விடிவெள்ளி

ஊருக்குப் போன ஊர்குருவி

Recommended Posts

அநேகமாக இது தமிழர்களின் குணம்

பிரச்சினை தன் கதவை தட்டும்வரை அவர்களுக்கு அடுத்தவர்களுக்கு நடப்பது பற்றி அக்கறையில்லை

அல்லது

அவர்கள் ஏதோ பிழை செய்ததால் நடந்தது என்றே இருப்பர்.

நெடுக் அவர்களின் கருத்துக்களுடன் 100 வீதம் ஆதரிக்கின்றேன்

உங்கள் கருத்து என்னவென்றால் உங்களுக்கு நிகழ்தால் மட்டும் தான் அது உண்மை மற்றவர்களுக்கு நிகழ்ந்தால் அது பற்றி நீங்கள் வருத்தப்படப் போவதில்லை என்பதுதான்.

நாங்கள் கல்லெறியும் வாங்கி இருக்கிறம். சிங்களத்தின் அனைத்துப் பரிமான வன்முறைகளையும் கண்டிருக்கிறோம். ஒட்டுக்குழுக்களின் பிள்ளை பிடியில் இருந்து.. மண்டையன் குழுவின் கோணிப்பை கலாசாரம் தொடங்கி.. கருணாவின் பொம்பிளைப் பொறுக்கி கலாசாரம் வரை கண்டிருக்கிறோம். உங்களுக்கு என்று ஒன்று நடக்கும் போதுதான் அதை உண்மை என்று நம்பவும் அதுவரை நடிக்கவும் கற்றுக் கொண்ட போலித் தமிழர்களாக வாழும் நிலையில் நாங்கள் இல்லை. ஏனெனில் நாங்கள் கல்லெறிபட்ட மக்கள். எம்மோடு கல்லெறி வாங்கியவர்களையும் அதன் வலிகளையும் உணர்ந்திருக்கிறோம். இதுதான் உங்களுக்கும் எங்களுக்கும் உள்ள வேறுபாடு.

இருந்தும் நாங்கள் எங்கள் மக்களின் வலியை.. போராளிகளின் தியாகத்தை.. போராட்டத்தை காட்டிக் கொடுத்து போராளிகள் மீது பழிசொல்லி வாழ நினைக்கவும் இல்லை. அதுவே போராட்டத்திற்கு செய்த ஒரு நற்காரியம் என்று நான் நினைக்கிறேன்.[/quote]

  • Like 2

Share this post

Link to post
Share on other sites

வணக்கம் விடிவெள்ளி,

முதலில் உங்கள் பயண அனுபவங்களை எம்முடன் பகிரத் தொடங்கியமைக்கு நன்றிகள். பல முகவரி தேடும் இணையத்தளங்கள் பரபரப்பிற்காக அதீதமாக எடுத்துவிடும் புனைவுகளை நம்பியவர்களுக்கு, தங்கள் அனுபவங்கள் எரிச்சலைத் தான் தரும். பிரான்சிலுள்ள வானொலி ஒன்றின் அறிவிப்பாளர்கள் பலர் தமது நிகழ்ச்சிகளில் எப்போதும் இலங்கை சென்றால் விமானநிலையத்தில் வைத்து எப்படியெல்லாம் சித்திரைவதைகள் செய்கின்றார்கள் என்று கதையளப்பதையே தலையாயகடன் போல நினைப்பவர்கள். நேற்றும் ரங்கன் என்ற இயற்பெயர் கொண்ட அறிவிப்பாளர் இப்படிக் கதையளக்க, வந்த நேயர் ஒருவர் அபு்படியாயின் நீங்கள் சமீபத்தில் எப்படி உங்கள் தம்பியை(அரசு கைதுசெய்து வைத்திருந்த போராளிகளில் இவரும் ஒருவவர்) அரசிடமிருந்து மீட்டு வந்தீர்கள் எனக் கேள்வி கேட்டதும், தனிநபர் விடயங்களுக்கு பதிலளிக்க முடிடியாதென்று அழைப்பைத் துண்டித்துவிட்டார். அத்துடன் அந்த வானொலியயின் பல அறிவிப்பாளர்கள் சமீப காலங்களில் தாயகம் சென்று திரும்பியுமுள்ளார்கள். தற்போது கூட காலஞ்சென்ற பிரபல இலங்கை வானொலி அறிவிப்பாளரின் பெயர் கொண்ட அறிவிப்பாளரும் தாயகத்தில் தான் பலவாரங்களாக நிற்கின்றார். இவர்கள் உண்மைகளை ஒத்துக் கொண்டால், எப்படி நேயர்களை முட்டாள்களாக்கி தொடர்ந்து பணம் சுருட்ட முடியும்?? இப்போதுள்ள முக்கிய பிரைச்சினையே பணச்சுருட்டல். அதற்குத் தேவை சாதகமான நிலைமைகள் அல்ல பாதகமான நிலைமைகளே. நீங்கள் உங்கள் உண்மையான அனுபவங்களை தொடர்ந்து எழுதுங்கள்.

