Jump to content

மே ( வலி சுமந்த மாதம் ) 18 - போர்க்குற்ற நாள் !


Recommended Posts

ஏப் 21, 2010 மணி தமிழீழம்

மே 18 - போர்க்குற்ற நாள்

தமிழீழ மக்கள் அவை, அனைத்துலகச் செயலகம் மே 18 நாளை போர்க்குற்ற நாளாக பிரகடனப்படுத்துகிறது.

அன்பார்ந்த தமிழ் ௨றவுகளே,

மே 18... சிங்கள தேசம் எங்கள் மக்கள் மீது நிகழ்த்திய கொடூர யுத்தத்தின் இறுதி நாள்... கொத்துக் குண்டுகளும், எங்கள் மக்கள் மீது கொடூர நச்சுக் குண்டுகளும் பரீட்சித்துப் பார்த்த நாள்... எங்கள் மக்கள் பல்லாயிரக்கணக்கில் உயிரோடு புதைக்கப்பட்ட நாள்...

மே 18... எங்கள் நெஞ்சங்களை ரணமாக்கிய நாள்... பூக்களும், பிஞ்சுகளும், காய்களும், பழங்களுமாய் பூத்துக் குலுங்கிய எங்கள் தேசத்து ஆலம் விருட்சம் வேரோடு சாய்க்கப்பட்ட கரி நாள்... உயிர் காக்க, உடல் தெறிக்க ஓடிய எம் பாசத்திற்குரிய மக்கள் சிங்களம் வீசிய குண்டுகளுக்கு வீழ்ந்து கருகிய நாள்...

மே 18... மனிதமே வெட்கித் தலைகுனிய மானிட தர்மம் நிலை குலைய விடுதலை வேண்டிய தமிழர்கள் வீழ்ந்து சாய்ந்த நாள்... மிருகவதைச் சட்டம் போட்டு விலங்குகளுக்கும் காவலர்களாய் நின்ற, அகில உலகமும் வேடிக்கை பார்க்க, எமது மக்கள் சிங்களத்தால் வேட்டை ஆடப்பட்டு குருதி சிந்திய நாள்...

மே 18... நாகரீக உலகில், நமக்கு மட்டும் சுதந்திரம் மறுக்கப்பட்டது... வாழும் மனிதர்கள் போல் வாழ விரும்பிய ஈழத் தமிழர்கள் இழி நிலைக்குள் தள்ளப்பட்ட கொடூர நாள்... விடுதலை எமக்கு மீண்டும் மறுக்கப்பட்ட நாள்...

எங்கள் மக்கள்மீது இழைக்கப்பட்ட கொடுமைகளை உலகுக்கு எடுத்துச் சொல்லும் நாளாக இந்த மே 18-ம் நாளை போர்க்குற்ற நாளாகத் தமிழீழ மக்கள் அவை பிரகடனப்படுத்துகின்றது.

எங்கள் தேசத்து மக்களின் சுதந்திர தாகத்தை முற்றாகத் துடைத்தெறிய... சிங்களம் திட்டமிட்டு நடாத்திய இனப் படுகொலையை நாம் மறந்துவிட முடியுமா…? முள்ளிவாய்க்காலில் எமது மக்களின் மூச்சு நிறுத்தப்பட்டதை உலகத் தமிழினம் மறந்துவிட முடியுமா...? மே 16 முதல் 18 வரை ஈழத் தமிழர்களுக்கு முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்ட கொடூரங்களை மனித குலம் மறந்துவிட முடியுமா...?

எனவே, இந்தக் கொடூர நாளை சிங்கள அரசின் அதி உச்ச «போர்க்குற்ற நாள்» என்று ஈழத் தமிழர்கள் சார்பில் தமிழீழ மக்கள் அவையினர் பிரகடனப்படுத்துகின்றனர்.

1) சர்வதேசங்களினால் தடை செய்யப்பட்ட நச்சுக் குண்டுகளையும், எரிகுண்டுகளையும் பாவித்து பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்தது,

2) பாதுகாப்பு வலையங்களாக அறிவித்து, மக்களை அங்கே வரவழைத்து, அவர்கள்மீது விமானக் குண்டுகளையும், எறி கணைகளையும் இரவு பகலாக வீசி இன அழிப்பு நடாத்தியது,

3) பாதுகாப்புத் தேடிப் பதுங்கு குழிகளுக்குள் பதுங்கியிருந்த மக்களை ஈவிரக்கமில்லாமல் உயிரோடு மண்மூடிப் புதைத்தது,

4) காயப்பட்ட, அங்கவீனப்பட்ட மக்கள்மீதும், போராளிகள் மீதும் கனரக வாகனங்களை ஏற்றிக் கதறக் கதற நெரித்துக் கொன்றது,

5) வெள்ளைக் கொடியுடன் நிராயுதபாணிகளாக வருமாறு கூறி, அவ்வாறு வந்த போராளிகளை இரக்கமின்றிச் சுட்டுக் கொன்றது,

6) காயப்பட்டுக் களத்தில் வீழ்ந்த பெண் போராளிகள் மீது மிருகத் தனமாகப் பாலியல் கொடும் வதை புரிந்து, அவர்களைப் பலி கொண்டது, என எண்ணற்ற போர்க் குற்றங்கள் புரிந்த கொடூரமிக்க சிங்கள அரசினை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தித் தண்டனை பெற்றுக் கொடுக்க நாம் அனைவரும் அணி திரள்வோம்.

