Jump to content

மே ( வலி சுமந்த மாதம் ) 18 - போர்க்குற்ற நாள் !


Recommended Posts

முள் கம்பி வேலிகளுக்கு பின்னால் - Behind Barbed Wires

Tens of thousand souls forever perished in those early months of 2009, not just on that sombre May. Our agonising cries, to the world we appealed. Our kith and kin crushed, scattered like the ash of withered leaves on their native soil. Our ebbing hopes clung to the morality of leaders and nations; we tried in vain to save them from unabated carnage. Oh, land of Vanni, once our refuge, why has your life been sacrificed?

With unforgettable sadness, we grieve for the children of Eezham who died longing for dignity, struggling for justice, and fighting for freedom. We also remember those who languish in open prisons even today. A once self-reliant, self-sufficient and dignified Tamil nation suffers in silence behind Sri Lanka’s barbed wires.

“Never again”, said the civilised world to genocide. But what we witnessed in Mullivaikal were not only mass atrocities against a distinct ethnic group but also an obituary for the very treaties adopted to protect the rights of all human beings - the Universal Declaration of Human Rights.

On this first anniversary of Mullivaikal, Jay A. Jasan evokes these memories in his poem, ‘Behind Barbed Wires’.

Excerpt:

‘Oh! Gods of Mercy, cried angels with pity

Seeing the carnage on beeches of Vanni

Seeds of shame spilled all over humanity

Strewn across Vanni were worlds' morality’

May 18th…lest we forget

Link to comment
Share on other sites

  • Replies 323
  • Created
  • Last Reply

வலி சுமந்த மே மாதம்!

ஆயிரக்கணக்கான மரணங்களை, கொடூரக் கொலைகளை, குண்டு வீச்சுக்களைத் தாங்கி சாட்சிகளே இல்லாத சாவுக் களமாய்க் கிடக்கிறது தாய் மண். கிளஸ்டரும் வெள்ளை பாஸ்பரசும் இன்ன பிற நச்சு ஆயுதங்களும் வீசிய சத்தம் இன்னமும் நினைவிலாடும் தேசம். சொந்த தேசத்து மக்களையே கொன்று குவித்த குற்ற உணர்ச்சி சிறிதும் இல்லாமல் வெற்றி விழாவை நடத்தினாலும், காட்டுக்குள் இருந்து கணைகள் வருமோ, கடலுக்குள் இருந்து பகை வருமோ என்ற பயத்தால் அலரி மாளிகைக்குள் ஆட்சியாளர்கள் பதுங்கி இருக்கிறார்கள்.

ஓர் இனக்கூட்டம் ஈனஸ்வரத்தில் தனது அஞ்சலிக்காகத் தானே கதறித் தவம் இருக்கும் குரல் கேட்கிறதா! அந்தத் திசையைப் பாருங்கள் - தெரிவதுதான் ஈழம்!

உலகம் வேடிக்கை பார்க்கவில்லை, தூண்டியேவிட்டது. பக்கத்து நாடுகள் கண்டிக்கவில்லை, ஆயுதங்கள் கொடுத்தன. ஆலோசனைகள் சொல்லின. ஆதரவாக நின்றன. மொழி, இனம் பற்றிப் பேசியே உலகத் தலைவர் ஆனவர்களின் கண்களில் நீர் இல்லை, கழுத்தை வேறுபக்கமாகத் திருப்பிக்கொண்டார்கள். எதையாவது செய்திருக்க வேண்டிய சொந்தங்கள், கதை கேட்க ஆரம்பித்தார்கள். 'சொந்த சகோதரர் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை கலங்காத' நம் முன்னே ஈழத்தில் சாவுச் சங்கு ஊதப்பட்டு ஓராண்டு ஆகிறது. 'மே' மாதம் கிரிகோரியன் காலண்டரில் உலகத் தமிழன் குறித்துவைத்திருக்கிறான், 'வலி சுமந்த மாதம்' என்று. இனி ஒவ்வோர் ஆண்டும் அக்னி வெயிலைவிடக் கொடுமையாக நமது உள்ளங்களை அது சுடும்.

