Jump to content

‘வன்னி மவுஸ்’ என்ற திரைப்படம் சிறந்த கதைக்கான விருதைப்பெற்றுள்ளது


Recommended Posts

‘Vanni Mouse’ wins best fiction award in international film festival

வெளிநாட்டில் வதியும் ஈழத்தமிழரால் இயக்கப்பட்ட வன்னி மவுஸ் என்ற குறும்படம் 11வது சர்வதேச குறும்பட விழாவில் சிறந்த கதையுள்ள படத்திற்கான விருதை பெற்றுள்ளது. இது தொடர்பில் பரிஸ்டர் மற்றும் ஈழவர் சினி ஆட்ஸ் கவுன்சிலை சேர்ந்த Mr. S. J. Joseph கருத்து தெரிவிக்கையில் சர்வதேச திரைப்பட விழாவில் முதல்தடைவையாக ஈழத்தமிழர் ஒருவர் பரிசை பெறுகிறார் எனத் தெரிவித்துள்ளார்.

இக்குறும்படம் வன்னிக் காட்டுக்குள் இருந்து இரு எலிகள் ஓடும் பயணத்தை வெளிக்காட்டுகிறது. இவ் இரு எலிச்சோடிகளும் தமது ஓட்டத்தின் முடிவில் வவுனியாவில் அமைந்துள்ள மனிக் முகாமினுள் தமது ஓட்டத்தை நிறைவுசெய்கின்றன. இவ் மனிக் முகாமினுள் பெருமளவு தமிழ் மக்கள் அடைத்து வைக்கப்பட்டு அடிப்படை வசதிகள் இன்று தடுத்து வைக்கப்பட்டிருந்தமை யாவரும் அறிந்ததே.

இவ் இரு எலிகளையும் சாட்சியாக வைத்து முள்கம்பி வேலிக்குள் அப்பாவித்தமிழ் மக்கள் படும் அவலத்தை பேசப்படாத உண்மைகளை வெளிக்காட்டும் படமாக அத்திரைப்படம் அமைந்துள்ளது. இவ் இரு எலிகளும் இவ்நிலைமையில் இருந்து தப்புகின்றனவா என்பதுதான் படத்தின் கிளைமக்ஸ் என தெரியவருகிறது.

இப்படம் பெரியார் குறும்பட விழா 2009 ல் சிறப்பு பரிசினை பெற்றுக்கொண்டமை சுட்டிக்காட்டத்தக்கது. இதேவேளை 2010 ஒஸலோவில் இடம்பெற்ற தமிழ் திரைப்படவிழா நிகழ்வில் சிறப்பு பரிசினையும் பெற்றிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

இப்படம் இம்மாதம் பரிசில் நடைபெறவுள்ள ஐரோப்பிய சுதந்திர படவிழாவில் போட்டியிடுவதற்கு தெரிவாகியுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது. இதன் இயக்குனர் 26 அகவையுடைய சுபாஸ் என்பதுவும் இவர் வவுனிக்குளம் வன்னியை பிறப்பிடமாக கொண்டவர் என்பதுவும் தனது 13வது வயதில் ஐரோப்பாவிற்கு வந்தவர் என்பதுவும் சுட்டிக்காட்டத்தக்கது.

இவர் ‘நான் ஒரு கனவு காணலாமா?’ என நோர்வே தமிழ் சிறுபிள்ளை ஒன்றி;னை வைத்து மற்றும் ஒரு குறும்பட ஒன்றினை வெளியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செவ்வாய், மார்ச் 16, 2010 02:38 |

‘வன்னி மவுஸ்’ என்ற திரைப்படம் சிறந்த கதைக்கான விருதைப்பெற்றுள்ளது

வெளிநாட்டில் வதியும் ஈழத்தமிழரால் இயக்கப்பட்ட வன்னி மவுஸ் என்ற குறும்படம் 11வது சர்வதேச குறும்பட விழாவில் சிறந்த கதையுள்ள படத்திற்கான விருதை பெற்றுள்ளது. இது தொடர்பில் பரிஸ்டர் மற்றும் ஈழவர் சினி ஆட்ஸ் கவுன்சிலை சேர்ந்த எஸ்.Nஐ Nஐhசெப் கருத்து தெரிவிக்கையில் சர்வதேச திரைப்பட விழாவில் முதல்தடைவையாக ஈழத்தமிழர் ஒருவர் பரிசை பெறுகிறார் எனத் தெரிவித்துள்ளார்.

vannimouse86071445.jpg

இக்குறும்படம் வன்னிக் காட்டுக்குள் இருந்து இரு எலிகள் ஓடும் பயணத்தை வெளிக்காட்டுகிறது. இவ் இரு எலிச்சோடிகளும் தமது ஓட்டத்தின் முடிவில் வவுனியாவில் அமைந்துள்ள மனிக் முகாமினுள் தமது ஓட்டத்தை நிறைவுசெய்கின்றன. இவ் மனிக் முகாமினுள் பெருமளவு தமிழ் மக்கள் அடைத்து வைக்கப்பட்டு அடிப்படை வசதிகள் இன்று தடுத்து வைக்கப்பட்டிருந்தமை யாவரும் அறிந்ததே.

tamiliamsubas86066200.jpg

இவ் இரு எலிகளையும் சாட்சியாக வைத்து முள்கம்பி வேலிக்குள் அப்பாவித்தமிழ் மக்கள் படும் அவலத்தை பேசப்படாத உண்மைகளை வெளிக்காட்டும் படமாக அத்திரைப்படம் அமைந்துள்ளது. இவ் இரு எலிகளும் இவ்நிலைமையில் இருந்து தப்புகின்றனவா என்பதுதான் படத்தின் கிளைமக்ஸ் என தெரியவருகிறது.

