Jump to content

பாடகர்களின் கன்னிப்பாடல்


Recommended Posts

சீர்காழி கோவிந்தராஜனின் மகன் டாக்டர் சிவசிதம்பரத்தின் முதல் பாடல்

 

அபிநயசுந்தரி ஆடுகிறாள்

 

http://www.youtube.com/watch?v=2KvIaFPPpOg

 

 

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • Replies 121
  • Created
  • Last Reply

எஸ்.பி.சைலாஜாவின் முதற் பாடல் போண்ணு ஊருக்கு புதிசு படத்தில் இடம்பெற்ற சோலைக்குயிலே எனும் பாடல்.பாடலுக்கான இசை இளையராஜா

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

Anweshaவின் கன்னிப் பாடல் மேகம் வந்து என்ற பாடல் மந்திரப்புன்னகை படத்தில் இருந்து ...

Anwesha1%20.jpg

Link to comment
Share on other sites

  • 1 month later...

பாடகி தஞ்சை செல்வியின் கன்னிப்பாடல் ஈசன் படத்தில் இருந்து

வந்தனமாம் வந்தனம்

எல்லோருக்கும் வந்தனம்

மனமணமாம் சந்தனம்

சந்தனத்த பூசிகிட்டு சந்தோசமா கேக்கணும்

கலகலப்பா ஆடணும், விசிலு தாளம் போடணும்

ஜில்லா விடு ஜில்லா வந்த

பொண்ணு கதைய கேளையா

நான் தூத்துக்குடி பொண்ணையா

என் கதைய கேளையா

சுகத்த விக்குற பொண்ணுக்கும்

மனசிருக்குது பாரய்யா

அஞ்சு பொண்ண பெத்தெடுத்த

அரசன் கூட ஆண்டியாம்

வாழ்க்கையில போண்டியாம்..

எட்டாவதா பெத்தெடுத்த

எங்கப்பனுக்கு தெரியல

சொக்கனும் அத கேக்கல..

வளைந்து நிக்குற தென்னையா

வக்கணையா நானின்னேன்

ஏழையும் கரை சேத்ததாலே

ஏழரையா நானானேன்.

அங்கெ சுத்தி இங்கே சுத்தி

வந்தானையா மாப்பிள

சீக்காளிக்கு மறுபுள்ள

பழைய பாயா என்ன சுத்தி

போனானையா மாப்பிள

அவன் துப்பில்லாத ஆம்பிள

அஞ்சாந்நாளு மூட்டு வலியில

மாப்பிள தான் படுத்திட்டான்

என் கனவையெல்லாம் ஒடச்சிட்டான்

காச்சலுக்கு காடு வித்தேன்

இருமலுக்கு நிலம் வித்தேன்

வித்ததேல்லாம் போக மிச்சமாக

நான் நானின்னேன்

அட எச்சமாக நானின்னேன்

ஊரிலுள்ள மீசையெல்லாம்

என்ன சுத்தி வந்திச்சு

இள மனச கெடுத்திச்சு

உசிர விட மானம் பெருசு

புத்திக்கு தான் தெரிஞ்சிச்சு.

வயிறு எங்கே கேட்டிச்சு

ஒரு சாணு வயித்துக்கு தான்

எல்லாத்தையும் விக்குறேன்

நான் எல்லாத்தையும் விக்குறேன்

இப்ப இங்கே நிக்குறேன்

என் கதைய முடிக்கிறேன்

மற்றுமொரு பாடல் அழகர் சாமியின் குதிரை படத்தில் இருந்து.....

Link to comment
Share on other sites

  • 7 months later...

பாடகர்களின் கன்னிப்பாடல்

பாடகி தீபா மிரியம் நான் அவனில்லை படத்தில் பாடிய தேன் குடிச்ச நிலவு எனும் பாடல் இவரின் கன்னிப்பாடலாகும்.

deepa2.jpg

Link to comment
Share on other sites

பாடகி பிரசாந்தினியின் கன்னிப்பாடல் 12ப் றெயின் போ கொலனி படத்தில் கே.கேயுடன் இணைந்து பாடிய ஒரு புன்னகை பூவே என்ற பாடல்.இவர் அமரர் மலேசியா வாசுதேவனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 


ரொ‌ம்‌ப ரொ‌ம்‌ப சந்‌தோ‌ஷமா‌ இருந்‌தது
பி‌ன்‌னனி‌ பா‌டகி‌ பி‌ரா‌சா‌ந்‌தி‌னி‌ பே‌ட்‌டி‌