ஆனால், கொழும்பு மகிழ்ச்சியாக இருக்கிறது. மே 12 முதல் 20-ம் தேதி வரை போர் வீரர்களின் வாரமாகக் கொண்டாடுகிறார்கள். முப்படைகளின் தளபதியாகவும் ஜனாதிபதியாகவும் இருக்கும் மகிந்தா ராஜபக்ஷே, தனது முழுக் குடும்பத்தையும் ஆட்சிக் கட்டிலில் உட்கார்த்தி அழகு பார்க்கப் பயன்பட்ட யுத்தத்தின் வெற்றி அல்லவா இது!

இரண்டு லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். 'நாடு இப்போது அமைதியின் பக்கம் இருக்கிறது' என்று மகிந்தா அறிவித்திருக்கிறார். ஆனால், யதார்த்தம்?

''உங்கள் நாட்டில் குண்டுச் சத்தம் இல்லைதானே... அப்படியானால் அமைதி யுகம் ஆரம்பமாகிவிட்டதா?'' என்ற கேள்விக்கு, கொழும்புப் பத்திரிகையாளர் ஒருவர் சொன்னார்... ''பாதிப் பேரைக்கொன்று விட்டார்கள். மீதிப் பேர் நடைப்பிணங்களாக அலைகிறார்கள். அவர்களையும் கொல்ல குண்டுகளை வீணடிக்க சிங்கள இனவாதம் விரும்பவில்லை.''

ஈழத்தில் இருக்கும் தன் அம்மாவுக்கு உடல் நலம் இல்லை என்ற தகவல் வந்ததும், பிரிட்டனில் இருந்து புறப்பட்டார் சபேசன். போர் முடிந்துவிட்டதால், போய் வரலாம் என்பது அவரது எண்ணம். கொழும்பு வந்து... அங்கே இருந்து வவுனியாவில் போய் இறங்கினார். திடீரெனச் சுற்றி வளைக்கப் பட்டார் சபேசன். அவருடைய கண்கள் கறுப்புத் துணியால் கட்டப்பட்டன. கைகளைப் பின்னால் இழுத்துக் கட்டுகிறார்கள். மதவாச்சி சித்ரவதைக் கூடத்துக்குக் கொண்டுபோகப்பட்டு... சொல்ல முடியாத வகையில் வதைக்கப்படுகிறார். யார் யார் பெயரை எல்லாமோ சொல்லி, அவரைத் தெரியுமா... இவரைத் தெரியுமா என்று கேட்டால், சபேசனுக்கு அவரது அம்மாவைத் தவிர, யாரையும் தெரியவில்லை. பழுக்கக் காய்ச்சிய கம்பியால் முதுகில் கோடு போட்டு, அதில் தண்ணீரைப் பாய்ச்சி... பிறப்பு உறுப்பிலும் மிளகாய்ப் பொடி தூவி என... சபேசன் அனுபவித்தவை அதிகம். முடிவாக, லட்சக்கணக்கான பணம் கொடுக்கப்பட்டு மீட்கப்பட்டு இருக்கிறார்.

இதே மாதிரிதான் லண்டனில் இருந்து உறவினர்களைப் பார்க்க வந்த பா.ஜெயவதனன், வெள்ளவத்தை காவல் நிலையத்துக்குச் சென்று, 'நான் என்னைப் பதிவு செய்துகொள்ள வேண்டுமா?' என்று அப்பாவியாகக் கேட்க... உள்ளே போய் உட்காருங்கள் என்று சொன்னார்கள். அங்கே இருந்த நான்கைந்து பேர் ஜெயவதனனைக் கடத்திப் போய் சித்ரவதை செய்கிறார்கள். சரமாரியான அடி உதை வாங்கி, சோறு தண்ணீர் இல்லாமல் கிடத்தப்படுகிறார். சில லட்சம் பணத்துடன் உறவினர்கள் வந்து அவரை மீட்டுச் சென்றுள்ளார்கள்.