நன்றி

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

இவ்வண்ணம்,

சி. பிரதீபன்

இணைப்பாளர்,

அனைத்துலகச் செயலகம்,

தமிழீழ மக்கள் அவை.

INFO.MAKKALAVAI@GMAIL.COM

===========================================

ஈழத்தமிழர் நினைவு நாள்

ஈழத் தமிழர்களின் 26 வருடங்கள் ஆயுதப் போராட்டத்தின் முக்கிய களமாக, காலமாக அமைந்த மே மாதம் 2009ம் ஆண்டு ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் அநியாயமாகக் கொல்லப் பட்டார்கள். குறிப்பாக முதல் இரண்டு வாரங்களுக்குள் மட்டும் 20,000 ற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர்.

கொடிய போரிலே கொன்று அழிக்கப்பட்ட அப்பாவி மக்களை நினைவு கூருவதும் அவர்கள் அந்தக் காலப் பகுதியிலே சந்தித்த கொடிய அவலங்களை, வேதனைகளை நினைத்துப் பார்ப்பதும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களாகிய எங்களின் கடமையாகும்.

ஈழத் தமிழர்கள் பட்ட இந்த கொடிய துயரை நாம் நினைவுபடுத்திக் கொள்ளவும், எமது குழந்தைகள் வருங்கால சந்ததியினர் ஈழத்தமிழினம் அனுபவித்த இந்த மறக்கமுடியாத அவலங்களை என்றென்றும் மறக்காமல் இருக்கவும், உலகெங்கும் வாழும் தமிழர்களாகிய நாம் – மே மாதம் 18 ம் திகதியை “ஈழத்தமிழர் நினைவு நாள்” எனப் பிரகடனப் படுத்தி அவர்களை நினைவுகூருதல் காலத்தின் தேவையும், கட்டாயமுமாகும்.

ஈழத்தமிழினத்தின் நீண்டகாலத் துயரங்களும், இழப்புகளும் எளிதிலே மறந்துவிட முடியாது என்பதனை எடுத்துச் சொல்வதோடு, அவர்களின் நியாயமான உரிமைகள் கிடைத்து சமாதானமும் சுதந்திரமும் கொண்ட வாழ்வு வாழ எங்களின் ஆதரவு என்றும் இருக்கும் என்பதனையும் உலகத்தில் பரந்து வாழும் தமிழர்களின் ஒன்றுபட்ட இந்தச் செய்கையானது உறுதி செய்வதாக அமையும்.

1) ஈழத்தமிழர் நினைவு நாள் என்றால் என்ன?

2008 – 2009 ம் ஆண்டு காலப் பகுதிகளில் போரிலே மடிந்த அப்பாவித் தமிழ் மக்களை நினைவுகூர்ந்து நடாத்தப்படும் அமைதியான உண்ணாநோன்பு நிகழ்வு.

2) ஈழத் தமிழர் நினைவு நாளில் என்ன செய்யலாம்?

- மதியம் 12.00 மணியிலிருந்து பிற்பகல் 6.00 மணிவரை உண்ணா நோன்பினைக் கடைப்பிடித்தல்.

o மதிய உணவினை முற்றாக விலக்குதல்

o பழரசங்கள், மதுபானங்கள் உட்கொள்ளாமல் இருத்தல்

o மாமிச உணவுகளைத் தவிர்த்தல்

- உண்ணா நோன்பினை பிற்பகல் 6.00 மணிக்கு முடித்தல்

o ஒருவாய்ச் சோறுடனும் சிறியளவு உப்புடனும் உண்ணா நோன்பினை முடித்தல்

o ஒருவாய்ச் சோறு – எமது மக்கள் பட்டினியால் ஒருவாய்ச் சோறுகூட இன்றி அவதிப்பட்டதையும் சிறிய உப்பு – குடிப்பதற்குத் தண்ணீர் இன்றி தாகத்தால் தவித்ததையும் உணர்த்துவதாக அமையும்.

3) எங்கே உண்ணா விரதத்தினைக் கடைப்பிடிக்கலாம்?

