Jump to content

அப்பெ ரட்ட (எங்கன்ட நாடு)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

"வெடி தியபங் ,ஒக்கம கொட்டியா,காண்டா...." என்று 2ஆம் லெப்டினட் பண்டாவின் குரல் கேட்க அவனின் கட்டளையை மதித்து கீழ் பணிபுரியும் சிப்பாய்கள் துப்பாக்கியால் சாரமாரியாக் சுட்டார்கள்.மக்கள் பதட்டத்தால் நாலாபக்கமும் சிதறிஅடித்து கொண்டு ஒடினார்கள்.ஒடமுடியாதவர்கள் அந்த இடத்திலயே வீழ்ந்து மடிந்தார்கள். பண்டா தனது மேல் அதிகாரிக்கு 6 புலிகளை சுட்டு கொண்று விட்டதாக தகவல் அனுப்பினான்.அவனை பாராட்டிய மேல் அதிகாரி ,இறந்தவர்களின் உடம்பை பெற்றொல் ஊத்தி எரித்துவிடும்படி கட்டளை இட்டான்.

"மாத்தையா மே ஒக்கம நாக்கிய மினிசு பவ்"(இவர்கள் எல்லாம் வயசு போன கிழடுகள் பாவம்)ஒட முடியாமல் வீழ்ந்து செத்துபோட்டுதுகள் என்றான் ஒரு சிப்பாய்.2ஆம் லெப்டினட் பண்டாவுக்கு கோபம் வந்துவிட்டது,இவன்கள்தான் அந்த கொட்டிகளை பெத்து போட்டவன்கள் ஆனபடியால் இவன்களும் கொட்டிதான்...இங்கு நான் சொல்லுவது தான் சட்டம் நீ எனக்கு கீழ்பணிபுறியும் சிப்பாய் .நான் உன்மேல் அதிகாரி என்று மிரட்டலாக கூறினான்.அத்துடன் அவனுக்கு தண்டனையும் கொடுத்தான்.இறந்தவர்களின் உடல்களை எரிப்பது உனது வேலை என்றான்.

"மேக்க அப்பெ ரட்ட" தமிழன்கள் இங்க கள்ளதோணியில் வந்தவன்கள் அவன்களை அழிக்க வேண்டும் என்று தனக்கு கீழ் பணிபுரியும் இராணுவத்திற்கு சொல்லியவண்ணமே இருந்தான்.

6புலிகளை கொண்றவன் என்றபடியால் உயரதிகாரிகளுக்கு பண்டா மீது நம்பிக்கை பிறந்துவிட்டது.சுற்றிவளைப்புகள்,கைதுகள் என்று வரும்பொழுது பண்டாவைத்தான் அதிகாரிகள் அனுப்புவார்கள்.அப்பாவிகளை கைது செய்வான்,நீ கொட்டிதானே உண்மையை சொல் என சித்திரை வதை செய்வான்,ரோந்து செல்லும் பொழுது டிரக் வண்டியை பார்த்து பயந்து ஒடுபவர்களை சுட்டு கொலை செய்து போட்டு புலிகள் தப்பி ஒடினார்கள் சுட்டுக் கொண்றுவிட்டேன் என்று அதிகாரிகளுக்கு சொல்லுவான் அவர்களும் விசாரனை எதுமின்றி பாராட்டுவார்கள்

பண்டாவின் இச்செயல்களால் லெப்டினட் தரத்திற்கு பதவி உயர்தப்படுகிறான்.தரமுயர்த்தப்பட்டவுடனே,இராணுவத்தில் பணிபுரியும் பெண்னை திருமணம் செய்கிறான்.குடும்ப வாழ்க்கையின் பயனாக இரு ஆண்குழந்தையும் ஒரு பெண்னும் புத்தனின் அருளால் கிடைக்கிறது.தெய்யனபிட்ட மூவரும் தாயாருடன் சொந்த ஊரில் வளர்ந்து வரும் வேளையில் பண்டா தமிழர் தாயகத்தில் தமிழர்களை புலி என்ற போர்வையில் அழித்து பல பதக்கங்களும் ,விருதுகளும் பெற்று பதவி உயர்வடைகிறான் .

