Jump to content

கனடா


Recommended Posts

கனடா உலகின் இரண்டாவது பெரிய நாடு.

வடஅமெரிக்கா கண்டத்தின் ஜந்தில் இரண்டு பங்கினை இந்த நாடு கொண்டுள்ளது. கனடாவின் கிழக்கெல்லையான அத்லாந்திக் கடற் கரைக்கும் மேற்கெல்லையான பசுபிக் கடற்கரைக்கும் இடையில் உள்ள நேர வித்தியாசம் 5 மணித்தியாலங்கள் என்பதில் இருந்து கனடா எவ்வளவு பெரிய நாடு என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். கனடா கிழக்கில் இருந்து மேற்கே சுமார் 5,380 கிலோ மீட்டர் வரை நீண்டும் வடக்கில் இருந்து தெற்கே சுமார் 4600 கிலோ மீட்டர் அகன்றும் இருக்கிறது.

கனடாவின் விஸ்தீரணம் 9,970,610 சதுர கிலோ மீட்டர்கள் வடக்கே துருவ மாகடல், தெற்கே ஜக்கிய அமெரிக்கா, கிழக்கே அத்லாந்திக் மாகடல், மேற்கே பசுபிக் மாகடலும் ஜக்கிய அமெரிக்க மாநிலமான அலாஸ்காவும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. 2001ம் ஆண்டு ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பின்படி கனடாவின் சனத்தொகை 31 மில்லியனாக இருந்தது. இந்தத் சனத்தொகையில் 3 சதவீதத்தினர் பூர்வீக குடிகளாவர். இரண்டாவது உலகப் போர் ஆரம்பமாவதற்கு முன் கனடா வந்த குடிவரவாளர்களில் பெரும்பாலனவர்கள் பிரித்தானியா அல்லது கிழக்கு ஜரோப்பாவில் இருந்தே வந்தார்கள். 1945ம் ஆண்டின் பின் தெற்கு ஜரோப்பா, ஆசியா, தென் அமெரிக்கா, கரிபியன் தீவுகளில் இருந்து அதிக எண்ணிக்கையில் குடிவரவாளர்கள் கனடா வர ஆரம்பித்தார்கள்.

பெயர் வந்த விதம்?

கனடா ஒரு இளைய நாடுதான். ஆனால் அது பழமையில் வேர் ஊன்றியுள்ளது. கனடா என்ற பெயர் இந்த நாட்டில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வரும் பூர்விக குடிகளில் இருந்து பெறப்பட்டதாக ஆராய்ச்சியாளர்களில் பலர் கருதுகின்றார்கள். 1535 - 36 காலப் பகுதியில் பிரெஞ்சுக்காரரான ஐக்குயிஸ் கார்டியர் என்பவர் சென்ட் லாறன்ஸ் நதிக்கு வடக்கே இருந்த பிரதேசத்திற்குச் சூட்டிய பெயரே கனடா. அந்தப் பகுதியில் வாழ்ந்த பூர்வ குடிகள் சிலரிடம் அவர்களின் இருப்பிடத்தைக் காட்டும்படி காட்டியர் கேட்டுள்ளார். அவர்களுடைய மொழியில் கிராமம் என்பதை "kanata" என்று அழைப்பது வழக்கம். தொலைவில் இருந்த தங்கள் கிராமத்தை அவர்கள் சுட்டிக்காட்டி அதுதான் தங்கள் கனடா என்று கூறியதை தவறாகப் புரிந்து கொண்ட கார்டியர் அந்தப் பிரதேசம் முழுவதற்கும் கனடா என்று பெயரிட்டுவிட்டார். ஜரோப்பிய தேச பட வரைஞர்கள் "kanata" என்று அழைக்கப்பட்டு வந்த நாட்டை "Canada" என குறிப்பிட ஆரம்பித்தார்கள்.

எனினும் கனடா என்ற பெயர் எப்படி வந்தது என்பது இன்னும் கூட சர்ச்சைக்கு உரிய ஒன்றாகவே இருந்து வருகின்றது. ஆய்வாளர்கள் சிலர் பொருள் தேடும் சாக்கில் புதிய இடங்களைத் தேடித்திருந்த ஜரோப்பியர் இந்த நாட்டிற்கு வைத்த பெயரே கனடா என்கிறார்கள். கனடாவில் பொன்னும் மணியும் குவிந்து கிடக்கின்றன என்ற நம்பிக்கையில் வந்த ஸ்பானியர் அல்லது போர்த்துக்கேயர் அவர்கள் எதிர்பார்த்து வந்த எதுவும் இங்கு கிடைக்காததால் நாட்டை அகா கனடா (aca Canata) அல்லது க"னடா (Ca"nada) என்று திட்டித் தீர்த்தார்கள். அகா கனடா அல்லது க"னடா என்பதற்கு இங்கு ஒரு மண்ணும் கிடையாது என்று ஸ்பானிய அல்லது போர்த்துக்கேய மொழியில் அர்த்தப்படுவதாக இந்த ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். இன்னும் சில ஆய்வாளர்கள் கனடா என்ற பெயர் சமஷ்கிருதம் அல்லது இத்தாலிய மொழியில் இருந்து வந்தது என்கிறார்கள். ஆக கனடா என்று ஏன் இந்த நாடு அழைக்கப்படுகின்றது என்பதற்கு சரியான விடை இன்னும் கண்டறியப்படவில்லை.

இரண்டு மில்லியன் நன்னீர் ஏரிகள்

கனடாவின் நிலவமைப்பை பல பகுதிகளாகப் பிரிக்கலாம். ஹட்சன் குடாவை மையமாகக் கொண்ட வடிகால் பகுதி, கனடியன் ஷீல்ட் என்று அழைக்கப்படும் பகுதி, உள்நாட்டு சமவெளி, பெரிய ஏரிகள், சென்ட் லாறன்ஸ் தாழ்நிலங்கள், மலைத் தொடர்கள் என்று கனடாவின் இயற்கை அமைப்பு பிரிக்கப்படுகின்றது. ஹட்சன் விரிகுடாவைச் சுற்றியிருக்கும் மிகப் பெரிய பாறை அமைப்பு மார்புக் கவசம் போன்று இருப்பதாலேயே அது கனடியன் ஷீல்ட் என்று அழைக்கப்படுகின்றது. கனடாவின் சுமார் 8 சத வீதமான நிலமே விவசாயம் செய்வதற்கும் மேய்ச்சல் நிலமாகவும் பயன்படுகின்றது. இருந்த போதிலும் விவசாயம் செய்வதற்கு ஏற்ற நிலத்தின் விஸ்தீரணம் 738,000 சதுர கிலோ மீட்டர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. சென்ட் லாறன்ஸ் நதிக்கும் பெரிய ஏரிகளுக்கும் இடையில் சிறந்த விவசாய பூமி அமைந்துள்ளது. கனடியன் ஷீல்டுக்கும் ரோக்கி மலைகளுக்கும் இடையில் தட்டையான பரந்த வெளி உண்டு. இது பிரேயரீஸ் என்று அழைக்கப்படுகின்றது. இந்தப் பகுதியில் முதல்தரமான கோதுமை விளைகின்றது. கோதுமை இங்கு பெருமளவில் உற்பத்தியாவதால் கனடா கோதுமை உற்பத்தியில் உலக நாடுகளிடையே முன்னணியில் நிற்கின்றது.

மரங்கள் குறைவான பரந்த புல்வெளிக்கும் பசுபிக் சமுத்திரத்திற்கும் இடையில் பிரசித்தி பெற்ற மலைகள் இருக்கின்றன. இவையே ரோக்கி (rocky) மலைகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த மலைகளே கனடாவின் அதி உயர்ந்த மலைகளாகும். அவற்றுள் மிகவும் உயரமான மலைச்சிகரம் லோகன். இதன் உயரம் 5,951 மீட்டர்கள். கனடாவின் வடபகுதிக்குச் செல்லச் செல்ல மரங்கள் குட்டையாகவும் குறைவாகவும் இருப்பதைக் காணலாம். மரங்கள் தென்படும் பகுதிக்கு அப்பால் உள்ள வடபுலத்தில் மிகவும் குளிர் என்பதால் அங்கு மரங்கள் வளர்வதில்லை. வடதுருவ சமுத்திரம் வரை மரங்களற்ற மிகவும் குளிரான பிரதேசமாகும்.

மக்கென்ஸி கனடாவின் மிகப் பெரிய நதி. அதன் நீளம் 4241 கிலோ மீட்டர். உலகில் உள்ள நன்னீரில் சுமார் பத்தில் ஒரு பங்கு கனடாவில் இருக்கின்றது.

கனடாவில் ஏறக்குறைய 2 மில்லியன் வாவிகள் இருக்கின்றன. நாட்டின் 7.6 சதவீத நிலப் பகுதியில் அவை அமைந்துள்ளன. ஜந்தில் இரண்டு பகுதி காடாகும்.

கனடா மக்களில் பெரும்பான்மையானவர்கள் நாட்டின் தென்பகுதியில் வசிக்கிறார்கள். தென்கனடாவின் தட்பவெப்ப நிலை அதிக குளிரானதும் அல்ல, அதிக வெப்பமானதும் அல்ல. மிதமான ஒன்று. இதுவே கனடியர்களில் அதிகமானவர்கள் தென் பகுதியில் வசிப்பதற்கான முக்கிய காரணம். கனடாவில் வசந்தம், கோடை, இலை உதிர்காலம், குளிர்காலம் என நான்கு பருவ காலங்கள் உண்டு. இந்த பருவகாலங்கள் ஏறக்குறைய ஒரே அளவான கால அளவினைக் கொண்டவையாகும். இது நாட்டின் தென் பகுதியில்தான். வடபுலத்தில் அல்ல. அங்கு குளிர் காலம் நீண்டதாகவும் மிகவும் குளிரானதாகவும் இருக்கும். ஏனைய மூன்று பருவகாலங்களும் குறைந்த கால அளவினைக் கொண்டதாகவிருக்கும். ஹட்சன் விரிகுடா, சென்ட் லோறன்ஸ் நதி ஆகிய இரண்டு பிரதான நீர்வழிகள் இருக்கின்றன. இவற்றின் ஊடாக உலகத்தில் எந்தப்பகுதியிலிருந்தும் கப்பல்கள் நாட்டின் நடுப்பகுதி வரை வரமுடியும். கனடாவின் சரித்திரத்தில் நீர்வழிகள் முக்கியமான இடத்தை வகித்துள்ளன. வீதிகள், புகையிரத பாதைகள், விமானங்கள் உதயமாவதற்கு முன் மக்கள் பிரயாணம் செய்யவும் பொருட்களைக் கொண்டு செல்லவும் நீர்வழிகள் தான் உதவின. சமுத்திரத்தினூடகப் பிரயாணம் செய்யும் கப்பல்கள் இந்த நீர்வழிகள் மூலம் வந்து சென்றன. சென்ட் லோறன்ஸ், மக்கென்ஸி, பிராஸர், சஸ்காட்சேவன், ஒட்டாவா, சென்ட் ஜோன் ஆகிய நதிகள் முக்கிய நீர்வழிகளாகச் செயல்பட்டன. பிரயாணம் செய்யவும் பொருட்களைக் கொண்டு செல்லவும் ஆறுகள் உதவியதால் கனடியர்கள் அவற்றின் கரைகளை அண்டியே வாழத்தொடங்கினார்கள். 75 சதவீத கனடியர்கள் நகரப் புறங்களில் வசிக்கிறார்கள். சுமார் 30 சதவீதமானவர்கள் டொரோண்டோ , மொன்றியல், வன்கூவர் ஆகிய மூன்று நகரங்களிலும் அவற்றைச் சுற்றியும் வசிக்கிறார்கள்.