- உங்கள் இல்லங்களில்

- உங்களுடைய வழிபாட்டுத் தலங்களில்

- நிகழ்வுக்காக ஒன்றுகூடும் இடங்களில்

4) எப்போது ஈழத்தமிழர் நினைவு நாள் கடைப்பிடிக்கப்படும்?

- ஒவ்வொரு வருடமும் மே மாதம் 18 ம் திகதியில் இதனைக் கடைப்பிடிக்கலாம்.

===========================================

அன்பு உறவுகளே!

இன்று மே 1 முதல் மே 19 வரை வலிசுமந்த காலமாக நினைந்து ஒவ்வொரு நாளும் மாலை 6 மணியளவில் முள்ளிவாய்க்காலின் மண்ணிலே புதைக்கப்பட்ட எம் உறவுகளை நினைவுகூர்ந்து ஒருசில நிமிடங்களாவது அகவணக்கம் செலுத்துமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.

அன்புடன்...

=============================================================

http://www.facebook.com/group.php?gid=109912955716848&ref=ts

http://www.facebook.com/event.php?eid=114809118537472

http://mullivaikkal.org/

=============================================================

Join Eelam Tamil Youth:

http://www.facebook.com/group.php?gid=115902154793&ref=ts

Join My Country Tamil Eelam:

http://www.facebook.com/group.php?gid=121522489199&ref=ts

==============================================================

post-1724-12730137138754.jpg

மனிதாபிமானத்திற்கெதிரான ஒரு பெரும் குற்றமான முள்ளிவாய்க்கால் பேரவலம் நிகழ்த்தப்பட்டு ஓராண்டு பூர்த்தி அடைகிறது.

சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் மனிதாபிமான சட்டம் ஆகியவற்றை அப்பட்டமாக மீறி பல்லாயிரக்கணக்கான எமது உறவுகளை பட்டினி போட்டும் குண்டுகள் வீசியும் இலங்கை அரசாங்கம் கொலை செய்தபோது அவர்கள் எழுப்பிய அவலக்குரல் இன்னமும் எமது காதுகளை விட்டு நீங்கவில்லை.

இந்தப்பேரவலத்தை நிறுத்துமாறு கோரி பிரித்தானியாவிலும் உலகெங்கிலும் வாழும் புலம்பெயர் தமிழ் மக்கள் பல்வேறுபட்ட சாத்வீகப் போராட்டங்களின் ஊடாக சர்வதேச சமூகத்தை மன்றாடிக்கேட்டுக் கொண்ட நிகழ்வுகளும் இன்னமும் எமது கண்களை விட்டு அகலவில்லை.

ஐ.நா சபை தலையிடும், சர்வதேசசமூகம் தலையிடும், அவலங்கள் தடுக்கப்படும் என்று நம்பிக் காத்திருந்த எமது உறவுகள் அந்த எதிர்பார்ப்போடு அங்கே மடிந்து போனார்கள்.

அந்தக் கொடுமையான வெயிலில் கடற்கரை மண்ணில் உணவின்றி உறையுள் இன்றி ஓயாத குண்டுமழையில் எமது உறவுகள் வாழ்ந்த அந்தப் பொழுதினை, அங்கே அவர்கள் ஈவிரக்கம் இன்றி கொல்லப்பட்ட அந்த நாட்களை நாம் நினைவு கூருவோம்.

சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளர்களும் மனித உரிமைகள் அமைப்புக்களும் தமிழ் மக்களுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் தொடர்ச்சியான இனப்படுகொலையின் ஒரு உச்சக்கட்ட நிகழ்வாக இந்த முள்ளிவாய்க்கால் படுகொலையைக் குறிப்பிட்டு இருக்கிறார்கள். ஆனால் இன்றுவரை இந்த மோசமான இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் விசாரணை செய்யப்படாமையையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்காமையையும் சுட்டிக்காட்டி சர்வதேச சமூகத்தின் மனச்சாட்சிக் கதவுகளைத் தட்டுவோம்.

இறுதி யுத்தத்தில் சுமார் 40,000 அப்பாவி மக்கள் ஒரு சில வாரங்களில் படுகொலை செய்யப்பட்டமையை ‘இனப்படுகொலையாக’ பட்டியல் இடுமாறு சர்வதேச சமூகத்தை வலியுறுத்துவதோடு இந்த வரலாற்று உண்மையை மறுப்பதற்குஅல்லது திரிபுபடுத்துவதற்கு எதிராக மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு எதிராக ஓங்கிக் குரல் கொடுப்போம்.