prashanthini-200x300.jpgஉங்‌கள்‌ குடும்‌பத்‌தை‌ப்‌பற்‌றி சொ‌ல்‌லுங்‌க?
என்‌ அப்‌பா‌ தா‌ன்‌ மலே‌சி‌யா‌வா‌சுதே‌வன்‌‌. ஒரு அண்‌ணன்‌ , அக்‌கா‌ இருக்‌கா‌ங்‌க . எல்‌லா‌ருமே‌ தி‌ருமணமா‌கி‌‌ செ‌ட்‌டி‌ல்‌ ஆகி‌ட்‌டா‌ங்‌க. இப்‌போ‌ நா‌ன்,‌ என்‌ கணவர் பி‌ரே‌ம்‌ அவர்‌ ஒரு பி‌ஸி‌னஸ்‌மே‌ன்‌ ஓய்‌வு‌ நே‌ரங்‌களி‌ல்‌ எடி‌ட்‌டி‌ங்‌கும்‌ செ‌ய்‌வா‌ர்‌‌, மகன்‌ ரி‌த்‌தி‌வி‌க் இது தா‌ன்‌ எங்‌கள்‌ குடும்‌பம்‌.
எப்‌படி‌ இந்‌த துறை‌யை‌ தே‌ர்‌ந்‌தெ‌டுத்‌தீ‌ங்‌க‌?
இந்‌த பீ‌ல்டுக்‌கு வருவே‌ன்‌ நா‌ன்‌ எதி‌ர்‌பா‌ர்‌க்‌கவே‌ இல்‌லை‌. எனக்‌கு நி‌றை‌ய படி‌க்‌கனும்‌னு தா‌ன்‌ ஆசை‌யி‌ருந்‌தது. பத்‌தா‌ம்‌ வகுப்‌பு‌ முடி‌க்கும்‌ போ‌து கொ‌ஞ்‌சம்‌ கவனம்‌ மா‌ற ஆரம்‌பி‌த்‌தது, பா‌ட்‌டு‌ மே‌ல லே‌சா‌ ஆர்‌வம்‌ வந்‌தது அப்‌படி‌யே‌ பா‌ட ஆரம்‌பி‌த்‌தே‌ன்‌. அப்‌போ‌ தா‌ன்‌ நி‌னை‌த்‌தே‌ன்‌ ஏன்‌ நம்‌ம அப்‌பா‌ பீ‌ல்‌டுக்‌கு போ‌ககூடா‌துன்‌னு. இந்‌த நே‌ரத்‌தி‌ல்‌ மி‌ன்‌னலே‌ படம்‌ சூ‌ட்‌டி‌ங்‌ போ‌ய்‌கி‌ட்‌டு இருந்‌தது. சரி‌ ஹரி‌ஸ்‌ ஜெ‌யரா‌ஜ்‌ சா‌ருக்‌கு போ‌ன்‌ செ‌ய்‌து பே‌சி‌னே‌ன்‌. நே‌ர்‌ல வா‌ங்‌க வா‌ய்‌ஸ்‌ டெ‌ஸ்‌ட்‌ எடுப்‌போ‌ம்‌ன்‌னு ஆடி‌ஷனுக்‌கு வர சொ‌ன்‌னா‌ர்‌. அங்‌கே‌ போ‌ய்‌ கசல்‌ ஒண்‌ணு பா‌டி‌ கா‌ட்‌டி‌னே‌ன்‌. ஒரு வா‌ரம்‌ கழி‌த்‌து ஸ்‌டி‌யோ‌வி‌ல்‌ இருந்‌து போ‌ன்‌ செ‌ய்‌து கூப்‌பி‌ட்‌டா‌ங்‌க. 12பி‌ படத்‌தி‌ல்‌ ஒரு பு‌ன்‌னகை‌ பூ‌வே‌ பா‌டல்‌ பா‌டி‌னே‌ன்‌. அப்‌படி‌ தா‌ன் என்‌‌ இசை‌ பயணம்‌ ஆரம்‌பமா‌னது.
நடி‌கர்‌, பா‌டகர்‌ என உங்‌கள்‌தந்‌தை‌ சி‌னி‌மா‌த்‌துறை‌யி‌ல்‌ நீ‌ண்‌டகா‌லமா‌க இருக்‌கி‌றா‌ர்‌? நீ‌ங்‌கள்‌ நடி‌க்‌க வே‌ண்‌டும்‌என்‌று நி‌னை‌த்‌ததி‌ல்‌லை‌யா‌?
நடி‌க்‌கனும்‌ங்‌கி‌ற ஐடி‌யா‌வே‌ எனக்‌கு வந்‌தது கி‌டை‌யா‌து. அப்‌பா‌ நடி‌ப்‌பா‌ரே‌ தவி‌ர எங்‌க போ‌றா‌ர்‌, என்‌னபடத்‌தி‌ல்‌ நடி‌க்‌கி‌றா‌ர்‌ என்‌பது கூட எங்‌களுக்‌கு தெ‌ரி‌யா‌து அவர்‌தி‌ரும்‌பி‌ வந்‌து சொ‌ன்‌னா‌ல்‌ தா‌ன்‌ தெ‌ரி‌யு‌ம்‌. அதி‌லும்‌ நா‌ன்‌ முழுக்‌க முழுக்‌க ‌படி‌ப்‌பி‌ல்‌ தா‌ன்‌ கவனம்‌ செ‌லுத்‌துவே‌ன்‌ வே‌று எதை‌யு‌ம்‌ யோ‌சி‌க்‌க மா‌ட்‌டே‌ன்‌ பா‌ட்‌டு சொ‌ல்‌லி‌ கொ‌டுக்‌க மா‌ஸ்‌டர்‌ வி‌ட்‌டுக்‌கு வந்‌து சொ‌ல்‌லி‌ கொ‌டுப்‌பா‌ங்‌க அவ்‌வளவு‌தா‌ன்.‌ சி‌ன்‌னவயதி‌ல்‌ இருந்‌தே‌ அப்‌பா‌ ரெ‌க்‌கா‌ர்‌டி‌ங்‌ போ‌வா‌ரு,வீ‌ட்‌டி‌ல்‌ பா‌டி‌கி‌ட்‌டு இருக்‌கும்‌ போ‌து கூட இந்‌த பீ‌ல்‌டுக்‌கு வருவே‌ன்‌னு நி‌னை‌த்‌தது கி‌டை‌யா‌து.