ஒட்டாவா-பல்கலாசாரத் தலைநகர்

கனடாவின் தலைநகரான ஒட்டாவா (Ottawa) ஒண்டாரியோ மாகாணத்தின் தென்கிழக்கெல்லையில் அமைந்துள்ளது. ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகள் அதிக அளவில் பேசப்பட்ட போதிலும் முழுக் கனடாவையும் பிரதிபலிக்கும் வகையில் பல்கலாசார மையமாக அது திகழ்கின்றது. ஒட்டாவா, காட்டினேயூ, ரிடியூ என்ற மூன்று ஆறுகள் கூடும் இடத்தில் அமைந்துள்ள ஒட்டாவாவின் நகரப் பகுதி ஒண்டாரியோ - கியூபெக் மாகாண எல்லையையும் கடந்து செல்கின்றது. நகரின் விஸ்தீரணம் 4660 சதுர கிலோ மீட்டர்கள். ஒண்டாரியோவில் இருக்கும் பகுதியின் விஸ்தீரணம் 2720 சதுர கிலோ மீட்டர்கள். கியூபெக்கில் இருப்பது 1940 சதுர கிலோ மீட்டர்கள்.

15ம் 16ம் நூற்றாண்டு காலப் பகுதியில் ஆறுகள் மூலமாகவே போக்குவரத்து பிரதானமாக இடம் பெற்று வந்தது. புதிய இடங்களைக் கண்டு பிடிக்கும் ஆர்வலர்கள் மற்றும் விலங்கின் மென்மயிர் தோல் வர்த்தகர்கள் ஆறுகள் மூலமாகவே பிரயாணம் செய்தார்கள். பிரிட்டனுக்கும் பிரான்சுக்கும் இடையில் இடம் பெற்ற நெப்போலிய யுத்தத்தின் போது கப்பல் கட்டும் மரங்கள் இங்கிலாந்திற்கு அதிக அளவில் தேவைப்பட்டது. அப்பொழுது ஒட்டாவா பள்ளத்தாக்கில் இருந்து தேவையான மரங்கள் ஒட்டாவா நதி மூலமாகவே அனுப்பப்பட்டன. 1812ம் ஆண்டு பிரிட்டனுக்கும் ஜக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் இடம் பெற்ற யுத்தத்தின் போது ரிடியூ நதி மூலம் போக்குவரத்து செய்வதே மிகவும் பாதுகாப்பானதாகக் கருதப்பட்டது.

நதிகள் மூலமான போக்குவரத்து அதிகரிப்பின் காரணமாக ஒட்டாவா துரித கதியில் வளர்ச்சி அடைந்தது. 1848ம் ஆண்டு ஒண்டாரியோவும் கியூபெக்கும் ஒன்றாக இணைக்கப்பட்டன. அந்தச் சமயம் இணைக்கப்பட்ட கனடாவின் தலைநகராக எது இருக்க வேண்டும் என்ற சிக்கல் ஏற்பட்டது. பிரேஞ்சுக்காரர் பெரும்பான்மையாக வசித்த கியூபெக் மாகாணத் தலைவர்கள் தமது மாகாணத் தலைநகரான கியூபெக் சிட்டியே கனடாவின் தலைநகராக வரவேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஆங்கிலேயரைப் பெரும்பான்மையினராகக் கொண்ட ஒண்டாரியோ மாகாணத் தலைவர்களோ தங்கள் மாகாணத் தலைநகரான டொரோண்டோவே கனடாவின் தலைநகராக வரவேண்டும் என்றார்கள். இரு பகுதியினரும் விட்டுக் கொடுக்காத நிலையில் கியூபெக் மாகாணத்தில் உள்ள மொன்றியல் அல்லது ஒண்டாரியோவில் உள்ள கிங்ஸ்டன் கனடாவின் தலைநகராக வரவேண்டும் என்ற ஆலோசனையும் முன்வைக்கப்பட்டது. இறுதியில் இரு பகுதியினரும் இங்கிலாந்தின் அரசியான விக்டோ ரியாவிடம் விண்ணப்பித்தார்கள். அவர் பிறப்பித்த பிரகடணத்தின் மூலம் 1857ம் ஆண்டு ஒட்டாவா கனடாவின் தலைநகராக வந்தது. கனடா கூட்டரசாக 1867ம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்ட போதும் ஒட்டாவாவே தலைநகராக இருத்தல் வேண்டும் என்பது உறுதி செய்யப்பட்டது. உலகில் உள்ள நகரங்களில் மிகவும் அழகானது ஒட்டாவா. மிகவும் சுத்தமானதும் கூட. பழமையும் புதுமையும் ஒன்றுடன் ஒன்று போட்டியிடுவதை ஒட்டாவாவின் எந்தப் பகுதியிலும் காணலாம்.

மாகாணங்களும் பிரதேசங்களும்

கனடாவில் 10 மாகாணங்களும் 3 பிரதேசங்களும் அமைந்துள்ளன. அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான தலைநகருண்டு.

மாகாணம்: அல்பேர்டா (Alberta)

தலைநகர்: எட்மன்டன் (Edmonton)

மாகாணம்: பிரிட்டிஷ் கொலம்பியா (British Columbia)

தலைநகர்: விக்டோ ரியா (Victoria)

மாகாணம்: பிரின்ஸ் எட்வேர்ட் ஜலண்ட் (Prince Edward Island)

தலைநகர்: சார்லட்டவுன் (Charlottetown)

மாகாணம்: மணிடோபா (Manitoba)

தலைநகர்: வினிப்பெக் (Winnipeg)

மாகாணம்: நியூ பிரன்ஸ்விக் (New Brunswick)

தலைநகர்: பிரடெரிக்டன் (Fredericton)

மாகாணம்:நோவோ ஸ்கோஷியா (Nova Scotia)

தலைநகர்: ஹாலிபாக்ஸ் (Halifax)

மாகாணம்: ஒண்டாரியோ (Ontario)

தலைநகர்: டொரோண்டோ (Toronto)

மாகாணம்: கியூபேக் (Quebec)

தலைநகர்:கியூபேக் சிட்டி (Quebec City)

மாகாணம்: ஸாஸ்காட்சேவன் (Saskatchewan)

தலைநகர்: ரெஜைனா (Regina)

மாகாணம்: நியூபெளவுன்லாந்து (Newfoundland)

தலைநகர்: சென்ட் ஜோன்ஸ் (St.Johns)

பிரதேசம்: நோர்வெஸ்ட் டெரிட்டரீஸ் (Northwest Territories)

தலைநகர்: ஐலோநைவ் (Yellow Knife)

பிரதேசம்: யூகோன் டெரிட்டரீஸ் (Yukon)

தலைநகர்: வைட்ஹோர்ஸ் (White Horse)

பிரதேசம்: நுனாவுட் (Nunavut)

தலைநகர்: இக்வாலுயிட் (Igaluit)

கனடாவுக்கே உரித்தான மூஸ் (Moose)

பலதரப்பட்ட வன விலங்குகள் கனடாவில் காணப்படுகின்றன. கனடாவிற்கே உரித்தான மூஸ் என்று அழைக்கப்படும் மான்வகை விலங்கு, பீவர் (Beaver) என்று அழைக்கப்படும் நில நீர்வாழ் எலி உருவ விலங்கு, கனடா லிங்ஸ் (Canadian lynx) என்று அழைக்கப்படும் பூனை போன்ற மிருகம் ஆகியன அவற்றுள் சிலவாகும்.

மூலவளம் நிறைநாடு

செம்பு, நிக்கல், துத்தநாகம், காட்மியம், நிலக்கரி, பேற்றோலியம், இயற்கை வாயு, யூரேனியம், தங்கம். இரும்பு, ஈயம், மரம், நீர் ஆகியன பிரதான மூலப் பொருட்களாகும். மோட்டார் வாகனங்கள், அவற்றின் உதிரிப் பாகங்கள், இயந்திரவகைகள், உயர் தொழில் நுட்பத்துறைப் பொருட்கள், எண்ணெய், இயற்கை வாயு, வனம் மற்றும் விவசாய உற்பத்திப் பொருட்கள் ஆகியன கனடாவின் முக்கிய ஏற்றுமதிப் பொருட்களாகும்.

தித்திப்பான பாணி தரும் மேப்பில் மரத்தின் இலை தேசிய இலட்சனை

நீண்டகாலமாக மேப்பில் இலை (Maple) கனடாவுடன் தொடர்பு கொண்டுள்ளது. 1868ம் ஆண்டு ஒண்டாரியோ மற்றும் கியூபேக் மாகாணங்களின் மரபுரிமைச் சின்னமாக மேப்பில் இலை வந்தது. இரண்டாம் உலக மகா யுத்தங்களின் போது மேப்பில் இலை கனடிய படைகளின் சிறப்புக்குறீயிடுகளில் இடம் பெற்றது. 1965ம் ஆண்டு கொடியில் இடம் பெற்றதை அடுத்து மேப்பில் இலை கனடாவின் மிக்கிய சின்னமாக வந்துள்ளது.

நன்றி கனடாமுரசு

Link to comment
Share on other sites

நம்பிக்கை ஊட்டும் கொடி

தற்போதைய தேசியக் கொடி 1965ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15ம் திகதி முதல் உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டதாகும். கொடியில் மேப்பில் இலை சிவப்பு நிறத்தில் அமைந்துள்ளது. கனடா பல நாடுகளிலும் அபிவிருத்தி பணியில் ஈடுபட்டுள்ளது. சர்வதேச அமைதிப் பணியில் அதன் படையினர் ஈடுபட்டுள்ளார்கள். அங்கெல்லாம் நன்கு அறியப்பட்ட ஒன்றாக சிவப்பு மேப்பில் இலைக் கொடி அமைந்துள்ளது. அவலமுறுவோருக்கு நம்பிக்கை தருவதாகவும் அமைந்துள்ளது.

தேசிய கீதம்

O Canada!

Our home and native land!

True patriot love in all thy sons command.

With glowing hearts we see thee rise,

The True North strong and free!

From far and wide,

O Canada, we stand on guard for thee.

God keep our land glorious and free!

O Canada, we stand on guard for thee.

O Canada, we stand on guard for thee.

கனடியத் தேசிய கீதம் (தமிழில்)

ஓ கனடா! எங்கள் வீடும் நாடும் நீ !

உந்தன் மைந்தர்கள் உண்மைத் தேச பக்தர்கள் !

நேரிய வடக்காய், வலுவாய், இயல்பாய்

நீ எழல் கண்டுவப்போம் !

எங்கு உள்ள நாம் ஓ கனடா

நின்னைப் போற்றி அணிவகுத்தோம் !

எம்நிலப் புகழைச்சுதந்திரத்தை

என்றும் இறைவன் காத்திடுக !

ஓ கனடா, நாம் நின்னைப் போற்றி அணிவகுத்தோம் !

ஓ கனடா, நாம் நின்னைப் போற்றி அணிவகுத்தோம் !