:unsure:

எங்கே ஓடோடிவந்து சிவப்புப்புள்ளியிடும் சீமான்களே உங்க கைவரிசையை எனது கருத்திற்கும் காட்டிவிடுங்களேன். :)

:)

எங்கே ஓடோடிவந்து சிவப்புப்புள்ளியிடும் சீமான்களே உங்க கைவரிசையை எனது கருத்திற்கும் காட்டிவிடுங்களேன். ^_^

எப்படி இதன் மூலம் பணம் சுருட்ட முடியும் புரியவில்லையே, :unsure::) முடிந்தால் புரிய வைக்கவும், தங்ககள் விருப்பதுக்கு அமைய ஒரு சிவப்பு குத்தியுள்ளேன். :o

Share this post

Link to post
Share on other sites

வணக்கம் விடிவெள்ளி,

முதலில் உங்கள் பயண அனுபவங்களை எம்முடன் பகிரத் தொடங்கியமைக்கு நன்றிகள். பல முகவரி தேடும் இணையத்தளங்கள் பரபரப்பிற்காக அதீதமாக எடுத்துவிடும் புனைவுகளை நம்பியவர்களுக்கு, தங்கள் அனுபவங்கள் எரிச்சலைத் தான் தரும். பிரான்சிலுள்ள வானொலி ஒன்றின் அறிவிப்பாளர்கள் பலர் தமது நிகழ்ச்சிகளில் எப்போதும் இலங்கை சென்றால் விமானநிலையத்தில் வைத்து எப்படியெல்லாம் சித்திரைவதைகள் செய்கின்றார்கள் என்று கதையளப்பதையே தலையாயகடன் போல நினைப்பவர்கள். நேற்றும் ரங்கன் என்ற இயற்பெயர் கொண்ட அறிவிப்பாளர் இப்படிக் கதையளக்க, வந்த நேயர் ஒருவர் அபு்படியாயின் நீங்கள் சமீபத்தில் எப்படி உங்கள் தம்பியை(அரசு கைதுசெய்து வைத்திருந்த போராளிகளில் இவரும் ஒருவவர்) அரசிடமிருந்து மீட்டு வந்தீர்கள் எனக் கேள்வி கேட்டதும், தனிநபர் விடயங்களுக்கு பதிலளிக்க முடிடியாதென்று அழைப்பைத் துண்டித்துவிட்டார். அத்துடன் அந்த வானொலியயின் பல அறிவிப்பாளர்கள் சமீப காலங்களில் தாயகம் சென்று திரும்பியுமுள்ளார்கள். தற்போது கூட காலஞ்சென்ற பிரபல இலங்கை வானொலி அறிவிப்பாளரின் பெயர் கொண்ட அறிவிப்பாளரும் தாயகத்தில் தான் பலவாரங்களாக நிற்கின்றார். இவர்கள் உண்மைகளை ஒத்துக் கொண்டால், எப்படி நேயர்களை முட்டாள்களாக்கி தொடர்ந்து பணம் சுருட்ட முடியும்?? இப்போதுள்ள முக்கிய பிரைச்சினையே பணச்சுருட்டல். அதற்குத் தேவை சாதகமான நிலைமைகள் அல்ல பாதகமான நிலைமைகளே. நீங்கள் உங்கள் உண்மையான அனுபவங்களை தொடர்ந்து எழுதுங்கள்.

:unsure:

எங்கே ஓடோடிவந்து சிவப்புப்புள்ளியிடும் சீமான்களே உங்க கைவரிசையை எனது கருத்திற்கும் காட்டிவிடுங்களேன். :)

வசம்பண்ணா பணம் சுருட்டல் வெளிநாடுகளில் மட்டுமா நிகழ்கிறது. டக்கிளஸ் தேவானந்தா சுருட்டவில்லையா.. சித்தார்த்தன் சுருட்டவில்லையா.. உமாமகேஸ்வரன் சுருட்டவில்லையா.. அதற்காக ஈழத்தில் தமிழர்கள் நிம்மதியாக இருக்கிறார்கள் என்று காட்டவா முடியும்.

நிம்மதி வாழ்வென்பது.. பிச்சைக்காரனுக்கு திருப்தியான பிச்சை கிடைப்பதில் இருக்கும். பணக்காரனிற்கு மாளிகை வீட்டில் வாழ்வதில் இருக்கும். அதுபோலத்தான்.. தமிழர்களிலும் எல்லோரும் போராட்டத்தில் பங்கெடுத்தவர்கள் அல்ல. ஆனாலும் பங்கெடுக்காமல் வளமான வாழ்க்கையை வெளிநாட்டில் தேடிக் கொண்டவர்களே அதிகம்.

அண்மையில் கூட வயதான ஒரு தமிழ் பெண்மணிக்கு உதவுவதாகக் கூறி அவரிடம் இருந்த 100 டொலர்களை பறித்துக் கொண்டு விட்டுள்ளது கட்டுநாயக்காவில் பணியாற்றும் சிங்களக் கூலியாட் கூட்டம். அதை பொலீஸில் முறையிடச் சென்றவரிற்கு கிடைத்த பதில் நீங்கள் வெளிநாட்டில் புலிகளுக்கு உதவிசெய்துவிட்டுத்தானே வருகிறீர்கள் என்பது. இப்படியான சம்பவங்கள் எல்லோருக்கும் ஏற்படுவதில்லை. டக்கிளஸ் தேவானந்தாவின் கூலியாட்கள்.. சித்தார்த்தனின் கூலியாட்களுக்கு வாகனம் வந்தால் சரி. சோதனை இன்றி அவர்கள் போக வேண்டிய இடம் போகலாம். இப்படியும் இருக்கு வசம்பண்ணன். அதையும் சொல்லுங்கோ. அதுதான் நடுநிலை. :)

Edited by nedukkalapoovan

Share this post

Link to post
Share on other sites

கல்லெறிபட்ட மக்கள் இன்னும் அதிகம் ஊரோடுதான் வாழ்கிறார்கள். கல்லெறிபடாமல் காலை தூக்கிக் கொண்டோடியவர்கள் தான் புலம்பெயர் தேசங்களில் அதிகம். இதுதான் யதார்த்தம்

நாங்கள் கல்லெறியும் வாங்கி இருக்கிறம்.