இது தொடர்பில் பல்வேறுபட்ட நினைவுகூரல் நிகழ்வுகள் மற்றும் கவனஈர்ப்புப் போராட்டங்களை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை பிரித்தானிய தமிழர் பேரவை மேற்கொண்டு வருகிறது. இந் நிகழ்வுகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

பிரித்தானியாவில் வாழும் சகல தமிழ் மக்களும் இந் நிகழ்வுகளில் கலந்துகொண்டு பங்களிக்குமாறு பிரித்தானிய தமிழர் பேரவை வேண்டிக் கொள்கிறது.

media@tamilsforum.com

post-1724-12719835486329_thumb.jpg

Link to comment
Share on other sites

  • Replies 323
  • Created
  • Last Reply

3) பாதுகாப்புத் தேடிப் பதுங்கு குழிகளுக்குள் பதுங்கியிருந்த மக்களை ஈவிரக்கமில்லாமல் உயிரோடு மண்மூடிப் புதைத்தது,

4) காயப்பட்ட, அங்கவீனப்பட்ட மக்கள்மீதும், போராளிகள் மீதும் கனரக வாகனங்களை ஏற்றிக் கதறக் கதற நெரித்துக் கொன்றது,

5) வெள்ளைக் கொடியுடன் நிராயுதபாணிகளாக வருமாறு கூறி, அவ்வாறு வந்த போராளிகளை இரக்கமின்றிச் சுட்டுக் கொன்றது,

இவ்வண்ணம்,

சி. பிரதீபன்

இணைப்பாளர்,

அனைத்துலகச் செயலகம்,

தமிழீழ மக்கள் அவை.

INFO.MAKKALAVAI@GMAIL.COM

அப்போ புனர்வாழ்வு முகாமில் இருந்த மூன்றரை இலட்சம் மக்களும் எப்படி வெளியே வநதனர்?

அப்படி ஏத்தி கொல்லும் போது நீங்கள் என்ன பக்கத்தில் இருநது பார்த்தீர்களா

அப்போ புனர்வாழ்வு முகாமில் இருக்கும் போராளிகள் என்ன வேறு நாட்டில் இருநது கொண்டுவரபட்டவர்களா?

Link to comment
Share on other sites

அங்கொடை மனநோயாளர் விடுதியில் இருந்து சிலர் தப்பிவிட்டதாகவும், அவர்களை மருத்துவர்கள் தேடுவதாகவும், அவர்கள் சிங்கள அரசின் கூலிப்படைகள் உதவியுடன் வெளிநாடுகள் சென்றிருக்கலாம் என்று மருத்துவர்கள் நம்புவதாகவும், அவர்களை கண்டுபிடித்து உதவும்படி மருத்துவர்கள் கேட்பதாகவும் ஒரு தகவல்.

Link to comment
Share on other sites

அப்போ புனர்வாழ்வு முகாமில் இருந்த மூன்றரை இலட்சம் மக்களும் எப்படி வெளியே வநதனர்?

அப்படி ஏத்தி கொல்லும் போது நீங்கள் என்ன பக்கத்தில் இருநது பார்த்தீர்களா

அப்போ புனர்வாழ்வு முகாமில் இருக்கும் போராளிகள் என்ன வேறு நாட்டில் இருநது கொண்டுவரபட்டவர்களா?

அப்படி எண்டால் புல்மோட்டை முகாமும், கைதடி, தடுப்பு முகாமும், தெல்லிப்பளை முகாமும் மற்றய தடுப்பு முகாம் எல்லாம் துறந்து விட்டுட்டாங்களோ...??

Link to comment
Share on other sites

தமிழினத்தை அழிக்கும் இந்திய, சிங்கள இனப்படுகொலையாளிகள் அழியவேண்டும் என மே 18 இல் பிரார்த்திப்போமாக.

தமிழினத்தை அழிக்கும் இந்திய, சிங்கள இனப்படுகொலையாளிகள் அழியவேண்டும் என மே 18 இல் பிரார்த்திப்போமாக.

தமிழினத்தை அழிக்கும் இந்திய, சிங்கள இனப்படுகொலையாளிகள் அழியவேண்டும் என மே 18 இல் பிரார்த்திப்போமாக.

Link to comment
Share on other sites

அப்போ புனர்வாழ்வு முகாமில் இருந்த மூன்றரை இலட்சம் மக்களும் எப்படி வெளியே வநதனர்?

அப்படி ஏத்தி கொல்லும் போது நீங்கள் என்ன பக்கத்தில் இருநது பார்த்தீர்களா

அப்போ புனர்வாழ்வு முகாமில் இருக்கும் போராளிகள் என்ன வேறு நாட்டில் இருநது கொண்டுவரபட்டவர்களா?

உங்களுக்கு " கீச்சு மாச்சு தம்பலத்தில்" இருந்து வகுப்பு எடுக்க எடுக்க வேணும். வசதி எப்படி? :lol::lol:

Link to comment
Share on other sites

அப்போ புனர்வாழ்வு முகாமில் இருந்த மூன்றரை இலட்சம் மக்களும் எப்படி வெளியே வநதனர்?