vmjuryrecitation8607520.jpg

இப்படம் பெரியார் குறும்பட விழா 2009 ல் சிறப்பு பரிசினை பெற்றுக்கொண்டமை சுட்டிக்காட்டத்தக்கது. இதேவேளை 2010 ஒஸலோவில் இடம்பெற்ற தமிழ் திரைப்படவிழா நிகழ்வில் சிறப்பு பரிசினையும் பெற்றிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

இப்படம் இம்மாதம் பரிசில் நடைபெறவுள்ள ஐரோப்பிய சுதந்திர படவிழாவில் போட்டியிடுவதற்கு தெரிவாகியுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது. இதன் இயக்குனர் 26 அகவையுடைய சுபாஸ் என்பதுவும் இவர் வவுனிக்குளம் வன்னியை பிறப்பிடமாக கொண்டவர் என்பதுவும் தனது 13வது வயதில் ஐரோப்பாவிற்கு வந்தவர் என்பதுவும் சுட்டிக்காட்டத்தக்கது.

இவர் ‘நான் ஒரு கனவு காணலாமா?’ என நோர்வே தமிழ் சிறுபிள்ளை ஒன்றி;னை வைத்து மற்றும் ஒரு குறும்பட ஒன்றினை வெளியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

canihaveadream86061445.jpg

pathivu

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

tamiliamsubas86066200.jpg

அனைத்துலகக் குறும்படவிழாவில் சிறந்த கதைக்கான விருதைபெற்றுக்கொண்ட திரு சுபாஸ் அவர்களுக்கு உளம்நிறைந்த வாழ்த்துகள். மேலும் இது போன்ற படைப்புகள் ஊடாக இன்னும் பல விருதுகளை வென்று ஈழத்தமிழனால் சாதிக்க முடியும் என்பதை பதிவுசெய்ய வாழ்த்துகிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துகள்!!

கலையுலகப் பயணத்தைத் தொடர எமது உறுதுணையை வழங்குவோம்!!

-நமக்கென்றோர் நலியாக் கலையுடையோம்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படத்தை இயக்கியவருக்கு எனது பாராட்டுகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள், பாராட்டுக்கள்.

இக்குறும்படத்தைப் பார்க்க ஆவலாக இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைவரது வாழ்த்துக்களுக்கும், பதிவுகளுக்கும் நன்றிகள்

_________________________________________

BBC Tamil service interview

BBC Singhala service interview

“வன்னி எலி” குறும்படம்பற்றிய மேலதிக தகவல்கள்

இக்குறும்பட விழா பற்றி பங்களாதேஸ் ஆங்கில ஊடகங்களில் வந்த செய்திகள். Press release about 11th international short & ind. film festival Links:

http://www.newagebd.com/2010/mar/14/time.html

http://www.thedailystar.net/newDesign/news-details.php?nid=130088

ஏனைய விருதுகள் Awards:

Won special prize at Periyar short film festival 2009

http://www.modernrationalist.com/2010/january/page12.html

Won special prize at Tamil film festival 2010

http://tamilnet.com/art.html?catid=13&artid=31181

சர்வதேச திரைப்பட விழாக்களில் தேர்வுக்கு உள்ளாகியவை Official selection:

Vibgyor International Film Festival 2010 under theme “Focus of the Year: `South Asia’”

http://www.vibgyorfilm.org/2010/announcement

http://spreadsheets.google.com/pub?key=tf8B7zIXo49PN-LeQpUmNEg&single=true&gid=0&output=html

The European Independent Film Festival 2010 under category European Dramatic Short

http://www.ecufilmfestival.com/en/2010/03/vanni-mouse/

மக்கள் தொலைக்காட்சியில் Makkal TV "10 Nimida Kathaikal" shortfilm competition

தமிழியம் /வன்னிஎலி/ இணையம் Vanni Mouse Official website:

http://www.tamiliam.com/?p=115

வன்னிஎலி குறும்பட முன்னோட்டம் Vanni Mouse official Trailer:

அனைத்துலக திரைப்பட தகவல் திரட்டியில் External Links:

http://www.imdb.com/title/tt1587374/

//இவர் ‘நான் ஒரு கனவு காணலாமா?’ என நோர்வே தமிழ் சிறுபிள்ளை ஒன்றி;னை வைத்து மற்றும் ஒரு குறும்பட ஒன்றினை வெளியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.//

அக்குறும்படத்தின் பெயர் "எனக்கு ஒரு கனவு இருக்கலாமா?"

தகவலுக்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இக்குறும்படத்தின் கதை, கவிதை போல அழகாக உள்ளதென ஏற்கனவே எழுதி இருந்தேன். சிறந்த கதையுள்ள படமாக விருது பெற்றது பொருத்தமான விருதாக உள்ளது. வாழ்த்துக்கள்.

wild life cinematography என்று கூறியுள்ளார்கள். நீங்கள் Animate பண்ணவில்லையா? உங்கள் குறும் படத்தைப்பார்க்க ஆவலாக உள்ளது.

Link to comment
Share on other sites

மேன் மேலும் படைப்புக்கள் தந்து விருதுகள் பெற்றிட வாழ்த்துக்களும் பாரட்டுக்களும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் முப்பரிமான வரை அசைபடம் (3D Animation) செய்யலாம் என தான் நினைத்தோம், உண்மைக்கதையை எடுப்பதால் அதில் animation பாவிப்பதால் பொய்யான ஒரு தோற்றப்பாடு பார்ப்பவர்களுக்கு வந்து விடக்கூடாதென கருதி பல சிரமங்களுக்கு மத்தியிலும் உண்மையான எலிகளையே பாவித்தோம். வெகு விரைவில் ஐரோப்பிய தொலைக்காட்சியில் இக்குறும்படத்தை நீங்கள் பார்க்கமுடியும்.

