியாவை எதிர்த்து ஒருவன் நிற்கிறான் என்றால் அவனிடம் ஏதோ ஒரு அரசியல் இலட்சியம் இருப்பதாகவே எண்ணமுடியும். (அதற்காக 100வீதம் அதுதான் என்று அடித்து கூறிவிட முடியாது). சம்மந்தனை ஆதரிப்தால் ஏதோ ஒறடறுமையை போற்றுகிறோம் என்றே ஒரு சிலர் நம்புகிறார்கள். ஓற்றுமை என்பது அதிமுக்கியமான ஒன்றுதான். நாட்டை எரித்து சாம்பலாக்க ஒற்றுமையாக இருந்தோம் என்பதில் பெருமை கொள்ள என்ன இருக்கிறது?

அப்படியென்றால் ஏன் சுத்தி வளைப்பான். சம்மந்தரை தூதுவிட்டு இந்தியாவை இடை தரகுவைத்து சுற்றிவராமல். ஒற்றுமையாக கருணா டக்கிளஸ் போன்ற பேய்களிடமே போய் எங்களை மகிந்தவிடம் அடையாளம் காட்டி எமக்கு சோறுவாங்கிதாருங்கள் என்று நேரடியாகவே போகலாமே?

ஏன் சுத்திவளைக்கிறோம் என்பதைதான் யாரும் தெளிவாக எழுதுகிறார்கள் இல்லை. ஆனால் சம்மந்தரிடம் வாருங்கள் என்று மட்டும் திரும்ப திரும்ப எழுதுகிறார்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சம்பந்தருக்கு பிரச்சாரம் செய்வதை நிறுத்தி விட்டு மற்றவர்களுக்கு அறிவுரை கூறுங்கள்

சரி விவாதிப்போம் என்று எதைப்பற்றி சுரக்காய்க்கு உப்பிருக்கின்றதா இல்லையா என்றா ? :lol:

சம்பந்தரையும் கஜேந்திரனையும் தவிர உங்களுக்கு சுரக்காய்தான் தெரியுமா?

பிளவுக்குப்பிறகு என்ன செய்வது? அல்லது தேர்தலுக்குப்பிறகு என்ன செய்வது?

இரண்டு தரப்பையும் எப்படி இணைப்பது? எந்தத் தரப்புக்கு அதிகாமான வாக்குகள் கிடைக்கிறதோ அந்தத் தரப்பால் மற்றத்தரப்பு எவ்வாறு அணுகப்படவேண்டும். நாடுகடந்த அரசு..

சாப்பாட்டிலேயே கவனமா இருந்தா இப்பிடித்தான் சுரைக்காயும் மாங்காயும் என்று சிந்தனை ஓடும். :lol:

Link to post
Share on other sites

நீங்கள் சொல்வது லோஜிக் ரீதியாக உண்மைதான்.

ஆனால் உண்மை நிலை என்பது வேறாக உள்ளது. ஆதாவது இந்தியாவின் எடுபிடிகளால் ஈழதமிழருக்கு சதி செய்ய முடியுமே தவிர....... ஓரு விதி செய்ய முடியாது. இந்தியாவின் உள்நோக்கமாக இதுவரையிலும் இருந்து இப்போது எந்த ஒளிவுமறைவுமில்லாது இருக்கும் ஒரே எண்ணம் அதுதான். ஆக இந்தியாவின் நிகழ்சிநிரலில் தங்கி நிற்பவர்கள் இந்தியா பெரிய நாடு இந்தியாவோடு சேர்ந்து எமது சொந்த வாழ்வை தக்கவைக்க முடியும் என்று எண்ணுபவர்களாகத்தான் இருக்க முடியும். இத்தனைக்கு பிறகும் இந்தியாவை எதிர்த்து ஒருவன் நிற்கிறான் என்றால் அவனிடம் ஏதோ ஒரு அரசியல் இலட்சியம் இருப்பதாகவே எண்ணமுடியும். (அதற்காக 100வீதம் அதுதான் என்று அடித்து கூறிவிட முடியாது). சம்மந்தனை ஆதரிப்தால் ஏதோ ஒறடறுமையை போற்றுகிறோம் என்றே ஒரு சிலர் நம்புகிறார்கள். ஓற்றுமை என்பது அதிமுக்கியமான ஒன்றுதான். நாட்டை எரித்து சாம்பலாக்க ஒற்றுமையாக இருந்தோம் என்பதில் பெருமை கொள்ள என்ன இருக்கிறது?