.

விடுதலை நாட்களில் குழந்தைகளுடன் நேரம் செலவிடும் பொழுது "மெக்க அப்பே ரட்ட " என்று சொல்லி சிங்கள இனவாதகருத்துக்களை புகட்டுவான்.

ஒருநாள் கப்டன் பண்டாவை தாயார் அழைத்து உனக்கு ஒரு உண்மை தெரியுமோ? உன்னுடைய சியாவின் தாத்தே(அப்பப்பா வின் அப்பா தமிழன்) தெமிழு என்று சொல்ல இவனால் அதை ஜீரணிக்கமுடியவில்லை.....தங் மம சிங்களய.....மெக்க அப்பெ ரட்ட.......என்று சொல்லிய படியே தாயாருக்கு பதில் அளிக்காமல் அவ்விடத்தை விட்டு சென்றுவிட்டான்.

மகன்மார் இருவரையும் க.பொ.உயர்தரமுடிந்தவுடனே "கொத்தலாவ டிவன்ஸ் அகடமியில்" தனது செல்வாக்கை பயன்படுத்தி சேர்த்துவிடுகிறான்.இருவரையும் விமானப்படை அதிகாரியாக வரவேண்டும் அதற்கான பயிற்சியில் ஈடுபம்படி அன்புகட்டளையிடுகிறான்,இதன் மூலம்தான் புலிகளின் முக்கிய இடங்களை குண்டு போட்டு அழிக்கலாம் வவுனியாவில் பணிபுரியும் மேஜர் பண்டா கிழக்கு பிராந்தியத்திற்கு லெப்டினட் கேர்ணலாக பதவி உயர்வுடன் மாற்றலாகி செல்கிறான்.இவனினது கொடூர சித்திரவதைகள் காரணமாக இவனுக்கு ஒரு பட்டபெயரும் உண்டு அதாவது புள் பண்டா .சாதாரணமக்கள் இவனை புள் பண்டா என்று தான் தங்களுக்குள் கதைத்துக் கொள்வார்கள்.

கிழக்கில் பல தாக்குதல்களை நடத்தி கிழக்கின் கட்டளை அதிகாரியாகிறான் கேர்ணல் பண்டா...

புலிகளின் கன்னி வெடித்தாக்குதலில் ஒரு கண்ணயும் ஒரு காலையும் இழக்கிறான் கேர்ணல் பண்டா தொடர்ந்து பணி செய்ய முடியாததால் பிரிகேடியர் பண்டா என்ற பதவியுடன் புள் பண்டா ஒய்வு பெறுகிறான்.

மகன் பிரியங்க சுமன பண்டா வன்னியில் குண்டு மழை போடப்போகும்பொழுது புலிகளின் விமானஎதிர்ப்பு பீரங்கி படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டு மரணமடைகிறான்.

தனது இழப்புக்களை பற்றிய கவலையில் இருக்கும் பொழுது இராணுவ பொலிசார் அவனது வீட்டை வருகிறார்கள்.புலிகளுக்கு இராணுவம் பற்றிய சில தகவல்களை வழங்கியமைக்காக விசாரனை செய்ய வேண்டும் என அழைத்து செல்லப்பட்டு தடுத்து வைக்கப்படுகிறான்.

சில சிங்கள பத்திரிகைகளை இராணுவீரன் ஒருவன் கொடுக்கின்றான்....

செய்திகளின் தலையங்களை வாசிக்கின்றான் ,எல்லாம் கொட்டிகளின் செய்தியாக இருக்கின்றன.

புலிகளின் தளபதியின் தாயார் வெளிநாடு பயணம்.

புலிகளின் தளபதி முதலமைச்சர்.

புலிகளின் தளபதி கட்சியின் உபதலைவர்,

புலிகளின் தளபதி ஜனதிபதியின் பிராந்திய ஆலோசகர்

புலிகளின் தளபதியின் மனைவி மேயர் ....

புலிகளின் தளபதி ஜனாதிபதி வேட்பாளர்.