அப்‌பு‌றம்‌ 12பி‌க்‌கு பி‌றகு ஒரு சி‌ல படங்‌களி‌ல்‌ பா‌டல்‌கள்‌ பா‌டி‌கி‌ட்‌டு தா‌ன்‌ இருந்‌தே‌ன்‌. வி‌ன்‌னர்‌ படத்‌தி‌ல்‌ ஒரு பா‌டல்‌ பா‌டி‌யி‌ருக்‌கி‌றே‌ன்‌ யு‌வன்‌சங்‌கர்‌ ரா‌ஜா‌ இசை‌யி‌ல்‌. என்‌ தி‌ருமணத்‌தி‌ற்‌கு பி‌றகு தா‌ன்‌ முழுசா‌ இசை‌யி‌ல்‌ இறங்‌கி‌யி‌ருக்‌கி‌றே‌ன்‌.
பி‌ன்‌னனி‌ பா‌ட ஆரம்‌பி‌க்‌கும்‌ போ‌து கோ‌ரஸ் இசை‌‌ பா‌டி‌யி‌ருக்‌கீ‌ங்‌களா‌?
இல்‌லை‌ அதுவரை‌ அந்‌த கோ‌ரஸ்‌ பக்‌கம்‌ எல்‌லா‌ம்‌ போ‌னதி‌ல்‌லை‌. நே‌ரடி‌யா‌ படத்‌தி‌ல்‌ முழு பா‌டல்‌ தா‌ன்‌ பா‌டி‌னே‌ன்‌. நா‌ன்‌ எதி‌ர்‌பா‌ர்‌த்‌ததை‌வி‌ட அந்‌த பா‌டல்‌ நல்‌லா‌வே‌ வந்‌தது. இந்‌த வா‌ய்‌ப்‌பை‌ ஏற்‌படுத்‌தி‌ கொ‌டுத்‌த ஹரி‌ஸ்‌ ஜெ‌யரா‌ஜ்‌ சா‌ருக்‌கு தா‌ன்‌ நன்‌றி‌ சொ‌ல்‌லனும்‌.
நல்‌ல‌ பே‌க்‌ ரவு‌ண்‌டு இருந்‌தும்‌ உங்‌களுக்‌கு பெ‌ரி‌ய ரீ‌ச்‌ கி‌டை‌க்‌கலை‌யே‌ அதை‌ப்‌ பற்‌றி‌ என்‌னநி‌னை‌க்‌கி‌றீ‌ங்‌க?
அதுக்‌கு கா‌ரணம்‌ நா‌ன்‌ முழுமை‌யா‌ ஈடுபடவி‌ல்‌லை‌. ரொ‌ம்‌ப கே‌ர்‌லஸா‌ இருந்‌துவி‌ட்‌டே‌ன்‌. அப்‌பா‌கி‌ட்‌ட போ‌ய்‌ ரெ‌க்‌கமண்‌ட்‌ பண்‌ண சொ‌ல்‌லனும்‌னு தோ‌ணி‌னதி‌ல்‌லை‌. அதை‌ நா‌ன்‌ வி‌ரும்‌பவமி‌ல்‌லை‌. என்‌னுடை‌ய தி‌றமை‌க்‌கு வெ‌ற்‌றி‌ கி‌டை‌க்‌கனும்‌. அப்‌போ‌ தா‌ன்‌ நி‌ரந்‌தி‌ர வெ‌ற்‌றி‌யா‌க இருக்‌கும்‌. ஒவ்‌வொ‌ரு பா‌டலுக்‌கும்‌ நா‌னே‌ வா‌ய்‌ப்‌பு‌ கே‌ட்‌டு முயற்‌சி‌ செ‌ய்‌வே‌ன்‌ கஷ்‌டபடுவே‌ன்‌. அந்‌த மா‌தி‌ரி‌ கஷ்‌டபடும்‌போ‌து கி‌டை‌க்‌கும்‌ வெ‌ற்‌றி‌ தா‌ன்‌ சந்‌தோ‌ஷமா‌க இருக்‌கும்‌. அப்‌பா‌ சொ‌ல்‌லி‌ வா‌ய்‌ப்‌பு‌ கி‌டை‌த்‌தா‌லும்‌ அங்‌கே‌ போ‌ய்‌ நா‌ன்‌ நல்‌லா‌ பா‌டி‌னா‌ல்‌ தா‌னே‌ வா‌ய்‌ப்‌பு‌ கி‌டை‌க்‌கும்‌. அதனா‌ல்‌ ஆரம்‌பத்‌தி‌ல்‌ இருந்‌து நா‌னே‌ எல்‌லா‌ முயற்‌சி‌களை‌ எடுத்‌துகி‌ட்‌டே‌ன்‌. நல்‌ல பா‌டல்‌ வரி‌கள்‌ நல்‌ல பி‌ன்‌னணி‌ இசை‌ சே‌ரும்‌ போ‌து தா‌ன்‌ அந்‌த பா‌டலுக்‌கு நல்‌ல ரீ‌ச்‌ கி‌டை‌க்‌கும்‌. வா‌ரணம்‌ ஆயி‌ரம் படத்‌தி‌ல்‌ வரும்‌ முன்‌தி‌னம்‌ பா‌ர்‌த்‌தே‌னே‌… ‌ பா‌டலுக்‌கு பி‌றகு எனக்‌கு நல்‌ல வரவே‌ற்‌ப்‌பு‌ இருக்‌கு. மக்‌கள்‌ எங்‌கு போ‌னா‌லும்‌ அடை‌யா‌ளம்‌ கண்‌டு கே‌ட்‌கி‌றா‌ங்‌க. வா‌ழ்‌த்‌துறா‌ங்‌க. சந்‌தோ‌ஷமா‌ இருக்‌கு.
