Jump to content

வணங்கா மண்ணும் வாய்ப்பனும்


Recommended Posts

அம்மா பசிக்குது...

அந்த பிஞ்சு குழந்தையின் பசிக்கான அழுகை சாரதாவின் நெஞ்சை பிழிந்தது. இரண்டு நாளாக தானும் சாப்பிடாமல் பிள்ளைக்கு மட்டும் ஒரு நேரம் கஞ்சி கொடுத்த அந்த திருப்தியும் காணாமல் போய் இருந்தது. அவளிடம் ஒன்றும் இல்லை. சமையலுக்கு பயன்படுத்தும் பாத்திரத்தை கூட வித்து சாப்பிட்டாச்சு . இனி என்னதான் செய்வாள் அந்த குழந்தை அருணனின் அழுகையை நிறுத்த...?

சர்வதேச அரசியலையும், மகிந்தவின் இனவாத போரையும், போராளிகளின் மனஉறுதி தளாராத வீரத்தையும் சொல்லி அருணனுக்கு புரியவைக்க முடியாது. காலையில் இருந்து இது எட்டாவது தடவை அவன் பசிக்காக அழுவது. அவன் அழும்போது இவளும்தான் அழுவாள் மனசுக்குள்ளே. பசிக்காக அழும் தனயனின் குரலை கேட்கவா ஆண்டவா, இன்னும் என் உயிரை எடுக்காமல் வைத்திருகிறாய் என்று தன் இயலாமையை நினைத்து, அவள் அழும் அழுகை ஆண்டவனுக்கோ அல்லது அருணனுக்கோ கேட்டிருக்க வாய்ப்பில்லை.

இந்த ஈழப்போர் தொடங்கியதுக்கு இது அவளுக்கு பதினேழாவது இடப்பெயர்வு.. இல்லை இல்லை ..சரியாக கணக்கு வைக்கவும் முடியவில்லை. ஆரம்பத்தில் மாதங்களுக்கு ஒருக்கா இடம்பெயந்து இப்போ மணித்தியாலத்துக்கு ஒருக்கா இடம்பெயர்ந்தால் சாரதாவால் என்ன , யாராலும் தான் கணக்கு வைத்திருக்க முடியாது. எல்லா கோபமும் விஜயன் மேல்தான் அவளுக்கு. தன்னை இந்த நிலையில் விட்டுவிட்டு தான் மட்டும் தனியாக போய்விட்டாரே என்று எண்ணி மனசுக்குள்ளே வைதாள்.அவள் வலைஞர்மடத்தில் இருந்தபோது.. பின்தளபணிக்காக போனவர் தான் பிணமாகதான் வீடு வந்தார்.

அன்று பெரும்பாலான ஆண்களுக்கு இருந்த ஒரே வேலை பின்தளபணிதான். ...இரணைப்பாலையில் எதிரியின் எல்லை கோட்டுக்கு ஐநூறு மீற்றருக்கு பின்னால் விடுதலைப்புலிகளுக்கு பதுங்கு குழி அமைப்பதற்காக மரம் தறித்தல், முகாம்களுக்கு பதுங்குகுழி அமைத்தல் என்று வேலைக்கு போனால் தேங்காய், அரிசி, சீனி என்று புலிகள் ஏதாவது கொடுப்பார்கள். அதை வைத்துதான் அன்றைய நாளை கழிக்க வேண்டும். காலையில் வெறும் பச்சைதண்ணியை குடித்துவிட்டு கடுமையான வேலைக்கு செல்லும் விஜயனை பார்க்கும் போது சாரதாவுக்கு மனசுக்கு கஷ்டமாக இருந்தாலும் வேறு வழியில்லை. அவர்கள் அக்கராயனில் இருந்த போது விஜயனின் தையல் கடையில் இருந்து வந்த பணம் மூன்று வேளைக்கு சாப்பிட்டு, ஒரு வீடும் கட்ட போதுமாகதான் இருந்தது. ஒரு முதலாளி மாதிரி இருந்த விஜயனை இப்படி பார்க்கும் போது, சாரதா விதியை நோவதை தவிர வேறு என்னதான் செய்துவிட முடியும்.

அன்றும் அப்படிதான் பசியால் தூங்கி கொண்டிருந்த சாரதாவை எழுப்ப மனமில்லாமல் விஜயன் போனவன்தான். தறித்த தென்னையின் குருத்தை சாப்பிட்டு பசியாற ஓடியவனை எங்கிருந்தோ வந்த எறிகணை ஒன்று பலி எடுத்தது. அன்றைக்கு இருண்ட சாரதாவின் வாழ்க்கை இன்று அவனையே நோகும் அளவுக்கு கொண்டுவந்து விட்டது.. இந்த யுத்தம்.