1880ம் ஆண்டு பிரெஞ்சு மொழியில் கனடா தேசிய கீதம் இயற்றப்பட்டு அதற்கு மெட்டும் அமைக்கப்பட்ட போதிலும் நுறு ஆண்டுகளின் பின்னர் 1980ம் ஆண்டு ஜூலை மாதம் முதலாம் திகதியே ஓ கனடா தேசிய கீதமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. பிரெஞ்சு மொழியின் வாசகம் 1908ம் ஆண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. ஆங்கிலத்தில் உள்ள தற்போதைய தேசிய கீதம் அதனை அடிப்படையாகக் கொண்டதாகும். 1980ம் ஆண்டு ஐலை மாதம் முதலாம் திகதி முதல் ஆண்டு தோறும் ஜூலை முதலாம் திகதி கனடா தேசிய தினமாகக் கொண்டாடப்படுகின்றது.

சமய சார்பற்ற நாடு

1991ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட குடிமதிப்பு புள்ளிவிபரப்படி கனடாவின் மொத்தத் தொகையில் ஜந்தில் நான்கு பங்கினர் கிறிஸ்தவர்கள். மொத்த சனத் தொகையில் 47 சதவீதத்தினர் கத்தோலிக்க மதத்தவர்கள். யூத, இஸ்லாமிய, இந்து, சீக்கிய, புத்த மதங்களைச் சேர்ந்தவர்களும் கனடாவில் கணிசமான அளவு இருக்கின்றார்கள். 12.5 சதவீதத்தினர் எந்தச் மதத்தையும் சாராதவர்கள்.

தேசிய பறவை

கனடாவின் தேசிய பறவை ஒரின வாத்தாகும். கனடாவில் மட்டும் இந்த இனம் காணப்படுவதால் அதனை கனடா வாத்து- கனடா கூஸ் (Canada Goose) என்று அழைக்கிறார்கள். இந்தப் பறவையின் முதுகுப்புறமும் பின் பகுதியும் காவி நிறத்தில் இருக்கும். அதன் தலையும் கழுத்தும் கறுப்பு நிறம். தாடை வெள்ளை நிறம். கனடா கூஸ் பறக்க ஆரம்பிக்கும் போது தனது தலையை உலுப்பும். அப்பொழுது அதன் தாடை பளபளப்பது கவர்ச்சிகரமானதகா இருக்கும். வளர்ந்த ஆண் வாத்தின் எடை 8 கிலோ கிராம் வரை இருப்பதுண்டு. இனப் பெருக்கத்தின் போது கனடாவிலும் அலாஸ்காவிலும் காணப்படும் கனடா கூஸ் குளிர் காலத்தின் போது தென்புல ஜக்கிய அமெரிக்காவுக்கும் மெக்ஸிக்கோவுக்கும் இடம் பெயரும். இந்த இடப்பெயர்ச்சியின் போது அவை கூட்டம் கூட்டமாகப் பறந்து செல்கின்றன. அப்போது அவை ஏ அமைப்பில் பறந்து செல்வதும், ஓயாது சத்தம் எழுப்பியபடி செல்வதும் கண்டும் கேட்டும் ரசிக்கக் கூடியதாகும். இடப் பெயர்வின் போது இந்த பறவைகள் பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவு வரை பறந்து செல்கின்றன. தரை அமைப்பு அல்லது நட்சத்திரங்களின் உதவியுடன் பரம்பரை, பரம்பரையாக ஒரே மார்க்கத்தில் அவை இடம் பெயரும் தன்மை கொண்டவை.

நாணயம் (Currency)

கனடாவின் நாணயம் கனடா டாலர். ஒரு கனடா டாலர் 100 சென்ட்களாகப் (cents) பிரிக்கப்படுகின்றது. ஒரு டாலர் உலோக நாணயம் லூணி (loonie) என்றும் இரண்டு டாலர் உலோக நாணயம் ரூணி (Twonie) என்றும் அழைக்கப்படும் வழக்கம் பரவலாக இருக்கின்றது.

ஒரு கொடியின் கீழ்...

கனடா ஒரு சுதந்திரமான, சமஷ்டி அமைப்பு கொண்ட ஐனநாயக அரசாகும். இங்கிலாந்து மகாராணி இரண்டாவது எலிஸபெத் பெயரளவில் அதன் தலைவியாக இருக்கின்றார். 1867ம் ஆண்டுக்கு முன் கியூபெக்கும் ஒண்டாரியோவும் ஜக்கிய கனடா என்ற பெயரில் இணைந்திருந்தன. 1867ம் ஜூலை மாதம் முதலாம் திகதி ஜக்கிய கனடாவுடன் நோவா ஸ்கோஷியாவும் நியூ பிரன்ஸ்விக்கும் சேர்ந்து கனடிய நேசகூட்டமைப்பை (Confederation of Canada) உருவாக்கின. இந்த கூட்டமைப்பு டொமினியன் கனடா என்று அழைக்கப்பட்டது.

ஒண்டாரியோவும் கியூபேக்கும் கூட்டமைப்பு உருவான போது தற்போயை விஸ்தீரணத்தைக் கொண்டிருக்கவில்லை. அவற்றின் கணிசமான பகுதிகள் பின்னர் சேர்த்துக் கொள்ளப்பட்டவையாகும். 1867 ம் ஆண்டு ஜூலை மாதம் முதலாம் திகதி உதயமான கனடா கூட்டமைப்பில் இன்று தென் ஒண்டாரியோ, தென் கியூபேக் என்று அழைக்கப்படும் குடியேற்ற பகுதிகளும் நியூ பிரன்ஸ்விக், நோவா ஸ்கோஷியா ஆகிய குடியேற்ற மண்டலங்களும் அடங்கியிருந்தன. கனடா கூட்டமைப்பு பிரிட்டிஷ் அரசு மற்றும் மேலே கூறிய நான்கு வடஅமெரிக்க குடியேற்ற பிரதேசங்களின் இணக்கத்துடன் அமைக்கப்பட்ட ஒன்றாகும். எனினும் கனடிய கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டிய அவசியத்தை பிரிட்டிஷ் அரசும் வடஅமெரிக்க குடியேற்ற பிரதேசங்களும் வெவ்வேறு நோக்கில் பார்த்தன. வடஅமெரிக்க பிரிட்டிஷ் குடியேற்ற பிரதேசங்களை ஒன்றிணைத்து பலமான நாடொன்றை உருவாக்கினால் அது

(1) பொருளாதாரத்திலும் இராணுவ பலத்திலும் அதிவிரைவான வளர்ச்சியைக் கண்டுவரும் ஜக்கிய அமெரிக்காவினால் கபளிகரம் செய்யப்படுவதை தடுத்து நிறுத்தும்,

(2) ரயில் சேவை, கட்டுமானப் பணிகள் போன்ற துறைகளில் பிரிட்டிஷ்காரர்கள் முதலீடு செய்வதை ஊக்குவிக்கும்

(3) வடஅமெரிக்க பிரிட்டிஷ் குடியேற்ற பிரதேசங்களுக்கான பாதுகாப்பு செலவீனத்தைக் குறைக்கச் செய்யும் என்று பிரிட்டிஷ் அரசு எண்ணியது.

ஜக்கிய கனடாவின் தலைவராக இருந்த ஜோன் ஏ.மக்டோனால்ட் போன்றவர்கள் குடியேற்ற பிரதேசங்கள் ஒன்றிணைவதன் மூலம் துரித வளர்ச்சி கண்டு வரும் தொழிற்துறையினால் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு பாரிய உள்ளூர் சந்தை வாய்ப்பு ஏற்படும் என்றும் ஜக்கிய அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு ஏற்படும் பட்சத்தில் ஒரு குடையின் கீழ் நிற்கும் குடியேற்ற பிரதேசங்கள் வலுவான எதிர்ப்பினைக் காட்ட முடியும் என்றும் கருதினார்கள்.

அத்லாந்திக் மாகடல் சார்ந்த குடியேற்ற பிரதேசங்கள் கூட்டமைப்பை முதலில் விரும்பவில்லை. மீன் பிடித் தொழிலில் மட்டுமல்லாது பிரிட்டன் மற்றும் கரிபியன் தீவுகளுக்கிடையில் அத்லாந்திக் மாகடல் மார்க்கமாக நடை பெற்ற போக்கு வரத்து, வர்த்தகம் ஆகியவற்றின் மூலம் அவை நல்ல லாபத்தை ஈட்டிவந்தன. எல்லாவற்றிற்கும் மேலாக 1840கள் முதல் கப்பல் கட்டுமானத்துறையினால் அவற்றின் பொருளாதாரம் கணிசமாள அளவு வளர்ச்சியும் கண்டிருந்தது. அந்த காலப் பகுதியில் கப்பல்களைக் கட்டுவதில் அவற்றை விஞ்ச ஜரோப்பாவுக்கு மேற்கே எந்த ஒரு நாடும் இருக்கவில்லை என்றும் சொல்லலாம். அதனால் பிரிட்டிஷ் சாம்ராச்சியத்தில் தொடார்ந்து இருப்பதையே அத்லாந்திக் மாகடல் குடியேற்ற பிரதேசங்கள் விரும்பின. அவற்றின் பாதுகாப்புக்கு பிரிட்டிஷ் அரசே பொறுப்பாக இருந்தது. ஆண்டு தோறும் அதிகரித்துச் சென்ற பாதுகாப்பு செவீனம் பிரிட்டிஷ் அரசுக்கு பெரும் சுமையாக இருந்தது. அதனால் அத்லாந்திக் மாகடல் குடியேற்ற பிரதேசங்களை ஒன்றிணைக்க அது பாடுபட்டது. எவ்வளவுதான் அழுத்தம் கொடுத்த போதிலும் அவை அதற்கு மசியவில்லை. ஆனால் 1866ம் ஆண்டு பெனியன்கள் (Fenians) நியூ பிரன்ஸ்விக்கினுள் ஊடுருவியதும் (அயர்லாந்தின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட அமெரிக்க - ஜரிஸ்காரர்களைக் கொண்ட குழுவொன்றைச் சேர்ந்தவர்களே பெனியன்ஸ் என்று அழைக்கப்பட்டார்கள்.) வடஅமெரிக்காவில் உள்ள பிரிட்டிஷ் குடியேற்ற பிரதேசங்களின் மீது தாக்குதல்களை நடத்துவதன் மூலம் தங்கள் தாய் நாட்டின் சுதந்திரத்தை வென்று எடுக்கலாம் என்று அவர்கள் நம்பினார்கள். அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளில் ஒன்றுதான் 1866ம் ஆண்டின் நியூ பிரன்ஸ்விக் ஊடுருவல்.) அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் காலாவதியானதும் அத்லாந்திக் மாகடல் குடியேற்ற பிரதேசங்கள் தங்கள் கொள்கைகளில் மாற்றம் கொள்ள வைத்தன. அவற்றில் இரண்டு பிரதேசங்களான நியூ பிரன்ஸ்விக், நோவா ஸ்கோஷியா ஆகியவற்றின் சட்ட சபைகள் கூட்டமைப்பில் இணைந்து கொள்வதென்ற தீர்மானத்தை இயற்றச் செய்தன.

