Jump to content

ஊருக்குப் போன ஊர்குருவி

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வாய்ப்புக் கிடைக்கும் போது தன் சொந்த ஊருக்கு போவது உல்லாசப் பயணமாகும் என்றா சொல்கின்றீர்கள்? ஒவ்வொரு நாளும் ஆகக் குறைந்தது ஐநூறு பேராவது (தமிழர்கள்) புலம் பெயர் தேசங்களில் இருந்து இலங்கைக்கு போய்க்கொண்டிருக்கின்றனர் இப்போது. அது இந்த கோடை விடுமுறை நாட்களில் பன்மடங்கு அதிகரிக்கப் போகின்றது. ஒருவர் விடாமல், எல்லாரையு, துரோகி என்று முத்திரை குற்றி இப்போ சொந்த ஊருக்கு போகின்றவர்களையும் துரோகியாக்க முயல்கின்றீர்கள்

இந்த கட்டுரையை சகிக்கக் கூட முடியாத, அதற்கு சரியான பதில்களை கூட எழுத வழி தெரியாது நிறுத்தச் சொல்கின்ற உங்களைப் போன்றவர்களை நம்பித்தான் எங்கள் தமிழ் தேசிய போராட்டம் இன்று உறைநிலைக்கு வந்துள்ளது.

பிழம்பு அண்ணா...........

சொந்த ஊருக்கு போவதை யாரும் தாகதென்று சொன்னார்களா?

ஊருக்கு போவோரை துரோகி என்று யார் சொன்னார்கள்?

ஒரே பாட்டை திரும்ப திரும்ப பாடுவதால் அது புளித்துபோய்விடுமே தவிர மவுசு ஏறாது.

மகிழ்சியாக இராததைபார்தது சிங்கள இhhணுவத்தினர் கோபபட்டனர் என்பது............. தற்போதைய உலகில் ஆப்பிரிக்கனே நம்பமாட்டான்.

போய்வாறே எமக்கே அவித்தால் எப்படியண்ணா?

தாங்கமுடியுதில்லையே இந்த எஜமானி விசுவாசங்களை அதுதான் சிலர் சுட்டி காட்டுகின்றார்கள். நீங்கள் எழுத்தமாத்திரத்தில் நான் ஒரு பண்புடையவன் என்ற தோணியில்............ ஒரு கருத்தை வைத்துவிடுகிறீர்கள்.

யாரும் யாரரையும் துரோகிகள் ஆக்கவில்லை................ துரோகிகள்தான் அதை சிருஸ்டிக்க முயற்சி செய்கின்றார்கள்.

அதற்கு நீங்களும் கொஞ்சம் முண்டு கொடுக்கின்றீர்கள்.......

Link to comment
Share on other sites

  • Replies 90
  • Created
  • Last Reply

இங்கு கருத்து எழுதுபவர்களே ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். நான் ஒன்றும் தமிழின விரோதி கிடையாது. இருந்தாலும் உண்மையை உண்மை என்றே ஏற்றுக்கொள்ள பழகவேண்டும். நாம் இலங்கையில் ஒரு தனியரசை அமைப்பது சிங்கள ஆளும்வர்கத்தில் யாருக்காவதோ அல்லது அண்டை நாடான இந்தியாவிற்கோ அல்லது தங்கள் பிராந்திய நலனை கவனிக்கும் வல்லரசுகளுக்கோ பிடிக்காத ஒரு விடயம். அதன் பிரதிபலிப்புகளை கடைசி நேரத்தில் வன்னியில் நிரூபித்தும் காட்டினார்கள். எமது போராட்டம் ஓர் உறங்கு நிலைக்கு தள்ளப்பட்டு போராளிகள் சிறைப்பிடிக்கப்பட்டு இன்று அதன் பின்..... ? எனவே நாம் எப்படி விசுவாசமாக இருந்தாலும் தங்கள் நலனுக்காய் எம்மை வல்லரசுகள் வாழவிடாது. எவ்வளவு பலமாக இருந்த எங்கள் படைகளையே சிங்களப்படைகள் வல்லரசுகளின் உதவியோடு துவசம் செய்தன அதை மறுப்பதற்கு இல்லை. ஸ்ரவேல் நாடு எப்படி உருவானது என்ற கேள்வியை என்னை கேளாதீர்கள்? அந்த நாட்டின் அமைவிடத்துக்கும் எமது தேசத்தின் அமைவிற்கும் பூகோள ரீதியிலும், வியாபார ரீதியிலும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. ஒரு பேச்சுக்கு ஸ்ரவேல் தேசம் எம் நாடு அமையும் இடத்தில் இருந்திருந்தால் இன்று தேசப்படத்தில் ஸ்ரவேல் என்ற ஒரு நாடு அமைந்திருக்காது. எனவே இனியும் எங்கள் எஞ்சிய மக்களை பலிகொடுக்காது அவர்களை நிம்மதியாக வாழவிடுவோம். புலம் பெயர் தேசங்களில் இருக்கும் உங்களின் தமிழுணர்வு புரிகின்றது. உங்கள் உணற்சிவசத்தால் இன்னும் எஞ்சி இருப்பவர்களின் உயிர்களை பறித்துவிட்டாதீர்கள்.

