Jump to content

..திரு நிறைச்செல்வி மங்கையர்க்கரசி ..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அந்த வீடு ....உறவினர்களின் கூட்டமாய் நிறைந்து காணப்பட்டது .....மாடியிலும் நடை பாதை ..வழிகளிலும் ஓரங்களிலும் மங்கல பொருட்களால் நிறைந்து இருந்தது. ..மதிமாறன் என்னும் மாறன் எப்போது உறங்கினான் என்று, அவனுக்கே தெரியாது.

விடிந்தால் திருமணம் . உறவுகளும் ..பெரியவர்களுமாய் வீடு, நிறைந்து இருக்கிறது ....தன் தங்கைகளை எண்ணும் போது அவனுக்கு பெருமிதமாய் இருக்கிறது...தாயாய் தந்தையாய் வளர்த்தவன் அவன் அல்லவா.... அவனது குடும்பமும் ....மற்றவர்களை போல தாய் தந்தை ஆசைக்கு ஒரு தங்கை என்று அமைதியாக் தான் போய் கொண்டு இருந்தது. மூன்றாவதாய் ஒரு தங்கை வரு மட்டும்.

அவள் பிறந்த வீட்டிலேயே தாயார் ...காலமாகி விட்டார் . வைத்தியர்களின் கவன மின்மையோ .. தங்கை சுஜிதாவின் கெட்ட பலனோ ...மாறனுக்கு ஆறு வயது ...மங்கை எனும் மங்கையர்க்கரசிக்கு மூன்று வயது.....அம்மாவின் மரண வீட்டிற்கு ....இவனை ...சமய சடங்குகள் முடித்து கொள்ளி வைக்க அழைத்து சென்றதாக் ஞாபகம்.. சரியாக் இல்லை...பின்பு கொஞ்சக்காலம் அம்மம்மாவுடன் வாழ்ந்தார்கள்... காலப்போக்கில் அவர்களும் காலமாகி விட ....பெரியப்பாவின் வீடில் அவரது இருகுழந்தைகளுடன் இவர்களும் தஞ்சமானார்கள் .அப்பா பெரிய பட்டணத்தில் வேலைக்கு போனவர்தான்..ஆரம்பத்தில் பெரியப்பாவுக்கு செலவுக்கு பணம் அனுப்புவார்..பின்பு அதுவும் நின்று விட்டது... பெரியப்பா தான் இவர்களை தாங்கினார்..அப்பா வேறு திருமணம் செய்தார் என்று ஊரவர்கள் சொன்னார்கள். சிலர் வெளி நாடு போய் விடார் என்றும் சொன்னார்கள். ஆனால் பெரியப்பா தான் இவர்களுக்கு எல்லாமும் ஆனார்.

சின்னவள் சுஜி .........வளர்ந்து பாலர் பாடசாலைக்கு போனாள். .காலயில் வீடு பெருக்கி கொண்டு நிற்பவர்கள் இவள் முகத்தில் விழித்தால் அன்று ...விளங்காது என்று இவளுக்கு முன்னாலேயே பேசுவார்கள் . அண்ணாவாக அவனும் அக்காவாக மங்கையும் பொறுத்து கொள்வார்கள்.பெரியம்மாவும் அன்பானவர் தான் ஆனால் தன் பிள்ளைகளில் விசேட கவனம் செலுத்துவது போல இருக்கும்.............இவனுக்கு பதினெட்டு வயதான் போது ....மேற்படிப்புக்காக் பட்டணத்தில் சேர்த்து விட்டார்கள. .விடுதியில் அவன் வாழ்வு தொடர்ந்தது.......விடுமுறைக்கு வந்தால் பெரியவள் கதை கதையாக் சொல்வாள். இவன் விடுதிக்கு போக முன் பெரியவள் பெரிய பெண்ணாகி விட்டாள் .... அன்று அழகிய மணமகள் கோலத்தில் பார்த்தவன் ..இவளை ஒருவன் கையில் கொடுக்கும் வரை நான் பொறுப்புடன் இருக்க வேண்டும் நன்றாக் படிக்க வேண்டும் . உயர் உத்தியோகம் பார்க்க வேண்டும் என மனக்கோட்டைகளைக் கட்டி ஆசைகளை வளர்த்துக் கொண்டான்... அதற்கேற்ப வாழ்ந்தும் காட்டினான் ....

இன்று மெக்கானிக்கல் இஞ்சினியரிங் ...படிப்பு முடித்து அவன் ஒரு தொலைத்தொடர்பு கம்பனிக்கு உயர் அதிகாரியாக் இருக்கிறான்...........மங்கை ஊரில் பட்ட படிப்பு முடித்து உள்ள பள்ளியில் .ஆசிரியையாக் இருக்கிறாள். சின்னவள் பட்டணத்தில் மருத்துவ படிப்பில் இரண்டாம் ஆண்டு.மூத்தவள் மங்கையை பெண் கேட்டு வந்தனர்...பெரியம்மாவின் உறவுக்காரர்கள்.

பெண் பிடித்துப் போகவே நிச்சயதார்த்தம் முடிந்து நாளை திருமணம்..நடக்க இருக்கிறது ....இதற்கிடையில் அவனுக்கும் பெண் கொடுக்க தயாராக இருந்தனர் ஊரவர்கள். ஆனால் தங்கைகளைக்காட்டி அவன் மறுத்து விட்டான் .பெரியப்பா மட்டும் இல்லையென்றால்.....இவர்கள் வாழ்வு....