ஹட்சன் பே கொம்பனிக்குச் சொந்தமான ரூபேர்ட் நிலமும் வடமேற்கு பிரதேசங்களும் 1869ம் ஆண்டு கனடா அரசினால் கொள்முதல் செய்யப்பட்டன. அவற்றின் ஒரு பகுதி 1870ம் ஆண்டு பிரித்தெடுக்கப்பட்டு மணிடோபா மாகாணம் என்று பெயரிடப்பட்டு கனடிய கூட்டமைப்புடன் சேர்த்துக் கொள்ளப்பட்டது. குடியேற்றப் பிரதேசங்களாகவிருந்த பிரிட்டிஷ் கொலம்பியாவும் பிரின்ஸ் எட்வேர்ட் ஜலண்டும் முறையே 1871ம் 1873ம் ஆண்டுகளில் தனித்தனி மாகாணங்களாக கனடாவுடன் இணைக்கப்பட்டன. எஞ்சிய வடமேற்கு பிரதேசங்களில் இருந்து சாஸ்காட்சேவன் என்ற மாகாணமும் அல்பேர்டா என்ற மகாணமும் உருவாக்கப்பட்டு 1905ம் ஆண்டு கனடாவின் கூட்டாச்சியுடன் இணைக்கப்பட்டன. 1949ம் ஆண்டு நியூபெளண்லாந்தும் அதன் நிர்வாகத்தில் இருந்த லப்ரடோரும் கனடிய கூட்டமைப்பின் பிறிதொரு மாகாணமாகச் சேர்ந்து கொண்டன. 1898ம் ஆண்டு வடமேற்கு பிரதேசங்களில் இருந்து யூகோன் பிரதேசம் பிரிக்கப்பட்டது. 1999ம் ஆண்டு வடமேற்கு பிரதேசத்தின் கிழக்குப் பகுதி பிரிக்கப்பட்டு நுனாவுட் பிரதேசம் உருவாக்கப்பட்டது. அதனால் கனடாவில் இன்று 10 மாகாணங்களும் 3 பிரதேசங்களும் இருக்கின்றன. பிரித்தானிய நாடாளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை 1982ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ம் திகதி இரண்டாவது எலிஸபெத் மகாராணி பிரகடனப்படுத்தியதையடுத்து அரசியல் நிர்ணயச் சட்டம் நிறைவேற்றப்படுவது தொடர்பாக கனடா மீது பிரிட்டன் கொண்டிருந்த அற்ப சொற்ப கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுவிட்டன. அரசியல் யாப்பில் மாற்றத்தைக் கொண்டுவரும் பூரண உரிமை தற்போது கனடாவுக்கு உரியதாகும்.

ஜந்து பெரும் பிரிவுகள்

வரலாறு, அரசியல் மற்றும் புவியமைப்பு அடிப்படையில் கனடாவை ஜந்து பெரும் பிரிவுகளாகக் கொள்ளலாம். அத்லாந்திக் கனடா, மத்திய கனடா, மேற்கு கனடா, பிரிட்டிஷ் கொலம்பியா, வடபுலம் என்று நாம் அந்தப் பிரிவுகளை இனம் காணலாம்.

அத்லாந்திக் கனடா (Atlantic Canada)

அத்லாந்திக் கனடாவில் நியூபெளண்லாந்து, நியூ பிரன்ஸ்விக், நோவா ஸ்கோஷியா, பிரின்ஸ் எட்வேட் ஜலண்ட் ஆகிய நான்கு மாகாணங்கள் அடங்குகின்றன. இந்த மாகாணங்கள் கனடாவின் கிழக்கு கரையோரத்தில், அத்லாந்திக் மாகடலை அண்டியிருக்கின்றன. நியூபெளண்லாந்து அன்ட் லப்ரடோ ர் தவிர்ந்த ஏனைய மாகாணங்களை கடல் சார்ந்த மாகாணங்கள்

(Maritime Provinces) என்றும் அழைக்கப்படுவது மரபு. பிரதேச வரலாறு, புவியமைப்பு ஆகியவை காரணமாக இந்த நான்கு மாகாணங்களும் அத்லாந்திக் மாகாணங்கள் என்று அழைக்கப்படுகின்றன. கடல் வழியாக வந்தவர்கள் அத்தலாந்திக் கனடாவில் தான் முதன் முதலாகக் குடியேறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்ல பிரிட்டிஷ், பிரெஞ்சு குடியேற்றவாசிகள் இந்தப் பிரதேசத்திற்கு வந்தது முதல் அத்லாந்திக் மாகடல் அவர்களது வாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்துள்ளது. தங்களது ஐணவனோபாயத்திற்கு அவர்கள் அத்லாந்திக் மாகடலையே நம்பியிருந்தார்கள். இன்றும் கூட அவர்கள் அதனை நம்பியிருக்கிறார்கள். முன்னர் போன்று இப்பொழுதும் கனடாவுக்கும் வெளிநாடுகளுக்கும் இடையிலான கடல் தொடர்பு அத்லாந்திக் கனடா மூலமாகவே அதிக அளவில் இடம் பெறுகின்றது. மொத்தத்தில் அத்லாந்திக் கனடாவின் விவகாரங்களில் வடஅத்லாந்திக் மாகடலின் ஆதிக்கம் கடந்த 400 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகின்றது எனலாம். அத்லாந்திக் கனடாவின் விஸ்தீரணம் மொத்த கனடாவின் 5.4 சதவீதமாகும். இந்த பிரதேசத்தின் சனத்தொகை 2.3 மில்லியன்.

மத்திய கனடா (Central Canada)

மத்திய கனடாவில் ஒண்டாரியோ, கியூபேக் ஆகிய மாகாணங்கள் அடங்குகின்றன. இந்த இரு மாகாணங்களும் ஏனைய மாகாணங்களிலும் பார்க்க பொருளாதார ரீதியிலும் அரசியல் ரீதியிலும் செல்வாக்கு மிக்கவை. கனடாவின் சனத்தொகை சுமார் 31 மில்லியனில் 62 சதவீதத்தினர் இந்த இரு மாகாணங்களிலும் வசிப்பது அவற்றின் செல்வாக்குக்கான முக்கிய காரணமாகும். மத்திய கனடாவின் விஸ்தீரணம் மொத்த கனடாவில் 26.3 சதவீதம். சனத்தொகை சுமார் 18 மில்லியன். தென் ஒண்டாரியோவும் தென் கியூபேக்கும் கனடாவின் சக்தி வாய்ந்த பொருளாதார மையமாகத் திகழ்கின்றன. இவை ஜக்கிய அமெரிக்காவின் தொழில் பேட்டைகளுக்குச் சமீபமாக இருப்பதால் அமெரிக்காவுடனும் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளன.

மேற்கு கனடா (Western Canada)

மேற்கு கனடா பரந்த புல்வெளிப் பிரதேசம் (The Prairies) என்றும் அழைக்கப்படுகின்றது. மணிடோ பா, சாஸ்காட்சேவன், அல்பேர்டா ஆகிய மாகாணங்கள் மேற்கு கனடாவில் அடங்குகின்றன. அத்லாந்திக் கனடா, மத்திய கனடா ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது மேற்கு கனடாவின் குடியேற்றம் காலத்தால் பிந்தியது. 1885ம் ஆண்டு கனடிய பசுபிக் புகையிரத பாதை பூரணப்படுத்தப்பட்டதை அடுத்து ஆயிரக்கணக்கானவர்கள் அங்கு சென்று குடியேறினார்கள். செழிப்பான மண்வளம் மக்களைக் கவர்ந்திழுத்தது. இன்று சுமார் 5 மில்லியன் மக்கள் இந்தப் பிரதேசத்தில் வசிக்கின்றார்கள். விவசாயமே இந்தப் பிரதேசத்தின் வளமைக்கு முக்கிய காரணமாக இன்றும் இருக்கின்றது. அல்பேர்டாவில் கண்டு பிடிக்கப்பட்ட எண்ணெய் மற்றும் இயற்கை வாயு வளம் அந்த மாகாணத்தின் பொருளாதாரத்தைக் கட்டி எழுப்பியுள்ளது. மணிடோ பாவிலும் சாஸ்காட்சேவனிலும் மிகக் குறைவான சக்தி மூல வளங்கள் இருப்பதால் அவை விவசாயத்தையே பெரும்பாலும் நம்பியிருக்கின்றன.

பிரிட்டிஷ் கொலம்பியா (British Columbia)

ரோக்கி மலைத் தொடர் பிரிட்டிஷ் கொலம்பியாவை நாட்டின் ஏனைய பகுதிகளில் இருந்து பிரிக்கின்றது. இணை வரிசையான மலையடுக்குத் தொடர் காரணமாக போக்கு வரத்துத் தடையும் கிழக்கு கனடாவின் சேய்மையும் பிரிட்டிஷ் கொலம்பியாவை கடந்த காலத்தில் தனிமைப்படுத்தியிருந்தன. நவீன போக்குவரத்து வசதிகள் காரணமாக குறித்த இயற்கை தடைகள் நீக்கப்பட்டுவிட்ட போதிலும் பிரிட்டிஷ் கொலம்பியா வாசிகள் தெற்கேயுள்ள ஜக்கிய அமெரிக்காவுடனும் பசுபிக் மாகடலுக்கு அப்பால் உள்ள ஐப்பான், சீனா போன்ற நாடுகளுடனும் தங்கள் வர்த்த உறவுகளை கூடுதலாக வைத்துக் கொண்டுள்ளார்கள். பிரிட்டிஷ் கொலம்பியாவின் விஸ்தீரணம் கனடாவின் விஸ்தீரணத்தில் 9.5 சதவீதம். சனத் தொகை 3.7 மில்லியன். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் பசுபிக் மாகடற்கரையில் வசிக்கிறார்கள்.

வடபுல பிரதேசம் (The Territorial North)

யூகோன், நுனாவுட், நோர்த் வெஸ்டேர்ன் டெரிட்டரீஸ் ஆகிய பிரதேசங்கள் அடங்கிய பகுதி கனடாவின் வடபுலம் என்று அழைக்கப்படுகின்றது. கனடாவின் நிலப்பரப்பில் சுமார் 40 சதவீதத்தை கனடா வடபுலம் தன்னகத்தே கொண்டுள்ளது. அதன் விஸ்தீரணம் 3.4 சதுர கிலோ மீட்டர்கள். இவ்வளவு பெரிய பிரதேசமாக இருந்த போதிலும் வடபுலத்தில் ஒரு லட்சத்திற்கும் குறைவான மக்களே வசிக்கின்றார்கள். அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் வைட்ஹோஸிலும் ஜெலோநைவிலும் வசிக்கின்றார்கள். ஏனையோர் சிறு நகரங்களிலும் கிராமங்களிலும் வசிக்கின்றார்கள். கனடா வடபுலத்தில் வசிக்கும் மக்களில் அரைவாசிப் பங்கினர் பூர்வ குடிகள். இந்த பிரதேசத்தில் நிறைய மூலவளங்கள் இருக்கின்றன. உலக சந்தைகளில் இருந்து நெடுந்தொலைவில் இருப்பதும் குளிரான சுற்றுச் சூழலும் அதன் அபிவிருத்தியைப் பாதிக்கவே செய்த போதிலும் அதன் மூலவளத்தை பிரயோசனப்படுத்தும் நடவடிக்கைகள் சமீப காலமாக அதிகரித்திருக்கின்றன.

முற்றும்.