"அப்பெ ரட்ட அப்பெ மினிசு "என்று எனது மகனை இழந்தேன் ,காலையும் ,கண்ணையும் இழந்தேன் ..தங் மம அத்துள(உள்ளே) கொட்டி ஒக்கம எளிய(வெளியில்) கத்தியவன் நெஞ்சை பிடித்தபடியே நிலத்தில் வீழ்ந்தான் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன்!

உண்மையிலையே சொல்லுறன்

நீங்கள் எங்கையோ போயிட்டிங்கள்!

ஆனால் இஞ்சை என்னைப்போலை கொஞ்சம்

நிண்ட இடத்திலையே நிண்டு அரைச்சுக்கொண்டுதான் நிக்கிறம்

Link to comment
Share on other sites

புத்தன் சும்மா சொல்லககூடாது பக்கத்திலை நிண்டிருந்தால் அப்பிடியெ கட்டிப்பிடிச்சு ஒரு உம்மா தந்திருப்பன் :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புத்தன் அண்ணா சூப்பர்.

ஒரு பச்சைப்புள்ளி வழங்கி இருக்கு

அப்புறம் கு.சா தாத்தா வின் கருத்து தான் எனதும். அதனாலை கு.சா தாத்தாக்கும் ஒரு பச்சை.

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள்,ரொம்ப வித்தியாசமாய் சிந்தித்திருக்கிறீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்து உண்மையில் இதை எழுதியது யார்?ஜம்மு தானே.

பாராட்டுக்கள் புத்து.

இது சும்மா கதையல்ல.உண்மை கதை.

Link to comment
Share on other sites

புத்தன், உங்கள் கதையின் தரத்தில் உயர்வு தெரிகின்றது. சொற்கள், வசனங்கள், பந்திகளையும் சில நிமிடங்கள் செலவளித்து சீராக்கி சீர்ப்படுத்தப்பட்ட கோர்வைகளாக எழுதினீங்கள் எண்டால் இன்னமும் சிறப்பாய் இருக்கும். சிங்களமும், தமிழுமாய் புகுந்து விளையாடி இருக்கிறீங்கள், பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மைய கதை என்னால் தவறாக விளங்கபடுகிறது என்று நினைக்கிறேன்.....

எல்லோரும் பாரட்டுகிறார்கள் ஆக நல்ல கதையாகவிருக்கும் என்றே நம்புகிறேன்.

பெரியார்தாசன் இஸ்லாம் மதத்திற்கு மாறுகிறார்....? தனிமனித சிந்தனைகளும் செயற்பாடுகளும் பின்னாளில் கவலைகளை கொடுக்க கூடியவை?

ஏதோ ஒரு இடத்தில் நான் நிற்கிறேன்.

தவிர காரக்டர் சிருஸ்டிப்பு நன்றாக இருக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரத் பொன்சேகா, கருணா, பிள்ளையான், தலைவரின் தாயார் ஆகியோரை வைத்து சிறப்பாகப் படைத்திருக்கிறீர்கள் புத்தன். வாழ்த்துகள்.

ஈழப்பிரியன் இக்கதையை எழுதியது புத்தன் தான். யம்மு அல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான கற்பனை எல்லாம் புத்தனை தவிர ஒருத்தருக்கும் வராது அதற்காகவே ஒரு பாராட்டுக் கொடுக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன்!

உண்மையிலையே சொல்லுறன்

நீங்கள் எங்கையோ போயிட்டிங்கள்!

எல்லா புகழும் யாழுக்கே ... :D:D கருத்துப்கிர்ந்தமைக்கு நன்றிகள்

புத்தன் சும்மா சொல்லககூடாது பக்கத்திலை நிண்டிருந்தால் அப்பிடியெ கட்டிப்பிடிச்சு ஒரு உம்மா தந்திருப்பன் :(

ஜயோ வெட்கமாய்யிருக்கு... நன்றிகள் சாத்திரி உம்மா தந்தமைக்கு

புத்து பின்னீட்டீங்கள் :D

என்னத்தை கிடுகையோ? நன்றிகள் சஜீவன்

புத்தன் அண்ணா சூப்பர்.

ஒரு பச்சைப்புள்ளி வழங்கி இருக்கு

அப்புறம் கு.சா தாத்தா வின் கருத்து தான் எனதும். அதனாலை கு.சா தாத்தாக்கும் ஒரு பச்சை.

