• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
naanal

ஓடிப்போன ஒட்டகம்

Recommended Posts

ஓடிப்போன ஒட்டகம்

இந்தப்பனிக் குளிருக்கு எவன் வீட்டிற்குள்ளையே அடைபட்டுக்கிடப்பான்.

என்ரை நாட்டிலைதான் நான் சுதந்திரமாகச் சுத்தலாம் என்று ஒரு துண்டுக் காகிதத்திலை

எழுதி வைத்திட்டுச் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டைவிட்டுக் கிளம்பி டுபாய்க்குக் கப்பல் ஏறின ஒட்டகம்,

கோடைகாலம் தொடங்க...... போனதுபோலவே சொல்லாமல் கொள்ளாமலுக்கு இரண்டு நாளுக்குமுதல் வந்து தன்ரை அறையுக்கை படுத்துக்கிடந்தது.

சரி என்னதான் நடக்குது பார்ப்பம் என்று பேசாமலுக்கு இருந்தால்

அது பாட்டுக்குத் திரும்பவும் தன்ரை குணத்தைக் காட்டத் தொடங்கிவிட்டுது.

அதுதான் அந்தக் கதையளை உங்களுக்குச் சொல்லுவமென்று வந்து உட்கார்ந்தால் வைத்தியரிடம் மருந்தெடுக்கப்போறதுக்கு நேரமாச்சுது.

கோபியாதையுங்கோ போட்டுவந்து விசயத்தைச் சொல்லுறன்..........

நட்புடன் நாணல்

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

மேலும் தொடர்க...........

Share this post


Link to post
Share on other sites

நன்றி நிலாமதி,

ஒரு சிலராவது என்ரை எழுத்தையும் படிக்கிறதற்கு ஆவலாக இருக்ககிறியள் என்பதை அறிந்ததில் மகிழ்ச்சி.

இப்ப ஒரு சின்னக் கதையைச் சொல்லுகிறன் கேளுங்கோ.....

கொள்கைமாறாத ஒட்டகமும் நானும்........

காலையில எழுந்து சோம்பல்போகாதவனாக

சோபாவில் சாய்ந்தபடி ஜன்னலுக்கால தெருவில போறவாற சனங்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தன்.

என்ன அது இன்றைக்கும் காலங்காத்தாலை சோபாவில உட்கார்ந்து காலை ஆட்டினபடி............

நக்கலாகச் சொல்லிக்கோண்டு ஒட்டகம் தன்ரை அறையிலிருந்து தலையை நீட்டியது.

நான் எப்படியும் இருப்பன் அதாலை உனக்கென்ன கேடுவந்தது என்றன் எரிச்சலோட

காலமை எழும்பினால் வீட்டு உடுப்புக்கூட மாத்தாமலுக்கு வேலைவெட்டி இல்லாமல்

உந்தச் சோபாவிலை காலைஆட்டிக்கொண்டு இருக்கிறதே தொழிலாப்போச்சுது.

சும்மா இருக்கிறநேரத்தில என்னோட சேர்ந்து உந்த மலசலகூடம், சமையலறைச் சுத்தம் செய்யலாமே?

எனக்கென்றால் சும்மா பத்திக்கொண்டு வந்தது அடக்கிக்கொண்டு..

நானொன்றும் சும்மா பொழுதுபோகாமலுக்கு இருக்கேல்லை ஒரு கொள்கையோடதான் உட்காந்திருக்கிறன் என்று கத்தவும்,

அது என்ன அப்படி ஒரு கொள்கையாக்கும் என்று ஒட்டகம் முடிக்கமுதலே

நான் இன்றைக்கு முழுநாளும் ஒரு வேலையும் செய்யாமல் சும்மா இருக்கிறதென்ற இலட்சியத்தோட இருக்கிறன்.

அட உதைத்தான் நேற்றும் சொன்னதுபோலகிடக்கு.........

ஒம்! ஒம்!

நேற்றுக்காலமையும் ஒரு அலுவலும் செய்யிறதில்லை என்ற குறிக்கோளோடதான் உட்கார்ந்தனான்.

பிறகென்னடா என்றால் தவிர்க்க இயலாமலுக்கு ஒரு சில வேலையளைச் செய்யவேண்டி வந்திட்டுது,

அதாலை சாயங்காலம் இலட்சியம் நிறைவேறாமல்போட்டுது என்ற கவலையோடதான் படுக்கப்போனனான்.