Link to comment
Share on other sites

விடிவெள்ளி,

உண்மைகள் பலருக்கு உறைக்கத் தான் செய்யும். நீங்கள் உங்கள் பயணக்கட்டுரையைத் தொடருங்கள்.

இஸ்ராயேல் நாட்டை எந்தக்காலத்திலும் தமிழன் உதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.தமிழன் முதலில் சுயதேடலில் இறங்கினால் இது புரியும்.

இந்தப் பயணக்கட்டுரை உண்மையை அல்ல சொல்கிறது. உங்களின் நிலை சார்ந்து உங்களின் அனுபவத்தை மட்டும் சொல்கிறது. இதனை வைத்து இதுதான் அங்குள்ள நிலைமை என்பது தவறானது. ஒரு பத்திரிகையாளன் 2004 இல் வன்னிக்குப் போய் வந்து எழுதியதை இந்த உலகம் கண்ணெடுத்தும் பார்க்கவில்லை. அங்கு மக்கள் நல்லிரவில் கூட பயமின்றி நடமாடுகின்றனர்.. அந்தளவிற்கு சுதந்திரம் இருக்கிறது என்பதை சொன்னதும் இன்றி காந்தி கண்ட விடுதலையை அங்கு பெண்கள் அனுபவிக்கின்றனர் என்று கூறியும் இருந்தார். அதுவும் அவர் ஒரு இந்தியப் பத்திரிகையாளர். அது தான் அங்கு பெரும்பாலும் நிலைமையாக இருந்த போதும் அப்போது ஊருக்கு போன சிலர் புலிகள் வரி வாங்கிறாங்கள் என்று கூச்சல் போட்டதுதான் சிங்களத்திற்கும் உலகிற்கும் அதிகம் கேட்டது. அப்படித்தான் இப்போ நீங்கள் சொல்வதும். இது சிங்களத்தைப் பற்றிய உங்களின் பார்வை.

நாங்கள் கொழும்பில் கடும் போர் காலங்கள் உட்பட 14 ஆண்டுகளுக்கும் மேல் வாழ்ந்திருக்கிறோம். அப்போது கண்ட அனுபவங்களோடு ஒப்பிடும் போது நீங்கள் எழுதி இருக்கும் விடயங்களில் பல போதிய அனுபவம் இன்மைகளின் வெளிப்பாடு என்று தெரிகிறதே அன்றி அது உண்மையின் பிரதிபலிப்பல்ல.

1987 இலும் இப்படித்தான். இந்தியப்படைகள் சுதந்திரம் வாங்கித் தந்துவிட்டதாக ஊர் பார்க்க ஓடிவந்த புலம்பெயர்ந்தவர்கள் இறுதியில் இந்தியப் படைகளின் வெடிப்பட்டு இறந்து இருக்கிறார்கள்.

வரலாறு மீளும். ஒரு காலத்தில் சேகுவராவும் காஸ்ரோவும் அவர்களின் அமைப்பும் சிதறடிக்கப்பட்டு அவர்கள் சிறைபிடிக்கப்பட்டு போராட்டமே தகர்ந்து போனது என்று வல்லரசுகள் எக்காளமிட்டுக் கொண்டன. இறுதியில் என்னவாயிற்று. இன்றும் அதே எக்காளமிட்ட வல்லரசிற்கு சவாலாக நிற்கிறது கியூப தேசம்.