கபிலநாத் என்ற மாணவனைக் கடத்திய கும்பல் மூன்று கோடி ரூபாய் பணம் கேட்டுக் காத்திருந்தது. அவ்வளவு பணம் தரும் அளவுக்குப் பெற்றோரிடம் வசதி இல்லை. கபிலநாத் கொல்லப்பட்டான். 13 வயதான ரீ.அஜீத்குமார் என்ற பையனை மானிக்ஃபார்ம் முகாமுக்கு அருகில் கறுப்பு வேன் ஆசாமிகள் கடத்தினார்கள். அதே முகாமில் இருந்த பெண்களை இரவு நேரத்தில் ஆட்கள் இழுத்துச் சென்று கற்பழித்துக் கொலை செய்வது சர்வசாதாரணமாக நடக்கிறது. பொறியாளர்கள் பி.மகேஸ்வரன், எஸ்.மகேந்திரன் ஆகிய இருவரையும் மர்மக் கும்பல் கடத்த முயற்சிக்க... உறவினர்கள் சூழ்ந்து தடுத்துவிட்டார்கள். இப்படி எத்தனையோ சம்பவங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். சட்டத்துக்குப் புறம்பான கைது, ஆள் கடத்தல், கப்பம் கோருதல், கொள்ளைச் சம்பவங்கள், கொடூரக் கொலைகள், பாலியல் வல்லுறவுகள்... ஆகியவை நடக்கும் இடமாக இப்போதைய ஈழம் இருக்கிறது.

இந்தச் சம்பவங்களைப் பட்டியலிட்டு நாடாளுமன்றத்தில் அப்பாத்துரை விநாயகமூர்த்தி என்ற தமிழ் எம்.பி. பேசியிருக்கிறார். 'ராணுவத்தின் ஆட்சி நடக்கும் பகுதியில் இந்தச் சம்பவங்கள் நடக்கின்றன. இவை திட்டமிட்டுச் செயல்படும் குழுக்களால் நடத்தப்படுகிறது. ராணுவத்துக்குத் தெரியாமல் இது எப்படி நடக்க முடியும்?' என்று கேட்டார். பதில் சொல்வதற்குத்தான் யாரும் இல்லை. கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா எனக் கொஞ்சம் காசு வைத்திருக்கும் தமிழர்கள் தலைமறைவாக வாழ்ந்தாக வேண்டிய சூழலே இன்றும் நிலவுகிறது.

மூன்று லட்சம் மக்களை முள்வேலிக் கம்பிகளுக்குள் வைத்திருந்து முடமாக்க நினைத்த அரசுக்கு எதிராக உலக நிர்பந்தம் அதிகமானது. எனவே, கொஞ்சம் கொஞ்சமாக வெளியேவிட்டனர். இன்னமும் 73 ஆயிரம் தமிழர்கள் முள்வேலிகளுக்குள் இருக்கிறார்கள். புலிகள் அமைப்பில் இணைந்து உயிரைவிட்ட 40 ஆயிரம் போராளிகளின் குடும்பங்களே இதில் அதிகம். 'உங்களை வெளியில்விட்டால், எங்கள் நாட்டுக்கு ஆபத்து. மறுபடியும் ஆயுதம் தூக்க நீங்கள் உதவியாக இருப்பீர்கள்' என்று, வெளியேவிட மறுத்துவிட்டார்கள். அதே வெயிலிலும் மழையிலும் கூடாரங்களுக்குள் இந்த 73 ஆயிரம் பேரும் இன்னமும் இருக்கிறார்கள். ''இதுவரை ஒரு லட்சத்து 63 ஆயிரம் பேரை மீள் குடியேற்றம் செய்துள்ளோம். இவர்களும் அடிப்படை வசதி எதுவும் இல்லாத இடங்களில் தவிக்கிறார்கள். கிளிநொச்சியில் குடியேற்றப்பட்ட மக்கள், மோசமான நிலையில் உள்ளனர். அவர்களை நான் பார்க்கச் சென்றபோது, மக்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள். வன்னியில் மட்டுமல்ல, கிழக்கிலும் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களுக்கு வீட்டு வசதி இல்லை. 10 குடும்பங்களை எடுத்துக்கொண்டால், ஏழு குடும்பங்களில் குடும்பத் தலைவர் இல்லை. சிறு குழந்தைகளுடன் பல்வேறு அசௌகரியங்களுடன் மக்கள் இருப்பதை நான் பார்த்தேன்'' என்று மீள்குடியேற்ற அமைச்சராகப் பொறுப்பு ஏற்றுள்ள கருணா சொல்கிறார். அவராலேயே மறைக்க முடியாத அளவுக்கு மக்கள் அநாதைகளாக அலைவது தொடர்கிறது.

சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டால் அங்கு வீடுகள் இருந்த தடயம் மட்டும்தான் இருக்கிறது. விவசாய நிலங்களைப் பயன்படுத்த முடியாமல் நாசம் செய்துள்ளார்கள். மீன்பிடி படகுகள் உடைத்து நொறுக்கப்பட்டு உள்ளன. இப்படி ஏதுமற்ற நிலையில்தான், மீள்குடியேற்றம் நடந்துள்ளது. விவசாயமும் மீன் பிடித்தலும்தான் அவர்களுக்குத் தெரிந்த தொழில். ஆனால், அதைச் செய்வதற்கு வழி ஏதும் இல்லை.

கிழக்கு மாகாணத்தில் 49 ஆயிரம் தமிழ்ப் பெண் கள் இப்போது விதவைகளாக இருக்கிறார்கள். இதில் 25 ஆயிரம் பேர், 30 வயதுக்கும் குறைந்தவர்கள். அடுத்தகட்ட வாழ்க்கை என்ன என்பதே தெரியவில்லை. குழந்தைகளை என்ன செய்வது என்றும் புரியவில்லை. ''பெரிய கடல் இருக்கு... ஏரி இருக்கு. வெள்ளாமைக்கு வயல், விறகு வெட்டக் காடு இருக்கு. நல்ல வழமான இடம் எங்கட வாகை. ஆனா, யுத்தம் எங்கட வாழ்வில் விளையாடிப் போட்டுது பாருங்கோ. எங்கட நிலத்தில வெள்ளாமையைச் செய்வம். மீனைப் பிடிப்பம். காட்டுக்குப் போவம். பட்டினி கிடக்க மாட்டம். ஏதோ வசதியா இருந்தனங்க. இப்ப ஒரு வேளைச் சாப்பாட்டுக்கு என்ன பாடுபடுறம்? எல்லாம் போச்சு!

முன்னயெல்லாம் புலியள் இருக்கிறதென்று கெடுபிடி பண்ணினாங்க. இப்ப தேனெடுக்க, விறகு வெட்ட, தொழில் செய்ய, காட்டுக்குப் போக படையிட்ட பெர்மிஷன் வாங்கணும். அபிவிருத்தின்னு அரசாங்கம் சொல்லுது, குடியேற்றத்துக்கு உதவின்னு சொல்லுது. நிவாரணம் தாரேனெண்டு சொல்லுது. எல்லாமே பொய்யி!'' என்று வாகை மீனவர் சொல்லும் வார்த்தைதான் மொத்த ஈழத்துக்குமான நிலை.

தமிழர்கள் வசதியாக வாழ்ந்து தொழில் செய்த இடங்களில் எல்லாம் இப்போது சிங்களவர்கள் குடியேற்றப்பட்டு, விவசாயம் பார்க்கிறார்கள். மீன் பிடிக்கிறார்கள். பெரும்பான்மைத் தமிழர் பகுதியாகச் சொல்லப்படும் வட கிழக்கு மாகாணத்தில் சிங்களவர் குடியேற்றம் மிகத் தீவிரமாக நடக்கிறது.

'தமிழ்ப் பற்றுள்ள தேசிய விடுதலை இயக்கம்' என்ற பெயரால் யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் ஒரு ரகசிய துண்டறிக்கை எல்லா வீடுகளுக்கும் போடப்பட்டுள்ளது. 'தென்இலங்கையில் இருந்து அதிக அளவிலான சிங்களவர்கள் சுற்றுலாப் பயணிகளாக எம் மண்ணை ஆக்கிரமித்து, தமிழ் மக்களாகிய எம்மைச் சிறுபான்மையினர் ஆக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள். வர்த்தக நிலையங்களில் சிங்களப் பெயர்ப் பலகை எழுதுதல், சுற்றுலாப் பயணிகளுக்கு வீடுகள் கொடுத்தல், சிங்களவர்களுக்கு வீடுகள், காணிகள் விற்றல், சிற்றூர்திகளில் சிங்களப் பாடல்களை ஒலிபரப்புதல் ஆகியவை தொடங்கிவிட்டன' என்கிறது இந்தப் பிரசுரம். அதாவது, வல்வெட்டித்துறையில் பிரபாகரன் வீடு இடிப்பு, கரும்புலி மில்லர் நினைவாக நெல்லியடியில் வைக்கப்பட்ட நினைவுத் தூண் உடைப்பு, யாழ்ப்பாணம் உடுப்பிட்டியில் இருந்த மாவீரர் துயிலும் இடம் இடிப்பு... என போர் நினைவுச் சின்னங்கள் அனைத்தும் இடிக்கப்பட்டு வரும் நிலையில், இன்னொரு பக்கம் வெளிப்படையான சிங்களக் குடி யேற்றமும் தடங்கல் இல்லாமல் நடக்கிறது.