நன்றி rajeeve, ஈழமகள், சுஜி மற்றும் அனைவருக்கும்

///////////////////

புதினப்பலகையில் ஒரு சந்திப்பு

http://www.puthinappalakai.com/view.php?20100318100720

ஈழத் தமிழர் உருவாக்கிய 'வன்னி எலிகள்' குறும்படம்: அனைத்துலக திரைப்பட விழாவில் விருது

நோர்வேயில் புலம்பெயர்ந்து வாழும் தமிழியம் சுபாஸ் என்ற ஈழத்தமிழ் கலைஞரால் உருவாக்கப்பட்ட 'வன்னி எலிகள்' [Vanni Mouse] குறும்படம், பங்களாதேஸ் நாட்டில் 9 நாட்கள் இடம்பெற்ற, 11வது அனைத்துலக குறும்பட விழாவில் சிறந்த குறும்படத்திற்குரிய விருதினை வென்றுள்ளது.

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த இரண்டு இணைபிரியா எலிகள், பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் அடைத்துவைக்கப்பட்டிருக்கும், வவுனியா மாணிக்கம் பண்ணைக்குள் செல்கின்றன. முட்கம்பிவேலிகளுக்குள், இராணுவச் சுற்றிவளைப்பிற்குள் மக்கள் வதைபடுவதை எலிகள் கண்ணுறுவதான காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழ் மக்கள் இன்று முகம் கொடுக்கும் பாரிய மானிட அவலங்களை வெளியுலகிற்கு தெரியப்படுத்த வேண்டுமென்ற நோக்கத்துடன் இக்குறும்படத்தை தான் உருவாக்கியதாக தமிழியம் சுபாஸ் புதினப்பலகைக்கு தெரிவித்தார்.

வெளியுலகத்திற்கு தெரியாது, முட்கம்பி வேலிகளுக்குள் அப்பாவிப் பொதுமக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள பாரிய மனித அவலங்களை, மனிதத்திற்கு எதிரான கொடுமைகளை, இன அழிப்பு வன்முறைகளை கண்ணுற்று, சாட்சியங்களைச் சுமந்தவாறு அந்த இரு எலிகளும் வதை முகாம்களுக்குள்ளிருந்து வெளிவருவதான குறியீட்டு வடிவ திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

26 அகவையுடைய 'தமிழியம்' சுபாஸ் தனது 13வது அகவையில் தாயகத்தை விட்டு புலம் பெயர்ந்தவர். இதற்கு முன்னரும் சில குறும்படங்களை உருவாக்கியுள்ளார்.

ஈழத்தமிழ் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட கலைப்படைப்பிற்கு அனைத்துலக விருது கிடைத்திருக்கின்றமை இதுவே முதற்தடவையாகும்.

வன்னி எலிகள் குறும்படம் கடந்த ஆண்டு டிசம்பரில் தமிழகத்தில் தந்தை பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை மற்றும் பகுத்தறிவாளர் கழகம் நடாத்திய குறும்பட விழாவில் சிறப்பு விருதினைப் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இரண்டு எலிகளை குறும்படத்தின் மையப்பாத்திரங்களாக உருவகித்து, மிகக்காத்திரமான செய்தியைச் சொல்லியிருக்கின்றமை படைப்பு நேர்த்தி மிக்க குறியீட்டு உத்தியாகும்.

பத்து நிமிடங்கள் நீளமுள்ள இக்குறும்படம் ஆங்கிலம், பிரெஞ், ஜேர்மன் மற்றும் நோர்வேஜியன் ஆகிய நான்கு மொழிகளில் உப தலைப்புடன் [sub title] வெளிவந்துள்ளது.

சுபாஸ் மேலும் கூறுகையில்,

"தாயக மக்களின் அவலத்தை இங்கிருந்தவாறு திரைப்படமாக்குவதில் நடைமுறைச் சிக்கல்கள் நிலவுகின்றமை அனைவரும் அறிந்த விடயம்.

அத்தோடு வித்தியாசமான முறையில் ஒரு படைப்பினைக் கொடுக்கும் போதே, அது அனைத்துலக அவதானிப்பினைப் பெறும் என்ற அடிப்படையிலுமே, இவ்வாறான புதிய உத்தியைக் கையாளும் எண்ணம் தோன்றியது.

இக்குறும்படம் அனைத்துலக விருதினைப் பெற்றிருக்கின்றது என்பதற்கு அப்பால், பல திரைப்பட விழாக்களில் பங்கேற்றிருப்பதன் மூலம், உலகின் சிறந்த படைப்பாளர்கள், கலைஞர்களால் இது பார்க்கப்பட்டிருக்கின்றது,

அவர்களுக்கு எமது மக்களின் அவலத்தை கொண்டு சென்றிருக்கின்றது என்பதே கூடுதல் நிறைவைத் தருகின்ற நிகழ்வு" என சுபாஸ் மேலும் கூறினார்.

இக்குறும்படத்தின் காட்சிப்படுத்தல்களுக்கு இரண்டு உண்மையான எலிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

"வரை கலை தொழில்நுட்பத்தின் [Graphic technology] மூலம் காட்சிகளை உருவாக்கும் எண்ணமே முதலில் எனக்கு இருந்தது. ஆனால் அவை உயிரோட்டமாக அமையாது என்று கருதி பல சிரமங்களுக்கு மத்தியிலும் உண்மையான எலிகளை பயன்படுத்தினேன்" என்கிறார் தமிழியம் சுபாஸ்.

புலம்பெயர் திரைத்துறையை தொழில்முறைத் தேர்ச்சியுடன் வளர்த்தெடுப்பதற்கு படைப்பாளிகளும் கலைஞர்களும் முன்வரவேண்டுமென்ற தனது ஆதங்கத்தையும் சுபாஸ் வெளிப்படுத்தினார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி மக்களின் அவலங்களை உலகறியச் செய்யும் குறும்படம் சர்வதேச விழாவில் விருது பெற்றது சிறப்பானது. எலிகளை வைத்து குறும்படம் தயாரித்த தமிழியம் சுபாஸுக்குப் பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

டாக்கா சர்வதேச குறும்பட விழாவில் சிறந்த படத்துக்கான விருதினை வென்றுள்ளது ஈழத்துக் கலைஞர்கள் உருவாக்கிய வன்னி எலிகள் படம்.