ஆனால் இப்படிப்பட்ட தேசங்களின் நேசங்களைக் கூட நாம் சம்பாதிக்காமல் விட்டதே எமது துரதிஸ்டம். எமது வெளிவிவகார ராஜதந்திரம் பலவீனமாக இருந்ததால் தான் போரை சரிவர எதிர்கொள்ள முடியவில்லையே அன்றி போர் அல்ல போராட்டத்தின் இருப்பு. போராட்டம் போருக்கானதும் அல்ல. போராட்டம் உரிமைக்கானது. உரிமை கிடைக்கும் வரை அது பல்வேறு வழிகளில் தொடர்ந்து கொண்டே இருக்கும். அது போராகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. :D

Link to comment
Share on other sites

எனக்கு தெரிந்த ஒருவர்... யாழ்களத்தின் உறுப்பினர் ஒருவரின் நெருங்கிய உறவினர் ஒருவர் ஊருக்கு போனவர்... யாழ்ப்பாணத்தில் வெள்ளை வானில் காசுக்காக கடத்தப்பட்டு கைகள் கால்களில் எல்லாம் வாளால் வெட்டப்பட்டு இப்போ கொழும்பு வைத்திய சாலையில் இருக்கிறார்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் பயண அனுபவம் வித்தியாசமாக இருந்தால் எழுதுவதாக உத்தேசம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன நுணாவிலான்,

:D எதையாவது எப்படியாவது சாட வேண்டுமென்று சிலர் கதையளக்க, நீங்களுமா அதை நம்பி விடுகின்றீர்கள்?? கனடாவிலிருப்பவர் ஜெர்மனியிலா பயண முகவர் நிலையத்தை நடாத்துவார்?? :D:(

அண்ணா வசம்பண்ணா .எவரும் எவரையும் சாடவேண்டும் அவசியம் எவருக்கும் இல்லை எனக்கும் இல்லை ..விடிவெள்ளி ஒரு மொட்டைகடுதாசிக்கு link கொடுத்துள்ளார் .

எச்சரிக்கை என்னும் தலைப்பில் அவரின் பயணகட்டுரைக்கு கிழே உள்ளது . எச்சரிக்கை .....யார் இந்த சிம்மன் ? விடிவெள்ளிக்கும் இவருக்கும் என்ன சம்மந்தம் ????

Link to comment
Share on other sites

அண்ணா வசம்பண்ணா .....யார் இந்த சிம்மன் ? விடிவெள்ளிக்கும் இவருக்கும் என்ன சம்மந்தம் ????

அது ஏன் சித்தப்பு நீங்கள் சிம்மன் பற்றிய செய்தியை போய் வசம்பண்ணாவிடம் கேட்கின்றீர்கள்? சிம்மனுக்கும் விடிவெள்ளிக்கும் என்ன சம்பந்தம் இருந்தாலும் அது பற்றி உங்களுக்கு என்ன கவலை?

நீங்கள் என்ன சிம்மன் அன் கோவின் மெம்பரா?

இவரோடு பழக சந்தர்ப்பம் கிடைத்தால் நீங்களும் கவனமாக இருபதற்கே இந்த எச்சரிக்கை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு கருத்து எழுதுபவர்களே ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். நான் ஒன்றும் தமிழின விரோதி கிடையாது. இருந்தாலும் உண்மையை உண்மை என்றே ஏற்றுக்கொள்ள பழகவேண்டும். நாம் இலங்கையில் ஒரு தனியரசை அமைப்பது சிங்கள ஆளும்வர்கத்தில் யாருக்காவதோ அல்லது அண்டை நாடான இந்தியாவிற்கோ அல்லது தங்கள் பிராந்திய நலனை கவனிக்கும் வல்லரசுகளுக்கோ பிடிக்காத ஒரு விடயம். அதன் பிரதிபலிப்புகளை கடைசி நேரத்தில் வன்னியில் நிரூபித்தும் காட்டினார்கள். எமது போராட்டம் ஓர் உறங்கு நிலைக்கு தள்ளப்பட்டு போராளிகள் சிறைப்பிடிக்கப்பட்டு இன்று அதன் பின்..... ? எனவே நாம் எப்படி விசுவாசமாக இருந்தாலும் தங்கள் நலனுக்காய் எம்மை வல்லரசுகள் வாழவிடாது. எவ்வளவு பலமாக இருந்த எங்கள் படைகளையே சிங்களப்படைகள் வல்லரசுகளின் உதவியோடு துவசம் செய்தன அதை மறுப்பதற்கு இல்லை. ஸ்ரவேல் நாடு எப்படி உருவானது என்ற கேள்வியை என்னை கேளாதீர்கள்? அந்த நாட்டின் அமைவிடத்துக்கும் எமது தேசத்தின் அமைவிற்கும் பூகோள ரீதியிலும், வியாபார ரீதியிலும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. ஒரு பேச்சுக்கு ஸ்ரவேல் தேசம் எம் நாடு அமையும் இடத்தில் இருந்திருந்தால் இன்று தேசப்படத்தில் ஸ்ரவேல் என்ற ஒரு நாடு அமைந்திருக்காது. எனவே இனியும் எங்கள் எஞ்சிய மக்களை பலிகொடுக்காது அவர்களை நிம்மதியாக வாழவிடுவோம். புலம் பெயர் தேசங்களில் இருக்கும் உங்களின் தமிழுணர்வு புரிகின்றது. உங்கள் உணற்சிவசத்தால் இன்னும் எஞ்சி இருப்பவர்களின் உயிர்களை பறித்துவிட்டாதீர்கள்.