நெடுக்கால போவான் உங்களிடம் எனக்கு பிடித்தது இந்த உண்மையை ஒத்துக்கொள்வது தான். பிடிக்காதது நாங்களும் கல்லெறி வாங்கியது என்று பொய் சொல்வது. :unsure::)

Edited by vidivelli

Share this post

Link to post
Share on other sites

ஏதோ கடத்துறாங்கள் வெட்டுறாங்கள் கருக்குகின்றார்கள் என்று கூக்குரலிட்டு இணையம் இணையமாக புலம்பி திரிந்தீர்கள் ? நான் இவ்வளவு தடவைகள் சத்தமேதும் இல்லாமல் போய் வந்துவிட்டேன் அப்போ ஏன் இவைகள் எனக்கு நடக்கவில்லை? அப்போ நான் என்ன ஒட்டுக்குழு என்று சொல்கின்றீர்களா? ஏதோ சில பிரச்சினையான ஆட்களுக்கு இப்படியானவைகள் நடந்திருக்கலாம். அதற்காக ஒட்டு மொத்த புலம்பெயர் தமிழர்களுக்கும் இது தான் நிலை என்று புலம்பித்திரியக்கூடாது.

விடிவெள்ளி, உங்கள் பயண அனுபவப் பகிர்வு உங்கள் தனிப்பட்ட விருப்பம், நான் அதை எதுவும் சொல்லப் போவதில்லை. ஆனால் இந்த "எனக்கு நடக்கவில்லை..அதனால் பெரும்பாலும் அது நடப்பதில்லை" என்ற வாதம் உங்கள் "அறிவின் வறுமையை"க் காட்டி நிற்குது. நீங்கள் சிறிலங்கா போன அதே காலப் பகுதியில் நானும் போனேன். பேலியகொட பாலத்தடியில் மறித்த சிங்கள ராணுவத்தினன் எங்களிடம் "எங்களுக்கு தமிழ் சிங்கள முஸ்லிம் வேறுபாடெல்லாம் கிடையாது" என்று சிங்களத்தில் சொன்னான். நாங்கள் தங்கி நிற்க வேண்டிய வீட்டைத் தேடிப் போனோம். அதே தெருவில் மூன்று வீடு தள்ளியுள்ள ஒரு வீட்டில் செத்த வீடு. ஒரு வாரத்திற்கு முன்னம் காசு கேட்டுக் கடத்திப் போன தமிழ் பொறியியலாளர் ஒருவரை காசு தரவில்லை என்று கொன்று இறப்பர் தோட்டத்தில் போட்டு விட்டார்களாம். உயிரைக் கடவுளிடம் ஒப்படைத்து விட்டு ஒரு மாதம் நின்று போன அலுவலை முடித்த பின்னர், கட்டு நாயக்காவிலிருந்து துபாய் வந்து சேர்ந்த பின்னர் தான் எங்களுக்கு பாதுகாப்புணர்வே வந்தது. வந்து ஒரு வாரம் கழித்து அதே தெருவில் ஒரே வீட்டில் வந்து தங்கியிருந்த பிரெஞ்சு மற்றும் நோர்வே நிரந்தர வதிவாளர்கள் இருவரைக் கடத்திப் போக முயற்சி நடந்து தோற்றிருக்கிறது. ஆனால் "எங்கே போய் விடுவீர்கள் பார்க்கிறோம்.." என்று கடவுச் சீட்டுகளைப் பறித்துப் போய் விட்டார்கள். பின்னர் அவர்களை அந்தந்த நாட்டுத் தூதரகங்கள் தான் தங்களுடன் வைத்திருந்து வெளியே அனுப்பி வைத்தார்கள். பத்துப் பேர் ஊருக்குப் போய் ஒரு மூன்று பேருக்கு ஏதும் நடந்தால் மிச்ச ஏழு பேரும் பாதுகாப்பாய்த் தானே இருந்தார்கள் என்று நினைப்பது மனோவியல் ரீதியில் "பொசிடிவ்' சிந்தனையாக இருக்கலாம். ஆனால் ஒருவருமே கடத்தப் படவோ அல்லது கொல்லப் படவோ கூடாது, அது தான் பாதுகாப்பு என்பதன் அர்த்தம். இந்தப் பாதுகாப்புக்காகத் தான் நீங்கள் வெளிநாட்டில் இருக்கிறீர்கள் இல்லையா? அதை விட்டிட்டி எனக்கு நடக்கேல்ல அதால நான் நம்ப மாட்டன் எண்டால் "என் வீட்டு வாசலில் நெருப்பு வரும் வரை நான் எதுவும் செய்ய மாட்டேன்" என்பது மாதிரி இருக்கு!

Share this post

Link to post
Share on other sites

எப்படி இதன் மூலம் பணம் சுருட்ட முடியும் புரியவில்லையே, :unsure::) முடிந்தால் புரிய வைக்கவும், தங்ககள் விருப்பதுக்கு அமைய ஒரு சிவப்பு குத்தியுள்ளேன். ^_^

உங்களைப் போல அநியாயத்திற்கு அப்பாவியாக இருக்கக் கூடாதுங்க. வானொலிகளைக் கேட்பதேயில்லையா?? அவர்கள் உங்களை உசுப்பிவிடுமளவிற்குச் செய்திகளைச் சொன்னால்த் தானே, நீங்களும் நிகழ்ச்சிகளுக்கு கண்மண் தெரியாமல் பணங்களை அள்ளி வழங்கி ஆதரவு வழங்குவீர்கள். GTV "கரம் கொடுப்போம், வடம் பிடிப்போம்" என்று பச்சையாகவே சுருட்டுகின்றதே தெரியவில்லையா??

:) உங்க தாராளள மனப்பான்மைக்கு மனமார்ந்த நன்றிங்க. :o

Share this post

Link to post
Share on other sites

நெடுக்கால போவான் உங்களிடம் எனக்கு பிடித்தது இந்த உண்மையை ஒத்துக்கொள்வது தான். பிடிக்காதது நாங்களும் கல்லெறி வாங்கியது என்று பொய் சொல்வது. :unsure::)

இந்தளவில் தான் உங்களுக்கு மற்றவரின் வலி புரிகிறது எனும் போது உங்களைச் சொல்லி குற்றமில்லை. உங்களை உருவாக்கிய சமூகம் அப்படி என்பதையே என்னால் உணர முடிகிறது. வேதனைப்படுகிறேன். உங்களிற்காக அல்ல. உங்களை உருவாக்கிய இந்த தமிழ் சமூகத்தின் நிலை எண்ணி.