அப்படியென்றால் ஏன் சுத்தி வளைப்பான். சம்மந்தரை தூதுவிட்டு இந்தியாவை இடை தரகுவைத்து சுற்றிவராமல். ஒற்றுமையாக கருணா டக்கிளஸ் போன்ற பேய்களிடமே போய் எங்களை மகிந்தவிடம் அடையாளம் காட்டி எமக்கு சோறுவாங்கிதாருங்கள் என்று நேரடியாகவே போகலாமே?

ஏன் சுத்திவளைக்கிறோம் என்பதைதான் யாரும் தெளிவாக எழுதுகிறார்கள் இல்லை. ஆனால் சம்மந்தரிடம் வாருங்கள் என்று மட்டும் திரும்ப திரும்ப எழுதுகிறார்கள்.

எந்த அரசியல் பலத்தின் மீது நின்று அரசியல் பலத்தை அடையப் போகின்றோம். விடுதலைப்புலிகள் இருந்தபோது நிலவிய அரசியல் காலம் வேறு. அதே நிலை இப்போதும் இருக்கிறதென்று கனவில் அரசியல் செய்யக் கூடாது. எனது கருத்தில் லொஜிக் இருப்பது உண்மைதான். ஏனென்றால் உங்கள் எழுத்தில் காணப்படும் சார்புத் தன்மையையும் நான் வெளிப்படுத்த வேண்டுமல்லவா.

இப்போது விடயத்திற்கு மீண்டும் வருகிறேன். இனிவரும் காலங்களில் இந்தியா, இலங்கை, இலங்கையின் சட்டவரம்புகளுக்குள் நின்று பேசுவதற்கு கஜேந்திரகுமார் அணியினர் விரும்பமாட்டார்களா? நிபந்தனையுடனான எந்தப் பேச்சுக்களிலும் ஈடுபடமாட்டார்களா? அப்படிப்பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டால் அதன் மூலம் எட்டப்படும் முடிவுகளுக்கு இசைவார்களா மாட்டார்களா?

தமிழர் தாயகக் கோரிக்கையைக் கைவிட்டுள்ளார்கள் என்பதுதானே விடயம். இப்போது தேர்தலில் ஈடுபடும் தமிழ்க் கட்சிகள், தாயகக் கோட்பாட்டை வெறும் கோஷமாகத்தான் முன்வைக்கிறார்கள் என்பதை ஏற்க முடியாதுள்ளதனால்தான் இந்தப் பிரச்சனை. சம்பந்தர் அணிம் சரி, கஜேந்திர குமார் அணியும் சரி அவர்கள் முன்வைப்பது வெற்றுக் கோஷங்களேதவிர வேறில்லை.

இந்தக் கோஷங்களில் ஈடுபட்டவர்கள் இந்தியாவின் வழிகாட்டலில் நின்றாலென்ன? சர்வதேச வழிகாட்டலில் நின்றாலென்ன? தமிழருக்கான அரசியல் தீர்வுக்கான வழியைக்காண்பது கனவாகவே முடியப்போகிறது. இப்போதெல்லாம் சர்வதேசத்தின் நிலைப்பாடு மாறிக் கொண்டிருப்பதாக பலர் எழுதுகிறார்கள். அது தமிழருக்குச் சார்பாக உள்ளதெனவும் சாதிக்க முற்படுகிறார்கள். அதில் எந்தவித உண்மையுமில்லை என்றுதான் நான் சொல்கிறேன். மேற்குலகம் தனது தேவைக்கு இலங்கையை ப் பயன்படுத்த முனையும் நகர்வுதான் சர்வதேசத்தின் நிலை.

