• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

பாரதிப்பிரியன்

பூப்பூக்காதல்

Recommended Posts

உன் கூந்தலுக்கு அழகு என வாங்கினேன் மல்லிகைப்பூ,

தென்றலே நீ கொடுத்தாய் ஒரு மாபெரும் வெறுப்பு

நீ நடந்தாய் அழகாக நான் சொன்னேன் என் விருப்பு,

நடந்த உன் பாதம்தனில் நீ எடுத்தாய் செருப்பு

உன் முத்துப் பல் தெத்துப் பல் அழகினை காட்டியதுன் சிரிப்பு,

எடுத்துச் சொன்னேன், உன் அப்பன் கொண்டுவந்தான் பிரம்பு.

நீ பிறந்த அந்நாளில் யாவருக்கும் நீ கொடுத்தாய் இனிப்பு,

எனக்கு மட்டும் நீ கொடுத்தாய் நா தாங்கா ஒரு உறைப்பு.

என் காதல் நீ அறிய நான் மிதித்தேன் நெருப்பு,

நீ சொன்னாய் உன்னிடம் இதுவெல்லாம் வேகாத பருப்பு.

உன் மீது நான் கொண்ட காதலால் அடைந்தேன் வெறுப்பு

நீ உணர்ந்தாய் காதலையே நான் அடைந்தேன் மலைப்பு.

எம் காதல் கதை கேட்டீர் உங்களுக்கு என் பரிசு கரும்பு,

எம் காதல் என்றென்றும் அடையாது அதுதான் இறப்பு.

Share this post


Link to post
Share on other sites