• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

பாரதிப்பிரியன்

தமிழே நீ நலமா...

Recommended Posts

நீ இறந்த காலம்

நான் நிகழ் காலம்

நாம் எதிர் காலம்

தமிழே நீ நலமா...

அமுதே என்றுன்னை அழைத்தோமே- இன்று

அழுதே உன்னைப் பார்க்கின்றோம்

உன்னைப் போற்றிட்ட காலம் இறந்தது தாயே

மண்ணைப் புகழ்ந்திட்ட ஞாலம் மறைந்தது அம்மா

விண்ணைச் சென்றவர் விரைந்திட்ட போதும்

பொன்னைப் போன்றவர் கனாவை நிகழ்த்திட அருள் செய்...

தமிழே நீ நலமா...

தவித்தவருக்கு தானம் செய்திட்ட தாயல்லவா நீ- இன்று

அவித்த ஒரு வேளைச் சோற்றிற்கேங்கும் சேயினைக் கண்டாயோ

என்னைப் பாருங்கள் ஒரு செயலற்ற பாவி நான்

கண்ணைக் கொண்டந்த காட்சி பார்த்தும்

திண்ணை விட்டகல திராணியும் இல்லை

மண்ணை மீட்டெடுக்க என்னுள் மறவனுமில்லை

தமிழே நீ நலமா...

சென்றவிடமெல்லாம் வீரவாகை சூட்டிய மறவனன்றோ உன் மகன் - இன்று

வென்றுவிட வீரமின்றி பகைவன் எச்சிச் சோற்றினை உண்ணும் துயர நிலையை பார்த்தாயோ

நான் என்று நாவிருக்கும்வரை கூறாமல்

முடியாது என்று முடித்துவிடக் கூடாமல்

என்னுள்ளே ஒளிந்துள்ள மறவனைக் கேட்டுக்கொண்டேன்...

நாங்கள் நாங்கள் என்று நாண்கள் எடுத்தால் தானோ

வாங்கள் வாங்களென வாழ்த்தும் இவ் வையகம்?

தமிழே நீ நலமா...

நீ இறந்த காலம்

நான் நிகழ் காலம்

ஆனால்...

பல 'நான்'கள் (நாண்கள்) சேர்ந்திடின்....

நாம் தான் இவ் வையகத்தின் எதிர் காலம்

Share this post

Link to post
Share on other sites

புதியவர் பாரதி பிரியனின் கவிதை அழகாய் இருக்கிறது. மேலும் தொடருங்கள்.

Share this post

Link to post
Share on other sites

உங்கள் கவிதை நன்றாக உள்ளது பாரதிப் பிரியன் அண்ணா.

இயலாமையின் ஆதங்கமும்,இழ‌ந்தவைகளின் சோகங்களையும் நன்கு படம்பிடித்துக் காட்டியுள்ளீர்கள்.

என் சார்பாக ஒரு பச்சைப் புள்ளி.

தவித்தவருக்கு தானம் செய்திட்ட தாயல்லவா நீ- இன்று

அவித்த ஒரு வேளைச் சோற்றிற்கேங்கும் சேயினைக் கண்டாயோ

என்னைப் பாருங்கள் ஒரு செயலற்ற பாவி நான்

கண்ணைக் கொண்டந்த காட்சி பார்த்தும்

திண்ணை விட்டகல திராணியும் இல்லை

மண்ணை மீட்டெடுக்க என்னுள் மறவனுமில்லை

தமிழே நீ நலமா...

சென்றவிடமெல்லாம் வீரவாகை சூட்டிய மறவனன்றோ உன் மகன் - இன்று

வென்றுவிட வீரமின்றி பகைவன் எச்சிச் சோற்றினை உண்ணும் துயர நிலையை பார்த்தாயோ

நான் என்று நாவிருக்கும்வரை கூறாமல்

முடியாது என்று முடித்துவிடக் கூடாமல்

என்னுள்ளே ஒளிந்துள்ள மறவனைக் கேட்டுக்கொண்டேன்...

நாங்கள் நாங்கள் என்று நாண்கள் எடுத்தால் தானோ

வாங்கள் வாங்களென வாழ்த்தும் இவ் வையகம்?

இவை எனக்கு பிடித்த வரிகள்.

Share this post

Link to post
Share on other sites

தமிழே நீ நலமா...

தவித்தவருக்கு தானம் செய்திட்ட தாயல்லவா நீ- இன்று

அவித்த ஒரு வேளைச் சோற்றிற்கேங்கும் சேயினைக் கண்டாயோ

வவுனியா, யாழ் நகரங்களில் தமிழர்கள் சாப்பாட்டுக்கு கையேந்தும் அவலம். :(

வணக்கம் பாரதிப்பிரியன், உங்கள் கவிதை நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள். புதுக்கவிதையுடன் இணைந்த மரபுக்கவிதையைத் தந்து இருக்கிறீர்கள். உங்களுக்கு மரபுக்கவிதை நன்கு எழுதக்கூடிய ஆற்றல் இருக்கிறது, மரபுக் கவிதைகளையும் தொடர்ந்தும் எழுதுங்கள். தற்போது மரபுக்கவிதை எழுதிவரும் கவிஞர்கள் குறைவு. தொடர்க உங்கள் பணி. நன்றி.

Share this post

Link to post
Share on other sites

புதியவர் பாரதி பிரியனின் கவிதை அழகாய் இருக்கிறது. மேலும் தொடருங்கள்.

நன்றி நிலாமதி, உங்கள் ஊக்குவிப்போடு தொடருவேன் என நம்புகிறேன்.

உங்கள் கவிதை நன்றாக உள்ளது பாரதிப் பிரியன் அண்ணா.

இயலாமையின் ஆதங்கமும்,இழ‌ந்தவைகளின் சோகங்களையும் நன்கு படம்பிடித்துக் காட்டியுள்ளீர்கள்.

என் சார்பாக ஒரு பச்சைப் புள்ளி.

இவை எனக்கு பிடித்த வரிகள்.

நன்றி ஜீவா, என்ன செய்வது.....என்றாவது ஒரு நாள் விடிவு வந்திடாதா என்று, அன்றுவரை இன்று தொட்டு ஏங்கியே எமது வாழ்வு செல்கின்றது...

நன்றி காவாலி

Share this post

Link to post
Share on other sites