Share this post

Link to post
Share on other sites

வசம்பண்ணா பணம் சுருட்டல் வெளிநாடுகளில் மட்டுமா நிகழ்கிறது. டக்கிளஸ் தேவானந்தா சுருட்டவில்லையா.. சித்தார்த்தன் சுருட்டவில்லையா.. உமாமகேஸ்வரன் சுருட்டவில்லையா.. அதற்காக ஈழத்தில் தமிழர்கள் நிம்மதியாக இருக்கிறார்கள் என்று காட்டவா முடியும்.

இருக்கலாம் இவர்கள் சுருட்டி இருக்கலாம். அவர்கள் ஏற்கனவே சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள். அவர்கள் யார் என்று முத்திரை குத்தப்பட்டவர்கள். விடயம் என்னவென்றால் வசமாக சுருட்ட உங்களுக்கு சந்தர்ப்பம் ஒன்று கிடைத்தால் என்ன நீங்கள் புத்தன் அல்லது கர்னன் ஆகிவிடுவீர்களோ? அது சரி வன்னியில் பெரும் புள்ளிகளாக வலம் வந்தவர்கள் யார் கோடீசுவரர்கள் இல்லை? வன்னியின் மூத்த பெரும் புள்ளி மூன்றெழுத்து பெயர் கொண்டவர் கடைசியில் டி என்று பெயர்கொண்டவர் கடைசி காலத்துக்கு சற்று முன் ஒரு இராவு படகொன்றில் பெருமளவு பணம் நகைகளுடன் தப்பிச் செல்ல எடுத்த முயற்சி தோல்வியில் முடிவடைந்தது தெரியுமா உங்களுக்கு?

பணம் என்றால் பிணமும் வாயை ஆ என்று காட்டும் என்பதை மறவாதீர்கள்.

Share this post

Link to post
Share on other sites

விடிவெள்ளி

தாங்கள் தங்களது பயண அனுபவம் பற்றி எழுதுவதில் இங்கு எவருக்கும் வருத்தமில்லை

ஆனால் அதனூடாக

அங்கு தமிழ்களுக்கு பிரச்சினை இல்லை என்பதும்

தவறாக நாம் வழிநடத்தப்பட்டுள்ளோம் என்பதும் தான் இடிக்கிறது

இதனால்தான் ஆரம்பத்திலிலேயே எழுதினேன் தப்பான ஆரம்பம் என்று.

இலங்கையில் ஏதுமே தமிழருக்கு நடப்பதில்லை

அவர்கள் எங்கும் எதிலும் செல்லலாம் என்பது கண்ணை மூடி பால்குடிப்பது போன்றது

வசம்பு அவர்களே

இது தங்களுக்கும்தான்

Share this post

Link to post
Share on other sites

வசம்பண்ணா பணம் சுருட்டல் வெளிநாடுகளில் மட்டுமா நிகழ்கிறது. டக்கிளஸ் தேவானந்தா சுருட்டவில்லையா.. சித்தார்த்தன் சுருட்டவில்லையா.. உமாமகேஸ்வரன் சுருட்டவில்லையா.. அதற்காக ஈழத்தில் தமிழர்கள் நிம்மதியாக இருக்கிறார்கள் என்று காட்டவா முடியும்.

நீஙகள் குறிப்பிடுவது போல் டக்ளஸ் மற்றும் சித்தார்த்தன் போன்றோர் சுருட்டுவதாக நான் அறியவில்லை. அதுவும் சித்தார்த்தனிடம் வேண்டிய அளவிற்கு பணம் இருக்கின்றது. ஆனால் குறிப்பிட்ட இந்தக் கட்சிகளின் தொண்டர்கள் கப்பம் வசூலிப்பதாகத் தான் நான் அறிந்தேன். இதுவிடயமாக டக்ளஸ் மற்றும் சித்தார்த்தன் போன்றோர் சுவிசிற்கு வந்த போது நேரடியாகக் கேட்டுமுள்ளேன். அவர்கள் அதனை முற்றாக மறுக்கவில்லை, தாம் நிச்சயமாக இதுபற்றி நடவடிக்கை எடுப்பதாகவும் சொன்னார்கள். கப்பம் வசூலிப்பதை எவர் செய்தாலும் அதை நியாயப்படுத்த முடியாது. சுவிசிலுள்ள மேலே குறிப்பிட்ட கட்சியொன்றின் ஆதரவாளர் திருப்பி என்னிடம் கதைக்கும் போது கேட்டார் இன்று தளத்தில் நின்று மக்களுக்கு சேவை செய்பவர்கள் அவர்கள். அவர்கள் சிலவேளை தமது செலவுகளுக்கு கப்பம் கேட்டிருக்கலாம் அது தப்பா?? எனவும் புலிகள் வரி என்ற பெயரில் தமது ஆடம்பரங்களுக்கு வசூலித்தபோது எவர் தட்டிக் கேட்டீர்கள் எனவும் கேட்டார். அப்போது நானும் திருப்பிக் கேட்டேன், புலிகள் தவறு செய்தார்களென்றால், நீங்களும் தவறு செய்யலாமென்கின்றீர்களா?? என்று. அதற்கு அவர் பதில் ஒன்றும் சொல்லவில்லை. நீங்கள் குறிப்பிடும் கப்பம் வாங்குவோர் மக்களிடையே நின்று எதையாவது செய்கின்றார்கள். ஆனால் வெளிநாடுகளில் பல ஊடகங்களும், கோவில்களும் அந்த மக்களுக்கு உதவவென்று விசேட நிகழ்ச்சிகளும், விசேட பூசைகளும் நடாத்தி வசூலித்த பணத்தை அப்படியே சுருட்டியதையும், கப்பத்தையும் எவ்வாறு நீங்கள் ஒன்றாக கருதுகீன்றீர்கள். தற்போது கூட பிரித்தானியாவில், 9 பாற்குடங்கள் எடுத்தால் 10வது பாற்குடம் இலவசமென்றும், இந்தப் பணமனைத்தும் வன்னி மக்களுக்கு உதவுவதற்காகவே என்று அதிரடி அறிவிப்புச் செய்து வசூல் வேட்டை நடத்துகின்றார்கள். ஆனால் இதில்க் கூட ஒன்றும் சென்று சேரப்போவதில்லை. இவற்றையெல்லாம் நீங்கள் நியாயப்படுத்தப் போகின்றீர்களா??