முதல்‌ தடவை‌ உங்‌கள்‌ குரலை‌ தி‌யே‌ட்‌டர்‌ல கே‌ட்‌கும்‌ போ‌ழுது எப்‌படி‌ உணர்‌ந்‌தீ‌ங்‌க?
ரொ‌ம்‌ப ரொ‌ம்‌ப சந்‌தோ‌ஷமா‌ இருந்‌தது. அதை‌ எப்ப‌டி ‌சொ‌ல்வதுன்‌னு தெ‌ரி‌யலை‌. 12பி‌ படம்‌ ரீ‌லி‌ஸ்‌ அன்‌று முதல்‌ நா‌ள்‌ முதல்‌ ஷோ‌ தி‌யே‌ட்‌டர்‌ல போ‌ய்‌ பா‌ர்‌த்‌தே‌ன்‌. என்‌ வா‌ய்‌ஸ்‌ ஸ்‌கீ‌ரி‌ன்‌ல கே‌ட்‌கும்‌ போ‌து சந்‌தோ‌ஷமா‌க இருந்‌தது. அதன்‌ பி‌றகு ஒரு கே‌ப்‌ வி‌ழுந்‌து மறுபடி‌யு‌ம்‌ வெ‌யி‌ல்‌ படத்‌தி‌ல்‌ தா‌ன்‌ ரீ‌எண்‌ட்‌ரி‌ ஆனே‌ன்‌. ஜி‌.வி‌.பி‌ரகா‌ஷ்‌ இசை‌யி‌ல்‌ இறை‌வனை‌ உணர்‌கி‌ற தருணம்ங்‌கி‌ற பா‌டலை‌ பா‌டி‌னே‌ன்‌‌. ஜி‌.வி‌.பி‌ரகா‌ஷூ‌க்‌கும்‌ என்‌ நன்‌றி‌யை‌ சொ‌ல்‌லனும்‌ ஒரு பெ‌ரி‌ய லா‌ங்‌ கே‌ப்‌க்‌கு பி‌றகு ரீ‌எண்‌ட்‌ரி‌ கொ‌டுத்‌தற்‌கு.
இப்‌போ‌ கா‌ரண்‌ட்‌ல என்‌ன என்‌ன படங்‌களி‌ல்‌ பா‌டி‌யி‌ருக்‌கி‌றீ‌ர்‌கள்‌?
இப்‌போ‌ பத்‌து, பதி‌னை‌ந்‌து பா‌டல்‌கள்‌ பா‌டி‌யி‌ருக்‌கி‌றே‌ன்‌ அது இன்‌னும்‌ ஆடி‌யோ‌ ரீ‌லி‌ஸ்‌ஆகல. இப்‌போ‌ லே‌ட்‌டஸ்‌ட்‌டா‌ மா‌த்‌தி‌யோ‌சி‌ படத்‌தி‌ல்‌ மா‌த்‌தி‌யோ‌சி‌ன்‌னு ஒரு பா‌டல்‌ பா‌டி‌னே‌ன்‌. ரா‌ஜா‌ சா‌ர்‌ இசை‌யி‌ல்‌ மயி‌ல்‌ படத்‌தி‌ல்‌ ஒரு பா‌டல்‌ பா‌டி‌யி‌ருக்‌கி‌றே‌ன்‌ இன்‌னும்‌ ரீ‌லி‌ஸ்‌ ஆகல.அவர்‌கி‌ட்‌ட பா‌டி‌னது ரொ‌ம்‌ப சந்‌தோ‌ஷமா‌க இருந்‌தது. அது இல்‌லா‌மல்‌ ஜி‌.வி‌.பி‌ரகா‌ஷ்‌, சபே‌ஷ்‌முரளி, வி‌த்‌தி‌யா‌சா‌கர்‌‌ இவர்‌கள்‌ இசை‌யி‌ல்‌ பா‌டி‌யி‌ருக்‌கி‌றே‌ன்‌. படம்‌ பே‌ர்‌ தெ‌ரி‌யவி‌ல்‌லை‌. இன்‌னும்‌ சி‌ல படங்‌களி‌ல்‌ பா‌டி‌யி‌ருக்‌கி‌றே‌ன்‌.
பு‌தி‌ய இசை‌யமை‌ப்‌பா‌ளரா‌கி‌ இருக்‌கும்‌ உங்‌கள்‌ அண்‌ணன்‌ இசை‌யி‌ல்‌ பா‌டி‌யி‌ருக்‌கீ‌ங்‌களா‌?
அண்‌ணன்‌ இசை‌யி‌ல்‌ பா‌டி‌யி‌ருக்‌கி‌றே‌ன்‌. ரெ‌க்‌கா‌ர்‌டி‌ங்‌க ரும்‌க்‌குள்‌ போ‌ய்‌வி‌ட்‌டா‌ல்‌ அண்‌ணன்‌ என்‌பதெ‌ல்‌லா‌ம்‌ கி‌டை‌யா‌து அவரை‌ மி‌யூ‌சி‌க்‌ டை‌ரக்‌டரா‌க தா‌ன்‌ பா‌ர்‌ப்‌பே‌ன்‌.
http://www.kodambakkamtoday.com/index.php/singer-prashanthini-interview

