விடிவெள்ளி

ஊருக்குப் போன ஊர்குருவி

Recommended Posts

விடியல் சொல்வதில் உண்மை நிறைய இருக்கின்றது. எனக்குத் தெரிந்து நிறையப் பேர் போய் எந்தவிதமான பிரச்சனையும் இன்றித் திரும்பியுள்ளனர். புலம்பெயர் மக்களின் முதலீடுகளில் அக்கறை கொண்டு உள்ள சிங்கள அரசியலாளர்கள், அவ்வளவு முட்டாள்தனமாக நடந்து கொள்ளப் போவதில்லை. ஆனால், தமிழர்களை கடத்துவதற்கும் அவர்களை காணாமல் போக்கடிப்பதற்குமான சூழ்நிலை அன்று எப்படி இருந்ததோ, அதே போன்றுதான் இன்றும் இருக்கின்றது, நாளையும் இருக்கப்போகின்றது. சம்பவங்களின் நிகழ்வுகள் பூச்சியாமாகப் போயினும், நடப்பதற்கான நிகழ்தகவு 100 ஆகவே காணப்படுகின்றது

ஊரில் இருக்கும் என் அம்மாவிடம் கேட்டேன் "எல்லாரும் வருயினம், நானும் வந்து ஒரு எட்டு பார்க்கவா என", அம்மா பதறிப் போய் சொன்னது "பொறு பொறு இப்போதைக்கு வராதே" என்று... அவாவின் குரலில் இனம்புரியாத பதற்றம் இருந்ததை உணரக் கூடியதாக இருந்தது. அந்த பதற்றம் நிறைந்த குரல்தான் தமிழர்களின் அவல வாழ்வுக்கான சாட்சி

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

ஊரிலையிருந்து இரண்டு தென்னங்குத்தி இறக்க எவ்வளவு செலவாகும் வசம்பண்ணை? :)

:unsure:நீங்க இரண்டு பனங்குத்தி இறக்கக் கொடுத்த அதே செலவு தான் ஆகும் கு.சா அண்ணோய்..... :)

Edited by Vasampu

Share this post

Link to post
Share on other sites

நீஙகள் குறிப்பிடுவது போல் டக்ளஸ் மற்றும் சித்தார்த்தன் போன்றோர் சுருட்டுவதாக நான் அறியவில்லை. அதுவும் சித்தார்த்தனிடம் வேண்டிய அளவிற்கு பணம் இருக்கின்றது. ஆனால் குறிப்பிட்ட இந்தக் கட்சிகளின் தொண்டர்கள் கப்பம் வசூலிப்பதாகத் தான் நான் அறிந்தேன். இதுவிடயமாக டக்ளஸ் மற்றும் சித்தார்த்தன் போன்றோர் சுவிசிற்கு வந்த போது நேரடியாகக் கேட்டுமுள்ளேன். அவர்கள் அதனை முற்றாக மறுக்கவில்லை, தாம் நிச்சயமாக இதுபற்றி நடவடிக்கை எடுப்பதாகவும் சொன்னார்கள். கப்பம் வசூலிப்பதை எவர் செய்தாலும் அதை நியாயப்படுத்த முடியாது. சுவிசிலுள்ள மேலே குறிப்பிட்ட கட்சியொன்றின் ஆதரவாளர் திருப்பி என்னிடம் கதைக்கும் போது கேட்டார் இன்று தளத்தில் நின்று மக்களுக்கு சேவை செய்பவர்கள் அவர்கள். அவர்கள் சிலவேளை தமது செலவுகளுக்கு கப்பம் கேட்டிருக்கலாம் அது தப்பா?? எனவும் புலிகள் வரி என்ற பெயரில் தமது ஆடம்பரங்களுக்கு வசூலித்தபோது எவர் தட்டிக் கேட்டீர்கள் எனவும் கேட்டார். அப்போது நானும் திருப்பிக் கேட்டேன், புலிகள் தவறு செய்தார்களென்றால், நீங்களும் தவறு செய்யலாமென்கின்றீர்களா?? என்று. அதற்கு அவர் பதில் ஒன்றும் சொல்லவில்லை. நீங்கள் குறிப்பிடும் கப்பம் வாங்குவோர் மக்களிடையே நின்று எதையாவது செய்கின்றார்கள். ஆனால் வெளிநாடுகளில் பல ஊடகங்களும், கோவில்களும் அந்த மக்களுக்கு உதவவென்று விசேட நிகழ்ச்சிகளும், விசேட பூசைகளும் நடாத்தி வசூலித்த பணத்தை அப்படியே சுருட்டியதையும், கப்பத்தையும் எவ்வாறு நீங்கள் ஒன்றாக கருதுகீன்றீர்கள். தற்போது கூட பிரித்தானியாவில், 9 பாற்குடங்கள் எடுத்தால் 10வது பாற்குடம் இலவசமென்றும், இந்தப் பணமனைத்தும் வன்னி மக்களுக்கு உதவுவதற்காகவே என்று அதிரடி அறிவிப்புச் செய்து வசூல் வேட்டை நடத்துகின்றார்கள். ஆனால் இதில்க் கூட ஒன்றும் சென்று சேரப்போவதில்லை. இவற்றையெல்லாம் நீங்கள் நியாயப்படுத்தப் போகின்றீர்களா??

ஓம் வசம்பு, நானும் கேள்விப் பட்டனான். டக்ளஸ் கப்பம் வாங்கிறதில்லையாம். ஆனா, செல்லமா பிரான்ஸில இருந்து போற பெடியள வெருட்டி வாங்கின காசு தான் டக்ளசிட வால்கள் வெளிநாட்டுப் பயணம், குறிப்பாக பிரான்ஸ் பயணம் செய்யும் போது பயன் படுகுதாம். தப்பில்லைத் தானே? என்ன செலவுக்கு காசெடுத்திருக்கிறாங்கள் அவ்வளவு தான்! சித்தாவிட புளொட் இப்ப வவுனியாவில வாலாட்டிறதில்லை (வவுனியாவில மட்டும் தான்!). டொக்டர் மொகிதீன் கொலைக்குப் பிறகு சிறி லங்காப் பொலிஸ் எடுத்த நடவடிக்கையால எல்லாரும் அனுராதபுரத்தில களி தின்னுகினயாம். ஆனா அதுக்கு முதல் கொண்டாடுற வீர மக்கள் தினத்துக்கு பூச்சாடியில இருந்து "தண்ணிச் செலவு" வரை வவுனியா மக்களிட்ட "அன்பாகக்" கேட்டு வாங்கித் தான் கொண்டாடினவங்களாம்! இதுவும் தப்பிலைத் தானே? அது சரி உங்களுக்குச் சொன்ன மாதிரி முறைப்பாடுகளைக் கவனிச்சவையோ இந்த இரண்டு "களத்தில" நிண்டு "சேவையாற்றுற" தலைவர் மாரும்? ஒருக்கா அறியத் தாங்கோவன்! :unsure::)

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

ஊரில் இருக்கும் என் அம்மாவிடம் கேட்டேன் "எல்லாரும் வருயினம், நானும் வந்து ஒரு எட்டு பார்க்கவா என", அம்மா பதறிப் போய் சொன்னது "பொறு பொறு இப்போதைக்கு வராதே" என்று... அவாவின் குரலில் இனம்புரியாத பதற்றம் இருந்ததை உணரக் கூடியதாக இருந்தது.

புரியவில்லை KP கூட அவங்களிடம் இருக்கும் போது ???????

Share this post

Link to post
Share on other sites

ஓம் வசம்பு, நானும் கேள்விப் பட்டனான். டக்ளஸ் கப்பம் வாங்கிறதில்லையாம். ஆனா, செல்லமா பிரான்ஸில இருந்து போற பெடியள வெருட்டி வாங்கின காசு தான் டக்ளசிட வால்கள் வெளிநாட்டுப் பயணம், குறிப்பாக பிரான்ஸ் பயணம் செய்யும் போது பயன் படுகுதாம்.