அம்மா பசிக்குது...மீண்டும் நினைவுலகத்துக்கு இழுத்தது அந்த குரல்..

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொய் சொல்லி சமாளிச்ச சாரதாவுக்கு இன்று பொய்க்கும் பஞ்சமாகிவிட்டது. காலையில் புலிகளின் குரலில் போன செய்தியை மீட்ட அவள், தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டு மீண்டும் ஒரு பொய்க்கு தயாரானாள்.

"செல்லம் கிட்ட வா எணை..." வாஞ்சையுடன் அழைத்தாள் தன்மகனை..அம்மா எதோ தர போகிறா என்ற சந்தோசத்தில் ஓடி வந்தான் அருணன்.

"என்னம்மா "

"எண்ட அருணன் குட்டி இண்டைக்கு மட்டும் பொறுத்துக்குவானாம் ..அம்மா நாளைக்கு பிள்ளைக்கு விருப்பமான வாய்ப்பன் தருவாவாம்"

"எப்படி அம்மா வாய்ப்பன் கிடைக்கும்"

"வெளிநாட்டிலே இருக்கிற மாமாக்கள், அண்ணாக்கள், அக்காக்கள் எல்லாரும் இங்கே இருக்கிற உங்களை மாதிரி பிள்ளைகளுக்கு நல்ல பலகாரங்கள் சாப்பாடுகள் எல்லாம் செய்து வணங்கா மண் எண்டு ஒரு கப்பல்ல அனுப்பி இருகினமாம். நாளைக்கு வருமாம்"

"அம்மா நாளைக்கு கட்டாயம் வரும் தானே"

அந்த கேள்வியில் அவனது நம்பிக்கையை உணர்ந்த சாரதா "கட்டாயம் வரும் செல்லம்.. அதிலே உங்களுக்கு பிடிச்ச வாய்ப்பனும் வரும்"

அருணனுக்கு வாய்ப்பன் என்றால் உயிர். அவனது பாட்டியிடம் ஒவ்வொரு வாரமமும் சுட சொல்லி சுட சுட வாங்கி சாப்பிடும் அழகே ஒரு தனி அழகு தான். அதை வைத்த கண் விலகாமல் சாரதா பார்த்து ரசிப்பாள். அண்டைக்கு ரசித்தது இண்டைக்குதான் சாரதாவுக்கு உதவியது.

காலையில் நேரத்துடன் எழும்பிய சாரதா ..ஆண்கள் வருவதற்கு முதலே கடற்கரைக்கு சென்று காலை கடன்களை முடித்துவிட்டு திரும்பினாள். பெண்களாக பிறந்தால் நிறைய விடயங்களை இருட்டிலேயே செய்ய வேண்டிய கட்டாய சூழல் அது.திரும்பி வந்தவள் அருணனின் படுக்கையை பார்த்து அதிர்ச்சி அடைந்தாள்.

அருணனை காணவில்லை...

பக்கத்து தரப்பால் கொட்டில் எல்லாம் தேடி களைச்சு போனாள். கொடும் வெறி இராணுவத்தின் எறிகணைகள் வேறு ஆங்காங்கே வெடித்து சிதறிய வண்ணம் இருந்தது. பெத்த மனம் பேதலிச்சு அலைந்தாள்..

"அம்மா ..."

குரல் தேனாக ஒலித்தது.. " அம்மா வணங்கா மண் வந்திட்டுது அம்மா வா அம்மா ஓடி போய் வாய்ப்பன் வாங்குவம்" . தாய்க்கு புரிந்தது. தன்னுடைய நேற்றைய பொய்க்காக, அருணன் கடற்கரை போய் நின்று, நோயாளரை ஏற்றி செல்ல வந்த செஞ்சிலுவை கப்பலை பார்த்துவிட்டுதான் வணங்கா மண் என்று சொல்லுகிறான் என்று. மகனுக்கு புரிய வைத்தாள்

" தம்பி அது இதை விட பெரிய்ய்ய்ய கப்பல் ..இங்கை இருக்குற எல்லாருக்குமே சாப்பாடு கொண்டு வாற கப்பல் இப்படி சின்னன் இல்லை "..