இந்தியாவை மீறி இலங்கையில் தமிழருக்கு அரசியல் பிரச்சனைக்கான தீர்வைக் காண்பது நிகழாத நிகழ்ச்சியொன்று. தமிழரிடமிருந்த ஒற்றுமையென்னும் பலம் இப்பொழுது பிடுங்கப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில் ஒரு சந்தர்ப்பவாத அரசியல் நிலைப்பாடுதான் தமிழருக்குக் கைகொடுக்கும். அதை முன்னெடுக்கக் கூடியவர் சம்பந்தனாகத்தான் இருக்க முடியும். கஜேந்திரகுமார், கஜேந்திரன் செல்வராசா என்பவர்களால் அது முடியாது. இனிமேல் இருந்துபாருங்கள், சிறிலங்காவிற்கு வெளியே பேச்சுவார்த்தை நடைபெறாது. மூன்றாவது தரப்பு என்ற அனுசரணை இருக்காது. இலங்கைக்கு வெளியிலிருக்கும் எந்தத் தமிழர் சார்பு அரசியலாளர்களுடனும் சிறிலங்கா ஈழத் தமிழர் பிரச்சனைக்கான தீர்வு பற்றிய கருத்துக்களைக் கேளாது. அந்தவகையில் இந்தியா இலங்கையின் விடயத்தில் கேடயமாக நிற்கிறது.

தீர்வு அல்லது சலுகை என்று தமிழருக்கு எது நடந்தாலும் அது இந்தியாவினூடுதான் நடைபெறச் சாத்தியமுள்ளது. இதுதான் இன்றைய யதார்த்தம்.

நீங்கள் கூறுவது உண்மைதான்.

இந்தியாவுடனோ இலங்கையுடனோ பேசுவதில் எந்த பிழையும் இல்லை............ ஆனால் அவர்கள் தீர்வை தருவார்கள் என்று எதிர்பாhப்பதே தவறானது. வேறு எந்த வழியுமில்லை ஆக கள்ளனை காவலுக்கு வைப்போம் என்பதை ஒரு ஆக்கபூர்வமான சிந்தனையாக என்னால் ஏற்றுகொள்ள முடியவில்லை. தவிர சம்மந்தருடன் எனக்கு தனிபட்ட விரோதம் ஏதும் இல்லை என்பது உங்களுக்கே தெரிந்தது.

ஆக மேலே சூறாவழி கேட்ட கேள்விகள் போல் கேள்விகளை முன்வைத்து அவற்றிற்கான பதில்களை தேடுவே சிறந்தது.

இப்போதைக்கு யாருமில்லை ஆக யாரென்றாலும் வாங்கோ என்பது.................

விபச்சாரி வீட்டு வெத்திலை பெட்டி நிலைக்கே......... தமிழரை தள்ளும் என்பதை நான் சொல்லியா உங்களுக்கு தெரியவேண்டும்?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

என்று சிறிலங்கா சனாதிபதித் தேர்தலில் இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்புக்குரிய நிறைவேற்று அதிகார சனாதிபதி வேட்பாளரை ஆதரிக்க கோரினார்களோ (அது த.தே.கூத்தமைப்பு மட்டுமல்ல) அன்றே, ஈழத் தமிழர்கள் "தமிழர்கள் தனித் தாயகக் கோரிக்கையைக் கைவிட்டனர்" என்றே அர்த்தம், அது சம்பந்தரானலும் சரி, கஜேந்திரனாலானாலும் சரி

இன்று அதே அரசியலமைப்பின் தலையாய இடமான பாராளுமன்றத்திற்கான தேர்தலில் தொங்கி நிற்பவர்கள் அனைவரும் தனித் தாயகக் கோரிக்கையைக் கைவிட்டவர்களே ஆவர். அவர்கள் சொல்லும் மொழியும், நாம் புரிந்து கொள்ளும் விதமும் மாறுபடலாம், ஆயினும் உண்மை அதுதான்

இவர்களால், போரில் தன் காலை இழந்த ஒரு சிறு உயிருக்கு கூட எதனையும் செய்ய முடியாது: அது தான் யதார்த்தம்

அது தான் உண்மை நிழலி இதை ஏற்றுக்கொள்ள இங்கு எத்தனை பேர் தயார்? அல்லது அவர்களின் துரோகி பட்டியலில் நீங்கள் எந்த இடத்தில் இருக்கின்றீர்களோ?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கடந்த சில கால்ங்களாக பல அறிஞர்கள் கூறியது.