:unsure:ஏன் இப்போ டக்ளஸ் அமைச்சரில்லையோ?? அல்லது ஒரு ரூபா சம்பளத்திலை அமைச்சராய் இருக்கின்றாரோ?? :) கூட்டமைப்புக் காரர்கள் ஏதோ சீசன் ரிக்கற் எடுத்து வைச்சோ இந்தியா, கனடா, ஐரோப்பா என்று அடிக்கடி பயணித்தவை?? அதையும் ஒருக்கால் உங்கடை புலநாய்வு மூலம் எடுத்து விடுங்கோவன். ^_^ ஒருவேளை வன்னி மக்களுக்கு என்று "புலம்(ன்)" பெயர்ந்து சிலர் சுருட்டும் பணம் அவைக்குத் தான் என்று கதைவிடப் போறியளோ??:)

Share this post

Link to post
Share on other sites

அநேகமாக இது தமிழர்களின் குணம்

பிரச்சினை தன் கதவை தட்டும்வரை அவர்களுக்கு அடுத்தவர்களுக்கு நடப்பது பற்றி அக்கறையில்லை

அல்லது

அவர்கள் ஏதோ பிழை செய்ததால் நடந்தது என்றே இருப்பர்.

நெடுக் அவர்களின் கருத்துக்களுடன் 100 வீதம் ஆதரிக்கின்றேன்

பாலஸ்தீன பழமொழி ஒன்று................

முந்தநாள் அடுத்த வீதியில் யாரொ நாலுபேர் வந்து அங்குள்ளவர்களை அடித்தார்கள் உதைத்தார்கள்.

நான் போகவில்லை....... ஏன் என்றும் கேட்கவில்லை.

நேற்று பக்கத்து வீட்டடில் உள்ளவர்களை வந்து அடித்தார்கள் உதைத்தார்கள்.

நான் போகவில்லை.... ஏன் என்றும் கேட்கவில்லை.

இன்று அதே நாலுபேரும் எனை வந்து அடிக்கிறார்கள்.

யாரும் வரவில்லை............. ஏன் என்றும் கேட்கவில்லை.

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

நீஙகள் குறிப்பிடுவது போல் டக்ளஸ் மற்றும் சித்தார்த்தன் போன்றோர் சுருட்டுவதாக நான் அறியவில்லை. அதுவும் சித்தார்த்தனிடம் வேண்டிய அளவிற்கு பணம் இருக்கின்றது. ஆனால் குறிப்பிட்ட இந்தக் கட்சிகளின் தொண்டர்கள் கப்பம் வசூலிப்பதாகத் தான் நான் அறிந்தேன். இதுவிடயமாக டக்ளஸ் மற்றும் சித்தார்த்தன் போன்றோர் சுவிசிற்கு வந்த போது நேரடியாகக் கேட்டுமுள்ளேன். அவர்கள் அதனை முற்றாக மறுக்கவில்லை, தாம் நிச்சயமாக இதுபற்றி நடவடிக்கை எடுப்பதாகவும் சொன்னார்கள். கப்பம் வசூலிப்பதை எவர் செய்தாலும் அதை நியாயப்படுத்த முடியாது. சுவிசிலுள்ள மேலே குறிப்பிட்ட கட்சியொன்றின் ஆதரவாளர் திருப்பி என்னிடம் கதைக்கும் போது கேட்டார் இன்று தளத்தில் நின்று மக்களுக்கு சேவை செய்பவர்கள் அவர்கள். அவர்கள் சிலவேளை தமது செலவுகளுக்கு கப்பம் கேட்டிருக்கலாம் அது தப்பா?? எனவும் புலிகள் வரி என்ற பெயரில் தமது ஆடம்பரங்களுக்கு வசூலித்தபோது எவர் தட்டிக் கேட்டீர்கள் எனவும் கேட்டார். அப்போது நானும் திருப்பிக் கேட்டேன், புலிகள் தவறு செய்தார்களென்றால், நீங்களும் தவறு செய்யலாமென்கின்றீர்களா?? என்று. அதற்கு அவர் பதில் ஒன்றும் சொல்லவில்லை. நீங்கள் குறிப்பிடும் கப்பம் வாங்குவோர் மக்களிடையே நின்று எதையாவது செய்கின்றார்கள். ஆனால் வெளிநாடுகளில் பல ஊடகங்களும், கோவில்களும் அந்த மக்களுக்கு உதவவென்று விசேட நிகழ்ச்சிகளும், விசேட பூசைகளும் நடாத்தி வசூலித்த பணத்தை அப்படியே சுருட்டியதையும், கப்பத்தையும் எவ்வாறு நீங்கள் ஒன்றாக கருதுகீன்றீர்கள். தற்போது கூட பிரித்தானியாவில், 9 பாற்குடங்கள் எடுத்தால் 10வது பாற்குடம் இலவசமென்றும், இந்தப் பணமனைத்தும் வன்னி மக்களுக்கு உதவுவதற்காகவே என்று அதிரடி அறிவிப்புச் செய்து வசூல் வேட்டை நடத்துகின்றார்கள். ஆனால் இதில்க் கூட ஒன்றும் சென்று சேரப்போவதில்லை. இவற்றையெல்லாம் நீங்கள் நியாயப்படுத்தப் போகின்றீர்களா??

இங்கே எவரும் தமிழர்களுக்கு இலங்கையில் பிரைச்சினையில்லை,அங்கே தேனும் பாலும் ஓடுகின்றதென்று சொல்லவரவில்லையே. இருக்கும் பிரைச்சினைகளை,அதீத கற்பனையில் மேலும் மெருகேற்றி இலங்கையில் தமிழர்களே வாழ முடியாதென்று கதையளக்கும் தங்களைப் போன்றோரின் கருத்தைத் தான் மறுதலிக்கின்றோம். இன்று இலங்கையில் தமிழர்களுக்கு மட்டுமா பிரைச்சினை?? சிங்கள மக்களுக்கு இல்லையா?? சமீபபத்தில் ஒரு காணொளி பார்த்தேன்,அதில் புத்தபிக்குமாருக்கே ஆடைகளைப் பிடித்திழுத்து காவற்துறையினர் பொல்லுகளால் சரமாரியாக தாக்குதல்கள் நடாத்துகின்றார்கள். எனவே உண்மைகளை உள்ளபடி உண்மைகளாக எழுதுங்கள். வெறும் பரபரப்பிற்காகவும் பணப்பறிப்பிற்காகவும் மிகைப்படுத்தி பொய்களை எழுத வேண்டாமென்பதே எங்களைப் போன்றோரின் வேண்டுகோள். இந்த வேண்டுகோள் உங்களுக்கு மட்டுமல்ல,உங்களைப் போன்ற அனைவருக்குமே........

உங்களைப் போல அநியாயத்திற்கு அப்பாவியாக இருக்கக் கூடாதுங்க. வானொலிகளைக் கேட்பதேயில்லையா?? அவர்கள் உங்களை உசுப்பிவிடுமளவிற்குச் செய்திகளைச் சொன்னால்த் தானே, நீங்களும் நிகழ்ச்சிகளுக்கு கண்மண் தெரியாமல் பணங்களை அள்ளி வழங்கி ஆதரவு வழங்குவீர்கள். GTV "கரம் கொடுப்போம், வடம் பிடிப்போம்" என்று பச்சையாகவே சுருட்டுகின்றதே தெரியவில்லையா??

:) உங்க தாராளள மனப்பான்மைக்கு மனமார்ந்த நன்றிங்க. :D

:rolleyes:நீங்கள் பிரான்சிலுள்ள தமிழ் ஒலி வானொலியைத் தொடர்பு கொண்டால், அவர்கள் எப்படி இலங்கைக்குச் சென்று திரும்பலாமென்ற இரகசியங்களை இரகசியமாகச் சொல்லித் தருவார்கள். :):D

பி.கு: அவசரப்பட்டு நிகழ்ச்சியில் சென்று இது விடயமாகக் கேட்டுவிடாதீர்கள். காரியாலயத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டுப்பாருங்கள்.

Edited by Maruthankerny

Share this post

Link to post
Share on other sites

மேலே அறிவு முகர்ந்த அண்ணாச்சி ஒருவர் எழுதியவை.............. அவர் கைபடவே எழுதியவைகளில் சிலதுகள் என்னால் சிவப்பு வர்ணமிட்டு காட்டபட்டுள்ளன. அவர் மேலேயே சிலரை அறிவு குறைந்தவர்கள் என்று திட்டியுமுள்ளார். அவர் சொல்லுவது உண்மையென்றே நானும் ஒப்புகொள்கிறேன்.