புரிந்தது போல தலையை ஆடினான் அந்த பாலகன்.

இரண்டு நாட்கள் கடலுடன் கழிந்தது அருணனுக்கு ...அந்த பெரிய்ய்ய்யய கப்பல் ...அதில் வரும் தனது ஆசை வாய்ப்பன் ... கனவுகளுடன் கழிந்தது. பசிக்கும் போதும், கண்ணை இருட்டும் போதும் , கண்களை கசக்கி கசக்கி கடலையே விடாமல் பார்த்தான் அருணன். கடவுளுக்கும் அவன் பசிக்குரல் கேட்டிருக்கும் போல.

"நாளை காலை பத்து வயதுக்கு குறைந்த சிறார்களுக்கு, வாய்ப்பனும், தேநீரும் வழங்க இருப்பதால் சிறார்களை மட்டும் ஏழாம் குறுக்கு தெருவிற்கு அண்மையில் ஒன்று கூடுமாறு அன்பாக கேட்டு கொள்கிறோம்" ...தமிழர் புனர்வாழ்வு கழக வாகனத்தின் ஒலி பெருக்கி நிறைய தாய்மாரின் வயிற்றில் பாலை வார்த்தது.

(அன்றைய காலகட்டத்தில் குடும்ப அட்டை மூலம் சிறார்களுக்கான உணவுகளை பெற்றோர்கள் பெற்றுகொள்வது நிறுத்தப்பட்டிருந்தது. குடும்ப அட்டையில் இறுதி காலங்களில் இறந்த சிறார்களின் பெயர் விபரங்கள் நீக்கபடவில்லை. சில பெற்றோர்கள் வறுமை காரணமாக சிறார்களின் உணவை பெற்று வேறு இடங்களில் விற்ற சம்பவங்களும் நடந்திருந்தன.)

post-7556-127153218058_thumb.jpg

அதிகாலை நாலரை மணிக்கே சிறார்கள் வரிசையாக புனர்வாழ்வுகழக வாகனத்துக்கு காத்திருந்தார்கள். அருணனும் அவர்களில் ஒருவனாக ஒரு கையில் அவனது வீட்டில் இருந்த ஒரே தேநீர் கோப்பையுடன். தூக்கம் கண்ணை சுழட்டினாலும், பசியும் வாய்ப்பன் கனவும் அவனை தூங்கவிடவில்லை.

காலை எட்டரை மணிக்கு வந்த வாகனம் ஒவ்வொரு சிறாராக வாய்பனும் தேநீரும் கொடுத்து கொண்டிருந்தார்கள். அந்த சுடு தேநீரை அவர்கள் விடுகேன்று குடிக்கும் விதத்தில் தெரிந்தது ..அவர்கள் பசி. அருணனின் முறையும் வந்தது. அவன் கனவு வாய்ப்பன் இப்போ அவன் கையில்.. கோப்பையில் தேநீரை வாங்கிய அவன்..

"மாமா ...அம்மாவும் வீட்ல இரண்டு நாளாக சாப்பிடவில்லை ..இன்னொரு வாய்ப்பன் தருவீங்களா ..??"

எந்த கல் நெஞ்சகாரனையும் உருக்கும் அந்த கேள்வி.. அந்த புனர்வாழ்வு தொண்டனை உருக்கியதில் வியப்பு ஏதுமில்லை. இன்னொரு வாய்ப்பனை அந்த பிஞ்சு கையில் கொடுத்தான். அதை அம்மாவுக்காக தன்னுடைய கிழிந்த காற்சட்டையின் பொக்கற்றுக்குள் கவனமாக வைத்த அருணன், சந்தோசமாக தன்னுடைய வாய்ப்பனை வாயில் வைத்த போதுதான் ..அது நடந்தது.

காலையில் இருந்து பறந்த உளவு விமானத்தின்(வண்டு) குறி (Fix) கேட்டு, சிங்கள இனவெறி இராணுவம் ஏவிய நாற்பதுக்கும் மேற்பட்ட பல்குழல் எறிகணைகள் அந்த பாலகர் வரிசையை தாக்கியது. ஒரு கையில் கோப்பையுடன் பசி ஈடேறும் கனவுக்காக காத்திருந்த குழந்தைகள் சிதறிபோயினர்.

சத்தம் கேட்டு வாய்ப்பன் கொடுக்கும் இடம் நோக்கி பெற்றவர்கள் விழுந்தடிச்சு ஓடினர். சாரதாவும் ஓடினாள்.