Share this post

Link to post
Share on other sites

விடிவெள்ளி

தாங்கள் தங்களது பயண அனுபவம் பற்றி எழுதுவதில் இங்கு எவருக்கும் வருத்தமில்லை

ஆனால் அதனூடாக

அங்கு தமிழ்களுக்கு பிரச்சினை இல்லை என்பதும்

தவறாக நாம் வழிநடத்தப்பட்டுள்ளோம் என்பதும் தான் இடிக்கிறது

இதனால்தான் ஆரம்பத்திலிலேயே எழுதினேன் தப்பான ஆரம்பம் என்று.

இலங்கையில் ஏதுமே தமிழருக்கு நடப்பதில்லை

அவர்கள் எங்கும் எதிலும் செல்லலாம் என்பது கண்ணை மூடி பால்குடிப்பது போன்றது

வசம்பு அவர்களே

இது தங்களுக்கும்தான்

இங்கே எவரும் தமிழர்களுக்கு இலங்கையில் பிரைச்சினையில்லை,அங்கே தேனும் பாலும் ஓடுகின்றதென்று சொல்லவரவில்லையே. இருக்கும் பிரைச்சினைகளை,அதீத கற்பனையில் மேலும் மெருகேற்றி இலங்கையில் தமிழர்களே வாழ முடியாதென்று கதையளக்கும் தங்களைப் போன்றோரின் கருத்தைத் தான் மறுதலிக்கின்றோம். இன்று இலங்கையில் தமிழர்களுக்கு மட்டுமா பிரைச்சினை?? சிங்கள மக்களுக்கு இல்லையா?? சமீபபத்தில் ஒரு காணொளி பார்த்தேன்,அதில் புத்தபிக்குமாருக்கே ஆடைகளைப் பிடித்திழுத்து காவற்துறையினர் பொல்லுகளால் சரமாரியாக தாக்குதல்கள் நடாத்துகின்றார்கள். எனவே உண்மைகளை உள்ளபடி உண்மைகளாக எழுதுங்கள். வெறும் பரபரப்பிற்காகவும் பணப்பறிப்பிற்காகவும் மிகைப்படுத்தி பொய்களை எழுத வேண்டாமென்பதே எங்களைப் போன்றோரின் வேண்டுகோள். இந்த வேண்டுகோள் உங்களுக்கு மட்டுமல்ல,உங்களைப் போன்ற அனைவருக்குமே........

Share this post

Link to post
Share on other sites

நீஙகள் குறிப்பிடுவது போல் டக்ளஸ் மற்றும் சித்தார்த்தன் போன்றோர் சுருட்டுவதாக நான் அறியவில்லை. அதுவும் சித்தார்த்தனிடம் வேண்டிய அளவிற்கு பணம் இருக்கின்றது. ஆனால் குறிப்பிட்ட இந்தக் கட்சிகளின் தொண்டர்கள் கப்பம் வசூலிப்பதாகத் தான் நான் அறிந்தேன். இதுவிடயமாக டக்ளஸ் மற்றும் சித்தார்த்தன் போன்றோர் சுவிசிற்கு வந்த போது நேரடியாகக் கேட்டுமுள்ளேன். அவர்கள் அதனை முற்றாக மறுக்கவில்லை, தாம் நிச்சயமாக இதுபற்றி நடவடிக்கை எடுப்பதாகவும் சொன்னார்கள். கப்பம் வசூலிப்பதை எவர் செய்தாலும் அதை நியாயப்படுத்த முடியாது. சுவிசிலுள்ள மேலே குறிப்பிட்ட கட்சியொன்றின் ஆதரவாளர் திருப்பி என்னிடம் கதைக்கும் போது கேட்டார் இன்று தளத்தில் நின்று மக்களுக்கு சேவை செய்பவர்கள் அவர்கள். அவர்கள் சிலவேளை தமது செலவுகளுக்கு கப்பம் கேட்டிருக்கலாம் அது தப்பா?? எனவும் புலிகள் வரி என்ற பெயரில் தமது ஆடம்பரங்களுக்கு வசூலித்தபோது எவர் தட்டிக் கேட்டீர்கள் எனவும் கேட்டார். அப்போது நானும் திருப்பிக் கேட்டேன், புலிகள் தவறு செய்தார்களென்றால், நீங்களும் தவறு செய்யலாமென்கின்றீர்களா?? என்று. அதற்கு அவர் பதில் ஒன்றும் சொல்லவில்லை. நீங்கள் குறிப்பிடும் கப்பம் வாங்குவோர் மக்களிடையே நின்று எதையாவது செய்கின்றார்கள். ஆனால் வெளிநாடுகளில் பல ஊடகங்களும், கோவில்களும் அந்த மக்களுக்கு உதவவென்று விசேட நிகழ்ச்சிகளும், விசேட பூசைகளும் நடாத்தி வசூலித்த பணத்தை அப்படியே சுருட்டியதையும், கப்பத்தையும் எவ்வாறு நீங்கள் ஒன்றாக கருதுகீன்றீர்கள். தற்போது கூட பிரித்தானியாவில், 9 பாற்குடங்கள் எடுத்தால் 10வது பாற்குடம் இலவசமென்றும், இந்தப் பணமனைத்தும் வன்னி மக்களுக்கு உதவுவதற்காகவே என்று அதிரடி அறிவிப்புச் செய்து வசூல் வேட்டை நடத்துகின்றார்கள். ஆனால் இதில்க் கூட ஒன்றும் சென்று சேரப்போவதில்லை. இவற்றையெல்லாம் நீங்கள் நியாயப்படுத்தப் போகின்றீர்களா??