''உணவுக் களஞ்சியமான வன்னி மண்ணில் உற்பத்தியைப் பெருக்கி, மற்றவருக்கு உண்டி கொடுத்த நாம், ஒரு பிடிச் சோற்றுக்குக் கையேந்தி வரிசையில் நிற்கிறோம்'' என்று தமிழ் எம்.பி-யான சிவஞானம் சிறீதரன் நாடாளுமன்றத்தில் சொல்லியிருக்கிறார்.

அன்றாட வாழ்க்கைக்கு அவஸ்தைப்பட்டு... சொந்தத் தொழிலும் செய்யவிடாமல், கிடைக்க வேண்டிய சிறு வேலையும் மறுக்கப்பட்டு... வாசலுக்கு வந்தால் வளைக்கப்படுவோமோ என்று பயந்து, உட்கார ஒரு நிரந்தரக் கூரை இல்லாமல் தவித்து... என நான் சொல்லாத துன்பம் அனைத்தையும் அனுபவித்துக்கொண்டு இருக்கிறது, ஈழத் தமிழினம்.

இந்தக் கஷ்டங்கள் எதற்கும் சம்பந்தம் இல்லாத வகையில் பல்லாயிரம் கோடி முதலீடுகளை சீனா இறக்கி வருகிறது. 'உங்களுக்கான அத்தனை உதவிகளையும் செய்யக் காத்திருக்கிறோம்' என்று பாகிஸ்தான் பிரதமர் அறிவித்து இருக்கிறார். மிகப் பெரிய காற்றாலை மின் திட்டத்தைக் கைப்பற்றிய மகிழ்ச்சியில் இருக்கிறது இந்தியா. இன்னும் எத்தனையோ நாடுகள் தங்களது முதலீட்டுக்கான சந்தையாக இலங்கையை மாற்றிவிட்டன. அமைதி தோய்ந்த கடல்பரப்பு முழுமையும் கேளிக்கை விடுதிகள், சுற்றுலா மாளிகைகள் அமைக்க இடம் ஒதுக்கப்பட்டு வருகிறது.

கொடூரம் என்னவெனில், கொழும்பு சுற்றுலாவின் அங்கமாகப் பாலியல் தொழில் மாறிப்போனதுபோல, இன்னும் சில ஆண்டுகளில் தமிழ்ப் பரப்பும் மாற்றப்பட இருக்கிறது. தமிழ்ப் பெண்களின் எதிர்காலத்தை நினைத்தால், பகீரென்கிறது. பன்னாட்டு, பண்பாட்டுச் சந்தைக்கு திரிகோணமலை, கிளிநொச்சி, முல்லைத்தீவை மொத்தமாகத் தாரைவார்க்கும் படலத்தில் ஆரம்பக்கட்ட வேலைகள் நடந்திருக்கின்றன. இந்த வளம் கொழிக்கும் பகுதியை எதைக் காரணம் காட்டி யும் கைவிட்டுவிடக் கூடாது என்று பல்வேறு நாடுகள் துடிக் கின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகள், அமைப்புரீதியாகவோ அல்லது தனித்தனிக் குழுக்களாகவோ அங்கு இயங்குகிறார்களா என்பதை நிரூபிக்கும் சம்பவங்கள் இதுவரை இல்லை. ஆனால், புலி வருது பூச்சாண்டிகளைச் சிங்கள அரசு நிறுத்தவில்லை. 'புலிகளின் புதிய ராணுவப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது' என்று பிரதமர் டி.எம்.ஜனரட்ண அறிவித்துள்ளார். ''பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கக்கூடிய சந்தர்ப்பங்களை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்'' என்கிறார் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபய. ''இன்னும் பயங்கரவாதம் கனன்று வருகிறது'' என்று சொல்கிறார் மகிந்தாவின் மகன் நமல். நண்பர்களைவிட எதிரிகளுக்குத்தான் எல்லாம் தெரியும்... என்பதை வைத்துப் பார்த்தால், ஈழத்தில் ஏதோ நடக்கப்போவதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவே தெரிகின்றன.