அங்கே..சிதறிக்கிடந்த பிஞ்சுகளின் உடற்பாகங்களுக்கும், பாதி தின்ற வாய்ப்பன்களுக்கும், கொட்டிகிடந்த தேநீர் கோப்பைகளுக்கும் நடுவில் ...

பாதி வாய்ப்பன் வாயினுள்ளும் மீதி கையிலும் கெட்டியாக பிடித்திருந்த.. கருகி போய் இருந்த அருணனின் உடலை கண்டு பிடிக்க, அவளுக்கு வெகு நேரம் பிடிக்கவில்லை.

அவன் தாய்க்கான அந்த வாய்ப்பன் மட்டும் கருகாமல்....

குறிப்பு : 2009 ஆம் ஆண்டு வைகாசி மாதம் முதல் வாரமளவில் முள்ளிவாய்க்கால் ஏழாம் குறுக்கு தெருவுக்கு அருகில் உணவுக்காக நின்ற சிறுவர்கள் மீது சிங்கள இராணுவம் நாடாத்திய பல்குழல் எறிகணை தாக்குதலில் கொல்லபட்ட பன்னிரண்டுக்கும் மேற்பட்ட அந்த பச்சிளம் பாலகர்களுக்கு இந்த கதை சமர்ப்பணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த கால் நினைவுகளை ...மீண்டும் கீறி ரத்தம்வர வைக்கிறது கதை .....பலருடைய கதை இப்படியாக் தான் இருந்ததாம். பகிர்வுக்கு நன்றி .....

Link to comment
Share on other sites

கடந்த கால் நினைவுகளை ...மீண்டும் கீறி ரத்தம்வர வைக்கிறது கதை .....பலருடைய கதை இப்படியாக் தான் இருந்ததாம். பகிர்வுக்கு நன்றி .....

நன்றி நிலாமதி அக்கா.. நேரம் கிடைக்கும் போது நிச்சயமாக சில விடயங்களை பகிர்வேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2009 ஆம் ஆண்டு வைகாசி மாதம் முதல் வாரமளவில் முள்ளிவாய்க்கால் ஏழாம் குறுக்கு தெருவுக்கு அருகில் உணவுக்காக நின்ற சிறுவர்கள் மீது சிங்கள இராணுவம் நாடாத்திய பல்குழல் எறிகணை தாக்குதலில் கொல்லபட்ட பன்னிரண்டுக்கும் மேற்பட்ட அந்த பச்சிளம் பாலகர்களுக்கு இந்த கதை சமர்ப்பணம்.

candle_flame_2.jpg

இறந்த குழந்தைகளுக்கு கண்ணீர் அஞ்சலிகள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அங்கு அல்லல் படும் உறவுகளுக்காக புலம்பெயர் மக்களால் இதய சுத்தியுடன் மேற்கொள்ளபட்ட ஒரு நடவடிக்கை. அதனை கூட பேரீச்சம் பழத்துக்கு போகப்போகும் வணங்காமண் கப்பல் என்று கூறி இங்கு நக்கல் செய்து கட்டுரைகள் எழுதி இருந்தார்கள். :(:(:( பசிக்ஷும் வேதனையும் தனக்கு வந்தால்தான் தெரியும் போல இருக்கி்றது. :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அங்கு அல்லல் படும் உறவுகளுக்காக புலம்பெயர் மக்களால் இதய சுத்தியுடன் மேற்கொள்ளபட்ட ஒரு நடவடிக்கை. அதனை கூட பேரீச்சம் பழத்துக்கு போகப்போகும் வணங்காமண் கப்பல் என்று கூறி இங்கு நக்கல் செய்து கட்டுரைகள் எழுதி இருந்தார்கள். :(:(:( பசிக்ஷும் வேதனையும் தனக்கு வந்தால்தான் தெரியும் போல இருக்கி்றது. :(