நன்றி: கனடா முரசு

Link to comment
Share on other sites

கனடா பற்றின விளக்கத்திற்கு நன்றி ரசிகா அப்பிடியெஅங்கை நம்மடை ஆக்களின்ரை தகவலையும் தந்தா நல்லது

Link to comment
Share on other sites

கனடா குறித்த தகவல்களுக்கு நன்றி ரசிகை, இன்னும் வேறு தகவல்கள் இருந்தால் தாருங்கள். ஈழதமிழர்களின் இரண்டாவது தாயகம் கனடா தானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனடா பற்றிய தகவல்களுக்கு நன்றி ரசிகை. :P :P

Link to comment
Share on other sites

கனடா பற்றின விளக்கத்திற்கு நன்றி ரசிகா அப்பிடியெஅங்கை நம்மடை ஆக்களின்ரை தகவலையும் தந்தா நல்லது

ம்ம் இங்க இருக்கிற நம்மட ஆக்களைபற்றி அவ்வளவாக தெரியாது ம்ம்ம் தெரிந்ததை நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன்

Link to comment
Share on other sites

பழஞ்சோறு

ஆஆ உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா? :oops:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்ம்.. கனடா பற்றி அறிவதில் எனக்கும் ஆர்வம்தான்... ஏன் என்றால்.. மதன் சொன்னது போல.. ஈழதமிழரின் 2 ஆவது நாடு அது தானே.. :roll:

நன்றி ரசிகை.

Link to comment
Share on other sites

மேற்கோள் "இன்னும் சில ஆய்வாளர்கள் கனடா என்ற பெயர் சமஷ்கிருதம் அல்லது இத்தாலிய மொழியில் இருந்து வந்தது என்கிறார்கள். ஆக கனடா என்று ஏன் இந்த நாடு அழைக்கப்படுகின்றது என்பதற்கு சரியான விடை இன்னும் கண்டறியப்படவில்லை." மேற்கோள்

பார்ப்பண நாய்களின் இறந்த மொழியான சமஸ்கிருததிதில்லிருந்து கனடா எனும் பதம் பிறந்ததா!

வேடிக்கை, வினோதம், அற்புதம்.

அதுசரி சமஸ்கிருதம் எப்படி, எவ்வாறு இங்கு வந்தது என்பபை விளக்க முடியும்மா?

இங்கு நாம் படித்தது, பூர்விக மெழியான செவ்விந்தியர்களின் பாவனை பதம்தான் கனடா.

Link to comment
Share on other sites

புலத்திலேயே மலிவாக இடியப்பம் தமிழ் டிவிடி கசற் கிடைக்கிற இடம்.

சுக்குக் காப்பி ரிம்கோட்டனஸ் மாதிரி ரேக்ஏவேயா எடுக்கலாம்.

சனிகிழமைகளில் கூள் குடிக்கலாம்.

ரிரிசி தகவல்களை வழங்கவேண்டிய ஒரு பெரும்பான்மை மொழியாக தமிழும் பார்க்கப்படுகிறது.

முறுகண்டி பிள்ளையார் ஜய்யப்பன் என ஆங்காங்கே இன்ரசெக்சனுக்கு இன்ரசெக்சன் கவர் எடுத்து அப்பாவித்தமிழரின் பணப்பைகள் மீது சரமாரியான தாக்குதல்கள் நடைபெறுகிறது.

ஏம்சி யில தமிழ்படங்கள் ஓடுற அளவிற்கு எங்கடை 2ஆம் தலைமுறைகளும் முன்னேற மாட்டம் எண்டு அடம்பிடிக்குதுகள்.

பூலோகசிங்கம் அடிச்சுவிடுற ஓசிப்பேப்பருக்கும் விளம்குடுத்து உலகத்தமிழரிலும் குடுத்து கொஞ்சத்த தமிழர் அந்தமாதிரி வியாபாரத்தை கொண்டு நடத்தீனம்.

Link to comment
Share on other sites

அதுசரி சமஸ்கிருதம் எப்படி, எவ்வாறு இங்கு வந்தது என்பபை விளக்க முடியும்மா?

இங்கு நாம் படித்தது, பூர்விக மெழியான செவ்விந்தியர்களின் பாவனை பதம்தான் கனடா.

தெரியவில்லை விசாரித்துவிட்டுக்கூறுகிறே

Link to comment
Share on other sites

நயாகரா சொல்லும் சாரல் வாழ்த்து!

img08244ht.jpg

நயாகரா நீர்வீழ்ச்சியை 'மெய்ட் ஆப் த மிஸ்ட்' விசைப்படகில் ஏறி அருகில் சென்று பார்த்ததுண்டா?

'இதுதாண்டா தண்ணீர்' என்பது போல் அது ஆக்ரோஷமாக வீழ்வதைப் பார்த்ததுண்டா?

அது எத்தனைச் சுகானுபவம் தெரியுமா?

நயாகரா... கோபமாய்க் கொட்டுகிறதா? காதலாய்க் கொட்டுகிறதா? என்று முடியாத பட்டிமன்றம் ஒன்று நடத்திக்கொண்டே இருக்கலாம்!

'மெய்ட் ஆப் த மிஸ்ட்' டில் தற்காலிக மழை ஆடை அணிந்து படகின் ஓரங்களில் நின்று பயணப்படும்போது மனதில் இருப்பது 'போகலாம்... போகலாம்.... நயாகராவைத் தொட சீக்கிரம் போகலாம்...' என்ற

தவிப்புதான்.

விசைப்படகு, நதியை எதிர்த்து நீந்திக்கொண்டு, நயாகராவின் '...ஹோ...' என்ற ராட்சசப் பொழிவை நோக்கி முன்னேற முன்னேற.... சாரல்... சாரல்... சாரல்.... பல திசைகளிலிருந்தும் சாரல்

கொண்டாட்டம்தான்...!

இன்னும் இன்னும் முன்னேற ஆவல், குளிர், பயம், பதட்டம் எல்லாம் தொற்றிக்கொண்டு அருகிருக்கும் நண்பரை இறுகக்

கட்டிக்கொள்ளத் தூண்டும்...

முகமெல்லாம் அதீத பூரிப்பு.... உதடுகளில் அப்பட்டமாய் நடனமாடும் குளிரின் தடதடப்பு.... 'வாவ்...!'

பயணப்பட்ட அனைவரிடமிருந்தும் ஒரே குரலில்.... மீண்டும் மீண்டும் 'வாவ்...! வாவ்....!'

முப்புறமும் சூழ்ந்து கொட்டோ கொட்டென்று கொட்ட, நடுவில், நயாகராவின் கோபாவேசத்தை

எதிர்த்துக்கொண்டு, அதன் சாரல் காதலை முகங்களில் ஏந்திக்கொண்டு அங்கே விசைப்படகில் நிற்பது....

விவரிக்கமுடியாத ஆனந்தப் பெருக்கு...!

அவ்வளவுதானா....? கொட்டும் நயாகராவுக்கு இன்னும் இன்னும் அருகில் செல்லவேண்டுமே...? அதன் முகத்தைக்

கிட்டத்தில் பார்த்தாயிற்று; அதன் முதுகையும் பார்க்கவேண்டுமே அது எப்படி? அதற்கும் வைத்திருக்கிறார்கள் ஒரு வழி.

img08206eu.jpg

'Journey Behind the Falls' (நீர்வீழ்ச்சியின் பின்புறப் பயணம்). 'என்னையும் பார்த்துவிட்டுப் போ' என்று தன் சாரல் மொழியில் என்னைக் கூவி அழைத்தது. ஆகா... அற்புதம்! அதையும் பார்த்துவிடலாம் என்று அங்கு சென்றேன்.

அடடா... அது இன்னொரு வகையில் திகைப்பும் சிலிர்ப்பும் ஊட்டும் திகில் பயணம். இம்முறையும் தற்காலிக மழையாடை கொடுத்தார்கள். அணிந்துகொண்டு, நயாகராவைத் தொடப்போகும் கிளர்ச்சியோடு முன்னேறினேன்.

நயாகராவின் நீர்வீழ்ச்சிக்குப் பின்புறம் பல குகைகள் செய்திருக்கிறார்கள். அதன் சரித்திரங்களைச் சொல்லிக்கொண்டு, எலவேட்டரை (மின்தூக்கி) கீழ்நோக்கி இயக்கினார் அங்குள்ள பணியாளர்.

குகைவழியாகவே நடந்து, கிட்டத்தட்ட நயாகராவின் பின் இடுப்புப் பகுதிக்கு வந்தாயிற்று. அப்பப்பா... நெருப்புப்புகை நம் கண்களை நோகடிக்கும். ஆனால் இந்த நீர்ப்புகைதான்... என்ன சுகம்...! என்ன சுகம்...!

கண்களில் குளிர்ச்சியை ஏற்றி... மூளைக்குள் ஒரு முதலிரவே நடத்தியது...!

குகை வழியாய் நயாகராவின் அருகே அருகே செல்லச் செல்ல... உடம்புக்குள் பதுங்கி இருக்கும் எலும்புகளும்

கூச்செறிவதை உணரலாம். வெள்ளை வெளேர் என்று படு வேகத்தில் நயாகரா மகா அடர்த்தியாய்க் கொட்டுகிறது. பத்தடி தூரத்தில் இடுப்புயர கம்பிக் கதவால் பாதுகாப்புக்கருதி தடுக்கப்படுவோம். கைகளால் தொடமுடியவில்லையே என்று ஒரு நொடி வருத்தம் கொண்டேன்.

அங்கிருந்து, மக்கள் தங்களின் வேண்டுதல்களை மனதுக்குள் சொல்லிக்கொண்டு, சில்லறைக் காசுகள் எறிவார்கள்

(பெரும்பாலும் 1 சென்ட் = 30 பைசா). இளசுகள் காதல் எண்ணங்களோடும் எதிர்பார்ப்புகளோடும் எறிவதுதான் அதிகம்.

நம்புகிறோமோ இல்லையோ, அந்த இடம் சென்றதும், மனதில் நமக்கென்ன ஆசை என்று எண்ணத் தோன்றிவிடுகிறது. நிறைவேறுமோ நிறைவேறாதோ, நம்பிக்கையோடு ஒரு சென்ட் வீசும்போது ஆனந்தம்

வந்து ஒட்டிக்கொள்ளத்தான் செய்கிறது. இதோ என் விருப்பம்:

"என் தாய்மொழியாம் தமிழ் என்றும் சீரும் சிறப்புமாய் வாழவேண்டும்! என் தாய்த்திருநாட்டில் அரசியல் முன்னேற்றம் விரைந்து மலர வேண்டும்! தீவிரவாதமில்லாத உலகம் வேண்டும்! ஒவ்வோர் இதயத்திலும் உலகக் குடிமகன் (உலகப்பிரஜை) என்ற எண்ணமே மேலோங்க வேண்டும்!"

இவ்வாறு அந்தக் குகைகள் அத்தனையையும் நடந்து நடந்து முழு உடம்பாலும் பூரித்த உள்ளத்தாலும் பார்த்துவிட்டு,

நயாகராவின் இடப்புறத்தில், அதற்கு மிக அருகாமையில் பாதுகாப்புக் கம்பிகளால் சூழப்பட்ட மேடைக்கு வந்துசேர்ந்தேன்.

சிலீர்... சிலீர்... என்று நயாகராவின் நெருக்கமான சாரல் நம் உடம்பை நேசத்தோடு தொடுகிறது.