காரணம் அவர் எதையும் ஒளிவு மறைவின்றி எழுதியபின்பும் ஏதும் விளங்காதவர்கள்போல். இலங்கையில் தமிழருக்கு பிரச்சனையில்லையா? என்று கேள்வி கேட்டால் அது ஒரு மூட்டாள்தனமான கேள்விதானே?

அவர் தமிழர்களுக்கு பிரச்சனை இல்லை என்று எங்காவது எழுதியுள்ளாரா?

எங்களுக்கு பிரச்சனை இல்லை............. எங்களுக்கு தெரிந்தவர்கள் போய்வருகிறார்கள்............... எமது சகாக்கள் அங்கிருந்து வருகிறார்கள் அவர்களில் யாருக்கும் பிரச்சனை இல்லை என்றே அவர் திரும்ப திரும்ப எழுதுகிறார்.

அதாவது சித்தார்த்தன் அமைச்சர் ஐயா டக்ளஸ் தேவனாந்தா போன்றோர் வரும்போது என்னோடு வந்து நேரடியாக பேசுகிறார்கள். நான் நேரடியாகவே அவர்களுடன் கதைக்கிறேன். அவர்களும் முற்று முழுதாக மறுப்பதற்கில்லை என்று சொன்னார்களாம்.

இந்த அண்ணாவை நேரடியாகவே அந்த மக்கள் காப்பாளர்கள் சந்திக்கின்றார்கள்.

தொடர்ந்தும் அவர் சொல்லுவது............. தற்போது களத்தில் அவர்கள்தான் நிற்கிறார்களாம். களத்தில் என்று அவர் மீண்டும் சுட்டிகாட்டியுள்ளார்.

திரும்ப திரும்ப ஒன்றை சொல்கின்றார்............. இங்கே டக்களஸ்தேவானந்தா மக்கள்சேவகன் சித்தார்த்தன் தவிர்ந்தவர்கள் பணப்பறிப்பில் ஈடுபடுகின்றார்களாம். உதாரணத்திற்கு ஜிரிவி பிரான்ஸ்லி ஏதோ றேடியோ கோயில் குளம் என்று மக்கள் சேவகர்களுடன் தொடர்பற்ற அனைத்தையும் அவர் சாடுகின்றார்.

திரும்ப திரும்ப அவர் அதைதான் சொல்கிறார் எமக்கு அங்கே பிரச்சனை இல்லை. ஆனால் தமிழருக்கு பிரச்சனை இல்லை என்று நான் சொல்லவில்லை.

ஆக இப்போது இலங்கையில் பிரச்சனையில்லாமல் வாழவும் வசதியுள்ளது

பிரச்சனையுடன் வாழவேண்டிய சூழ் நிலையும் அங்கு உள்தையே அவர் சுட்டிகாட்டகின்றார் என்று எனது அறிவுக்கு படுகின்றது.

தமிழராக ஏன் வாழ நினைக்கின்றீர்கள்?

இனி விவாதத்திற்கு உள்ளாக்கபட வேண்டியது.

 • Like 3

Share this post

Link to post
Share on other sites

:rolleyes: கூட்டமைப்புக் காரர்கள் ஏதோ சீசன் ரிக்கற் எடுத்து வைச்சோ இந்தியா, கனடா, ஐரோப்பா என்று அடிக்கடி பயணித்தவை??

:):):D:D உதுகளை கதைக்க போனா நிறைய கதைக்கலாம். வைப்பகதில வைச்சதெல்லாம் போச்சு. அந்த கதை வேண்டாம் இப்போ எங்களுக்கு. மேலிடத்து ஓடர் இல்லை என்று சனங்களுக்கு வெள்ளி காட்டிவிட்டு கடைசியில் நெருப்பு மூட்டி எரித்ததாக கேள்விப்பட்டேன். வசம்பு

Share this post

Link to post
Share on other sites

இந்த வருட நல்லூர்திருவிழா அந்த மாதிரி களை கட்டப்போகின்றது.புலம் பெயர்ந்தவர்கள் உலகம் முழுக்க இருந்து இப்போதே ஆயத்தமாகின்றார்கள்.வீதிகளில் நின்று கொடிபிடித்த பலர் கொடியேத்ததிற்கு நிற்கப்போகினமாம்.எங்கட சனத்திக்கு கூட்டம் கூடுவதென்றால் ஒரு அலாதிப் பிரியம்தான்.

விடிவெள்ளி நீங்கள் எழுதத்தொடங்கியதை தொடருங்கள். நாட்டிற்கு போய் யாரும் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் தங்கள் கருத்தை எழுதட்டும்.தமிழனுக்கு பிரச்சனையிருக்கு என்பதற்காக இவ்வளவு காலமும் சொன்னதெல்லாம் உண்மையென்றில்லை.

பீகாரில நடந்த கிட்னி எடுத்தபடத்தை ஊர்வலம் முழுவதும் காவிதிரிந்தவர்கள் தானே எம்மவர்கள்.

என்னங்க எல்லாரும் ஆரூடம் கூறுவதிலேயே நிக்கிறிங்க...

முதல்ல நல்லூருக்கு போய்வந்த பின்னர் எழுதுங்களேன் இத்தனை லட்சம் புலம்பெயர்ந்த மக்கள் வந்தவை என்று.

இல்லை நல்லூர் திருவிழாவுக்கு போக நீங்களா ஒழுங்கு செய்கிறீர்கள்?

இல்லை ஏதேச்சும் ரகசிய கருத்துக்கணிப்பு நடத்தினிங்களோ??

மேலே அறிவு முகர்ந்த அண்ணாச்சி ஒருவர் எழுதியவை.............. அவர் கைபடவே எழுதியவைகளில் சிலதுகள் என்னால் சிவப்பு வர்ணமிட்டு காட்டபட்டுள்ளன. அவர் மேலேயே சிலரை அறிவு குறைந்தவர்கள் என்று திட்டியுமுள்ளார். அவர் சொல்லுவது உண்மையென்றே நானும் ஒப்புகொள்கிறேன்.

காரணம் அவர் எதையும் ஒளிவு மறைவின்றி எழுதியபின்பும் ஏதும் விளங்காதவர்கள்போல். இலங்கையில் தமிழருக்கு பிரச்சனையில்லையா? என்று கேள்வி கேட்டால் அது ஒரு மூட்டாள்தனமான கேள்விதானே?

அவர் தமிழர்களுக்கு பிரச்சனை இல்லை என்று எங்காவது எழுதியுள்ளாரா?

எங்களுக்கு பிரச்சனை இல்லை............. எங்களுக்கு தெரிந்தவர்கள் போய்வருகிறார்கள்............... எமது சகாக்கள் அங்கிருந்து வருகிறார்கள் அவர்களில் யாருக்கும் பிரச்சனை இல்லை என்றே அவர் திரும்ப திரும்ப எழுதுகிறார்.

அதாவது சித்தார்த்தன் அமைச்சர் ஐயா டக்ளஸ் தேவனாந்தா போன்றோர் வரும்போது என்னோடு வந்து நேரடியாக பேசுகிறார்கள். நான் நேரடியாகவே அவர்களுடன் கதைக்கிறேன். அவர்களும் முற்று முழுதாக மறுப்பதற்கில்லை என்று சொன்னார்களாம்.

இந்த அண்ணாவை நேரடியாகவே அந்த மக்கள் காப்பாளர்கள் சந்திக்கின்றார்கள்.

தொடர்ந்தும் அவர் சொல்லுவது............. தற்போது களத்தில் அவர்கள்தான் நிற்கிறார்களாம். களத்தில் என்று அவர் மீண்டும் சுட்டிகாட்டியுள்ளார்.

