Jump to content

விடை தெரிந்தால் கூறவும்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருவர் வந்து என்னிடம் இக் கேள்வியைக் கேட்டு விடை கூறச்சொன்னார். எனக்கு விடை தெரியவில்லை. உங்களில் யாருக்காவது தெரிந்தால் தந்துதவவும்.

தட்டானிற்கு சட்டை போட்டால் குட்டைப்பையன் கட்டையால் அடிப்பான் அவன் யார்.

(சில வேளையில் கேள்வியில் பிழையிருக்கலாம்)

வடிவேலின் 23ம் புலிகேசியில் வருகின்ற கேள்வி இது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தட்டானுக்கு சட்டையை போடால் "த "வுக்கு சட்டை போடால்" து" துட்டனுக்கு ..( கெட்டவன் ) குட்டை பையன் .....கட்டையால் அடிப்பான்....சரி தானே .... :blink: .

Link to comment
Share on other sites

சபேசன் அண்ணாவைத்தான் கூப்பிடனும் போல இருக்கு....இதற்கு விடைதருவதற்கு.

அவர் முன்பு எழுதிய பதிவில் இது பற்றி குறிப்பிட்டுள்ளார்..

இங்கே அழுத்தி பாக்கவும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுத்தியல் :blink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுத்தியல் :blink:

இவ் விடை சரியா ஏன் இவ் விடை என விளக்கம் தருவீர்களா காவாலி.

சபேசன் அண்ணாவைத்தான் கூப்பிடனும் போல இருக்கு....இதற்கு விடைதருவதற்கு.

அவர் முன்பு எழுதிய பதிவில் இது பற்றி குறிப்பிட்டுள்ளார்..

இங்கே அழுத்தி பாக்கவும்

நன்றி ஈழமகள்

தட்டானுக்கு சட்டையை போடால் "த "வுக்கு சட்டை போடால்" து" துட்டனுக்கு ..( கெட்டவன் ) குட்டை பையன் .....கட்டையால் அடிப்பான்....சரி தானே .... :blink: .

நன்றி நிலாமதி

அது நானில்லை. வடிவேலிட்டையே தொலைபேசியில அழைச்சு கேட்டுப்பார்கலாமே.

என்ன மச்சான் இப்படி சொல்லிப்போட்டியள். நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ் விடை சரியா ஏன் இவ் விடை என விளக்கம் தருவீர்களா காவாலி.

"தட்டானுக்குச் சட்டை போட்டால் குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான், அவன் யார் ?"

தட்டானுக்கு (தட்டு+ஆன்) "ச்"அட்டை போட்டால் தச்சன் (தச்சு+அன்)ஆவான். இதில் வரும் "ஆன்", "அன்" என்பன ஒரே பொருளைத் தரும் ஆண்பால் பெயர் விகுதிகளாகும். இனி சுத்தியலில் இரும்பினால் செய்த பகுதியை குட்டைப் பையன் எனலாம். சுத்தியலுக்கு நீளமான மரக்கட்டையிலான ஒரு கைப்பிடி இருக்கும். மற்றவேலை செய்பவர்கள் சுத்தியலைப் பயன்படுத்தினலும் தச்சுவேலை செய்பவர்களே அதிகமாக இதனைப் பயன்படுத்துவார்கள். எனவேதான் சுத்தியல் என சொன்னேன். இது என்னுடைய விளக்கம் மட்டுமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"தட்டானுக்குச் சட்டை போட்டால் குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான், அவன் யார் ?"

தட்டானுக்கு (தட்டு+ஆன்) "ச்"அட்டை போட்டால் தச்சன் (தச்சு+அன்)ஆவான். இதில் வரும் "ஆன்", "அன்" என்பன ஒரே பொருளைத் தரும் ஆண்பால் பெயர் விகுதிகளாகும். இனி சுத்தியலில் இரும்பினால் செய்த பகுதியை குட்டைப் பையன் எனலாம். சுத்தியலுக்கு நீளமான மரக்கட்டையிலான ஒரு கைப்பிடி இருக்கும். மற்றவேலை செய்பவர்கள் சுத்தியலைப் பயன்படுத்தினலும் தச்சுவேலை செய்பவர்களே அதிகமாக இதனைப் பயன்படுத்துவார்கள். எனவேதான் சுத்தியல் என சொன்னேன். இது என்னுடைய விளக்கம் மட்டுமே.

உங்கள் விளக்கத்திற்கு நன்றி காவாலி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.