அப்படி ஏத்தி கொல்லும் போது நீங்கள் என்ன பக்கத்தில் இருநது பார்த்தீர்களா

அப்போ புனர்வாழ்வு முகாமில் இருக்கும் போராளிகள் என்ன வேறு நாட்டில் இருநது கொண்டுவரபட்டவர்களா?

எவளவு சிங்கள படை சேர்ந்தாலும் அழிக்க முடியாத எமது பலத்தை இது போல ஒட்டுண்ணி நாய்கள் சேர்ந்தால் 1 நிமிடத்தில் அழிக்க முடியும்.... உம்மை பாராட்ட வாத்தையே வரவில்லை...

Link to comment
Share on other sites

அப்போ புனர்வாழ்வு முகாமில் இருந்த மூன்றரை இலட்சம் மக்களும் எப்படி வெளியே வநதனர்?

அப்படி ஏத்தி கொல்லும் போது நீங்கள் என்ன பக்கத்தில் இருநது பார்த்தீர்களா

அப்போ புனர்வாழ்வு முகாமில் இருக்கும் போராளிகள் என்ன வேறு நாட்டில் இருநது கொண்டுவரபட்டவர்களா?

உண்மைகளை உரக்கக் கூற வேண்டும். அல்லது ஒதுங்கி நிற்க வேண்டும். படுகொலைகளை யாரும் பக்கத்தில் நின்று பார்க்வில்லை யாரும் எண்ணம் கொள்ளக் கூடாது. அந்தப் படு கொலைகளின் கதறல்கள் உலகெங்கும் ஒலித்தது. ஒப்புக் கொள்ளப்பட்டதும் கூட.

Link to comment
Share on other sites

மக்கள் பேரவை தனக்கென்று ஒரு அனைத்துலக செயலகத்தையும் அமைத்துவிட்டதா? அப்படியென்றால் விடுதலைப்:புலிகளின் அனைத்துலக செயலகம் என்னாயிற்று...டம்மியாக்கப்பட்டுவிட்டதா?

Link to comment
Share on other sites

எவளவு சிங்கள படை சேர்ந்தாலும் அழிக்க முடியாத எமது பலத்தை

என்ன செய்ய எல்லாம் இறுமாப்பும், ஆயுத முனை அடக்கு முறையும் தான் காரணம்

Link to comment
Share on other sites

என்ன செய்ய எல்லாம் இறுமாப்பும், ஆயுத முனை அடக்கு முறையும் தான் காரணம்

ஏன் அதுதானே உண்மை...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்ய எல்லாம் இறுமாப்பும், ஆயுத முனை அடக்கு முறையும் தான் காரணம்

உலகம் பூராவும் தான் அமெரிக்காவின் ஆயுத முனை அடக்குமுறைக்குள் அடங்கிக் கிடக்கிறது. ஆயுதம் மனித வாழ்வியலில் செல்வாக்குச் செய்யும் நிலைக்கு கொண்டு வந்ததே சன நாய் அகவாதிகள் தான்.

ஆயுததாரி டக்கிளஸ் தேவானந்தா தோல்வி இன்றி நாடாளுமன்றம் போறான் என்றால் அதற்கு காரணம் மக்கள் செல்வாக்கல்ல. அவன் வைத்திருக்கும் எஜமானர்களுக்காக குண்டுகளை சொந்த மக்கள் மீது பாய்ச்சும் ஆயுதம். அமெரிக்காவால் இன்று உலகெங்கும் சன நாய் அகத்தை திணிக்க முடிகிறதென்றால்.. அதற்கு காரணம் சன நாய் அகத்தை மக்கள் விரும்புகிறார்கள் என்பதல்ல. அமெரிக்காவின் ஆயுத பலம்.

ஆயுதத்தோடு வருபவனை ஆயுதத்தோடு எதிர்ப்பதை தான் விடுதலைப் போராளிகள் செய்தனர். அவர்கள் அதில் இறுமாந்ததில் தப்பில்லை. ஏனெனில் அவர்கள் அடிமைகள் அல்ல வீரர்கள். ஆனால் ஆயுததாரி டக்கிளஸ் இறுமாற முடியாது. ஏன்னா அவன் வைச்சிருக்கிற ஆயுதம் அவனின் மக்களுக்கு எதிரானது. அவனின் எஜமானர்களும் மக்களின் எதிரிகளும் அவனுக்கு வழங்கியவை அவை. அவன் தான் உண்மையில் ஆயுத முனை அடக்குமுறை செய்து அரசியல் செய்கிறான்.