பச்சை குத்தி கருத்து பகிர்ந்தமைக்கு நன்றிகள் ஜீவா

புத்தனுக்கு நன்றிகள். நடைமுறையை கதையாக்கியமைக்கு நன்றி. :D

நன்றி தெரிவித்தமைக்கு நன்றிகள்

நல்லதொரு (நிஜ)கதை தந்தமைக்கு நன்றிகள்...!

வாசித்தமைக்கு நன்றி ஈழமகள்

வாழ்த்துக்கள்,ரொம்ப வித்தியாசமாய் சிந்தித்திருக்கிறீர்கள்.

நன்றிகள் சிற்பி

மாத்தி யோசி டட ட ..மாத்தி யோசி :D:D

புத்து உண்மையில் இதை எழுதியது யார்?ஜம்மு தானே.

பாராட்டுக்கள் புத்து.

இது சும்மா கதையல்ல.உண்மை கதை.

நன்றிகள் ஈழப்பிரியன்.....எவ்வளவு கஷ்டப்பட்டு ,கடற்கரையில் போய் இருந்து சிந்திச்சு எழுதின கதை....என்னை ஒரு படைப்பாளியாக ஏற்கமாட்டியள் போல கிடக்குது(எல்லாம் ஒரு தமாசுக்கு) :D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களமும், தமிழுமாய் புகுந்து விளையாடி இருக்கிறீங்கள், பாராட்டுக்கள்.

நன்றிகள் மச்சான் குறைகள திருத்தி எழுதமுயற்சிக்கிறேன்...

என்னுடைய அடுத்த கதை கிந்தியும் தமிழும் கலந்து எழுதலாம் என்று யோசிச்சு இருக்கிறேன்...நமஸ்தே ஜீ...அச்சா ஜீ...சுக்கிரியா ஜீ...பேட்டோ ஜீ..

வாசித்தமைக்கு சுக்கிரியா ஜீ....

பெரியார்தாசன் இஸ்லாம் மதத்திற்கு மாறுகிறார்....?

ஆகையால் புத்தனும் மதம் மாறக்கூடும் என்று நினைக்கிறீங்களோ? :(:D

நன்றிகள் மருதங்கேணி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரத் பொன்சேகா, கருணா, பிள்ளையான், தலைவரின் தாயார் ஆகியோரை வைத்து சிறப்பாகப் படைத்திருக்கிறீர்கள் புத்தன். வாழ்த்துகள்.

ஈழப்பிரியன் இக்கதையை எழுதியது புத்தன் தான். யம்மு அல்ல.

என்னை சும்மா இவன்கிளிட்ட மாட்டி விடாதையுங்கோ ...பிறகு நீங்கள் ஒரு தலை சிறந்த படைப்பாளியை இழக்கவேண்டி வரும் :(:D அப்பு அது எல்லாம் சுத்த கற்பனை,எனக்கு பிள்ளையானயும் தெரியாது கருணாவயும் தெரியாது... :D:D

இப்படியான கற்பனை எல்லாம் புத்தனை தவிர ஒருத்தருக்கும் வராது அதற்காகவே ஒரு பாராட்டுக் கொடுக்கலாம்.

நன்றிகள் ரதி ...கருத்துபகிர்ந்தமைக்கு

Link to comment
Share on other sites

நானும் ஒரு பச்சை குத்தியிருக்கிறன். சொரி, நான் முன்வீட்டில இருந்தும் சாத்திரியாரை போல உம்மா தர ஏலாது :(

Link to comment
Share on other sites

சொரி, நான் முன்வீட்டில இருந்தும் சாத்திரியாரை போல உம்மா தர ஏலாது :lol:

ஏன் வாயில காயமா?

Link to comment
Share on other sites

வித்தியாசமான கதை புத்தன். யதார்த்தத்தை நன்கு உணர்ந்து எழுதியுள்ளீர்கள். :lol:

இன்று என்னிடம் குத்துவதற்கு பச்சை புள்ளிகள் இல்லை. பிறகு குத்திவிடுகிறேன் :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.