வங்கதேச தலைநகர் டாக்காவில் சௌகத் உஸ்மான் லைப்ரரி அரங்கில் 11வது சர்வதேச குறும்படம் மற்றும் சுதந்திர ஊடகத்துக்கான விழா நடந்தது. இதில் வன்னி எலிகள் என்ற ஈழக் குறும் படமும் பங்கேற்றது.

வன்னிக் காடுகளில் வசிக்கும் இணைபிரியாத இரண்டு எலிகள், மூன்று லட்சம் மக்களை அடைத்து வைத்திருக்கும் வவுனியா வதை முகாம்களுக்குள் யதேச்சையாக செல்கின்றன. முள்வேலிக்குப் பின்னால் அடைக்கப்பட்ட அந்த அப்பாவி தமிழர்கள் படும் சொல்லொனாத் துயரங்களுக்கு மவுன சாட்சியாக நிற்கின்றன அந்த எலிகள்.

வெளியில் சொல்ல முடியாத, யாரும் அத்தனை சுலபத்தில் அறிந்து கொள்ளவும் முடியாத அந்த துயரக் காட்சிகளை காணச் சகிக்காத அந்த எலிகள் அங்கிருந்து எப்படித் தப்பித்தன என்பது 'க்ளைமாக்ஸ்'.

தமிழியம் சுபாஷ் எனற 26 வயது ஈழத் தமிழரால் உருவாக்கப்பட்ட படம் இது. ஏற்கெனவே சென்னையில் நடந்த பெரியார் குறும்பட விழாவில் வன்னி எலிகளுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது.

கடந்த மாதம் நார்வே தலைநகர் ஓஸ்லோவில் நடந்த சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் குறும் படத்துக்கான சிறப்பு விருதினை இந்தப் படம் வென்றது.

சர்வதேச அளவில் குறும்படத்துக்காக விருது வென்ற முதல் ஈழக் கலைஞரின் படம் வன்னி எலிகள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இம்மாத இறுதியில் பாரிசில் நடக்கும் ஐரோப்பிய குறும்பட (டிராமா பிரிவு) விழாவில் பங்கேற்கவும் இந்தப் படம் தகுதி பெற்றுள்ளது.

வன்னி எலிகளுக்குப் பிறகு 'Can I have a Dream?' என்ற குறும் படத்தை இயக்கி வெளியிடுகிறார் சுபாஷ்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள்..........

கொஞ்ச நஞ்ச நம்பிக்கைகளை இப்போது தர கூடிய செய்திகள் இதுபோன்றவைதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைவரது பாராட்டுக்கும் நம்பிக்கைக்கும் நன்றிகள்

இதோ "Can I have a Dream?" "எனக்கு ஒரு கனவு இருக்கலாமா?" குறும்பட முன்னோட்டம்

கதைச்சுருக்கம்:

எனகொரு கனவு இருக்கு! என்றார் மார்ரின் லூதர் கிங் சில சகாப்தங்களிற்கு முன்னர், எனக்கு ஒரு கனவு இருக்கலாமா? கேட்கிறாள் சமகால உலகிடம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமி. ஒரு சிறுமியின் கனவு என்பதற்கப்பால் ஆறு கோடி சிறுவர்களின் கனவை, வயே காட்டுவதே இக்குறும்படம்

Synopsis:

I have a Dream said Martin Luther King Jr a few decades ago. Can I have a Dream? asks a war-affected girl in the modern world. The story shows not only a dream of a small girl, but also the pain and dreams of 6 mill. children.

அன்புடன்

தமிழியம் சுபாஸ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பராட்டுக்கள்.

இந்த உலகம்.. திட்டமிட்டுத்தானே எமது மக்களை துன்புறுத்திச் சாகடித்தது. இந்த இரண்டு எலிகளும் கிளிநொச்சி ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தில் இருந்து அந்த அதிகாரிகள் மக்கள் தடுக்க தடுக்க வெளியேறிய போது வெளியேறி அலைந்து திரிந்த போது இவ்வாறு கண்டன காட்சிகள் என்று போட்டிருந்தால் விருது வழங்கி இருப்பார்களோ தெரியாது.. ஆனால் இன்னும் ஆணித்தரமாக இந்த உலகின் முகமூடியை கிழித்துப் போட்டிருக்கலாம்.

எதுஎப்படியோ.. எமது மக்களின் துயரை போக்கடிக்க முடியாத உலகம் விருது வழங்கி கெளரவிக்கிற அளவில்.. அதனை என்னென்று சொல்வது..! இருந்தாலும் துயரொன்று நடந்ததை உலகுக்கு திறம்பட காட்ட முற்பட்டமை விருதுக்குரியதே.

Link to comment
Share on other sites

படத்தின் முன்னோட்டம் மட்டுமே பார்க்க கிடைத்து... அதுவே மனசுக்கு கஸ்ரமாக இருந்தது...

மனதுக்கை எல்லாருக்கும் எண்ணங்கள் கருத்துக்கள் வலிகள் இருக்கும்... ஆனால் அதை கலையாக்கி எல்லாரையும் பார்க்கும் படி செய்வது சிலரினால் தான் முடியும்... வார்த்தைகளை விட கலைக்கு திறண் அதிகம்...