அவனால் சிறீதர் தியேட்டரை விட்டு வெளியில் கூலிப்படைகளின் ஆதரவின்றி வரமுடியவில்லை. ஆனால் மக்கள் விருப்பு வாக்கு மட்டும் அவனுக்கு கிடைச்சிருக்காம். யாரை ஏய்க்கிறார்கள். முதலில் இந்த ஆயுத சன நாய் அக.. அடக்குமுறையாளர்கள் இல்லாதொழிக்க வேண்டும். அதன் பிந்தான் எதிரிகளை இல்லாது செய்யலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நாளில் உலக நாடுகளின் தலைநகர்கள் எங்கும் ஒரு பொது அடையாள போராட்டத்திற்கு தமிழர்களை அழைத்து மனித உரிமைகள் சிறீலங்காவில் மீறப்பட்டதையும் அதனை நாகரிக உலகம் கண்மூடி அங்கீகரித்ததையும் தெளிவாக இனங்காட்ட மக்கள் முன் வர வேண்டும்.

எமது மக்கள் மீதான படுகொலை மட்டுமாக இதனை நோக்க முடியாது. உலகெங்கும் பேரினவாத, வல்லாதிக்க அரசுகள் அடிமைப்படுத்தப்பட்டுள்ள மக்களின் விடுதலை உணர்வுகளை, சர்வதேச பயங்கரவாதத்தின் பெயரால் ஆயுத பலத்தை கொண்டு அரச பயங்கரவாதத்தை அப்பாவி மக்கள் மீதும் போராளிகள் மீதும் ஏவி மனிதப் படுகொலைகளை கட்டவிழ்த்துவிட்டு மனித உணர்வுகளை விடுதலை வேட்கைகளை வேரோடு அழிக்கும் மனிதத் தன்மையற்ற செயலின் தொடர்ச்சியாகவே இதனை பார்க்க வேண்டும்.

Link to comment
Share on other sites

இந்த வேலையை உண்மையான அர்ப்பணிப்புடன் செயற்படும் அமைப்புகள் ஒருங்கிணைந்து முன்னெடுக்க வேண்டும். சுயவிளம்பரம் தேடுவதையும் தாயக விடுதலைக்காக உழைத்த அமைப்புக்களை சிதைத்து ஓரங்கட்டுவதையும் குறிக்கோளாகக் கொண்ட அமைப்பகள் செய்யக் கூடாது. இது கூட ஒரு விதத்தில் மக்களின் உணர்வுகளை திசை திருப்புவதற்கான நடவடிக்கையாகவே எனக்குத் தோன்றுகிறது. நேற்றும் இன்றும் சங்கதி இணையத்தளத்தில் இவர்கள் தொடர்பாக வந்த சுயவிளம்பரங்களை பார்த்தீர்கள் என்றால் இது புரியும். கடந்த வருடம் அனைத்து மக்களும் அனைத்து அமைப்புகளும் இணைந்து செய்த போராட்டங்களை தாங்கள் தான் நடந்ததாக மார்தட்டும் இவர்கள் தங்களுக்கான அனைத்துலக செயலகம் ஒன்றையும் உருவாக்கி இருப்பது சாதாரண விடயமல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழகத்தில் அங்கு நடந்த கொடுமைகளை மக்களிடம் கொண்டு செல்லும் வேலையை எந்த அரசியல் அமைப்பும் சாராத சிலர் செய்து வருகின்றனர். இப்பொழுது தான் அவர்களுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. தகவல்களை இங்கு பதிகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்ய எல்லாம் இறுமாப்பும், ஆயுத முனை அடக்கு முறையும் தான் காரணம்

ஒரு பக்கம் அது என்றால்....

மற்ற பக்கம் நக்குவதும்......... கழுவுவதாகவும் அல்லோ இருக்குது!

மனிதனாக பிறந்து இந்த வாழ்வு வாழ்வதென்பதை.............? எந்த மிருகமும் இதை இதுவரையில் செய்ய துணியவில்லை நான் எப்படி வார்த்தைகளில் வர்ணித்து எழுதுவது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இனம் எதுவித மனித ஈவிரக்கமும் அற்று அழிதொழிக்க பட்ட கொடுர நாளை பற்றி பேசும் போதும்.

சில நாய்களின் குலைப்புகளை. ஏதோ கருத்துகள் என்று வாழ விடுவதால் பல ஆக்க பூர்வமானவர்களை யாழ்களம் தொடாந்தும் இழந்து வருகிறது.

ஒரு ஆக்கபூர்வமான கருத்தாடலுக்கு குறுக்கே நிற்பது நிர்வாகமே!

இந்த அசிங்கங்கள் வேண்டுமென்றே விடப்படுகின்றனவா?

ஒரே ஒரு கருத்தை நீக்கியிருந்தால் இந்த நாள் பற்றிய உரையாடல் இப்படி திசைமாறி போயிருக்குமா?