சக்கரம் மீண்டும் ஆரம்பித்த இடத்துக்கே வந்திருக்கிறது. துன்பத்தில் அதிக துன்பமும், சோகத்தில் இன்னும் துயரமுமே ஈழத் தமிழ் இனத்துக்கு வாய்த்திருக்கிறது. இந்நிலையை எந்த தேவதூதன் மாற்றுவான் என்பதுதான் தெரியவில்லை!

Link to comment
Share on other sites

கருப்பு நாளல்ல!

(உரைவீச்சு)

ஆரியமும் காந்தியமும்

ஆளுக்கொரு கையை

பின்னால் நின்று பிடித்துக் கொள்ள

சீனத்தின் சதிக்கண்கள்

சீரிளைமையில் குறிவைக்க

சிங்களத்தின் கத்தி பல

குத்திக் குத்திக் கிழிக்கின்றது அவளை

திராவிடத்தின்

உச்சிப் பொழுது உமிழ்கின்ற ஒளியில்.

காப்பியமாம் மணிமுடியும்

கலைந்து சரியச் சரிய

காலணிந்த சிலம்போடு

சங்கிலிகள் தளையத் தளைய

வளையாத வளையின்று

நெரிய நெரிய

நெற்றிச் சூடுமணி

எற்றி அலைய அலைய

சிந்தாமணிகள்

சிதறச் சிதற

சிந்துகின்ற குடர்க்கீழே

மேகலையோ மறைய மறைய

ஓலமிட்டுக் கதறுகிறாள்

ஓடிவரக் கூவுகிறாள்

நாதியில்லை நானிலத்தில்

பாரெங்கும் விண்ணெங்கும் பார்த்து நிற்கும்

ஊரெங்கும் பார்த்துப் பார்த்து அலறுகிறாள்

பேதையவள் தேம்பித் தேம்பி அழுகின்றாள்

சுற்றிச் சுற்றிச் சுழல்கின்றாள்

சுட்டுவிழி கொட்டக் கொட்டப்

பெற்றுவிட்ட பிள்ளைகளை

உற்று உற்றுப் பார்க்கின்றாள்.

ஓட்டைத் துலாவோடு ஊத்தை பேசும் பிள்ளைகள்

சாட்டையொன்றும் தருகின்ற தறிதலைப் பிள்ளைகள்

எந்தச் சாதிக்காரியோ ஏனிங்கு எனுங்கூட்டம்

எந்தன் மதம் இவளோவென்று எட்டிப் பார்க்க வருங்கூட்டம்

வெந்ததெல்லாம் தின்றலையும் வேடிக்கைப் பெருங்கூட்டம்

சிந்தையிலே மந்தி வளர் செந்தமிழர் இவரிங்கு

சந்தமொடு பேசிப் பேசி சாகசங்கள் செய்கின்றார்

பந்தமென படுபாவி இன்னுமவள் நினைக்கின்றாள்!

சொந்தப்பிள்ளை மந்தங்கண்டு அவளை மேலும்

சிந்தச் சிந்தக் குத்துதடி சிங்களமும்

கத்தி தீட்டித் தீட்டிக் கொடுக்குதடி காந்தியமும்

நித்தஞ் செத்துச் செத்துக் குறைகின்றாள் - மைந்தர்மேல்

பித்தம் மிகை வைத்துவிட்டப் பாவிமகள்;

பித்தர்களைப் பெற்றுவிட்டப் பெண்பாவி;

எத்தர்களை வார்த்ததனால் ஏங்கி ஏங்கி

நித்தமிவள் சாகின்றாள் பெயர் தமிழன்னை!