இயக்கிய நண்பருக்கு வாழ்த்துக்கள்... பணி தொடர வேண்டும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

tamiliamsubas86066200.jpgvmjuryrecitation8607520.jpg

இளம் வயதில் சர்வதேச விருது உட்பட, பல விருதுகளை பெற்றுக்கொண்ட சுபாஸ் அவர்களுக்கு சக தமிழன் என்னும் முறையில், பெருமை அடைவதுடன் , பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன். :rolleyes:

அதிலும், சுபாஸ் எமது அவலத்தை சர்வதேச அரங்கில் கொண்டுபோக எடுத்த முயற்சிக்கு மிக்க நன்றி.

Congratulations-7.gif

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2009 ஜூலை 03 இரவு 10.29 மணி – மானிக்பார்ம் முகாமின் இருளில் இரண்டு எலிகள்:யமுனா ராஜேந்திரன்.

1

2009 மே மாதம் 18 ஆம் திகதி நடந்து முடிந்த முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்பாக, நோர்வேயில் வாழும் இருபத்தி ஐந்து வயது ஈழத்தமிழ் இளைஞரான தமிழியம் சுபாஷ் இயக்கி வெளியிட்டிருக்கும் பத்து நிமிடக் குறும்படம் ‘வன்னி எலிகள்’. இருபத்தி நான்கு வயதை எட்டியிருக்கும் சுபாஷ் தனது பதிமூன்றாம் வயதில் வன்னியிலிருந்து நோர்வே நாட்டுக்குப் புலம் பெயர்ந்தவர். சுபாஷின் பிறிதொரு குறும்படம் ‘நான் ஒரு கனவு காணலாமா?’ எனும் எட்டு நிமிடத் திரைப்படம். வன்னி எலிகள் வங்காள தேசத் தலைநகர் தாக்காவில் பதினோறு நாட்கள் நடைபெற்ற குறும்படம் மற்றும் சுயாதீனத் திரைப்படங்களுக்கான உலகத் திரைப்படவிழாவில் சிறந்த குறும்படக் கதைக்கான விருதைப் பெற்றிருக்கிறது. உலகத் திரைப்பட விழாவொன்றில் விருதுபெற்ற முதல் ஈழத் திரைப்படம் என நிச்சயமாக நாம் வன்னி எலிகள் குறும்படத்தைக் குறிப்பிடலாம்.

வன்னி எலிகள் குறும்படம் இலங்கையின் மானிக்பார்ம் முகாமின் இருளிலிருந்து அம்மக்களின் சித்திரவதையின் இடையிலான துயரவாழ்வைச் சொல்ல, நான் ஒரு கனவு காணலாமா? எனும் குறும்படம் யுத்தங்களால் உலகெங்கிலும் அவயவங்களை இழந்து வாழும் இலட்சோப இலட்சக் கணக்கிலான குழந்தைகளின் சோகவாழ்வைச் சொல்கிறது.

முள்ளிவாய்கால் பேரழிவின் போது ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான ஈழத்தமிழ் பொதுமக்கள் இலங்கை அரச படையினரால் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என ஐக்கிய நாடுகள் அமைப்பில் செயல்பட்ட அதனது ஊழியர்கள் தெரிவித்திருக்கிறார்கள். எந்தவிதமான விசாரணைகளுக்கும் உட்படுத்தப்படாமல், கைது செய்யப்பட்ட அல்லது சரணடைந்த போராளிகள் நேருக்கு நேர் இலங்கை அரச படைகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருப்பதான ஒளிப்பதிவுகளும் வெளியாகி, அதனது நிஜத்தன்மையும் ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வாளர்களால் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. டப்ளின் மனித உரிமை விசாரணைகள் இலங்கை அரசின் மனித உரிமை உரிமை மீறலையும் போர்க்குற்றங்களையும் பட்டியல் இட்டிருக்கிறது.

ஈழத் தமிழ்ப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதான ஊடகச் செய்திகளும் பதியப்பட்டிருக்கிறது. யாழ்ப்பாணத்தில் பள்ளிச் சிறுமியொருவர் இலங்கை அரச படையினரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டார் எனும் குற்றச்சாட்டின் பேரில் படையினர் மூவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். வன்னி நிலப்பரப்பில் முகாமிலுள்ள இலங்கை அரசபடையினருக்கும் அகதிகளுக்கும் இடையிலான மோதலில் இலங்கை ராணுவத்தினர் அகதிகளைத் தாக்குதலுக்குட்படுத்திய சம்பவமும் நடந்திருக்கிறது. பத்திரிக்கையாளர் லசந்த கொல்லப்பட்டிருக்கிறார். ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறையை இலங்கை அரசு ஒரு கொள்கையாகவே கடைப்பிடித்து வருகிறது. கைது செய்யப்பட்டு சந்தேகத்தின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் பெண் போராளிகள் குறித்து அரசு எந்த அறிவிப்பும் வெளியிடாமல் இருப்பதனை இலங்கையின் சிங்களத்தரப்பு இடதுசாரிகள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

ஓரு புறம் இலங்கையில் நடந்து வருகிற பெரும்பான்மை இனத்தின் ஆதிக்கம் கொண்ட தேர்தல்கள் அரசியல் யதார்த்தமெனில், மறுபுறம் அதே அரசினது மனித உரிமை மீறல்களும், சிறுபான்மையின அழிப்பும், மாற்றுக் கருத்தாளர்கள் அழிப்பும் பிறிதொரு அரசியல் யதார்த்தமாக இருக்கிறது. இந்தப் பிறிதொரு அரசியல் யதார்த்தத்தில் வேர்கொண்ட குறும்படம்தான் வன்னி எலிகள் எனும் திரைப்படம்.