எமது இனத்தின் பெரும் கரும்புள்ளியான இந்த நாளை கூட கருத்தில் கொள்ளாதா நிர்வாகம்?

Link to comment
Share on other sites

தமிழகத்தில் அங்கு நடந்த கொடுமைகளை மக்களிடம் கொண்டு செல்லும் வேலையை எந்த அரசியல் அமைப்பும் சாராத சிலர் செய்து வருகின்றனர். இப்பொழுது தான் அவர்களுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. தகவல்களை இங்கு பதிகிறேன்.

தமிழக இளைஞர் மத்தியில் மிகப்பெரும் எழுச்சி தேவை. மத்திய அரசுக்கு துதி பாடும் கலைஞர்/ஜெயலலிதா அரசுகள் தேவையில்லை.இவர்கள் சந்தர்ப்ப வாதிகள், சுயநலவாதிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு இனம் எதுவித மனித ஈவிரக்கமும் அற்று அழிதொழிக்க பட்ட கொடுர நாளை பற்றி பேசும் போதும்.

சில நாய்களின் குலைப்புகளை. ஏதோ கருத்துகள் என்று வாழ விடுவதால் பல ஆக்க பூர்வமானவர்களை யாழ்களம் தொடாந்தும் இழந்து வருகிறது.

ஒரு ஆக்கபூர்வமான கருத்தாடலுக்கு குறுக்கே நிற்பது நிர்வாகமே!

இந்த அசிங்கங்கள் வேண்டுமென்றே விடப்படுகின்றனவா?

ஒரே ஒரு கருத்தை நீக்கியிருந்தால் இந்த நாள் பற்றிய உரையாடல் இப்படி திசைமாறி போயிருக்குமா?

எமது இனத்தின் பெரும் கரும்புள்ளியான இந்த நாளை கூட கருத்தில் கொள்ளாதா நிர்வாகம்?

சொறி நாய் ஊழையிட்டால் பதிலுக்கு நாமும் ஊழையிடலாமா? இந்த கேவலம் கெட்ட நாய்களின் கருத்துக்களுக்கு பதில் கருத்துக்களை எழுதுவதால் தான் இந்த சனியன்களும் மீண்டும் மீண்டும் சொறிய வருகின்றன. நிர்வாகத்துக்கே இந்த சொறி நாய்கள் களத்தை அசிங்கப்படுத்துவதில் பிரச்சனை இல்லையென்றால் நாமேன் அதைப் பற்றிக் அலட்டிக் கொள்ள வேண்டும்?

Link to comment
Share on other sites

சொறி நாய் ஊழையிட்டால் பதிலுக்கு நாமும் ஊழையிடலாமா? இந்த கேவலம் கெட்ட நாய்களின் கருத்துக்களுக்கு பதில் கருத்துக்களை எழுதுவதால் தான் இந்த சனியன்களும் மீண்டும் மீண்டும் சொறிய வருகின்றன. நிர்வாகத்துக்கே இந்த சொறி நாய்கள் களத்தை அசிங்கப்படுத்துவதில் பிரச்சனை இல்லையென்றால் நாமேன் அதைப் பற்றிக் அலட்டிக் கொள்ள வேண்டும்?

காட்டாறு, இதனை நீக்கச் சொல்லி பலர் ரிப்போர்ட் பண்ணியிருந்தனர். ஆனால், மாவீரருக்கு வணக்கம் என்று போட்டுவிட்டு அந்த மாவீரர்களும் மக்களும் பெருந்தொகையில் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்டதையே மறுத்து நக்கல் விடும் இப்படியானவர்களின் பதில்களை நீக்குவதால் அவர்கள் பற்றி பிறர் அறிய முடியாமல் போய்விடும் என்று விட்டு நீக்காமல் எச்சரிக்கை புள்ளிகள் மட்டும் வழங்கினேன். சிலவற்றை நீக்கினால் புரியும், சிலவற்றை நீக்காமல் அப்படியே விடுவதுதான் புரியும்.

Link to comment
Share on other sites

நிழலி அண்ணைக்கு வெற்றி. :lol:

கண் பார்வையற்றோரின் மண் பார்வை?

http://www.yarl.com/forum3/index.php?showtopic=71232

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழக இளைஞர் மத்தியில் மிகப்பெரும் எழுச்சி தேவை. மத்திய அரசுக்கு துதி பாடும் கலைஞர்/ஜெயலலிதா அரசுகள் தேவையில்லை.இவர்கள் சந்தர்ப்ப வாதிகள், சுயநலவாதிகள்.