முன்பு வணங்கா மண்ணை பேரீச்சம் பழத்துக்கு போகும் என்று எழுதவில்லை..ஆனால் அன்று அப்படி எழுதியதில் தவறில்லை என்றுதான் சொல்லுவேன்.. தலையங்கத்தையே பாருங்கள்.."வாய்பனுக்கு" சிறுவன் அழ நாங்கள் இங்கே அனுப்பியது "வணங்கா மண்"...புணுகுப் புண்ணிற்கு பூதக்கண்ணாடி தேவையில்லை..எங்களுக்கு கொஞ்சமாவது இரக்கம் இருந்தால் அந்த வணங்கா மண்ணுடன் ஓய்ந்திருக்க/ ஒழிந்திருக்க மாட்டோம்..இன்னும் நூறு ஆயிரம் "உதவும் மண்" , "உயிர் காக்கும் மண் ", அனுப்பியிருப்போம்..தனியே அங்கொன்றினாக நீளும் நேசக்கரங்களை மட்டும் நம்பியிருக்க விட மாட்டோம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முன்பு வணங்கா மண்ணை பேரீச்சம் பழத்துக்கு போகும் என்று எழுதவில்லை..ஆனால் அன்று அப்படி எழுதியதில் தவறில்லை என்றுதான் சொல்லுவேன்.. தலையங்கத்தையே பாருங்கள்.."வாய்பனுக்கு" சிறுவன் அழ நாங்கள் இங்கே அனுப்பியது "வணங்கா மண்"...புணுகுப் புண்ணிற்கு பூதக்கண்ணாடி தேவையில்லை..எங்களுக்கு கொஞ்சமாவது இரக்கம் இருந்தால் அந்த வணங்கா மண்ணுடன் ஓய்ந்திருக்க/ ஒழிந்திருக்க மாட்டோம்..இன்னும் நூறு ஆயிரம் "உதவும் மண்" , "உயிர் காக்கும் மண் ", அனுப்பியிருப்போம்..தனியே அங்கொன்றினாக நீளும் நேசக்கரங்களை மட்டும் நம்பியிருக்க விட மாட்டோம்..

எடுத்த முதல் முயற்சியையே போகாது, பேரீச்சம்பழத்துக்கு போக போகுது, வீணாபோகபோகுது, கடலில கொட்ட போறாங்கள், சுத்துறாங்கள், ஏமாத்துறாங்கள் என்று ஆயிரம் தடை கல்லுகளை போட்டால் அடுத்து எப்படி போகும், உதவிகள் செய்யாவிடாலும் உபத்திரங்கள் செய்யாமல் இருக்க பழகி கொள்ள வேணும், எல்லாம் தம்மூலம்தான் போக வேணும், தம்முடைய பேர்தான் வரவேண்டும், தாம்தான் செய்ய வேண்டும் என்றால் எதுவும் நடவாது, தம்மூலம்தான் போகவேண்டும் என ஆசை பட்டால் மட்டும் போதாது அதற்குரிய தகுதியும்,சமூகத்தில் நம்பிக்கைக்கு உரியவர்களாக நடந்து கொள்ள வேண்டும். :lol:

Link to comment
Share on other sites

தொடர்ந்து எழுதுங்கள் அபிராம்...

அந்த பிஞ்சு குழந்தைகளுக்கு எம் கண்ணீர் அஞ்சலிகள்....! :lol:

Link to comment
Share on other sites

வணங்கா மண் கப்பலும் அதிலை போன சாமான்களும் இப்ப எங்கை?? கப்பலை கல்கத்தாவிலை உடைச்சு உண்மையாகவே பேரிச்சம் பழத்திற்கு( பழைய இரும்பிற்கு ) வித்தாச்சாம் ஆனால் அதிலை போன சாமான்கள் இன்னமும் சனத்திற்கு கொடுக்கப்படவில்லை. பணம் சேர்தவர்கள் எல்லாரும் தலைமறைவு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எடுத்த முதல் முயற்சியையே போகாது, பேரீச்சம்பழத்துக்கு போக போகுது, வீணாபோகபோகுது, கடலில கொட்ட போறாங்கள், சுத்துறாங்கள், ஏமாத்துறாங்கள் என்று ஆயிரம் தடை கல்லுகளை போட்டால் அடுத்து எப்படி போகும், உதவிகள் செய்யாவிடாலும் உபத்திரங்கள் செய்யாமல் இருக்க பழகி கொள்ள வேணும், எல்லாம் தம்மூலம்தான் போக வேணும், தம்முடைய பேர்தான் வரவேண்டும், தாம்தான் செய்ய வேண்டும் என்றால் எதுவும் நடவாது, தம்மூலம்தான் போகவேண்டும் என ஆசை பட்டால் மட்டும் போதாது அதற்குரிய தகுதியும்,சமூகத்தில் நம்பிக்கைக்கு உரியவர்களாக நடந்து கொள்ள வேண்டும். :lol:

உண்மை தான். என்னை நேச கரத்தில் இருந்து ஒதுக்கிய விடயம். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அபிராம் உண்மையாக நடந்த நிகழ்வை வைத்து கதையாக எழுதி உள்ளீர்கள் ஆனால் ஏன் அதில் வணங்கா மண்ணை சேர்த்தீர்கள்...ஆனால் கதையாக எழுதிய விதம் யதார்த்தமாக உள்ளது.