ஓம் வசம்பண்ணா. டக்கிளஸ் தேவானந்தா.. சித்தார்த்தன்.. மாணிக்கதாசன் எல்லாரும் நேர்மையா அரசியல் செய்து ஒரு ரூபாய் சம்பளத்தில பிச்சை எடுத்து சீவிச்சவை.. சீவிக்கினம். அதை நீங்களே உறுதிப்படுத்தி இருக்கிறீங்க. பிறகென்ன. ஆனால் புலம்பெயர் நாடுகளில் மட்டும் உங்களுக்கு சொல்லிப் போட்டு சுருட்டினம்.

டக்கிளஸ் தேவானந்தா.. மானிப்பாயிலில கோவில கொள்ளை அடிச்சதாவது தெரியுமோ இல்ல.. அது புலிகளுக்கு பயந்து இவற்ற பாதுகாப்பில கொண்டு போய் வைச்சது என்ன அண்ண.

எல்லாம் புலிகளும் புலிகளிண்ட வாலுகளும் தான் சுருட்டினது. சுட்டது. மண்டையில போட்டது. நாங்கள் ஓரமா குந்தி இருந்து சோத்துப் பார்சல் அவுத்ததும். பெட்டையள இழுத்துக் கொண்டு வெளிநாடு ஓடினதும். ஒரிசாவுக்கு ஓடினதும். கொழும்புக்கு போய் குண்டாஸ் செய்து அரசியல் நடத்தினதும். என்னண்ணா. நல்ல சேவை. இதால தான் இப்ப தமிழ் மக்கள் கொஞ்சம் என்றாலும் சனநாயகக் காற்றை சுவாசிக்க முடிஞ்சிருக்குது. நீங்கள் சொன்னா சரியாத்தான் இருக்கும் வசம்பண்ணா.

எல்லாம் காலம் வசம்பண்ணா காலம். நீங்கள் கெட்டதும் இல்லாமல் மற்றவனும் கெடனும் என்று நினைக்கிறீங்க பாருங்க.. அங்க நிற்குதண்ணா உங்கட சனநாயகம்..! நடு(ங்கு)வு நிலைமை.:unsure::)

Edited by nedukkalapoovan

Share this post

Link to post
Share on other sites

இன்று இலங்கையில் தமிழர்களுக்கு மட்டுமா பிரைச்சினை?? சிங்கள மக்களுக்கு இல்லையா?? ]

இலற்கையில் சிங்களவரும் தமிழரும் சமன் என்கின்றீர்கள்...

நன்றியண்ணா

எனக்கு இப்பத்தான்5 வயது படித்துப்போட்டு வந்து கதைக்கிறன்

Edited by விசுகு
  • Like 1

Share this post

Link to post
Share on other sites

நீங்கள் சொல்லுறத நம்பி, உங்கட ரவல்ஸ்மூலம் ஊருக்கு போய் ஏதவது நடந்தால், போறவருக்கு நஸ்டஈடு வழங்குவீர்கள் என்றால் ஊருக்கு போகலாம் என்ற பிரச்சாரத்தை தொடரவும் :):)^_^

:unsure:நீங்கள் பிரான்சிலுள்ள தமிழ் ஒலி வானொலியைத் தொடர்பு கொண்டால், அவர்கள் எப்படி இலங்கைக்குச் சென்று திரும்பலாமென்ற இரகசியங்களை இரகசியமாகச் சொல்லித் தருவார்கள். :o:D

பி.கு: அவசரப்பட்டு நிகழ்ச்சியில் சென்று இது விடயமாகக் கேட்டுவிடாதீர்கள். காரியாலயத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டுப்பாருங்கள்.

Share this post

Link to post
Share on other sites

வெறும் பரபரப்பிற்காகவும் பணப்பறிப்பிற்காகவும் மிகைப்படுத்தி

அதையும் செலவுக்காகத்தானே என்று சில நாளைக்குப்பின் தாங்கள் வாதிடக்கூடும்

எனவே ஊழல், லஞ்சம், பணப்பறிப்பு, கடத்தி கப்பம் கேட்டல்,..... என்பனபற்றி தங்களுக்கு எழுதி என்ன பிரயோசனம் அண்ணை...

Share this post

Link to post
Share on other sites

இலற்கையில் சிங்களவரும் தமிழரும் சமன் என்கின்றீர்கள்...

நன்றியண்ணா

எனக்கு இப்பத்தான்5 வயது படித்துப்போட்டு வந்து கதைக்கிறன்

:unsure:நான் எழுதிய கருத்தை வாசித்து விளங்க முடியாமல் உள்ளீர்கள் என்பது நன்றாகவே புரிகின்றது. என்ன செய்வது புத்திக்கு எட்டிய மட்டுமே புரிந்து கொள்ளலும் இருக்கும். :):)

Share this post

Link to post
Share on other sites

உங்களைப் போல அநியாயத்திற்கு அப்பாவியாக இருக்கக் கூடாதுங்க. வானொலிகளைக் கேட்பதேயில்லையா?? அவர்கள் உங்களை உசுப்பிவிடுமளவிற்குச் செய்திகளைச் சொன்னால்த் தானே, நீங்களும் நிகழ்ச்சிகளுக்கு கண்மண் தெரியாமல் பணங்களை அள்ளி வழங்கி ஆதரவு வழங்குவீர்கள்.