இலங்கையில் தமிழர்களுக்கு அமைதித்தீர்வு தலைவர் பிரபாகரன் காலத்தில் ஏற்பட்டால் ஒழிய, வேறு எந்த காலத்திலும் ஏற்பட முடியாது.

அது நியமாகி வருகிறது http://usetamil.forumotion.com

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்    21 Views இலங்கையில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 600 ஐக் கடந்துள்ளதாக  அரசாங்கத் திணைக்களம்  வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மேலும் நால்வர் கொரோனாத் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாத்தொற்றினால் இதுவரையில் இலங்கையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 602 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரம், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 95 ஆயிரத்து 394 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், சித்திரை புத்தாண்டுக்கு பின்னர் கொரோனா தொற்று அதிகரிக்கலாம் என்றாலும் இது மூன்றாவது அலையின் தோற்றமாக கருத முடியாது என தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பரில் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு பின்னர் கொரோனா தொற்று அதிகரித்தமையை சுட்டிக்காட்டிய அவர், அது மற்றொரு அலையின் அவசரநிலை என கருத முடியாது என்றும் கூறியுள்ளார். மேலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து அதிக அளவில் தொற்றுகள் பதிவாகியிருப்பதே ஒரு நாளைக்கு 200 க்கும் மேற்பட்ட நோயாளிகள் அடையாளம் காணப்பட காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.   https://www.ilakku.org/?p=47261      
  • ரம்மியமான ரமலானே வருக, வருக!!     இதோ இக்குவலயத்தை நிழலிடஆரம்பித்திருக்கும் ரமலான் மாதம் இஸ்லாமிய சரித்திரத்திலும் ஓர் தனிப்பெரும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. நூற்றாண்டுகளாக நேரியதோர் மார்க்கத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த மானிட கோடிகளுக்கு இறுதி நபி, முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மூலம் கிடைக்கப்பெற்ற தெய்வீக வழி முறைகளை ஒழுகி நடக்கும் சந்தர்ப்பத்தை வாய்க்கச் செய்ததும் இம் மாதமே. புனித ரமலானின் மகிமையை இறைவன் தன் திருவேதத்திலே எடுத்தியம்புகிறான் இவ்வாறு: ரமலான் மாதம் எத்தகைய (மகத்துவ மிக்க) மாதமென்றால்; அதில்தான் ‘குர்ஆன்’ எனும் (பரிசுத்த - வேதம்) அருளப்பெற்றது. அது மனிதர்களுக்கு நேர்வழியாகவும் (நன்மை தீமைகள் யாவை யெனப்) பிரித்தறிவித்து நேரான வழியைத் தெளிவாக்கக் கூடியதாகவும் இருக்கிறது - (2:185). திருக்குர்ஆன் இறங்கியமாதமென்றால் அது எத்தகைய மகத்துவமிக்க மாதமாகும் என்பதை சொல்லவும் வேண்டுமோ! இம்மாத மாண்பைப் பற்றி அண்ணலார் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் அறவுரைகளில் ஒன்றை ஆய்வோம். “ரமலான் மாத ஆரம்ப இரவு தோன்றிவிட்டாலே, ஷைத்தான்களும் மூர்க்கஜின்களும் சிறையிடப்பட்டு