அதுதான் இன்றைக்கு என்னதான் நடந்தாலும் என்ரை கொள்கையைவிடுகிறதில்லை என்ற கொள்கையிலை ஒரேபிடியாக இருக்கிறன்.

அதை இதைச் சொல்லிப் பிறகு இன்றைக்கும் சாயங்காலம் என்னைக் கவலைப்பட வைத்திடாதை,

நீயும் என்ரை கொள்கையை ஒருநாளுக்கென்றாலும் கடைப்பிடிச்சுப்பார் அப்ப தெரியும் அருமை என்று நான் சொல்லவும்,

ஒட்டகம் சட்டென்று நான் கொம்யுனிசம் சமத்துவம் என்றதைவிட்டு ஒருநாளும் விலகமாட்டன் என்று வீரமாச் சொல்ல

நானும் விடாமலுக்கு

அப்ப இன்றைக்கும்

முதலாளியளை ஒழிக்கிறன்,

அளவுக்கு அதிகமாக வச்சிருக்கிறவனை ஒழிக்கிறன்,

சமத்துவத்தை உண்டாக்கிறன் என்று அடுத்தவனைத் தட்டிச்சுத்தி ஓசிச்சீவியம் நடத்தப்போறாயென்று சொல்லு என்றன் நக்கலாக

இப்படியே கதைச்சுக் கதைச்சு வீணாக நேரம்போகுது.

நானொரு புது ஜக்கிசான் பட DVD வாங்கிவந்தனான் பார்க்கப்போறன்.

super என்று internet இல எல்லாம் கனபேர் எழுதியிருக்கிறாங்கள் விருப்பமென்றால் சேர்ந்து பாருமன் என்று ஒட்டகம் கேட்கவும்.

நானும் என்னை மறந்து, ஜக்கிசான் படமென்றால் நல்ல சண்டையும் பகிடியுமாக சும்மா இருக்கிறதுக்கு நல்ல பொழுதுபோக்காக இருக்குமென்றன்.

கொள்கைகள்...................................?

Edited by naanal
 • Like 1

Share this post


Link to post
Share on other sites

உங்கள் கதையை வாசித்தேன்...ஏன் நீங்கள் ஒட்டகத்தை வைத்தே கதை எழுதுகிறீர்கள்?

Share this post


Link to post
Share on other sites

உங்கள் கதையை வாசித்தேன்...ஏன் நீங்கள் ஒட்டகத்தை வைத்தே கதை எழுதுகிறீர்கள்?

ரதி உங்களது சந்தேகத்தைத் தயக்கமின்றிக் கேட்டீர்களே நன்றிகள்.

தயக்கமின்றிக் கேட்டீர்கள் என்று எழுதியதிலும் ஒரு விடயம் இருக்கிறது பொதுவாகவே நம்மில் அநேகருக்கும் ஒரு அர்த்தமற்ற பயமிருக்கும். தனக்கொருவிடயம் தெரியாது என்று அடுத்தவரிடம் கேட்பதால் அவர் தன்னைப்பற்றித் தாழ்வாக நினைத்துவிடுவாரோ அல்லது பொது இடங்களில் தெரியாத ஒருவிடத்தைப்பற்றிச் சந்தேகம் கேட்டால் சமுதாயத்தில் தனது அந்தஸ்த்துக்குறைந்துவிடுமோ என்ற தயக்கத்தில் தெரியாத, புரியாத விடயங்களையெல்லாம் தெரிந்தமாதிரி நடித்துக்கொள்வோம்.

உண்மையிலே எல்லோருக்கும் எல்லாம் தெரிந்திருக்கவேண்டுமென்ற தேவையுமில்லை சாத்தியமும் இல்லை. ஆனால் தெரியாத ஒருவிடயத்தைச் சந்தர்ப்பம் கிடைத்தும் தெரிந்து கொள்ள முயற்ச்சிக்காமல் இருப்பதுவோ அல்லது தெரிந்தமாதிரிக் காட்டிக் கொள்வதுவோதான் தவறு அப்படிச் செய்வதன்மூலம் தன்னையேதான் ஏமாற்றிக் கொள்கிறார்கள்.

