Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அவன்தான் தமிழன்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு உன்னைப் பிடிக்கவில்லை

உன் மீது எனக்குப் பொறாமை

உன் பதவி மீதும் எனக்கு ஆசை

நீ வாழும் மாளிகை எனக்கு வேண்டும்

என உரைத்தான் ஒரு மானிடன்

காது கொடுத்துக் கேட்டேன்

கதைத்தது தமிழன்தான்....

எனக்குச் சுதந்திரம் வேண்டும்

நீ அழிந்தால்தான் எனக்குக் கிடைக்கும்

என்னுடைய உரிமை வெல்லுவேன்

உன்னுடைய உரிமையைப் பறித்து

இங்கும் ஒரு குரல்,

இவன் உரைப்பதெல்லாம்

தன்னைக் கொன்றுவிட்டு,

ஏனெனில்

எமக்கென்று நினைக்க மாட்டா

அவனும் தமிழனே....

தமிழனுடன் சேர்ந்திடின் சோர்வு எனக்கு

ஒன்று சேர நினைப்பதெல்லாம்

சிங்கம் ஈன்ற பரம்பரையுடனே

செத்திடினும் சோறு போடுவர் அவர்கள்

இந்தக் குரலுக்குரித்தவன் வேற்று நாட்டனல்ல

தந்திரம் என்று சொல்லி ஊராரை ஏய்த்திடுவான்...

அவனும் என் சகோதரத் தமிழனே..

அன்றிருந்தோமா ஒற்றுமையாக...?

இல்லை மாந்தர்காள்...கேளீர்..

என்றுமே எமக்கு எதிரி நாமே...

சுந்தரச் சோழனாம்...

செந்தமிழ்ப் பாண்டியனாம்.....

வென்றனர் ஊர் முழுவதுமே...

தமிழ் வீரம் உயர்ந்தது உலகிலே..

வீரம் காட்டி என்ன பயன்...

தமக்குள்ளே பெரியவர் யார் என்ற

வீரம் காட்டினார்களே...

அழிந்தது சோழ பரம்பரை,

அழிந்தது தமிழன் வீரமும்தான்....

அன்றிலிருந்து இன்றுவரை

அதுதானே நடக்குது...

மணிமகுட விழாவொன்று

தொடங்கியது துரோக தேவதைக்கு

எட்டப்பன் விளக்கேற்ற....

காக்கைவன்னியன் குடை பிடிக்க

கருணை உள்ளங்கள் மகுடம் அணிந்தன..

எத்தனை நாள் இது.....?

மகுடங்கள் இருக்கும்வரை

மடையராய் வாழ்வதோ...?

என்று இந்த காலம் மடியுமோ...

அன்றுதான் தமிழா உனக்கு விடியும்

அதுவரை...

தமிழன் என்று சொல்வதை

தற்காலிகமாய் நிறுத்திடு...

இல்லை நீ தமிழன் என்றால்..

ஒற்றுமையாய் ஒன்று சேர்ந்திடு...

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.