விடுகின்றனர். நரகவாயில் அடைக்கப்படுகின்றன. அவற்றில் ஒன்றும் திறக்கப்படுவதில்லை. மேலும் சொர்க்க வாயிற்படிகள் திறக்கப்படுகின்றன; அவற்றிலொன்றும் அடைக்கப்படுவதில்லை, பின்னர் வானவர்கள் (மானிடனை நோக்கி) அறைகூவிஅழைக்கின்றனர்: நன்மையைத் தேடுபவனே! (நன்மை செய்வதில்) முன்னேறிச்செல்! துர்க்கிரியை புரிபவனே! (இன்றிலிருந்து பாபமேதும் செய்யாமல்) உன்னை நீ நரக நெருப்பிலிருந்து விடுதலைப் பெறலாம். இவ்வாறு ஒவ்வொரு இரவும் அழைக்கப்படுகிறது.” (திர்மதி). புனித ரமலான் மாத மகத்துவத்துக்கு இவற்றைவிட வேறு என்ன சான்றுகள் வேண்டும். நோன்பின் மாண்பு ரமலான் மாதத்தை அடையப் பெறும்முஸ்லிம்களை நோக்கி இறைவன் ஆணையிடுகிறான் இவ்வாறு: ‘‘ஆகவே உங்களின் எவன் அம்மாதத்தை அடைகிறோரோ அவர் அதில் நோன்பு நோற்கவும்’’ - (2:185). ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கும்படி கட்டளையிடும் இறைவன் அதைவலியுறுத்தி, ‘‘(எத்தகைய காரணங்களும் காட்டி நீங்கள் தப்பிக்க முயலாமல்) நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும். (இந்தஉண்மையை) நீங்கள் அறிவுடையோர் களாயிருந்தால் (புரிந்துகொள்வீர்கள்) (2:184) என்று கூறியிருக்கிறான். இறைவனின் திருத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் மொழிந்த வாக்கியங்களில் சிலவற்றை காண்போம். ஹலரத்அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்: ‘‘மனிதன் புரியும் நற்கிரியைக்காக பத்திலிருந்து 700 வரை இரட்டிப்பாக நற்கூலி கிடைக்கிறது; ஆனால் அல்லாஹ் கூறுகிறான்: நோன்பைத் தவிர, ஏனெனில் அதுஎனக்கே சொந்தம்; அதற்கு நானாகவே கூலி கொடுப்பேன். காரணம் (நோன்பு நோற்கும்) அவன் எனக்காகவே தன் மனைவியோடு புணர்வதை; உண்பதை விட்டிருக்கிறான் என்றும் நோன்பு நோற்பவர்களுக்கு இரு (முறை) மகிழ்ச்சிகள்(அடையும் வாய்ப்பு) இருக்கின்றன. 1-வது நோன்பு திறக்கும்போதும், 2-வதுமறுமையில் தனது இறைவனை தரிசிக்கும்போதும் தோன்றும் மகிழ்ச்சிகளாகும். நோன்பு (உலகில் பாபங்களையும், நோய்களையும், ஷைத்தானிய எதிர்ப்புகளையும், மறுமையில் நரகவேதனையையும் தடுக்கக்கூடிய) கேடயமாக திகழ்கிறது!” என்று இறைவனின் தூதர்முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். (புகாரி, முஸ்லிம்). நோன்பின் நோக்கம் ‘‘விசுவாசிகளே! நீங்கள் பரிசுத்தவான்களாக வேண்டியே முந்தைய (சமூகத்த)வர்கள் மீது கடமையாக்கப்பட்டதைப் போன்றே உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது’’ என்று கூறி இறைவன் நோன்பின் நோக்கத்தை தெளிவுபடுத்தி இருக்கிறான் தன் வேதத்திலே. ‘தராவீஹ்’ தொழுகை ரமலான் மாத பகல் காலங்களில் நோன்பு நோற்பதை இறைவன் கடமையாக்கி இருப்பதைப் போன்றே ரமலான்மாத இரவுகளில் நின்று வணங்கும்படி எம் பெருமானார் (ஸல்) அவர்கள் பணித்திருக்கிறார்கள். ரமலான் மாதம் இரவில்தொழ வேண்டிய தொழுகைக்குத்தான் ‘தராவீஹ்’ எனப்படும். இறைவனுக்காக பசித்திருந்து அவன் அருளுக்கு உரியவனாகும் முஸ்லிம் இரவில் விழித்திருந்து