திரும்ப திரும்ப ஒன்றை சொல்கின்றார்............. இங்கே டக்களஸ்தேவானந்தா மக்கள்சேவகன் சித்தார்த்தன் தவிர்ந்தவர்கள் பணப்பறிப்பில் ஈடுபடுகின்றார்களாம். உதாரணத்திற்கு ஜிரிவி பிரான்ஸ்லி ஏதோ றேடியோ கோயில் குளம் என்று மக்கள் சேவகர்களுடன் தொடர்பற்ற அனைத்தையும் அவர் சாடுகின்றார்.

திரும்ப திரும்ப அவர் அதைதான் சொல்கிறார் எமக்கு அங்கே பிரச்சனை இல்லை. ஆனால் தமிழருக்கு பிரச்சனை இல்லை என்று நான் சொல்லவில்லை.

ஆக இப்போது இலங்கையில் பிரச்சனையில்லாமல் வாழவும் வசதியுள்ளது

பிரச்சனையுடன் வாழவேண்டிய சூழ் நிலையும் அங்கு உள்தையே அவர் சுட்டிகாட்டகின்றார் என்று எனது அறிவுக்கு படுகின்றது.

தமிழராக ஏன் வாழ நினைக்கின்றீர்கள்?

இனி விவாதத்திற்கு உள்ளாக்கபட வேண்டியது.

உண்மை தான்

இதுக்கு பச்சை குத்தாமல் இருக்க முடியாது.

Share this post

Link to post
Share on other sites

வெள்ளவத்தையில் இருக்கும் எங்கள் உறவினர் வீட்டுக்கு சென்று அங்கு என் பயணப்பொதிகளை வைத்துவிட்டு அப்படியே நேரே வெள்ளவத்தை காவல் நிலையத்துக்குச் சென்று அங்கு என்னை பதிந்துவிட்டு வீட்டுக்கு வந்தோம்.

இது வரைக்கும் எனக்கோ அல்லது என் தாய் தந்தையருக்கோ அல்லது என் உறவுக்காரருக்கோ பெரிதாய் சிங்கள பாசை தெரியாது நாம் ஆங்கிலத்தில் பேசினோம் அவர்களும் ஆங்கிலத்தில் பேசினார்கள் பதிவு சுமுகமாக முடிவுற்றது. அதன்பின் கிட்டத்தட்ட ஒரு கிழமை கொழும்பில் தங்கி நின்றேன். அந்த காலத்தில் வெளியே செல்லும் போது சோதனைச்சாவடிகளில் எங்கள் வாகனத்தை இலங்கைப்படையினர் சோதனையின் நிமித்தம் நிறுத்துவார்கள் எமது ஆவணங்களை பரிசீலித்துவிட்டு தொடர்ந்து செல்ல அனுமதிப்பார்கள். நாங்களும் அவர்களுடன் பகிடிவிட்டு பேசும்போது அவர்களும் பகிடியாகவும் மிகவும் நட்பாகவும் பேசுவார்கள். சில இடங்களில் ஆங்கிலம் தெரியாத படையினர் நிற்குமிடத்தில் கிட்டத்தட்ட ஊமைப்பாசைதான். காலி முகத்திடலை பாக்கபோகின்றோம் என்று சொல்வதற்கு கோல்பேஸ் என்று சொல்லிவிட்டு பின் பார்த்தலை கையால் காட்டவேண்டிய நிலை ஒன்றும் செய்ய முடியாது. பின் எங்கள் சாரதி விளக்கமாக அவர்களுக்குச் சொல்லுவார்.

அந்த ஒரு கிழமையில் இரவுவேளைகளில் சிலநேரம் இலங்கைப்படையினர் சோதனையின் நிமித்தம் எம் வீட்டுக்கு வருவதுண்டு ஆவணங்களையும் பார்த்துவிட்டு அறைகளையும் ஒரு தடவை பார்த்துவிட்டு நாங்கள் ஏதும் பகிடிவிட்டால் சிரித்துகொண்டு போய்விடுவார்கள். ஆனால் வெள்ளை வான் பற்றி புலம் பெயர் ஊடகங்களில் கேள்விப்பட்ட விடயங்கள் அந்த ஒரு கிழமையும் எந்த நேரமும் பயமுறுத்திய வண்ணம் இருந்தது. கடவுள் செயலாலோ என்னவோ நாம் அவர்களிடம் சிக்கவில்லை. நாம் இருந்த தெருவில் இருந்த வியாபாரி ஒருவர், வெளிநாட்டுக்காரர் சிலர் இவர்களால் கடத்தப்பட்டதாக எங்கள் உறவினர்கள் தெரிவித்தனர். இவற்றை புலனாய்வுத்துறையினர் என்ற போர்வையில் தமிழ்க்குழுவினரே செய்வதாக அங்கு பலரும் தெரிவித்தனர். இதன் பின் மாளிகாவத்தை, மோதறை, பிரதேசத்தைச் சேர்ந்த பாதாள உலக கோஸ்டியினரும் தமிழர்கள் மத்தியில் தம் கைவரிசையை காட்ட ஆரம்பித்ததாகவும் பாதிக்கப்பட்ட சிலர் சாட்சியம் கூறினர்.

பின்னர் எமது வவுனியா வீடு நோக்கிய பயணத்தை தொடங்குகின்றோம். இங்கு தான் நான் உண்மையிலே பயந்து நடுங்கிய வண்ணம் வானில் ஏறினேன். காரணம் புலம்பெயர் ஊடகங்களில் அந்தளவுக்கு கடத்தல், கப்பம் கேட்டல், கப்பம் கொடுக்க மறுத்தால் கொலை போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதாக அறிவித்துக்கொண்டிருந்தனர். நாம் கொழும்பிலே சந்தித்த எங்கள் உறவுக்காரர்கள் தங்கள் உறவினர்களுக்கு வவுனியாவிலே நடந்த கொடுமைகளை ஏற்கனவே கூறியிருந்தனர். இவைகள் எல்லாம் என்னை அந்தளவுக்கு வாட்டி வதைத்தன. இருந்தும் என் வீட்டுக்குப் போகவேண்டியிருந்ததால் கடவுள் மீது பழியை போட்டுவிட்டு வானில் ஏறி வவுனியா நோக்கி பயணிக்கின்றோம். கொழும்பு நகரை கடக்கும் வரை வழமையான சோதனைகள் ஆவணங்களை பார்த்தல், வானை ஒரு தடவை எட்டிப்பார்த்தல் இவற்றோடு முடிந்துவிடும். புத்தளத்தை தாண்டிச் செல்லும் போது தான் ஏன் தமிழனாக பிறந்தோம் என்று கோபப்படும் படி இலங்கைப்படையினர் நடந்துகொண்டனர். பெரும்பாலும் காவலரண்களில் சிறுவர்களே நிற்ப்பார்கள் அவர்கள் சிங்கள பாசையை தவிர எதுவும் பேசமாட்டார்கள் நாம் ஆங்கிலத்தில் பேசினால் சிலர் சிரிப்பார்கள் சிலர் ஏதோ சிங்களத்தில் சொல்வார்கள் அது எமக்கும் புரியாது. எம் வண்டிச் சாரதியே எமக்கிடையில் மொழிபெயர்ப்பாளராக செயற்படுவார்.

ஒரு மாதிரி வவுனியாவில் இருக்கும் எங்கள் வீட்டுக்கு வந்துவிட்டோம். அதன் பின் நாம் வவுனியாவில் வானில் திரிவதில்லை ஆட்டோ, மோட்டர்சைக்கிள்களில் தான் அதிகமாக திரிவதுண்டு. இன்னும் பாதுகாப்பானது துவிச்சக்கரவண்டி தான். ஏனெனில் அதில் செல்லும் போது இலங்கைப்படையினர் அதிகமாக சந்தேகப்படமாட்டார்கள். பதின்நான்கு நாட்கள் வவுனியாவில் தங்கியிருந்தேன். இலங்கையில் அதி உச்ச பயங்கர நகரம் என்று வவுனியா நகரை கூறலாம். அந்தளவுக்கு கொலைகள் நிறைந்து காணப்பட்டது. யார் சுடுகின்றனர் ஏன் சுடுகின்றனர் என்ற காரணம் எல்லாம் தெரியாது அங்கு ஒரு பொடி கிடக்கின்றது இங்கு ஒரு பொடி தலையில்லாமல் கிடக்கின்றது. அதை கருணா கோஸ்டி போட்டிருக்கும், இதை ஈபிடிபி போட்டிருக்கும், இதை சீஐடி தான் போட்டதாம், அதை சீஎஸ்ஸோ தான் போட்டதாம், அது கொம்பனி தான் போட்டது என மக்கள் தங்களுக்குள் ஆரூடம் சொல்லது போல் பேசிக்கொள்வார்கள். அந்தளவுக்கு அங்கு ஒரு கொலைக்கலாச்சாரம் மலிந்து காணப்பட்டது. இதனிடையே இரவில் வீடு புகுந்து மயக்க மருந்துகள் விசிறிவிட்டு களவுகளும் சில இடங்களில் சிறுமிகள், இளம் பெண்கள் மீது பாலியல் வல்லுறவுகள் தாராளமாகவே நடைபெற்றன. இவற்றை துணை இராணுவக்குழுவிவரே செய்வதாக மக்கள் சாடுகின்றார்கள்.