2

நோர்வே நாட்டிலுள்ள ஒரு நகரத்தின் அடிக்குமாடிக் குடியிருப்பில் அமர்ந்தபடி, பனிவெளியில் விளையாடும் குழந்தைகளை ஜன்னலினூடே நோட்டமிட்டபடி, தனது தமிழ் அப்பியாசப் புத்தகத்தில் தமிழ் சொற்களை உருவாக்கி எழுதிக் கொண்டிருக்கிறாள் ஒரு சிறுமி. சதுரமான இரும்புக் கம்பிகளை இணைக்கும் கயிறுகளில் தொங்கியபடி ஏறி இறங்கி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் குழந்தைகள். அப்பியாசப் புத்தகத்தில் எழுதிமுடித்த சிறுமி புத்தகத்தின் வலது கீழ்க்கோடியில் கோட்டுருவத்தில் இரண்டு நீள் சடைகள் கொண்ட சிறுமியைக் கீறுகிறாள். வீட்டின் மீது ஆகாயவிமானம் பறக்கிற அல்லது திடுக்கிடும்படியான ஓசையைக் கேட்டு வீட்டுக் கூரையை நோக்கி முகம் உயர்த்துகிறாள் சிறுமி. வானத்தில் இரண்டு காகங்கள் கரைந்தபடி வானத்தின் குறுக்கே பறந்து போகிறது. இப்போது படத்தின் வெண்திரை வெற்றுக் காகிதமாகப் பிரதியீடாகிறது.

திரையின் வலது கீழ் மூலையில் நீள் சடை கொண்ட சிறுமியின் உருவம் உயிர்பெறுவதற்கு முன்னால், இரண்டு வீடுகளின் கூரைகள் மட்டும் தோன்றுகிறது. கூரைகளுக்கு மேலாக வலப்புறத்தில் வரையப்பெறும் சூரியன் அழிக்கப்பட்டு திரையின் இடது மூலையில் வீடுகளுக்கு மேலாகச் சூரியன் தோன்றுகிறது. திரையின் வலது மூலையில் அசையும் சிறுமியின் கோட்டுச் சித்திரத்தைத் தொடர்ந்து ஒரு சிறுவனும் அவர்களது தந்தையும் கோட்டுச் சித்திரமாகத் தோன்றுகிறார்கள். திரையில் விளையாடக் கட்டம் வரைகிறார்கள். தந்தை தெல்லு விளையாட கல்லைத் தேடி எடுத்து வருகிறார். சிறுவனும் சிறுமியும் மாற்றி மாற்றி நொண்டிக் கொண்டு கட்டங்களைத் தாண்டுகிறார்கள். விளையாட்டின் போக்கில் ஒரு கட்டத்தை நோக்கி கல் எழும்போது தலைக்கு மேல் பறந்துபோகும் ஆகாய விமானத்திலிருந்து வீழும் வெடிகுண்டு மண்ணில் விழுந்து வெடிக்க சிறுவனும் தந்தையும் இருந்த சுவடு தெரியாமல் அழிந்து போகிறார்கள். கோட்டுச் சித்திரச் சிறுமி ஒற்றைக் கால் இழந்து சரிகிறாள்.

ஆகாய விமானமும் குண்டுவீச்சும் ஈழக் குழந்தைகளின் கிலியும், இந்தியக் குழந்தைகளின் குதூகலமும் குறித்து ஒப்பீட்டு ரீதியில் பேசிய தமிழக இயக்குனரான சகாதேவனின் சிலோன் குறும்படம் ஞாபகத்தில் வந்துபோகிறது.

இப்போது சிறுமியின் அப்பியாசப் புத்தகத்தின் வலது கீழ் மூலைகளிலெங்கும் எல்லாப் பக்கங்களிலும் கால் இழந்த சிறுமியின் சித்திரம் கீறப்பட்டிருக்கிறது. சிறுமியின் முகம் குளோசப்பில் வருகிறது. தொடர்ந்து தாயின் முகம் குளோசப்பில் வருகிறது. அடுத்த காட்சியில் முழு வீடும் காட்சியினுள் வரும்போது மேஜையின் முன் அமர்ந்திருக்கும்; சிறுமி சக்கரநாற்கலியில் அமர்ந்திருப்பது நமக்குத் தெரிகிறது. இப்போது ஜன்னலில் பிற குழந்தைகள் விளையாடுவதை வேடிக்கை பார்த்த சிறுமி, வெளியில் கை கால்களை வீசி ஏறி இறங்கி விளையாடும் குழந்தைகள் என விஸ்தீரணமாக வந்த காட்சிகளின் அர்த்தம் நமக்குப் புதிதாகத் தெரிகிறது. ‘நடந்தான்’ எனச் சிறுமி எழுதிய சொல்லுக்குப் பிறிதொரு அர்த்தம் இப்போது விரிகிறது.

தாய் சிறுமியின் சக்கரநற்காலியின் கீழ் அமரும்போது இலட்சோப இலட்சம் குழந்தைகள் உலகெங்கிலும் நடக்கிற போர்களில் அவயவங்களை இழக்கிறார்கள் எனும் செய்தியும், அவர்களது தொகை நோர்வே மக்கள் தொகையைப் போல ஆறுமடங்கு அதிகமானது என்கிற செய்தியும் எழுத்துக்களாக எழுகிறது. இது ஈழக் குழந்தைகளின் அவலம் என்பதையும் தாண்டிய, முழு மனுக்குலம் தழுவிய துயரமாக ஒரு பிரபஞ்ச மயமான குறியீடாக ஆகிறது. மார்டின் லூதர் கிங்குக்கு இருந்த கனவு கறுப்பு வெள்ளையாக இருக்க, சிறுமியின் கனவு ஏழு நிறங்களில் மலரும் வானவில்லின் வடிவத்தை ஒத்ததாக இருக்கிறது. இந்தக் கனவின் வடிவம்தான் நான் ஒரு கனவு காணலாமா? எனும் குறும்படம்.