 

Link to comment
Share on other sites

  • 11 months later...

பாடகி பிரகதியின் முதற்பாடல் பரதேசி படத்தில் ஜி.வி.பிரகாசின் இசையில் இடம்பெற்றது.

 

 

பாடல்:ஒரு மிருகம்

 

Link to comment
Share on other sites

பாடகி ரீட்டாவின் கன்னிப்பாடல் அன்னியன் படத்தில் இடம்பெற்றது.கண்ணும் கண்ணும் நோக்கியா எனும் பாடலுக்கு கோரஸ் பாடும் வாய்ப்பு ஹரிஸ் ஜெயராஜ் அவர்களால் வழங்கப்பட்டது.
 
 
-------------------------------------------------------------------------------------------------------------------
 
 
 
 
நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று

பொதுவாய் தமிழ்த் திரையுலகில் பாடகர்கள் தமிழர்களாய் இருக்கமாட்டார்கள். மலையாளமோ, தெலுங்கோதான் அவர்களது தாய்மொழியாக இருக்கும். இல்லாவிடில் இந்தியிலிருந்து ஃப்ளைட் ஏற்றி கூட்டி வருவார்கள். ஆனால் சற்றே ஆச்சரியமாக ஒரு தமிழ்ப் பெண், தமிழ் சினிமாவில் தமிழ்ப் பாடல்களைப் பாடிக்கொண்டிருக்கிறார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்குப் படங்களிலும் பாடி `சிறந்த பாடகி' விருது பெற்றிருக்கிறார்.

ரீட்டா. ஒரிஜினல் பெயர் சுச்சரிதா தியாகராஜன். திரைக்காக ரீட்டா என்று பெயரை மாற்றி வைத்திருக்கிறார்.

``சுசித்ரான்னு ஒரு பாடகி இருக்காங்க. என் பேரும் அது மாதிரியே இருந்தா குழப்பம் வரும்னு மாத்திக்கிட்டேன்.'' பேச்சே பாடுவதுபோல் இருக்கிறது.

`கண்ணுக்குள் ஏதோ' என்ற `திருவிளையாடல் ஆரம்பம்' படப்பாடலும் `ஒரு நாளைக்குள் எத்தனை கனவோ' என்ற `யாரடி நீ மோகினி' படப்பாடலும் இவர் பாடியதில் சூப்பர் ஹிட் பாடல்கள்.

``எனக்கு சின்ன வயசிலேயே மியூசிக் மேல ஆர்வம் வந்துடுச்சு. எங்கம்மா அற்புதமா வீணை வாசிப்பாங்க. எங்க வீட்டுல எப்பவுமே வீணையின் இசை கேட்டுக்கிட்டே இருக்கும். அந்தச் சூழல்ல வளர்ந்ததுனால எனக்கு இயற்கையாகவே பாட்டுப் பாடற ஆர்வம் வந்தது'' என்கிறார் ரீட்டா. இந்துஸ்தானி இசையும் கர்நாடக சங்கீதமும் பயின்றிருக்கிறார்.

இவரது முதல் திரை அனுபவம் `அந்நியன்' படத்தில் கிடைத்தது. கோரஸ் பாடகியாக, ஹாரிஸ் ஜெயராஜ் இசையில்.

எப்படி கிடைத்தது அந்த வாய்ப்பு?

``ஸ்டெல்லாமேரிஸ் கல்லூரியில் ஃபைன் ஆர்ட்ஸ் படித்துக் கொண்டிருந்தேன். கல்லூரியில் நடக்கும் கலை விழாக்களில் கலந்துகொண்டு பாடுவேன். அப்படி ஒரு விழாவுக்கு வந்திருந்த பாடகர் ஸ்ரீனிவாஸ் என் குரலைக் கேட்டுவிட்டு `நீ திரைப்படங்களில் பாட முயற்சிக்கலாமே. உன் குரலை சி.டி.யில் பதிவு செய்து இசையமைப்பாளர்களிடம் கொடு' என்றார். அதன்படி சி.டி. செய்து, ஹாரிஸ் ஜெயராஜிடம் கொடுத்தேன். உடனே அழைப்பு வந்துவிட்டது. பாடல் பாட அல்ல, கோரஸ் பாட. `கண்ணும் கண்ணும் நோக்கியா' பாடலில் வரும் கோரஸ் பாடினேன். அதுவே பெரிய வாய்ப்பு. அதன்பிறகு இமான் இசையில் சில பாடல்கள். அதில் `கண்ணுக்குள் ஏதோ' பாடல் சூப்பர் ஹிட்டாகிவிட்டது. தனுஷ்-ஸ்ரேயா நடித்த அந்தப் பாடல் காட்சியை சேனல்கள் ஒளிபரப்பிக்கொண்டே இருந்தன. அதேபோல் யுவன்ஷங்கர் ராஜாவின் `ஒரு நாளைக்குள் எத்தனை கனவோ' பாடலும்.
இதில் தனுஷும் நயன்தாராவும். இந்தப் பாடலும் பெரிய ஹிட்'' என்று உற்சாகமாய் சொல்லும் ரீட்டா, விஜய்யின் இவ்வருட பொங்கல் ரிலீஸ் படமான `வில்லு'விலும் பாடியிருக்கிறார். `வாடா மாப்பிள்ளை' என்ற சூப்பர் குத்துப்பாட்டை பாடியிருப்பது இவர்தான்.