Link to comment
Share on other sites

உங்கள் உளமார்ந்த கருத்துகளை பதிந்த அனைவருக்கும் நன்றி.

அபிராம் உண்மையாக நடந்த நிகழ்வை வைத்து கதையாக எழுதி உள்ளீர்கள் ஆனால் ஏன் அதில் வணங்கா மண்ணை சேர்த்தீர்கள்...ஆனால் கதையாக எழுதிய விதம் யதார்த்தமாக உள்ளது.

உங்கள் கருத்துக்கு நன்றி ரதி. நான் வணங்கா மண் என்ற பதத்தை விவாதத்துக்காக உள்ளடக்கவில்லை. உண்மையிலேயே அன்றைய கால கட்டத்தில் எங்கள் மக்களோடு பின்னி பிணைந்த சொல் அது. வணங்கா மண் கடைசி வரை அங்கே காத்திருந்த மக்களுக்காக வராமல் விட்டது வேதனையை தந்தாலும், வயிற்று பசியை போக்க வந்த கனவு உணவாக (Virtual Food ) எம்மக்களை ஆற்றுப்படுத்திய பணியை அது செய்திருந்தது. உண்மையிலையே இனிமேல் சாப்பாடே கிடைக்காது என்பதிலும் பார்க்க, எமக்காக எம் உறவுகள் அனுப்பிய உணவு வருகிறது என்பது எங்களை எவ்வளவு காலமும் பட்டினி கிடக்கும் மன உறுதியை தந்தது என்பது மறுக்க முடியாத உண்மை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்து எழுத முடியவில்லை இக்கதைக்கு ......இப்படியான நிஜகதைகளை வெற்று மொழிகளில் எழுதினாலும் நல்லம்

Link to comment
Share on other sites

கருத்து எழுத முடியவில்லை இக்கதைக்கு ......இப்படியான நிஜகதைகளை வெற்று மொழிகளில் எழுதினாலும் நல்லம்

நன்றி அண்ணா உங்கள் கருத்துக்கு. இதனை மொழிபெயர்த்து வேற்று மொழிகளில் எழுதினால், எமக்களின் வேதனயும் வலியும் மற்றவர்களுக்கும் புரியும். யாரவது நல்ல உள்ளங்கள் அதனை செய்தால் நான் பெரு மகிழ்ச்சி அடைவேன்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

இந்தக்கதையை இப்பதான் படிக்கிறேன்.. என்ன எழுதுவது என்று தெரியவில்லை... இந்தப்பிஞ்சு குழந்தைகளுக்கு கண்ணீர் அஞ்சலிகள்... தொடர்ந்து எழுதுங்கள் அபிராம் நன்றி

Link to comment
Share on other sites

இந்தக்கதையை இப்பதான் படிக்கிறேன்.. என்ன எழுதுவது என்று தெரியவில்லை... இந்தப்பிஞ்சு குழந்தைகளுக்கு கண்ணீர் அஞ்சலிகள்... தொடர்ந்து எழுதுங்கள் அபிராம் நன்றி

சுஜி உங்கள் கருத்துக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்பிக்கை என்பது ஈழத் தமிழ்மக்களின் பெரும் பலம்.

அதைக் குலைப்பதற்குச் சிங்கள இனவெறியாளர்களுக்கு வேறு வழி கிடைக்கவில்லையா?.

உள்ளத்தை உருக்கும் சம்பவத்தை எழுதிய அபிராமிற்கு நன்றிகள்.

வாத்தியார்

...............

Link to comment
Share on other sites

நம்பிக்கை என்பது ஈழத் தமிழ்மக்களின் பெரும் பலம்.

அதைக் குலைப்பதற்குச் சிங்கள இனவெறியாளர்களுக்கு வேறு வழி கிடைக்கவில்லையா?.

உள்ளத்தை உருக்கும் சம்பவத்தை எழுதிய அபிராமிற்கு நன்றிகள்.

வாத்தியார்

...............

நன்றி வாத்தியார் உங்கள் கருத்துக்கு. அந்த நம்பிக்கையில் இன்னும் எம் இனம் விடிவை நோக்கி நடைபோடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றுதான் படித்தேன். புத்தன் சொன்னது போல இக்கதை வேறு மொழிகள் வந்தால் நல்லது.