என்ன அண்ணே

முதல்ல பயண கட்டுரை என்றீங்கள்....... சரி அது உங்களின் சொந்த விடயம் என்றால். இப்போது தமிழனுக்கு அடிமையாக இருப்பதை தவிர வேறு வழியில்லை காரணம் அமைவிடம் என்றீங்கள்...........? உள்ளுக்கு உள்ளதை அப்படியே சொன்னால் எமக்கு புரிய இலகுவாக இருக்கும் உங்களுக்கும் எழுத சுகமாக இருக்குமெல்லோ?

இது இனி கொழும்புக்கு போய்...... வெள்ளவத்தை போய்................ அப்பிடியே வவுனியா வந்து. நாங்களும் உங்களுக்கு பின்னால இப்படியே ஒவ்வொரு ஊரா திரியிறதோ?

என்ன இப்ப மொத்ததில ஈழதமிழனுக்கு அடிமைவாழ்வுதான் சரியானது என்று சொல்றீங்கள்?

:lol::lol:^_^ சீ சீ அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை மருதங்கேணி ஏதோ எமது இந்த நேரத்தில் மனதில் பட்டதை அப்படியே சொல்லிவிட்டேன். வேறொன்றும் இல்லை.

Link to comment
Share on other sites

அண்ணா வசம்பண்ணா .எவரும் எவரையும் சாடவேண்டும் அவசியம் எவருக்கும் இல்லை எனக்கும் இல்லை ..விடிவெள்ளி ஒரு மொட்டைகடுதாசிக்கு link கொடுத்துள்ளார் .

எச்சரிக்கை என்னும் தலைப்பில் அவரின் பயணகட்டுரைக்கு கிழே உள்ளது . எச்சரிக்கை .....யார் இந்த சிம்மன் ? விடிவெள்ளிக்கும் இவருக்கும் என்ன சம்மந்தம் ????

எனககுத் தெரிந்து வருடக்கணக்காக நீங்கள் குறிப்பிடும் எச்சரிக்கையை விடிவெள்ளி தனது பதிவுகளில் இணத்துள்ளார். அதில் குறிப்பிட்ட நபர் பற்றிய விபரங்களும் உள்ளன. ஆனால் இங்கே விவாதிக்கப்படும் விடயத்தை திசைதிருப்புவது போல், நீங்கள் கேள்வி கேட்பது போலுள்ளது. காரணம் தங்களின் கருத்து சம்மந்தமாக நுணாவிலான் கருத்து அமைந்த போது, உண்மையைக் கூறாமல் நீங்கள் மெளனம் காத்ததன் நோக்கம்?? மேலே விடிவெள்ளி பதிந்த அனுபவங்களுக்கு, எதிர்மறையாக நீங்கள் ஏதாவது அறிந்திருந்தால் அவற்றையும் எம்மோடு பகிர்ந்து கொள்ளுங்கள். அதைவிடுத்து தேவையில்லாத விவாதங்கள் தேவையா?? :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

hi vidivelli,

mönchengladbach எப்படி இருக்கு??????