வணக்கம் விடிவெள்ளி,

பிரான்சிலுள்ள வானொலி ஒன்றின் அறிவிப்பாளர்கள் பலர் தமது நிகழ்ச்சிகளில் எப்போதும் இலங்கை சென்றால் விமானநிலையத்தில் வைத்து எப்படியெல்லாம் சித்திரைவதைகள் செய்கின்றார்கள் என்று கதையளப்பதையே தலையாயகடன் போல நினைப்பவர்கள். நேற்றும் ரங்கன் என்ற இயற்பெயர் கொண்ட அறிவிப்பாளர் இப்படிக் கதையளக்க, வந்த நேயர் ஒருவர் அபு்படியாயின் நீங்கள் சமீபத்தில் எப்படி உங்கள் தம்பியை(அரசு கைதுசெய்து வைத்திருந்த போராளிகளில் இவரும் ஒருவவர்) அரசிடமிருந்து மீட்டு வந்தீர்கள் எனக் கேள்வி கேட்டதும், தனிநபர் விடயங்களுக்கு பதிலளிக்க முடிடியாதென்று அழைப்பைத் துண்டித்துவிட்டார்.

:)

:unsure: [i]நீங்கள் பிரான்சிலுள்ள தமிழ் ஒலி வானொலியைத் தொடர்பு கொண்டால், அவர்கள் எப்படி இலங்கைக்குச் சென்று திரும்பலாமென்ற இரகசியங்களை இரகசியமாகச் சொல்லித் தருவார்கள். :)^_^

பி.கு: அவசரப்பட்டு நிகழ்ச்சியில் சென்று இது விடயமாகக் கேட்டுவிடாதீர்கள். காரியாலயத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டுப்பாருங்கள்.

தர்சனோடு என்ன அண்ணை பிரச்சினை

அதை ஏன் இங்கு கொட்டுகிறீர்கள்???

Share this post

Link to post
Share on other sites

:unsure: [i]நான் எழுதிய கருத்தை வாசித்து விளங்க முடியாமல் உள்ளீர்கள் என்பது நன்றாகவே புரிகின்றது. என்ன செய்வது புத்திக்கு எட்டிய மட்டுமே புரிந்து கொள்ளலும் இருக்கும்.[/i] :):)

உண்மைதான் அண்ணை

தாங்கள் எழுதுவதை புரிந்து கொள்ள இன்னொரு கண் வேண்டும்

அது எனக்கு வராது

அடுத்தது

வரலாற்றை நான் அறியாதவன் என்று தாங்கள் புகட்டுவது....

Edited by விசுகு

Share this post

Link to post
Share on other sites

இதுவிடயமாக டக்ளஸ் மற்றும் சித்தார்த்தன் போன்றோர் சுவிசிற்கு வந்த போது நேரடியாகக் கேட்டுமுள்ளேன். அவர்கள் அதனை முற்றாக மறுக்கவில்லை, தாம் நிச்சயமாக இதுபற்றி நடவடிக்கை எடுப்பதாகவும் சொன்னார்கள். கப்பம் வசூலிப்பதை எவர் செய்தாலும் அதை நியாயப்படுத்த முடியாது.

அதையும் செலவுக்காகத்தானே என்று சில நாளைக்குப்பின் தாங்கள் வாதிடக்கூடும்

எனவே ஊழல், லஞ்சம், பணப்பறிப்பு, கடத்தி கப்பம் கேட்டல்,..... என்பனபற்றி தங்களுக்கு எழுதி என்ன பிரயோசனம் அண்ணை...

:)"என்ன செய்வது புத்திக்கு எட்டிய மட்டுமே புரிந்து கொள்ளலும் இருக்கும்" என்ற எனது கருத்தை மீண்டும் தங்களின் கருத்து மூலம் நிரூபித்தமைக்கு நன்றிகள். திரும்பவும் எனது கருத்துகள் இரண்டை இணைத்து, :unsure: என்ன சொல்ல வந்தேன் என்பதையும் நீங்கள் மறந்து முளிப்பதும் :) புரிகின்றது. ^_^

Edited by Vasampu

Share this post

Link to post
Share on other sites

ஓம் வசம்பண்ணா. டக்கிளஸ் தேவானந்தா.. சித்தார்த்தன்.. மாணிக்கதாசன் எல்லாரும் நேர்மையா அரசியல் செய்து ஒரு ரூபாய் சம்பளத்தில பிச்சை எடுத்து சீவிச்சவை.. சீவிக்கினம். அதை நீங்களே உறுதிப்படுத்தி இருக்கிறீங்க. பிறகென்ன. ஆனால் புலம்பெயர் நாடுகளில் மட்டும் உங்களுக்கு சொல்லிப் போட்டு சுருட்டினம்.

டக்கிளஸ் தேவானந்தா.. மானிப்பாயிலில கோவில கொள்ளை அடிச்சதாவது தெரியுமோ இல்ல.. அது புலிகளுக்கு பயந்து இவற்ற பாதுகாப்பில கொண்டு போய் வைச்சது என்ன அண்ண.

எல்லாம் புலிகளும் புலிகளிண்ட வாலுகளும் தான் சுருட்டினது. சுட்டது. மண்டையில போட்டது. நாங்கள் ஓரமா குந்தி இருந்து சோத்துப் பார்சல் அவுத்ததும். பெட்டையள இழுத்துக் கொண்டு வெளிநாடு ஓடினதும். ஒரிசாவுக்கு ஓடினதும். கொழும்புக்கு போய் குண்டாஸ் செய்து அரசியல் நடத்தினதும். என்னண்ணா. நல்ல சேவை. இதால தான் இப்ப தமிழ் மக்கள் கொஞ்சம் என்றாலும் சனநாயகக் காற்றை சுவாசிக்க முடிஞ்சிருக்குது. நீங்கள் சொன்னா சரியாத்தான் இருக்கும் வசம்பண்ணா.