``இது தேவி ஸ்ரீபிரசாத் மியூசிக்கில் பாடியது. இந்த வருஷம் இது பெரிய ஹிட்டாகப் போகுது'' என்று சொல்லும்போது அவர் முகத்தில் மகிழ்ச்சி.

ரீட்டா மறக்கமுடியாத அனுபவ மாய் நினைப்பது, இளையராஜா இசையில் பாடியதைத்தான். ``யுவன் ஷங்கர் ராஜாதான் என்னை ராஜா சார்கிட்ட அறிமுகப்படுத்தி வச்சார். ரொம்ப பயபக்தியுடன் பாடப் போனேன். அத்தனை பெரிய ஜீனியஸ், ரொம்ப எளிமையா பழகுகிறார். அவரோட இசைல தனம், உளியின் ஓசை, அஜந்தா, மயில், ஜகன்மோகினின்னு நிறைய படத்துல பாடியிருக்கிறேன்.'' ரீட்டாவின் தந்தை எஸ்.தியாகராஜன் விளையாட்டு விமர்சகர். பிரபல ஆங்கில நாளிதழில் துணை ஆசிரியராக இருக்கிறார்.

``பெரிய கிராஃபிக் டிசைனரா வரணும்னுதான் நினைச்சேன். நான் பாடகியாக மாறுவேன்னு நினைக்கலை. ஆனால் கடவுள் வேறு மாதிரி நினைச்சிருக்கிறார். நான் பாடகியாகிவிட்டேன்'' என்கிறார் ரீட்டா.

கடவுள் அருளால் தமிழுக்கு ஒரு தமிழ்ப் பாடகி கிடைத்துவிட்டார்.

http://www.kumudam.com/magazine/Kumu...-01-21/pg7.php
 
 
 
 
 
Link to comment
Share on other sites

பாடகி சிறிவர்த்தினியின் கன்னிப்பாடல் "சத்தம் போடும் எனும் பாடல் கார்மேகம் படத்தில் இடம்பெற்றது.
 
Link to comment
Share on other sites

மின்மினி 

Link to comment
Share on other sites

இரண்டு தலைமுறைகளாக கொடி கட்டிப்பறக்கும் பாடகி எல்.ஆர்.ஈஸ்வரியின் கன்னிப்பாடல் பாசமலர் படத்தில் மெல்லிசை மன்னர் அவர்களின் இசையில் உருவான "வாராயென் தோழி வாராயோ" என்ற பாடலாகும்.
 
Link to comment
Share on other sites

  • 2 months later...
படம் : கும்கி
இசை : D இமான்
பாடியவர் : அல்போன்ஸ் ஜோசப்பின் கன்னி பாடல்
வரிகள் : யுகபாரதி
 
 
நீ எப்போ புள்ள சொல்ல போற
தப்பென்ன செஞ்சேன் தள்ளி போற
நீ எப்போ புள்ள சொல்ல போற
தப்பென்ன செஞ்சேன் தள்ளி போற
 
நீ வெறும் வாய மெல்லாம ஒரு வார்த்தை சொல்லு
சொல்ல பதிலேதும் இல்லேன்னா அடியோடு கொல்லு
நீ எப்போ நீ எப்போ
நீ எப்போ புள்ள சொல்ல போற
 
பக்குவமா சோறாக்கி பட்டினிய நீ போக்கி
பெத்தவள கண் முன்னெ கொண்டு வந்த நேத்து
என்னாச்சு அந்த பாசம் எதிலேயும் இல்ல வேஷம்
என் மேலே என்ன பூவே ரோஷம்
முள்ளாச்சே முல்லை வாசம் வச்சேனே அள்ளி நேசம்
வேறென்ன செஞ்சேன் மோசம் மோசம்
 
நீ எப்போ நீ எப்போ
நீ எப்போ புள்ள சொல்ல போற
 
வெள்ளி நிலா வானோட வெத்தலையும் வாயோட
 
என் உலகம் உன்னோட என்று இருந்தேனே
யம்மாடி என்ன சொல்ல அன்பாலே வந்த தொல்ல
உன் மேலே தப்பே இல்ல இல்ல
என்னொட கண்ணுகுள்ள கண்ணீரும் சிந்த இல்ல
செத்தேனே இப்ப மெல்ல மெல்ல
நீ எப்போ நீ எப்போ
நீ எப்போ புள்ள சொல்ல போற
வெறும் வாய மெல்லாம ஒரு வார்த்தை சொல்லு
சொல்ல பதிலேதும் இல்லேன்னா அடியோடு கொல்லு
 
நீ எப்போ நீ எப்போ
நீ எப்போ புள்ள சொல்ல போற
Link to comment
Share on other sites

  • 1 month later...
பாடகி சக்திசிறி கோபாலனின் கன்னிப்பாடல் சொர்க்கம் மதுவிலே. 
படம்: TN-07 AL-4777
 
Shakthisree+Gopalan+Desktop+1.jpg

 

 
Link to comment
Share on other sites

  • 1 year later...