அவன் அருளையும் அனுக்கிரகத்தையும் பாபமன்னிப்பையும் பெறலாம் என்று அண்ணலார் நபி (ஸல்) அவர்கள் அறிவுறுத்துகிறார்கள். முஸ்லிமாக இருக்க விரும்புபவன், மறதியாலோ, லோக மாய்கையில் மூழ்கியோ மார்க்கத்தை மறந்துபாபங்கள் இழைத்துவிடினும் உடனடியாக அதற்கான பரிகாரத்தை தேடி அலைவான். பரிகாரத்துக்கான சந்தர்ப்பம் கிடைத்தபின் அதை துரிதமாக பயன்படுத்திக் கொள்வான். அதன்பின்னர், தன்னை அவன் தூய்மைப்படுத்திக் கொள்வான். எனவே நாம் ரமலானை வரவேற்போம். ரஹமத்தை என்றும் பெறுவோம். வருக ரமலானே வருக!! கட்டுரையாளர்: ‘ரஹ்மத்’ ஆசிரியர், தலைவர், நெல்லை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை. https://www.hindutamil.in/news/tamilnadu/658823-ramzan-month-3.html    
  • அமெரிக்கத்தலையீட்டை கேட்கிறோம் -காணாமல் போனோரின் உறவுகள்    10 Views தமிழர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அமெரிக்காவின் தலையீட்டை பகிரங்கமாக  கோருவதாக, வவுனியாவில் கடந்த 1515ஆவது நாளாக தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். புதுவருடப் பிறப்பான இன்று அவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போதே  இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள், “2009 முதல் காணாமல் ஆக்கப்பட்ட ஒரு குழந்தையை கூட நாங்கள் கண்டுபிடிக்க முடியவில்லை.ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்றதிலிருந்து,  இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதன் மூலம் எந்தவொரு தீர்வையும் காணமுடியாது என்பதை நாங்கள் நிச்சயமாக கண்டறிந்துள்ளோம். எந்தவொரு தீர்வையும் அடைய தமிழர்களுக்கு மூன்று தடுப்புக்கள் உள்ளன. முதலாவது புத்த மதகுருக்கள், இரண்டாவது சிங்கள அரசியல்வாதிகள்,  இறுதியாக சிங்களபொதுமக்கள் அவர்கள்  எப்போதும் இனவெறி அரசியல்வாதிகளையே பதவிக்கு தேர்ந்தெடுக்கிறார்கள் . பெப்ரவரி 2017 முதல், எங்கள் போராட்டத்தில் இலங்கையில் அமெரிக்காவின் ஈடுபாட்டைக் கேட்டு வருகிறோம். இலங்கைக்கான அமெரிக்க அழைப்பை பெரும்பாலான அரசியல்வாதிகள் மற்றும் தமிழ் சிந்தனையாளர்கள் அனைவரும் நிராகரித்தனர். இப்போது, அனைத்து தமிழ் அரசியல் வாதிகளும், சிந்தனையாளர்களும் ஐநாவில் அமெரிக்காவின் தலையீடு முக்கியமானது என்பதை ஏற்றுக்கொள்கிறார்கள். எனவே அனைத்து தமிழ் அரசியல் வாதிகளும் தமிழர்களுக்கு அரசியல் ரீதியாக உதவவும், காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் அன்புக்குரியவர்களை கண்டுபிடிப்பதற்கும் அமெரிக்க உதவியை பகிரங்கமாக கேட்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த நாளில், சிங்கள இனப்படுகொலை மற்றும் ஒடுக்கு முறையிலிருந்து தமிழர்களை மீட்க அமெரிக்க உதவியை நாம் அனைவரும் கூட்டாக அழைக்கிறோம். இலங்கையில் அமெரிக்க தலையீட்டை கேட்டு, ஆயிரக்கணக்கான அமெரிக்க கொடிகளுடன் பொத்துவில் முதல் பொலிகண்டி வரை மற்றொரு பெரிய ஆர்ப்பாட்டம் தேவை என்பதை தமிழ் தலைவர்கள் உணரவேண்டும்.இல்லையெனில், இந்த தமிழ் அரசியல் தலைவர்கள் தமிழர்களுக்கு அல்ல, மாறாக அவர்களின் சுகபோக நல்வாழ்வுக்கும் அவர்களின் அதிகாரத்துக்கும் மட்டுமே”என்றனர்.       https://www.ilakku.org/?p=47321
  • இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூளும் அபாயம் உள்ளது - அமெரிக்க உளவுத்துறை அறிக்கை     இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூளும் அபாயம் உள்ளது என அமெரிக்க அரசின் தேசிய உளவுத்துறை கவுன்சில் அறிக்கை தெரிவித்து உள்ளது. பதிவு: ஏப்ரல் 14,  2021 16:56 PM புதுடெல்லி:  கடந்த காலத்தைப் போல் இல்லாமல் பிரதமர் மோடியின் ஆட்சிக்காலத்தில் பாகிஸ்தானின் ஆத்திரமூட்டும் செயல்களுக்கு , இந்தியா உடனடியாகப் பதிலடி கொடுத்து வருவதாக அமெரிக்க உளவு அமைப்பு அறிக்கை தெரிவித்துள்ளது. அமெரிக்க அரசின் தேசிய உளவுத்துறை கவுன்சில் ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகளாவிய அச்சுறுத்தல்கள் குறித்த அறிக்கையை வெளியிட்டு வருகிறது.தற்போது தேசிய புலனாய்வு இயக்குனரின் அலுவலகத்தால் அந்த அறிக்கை வெளியிடப்பட்டது.   அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- படைகள் பின்வாங்கினாலும் இந்தியா-சீனா எல்லை பதற்றங்கள் அதிகமாகவே இருக்கின்றன. எல்லை மோதலை அமெரிக்கா நெருக்கமாகப் கண்காணித்து சீனாவின் ஆக்கிரமிப்பை கடுமையாக கண்டித்துள்ளது. இந்தியா கோரிய சில ராணுவ தளவாடங்களையும் வழங்கி உள்ளது.  இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் “சாத்தியமில்லை” என்றாலும், அவர்களுக்கு இடையிலான நெருக்கடிகள் இன்னும் அதிகமாகி  போர் ஏற்படும் சூழல் ஏற்படும். இருநாடுகளிடையே உள்ள சிக்கல்களால் பதற்றம் மேலும் அதிகரித்தால் போர் மூளும் அபாயம் உள்ளது. இந்தியாவில் கடந்த காலத்தைப் போல் இல்லாமல் பிரதமர் மோடியின் ஆட்சிக்காலத்தில் பாகிஸ்தானின் ஆத்திரமூட்டும் செயல்களுக்கு உடனடியாகப் பதிலடி கொடுத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்காவைப் பொறுத்தவரை, உளவுத்துறை சமூகம் சீனாவை "ஒரு நெருக்கமான போட்டியாளராகக் கண்டது, பல அரங்கங்களில் அமெரிக்காவை சவால் விடுத்தது. ரஷ்யா  உலகளவில் அமெரிக்காவுக்கு எதிராக தந்து சக்தியைப் பயன்படுத்துவது உட்பட நுட்பங்களைப் பயன்படுத்துகிறது. ஈரான் ஒரு பரந்த பிராந்திய செல்வாக்கு நடவடிக்கைகளுடன் "பிராந்திய அச்சுறுத்தல்" என்று விவரிக்கப்பட்டது; மற்றும் வட கொரியா ஒரு "பிராந்திய மற்றும் உலக நிலைகளில் சீர்குலைக்கும் நிலையில் உள்ளது. சீனா தனது வலிமையை நிரூபிக்கவும், பிராந்திய அண்டை நாடுகளை சீனாவின்  விருப்பங்களை ஏற்றுக்கொள்ளும்படி கட்டாயப்படுத்தவும் ஒருங்கிணைந்த, முழு அரசாங்க கருவிகளையும் பயன்படுத்த முற்படுகிறது என அதில் கூறப்பட்டு உள்ளது.   https://www.dailythanthi.com/News/TopNews/2021/04/14165621/Crises-Between-India-Pak-Likely-To-Intensify-US-Intelligence.vpf