முதன் முதலில், அரைகுறையாய் விபரம் தெரியவரும் சின்னஞ்சிறு வயதில், பிரம்மாண்டமான கோவில் யானை தன் துதிக்கையால், நம் பிஞ்சுத் தலை தொட்டு வாழ்த்துச்சொல்லுமே, அப்போது எப்படியிருக்கும்? அப்படித்தான் இருந்தது அந்த அனுபவம். நயாகரா என்ற மகா நீர்வீழ்ச்சி எனக்குச் சாரல் வாழ்த்துச் சொல்லுவதாய்ச்

சிலிர்த்தேன்.

அவ்வளவுதான், எனக்குக் குளிர் விட்டுப் போய்விட்டது. உள்ளே இருந்து ஓர் ஆட்டம் மெல்ல மெல்ல தன் அசைவுகளை

எனக்குள் மீட்டி மீட்டி மூர்க்கம் கொண்டது...!

தற்காலிக மழையாடையைக் கழற்றினேன்...

சிலீர்...! சிலீர்...!

கைகளை உயரே உயரே நயாகராவை நோக்கி உயர்த்தி ஆடினேன்...

சிலீர்...! சிலீர்...!

என் சட்டையையும் கழற்றினேன்...

அப்பப்பா...! அப்பப்பா...! சிலீர்...! சிலீர்...!

உலகில் அங்கும் இங்குமாக ஆயிரம் அருவிகளும் நீர்வீழ்ச்சிகளும் இருக்கலாம். ஆனால் இதுதான்...

இதுமட்டும்தான் ஈடு இணையில்லாத உலக நீர்வீழ்ச்சி!

அன்புடன் புகாரி

கனடா

நன்றி எழில்நிலா

Link to comment
Share on other sites

கடன் அட்டை

கனடாவுக்கு வந்த புதிதில் எதிர்பாராத மூலையில் இருந்து எனக்கு ஒரு இடர் வந்தது. கடன் அட்டை. கடவுளுக்கு அடுத்த ஸ்தானத்தில் மதிக்கப்படும் இந்தப் பொருளுக்கு கனடாவில் இவ்வளவு மரியாதை இருப்பது எனக்கு அன்றுவரை தெரியாது.

எந்த அங்காடியிலோ, சந்தையிலோ, கடையிலோ என்ன பொருள் வாங்கினாலும் கடன் அட்டை இருக்கிறதா என்று கேட்டார்கள். நான் காசை எடுத்து எண்ணிக் கொடுப்பதை விநோதமாக பார்த்தார்கள். நூறு டொலர் தாளை நீட்டினால் அதை மேலும் கீழும் சோதித்து, என்னை திரும்பி திரும்பி பார்த்தபடி உள்ளே சென்று அதை உற்று நோக்கி உறுதிசெய்தார்கள். ஒரு அங்காடியில் கத்தைக் காசை எண்ணி வைக்கும்போது, கடன் அட்டையில் கணக்கு தீர்த்தால் 10% தள்ளுபடி என்றார்கள். என்னால் நம்பமுடியவில்லை. இந்த நாட்டில் கடனாளிகள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று கண்டு கொண்டேன். அன்றே தீர்மானித்தேன், ஒரு கடன் அட்டை எப்படியும் எடுத்துவிட வேண்டும் என்று.

Visa, American Express, Master Card என்று தொடங்கி குட்டி தேவதை நிறுவனங்கள் வரை சகல கடன் விண்ணப்ப பாரங்களையும் நிரப்பி, நிரப்பி அனுப்பினேன். அவர்களிடமிருந்து ஒரே மாதிரியான பதில்கள்தான் வந்தன. உங்களுக்கு இந்த நாட்டில் கடன் மதிப்பு இல்லை. மறுக்கப்பட்டது. மறுக்கப்பட்டது. மறுக்கப்பட்டது.

எப்படியும் மிகவும் மதிப்புக்குரிய ஒரு கடன்காரனாகி விடவேண்டும் என்ற என்னுடைய வைராக்கியம் இப்படியாக நிலை குலைந்து போனது. மாணவர்களும், பச்சிளம் பாலகர்களும் வழுவழுப்பான வண்ண அட்டைகளை விசுக்கி காட்டினார்கள். சுப்பர் மார்க்கட்டில் தள்ளு வண்டியில் சாமான்களை நிரப்பிவிட்டு காசுத்தாள் சுருள்களை பிரித்து பிரித்து கொடுக்கும்போதும், மீதிச் சில்லறையை எண்ணி எடுக்கும்போதும், பத்து சதத்துக்கு பதிலாக ஒரு சதத்தை கொடுத்து தடுமாறும்போதும், இளம் பெண்கள் பளபளக்கும் அட்டைகளை மின்னலாக அடித்தபடி என்னை கடந்து சென்றார்கள். எனக்கு அவமானமாக இருந்தது.

என்ன செய்யலாம் என்று நாடியில் கைவைத்து மூளைத் தண்ணீர் வற்ற யோசித்தேன். கடைசி முயற்சியாக விசா நிறுவனத்து மெத்த பொ஢யவருக்கு 'மிக அந்தரங்கம்' என்று தலைப்பிட்டு ஒரு கடிதம் எழுதுவதென்று முடிவு செய்தேன்

பெருமதிப்பிற்குரிய தலைமையாளர் அவர்களுக்கு,

இந்த நாட்டுக்கு வந்த நாளில் இருந்து எப்படியும் பெரும் கடனாளியாகிவிட வேண்டும் என்று நான் எடுத்த முயற்சிகள் எல்லாம் படு தோல்வியடைந்து கொண்டே வருகின்றன. என்னுடைய சகல கடன் அட்டை விண்ணப்பங்களும் ஈவிரக்கமில்லாமல் நிராகரிக்கப் பட்டுவிட்டன. அதற்கு காரணம் எனக்கு இந்த நாட்டில் கடன் சரித்திரம் இல்லாததுதான் என்கிறார்கள். அப்படி வந்த மறுப்பு கடிதங்களில் ஒரு கட்டை இத்துடன் இணைத்திருக்கிறேன். எப்படியும் ஒரு வாரத்திற்குள் அவற்றை தாங்கள் படித்து முடித்துவிடுவீர்கள்.

எனக்கு கடன் வரலாறு கிடையாது. ஏனென்றால் நான் இந்த நாட்டுக்கு வந்து சொற்ப நாட்களே ஆகின்றன. இது என்னுடைய பிழை அன்று. தாங்கள் கடன் அட்டை தரும் பட்சத்தில் நான் எப்படியும் முயன்று ஒப்பற்ற சா஢த்திரத்தை படைத்து, மதிப்புமிக்க கடனாளியாகி விடுவேன் என்று உறுதி கூறுகிறேன்.

குருவி சேர்ப்பதுபோல என் வாழ்நாள் எல்லாம் சிறுகச் சிறுக சேர்த்து முழுக்காசும் கொடுத்து நான் ஒரு வீடு வாங்கியிருக்கிறேன். அதை தாங்கள் பார்க்கலாம். கடன் வைக்காமல், கைக்காசு கொடுத்து லிட்டருக்கு 20 கி.மீட்டர் ஓடும் சிக்கனமான ஒரு கார் வாங்கியிருக்கிறேன். அதையும் தாங்கள் பார்க்கலாம். எனக்கு கிடைக்கும் மாத வருமானத்தில் 1% குறைவான பாலில், கோதுமை சக்கையை கலந்து காலை உணவாகவும், ஏனைய உணவாகவும் சாப்பிட்டு உயிர் வாழ்கிறேன். அதைக்கூட தாங்கள் பார்க்கலாம்; உணவிலும் பங்கு கொள்ளலாம்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக இன்னும் ஒரு கடனும் எனக்கு ஏற்படவில்லை. எவ்வளவு கடன் தொல்லை இருந்தால் தாங்கள் எனக்கு ஒரு கடன் அட்டை கொடுப்பீர்கள் என்று முன்கூட்டியே சொன்னால் நான் எப்படியும் முயன்று அந்த இலக்கை அடைந்துவிடுவேன். ஆனால் அதற்கு ஒரு கடன் அட்டை மிகவும் முக்கியம் என்று எனக்கு படுகிறது.

தாங்கள் எனக்கு இந்த உதவியை செய்வீர்களாயின் நான் எப்படியும் முயன்று என் கடன் ஏத்தும் திறமையை தங்களுக்கு நிரூபித்துக் காட்டுவேன்

இப்படிக்கு

என்றும் தங்கள் உண்மையான, கீழ்ப்படிந்த, தாழ்மையான, நிலத்திலே புரளும்

இந்தக் கடிதத்தை நான் அனுப்பி சரியாக மூன்றாவது நாள் கூரியர் மூலம், ஒரு இணைப்பு கடிதம்கூட இல்லாமல், ஒரு கடன் அட்டை என்னிடம் வந்து சேர்ந்தது. அதன் மழமழப்பும், மினுமினுப்பும் என் கண்ணில் நீரை வரவழைத்தது. அந்தக் கணமே முழுமூச்சாக கடன் படுவதற்கு என்னை தயார் செய்து கொண்டேன்.

மிக நீளமான பட்டியல்கள் போட்டுக்கொண்டு சுப்பர் மார்க்கட்டுக்கும், பல்கடை அங்காடிக்கும் அடிக்கடி சென்றேன். வட்டமான பெட்டிகளிலும், தட்டையான அட்டைகளிலும் அடைத்து விற்கும் சாமான்களை வாங்கினேன். வாங்கிவிட்டு அவற்றை எப்படி, என்ன உபயோகத்துக்கு வைத்துக் கொள்ளலாம் என்பதை கற்றுக்கொண்டேன். சிலவற்றை திருப்பினேன்; மீண்டும் வாங்கினேன். என் கடன்களை கருணை இல்லாமலும், கண்துஞ்சாமலும் கூட்டினேன். கடன் அட்டை உரசி உரசி தேய்ந்தபோது, கடனும் ஏறியது. மறுபடி கணக்கு தீர்த்தேன்; மறுபடியும் ஏறியது.

இப்படி நான் பாடுபட்டு தேடி வைத்த கடன் புகழ் வீணாகவில்லை. ஒரு நாள் ஒரு கடிதம் வந்தது. அதில் சொல்லியிருந்த விஷயத்தை நீங்கள் நம்ப மாட்டீர்கள். அப்பட்டமான பொய் என்று என்னை அலட்சியப்படுத்தாதீர்கள். முற்றிலும் உண்மை; பொய்யென்றால், நீருக்கு வெளியே, நின்ற கோலத்தில் பெண்ணை புணர்ந்தவன் போகும் நரகத்துக்கு நானும் போவேன்.

இந்தக் கடிதம் விசா தலைமை அலுவலகத்தில் இருந்து வந்திருந்தது. என்னுடைய கடன் தீர்க்கும் திறமையை இது மெச்சியது. என்னுடைய தகுதிக்கும், சாமர்த்தியத்திற்கும் ஏற்ற ஒரு கடன் சுமையை மேலும் தருவதற்கு அந்த நிறுவனம் தயாராக இருந்தது. இலையான் பறந்ததுபோல கையொப்பமிட்ட அந்தக் கடிதத்தில் இருந்த வாசகம் இதுதான்.

அன்புடையீர்,

நீங்கள் எங்களிடம் வாடிக்கையாளராகியதில் நாங்கள் மிகவும் திருப்தியும், பெருமிதமும் கொண்டிருக்கிறோம். உங்கள் கண்ணியத்திலும், நம்பிக்கைத் தன்மையிலும் நாங்கள் வைத்திருக்கும் பெரு மதிப்பில் ஒரு சிறு பகுதியை காட்டும் முகமாக நாங்கள் இத்துடன் $2000 க்கு ஒரு காசோலையை இணைத்திருக்கிறோம். இது அன்பளிப்பில்லை; கடன்தான். இதை நீங்கள் மாதாமாதம் $10 க்கு குறையாத ஒரு தொகையில் கட்டித் தீர்க்கலாம்.