இதனால்த்தான் ரதியிடம் இருந்த தேடுதல் ஆர்வத்தை பாராட்டியே அப்படி சந்தேகத்தைத் தயக்கமின்றிக் கேட்டீர்களே நன்றிகள் எனக் குறிப்பிட்டிருந்தேன்.

இனி விசயத்துக்வாறன் ரதி

நாடகங்களின் ஒரு மாற்று வடிவமாக தெருநாடகங்கள் குறியீட்டு நாடகங்கள் இருப்பதுபோல

தான் சொல்லவரும் கருத்தை இவ்வாறானதொரு மாற்று வடிவில் சொல்வதுவும் கதைகளை முக்கியமாக சமுகச் சீர்கேடுகளைச் சொல்வதில் ஒரு பாணியாகும் இந்தக் கதைவடிவம் தமிழிற்குத்தான் புதிதே அன்றிப் பல வேற்றுமொழிகளிலும் இவ்வாறாகத் தமது கருத்துக்களைச் சொல்லும்கதைகள் நிறையவே வந்துகொண்டிருக்கின்றன. இவ்வாறான கதைகளின் தொகுப்புக்கள் புத்தகங்களாகப் பல மொழிகளிலும் வந்திருக்கின்றன.

நம்மவர்மத்தியிலும் இவ்வகைப்படைப்புக்களை தோற்றுவிக்கலாமே என்னற எண்ணத்திலேயே

ஒட்டகத்தையும் கதை மாந்தருடன் இணைத்து எழுதுகிறேன். இங்கு ஒட்டகமென்பது வெறுமனே ஒரு குறியீடே அன்றி விசேடமா வேறெதுவும் இல்லை. நீங்களும் இதுபோல ஒரு எலி, புலி, நரியென எதையாவது இணைத்துக்கற்பனை செய்துபாருங்களேன்.

Edited by naanal

Share this post


Link to post
Share on other sites

ஓ ஒட்டகம் வெற்றுக்குறியீடு மாத்திரம்தானோ. நான் நினைச்சன் உங்கட வாழ்க்கைத்துணையை கடுப்பில ஒட்டகம் எண்டு கூப்படிறீங்களாக்கும் எண்டு.

Share this post


Link to post
Share on other sites

அது சரி ஒட்டகத்தாருக்கு சிவப்பு சட்டை காரருடன் என்ன கோபம் என்று சொல்லுங்கோவன்...உங்கள் குறியீடு கதை வடிவங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்

Share this post


Link to post
Share on other sites

ஓ ஒட்டகம் வெற்றுக்குறியீடு மாத்திரம்தானோ. நான் நினைச்சன் உங்கட வாழ்க்கைத்துணையை கடுப்பில ஒட்டகம் எண்டு கூப்படிறீங்களாக்கும் எண்டு.

மச்சான், என்ரை பழைய கதையைக் கேட்டுப்போட்டு நீங்களே முடிவுபண்றுங்களேன். சிறுவயதுமுதல் கொழும்பில் வளர்ந்து இந்துக்கல்லூரி றோயல்கல்லூரி எனப் படித்ததில் ஓரறவிற்குச் சரளமாக மூன்று மொழிகளிலும் பேசமுடிந்தில் தமிழ் சிங்களம் என்றெவித்தியாசம் இல்லாமல நண்பர்களைவிட அதிகமான நண்பிகள் கூட்டத்துடன் ஜாலியாச் சுற்றித்திரிந்த எனது வாழ்க்கையை பதினெட்டாவது வயதில 1977 ஆண்டு இனக்கலவரம் முற்றாகப் புரட்டிப்போட்டது. அகதியாக வடமராட்சியில் கால்பதித்த எனது வாழ்வின் முக்கியமான மாற்றங்களில் ஒன்று போர்க்குணமுள்ளவனாக மாறியது. அடுத்தது நல்லதொரு நண்பனைப்போன்று ஆளுமையும் நிதானமும் மதிநுட்பமும்மிக்க அன்பான மனைவியைச் சந்தித்தது. நான் உச்சங்களைத்தொட்ட அகங்காரத்தில் திளைத்தவேளைகளில் நிதானந்தவறாமலும் குப்புறவிழுந்த சோகமான கணங்களில் தன்மடியில் தாங்கிய தாயாகவும் நிற்கும் என் மனைவியின் துணையில்லாது இருந்திருந்தால் எனது சமாதியில் என்றோ புல்முளைத்திருக்கும்.