கண்டிப்பாக, இதன் முதல் கட்ட வேலைகள் நடந்து வருகின்றன, இணையம் மூலமாக தொடர்புகளை ஏற்படுத்தி வருகிறொம் ஆனால் இது போதாது என்பது நன்றாக தெரியும். அனைத்து கொடுமைகளையும் இணையத்தில் நாங்கள் பார்த்துவிட்டோம் ஆனால் இந்த படித்த அறிவாளி கூட்டம் சிறியது தெருவில் இறங்கி போராட யோசிப்பவர் இதில் பலர் உண்டு. இறங்கி போராடகூடியவர்கள் அன்றாடம் தன் வயிற்று கஞ்சிக்கு உழைத்து ஓடாய் தேயும் தமிழர்கள் தான் அவர்களை இந்த கட்சிகள் வயிற்றில் அடித்து தங்கள் வயிறு வளர்க்கிறார்கள். ஆனால் இந்த அரசியல் கட்சிகள், ஊடகங்கள் கயமைத்தனத்தை அவர்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுவதை முதல் வேலையாக எடுத்துக் கொண்டுள்ளோம். நடந்த அவலங்களை புத்தகமாக வெளியிட முயற்சிகள் நடந்து கொண்டுள்ளது.

Link to comment
Share on other sites

அன்பு உறவுகளே!

இன்று மே 1 முதல் மே 19 வரை வலிசுமந்த காலமாக நினைந்து ஒவ்வொரு நாளும் மாலை 6 மணியளவில் முள்ளிவாய்க்காலின் மண்ணிலே புதைக்கப்பட்ட எம் உறவுகளை நினைவுகூர்ந்து ஒருசில நிமிடங்களாவது அகவணக்கம் செலுத்துமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.

அன்புடன்...

Link to comment
Share on other sites

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உறவே,  இப்படியே  போனால் எம்மை இறுதியில் பச்சடி போட்டுவிடுவார்கள் என்பதை முன்னமே துல்லியமாக கணிப்பிட்டு  உயிரைக் காப்பாற்ற ஓடி வந்த நீங்கள் உட்பட்ட நாம் அனைவரும் அறிவு ஜீவிகள் தான். 😂   
    • @goshan_che மீண்டும் உங்களை கண்டது மகிழ்ச்சி… ஆனால் 2 (?) வார விடுமுறையில் மக்களின் வாக்களிக்கும் தன்மையை தீர்மானிக்க முடியுமா? நீங்கள் குறிப்பிட்டவாறு தமிழ்தேசிய கூட்டமைப்பு  தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமிழ் மக்கள் கூட்டணி ஆகியவற்றிற்கு மக்கள் வாக்களிக்க போவதில்லை என்ற முடிவிற்கு எவ்வாறு வந்தீர்கள்? 
    • நல்லது  உற‌வே அப்படிபட்ட  நீங்கள் தமிழ்நாட்டில்  சீமான் தனது மகனுக்கு ஆங்கில மோகத்தால் ஆங்கில வழி கல்வி கற்ப்பிப்பதை எதிர்க்கவில்லையே. 😭  இலங்கையில்  தமிழர்களும் சிங்கலவர்களும் தங்கள் மொழிகளில் கல்வி கற்பது போன்று மற்றய நாட்டு மக்களும் தங்கள் மொழியில் கல்வி கற்பது போன்று சீமான் தனது மகனுக்கு தமிழ் வழி கல்வி கற்பித்திருந்தால் அது ஒன்றும் சாதனையில்லை  அது ஒரு அடிப்படை விடயம்.அதுவும் தமிழ் தமிழ் என்று சொல்லி அரசியல் செய்யும் சீமான் முதல் செய்ய வேண்டியது.     சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ? சீமானை பற்றி வந்த நல்ல செய்தி ஆங்கில மோகத்தால்  தனது மகனுக்கு தமிழ்நாட்டில் ஆங்கில வழி கல்வி கற்ப்பிப்பது 🤣  
    • யாழ்.போதனா வைத்தியசாலையில் எரியூட்டி திறப்பு! யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் இந்து மயாணத்தில் அமைக்கப்பட்டுள்ள, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியினை, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதற்காக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 40 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த எரியூட்டி கொள்முதல் செய்யப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது. முன்பதாக வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் எரியூட்டியை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதில் கடும் இழுபறி ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்திற்கமைய யாழ் மாநகர சபை, கோம்பயன்மணல் மயான சபை என்பவற்றின் அனுமதியுடன் குறித்த எரியூட்டி கோம்பயன்மணல் இந்து மயானத்தில் நிர்மாணிக்கப்பட்ட நிலையில் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1375554
    • எந்தக் காலத்திலும் அதிகாரவெறி கொண்டவர்களாலும் ஆக்கிரமிப்பாளர்களாலும்தான் இந்த உலகம் அமைதியை இழந்து கொண்டிருக்கின்றது.........!   தொடருங்கள் ஜஸ்டின் .......!   👍
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.