மே 18க்குப் பிறகு புலம் பெயர்ந்த நாடுகளில் பலர் மன அழுத்தத்துடன் வாழ்கிறார்கள். நினைத்துப்பார்க்க முடியாத அழிவுகள், சம்பவங்கள் நடந்திருக்கின்றன. மறக்க முடியாமல் இடையிடையே வந்து போகும் மன அழுத்தங்கள். திரைப்படம் , விளையாட்டு என வேறு விடயங்களில் ஈடுபட்டு மறந்து வாழ்கிறோம். ஆனால்

நடந்த சம்பவங்களைப் பற்றிக் கதைத்தாலும் ,வாசித்தாலும் அன்று இரவு மீண்டும் கண் முன்னே சோக நினைவுகள் வந்து கொண்டே இருக்கும்.இந்தத்தலைமுறையில் உள்ள பெரும்பாலான ஈழத்தமிழன் சாகும்வரை, அவனது(அவளது) இதயத்தின் ஒரு மூலையில் இந்த வலி வந்து கொண்டிருக்கும்.

எனினும் எங்கட அவலங்களை ஈழத்தமிழர் அல்லாதவர்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். சாந்தி ரமேஸ் ,சாத்திரியின் நேசக்கரங்களினூடாக உதவி செய்யுங்கள் அல்லது வேறு அமைப்பினூடாக( அவுஸ்திரெலியாவில் பச்வேக்)உதவி செய்யுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மே 18க்குப் பிறகு புலம் பெயர்ந்த நாடுகளில் பலர் மன அழுத்தத்துடன் வாழ்கிறார்கள். நினைத்துப்பார்க்க முடியாத அழிவுகள், சம்பவங்கள் நடந்திருக்கின்றன. மறக்க முடியாமல் இடையிடையே வந்து போகும் மன அழுத்தங்கள். திரைப்படம் , விளையாட்டு என வேறு விடயங்களில் ஈடுபட்டு மறந்து வாழ்கிறோம். ஆனால்

நடந்த சம்பவங்களைப் பற்றிக் கதைத்தாலும் ,வாசித்தாலும் அன்று இரவு மீண்டும் கண் முன்னே சோக நினைவுகள் வந்து கொண்டே இருக்கும்.இந்தத்தலைமுறையில் உள்ள பெரும்பாலான ஈழத்தமிழன் சாகும்வரை, அவனது(அவளது) இதயத்தின் ஒரு மூலையில் இந்த வலி வந்து கொண்டிருக்கும்.

கனமான நிஜம். :o:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் அபிராம்

இந்த தலைப்புக்கு எழுத என் மனம் இடம்தரவில்லை

அம்மாவின் பாலும் வாய்ப்பனும் என்று எழுதமுடியுமா ..?

அதுபோல்தான் இத்தலையங்கமும் எனக்கு படுகிறது.

இந்தத்தலைமுறையில் உள்ள பெரும்பாலான ஈழத்தமிழன் சாகும்வரை, அவனது(அவளது) இதயத்தின் ஒரு மூலையில் இந்த வலி வந்து கொண்டிருக்கும். கனமான நிஜம். :o:D

உண்மைதான் சுவி...

அதைவிட கவலையானது இன்று எம்மவர் போடும் கூத்துக்கள்...

உண்மை சுடும்... ஆனால் அதை உணர்ந்து கொண்டு மாற்றத்தை உண்டு பண்ணினால்......

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

கருத்துகளை பதிந்த அனைவருக்கும் நன்றிகள். தமிழனின் வலி தாயகம் காணும் வரை ஓயாது.

Link to comment
Share on other sites

  • 1 year later...

இன்றைய நாளில் இந்த சம்பவம் இடம்பெற்று மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன. என் மனதில் ஆறாத மன வலிகளை ஏற்படுத்திய சம்பவங்களில் இதுவும் ஒன்று.இன்றும் அந்த வலிகள் மனதிலே ஒலித்த வண்ணம் தான் உள்ளன.

இன்றைய நாளில் அவர்களை நினைவு கூறும்விதமாக இந்த இக்கருத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன் நான் எழுதிய திரியில் பதிகிறேன்.

Link to comment
Share on other sites

  • 1 year later...