அது சரி ஒட்டகத்தாருக்கு சிவப்பு சட்டை காரருடன் என்ன கோபம் என்று சொல்லுங்கோவன்...உங்கள் குறியீடு கதை வடிவங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்

புத்தன், எனக்கொன்றும் சிவப்புச்சட்டைக்காரரிலை கோபங்கிடையாது.நான் முன்பு கூறியதுபோலத் திடீரென வடக்கிற்குத் தூக்கி வீசப்பட்டபின் அதற்கான காரணங்களைத் தேடமுற்பட்டபோது படித்த புரட்சி வரலாறுகள்தான் நாளடைவில் வீட்டிலிருந்து பாடாலைக்குச் செல்வதாகப் புறப்பட்டு நண்பரிடம் பாடப்புத்தகங்களைக் கொடுத்துவிட்டு யாழிலிருந்து வன்னிக்கு மினிபஸ் ஏறவும் இரவு அப்பாவிப் புhனைபோல வீட்டுக்குவரும் துணிச்சலைத்தந்து நாளடைவில் நிரந்தரமாக வீட்டிலிருந்து வெளியேற்றியது. நான் கதைகளில் தொட்டுச்செல்வது பல்வேறு மனித முரண்பாடுகளைத்தான் அவை எல்லாம் என் கொள்கைகளாக இருக்கவேண்டுமென்ற நியதி எதுவும் இல்லையே.

Share this post


Link to post
Share on other sites

உங்களுக்கு அப்படியொரு வாழ்க்கைத்துணை கிடைச்சது மகிழ்ச்சி நாணல், வாழ்த்துகள்!

Share this post


Link to post
Share on other sites

மச்சான், என்ரை பழைய கதையைக் கேட்டுப்போட்டு நீங்களே முடிவுபண்றுங்களேன். சிறுவயதுமுதல் கொழும்பில் வளர்ந்து இந்துக்கல்லூரி றோயல்கல்லூரி எனப் படித்ததில் ஓரறவிற்குச் சரளமாக மூன்று மொழிகளிலும் பேசமுடிந்தில் தமிழ் சிங்களம் என்றெவித்தியாசம் இல்லாமல நண்பர்களைவிட அதிகமான நண்பிகள் கூட்டத்துடன் ஜாலியாச் சுற்றித்திரிந்த எனது வாழ்க்கையை பதினெட்டாவது வயதில 1977 ஆண்டு இனக்கலவரம் முற்றாகப் புரட்டிப்போட்டது. அகதியாக வடமராட்சியில் கால்பதித்த எனது வாழ்வின் முக்கியமான மாற்றங்களில் ஒன்று போர்க்குணமுள்ளவனாக மாறியது. அடுத்தது நல்லதொரு நண்பனைப்போன்று ஆளுமையும் நிதானமும் மதிநுட்பமும்மிக்க அன்பான மனைவியைச் சந்தித்தது. நான் உச்சங்களைத்தொட்ட அகங்காரத்தில் திளைத்தவேளைகளில் நிதானந்தவறாமலும் குப்புறவிழுந்த சோகமான கணங்களில் தன்மடியில் தாங்கிய தாயாகவும் நிற்கும் என் மனைவியின் துணையில்லாது இருந்திருந்தால் எனது சமாதியில் என்றோ புல்முளைத்திருக்கும்.

தங்களது வாழ்க்கை என்னையும் உறையவைத்துவிட்டது

தாங்கள் 1977

நான் 1983

அதே இந்துக்கல்லூரி (பம்பலப்பிட்டிய)