மாலை நான்கு மணிக்கே வவுனியா நகரம் அடங்கிவிடும். ஆறுமணிக்கு பின் தெருவில் இராணுவத்தினரை தவிர யாரையும் காணமுடியாது. எங்கும் நிசப்தமாகவே தெருக்கள் காட்சியளிக்கும். இடையிடையே இராணுவ வண்டிகள் பேரிரைச்சலுடனும் அதிவேகமாகவும் தெருக்களில் பயணிக்கும். ஐரோப்பிய நாடுகளில் சாமம் சாமமாக தெருக்களில் திரியும் எங்களுக்கு இது பெரும் கஸ்டமாகவும், பெரும் பீதியையும் ஏற்படுத்தியது. இரவு 7/8 மணிக்குப்பின் நாம் வீட்டைவிட்டு முற்றத்துக்கே வருவதில்லை. ஏன் என்றால் இரவு வேளைகளில் இராணுவத்தினர் காணிகளின் ஊடாகவே ரோந்து செல்வார்கள். அவர்கள் கண்ணில் அந்த வேளைகளில் எதிர்ப்பட்டால் ஏன் வீண் வம்பு? எதுவாகிலும் நாம் வீட்டைவிட்டு வெளியே வருவதில்லை. எமது குடும்பம் 2002 சமாதானத்தின் பின் வன்னியில் இருந்து யாழ்ப்பாணம் சென்று பின் எமது குடும்ப அங்கத்தவர்கள் அரச வேலையில் இணைந்ததன் காரணமாக வவுனியாவில் வந்து குடியேறவேண்டி ஏற்பட்டது.

இதை அறிந்து அடிக்கடி பகல் இரவு என்று பாராது சாதரண படையினர், விசேட அதிரடிப்படையினர் எங்கள் வீட்டுக்கு சோதனையின் நிமித்தம் வருவதுண்டாம்.

ஒருநாள் காலை 4 மணி இருக்கும் எங்கள் வீடு நாய்க்குட்டிகள் பலமாக குரைக்கின்றன.

எங்கள் வீட்டு கதவு பலமாக தட்டப்படுகின்றது எனது தந்தையார் எழுந்து மின் விளக்குகளை ஒளிரவிட்டார். இதற்கிடையில் என் தாயார் சாத்திய யன்னல் இடைவெளிக்கால் வெளியில் நிற்பவர்களை கண்டு விட்டார் என்னிடம் வந்து தம்பி STF காரர்கள் வந்திருக்கின்றனர் கடவுச்சீட்டை எடுத்து வைத்திரு என்று கூறினார். இது எனக்கு முதல் அனுபவம் பயத்தினால் கால் கை எல்லாம் நடுங்குகின்றது என் தந்தையார் கதவை திறக்கின்றார் தலையில் கறுப்பு துண்டுகள் கட்டிய சிலர், தலைக்கவசங்கள் அணிந்த சிலர் என ஒரு பத்து பதினைந்து பேர் முற்றத்தில் நிக்கின்றனர். சற்று தெருவை பார்த்தேன். தெரு வெளிச்சத்தில் இரண்டு பவல் கவசவாகனங்களை கண்டேன். கடவுளே இது என்ன சோதனை என்று கடவுளை நேந்த படி நிற்க, துப்பாக்கியை கையில் ஒரு குச்சியை பிடிப்பது போல் பிடித்தவண்ணம் திடகாத்திரமான உடற்கட்டை கொண்ட இராணுவத்தினர் சட சட வென வீட்டுக்குள் உள்நுளைந்தனர். அறைகளுக்குச் சென்றனர் சோதனை செய்தனர் எங்கள் குடும்ப பதிவு அட்டை, அடையாள அட்டைகளை வாங்கி பார்த்தனர் நான் என் கடவுச் சீட்டை கொடுத்தேன் அதை வாங்கிப்பார்த்துவிட்டு எங்கிருந்து வந்திருக்கின்றீர்கள் என்று மலையகத்தமிழில் ஒருவர் என்னை கேட்டார் நான் வசிக்கும் நாட்டைச் சொன்னேன். கடவுச்சீட்டை புரட்டி புரட்டி பார்த்துவிட்டு ஐசி இருக்கா என்று கேட்டர் நானும் ஆம் என்று நான் வசிக்கும் தேசத்து அடையாள அட்டை கொடுக்க ஏதோ புரிந்தவர்போல் தலையை ஆட்டி ஆட்டி பார்த்துவிட்டு போகும் போது இந்த வீட்டில் யாரோ புதியவர் வந்திருக்கின்றதாக எமக்கு செய்தி வந்தது அது தான் வந்தோம் என்று சொல்லிவிட்டு இரவு வணக்கம்(Good night) கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக (God Bless You) என்று எல்லாம் சொல்லிவிட்டு சென்றனர். ஐரோப்பிய பொலீசார் பாணியில் அவர்களை என்னால் பார்க்ககூடியமாதிரி இருந்தது. என்னால் இதை நம்பமுடியாமல் இருந்தது, இலங்கை படையினர் அதுவும் வவுனியா இருக்கும் நிலையில் இவற்றை எல்லாம் அவர்களிடம் இருந்து எதிர்பார்க்க முடியுமா என்ன? இதில் கவனிக்க படவேண்டிய விடயம் என்ன என்றால் STF காரர்கள் நன்றாக தமிழில் பயிற்றுவிக்கப்படிருக்கின்றனர். அடுத்தது அவர்களின் புலனாய்வுப்பிரிவு அந்தளவுக்கு ஊரெங்கும் முடுக்கிவிடப்பட்டிருக்கின்றது. வவுனியாவில் எமது தமிழ் இளைஞர்கள் பலர் அரச புலனாய்வாளர்களாக வேலை செய்வதாக எனது மைத்துனரும் தம்பியும் தெரிவித்தனர். துணை இராணுவக்குழுக்கள் அல்ல சம்பளத்தின் நிமித்தம் இவர்கள் வேலை செய்கின்றார்களாம்.

தொடரும்.....

Edited by vidivelli
 • Like 1

Share this post

Link to post
Share on other sites

மேலே :rolleyes:அறிவு முகர்ந்த :) அண்ணாச்சி ஒருவர் எழுதியவை.............. அவர் கைபடவே எழுதியவைகளில் சிலதுகள் என்னால் சிவப்பு வர்ணமிட்டு காட்டபட்டுள்ளன. அவர் மேலேயே சிலரை அறிவு குறைந்தவர்கள் என்று திட்டியுமுள்ளார். அவர் சொல்லுவது உண்மையென்றே நானும் ஒப்புகொள்கிறேன்.

அதாவது சித்தார்த்தன் அமைச்சர் ஐயா டக்ளஸ் தேவனாந்தா போன்றோர் வரும்போது என்னோடு வந்து நேரடியாக பேசுகிறார்கள். நான் நேரடியாகவே அவர்களுடன் கதைக்கிறேன். அவர்களும் முற்று முழுதாக மறுப்பதற்கில்லை என்று சொன்னார்களாம்.

இந்த அண்ணாவை நேரடியாகவே அந்த மக்கள் காப்பாளர்கள் சந்திக்கின்றார்கள்.