இன்றைக்கு நான்கு வருடங்களுக்கு முள்ளிவாய்க்கால் கரையில்  நடந்த ஒரு துயர சம்பவத்தை மீண்டும் ஒரு முறை நினைத்து பார்பதற்காக படித்தேன். இன்னுமா எங்கள் மக்களுக்கு விடிவு கிடைக்கவில்லை என்ற ஏக்கம் மட்டும் தான் எஞ்சி நிற்கிறது.

 

ஒற்றுமையாக எல்லோருமாக போராடி தாயக விடுதலையை நாங்கள் விரைவில் பெறுவோம் என்று இந்த மக்கள் மீது மாவீரர்கள் மீது உறுதி பூணுவோம். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

... பாதி வாய்ப்பன் வாயினுள்ளும் மீதி கையிலும் கெட்டியாக பிடித்திருந்த.. கருகி போய் இருந்த அருணனின் உடலை கண்டு பிடிக்க, அவளுக்கு வெகு நேரம் பிடிக்கவில்லை.

அவன் தாய்க்கான அந்த வாய்ப்பன் மட்டும் கருகாமல்....

குறிப்பு : 2009 ஆம் ஆண்டு வைகாசி மாதம் முதல் வாரமளவில் முள்ளிவாய்க்கால் ஏழாம் குறுக்கு தெருவுக்கு அருகில் உணவுக்காக நின்ற சிறுவர்கள் மீது சிங்கள இராணுவம் நாடாத்திய பல்குழல் எறிகணை தாக்குதலில் கொல்லபட்ட பன்னிரண்டுக்கும் மேற்பட்ட அந்த பச்சிளம் பாலகர்களுக்கு இந்த கதை சமர்ப்பணம்.

 

மன்னிக்க வேண்டும்,இன்றுதான் இத்திரியை வாசித்தேன்.

ஆழ்ந்த அஞ்சலிகள்.

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழக தேர்தல் நிலவரம் – தந்தி டிவி கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருப்பது என்ன? திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது இந்திய நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 5 தொகுதிகளில் கடுமையான இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தொகுதிகளில் பாஜக அதிமுக திமுக இடையே கடுமையான போட்டி நிலவும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் நாளை மறுநாள்  தேர்தல் நடக்க உள்ளது. திமுக அதிமுக பாஜக நாம் தமிழர் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழ்நாட்டில் 4 முனை போட்டி தீவிரமாக நிகழ்ந்து வருகிறது. இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக 21 தொகுதிகளும் அதன் கூட்டணி கட்சிகள் மற்ற தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. தேர்தல் தொடர்பாக வரிசையாககருத்துக்கணிப்புகள்   வெளியாகி வருகின்றன. அந்த வகையில்  தேர்தல் தொடர்பாக தந்தி டிவி கருத்துக்கணிப்பை மேற்கொண்டுள்ளது மொத்தமாக திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது : வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி உச்சக்கட்ட  ஆகிய இடங்களில் இழுபறி நீடிக்கும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் ஆகிய தொகுதிகளில் திமுக – பாஜக இடையே இழுபறி நீடிக்கும். கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் அதிமுக – திமுக இடையே இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வாக்கு சதவிகிதம்: திமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 42 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். அதிமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 34 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். பாஜகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 18 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். நாம் தமிழருக்கு வாக்கு அளிப்போம் என்று 5 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர் : புதுச்சேரியில் பாஜகவிற்கான வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.   https://akkinikkunchu.com/?p=274079
    • 50 நாடுகளுக்கு இலவச வீசா – உல்லாசப் பயணிகளை கவர இலங்கை திட்டம் April 18, 2024   இலங்கையின் சுற்றுலாத் துறையை மேலும் வலுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அண்மைக்காலமாக இலங்கை வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் இருந்து அதிகளவான சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகின்றனர். குறிப்பாக ரஷ்யா, ஜேர்மன், பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை தருவதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை புதிய விசா முறையொன்றை நடைமுறைப்படுத்தல் மற்றும் புதிய இணைய வழிமுறையை செயற்படுத்தும் பணிகள் நேற்று முதல் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய விசா நடைமுறை, அதற்கான கட்டணங்கள், பூர்த்திசெய்யப்பட வேண்டிய தேவைப்பாடுகள் மற்றும் இலங்கையில் தங்கியிருக்கக்கூடிய காலப்பகுதிகள் என்பன கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டது.   https://www.ilakku.org/50-நாடுகளுக்கு-இலவச-வீசா-உல/  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.