3

ஓரு ஜோடி எலிகள் ஒன்றையொன்று தொடர்ந்தபடி, சில வேளைகளில் தொடரமுடியாது இருளில் தொலைந்தபடி, வன்னி அகதிகள் முகாமான மானிக்பார்ம் முகாமின் கூடாரங்களுக்கு வெளியில் அலைந்து திரிகிறது. முள்கம்பி வேலிகளில் பட்டுத்தெறித்து வறண்ட சருகுகளுக்குள் நுழைந்து துளாவி, எலிகள் ஒன்றையொன்று தமது இணையைத் தேடி அலைந்தபடி இருக்கின்றன.

கூடாரங்களை எலிகள் தாண்டிச் செல்லும்போது மானிக்பார்ம் முகாமில் வதியுறும் அகதிமக்களின் வாழ்வு அவர்களது கூக்குரலாக, அழுகுரலாக, வீறிடலாக இருளிலிருந்து சாவின் ஓலமென எம்மை எட்டுகிறது. தனது தாயிடம் தனது பசியை வெளியிடும் சிறுமி, மாதாவிடம் இறைஞ்சும் கடவுள் பக்தி கொண்ட சிறுமி, அடிமைப்பட்ட மனிதரின் மீட்சிக்கென மனுஷகுமாரனிடம் முறையிடும் மனிதன் என அன்றாட வாழ்வின் அழுகுரல்களை எலிகள் கடந்து போகின்றன.

நாய்கள் தூரத்தில் குரைக்கின்றன. முகாமின் மங்கிய வெளிச்சத்தில் மனித உடல்கள் கிடையாகப் படுத்திருப்பது தெரிகிறது. தொடரும் அழுகுரல் இப்போது ஓலமெனக் கேட்கத் துவங்குகிறது. ‘கொட்டியா, கொட்டியா’ எனச் சொன்னபடி இலங்கைப் படையினர் முகாமிலுள்ள இளைஞர்களை சித்திரவதை செய்கிறார்கள். அலையும் சப்பாத்துக் கால்களும் ஆற்றாமையில் துடிக்கும் கைகால்களும் நிழல்களாகி மறைகின்றன. அடுத்த கூடாரத்தில் தன்னை விட்டுவிட மன்றாடும் பெண்ணின் தீனக்கதறல் உரத்து ஒலிக்க ஒலிக்க, படையினரின் உடல்கள் கும்பலாக பெண் உடலின் மீது வெறிகொண்டு பாலியல் வல்லுறவில் ஈடுபடுகின்றன.

தனது கைத்துப்பாக்கியால் பெண்ணின் குரலை நிரந்தரமாக முடித்துவைக்கிறான் ஒரு படையினன்.

எலிகள் எல்லாவற்றினதும் சாட்சியாக இன்னும் அலைந்து கொண்டிருக்கிறது. அன்று நாள் 2009 ஆம் ஆண்டு ஜூலை மதம் 03 ஆம் திகதி. நேரம் இரவு 10.29 மணி எனும் செய்தி முகாமின் கூடாரங்களின் மீது விழுகிறது.

முகாமுக்கு மனிதர்கள் பதியப்படும்போது அவர்களின் பெயர்களின் மீதான அரச முத்திரை பதிவது போலவே, வன்னி எலிகள் என திரைத் தலைப்பு போடப்படும்போதும் அரச முத்திரை பதிகிறது. மனிதர்கள் இங்கு எலிகளாகவும், எலிகள் இங்கு மனிதர்களாகவும் ஆகிறார்கள். எலிகளுக்கும் மனிதர்களுக்ளும் இடையிலான நிரந்தர யுத்தத்தில் எலிகள் போலவே மனிதர்களும் சில வேளைகளில் வேட்டையாடி அழிக்கப்படலாம். எலிகளை அழிக்க நினைப்போருக்கும் எலிக்குமான பகைமை என்பது அனாதிகாலம் தொட்டு இருந்து வருகிறது. எலிகள் ஒழிந்த உலகம் என்பது சத்தியமேயில்லை.

அடூர் கோபாலகிருஷ்ணனின் ‘எலிப்பத்தாயம்’ திரைப்படமும், உம வரதராஜனின் ‘எலியம்’ சிறுகதையும் மனிதனுக்கு எலிகள் எலுப்பும் கிலி வன்னி எலிகளைப் பார்க்க ஞாபகம் வந்து போகிறது.

4

சுபாஷின் இரண்டு குறும்படங்களும் மிகுந்த தொழில்நுட்பத் தேர்ச்சியுடன் எடுக்கப்பட்ட குறும்படங்கள். பெரும்பாலுமான ஈழக் குறும்படங்களில் பொதுவாகத் தவறுகிற இசைக்காலமும் ( மியூசிக் டைம்) கால உணர்வும் (டைம் சென்ஸ்) குறித்த புரிதலுடன் எடுக்கப்பட்ட குறும்படங்கள் இவை. கதைக் கருவுக்கு இயைந்த வகையிலான கதைசொல்லும் லயமிக்க நெறி இந்தக் குறும்படங்களில் இருக்கிறது.

ஒரு குழந்தையின் மனோ நிலையுடன், அவர்தம் அலைவுறும் மனதின் கற்பனையாற்றலுடன் நான் ஒரு கனவு காண முடியுமா? குறும்படம் உருவாகியிருக்கிறது. இப்படத்தின் தலைப்பை ஒரு குழந்தைதான் கீறுகிறது. நிற நிறமான பென்சில்களில், ‘எனக்கு ஒரு கனவு இருக்கிறது’ (ஐ ஹேவ் எ ட்ரீம்) என ஆங்கிலத்தில் தொடங்கும் தலைப்பு, பிற்பாடாக ‘முடியுமா?’ (கேன்) என அர்த்தம் தரும் சொல்லுடன் புதிய வாக்கியம் அல்லது கேள்வியுடன் (கேன் ஐ ஹேவ் எ ட்ரீம்?) முடிகிறது.