தொடர்ந்தும் அவர் சொல்லுவது............. தற்போது களத்தில் அவர்கள்தான் நிற்கிறார்களாம். களத்தில் என்று அவர் மீண்டும் சுட்டிகாட்டியுள்ளார்.

நீஙகள் குறிப்பிடுவது போல் டக்ளஸ் மற்றும் சித்தார்த்தன் போன்றோர் சுருட்டுவதாக நான் அறியவில்லை. அதுவும் சித்தார்த்தனிடம் வேண்டிய அளவிற்கு பணம் இருக்கின்றது. ஆனால் குறிப்பிட்ட இந்தக் கட்சிகளின் தொண்டர்கள் கப்பம் வசூலிப்பதாகத் தான் நான் அறிந்தேன். இதுவிடயமாக டக்ளஸ் மற்றும் சித்தார்த்தன் போன்றோர் சுவிசிற்கு வந்த போது நேரடியாகக் கேட்டுமுள்ளேன். அவர்கள் அதனை முற்றாக மறுக்கவில்லை, தாம் நிச்சயமாக இதுபற்றி நடவடிக்கை எடுப்பதாகவும் சொன்னார்கள். கப்பம் வசூலிப்பதை எவர் செய்தாலும் அதை நியாயப்படுத்த முடியாது. சுவிசிலுள்ள மேலே குறிப்பிட்ட கட்சியொன்றின் ஆதரவாளர் திருப்பி என்னிடம் கதைக்கும் போது கேட்டார் இன்று தளத்தில் நின்று மக்களுக்கு சேவை செய்பவர்கள் அவர்கள். அவர்கள் சிலவேளை தமது செலவுகளுக்கு கப்பம் கேட்டிருக்கலாம் அது தப்பா?? எனவும் புலிகள் வரி என்ற பெயரில் தமது ஆடம்பரங்களுக்கு வசூலித்தபோது எவர் தட்டிக் கேட்டீர்கள் எனவும் கேட்டார். அப்போது நானும் திருப்பிக் கேட்டேன், புலிகள் தவறு செய்தார்களென்றால், நீங்களும் தவறு செய்யலாமென்கின்றீர்களா?? என்று. அதற்கு அவர் பதில் ஒன்றும் சொல்லவில்லை. நீங்கள் குறிப்பிடும் கப்பம் வாங்குவோர் மக்களிடையே நின்று எதையாவது செய்கின்றார்கள். ஆனால் வெளிநாடுகளில் பல ஊடகங்களும், கோவில்களும் அந்த மக்களுக்கு உதவவென்று விசேட நிகழ்ச்சிகளும், விசேட பூசைகளும் நடாத்தி வசூலித்த பணத்தை அப்படியே சுருட்டியதையும், கப்பத்தையும் எவ்வாறு நீங்கள் ஒன்றாக கருதுகீன்றீர்கள். தற்போது கூட பிரித்தானியாவில், 9 பாற்குடங்கள் எடுத்தால் 10வது பாற்குடம் இலவசமென்றும், இந்தப் பணமனைத்தும் வன்னி மக்களுக்கு உதவுவதற்காகவே என்று அதிரடி அறிவிப்புச் செய்து வசூல் வேட்டை நடத்துகின்றார்கள். ஆனால் இதில்க் கூட ஒன்றும் சென்று சேரப்போவதில்லை. இவற்றையெல்லாம் நீங்கள் நியாயப்படுத்தப் போகின்றீர்களா??

:)அடடா என்ன இது அகராதியிலேயே இல்லாத அறிவு முகர்ந்த என்று புதிசு புதிசா அறிவுக் கொழுந்துகள் எடுத்து விடுகினமே என்று யோசித்தால். அதற்கு அர்த்தைத்தையும் அவர்களே எடுத்து விட்டுள்ளார்கள். ஒருவரை நேரடியாக கேள்வி கேட்க இவர்கள் நினைத்தால் சம்மந்தப்பட்டவர்கள் இவர்கள் போன்ற அதிபுத்திசாலிகளை வந்து சந்திக்க வேண்டும். எனது கருத்தில் தளத்தில் என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளது. அது கூட என்னுடன் கருத்துப் பகிர்ந்த ஒருவர் பாவித்த வார்த்தை பிரயோகம். அது கூட அதிபுத்திசாலிகளுக்கு புரியவுமில்லாமல் அது களத்தில் என்று தெரிகின்றதாம். இப்ப புரியுது அறிவு முகர்ந்தவர்களின் கருத்துகள் எப்படியிருக்குமென்று. :D:D

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

:rolleyes:அடடா என்ன இது அகராதியிலேயே இல்லாத அறிவு முகர்ந்த என்று புதிசு புதிசா அறிவுக் கொழுந்துகள் எடுத்து விடுகினமே என்று யோசித்தால். அதற்கு அர்த்தைத்தையும் அவர்களே எடுத்து விட்டுள்ளார்கள். ஒருவரை நேரடியாக கேள்வி கேட்க இவர்கள் நினைத்தால் சம்மந்தப்பட்டவர்கள் இவர்கள் போன்ற அதிபுத்திசாலிகளை வந்து சந்திக்க வேண்டும். எனது கருத்தில் தளத்தில் என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளது. அது கூட என்னுடன் கருத்துப் பகிர்ந்த ஒருவர் பாவித்த வார்த்தை பிரயோகம். அது கூட அதிபுத்திசாலிகளுக்கு புரியவுமில்லாமல் அது களத்தில் என்று தெரிகின்றதாம். இப்ப புரியுது அறிவு முகர்ந்தவர்களின் கருத்துகள் எப்படியிருக்குமென்று. :):)

அறிவு முகர்ந்த அதிக பிரசங்கிகள்:D:D:)

Edited by vidivelli

Share this post

Link to post
Share on other sites

விடிவெள்ளி, உங்கள் பயண அனுபவம் சுவாரசியமாய் இருக்கிது. பின்னூட்டல்களை பார்த்து உணர்ச்சிவசப்படாமல் முதலில் பயண அனுபவத்தை முழுவதுமாக கூறிமுடியுங்கள். அதன்பிறகு குடும்பியை பிடிச்சு இழுக்கலாம்.

கதையின் சாரம்சம்.. மேலோட்டமான செய்தி என்று பார்த்தால்.. இதுபற்றிய எனது பொதுவான பார்வை கிட்டத்தட்ட ஜஸ்டின் சொன்னது போன்றது. அதாவது, பத்துபேர் நாட்டுக்கு போகிறீனம் எண்டால்.. அதிலை ஏழு பேருக்கு ஒண்டும் நடக்க இல்லை, மூண்டுபேர் மாத்திரம் தான் அல்லது ஒருவர் மட்டும்தான் மாட்டுப்படுகிறார், துன்பியல் அனுபவத்தை பெறுகிறார் எண்டால்.. உண்மையில அது ஓர் ஆபத்தான பாதுகாப்பற்ற நிலமைதான்.

ஒரு கதையுக்கு.. பத்துபேரில ஒருவருக்கு துன்பியல் அனுபவம் கிடைச்சால் ஆயிரம்பேரில நூறுபேருக்கு துன்பியல் அனுபவம் கிடைக்கிது. இது பெரிய விசயம். ஊடகவியல் என்கின்ற அளவில பார்க்கும்போதுகூட.. ஒரு கடத்தல், ஒரு கொலை என்பது பெரிய விசயம்தான். இதனால்.. பாதுகாப்பற்ற நிலமையை எப்போதும் கவனத்தில கொள்ளவேணும்.

என்று ஓர் கடத்தல் கூட இடம்பெறவில்லை... ஓர் கொலைகூட இடம்பெறவில்லை.. ஓர் உயிர் அச்சுறுத்தல்கூட இடம்பெறவில்லை எண்டு ஓர் நிலமை ஏற்படுகிதோ அதுதான் உண்மையில பாதுகாப்பான நிலமை. யாரும் நம்பிப்போகலாம்.