நீங்க எச்சரிக்கை என்று போட்டிருக்கிற சிம்மன்ரை கூட்டாளி குமார் கொஞ்ச நாளைக்கு முதல் தானுங்கோ கொழும்பு,வவுனியா,சாவகச்சேரி போட்டுவந்தார். அவரின் சொந்த இடமும் சாவகச்சேரி தான். சொன்னார் இலங்கை சோமாலியா போலை இருக்கு என்று. சாவகச்சேரிக்கு பஸ் ஒன்றும் ஒழுங்கு இல்லையாம். யாழ்ப்பாணத்திலை டக்கிளஸ் குழு கடத்தல்,கப்பம் வாங்குதாம். குமார் தன்ரை மகன் சந்தோஸ் ஜ்யும் கூட்டிட்டு போனவராம். ஒரே நுளம்பும் பிள்ளைக்கு வெள்ளைச்சீனி வாங்குவது கூட கஸ்டமா இருந்திச்சுதாம். ப்ரவுண் கலர் சீனி தானாம். வாங்கிக் கொடுத்தது.

நீங்கள் சொல்வது போலை அங்கை பாலும் தேனும் ஓடலையாம்.

ஈப்பிடிப்பி யின்ர வெள்ளைவான் ஒடுது என்று நீங்களே சொல்றீங்கள்?

பிறகு பால் ஒடவில்லை என்று சொல்றீஙகள்?

அது ஒடினால் சிலரின் வாழ்வில் பால் தேன் எல்லாம் ஒடுறமாதிரித்தான்................. அதைதான் அவர்கள் சொல்லுறார்கள்.

அதுதான் இன்னொரு அண்ணை அடிச்சு சொல்றார் சிர்த்தாhத்தனிடம் அளவுக்கு அதிகமான பணம் இருக்காம். இருட்டில இருக்க வேண்டியதுகள் எல்லாம் வாய்தவறியென்றாலும் வருகுதென்றால்......???? பால் தேன்............... என்ன அதுக்கு மேலேயும் ஒடுது என்றுதானே பொருள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் மீண்டும் எழுதுகின்றேன் விடிவெள்ளி

தாங்கள் பயண கட்டுரை எழுதுவதில் எமக்கு மகிழ்ச்சியே

ஆனால் அங்கு நீங்கள் சொல்வதுபோல் ஒன்றுமில்லை

எல்லோரும் பத்திரமாக இருக்கிறார்கள்

நீங்களும் பத்திரமாக போய்வரலாம் என்று எழுதும்போதுதான் உதைக்கிறது

மற்றும் படி தங்களது தாயகப்பற்று பற்றியோ மனிதாபிமானம் பற்றியோ எனக்கு எந்த குத்தலும் கிடையாது

அதற்கு எனக்கு தகுதியும் கிடையாது

இந்த கட்டுரையை சகிக்கக் கூட முடியாத, அதற்கு சரியான பதில்களை கூட எழுத வழி தெரியாது நிறுத்தச் சொல்கின்ற உங்களைப் போன்றவர்களை நம்பித்தான் எங்கள் தமிழ் தேசிய போராட்டம் இன்று உறைநிலைக்கு வந்துள்ளது.

இந்த கட்டுரை மூலம் அவர் சொல்லவருவதை

அல்லது

சொல்வதை

அல்லது

சொல்லும் விதத்தை

தாங்கள் ஏற்றுக்கொள்கின்றீர்களா?

Link to comment
Share on other sites

என்ன நுணாவிலான்,

<_< எதையாவது எப்படியாவது சாட வேண்டுமென்று சிலர் கதையளக்க, நீங்களுமா அதை நம்பி விடுகின்றீர்கள்?? கனடாவிலிருப்பவர் ஜெர்மனியிலா பயண முகவர் நிலையத்தை நடாத்துவார்?? :lol::D