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • யாழ்ப்பாணத்தில் இளம் தலைமுறையினறை ஊக்குவிக்க திரைப்படப் பயிற்சிப் பட்டறை நடைபெறவுள்ளது தமிழகத்திலுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் முப்பது வருடங்களுக்கு அதிகமாக குறும்படங்கள் மற்றும் உலகத் திரைப்படங்களை தொடர்ச்சியாகத் திரையிடுவது மட்டுமின்றி, ஆறாயிரத்திற்கு மேற்பட்டோருக்கு திரைப்படப் பட்டறைகள் மூலம் பயிற்சிகளை வழங்கிய‘நிழல்-பதியம்’ அமைப்பு மற்றும் தாயகத்தில் உள்ள அனுபவம் வாய்ந்த திரைக் கலைஞர்களையும் ஒன்றிணைத்து யாழ்ப்பாணத்தில் ஆறு நாட்கள் திரைப்படப் பயிற்சிப் பட்டறை நடைபெறவுள்ளது. இந்த வகையில், பட்டறை முதலாவதாக திரைப்படப் பயிற்சிப் பட்டறை ஒன்றை யாழ்ப்பாணத்தில் நடத்தவுள்ளது. இளவயதினரிடையேயும், மாணவர்கள் மத்தியிலும் தரமான திரைப்படங்களை உருவாக்கும் போக்கினை உற்சாகப்படுத்தவும், அவர்களை வழிகாட்டவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையோடு இணைந்து இத்திரைப்படப் பயிற்சிப் பட்டறையினை ஏப்ரல் 6ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடத்த பட்டறை அமைப்பு ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளது. தொடர்ச்சியாக ஆறு நாட்கள் நடத்தப்படவிருக்கும் இப்பட்டறையில் திரைப்படங்கள் சார்ந்த குறும்படம் மற்றும் ஆவணப்படம், நடிப்பு, திரைக்கதை, ஒப்பனை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு ஆகிய முக்கிய ஆறு விடயங்கள் தொடர்பாக மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கப்படும்.இத் திரைப்படப் பயிற்சிப் பட்டறையில் பிரதான வளவாளர்களாகக் கலந்துகொள்ள திரு. பிரசன்ன விதானகே (திரைப்பட இயக்குனர்) செல்வி. ஹலிதா ஷமீம் (திரைப்பட இயக்குனர் – சில்லுக்கருப்பட்டி) ஆகியோர் இதுவரை சம்மதம் தெரிவித்துள்ளனர். பட்டறையின் இறுதிநாளில், பங்குபற்றிப் பயன்பெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கலும், கலந்து சிறப்பித்த ஆசிரியர்கள், இதர கலைஞர்களைக் கௌரவிப்பதும் நடைபெறும்.பயிற்சிப் பட்டறைகளில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் பெப்ரவரி 17ம் திகதி முதல் பட்டறை இணையத்தளம் ஊடாக (paddarai.org) விண்ணப்பங்களை அனுப்பிவைக்கலாம்.அவர்தம் ஆர்வம், படிப்பு அல்லது தொழில் அடிப்படையில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் என்றும், பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்பவர்களுக்கு உணவு மற்றும் தங்குமிட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன இதற்காக எந்தவொரு கட்டணமும் அறவிடப்படமாட்டாது என்றும் பட்டறை அமைப்பு அறிவித்துள்ளது. உலக ஓட்டத்தில் புதிதாக உருவாகி வரும் துறைகள் மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள துறைகளிலும் அத் துறைசார் புலமைத்துவம் பெற்றவர்களூடாக இளம் தலைமுறையினரைப் பயிற்றுவிப்பதன் மூலம் சமூகத்தில் படைப்பாற்றலையும் கண்டுபிடிப்பாற்றலையும் மேம்படுத்தும் நோக்குடன் இலாப நோக்கற்றுச் செயலாற்றும் சுயாதீனக் கட்டமைப்பு ‘பட்டறை’ஆகும்.பட்டறையின் இறுதிநாளில், பங்குபற்றிப் பயன்பெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கலும், கலந்து சிறப்பித்த ஆசிரியர்கள், இதர கலைஞர்களைக் கௌரவிப்பதும் நடைபெறும்.(15)   http://www.samakalam.com/செய்திகள்/யாழ்ப்பாணத்தில்-இளம்-தலை/