பாடகி பத்மலதாவின் கன்னிப்பாடல் அழகேசன் படத்தில் இடம்பெற்றது. பாடலுக்கான இசை தேவா அவர்கள்.

 

 

http://mp3.royaltamilan.mobi/songs/load/A%20to%20Z%20Movie%20Wise/A/Azhalagesan/01%20Azhagesan.mp3

Link to comment
Share on other sites

பாடகி மின்மினியின் முதல் பாடல் றோஜா படத்தில் இருந்து சின்ன சின்ன ஆசை.

minmini.jpg

http://www.youtube.com/watch?v=swGm0BRLOUk&feature=related

 

http://youtu.be/RWFcY7Zqfmk

Link to comment
Share on other sites

  • 1 month later...
பாடகி பிரகதியின் கன்னிப்பாடல் பனித்துளி படத்தில் இருந்து "கலக்கு ஓ கலக்கு" எனும் பாடல். சிங்கப்பூரில் பிறந்த 16 வயதுப்பாடகி.தற்போது விறிமொன்ற், கலிவோர்னியாவில் வசிக்கிறார்.பாலாவின்  தாரை தம்பட்டை படத்தில் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடதக்கது.
 
Link to comment
Share on other sites

பாடகி சுவர்ணலதாவின் முதற்பாடல்

swarnalatha.jpg

மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும், உச்சரிப்பில் எந்தக் குறையும் சொல்ல முடியாது இவரிடம். கருத்தம்மா படத்தின் போறாளே பொன்னுத்தாயி பாடலுக்கு சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதைப் பெற்றுத் தந்த 'எல்லாப் புகழும் ரஹ்மானுக்கே'!

பாடல்:போவோமா ஊர்கோலம்

படம்: சின்னதம்பி

http://www.youtube.com/watch?v=MgHwpzD146M

போறாளே பொன்னுத்தாயி

http://www.youtube.com/watch?v=P7Ldrtz38Os

Link to comment
Share on other sites

பாடகி சுவர்ணலதாவின் கன்னிப்பாடல் (தமிழ்) "சின்னஞ்சிறு கிளியே.. கண்ணம்மா.." என்கிற பாடல் என நினைக்கிறேன். இது நீதிக்குத் தண்டனை என்கிற படத்தில் எம்.எஸ்.வி. அவர்களின் இசையில் வெளிவந்தது.

Link to comment
Share on other sites

பாடகி சுவர்ணலதாவின் முதற்பாடல்

swarnalatha.jpg

மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும், உச்சரிப்பில் எந்தக் குறையும் சொல்ல முடியாது இவரிடம். கருத்தம்மா படத்தின் போறாளே பொன்னுத்தாயி பாடலுக்கு சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதைப் பெற்றுத் தந்த 'எல்லாப் புகழும் ரஹ்மானுக்கே'!

பாடல்:போவோமா ஊர்கோலம்

படம்: சின்னதம்பி

http://www.youtube.com/watch?v=MgHwpzD146M

போறாளே பொன்னுத்தாயி

http://www.youtube.com/watch?v=P7Ldrtz38Os

 

ஸ்வர்ணலதா தமிழுக்காக பாடிய முதல் பாடல், மெல்லிசை மன்னரின் இசையில், நீதிக்கு தண்டனை" படத்திற்காக, ஜேசுதாசுடன் இனநிது பாடிய, "சின்னம்சிறு கிளியே கண்ணம்மா" என்ற பாடல்தான்...

Link to comment
Share on other sites

பாடகி சின்னப்பொண்ணுவின் கன்னிப்பாடல்  சந்திரமுகியில் இருந்து வாழ்த்துகிறேன் வாழ்த்துகிறேன்
 
http://media02.tamildada.com/Songs/Folk/Marikollunthu_Chinna_Ponnu/Track_02-[TamilMovieSongs.Net].mp3
 
கன்னிப்பாடல் பாட அடித்தளமிட்ட பாடல் இதோ
 
 
அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதம்
அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதம்
ஏதோ நானும் இருக்கிறேன்  உருப்படியா படிக்கிறேன்
யாருமில்ல நமக்கு நீ எப்படி இருப்பன்னு நினைக்கிறேன்
அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதம்!
 
பள்ளிக்கூடம் சேர்க்கனுன்னு பாத்திரத்த வித்தீங்களே!
எந்த பானையில் சமைக்கிறேன்னு எழுதுங்க!
அம்மா எந்த பானையில் சமைக்கிறேன்னு எழுதுங்க!
புஸ்தகநோட்டு வாங்க பணம் அனுப்புறேன்னு சொன்னீங்களே!
பாத்திரம் தேய்ச்ச வீட்டுல இன்னும் பணம் குடுக்கலையா....
அம்மா பாத்திரம் தேய்ச்ச வீட்டுல இன்னும் பணம் குடுக்கலையா...