யேர்மனி பிறேமனில் அப்படி ஒன்று இருக்கே! :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பையா நீங்கள் புதுப் பதிவு போட வேண்டிய  அவசியமே இல்லை........ அதுதான் அவர் போட்டி விதிகளில் வடிவாக சொல்லியிருக்கிறார் ....போட்டி விதி  04 ஐப் பின்பற்றி அவரின் அனுமதி பெற்று உங்களின் பதிவில் சில திருத்தங்கள் செய்யலாம்........ அவரின் அனுமதி பெறுவது உங்களின் கெட்டித்தனம் ...... ஏதோ என்னாலானது "புத்தியுள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும்".....!  😁
    • அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் குழப்பநிலை! முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் அமைந்துள்ள கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது குழப்பநிலை ஏற்பட்டிருந்தது. இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது குறித்த  மக்கள் சந்திப்பின் போது செய்தி சேகரிப்பதற்கு சென்றிருந்த முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் ஒருவர் அதனை காணொளியாக பதிவு செய்திருந்த நிலையில், அமைச்சரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் காணொளி எடுக்க வேண்டாமென  அவரைத் தடுத்ததோடு அதனை மீறி எடுத்து செய்தி பிரசுரித்தால் வீடுதேடி வருவோம் எனவும் அச்சுறுத்தல் விடுத்ததாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸ் அதிகாரிக்கு அறிவிக்கப்பட்டதாகவும், பின்னர் பொலிஸார் அமைச்சருக்கு இது குறித்து தெரியப்படுத்தி இருந்ததாகவும் ஆனால் எந்த நடவடிக்கையும் இது தொடர்பாக  எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2024/1378726
    • இராணுவ வீரர்களின் கவனத்திற்கு! முறையான விடுமுறையின்றி கடமைக்கு சமூகமளிக்காத மற்றும் சட்டவிரோதமான முறையில் சேவையை விட்டு வெளியேறியுள்ள இராணுவத்தினருக்கு ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் மே மாதம் 20 ஆம் திகதி வரை பொது மன்னிப்பு காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது மன்னிப்புக் காலத்தின் போது, தமது படையணி தலைமையகத்துடன் தொடர்பு கொண்டு சட்டரீதியாக சேவையை விட்டு வெளியேற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் ஏப்ரல் 20 ஆம் திகதிக்கு முன்னர் முறையான விடுமுறையின்றி பணிக்கு சமூகமளிக்காத அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் உரிய ஆவணங்களுடன் தத்தமது படையணி தலைமையகத்திற்கு மட்டும் சமூகளிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இராணுவ சேவையில் இருந்து வெளியேறும் அடிப்படை அனுமதி வழங்கல் நடவடிக்கை, 72 மணித்தியலங்களுக்குள் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ அடையாள அட்டை அல்லது இராணுவ அடையாள அட்டை தொலைந்து விட்டது எனின் சமீபத்தில் பெற்றுக் கொள்ளப்பட்ட பொலிஸ் அறிக்கையின் பிரதி, தேசிய அடையாள அட்டை அல்லது சாரதி அனுமதி பத்திர பிரதி, சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள், வரவு வைக்கப்பட்டுள்ள வங்கி புத்தகத்தின் பிரதி ஆகியவற்றை கொண்டுவருமாறு இராணுவ ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. மேலும், முறையான விடுமுறையின்றி பணிக்கு சமூகமளிக்காமை தவிர வேறு சட்ட விரோத நடவடிக்கைகளில் சம்பந்தப்படாதவர்கள் மற்றும் முறையான விடுமுறை இன்றி தற்போது வெளிநாட்டில் இருக்கும் இராணுவ உறுப்பினர்கள் மீண்டும் சமூகமளிக்காது தனது படையணியுடன் தொடர்பு கொண்டு இந்த பொது மன்னிப்புக் காலத்தின் போது சட்டரீதியாக தமது சேவையை விட்டு வெளியேறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இராணுவ ஊடகப் பிரிவு மேலும் அறிவித்துள்ளது. https://athavannews.com/2024/1378764
    • கனடாவில் இடம்பெற்ற தங்கக் கொள்ளை – 6 பேர் கைது! கனடாவில் இடம்பெற்ற மிகப் பெரிய தங்கக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என கனேடிய தகவல்கள் தெரிவித்துள்ளன ஏப்ரல் 2023 இல், டொராண்டோவில் உள்ள பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது இதன் மதிப்பு 16 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என கனேடிய தகவல்கள் தெரிவிக்கின்றன. அவற்றில் மொத்தம் 400 கிலோ எடை கொண்ட 6,600 தங்கக் கட்டிகள் மற்றும் வெளிநாட்டு பண கையிருப்பு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1378752
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.