தங்கள் உண்மையுள்ள,

இணை தலைமையாளர்.

என் கடன் சுமைகள் விரைவில் தீர்ந்துவிடக்கூடும். அதற்கு பிறகு நான் என்ன செய்வேன் என்று அவர்கள் கருணை உள்ளம் கவலைப்பட்டிருக்கக்கூடும். நல்ல காரியத்தை நான் தள்ளிப் போடுவதில்லை. ஆகையால் வெகு சீக்கிரத்திலேயே ஒரு பதில் அனுப்பினேன்.

அன்புள்ள ஐயா,

தங்கள் அன்பும், கரிசனமும் என்னை உருக்குகிறது. தங்களுடைய விசா கடன் அட்டை என் வாழ்வில் இன்றியமையாத ஒரு அம்சமாகிவிட்டது. நான் எங்கே போனாலும் அதை காவியபடியே செல்கிறேன். என் இருதயத்துக்கு பக்கத்தில் அது கொடுக்கும் இனிமையான சத்தத்தை கேட்டுக்கொண்டே, இந்த அட்டை வசிக்கிறது. எனக்கு வேண்டியவற்றையும், என் உற்றாருக்கு வேண்டாதவற்றையும் அதைக் கொடுத்தே வாங்குகிறேன். அதன் ஸ்பரிசம் எனக்கு சந்தோசத்தை தருகிறது. அதன் பாரம் காசுத் தாள்களிலும் பார்க்க லேசானதாக இருக்கிறது.

ஆனாலும் எனக்கு ஒரு அல்லல் உண்டு. என்னுடைய அட்டையின் கடன் எல்லை $10,000 என்று நிர்ணயிக்கப்பட்டு இருப்பது தங்களுக்கு தெரியும். இந்த அட்டையை கொடுத்து கடைக்காரன் அதை உரசும்போது அதன் எல்லையை எட்டிவிட்டேனோவென்று வயிறு எரிகிறது; நெஞ்சு அடைக்கிறது. அதை திருப்பி வாங்கி பையில் வைக்கும்வரை இருப்பு கொள்ளாமல் அலைகிறேன். கடைக்காரனின் முகக்குறிப்பில் இருந்து அவன் என்னை நிராகரித்துவிட்டானோ என்பதை ஆராய்கிறேன். அந்த வினாடி செத்து செத்து உயிர் எடுக்கிறேன். என்னுடைய துரிதமான கடன் அடைக்கும் திறமையிலும், ஆயுளின் கெட்டியிலும் அபா஢மிதமான நம்பிக்கை வைத்திருக்கும் தாங்கள் அந்த நம்பிக்கையை இன்னும் கொஞ்சம் விரிவாக்கி என் கடன் உச்சத்தை $100,000 என்று ஆக்குவீர்களாயின் நான் தங்களுக்கு என்றென்றும் மிகவும் கடன் பட்டவனாக இருப்பேன். அப்போதுதான் என் கடன் பளுவை நான் கடல்போல பெருக்கி அதில் ஆனந்தமாக நீந்தமுடியும். ஆகவே இந்த $2000 காசோலையை இத்துடன் திருப்பி அனுப்புகிறேன்.

தங்கள் மேலான கடாட்சத்தை கோரும்,

மேற்படி கடிதத்துடன் பிணைத்தபடி காசோலை திரும்பிப்போனது. அதற்கு இன்றுவரை பதில் இல்லை.

இது என்ன பெரிது! எனக்கும் American Express க்கும் இடையில் நடந்த ருசியான கடிதக் கொண்டாட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

அது இன்னொரு முறை.

நன்றி: அ.முத்துலிங்கம்

நன்றி எழில்நிலா

Link to comment
Share on other sites

  • 4 months later...

கனடாவில் ஈழத்தமிழர் குடிவரவு

சிறீகுகன் சிறிக்கந்தராசா

எஸ். டபிள்யூ. ஆர். டி பண்டாரநாயக்காவினால் 1955ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட சிங்களக் கடுங் கோட்பாடு கொண்ட சிறீலங்கா சுதந்திரக் கட்சி அரசு 1956ஆம் ஆண்டில் சிங்கள்ம் மட்டுமே ஆட்சிமொழி என்னும் சட்டத்தை கொண்டுவந்தது. இச்சட்டம் கல்வி கற்ற தமிழரையும், தமிழ் அரச நிருவாக அலுவலர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களையும் பெருமளவிற் பாதித்தது. இவர்களைல் பணவசதி உடையோர் இங்கிலாந்து, நியூசிலாந்து, அவுஸ்ரேலியா, கனடா போன்ற நாடுகளுக்குத் தமது கல்வியைத் தொடரும் பொருட்டோ அல்லது தமது தொழில் துறைகளில் நுண்திறமை பெறும் பொருட்டோ புலம்பெயர்ந்தனர். கனடிய நிறுவனங்களில் தொழில் பெற்று ஈழத்தமிழர் சிலர் ஆயிரத்துத்தொள்ளாயிரத்து ஐம்பதுகளின் பிற்பகுதியிலும் அறுபதுகளின் முற்பகுதியிலும் கனடாவிற்கு புலம் பெயர்ந்தனர். இவ்வாறு புலம் பெயர்ந்தோர் நூற்றுக்கும் குறைந்த அளவிலேயே காணப்பட்டனர்.

1967ஆம் ஆண்டு கனடிய குடிவரவுச் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. இதன் விளைவாக ஐரோப்பிய மரபினர் அல்லதோரும் கனடாவிற்குப் புலம்பெயர்வது சிறுது எளிதாக அமைந்தது. 1967ஆம் ஆண்டின் பின்னர் கருதக்கூடியளவு ஈழத்தமிழர் குடிவரவாளரகவோ அல்லது பல்கலைக்கழக மாணவராகவோ தமது திறமையின் அடிப்படையில் கனடாவுக்கு புலம் பெயர்ந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் மாநில அல்லது மைய அரசுப் பணிகளிற் சேர்ந்து கொண்டனர். வேறி சிலர் தமது திறமை அடிப்படையில் மருத்துவர், பொறியியலாளர், கணக்காளர், படவரைஞர் மற்றும் தொழில்நுட்பவியலாளர் பணிகளிற் தனியார் துறையில் சேர்ந்தனர். இன்னும் சிலர் கனடியப் பல்கலைக்கழகங்களில் பணிக்கமர்ந்தனர். இவ்வாறு வந்தோரில் சிலர் குடும்பமாகவும், சிலர் வந்தபின் திருமணமானவராயும் காணப்பட்டனர். 1977ஆம் ஆண்டளவில் கனடாவில் ஈழத்தமிழர் தொகை ஏறத்தாழ 1500 , 2000 ஆகக் காணப்பட்டது. 1977ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரம். ஈழத்தமிழர்களை அதிகளவில் கனடாவிற்கு புலம்பெயர வைத்தது. பலர் கல்வித் தகமை, தொழில்சார் பட்டறிவு. வினைத்திறன் ஆகயவற்றின் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டு கனடாவில் நிரந்தரமாகக் குடியேறினர். 1981ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கனடாவில் ஈழத்தமிழர் தொகை 3500- 4000 வரைக் காணப்பட்டதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

1982ஆம் ஆண்டு இன்னுமொரு பகுதி ஈழத்தமிழர் கனடாவுக்கு ஏதிலியராக வந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் 18 - 28 அகவைக்கு இடைப்பட்ட ஆண்களாகவும் ஜேர்மனி, பிரான்சு, சுவிற்லாந்து ஆகிய நாடுகளுக்கூடாக வந்தோராயும் காணப்பட்டனர். இவர்கள் இலங்கைக் காவல்துறையாலும். ஆயுதப்படைகளாலும் மேற்கொள்ளப்பட்ட கொடிய தாக்குதலாலும் தமிழீழத்தில் வளர்ச்சியடைந்த போராளிக் குழுக்களிற் சேரவிருபாமலும், பாதுகாப்பு, மற்றும் சிறந்த வாழ்க்கை கருதியும் இலங்கையை விட்டுக் குடிபெயர்ந்தவர் ஆவர். இந்த இளைஞர்கள் முன்பு கனடாவில் வாழ்ந்த ஈழத்தமிழ்ச் சமுதாயத்தால் நன்கு வரவேற்கப்படவில்லை. அவ்வேளையில் இவர்களுக்கு கனடாத் தமிழீழச் சங்கமும், சமுதாயச் சிந்தனை உள்ள ஈழத்தமிழர்களுமே பெருமளவைல் உதவினர்.

தொடரும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்கனேடியனாக பெருமை கொள்ள வைத்த இன்னுமோர் விடயம். தமிழ் மக்களுக்காக ஒன்ராறியோ மானில வரவுசெலவுத்திட்டத்தை தமிழிலும் வெளியிட்டுள்ளனர்.

http://www.ontariobudget.ca/english/index.html

.

Link to comment
Share on other sites

கனடாவில் ஈழத்தமிழர் குடிவரவு தொடர்ச்சி

1983ஆம் ஆண்டு ஆடித் திங்களில் இலங்கை அரசால் கட்டவிழ்த்து விடப்பட்ட இனக்கலவரமும், அவ்வரசின் சிங்களக் கடும்கோட்பாடும் ஈழத்தமிழரைக் கனடாவில். குடியேறுவதற்கு ஊக்குவித்தது. கனடா தமிழீழச்சங்கத்தின் முயற்சியால் கனடிய மைய அரசு உதவியோடு இவர்களுக்குச் சிறப்பு வேலைத்திட்டங்கள் 1983ஆம் ஆண்டு புரட்டாதித் திங்கள் தொடங்கப்பெற்றன், இவ்வேலைத் திட்டமானது ஏற்கனவே கனடாவில் வசித்து வந்த ஈழத்தமிழர், தமது உறவினரைக் கனடாவுக்கு வரவழைப்பதற்கு எளிய வழிமுறைகளைக் கொண்டிருந்தது. கனடாவிற்கு வருவதற்கு காத்திருந்தோர் தாங்கள் எவ்வாறு இனக்கலவரத்தினால் பாதிக்கப்பட்டனர் என்பதை ஒருவகையில் வெளிப்படுத்துவதே. இத்திட்டத்தினால் ஈழத்தமிழர் 1983ஆம் ஆண்டின் பிற்பகுதி முதல் 1985ஆம் ஆண்டுவரை பெருமளவிற் பயனடைந்தனர். இத்திட்டத்தின்கீழ் பத்தாயிரத்திற்கும் இடைப்பட்ட ஈழத்தமிழர் நன்மையடைந்ததாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

அதே வேளையில் ஐரோப்பிய நாடுகளுக்கு ஊடாக அகதியுரிமை கோரிக் கனடாவிற்கு வந்த இளைஞர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டனர். அவர்களது அகதிக்கோரிக்கை புறந்தள்ளப்பட்டது. கனடாத் தமிழீழச் சங்கம் உள்ளிட்ட பிற அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் பெறுபேறாக அகதிக்கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படுவோர் தொகை படிப்படியாக அதிகரித்தது. 1983ஆம் ஆண்டின் முற்பகுதியில் 5 விழுக்காடாக இருந்து 1985ஆம் ஆண்டு 70 விழுக்காடாக அதிகரித்தது. 1989, 1990ஆம் ஆண்டுகளில் அகதி நிலை கோரி வருவேர் தொகை ஆண்டிற்கு 3 500 முதல் 4 000 வரை இருந்து என்று கூறின் அது மிகையாகாது.