  • உதயசூரியன் சின்னத்தில் கிழக்கில் தமிழர் ஐக்கிய முன்னணி என்ற கூட்டணி உதயம் மட்டக்களப்பு ஏரன்ஸ் வீதியில் அமைந்துள்ள கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் தலைமைக் காரியலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கிழக்கில் 4 கட்சிகள் இணைந்து தமிழர் ஐக்கிய முன்னணி என்ற கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளதுடன் உதயசூரியன் சின்னத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கவுள்ளதாக கிழக்கு தமிழர் ஒன்றிய தலைவரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ரி.சிவநாதன் தெரிவித்தார்.கிழக்கு மாகாணத்தின் கள நிலையைக் கருத்திற்கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பை விடுத்து ஏனைய தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு குடையின் கீழ் சேர்ந்து போட்டியிடுவது மிகவும் சாதுரியமான விடயமாக அமையும். இதன்மூலம் தமிழர்களின் வாக்குகளை சிதறடிக்காமல் கணிசமான ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளலாம்” என அவர் மேலும் தெரிவித்தார். குறித்த 4 கட்சிகளும், இணைந்து தமிழர் ஐக்கிய முன்னணி என கட்சி ஒருவாக்கப்பட்டு தமிழ் மக்களின் கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னமான உதய சூரியன் சின்னத்தை ஏகோபித்த சின்னமாக புதிய கூட்டணிக்கு தெரிவுசெய்து உடன்பாட்டில் கைச்சாத்திட்டுள்ளன.தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் கிழக்கு தமிழர் ஓன்றியம் பேச்சுவார்த்தையில் பல தடவை ஈடுபட்டோம். அவர்கள் எங்கள் கொள்கையை ஏற்றுக் கொண்டிருந்தனர். கள நிலை யதார்த்த நிலையை உணர்ந்து எமது முயற்சி நன்று என்றனர். ஆனால் தாங்கள் வீட்டுச் சின்னத்தை விட்டு எமது சின்னத்தில் வருவதில் பிரச்சினையுள்ளதாக தெரிவித்தனர். அவர் மேலும் தெரிவிக்கையில் கிழக்கில் அனைத்து தமிழ் கட்சிகளையும் ஒன்றிணைத்து பொதுச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற முயற்சியை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பித்த கிழக்கு தமிழர் ஒன்றியம் இன்று சிவராத்திரி தினத்தில் வெற்றிகண்டுள்ளது.கிழக்கு தமிழர் ஒன்றிய தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்ற செயற்குழுக் கூட்டத்திலே, நாடாளுமன்றம் மற்றும் மாகாண சபைக்கான எதிர்வரும் தேர்தல்களில் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிடுவது குறித்த கலந்துரையாடல் சுமூகமான முறையில் இடம்பெற்றது. தமிழர் ஜக்கிய முன்னணி பேயர் கொண்ட கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதுடன் இதன் சின்னமாக உதய சூரியன் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. தற்போது 4 கட்சிகளான பி.ஆனந்தசங்கரியை தலைவராகக் கொண்ட தமிழர் விடுதலைக் கூட்டணி, கிழக்கு தமிழர் ஒன்றிய தலைவரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ரி.சிவநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரனை தலைவராகக் கொண்ட முற்போக்கு தமிழர் அமைப்பு, முன்னாள் பிரதி அமைச்சாரன நா.கணேசமூர்த்தியை தலைவராகக் கொண்ட இலங்கை தமிழர் முற்போக்கு முன்னணி ஆகியன தற்போது இணைந்துள்ளன.குறித்த ஊடக சந்திப்பில், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி, இலங்கை தமிழர் முற்போக்கு முன்னணி கட்சியின் தலைவர் நா.கணேசமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்ட நிலையில் கிழக்கு தமிழர் ஒன்றிய தலைவர் சிவநாதன் மேற்குறித்த தகவலை தெரிவித்தார்.(15)   http://www.samakalam.com/செய்திகள்/உதயசூரியன்-சின்னத்தில்-க/
  • நீங்கள் எப்போதுமே பங்காளிகள் தானே பங்காளி! இதென்ன புதுசாய் புதுப்பிக்கிறியள்? 
  • துல்பன், நீங்கள் மதத்தை பற்றி கூறும் கருத்துக்கள் உயர்ந்தவையாகவும் உண்மையாகவும் இருக்கலாம். ஆனால், நாம் இருக்கும் இடத்திற்கு அது சரி வருமா என்பதே வினா? இல்லை அந்த மாற்றம் அவர்களுக்குள்  இருந்து வர வேண்டும்.  உதாரணத்திற்கு, ஒருவருக்கு தமிழ் தெரியும் என்பதை விட அதை எங்கே எப்படி யாரிடம் எதை பேச வேண்டும் மற்றும் எதை பேசக்கூடாது என்பது முக்கியமானது.