மற்றது, இன்னோர் விசயத்தையும் கவனத்தில கொள்ளவேணும். இப்ப வெளிநாடுகளில கூட அரசியல், தீவிரவாதம் இவற்றுக்கு அப்பால.. வழமையான குழு வன்முறைகள், கொலைகள், எல்லாம் இருக்கிது. வளர்ச்சி அடைந்த நாடுகளிலேயே இவற்றை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாதபோது.. ஓர் வறிய நாடான சிறீ லங்காவில வழமையான குற்றவியல் சம்பவங்களை முற்றிலுமாக ஒழிப்பது என்பது முடியாத ஓர் விசயம்.

அண்மையிலகூட நான் ஓர் செய்தி பார்த்தன். அதில இருந்திச்சிது.. கோண்டாவில் எங்கையோ.. உள்ளூர் திருடர் காசுக்காக இரவிலை செய்த கொலைச்சம்பவம் பற்றி. ஏன்... புலிகளின் கட்டுபாட்டில இருந்தகாலட்திலகூட திருட்டுக்கள், கொலைகள் நடந்துகொண்டுதான் இருந்திச்சிது. யாராச்சும் வெளிநாட்டு ஆக்கள் வந்து இருக்கிறீனம், காசு மடியுக்கை நிறைய இருக்கிது எண்டு திருடர் அறிஞ்சால்.. இங்கிருந்து போனவர்களிண்ட அவர்கள் கஸ்ட காலத்துக்கு பலத்த இழப்புக்களை சந்திக்க வேண்டி வரலாம்.

அதாவது, வழமையான risks associated with traveling overseas எப்பவும் இருக்கத்தான் செய்யும். நாட்டுக்கு போகின்ற நூறுபேரில ஆகக்குறைஞ்சது பத்து பேருக்காவது ஆபத்துக்கள் வரத்தான் பார்க்கும். அவை உள்ளூர் திருடர் காரணமாக வரலாம், பாதாள கோஷ்டிகள் காரணமாக வரலாம். அவை கொடிய நோயாகக்கூட இருக்கலாம். பலர் டெங்கு காய்ச்சலால பாதிக்கப்பட்டு உயிர் பிழைச்சு வந்து இருக்கிறீனம்.

உண்மை என்னவெனில் வங்கு ரோட்டில் போகும் நாட்டை வெளிநாட்டு அன்னிய செலவாணி மூலம் நிவர்த்தி செய்ய சிங்கள அரசு பகீரத பிராயத்தனம் செய்கிறது. will :rolleyes: be back shortly

Share this post

Link to post
Share on other sites

வெள்ளவத்தையில் இருக்கும் எங்கள் உறவினர் வீட்டுக்கு சென்று அங்கு என் பயணப்பொதிகளை வைத்துவிட்டு அப்படியே நேரே வெள்ளவத்தை காவல் நிலையத்துக்குச் சென்று அங்கு என்னை பதிந்துவிட்டு வீட்டுக்கு வந்தோம்.

இது வரைக்கும் எனக்கோ அல்லது என் தாய் தந்தையருக்கோ அல்லது என் உறவுக்காரருக்கோ பெரிதாய் சிங்கள பாசை தெரியாது நாம் ஆங்கிலத்தில் பேசினோம் அவர்களும் ஆங்கிலத்தில் பேசினார்கள் பதிவு சுமுகமாக

என்ன MR. விடிவெள்ளி சிம்மன் எண்டவர் உங்களையும் சுத்திவிட்ராரோ அல்லது கூடுதல் வட்டிக்கு பணம் கொடுத்து நீங்களும் ஏமாந்து விட்டிர்களா ? :rolleyes::)

சும்மா எடுத்துவிட்டால் நாங்களும் கேட்பமேல்ல :):D :D

Share this post

Link to post
Share on other sites

என்ன MR. விடிவெள்ளி சிம்மன் எண்டவர் உங்களையும் சுத்திவிட்ராரோ அல்லது கூடுதல் வட்டிக்கு பணம் கொடுத்து நீங்களும் ஏமாந்து விட்டிர்களா ? :rolleyes::)

சும்மா எடுத்துவிட்டால் நாங்களும் கேட்பமேல்ல :):D :D

ஓ இவர் கனடா பிரஜையோ. பல தகவல்கள் தெரியும் போல உங்களுக்கு.சாம், இவர் தனது பிரயாண கட்டுரை என யாரையோ பழி வாங்குவது போல், உள்ளது. பார்ப்போம்.

Share this post

Link to post
Share on other sites

அதே காலப்பகுதியில் நானும் கொழும்புக்கு போயிருந்தேன். மேலே கட்டுரை எழுதும் நபருக்கு சிங்கள சிறப்பு படையினர் தமிழர்கள் ஒரிருவரை (அதுவும் புலிகள் செல்லடித்ததால்தான்) கொன்றதால் ஏதும் கோபம் இருக்கலாம். அதனாலோ என்னவோ பல உண்மைகள் மறைக்கபட்டுள்ளன.

வெள்ளவத்தை பொலிஸிற்கு நானும் போயிருந்தேன் அவர்கள் சிங்களத்திலேயே என்னுடன் பகிடிவிட்டார்கள் எனக்கு ஏதும் விளங்கவில்லை என்பதை என்னை கூட்டி சென்றவரிடம் சொன்னேன். அவர்கள் பின்பு ஆங்கிலத்தில் என்னுடன் பகிடிவிட்டார்கள் அதுவும் புரியவில்லை என்றேன். அவர்கள் தங்களை மன்னிக்கும்படி எனக்கு சொன்னார்கள் தமிழிலே அதிகளவு பகிடிவிட எமக்கு தெரியாது என்று சொல்லி தமது தொலைகாட்சியில் வடிவேலுவின் நகைசுவையை காண்பித்து சிரித்துகொண்டிருக்கும்படி சொன்னார்கள் தாம் எனது பதிவுகளை பதிய சிறிது நேரம் எடுக்கும் என்றும் சொன்னார்கள்.

என்னை கூட்டி சென்றவரிடம் கடத்தல்கள் பற்றி கேட்டேன்............ அது தமிழ் குழுக்களின் வேலை என்றார். அப்போது புலிகளின் நடமாட்டம் கொழும்பில் இருந்ததை என்னால் உணர முடிந்தது.

எனது வவுனியா பயணம் மிகவும் சுவாரிசியமானது அதை பின்பு எழுதுகிறேன்.

தொடரும்............

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

இஞ்ச கன பேர் இன்னமும் 84,85 களில் நிற்கினம் பலஸ்தீன கவிதை பாடிக்கொண்டு.வேரோட ஒட்ட அறுத்துவிட்டான் சிங்களவன் இன்னமும் முளைக்கும் பூக்கும் என்ற நம்பிக்கையில் சிலர் இங்கிருந்த படி.

ஜீவா,தீர்க்கதரிசனமென்பது முன்கூட்டியே நடக்கப் போவதை சொல்வது இது தெரியாதததால் தான் பலர் இன்று இருந்த இடமில்லை.

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

தமிழ் ரவல்ஸ் என்று பெயரையும் வைதுக்கொண்டு தமிழரைக் கொண்டு காசுபார்த்து..அந்தக் காசாலையே எம்மினத்தை மேலும் துன்புறுத்த நினைக்கும் நீங்கள்..2007 முதல் 2010வரை நாட்டுக்கு உல்லாசப் பயணம் போய் வந்திருக்கீறிர்கள் என்றால் உங்களுக்கு கவனிப்பே வேறு நண்பரே...இந்தக் கட்டுரைகள் கூட உல்லாசப் பயணத்துறை தந்திருக்கலாம்.....உங்களுக்கு மனச்சாட்சி இருந்தால்..இந்தக் கட்டுரையை தொடர்வதை இத்தோடு தயவுசெய்து நிறுத்துங்கள் .ஒரு 5 வருடத்தில் பயணக்கட்டுரைப் புத்தகமாகவே வெளியிடலாம்..அதன்பின் எம்மினம் அழிந்தோ..அடையாளம்..இழந்தோ போயிருக்கும்....அவ்வேளை இக்கட்டுரை பயனுடையதாக இருக்கும்...