  • நடந்த 5 மேட்சுலயும்.. "மேன் ஆப் மேட்ச்" நம்ம புள்ளிங்கோ தான்.. காரணம் அதுவா இருக்குமோ? By Saravanamanoj M Updated: Wednesday, April 14, 2021, 16:28 [IST] சென்னை:   ஐபிஎல் போட்டியில் இந்திய வீரர்கள் படு தீவிரமாக விளையாடுவது பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது. ஐபிஎல் தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள 5 போட்டிகளிலும் இந்திய வீரர்களே ஆட்ட நாயகன் விருதினை பெற்றுள்ளனர். போட்டிப்போட்டுக்கொண்டு தொடரில் சிறப்பாக செயல்படுவதன் பின்னணி என்ன, அவர்களின் இந்த சிறப்பான ஆட்டத்திற்கு என்ன காரணம் என தெரியவந்துள்ளது.   ஹர்ஷல் பட்டேல்   பெங்களூரு அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக தனது அறிமுக போட்டியில் களமிறங்கினார். சிறப்பாக பந்துவீசிய அவர், 4 ஓவர்கள் வீசி 27 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை எடுத்தார். அறிமுக போட்டியிலேயே 5 விக்கெட்கள் எடுத்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.   நிதிஷ் ராணா   ராணா கொல்கத்தா அணி வீரரான நிதிஷ் ராணா சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக அதிரடி காட்டினார். தொடக்க வீரராக களமிறங்கிய இவர், 56 பந்துகளில் 80 ரன்கள் விளாசினார். இதனால் கொல்கத்தா அணி கடின இலக்கு நிர்ணயித்து அந்த போட்டியில் அபார வெற்றி பெற்றது.   சஞ்சு சாம்சன்     கடந்த 2 தினங்களாக ஐபிஎல் வட்டாரத்தில் பேசப்பட்ட பெயர் சஞ்சு சாம்சன். பஞ்சாப் அணி நிர்ணயித்த 221 என்ற இலக்கை எட்ட ராஜஸ்தான் அணி கேப்டனாக ஒற்றை ஆளாக போராடினார். அதிரடியாக ஆடிய இவர் 63 பந்துகளில் 119 ரன்களை விளாசினார். எனினும் ராஜஸ்தான் அணி தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.   ராகுல்  சஹார்   கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 152 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதனால் இந்த இலக்கையும் கொல்கத்தா அணி எட்டவிடாமல் செய்தவர் ராகுல் சஹார். 4 ஓவர்கள் வீசிய அவர் 27 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார். பின்னணி பின்னணி இதுவரை நடைபெற்றுள்ள 5 போட்டிகளிலும் இந்திய வீரர்களே ஆட்ட நாயகன் விருது பெற்றுள்ளனர்.   அவர்களின் இந்த சிறப்பான ஆட்டத்திற்கு காரணமாக டி20 உலகக்கோப்பை பார்க்கப்படுகிறது. டி20 உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெறுகிறது. எனவே இந்திய அணியில் இடம் பிடிப்பதை மனதில் வைத்தும் இந்திய வீரர்கள் செயல்படுவதாக கூறப்படுகிறது. எனினும் தொடரின் முடிவில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என ஓரளவிற்கு புரிந்துவிடும். Read more at: https://tamil.mykhel.com/cricket/ipl-2021-only-indian-players-has-won-the-man-of-the-match-award-in-last-5-matches-026080.html?ref_medium=Desktop&ref_source=MK-TA&ref_campaign=Similar-Topic-Slider
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.