புஸ்தகநோட்டு வாங்கலைன்னு வாத்தியார் தினமும் அடிக்கிறார்!
வாங்கிக் கொடுத்த பேனாவும் உடைஞ்சு இரவல் வாங்கி எழுதுறேன்
அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதம்.......
கிழிஞ்ச சட்டைக்காரியின்னு கிண்டலாத்தான் பேசுறாங்க
ஏம்மனசு தாங்காம நான் அழுகிறேன்
அம்மா ஏம்மனசு தாங்காம நான் அழுகிறேன்

தோட்டக்காரய்யா வீட்டுல பழைய சட்டை தருவதா சொன்னீங்களே!
வரும்போது மறக்காம வாங்கி வாங்கம்மா!
நீங்க வரும்போது மறக்காம வாங்கி வாங்கம்மா!
விடுதி சோறு புழுவுன்னு வீதியில கொட்டுறாங்க
நான் மட்டும் தம்பிக்கு ஊட்டுற நெனைப்பில் அழுதுகிட்டே தின்னுக்கிறேன்
அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதம்.......

கீழாண்ட செவத்தோரம் மறந்தும் போகாதம்மா
கருநாகம் வெடுப்புலதான் இருக்குது
அம்மா கருநாகம் வெடுப்புலதான் இருக்குது
மேலாண்ட கூரைமேல சாக்கு கிழிச்சுப் போடுங்கம்மா
மேற்கத்தி மழை அடிச்சுதுன்னா இருக்கும் இடம் நனைஞ்சுடும்

பாத்திரம் தேய்ச்ச கையெல்லாம் காயமுன்னு சொன்னாங்க!
நெஞ்சு வேதனை எனக்கு நீ மஞ்சப் பத்தும் போட்டுக்கம்மா!
நெஞ்சு வேதனை எனக்கு நீ மஞ்சப் பத்தும் போட்டுக்கம்மா!
நெஞ்சு வேதனை எனக்கு நீ மஞ்சப் பத்துவும் போட்டுக்கம்மா!


 

 

Link to comment
Share on other sites

  • 1 year later...

பாடகர் திவ்யகுமாரின் முதல் தமிழ் பாடல் ஜிப்ரானின் இசையில் 

 

 

Link to comment
Share on other sites

  • 4 months later...

 

 

பாடல்:லுசிம்பாரா
படம்:பந்தயம்
இசை: விஜய் அன்ரனி
பாடகி: ரம்யா NSK  ramya.jpg

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • எங்கை பள்ளிக்கூடம் போனால்த் தானே? 😎 சொல் புத்தியுமில்லை....கேள் புத்தியுமில்லை... 🤣 சும்மா வாள்...வாள் தான் 😂 இப்ப நீங்கள் சொல்லீட்டள் எல்லே..... 
    • ஏதோ தேர்தல் ஆணையம் நடுநிலையாகச் செயற்படுவது மாதிரி இருக்கிறது உங்கள் கருத்து. 1 வீதம் கூட இல்லாத வாசனுக்கு சைக்கிள் சின்னம் அதேபோல் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில் இருப்பதால் இந்தச் சலுகை. வைகோவுக்கு 1 தொகுதியில்  நிற்பதால் பம்பரச் சின்னம் ஒதுக்க மறுத்த தேர்தல் ஆணையம் கூறிய காரணம் குறைந்தது 2 தொகுதியில் நிற்க வேணும் என்று. அதே நேரம் 2 தொகுதியில் நின்ற விடுதலைச்சிறுத்தைகளுக்கு பானைச்சின்னததை ஒதுக்க மறுத்து பல கெடுபிடிகளின் பின்னரே அவர்களுக்கு அந்தச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. சாதாரண பொதுமக்களை மறித்துச் சோதனையிடும் தேர்தல் பறக்கும்படை  பெரிய கட்சிகள் காசு கொடுக்கும் போது கண்டும் காணாமல் விடுவதுதான் தேர்தல் ஆணையத்தின் யோக்கியதை.
    • குமாரசாமி  அண்ணை…  தமிழ் நாட்டில், ஒரு வாக்கின் விலை தெரியுமா? 25,000 ரூபாய்க்கு மேலும் கொடுக்க சில அரசியல் கட்சிகள் தயாராக உள்ளது. பாராளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல், உள்ளூராட்சி தேர்தல், இடைத் தேர்தல் என்று மாறி மாறி வரும் போது…. அந்த ஓட்டு எவ்வளவு சம்பாதிக்கும் என்று கணக்குப் பார்த்தால் லட்சாதிபதி ஆகலாம். 😂
    • டொனால்ட் ரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில்  மிக  கவனமாக இருக்கின்றார்கள். அதற்கு எந்த விலையும் கொடுக்க தயாராக  எதிர் தரப்பினர் இருக்கின்றார்கள்.
    • இந்த‌ முறை மைக் சின்ன‌த்துக்கு அதிக‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள்  வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் ஓட்டு போட்டு இருக்கின‌ம்  அதிலும் இளைஞ‌ர்க‌ளின் ஓட்டு அதிக‌ம்........................... யூன்4ம் திக‌திக்கு பிற‌க்கு ஊட‌க‌த்தின் பெய‌ரை வ‌த‌ந்தி😡 என்று மாற்றி வைக்க‌லாம்  அண்ண‌ன் சீமான் த‌ந்தி ஊட‌க‌த்துக்கு எதிரா வ‌ழ‌க்கு தொடுக்க‌ போகிறேன் என்று சொல்லி இருக்கிறார்..........................36ஆராயிர‌ம் ம‌க்க‌ளிட‌த்தில் க‌ருத்துக் கேட்டு வெளியிடுவ‌து க‌ருத்துக் க‌ணிப்பா அல்ல‌து க‌ருத்து திணிப்பா.....................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.