போராட்டம் என்பது காலங்கள் கொண்டு அல்லது தனிமனிதர்கள் கொண்டு தீர்மானிக்கப்படுவதில்லை. மக்களின் அரசியல் சமூக தேவைப்பாடுகள்.. உரிமைகள் தொடர்பில் தீர்மானிக்கப்படுவது. சிங்களவன் 1970 களில் ஒட்ட நறுக்கியதாக சொல்லப்பட்ட ஜே வி பி தான் 1988 இல் முளைத்தது. இன்றும் இருக்கிறது. மக்களிடம் உரிமைகள் அற்ற உணர்வு தாம் இரண்டாம் நிலையில் வைத்து நடத்தப்படும் நோக்கப்படும் நிலை இருக்கும் வரை போராட்ட குணம் இருந்து கொண்டே இருக்கும்.

பலஸ்தீனம் 1985 இல் இருந்து இன்று வரை இஸ்ரேலியப் படைகளுக்கு எதிராக கல்லெறிதான் அதிகம் நடத்திக் கொண்டிருக்கிறது. ரொக்கட் எறிவதையல்ல. காரணம் அந்த மக்களுக்கு போராட்டம் பற்றிய தெளிவு தேவை இருக்கிறது. தமிழர்களுக்கும் அந்தத் தேவை இருந்தாலும்.. அடிமையாக வாழ்வதில் கூட அவர்கள் திருப்திப்படக் கூடியவர்கள்.

ஒரு நாயை அடைத்து வைத்து சாப்பாடு போட்டாலும் அது வாலை ஆட்டும். திறந்து விட்டு சாப்பாடு போட்டாலும் அது வாலை ஆட்டும். காரணம் அதற்கு அண்டிப்பிழைத்துத்தான் பழக்கம். தமிழர்களும் இந்த வகையினரே..! இப்படிப்பட்ட ஒரு இனம்.. தேசம்.. விடுதலை.. அதன் தேவைகளை சரியாக உணர்ந்து போராடுமா என்பது கேள்விக்குறிதான்.

பலஸ்தீனம் 1985 இல் இருந்து இன்று வரை போராடிக் கொண்டுதான் இருக்கிறது.. கீழுள்ள இணைப்புக்களை பார்க்க.. உலகத்தை கொஞ்சம் சுற்றுமுற்றிப் பார்த்துவிட்டு கருத்தெழுத வேண்டும்.

http://news.bbc.co.uk/1/hi/world/middle_east/8576542.stm

http://news.bbc.co.uk/1/hi/world/middle_east/8577492.stm

Edited by nedukkalapoovan

Share this post

Link to post
Share on other sites

ஓ இவர் கனடா பிரஜையோ. பல தகவல்கள் தெரியும் போல உங்களுக்கு.சாம், இவர் தனது பிரயாண கட்டுரை என யாரையோ பழி வாங்குவது போல், உள்ளது. பார்ப்போம்.

என்ன நுணாவிலான்,

:D எதையாவது எப்படியாவது சாட வேண்டுமென்று சிலர் கதையளக்க, நீங்களுமா அதை நம்பி விடுகின்றீர்கள்?? கனடாவிலிருப்பவர் ஜெர்மனியிலா பயண முகவர் நிலையத்தை நடாத்துவார்?? :D:(

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

தமிழ் ரவல்ஸ் என்று பெயரையும் வைதுக்கொண்டு தமிழரைக் கொண்டு காசுபார்த்து..அந்தக் காசாலையே எம்மினத்தை மேலும் துன்புறுத்த நினைக்கும் நீங்கள்..2007 முதல் 2010வரை நாட்டுக்கு உல்லாசப் பயணம் போய் வந்திருக்கீறிர்கள் என்றால் உங்களுக்கு கவனிப்பே வேறு நண்பரே...இந்தக் கட்டுரைகள் கூட உல்லாசப் பயணத்துறை தந்திருக்கலாம்.....உங்களுக்கு மனச்சாட்சி இருந்தால்..இந்தக் கட்டுரையை தொடர்வதை இத்தோடு தயவுசெய்து நிறுத்துங்கள் .ஒரு 5 வருடத்தில் பயணக்கட்டுரைப் புத்தகமாகவே வெளியிடலாம்..அதன்பின் எம்மினம் அழிந்தோ..அடையாளம்..இழந்தோ போயிருக்கும்....அவ்வேளை இக்கட்டுரை பயனுடையதாக இருக்கும்...

வாய்ப்புக் கிடைக்கும் போது தன் சொந்த ஊருக்கு போவது உல்லாசப் பயணமாகும் என்றா சொல்கின்றீர்கள்? ஒவ்வொரு நாளும் ஆகக் குறைந்தது ஐநூறு பேராவது (தமிழர்கள்) புலம் பெயர் தேசங்களில் இருந்து இலங்கைக்கு போய்க்கொண்டிருக்கின்றனர் இப்போது. அது இந்த கோடை விடுமுறை நாட்களில் பன்மடங்கு அதிகரிக்கப் போகின்றது. ஒருவர் விடாமல், எல்லாரையு, துரோகி என்று முத்திரை குற்றி இப்போ சொந்த ஊருக்கு போகின்றவர்களையும் துரோகியாக்க முயல்கின்றீர்கள்

இந்த கட்டுரையை சகிக்கக் கூட முடியாத, அதற்கு சரியான பதில்களை கூட எழுத வழி தெரியாது நிறுத்தச் சொல்கின்ற உங்களைப் போன்றவர்களை நம்பித்தான் எங்கள் தமிழ் தேசிய போராட்டம் இன்று உறைநிலைக்கு வந்துள்ளது.

 • Like 2

சொந்த ஊருக்குப் போவதும் விடுவதும் அவரவர் தனிப்பட்ட விடயம்.இத்தனை நடந்தும் 20பது வருடங்களாக போய்க் கொண்டுதானிருகின்றார்கள்.வெளி நாட்டிலிருந்து வரும் தமிழர்களால் அரசாங்கத்திற்கு நிறைய வருமானம்.அரசு இதில் கவனமாகவேயிருக்கும். மற்றும் நாம் தலைசிறந்த தமிழரல்லவா அதுதான் ஆளாளுக்கு அம்பு விடுகிறார்கள்.

Share this post

Link to post
Share on other sites

போராட்டம் என்பது காலங்கள் கொண்டு அல்லது தனிமனிதர்கள் கொண்டு தீர்மானிக்கப்படுவதில்லை. மக்களின் அரசியல் சமூக தேவைப்பாடுகள்.. உரிமைகள் தொடர்பில் தீர்மானிக்கப்படுவது.

http://news.bbc.co.uk/1/hi/world/middle_east/8576542.stm

http://news.bbc.co.uk/1/hi/world/middle_east/8577492.stm

என்ன நீங்கள் அப்படி சொல்லிபோட்டிங்கள். தனிமனிதர்கள் வேண்டுமானால் தீர்மானிக்க முடியாது இருக்கலாம்.

அதுக்கா இந்த அர்ஜுன் என்பவராலும் தீர்மானிக்க முடியாது என்று எந்த ஆதாரத்தை வைத்து நீங்கள் சொல்லுங்கின்றீர்கள்.

அவர் எவ்ளவு பெரிய ஆளு......??

நீங்களேல்லாம் வெளிநாடுகளை இப்போதுதான் பார்க்கின்றீர்கள் அந்த அண்ணா வெளிநாட்டு வாழ்வை 80களிலேயே தூக்கி எறிந்துவிட்டு மக்களுக்கும் மண்ணுக்கும் புல்லுபுடுங்க போனவர்.

இப்போதும் தொடர்ந்தும் புடுங்குகிறார்............ உங்களுக்கு புரியாவிட்டால்.

அவர் புடுங்கும் புல்லுகள் பிழையானது என்று அர்ததம் ஆகிவிடுமா?

அண்ணா நீங்க இதையெல்லாம் செவிமடுக்காதைங்கோ............... தொடர்ந்து புடுங்குங்கோ உங்களின் சேவை தமிழ் மண்ணுக்கு என்றும் தேவை.

அப்படியே மேலேயிருந்து புடுங்காமல்.......... மண்புழுவா கீழே போனால் என்னமும் வளபடுத்தலாம். ( எங்களுக்கும் பெரிய ஆறுதலாக இருக்கும் சொன்ன கேட்க மாட்டாங்கிறாங்களே.....)

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.