1989ஆம் ஆண்டு தொடங்கப்பெற்ற குடிவரவு மற்றும் அகதிச்சபை அகதி நிலை கோரும் ஈழத்தமிழருக்குப் பெருமளவில் அகதி நிலை வழங்கிப் பாதுகாப்பளித்தது. 1983ஆம் ஆண்டிற்கும் 1989ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலப்பகுதி பெருமளவில் ஈழத்தமிழ் அகதிகளை உருவாக்கிய காலப்பகுதியாகக் கருதப்படுகிறது. இவ்வாறு ஈழத்தமிழர் ஏதிலியர்தொகை பெருமளவில் அதிகரித்ததைக் கவனித்த இலங்கை அரசு, சிங்கள கடுங் கோட்பாடு இயக்கங்கள், மக்கன்சி நிறுவனம், கனடியன் அலையன்சு கட்சி, நசனல் போஸ்டு பத்திரிகை, சண் பத்திரிகை, மக்லீன்ஸ் சஞ்சிகை போன்றவை ஈழத்தமிழ் சமுதாயத்திற்கு எதிரான பரப்புரைகளை மேற்கொண்டன.

Link to comment
Share on other sites

ஒன்ராறியோ மானில வரவுசெலவுத்திட்டத்தை தமிழிலும் வெளியிடுவது உண்மையில் பெருமைதரக்கூடிய விபரம். சினர்களுக்கு அடுத்ததாக தமிழர்கள் கனடாவில் பல விடயங்களில் முன்னேறியிருப்பதாக முன்பு யாழில் படித்த யாபகம். ரொன்ரோ பல்கலைக்கழகத்தில் இனி தமிழினைப்படிக்கலாம் என்பதும் இன்னுமொரு பெருமைதரக்கூடிய விபரம்

Link to comment
Share on other sites

கனடாவில் ஈழத்தமிழர் குடிவரவு தொடர்ச்சி

இவ்வாறு ஈழத்தமிழ் அகதிகள் தொகை வளர்ச்சியானது, ஈழத்தமிழரிடையே அகதிகளைக் கனடாவுக்கு அழைத்து வரும் முகவர்களைத் தோற்றுவித்தது. இம்முகவர்கள் ஈழத்தமிழரிடமிருந்து பல ஆயிரக்கணக்கான டொலர்களை அழைத்து வருவதற்கான கட்டணமாக அறவிட்டனர். இவ்வாறு அழைத்து வருபவர்களது நலன்களைக் கவனிப்பதற்காகச் சிலர் வழக்கறிஞர்களாயும், சிலர் மொழிபெயர்ப்பாளர்களாகவும், வேறு சிலர் குடிவரவு அகதிச்சட்டங்கள் தொடர்பாக வழக்கறிஞர்களுக்கு உதவி புரிபவர்களாகவும் தோற்றம் பெற்றானர். சிலர் அகதிகள் தொடர்பான கதைகளை எழுதிக்கொடுத்து அதற்காக பணமும் அறவிட்டனர்.

இவ்வாறு பெருமளவில் ஈழத்தமிழர் முகவர்களால் அழைத்துவரப்பட்டு அகதிநிலை கோரியமை அவர்களது அகதிக் கோரிக்கையின் நம்பகத்தன்மையை பொய்யாக்கியது. இதனால் உண்மையான அகதிக் கோரிக்கையாளரும் பெருமளவில் மறுக்கப்பட்டனர். இது அவர்களது நிதிநிலையையும் பெருமளவு பாதித்தது. இத்தைய துன்பநிலையில் இருந்தோரை குடிவரவு அறிவுரையாளர் தமது சொந்த நலத்திற்காகத் தொடர்ந்து பயன்படுத்தத்தொடங்கினர்.

1983ஆம் ஆண்டுக்குப் பிற்பட்ட காலப்பகுதியில் இரண்டு வகையான குடும்ப உறவுகளைப் பொற்ப்பேற்கும் முறைகள் காணப்பட்டன. முதலாவது முறை பேரன் பேத்தி, பெற்றோரில் தங்கியிருக்கும் பிள்ளைகளைப் பொறுப்பேற்றல் இதற்கு பொறுப்பேற்கப்படுவோரது தேவைகளைப் பத்து ஆண்டுகளுக்கு வழங்கக்கூடியவராக இருத்தல் வேண்டும். இத்திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் குறிப்பிடத்தக்க தொகையினர் குடிவரவாளராக ஏற்றுக்கொள்ளப்பட்டனர். இவ்வசதியைப் பயன்படுத்திப் பொறுப்பேற்போர் தங்கள் பிள்ளைகளைக் கவனிப்பதற்காக தமது பெற்றோரை ஊதியம் வழங்காமல் வரவழைத்தனர். இவ்வாறு பொறுப்பேற்ற பின்னர் அப்பொறுப்பேற்கும் உடன்பாட்டை முறிப்போரிடமிருந்து நிதி அறவிடும் உதவித் திட்டமொன்றும் கொண்டுவரப்பட்டது. இது சமூகத்தின் நடுவே ஒரு எதிர் மாறான நிலையைத் தோற்றுவித்தது.

Link to comment
Share on other sites

நன்றி இரசிகையக்கா உங்கள் தகவலுக்கு!!

குறுக்காலபோவானால் எழுதப்பட்டது:

--------------------------------------------------------------------------------

புலத்திலேயே மலிவாக இடியப்பம் தமிழ் டிவிடி கசற் கிடைக்கிற இடம்.

சுக்குக் காப்பி ரிம்கோட்டனஸ் மாதிரி ரேக்ஏவேயா எடுக்கலாம்.

சனிகிழமைகளில் கூள் குடிக்கலாம்.

ரிரிசி தகவல்களை வழங்கவேண்டிய ஒரு பெரும்பான்மை மொழியாக தமிழும் பார்க்கப்படுகிறது.

முறுகண்டி பிள்ளையார் ஜய்யப்பன் என ஆங்காங்கே இன்ரசெக்சனுக்கு இன்ரசெக்சன் கவர் எடுத்து அப்பாவித்தமிழரின் பணப்பைகள் மீது சரமாரியான தாக்குதல்கள் நடைபெறுகிறது.

ஏம்சி யில தமிழ்படங்கள் ஓடுற அளவிற்கு எங்கடை 2ஆம் தலைமுறைகளும் முன்னேற மாட்டம் எண்டு அடம்பிடிக்குதுகள்.

பூலோகசிங்கம் அடிச்சுவிடுற ஓசிப்பேப்பருக்கும் விளம்குடுத்து உலகத்தமிழரிலும் குடுத்து கொஞ்சத்த தமிழர் அந்தமாதிரி வியாபாரத்தை கொண்டு நடத்தீனம்.

இதுவும் உண்மையான விடயங்கள் தான். அத்துடன்

மாலைகளில் தமிழ் மாணவர்களை மோல்களில் பார்க்கலாம். காரணம் பெற்றோர் வீட்டில் இல்லை.

தமிழ் பெற்றோர்கள் சிலர் தங்கள் பிள்ளைகளுடன் தெரிந்த தெரியாத தடுமாறான ஆங்கிலத்தில் வெளியிடத்தில் பேசி தமிழ் மானத்தைக் கெடுக்கின்றார்கள்.

தமிழ் வியாபார நிலையங்கள் பல காலாவதியான(expire) பொருட்களை விற்பனை செய்து சுகாதார கனடா நிலையத்தால் பிடிபட்டு இருக்கின்றார்கள்

சில தமிழ் மாணவர்கள் மிகவும் சிறப்பாகப் படித்து பல பாராட்டை நாடளவிய ரீதியில் பெற்று இருக்கின்றார்கள்.

தொடரும்.......

Link to comment
Share on other sites

கனடாவில் ஈழத்தமிழர் குடிவரவு தொடர்ச்சி

1983ஆம் ஆண்டுக்கு முன்பிலிருந்து 2002 ஆடி 28ஆம் நாள் வரைத் திருமணத்திற்கு மணவுறுதி செய்யப் பெற்ற வாழ்க்கைத் துணையை அல்லது ஏற்கனவே திருமணமான வாழ்க்கைத் துணையை பொறுப்பேற்கும் முறை நடைமுறையில் இருந்தது. திருமணத்திற்கு மணவுறுதி செய்யப் பெற்ற வாழ்க்கைத் துணையை பொறுப்பேற்போர் 90 நாட்களுள் திருமணப்பதிவு செய்யாமல் வேறு ஒருவரைத் திருமணம் செய்தபடியால் இவ்வாறு பொறுப்பேற்கும் திட்டத்தினை கட்டுப்படுத்தும் பொருட்டு சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டது.

2002 ஆடி திங்களிலிருந்து பொறுப்பேற்பவர் தனது பணிமூலம் பெறும் வருமானத் தொகையை காட்டத் தேவையில்லை. ஆனால் பொறுப்பேற்பவர் தான் செய்யும் வேலையை உறுதிப்படுத்த வேண்டியிருந்தது. இப்புதிய பொறுப்பேற்புத் திட்டத்தின் கீழ் உள்ள நன்மை யாதெனில்; பொறுப்பேற்பபர் பொறுப்பேற்கப்படும் வாழ்க்கைத் துணையை மூன்று ஆண்டுகளுக்கு மட்டுமே பொறுப்பேற்க வேண்டும். இத்திட்டத்திலுள்ள தீமை யாதெனில்; முடிவரவு அலுவலர்கள் ஏற்கனவே மணவுறுதி செய்யப் பெற்ற திருமணங்கள் நம்பத்தக்கவை அல்ல என்று கருத இடமுண்டு. இதன் விளைவாக நுழைவிசைவு வழங்கும் அலுவலர்களுக்கு எமது பண்பாடு சமய சடங்கு ஒழுக்க முறைகளை விளக்க வேண்டிய நிலை புதிதாக திருமணம் செய்தோருக்கு ஏற்பட்டுள்ளது,

மிகவும் குறைந்தளவு ஈழத்தமிழரே அவர்களது கல்வித்தகைமை, தொழில்சார் பட்டறிவுகளின் அடிப்படையில் தன்முனைவாளராகத் தெரிவு செய்யப்பட்டு கனடாவிற்கு வந்துள்ளனர். இதுபோன்றே மிகக்குறைந்தளவு ஈழத்தமிழர்கள் வணிக நோக்கோடு தொழில்முனைவாளராகப் புலம்பெயர்ந்த இறுதி வகுப்பினர் ஆவர். ஒரு புதிய வளர்ச்சியடைந்த பிரிவினர் மாணவ நுழைவிசையோடு கல்வி கற்பதற்காக வந்து, இங்கு வந்த பின்னர் நிரந்தரக் குடிவரவாளராக வருவதை நாடுகின்றனர். கனடாத் தமிழ்ச்ச்முதாயம் வலுவுள்ளதாக உருப்பெற்று வருகின்றது. கட்டுக்கோப்பான சமுதாயமாக விளங்கித் தனது அடையாளத்தை தொலைக்காதிருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.