எல்லாம் காலம் வசம்பண்ணா காலம். நீங்கள் கெட்டதும் இல்லாமல் மற்றவனும் கெடனும் என்று நினைக்கிறீங்க பாருங்க.. அங்க நிற்குதண்ணா உங்கட சனநாயகம்..! நடு(ங்கு)வு நிலைமை.:unsure::)

நெடுக்கு மேற்சொன்னவர்கள் நேர்மையானவர்கள் என்று நான் எங்கேயாவது கதையளந்தேனா?? :) வன்னி மக்களைச் சாட்டி அன்று தொடக்கம் இன்றுவரை பணம் சுருட்டுவோர் பற்றி தாங்கள் வாயே திறறக்க மறுக்கின்றீர்களே?? அது ஒருவேளை நடு(ங்கு) நிலைமையோ அல்லது அந்தக் குழுவில் தாங்களும் அடக்கமோ?? ^_^

Share this post

Link to post
Share on other sites

நெடுக்கு மேற்சொன்னவர்கள் நேர்மையானவர்கள் என்று நான் எங்கேயாவது கதையளந்தேனா?? :) வன்னி மக்களைச் சாட்டி அன்று தொடக்கம் இன்றுவரை பணம் சுருட்டுவோர் பற்றி தாங்கள் வாயே திறறக்க மறுக்கின்றீர்களே?? அது ஒருவேளை நடு(ங்கு) நிலைமையோ அல்லது அந்தக் குழுவில் தாங்களும் அடக்கமோ?? :)

எதையோ நீங்கள் அறியவில்லை என்று எழுதின மாதிரி இருந்திச்சே. அப்ப அறிஞ்சதை மறந்து எழுதிட்டீங்களோ. சரி சரி பறுவாயில்லை. சன நாய் அகத்தின் உயர் பண்புகளில் மறதி என்பது மிக முக்கியமான ஒன்று தானே.

ஓம் அண்ணா நானும் அந்தக் குழுவில இருக்கிறதால எப்படி காட்டிக் கொடுக்கிறது. பிறகு பிழைப்பு என்னாவது. வேணும் என்றால் சொல்லுங்கோ சுருட்டினதில 25% தாறன்.. விசயத்தை அப்படியே காதும் காதும் வைச்சாப்போல அமுக்கி விடுங்கோ. இதெல்லாம் சன நாய் அகத்தில சகஜம் தானே. உங்களுக்கு இல்லாத அனுபவமா. வேண்டாதவங்கள உள்ளுங்க வைச்சே போட்டிட்டு.. புலில பழிபோடுறதுதானே நாங்கள் கண்ட சன நாயகம்... இல்லையா அண்ணா. :unsure:^_^

Edited by nedukkalapoovan

Share this post

Link to post
Share on other sites

எதையோ நீங்கள் அறியவில்லை என்று எழுதின மாதிரி இருந்திச்சே. அப்ப அறிஞ்சதை மறந்து எழுதிட்டீங்களோ. சரி சரி பறுவாயில்லை. சன நாய் அகத்தின் உயர் பண்புகளில் மறதி என்பது மிக முக்கியமான ஒன்று தானே.

ஓம் அண்ணா நானும் அந்தக் குழுவில இருக்கிறதால எப்படி காட்டிக் கொடுக்கிறது. பிறகு பிழைப்பு என்னாவது. வேணும் என்றால் சொல்லுங்கோ சுருட்டினதில 25% தாறன்.. விசயத்தை அப்படியே காதும் காதும் வைச்சாப்போல அமுக்கி விடுங்கோ. இதெல்லாம் சன நாய் அகத்தில சகஜம் தானே. உங்களுக்கு இல்லாத அனுபவமா. வேண்டாதவங்கள உள்ளுங்க வைச்சே போட்டிட்டு.. புலில பழிபோடுறதுதானே நாங்கள் கண்ட சன நாயகம்... இல்லையா அண்ணா. :unsure::)

தற்போது நடைபெறும் நிகழ்வுகளாக தாங்கள் குறிபபிட்டதற்கே பதிலளித்தேன். தாங்கள் கடந்த காலங்களில் நடைபெற்றதை தற்போது குறிப்பிட்டு அதனை நான் மறந்து விட்டதாக கதையளக்க வேண்டாம். அடடா தங்களுக்கு என்ன தாராள மனசு இருந்தால் எனக்கு 25 வீதம் தர முன்வருவீர்கள். ஒருவேளை 25 வீதத்தை எனக்குத் தந்து விட்டு 75 விதத்தை எனக்குத் தந்ததாக இங்கு எழுதலாம் என்று எண்ணியா?? :) எனக்கு என் சொந்த உழைப்பே போதும். அடுத்தவர்கள் உழைப்பில் சுரண்டி வாழ நான் விரும்பவில்லை. ^_^

Edited by Vasampu

Share this post

Link to post
Share on other sites

இந்த வருட நல்லூர்திருவிழா அந்த மாதிரி களை கட்டப்போகின்றது.புலம் பெயர்ந்தவர்கள் உலகம் முழுக்க இருந்து இப்போதே ஆயத்தமாகின்றார்கள்.வீதிகளில் நின்று கொடிபிடித்த பலர் கொடியேத்ததிற்கு நிற்கப்போகினமாம்.எங்கட சனத்திக்கு கூட்டம் கூடுவதென்றால் ஒரு அலாதிப் பிரியம்தான்.

விடிவெள்ளி நீங்கள் எழுதத்தொடங்கியதை தொடருங்கள். நாட்டிற்கு போய் யாரும் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் தங்கள் கருத்தை எழுதட்டும்.தமிழனுக்கு பிரச்சனையிருக்கு என்பதற்காக இவ்வளவு காலமும் சொன்னதெல்லாம் உண்மையென்றில்லை.

பீகாரில நடந்த கிட்னி எடுத்தபடத்தை ஊர்வலம் முழுவதும் காவிதிரிந்தவர்கள் தானே எம்மவர்கள்.

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

ஊரிலையிருந்து இரண்டு தென்னங்குத்தி இறக்க எவ்வளவு செலவாகும் வசம்பண்ணை? :unsure:

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.