இந்தக்க்ளையான நேரத்திலும் பெரியம்ம்மா இவனை எழுப்பினார் மேலும் ஆக வேண்டிய வேலைகளை கவனிக்க் சொல்லி.. நண்பர்கள் இரவிரவாக் சோடனைகளில் ஈடு பட்டு இருந்தனர்.......அவர்களை போய் காலைக்கடன் முடித்து உடுத்தி தயாராக வரும்படி அனுப்பி விட்டான் . எல்லாம் நல்ல படியாய் அமைந்துள்ளதா என் மேலோட்டம் விட்டான் ..........

தம்பி..... நாதஸ்வரகாரர்கள் வந்து விட்டார்கள் ....இன்னும் ரெடியாக வில்லை யோ ?என்று பெரியப்பா வந்தார்............குளியலறையில் ....சென்று தாளிட்டு கொண்டவன்....யாரிந்த தேவதை ....யார் இந்த தேவதை ....என்ற பாடல் ஒ;இ பெருக்கியில் ஒலித்துக் கொண்டிருந்த்து . கேட்டதும்..........தனக்கான ..தேவதை எங்கு பிறந்த இருப்பாளோ என் ...மனம் துள்ளியது.......எல்லாம் ஒருபடியாய் சுபமே நடந்தேறியது.....தாலிகட்டியபின் பெரியப்பாவின் காலில் விழுந்து வணங்கும் போது.............அருகில் நின்ற இவனின் காலையும் தொட்டு வணங்கினாள். ...........புல்லரித்து போனான்.....

திரு நிறைச்செல்வி ....மங்கையர்க்கரசி ....திருமணம் கொண்டாள் இனிதாக ...

நாட்கள் வாரங்களாகி ..இரண்டு வாரங்கள் விடுப்பில் வந்தவன்,விடுமுறை முடிவதை உணர்ந்தவன்....தன்க்கான் பயணத்துக்கு டிக்கட் ஒழுங்கு செய்ய புறப்பட்டான். மனசு

இலேசாக் கனத்தது ...பூ மழை தூவி வசந்தங்கள் வாழ்த்த,

என் தங்கையில் நெற்றியில் மங்கல் குங்கும சிரித்தது......என் இனியவளே

எங்கிருந்தாலும் வாழ்க.

ஒரு பக்க கதைகான் ஒரு சிறு முயற்சி....எப்படி இருகிறது?

இதில் வரும் பெயர்ககளும் ...கதையும் என் கற்பனையே ..

?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதையக்கா

ஆனால் என் தம்பியின் வாழ்க்கைபோல் உள்ளது

பெயர்களைக்கற்பனை என்று சொன்னால் யாழ். கள உறவுகளின் பெயர்களை தவிர்த்தல் நன்று அல்லவா...

தொடரட்டும் தங்கள் எழுத்துக்கள்....

Link to comment
Share on other sites

நன்றி சகோதரி நிலாம்தி அவர்களுக்கு

தாங்கள் ஏன் தமிழ் சினிமாவிற்கு பாட்டு எழுத கூடாது....? இங்கும் பாட்டு எழுதுகிறார்கள் ... அடிறா அடிறா நாக்க முக்க நாக்கமுக்க... இது என்ன மொழியென்று யாருக்கும் தெரிய்வதில்லை... கவிஞர் தாமரை தான் என் பேவரிட்... தாங்களும் முயற்சி செய்தால் அதைபோல வரலாம் சகோதரி...

Link to comment
Share on other sites

நிலா அக்கா நீங்கள் அவ்வப்போது எழுதும் விடயங்களை படிப்பேன்.மிகவும் நன்றி உங்கள் பணிக்கு.

ஒரு சகோதரன் இந்தக் காலத்தில் அப்பாவாக,அம்மாவாக இனிய சகோதரனாக,சகோதரியாக இப்படி பல பாத்திரங்களை ஏற்று மற்றச் சகோதரங்களை வளி நடத்தி செல்வது என்பது ரொம்ப பெருமையான விடயம்.அந்த சகோதரனுக்கு அவர்கள் காலம் முழவதும் நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டும்.அந்த சகோதரனும் அவர் வளிநடத்தலில் முன்னேற்றப் பாததையில் சென்று கொண்டு இருக்கும் சகோதரிகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணன் ஒரு கோயில் என்றீயள்...ஒரு பக்க கதை நல்லாத்தான் இருக்கு

Link to comment
Share on other sites

இப்படி ஒரு அண்ணா எல்லாருக்கும் அமையாது...நல்ல கதை அக்கா தொடர்ந்து எழுதுங்கள்...நான் நினைத்தேன் இது எங்கட சுஜியின் கதையாக்கும் என :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுஜித்தா..சுஜி...... என்று ஒருவர்தானா?...ஆயிரம் சுஜிக்கள் இருக்கும். ஒரு நல்ல அண்ணாவின் கற்பனை.

புரட்சி அண்ணா மயிலைக் கண்டு வான் கோழி ஆடலாமா? இது வெறும் இரவல் தான்......

Link to comment
Share on other sites

வணக்கம் நிலாமதி,

குடும்ப உறவுகள், அன்பு, கூட்டுக்குடும்பம் போன்ற வாழ்வியல் முறைமைகள்

தொலைந்துவரும் இன்றைய அவசரஉலகில், அவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கும்

சம்பவங்களின் தொகுப்பாக பெரும்பான்மையான உங்கள் கதைகள் அமைவது பாராட்டுதற்குரியது.

தொடரட்டும் உங்கள் எழுத்துக்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதைக்கு கருத்து சொன்ன விசு.....புரட்சி...யாயினி....புத்தன்...

..ரதி.....அம்பலத்தார் யாவுக்கும் என் நன்றிகள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.