சொற்களை உருவாக்குவதிலுள்ள இந்த நிச்சயமின்மையும் கற்பனையும் குழந்தைகளுக்கு மட்டுமே உரியது. இந்த நிச்சயமின்மையும், நிச்சயங்களை நோக்கிய குழந்தையின் ஏக்கமும் படமெங்கிலும் நிறைந்து கிடக்கிறது. படத்தின் கரு வேறு வேறு விதங்களில் பல்வேறு தமிழக மற்றும் ஈழக் குறும்படங்களில் முன்பே பாவிக்கப்பட்டிருப்பினும், சுபாஷின் இக்குறும்படத்தை மிகச் சிறந்த திரையனுபவமாக மாற்றுவது படத்தின் கச்சிதமான மற்றும் பொருத்தமான குழந்தை மனம் தோய்ந்த கதை சொல்லல் தான்.

வால்ட் டிஸ்னியின் டோம் அன்ட் ஜெர்ரி கார்ட்டூன் படங்களில் மனதைப் பறிகெடுக்காத மனிதர்களே இருக்கமுடியாது. குழந்தைகளின் களங்கமற்ற குறும்புகளையும் வன்முறையையும் நாச வேலைகளையும் அழிவையும் குரூர அழகுடன் செல்லும் படங்கள் பூனையும் எலியும் குறித்த அப்படங்கள். பூனைக்கும் எலிக்கும் மட்டுமல்ல, எலிக்கும் மனிதனுக்குமான போராட்டம் அல்லது யுத்தம் கூட காலம் கடந்து நிகழ்வது, அனாதி காலம் தொட்டு இனியும் தொடர்ந்து செல்வது.

மனிதனும் எலிகளும் எதிர்கொண்டே தீர வேண்டிய ஒரு இருத்தலியல் நெருக்கடி இது. ஹாலிவுட் படமான ‘மௌஸ் ஹன்ட்’ அல்லது எலி வேட்டை இதனால்தான் என்றும் பார்த்து ரசிக்கக் கூடியதாக இருக்கிறது. எலிக்கும் மனிதனுக்குமான சிறைவாழ்வுப் பதட்டம் பற்றிய அடூர் கோபாலகிருஷ்ணனின் சாகாவரம் பெற்ற ‘எலிப்பத்தாயம்’ இதனால்தான் உலகின் சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக இருக்கிறது. எலிகள் ஒரே சமயத்தில் எம்மிடம் குதூகலத்தையும், அறுவறுப்பையும், கிலியையும் உண்டாக்குகிறது. குறைந்தபட்சம் தமது அறைக்குள்ளாவது எலிவேட்டையை நடத்தியிருப்பவர்கள் இந்த மனநிலையைத் உணர முடியும்.

எலிகள் குறித்த இந்தச் சுவாரஷ்யம் சுபாஷிடம் முற்றிலும் வேறுவிதமான அனுபவத்துக்கு மடைமாற்றப் பட்டிருக்கிறது.

படம் துவங்கும்போது திரைமுழுக்கவும் தெரியும் இரும்பு முள்வேலியின் பின்புறம் சருகுகளும், பிளாஸ்டிக் பைகளும் மரக்கொப்புகளும் இரைந்துகிடக்கும் அகதிமக்களின் கூடாரங்களுக்கு வெளியில் குறுகுறுவென நம்மை ஈரக்கும் எலிகள், இறுதியில் பயங்கரமான நினைவுகளை, கையறுநிலையிலான மனநிலையை நம்மிடம் விட்டுவிட்டுப் போய்விடுகிறது…

சுபாஷின் இந்த இரண்டு குறும்படங்களும் குறிப்பாக புகலிட தமிழ் சினிமா வரலாற்றிலும், பொதுவாக ஈழச் சினிமா வரலாற்றிலும் பல்வேறு விதங்களில் முக்கியமான குறும்படங்களாக இருக்கின்றன. 2009 மே 18 பேரழிவின் பின் வந்திருக்கும் குறும்படங்கள் மட்டுமல்ல, இரு படங்களில் ஒன்றான வன்னி எலிகள் குறும்படம் மே 18 பேரழிவுக்குப் பின்னான ஈழத் தமிழர் பாடுகளை முதன்முதலாகப் பதிவு செய்திருக்கிறது.

ஈழத் தமிழர்கள் பல்வேறு உலகக் குறும்பட விழாக்களை லண்டனிலும் கனடாவிலும் நடத்தி வந்தபோதிலும், ஈழத் தமிழர்கள் அல்லாதவர்களால் நடத்தப்பட்ட தாக்கா உலகத் திரைப்பட விழாவில் இப்படம் விருது பெற்றிருப்பதும் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாகவே பதிவுபெறத்தக்கது.

அருந்ததி, ஜீவன், புதியவன் போன்ற புகலிட தமிழ் சினிமா முன்னோடிகளுடனும், காலஞ்சென்ற ஈழ இயக்குனர் ஞானரதன் போன்ற மண்சார்ந்தவர்களுடனும் ஒப்பிடும் போது, சுபாஷ் இவர்களது அடுத்த தலைமுறையைச் சேர்ந்த படைப்பாளி எனச் சொல்லவேண்டும். ஈழத் தமிழர் பாடுகளையும் அடையாளத்தையும் ஞாபகம் கொள்ளும் வகையிலான அடுத்த தலைமுறைப் படைப்பாளி வரிசை, சுபாஷின் வழி, எதிர்கால ஈழத் தமிழர் திரைப்பட வெளியில் படைப்பு சார்ந்த நம்பிக்கை தரும் ஒரு சமிக்ஞையாகத் தோன்றியிருக்கிறது.

http://inioru.com/?p=11750

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

வாழ்த்துகள், பாராட்டுக்கள். உங்கள் குறும்படத்தை முழுமையாக பார்க்க ஆர்வமாய் இருக்கிறது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.