மொத்தமாகச் சாநாளும் ஆமாவோ? அம்மவோ

கருப்பு நாள் இல்லையடி சொல்வார்போல் - அந்த

இருண்ட காலமே மீண்டதடி! அண்டத்து

இருட்டையெல்லாம் திரட்டி வந்து சூழ்ந்ததடி!

இருள் சூழ்ந்ததடி! பேரிருள் சூழ்ந்ததடி!

------

கொத்துக் கொத்தாய்க் கொன்றழிக்கப்பட்ட என் குலத்திற்குக் கண்ணீர் அஞ்சலிகள்

...நாக.இளங்கோவன்

Link to comment
Share on other sites

Remembering May Genocidal massacre - 24 Hour famine in Toronto, Canada watch live Friday 14th May from 6pm Toronto Time.

Remember. Refelect. Uprise ! TYO

http://www.ustream.tv/channel/maymassacre18

Link to comment
Share on other sites

ஈழத்தமிழர் நினைவு -மே 13 2009

* பாதுகப்பு சபை கூட்டபட்டிருக்கிறது - இலங்கை விடயம் ஆராயப்படவேண்டும்

* ஐ.நாவின் பாதுகாப்பு சபையின் பாதுகாப்பு சபையில், சிறிலங்கா விவகாரம் பற்றிய சம்பிரதாய பூர்வமான முதலாவது விவாதம் (புதன்கிழமை) மாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

* இது தொடர்பாக ராஜதந்திரிகள் கருத்து தெரிவிக்கையில், மோதல் வலயத்தில் சிக்கியுள்ள மக்கள் பிரதேசங்கள் மீது, சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்படும் ஷெல் தாக்குதல்களை நிறுத்துமாறு அழுத்தம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.ஐ.நாவுக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் மௌரிஸ் ரிபர்ட் மற்றும் ஏணைய மேற்கத்தேய பிரதிநிதிகள், இம்மூடிய கதவு விவாதத்தினுள் கலந்து கொண்டுள்ளனர்.

* சிறிலங்காவின் மோதல் பிரதேசத்தின் அபாயகரமான நிலைமையை பாதுகாப்பு சபை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும், சிறிலங்கா அரசு தனது தாக்குதல் நடவடிக்கைகளை உடனடியாக கைவிட்டு, ஐ.நாவின் மனிதாபிமான பணிகயாளர்கள், அரசசார்பற்ற தொண்டு நிறுவன பணியாளர்களை அகதி முகாம்களுக்கு அனுமதிக்குமாறும், புலிகளை ஆயுதங்களை கைவிட்டு சரணடையுமாறும் தாம் இவ்விவாதத்தின் போது கோரியுள்ளதாகவும், ஐ.நாவுக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன்ஸ் மௌரிஸ் ரிபர்ட் கூறியுள்ளார்.

* மனிதாபிமானத்தின் பேரில் யுத்த நிறுத்ததினை அமுல் செய்ய விடுதலைப் புலிகளின் சர்வதேச பேச்சாளர் வேண்டுகோள்.

* போர்ப் பகுதிகளில் நிலைமைகள் மிகவும் மோசமாகி வருவதன் காரணமாக சிறுவர்கள் பலியாவதைக் கண்டு பேரதிர்ச்சியடைவதாக ஆயுத மோதல்களில் சிக்கியுள்ள சிறுவர்களுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் சிறப்புப் பிரதிநிதி ராதிகா குமாரசாமி தெரிவித்திருக்கின்றார்.

* மீண்டும் புதிய செய்மதி படங்கள் வெளியாகின.

* உடனடியாக உத்தம் நிறுத்த படவேண்டும் - அமெரிக்க மற்றும் பிரிட்டன்.

Link to comment
Share on other sites

ஈழத்தமிழர் நினைவு -மே 14 2009

* 1700 தமிழர் படுகொலை 3000 காயம்

வன்னியில் கடந்த 24 மணி நேரத்திற்குள் தமிழ் மக்கள் ஆயிரத்து 700 பேர் வரையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், மூவாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

* கொல்லப்பட்ட மக்களின் உடலங்கள் வீதிகள், மற்றும் அவர்களின் வாழ்விடங்களில் சிதறிக்கிடக்கின்றன.

* முள்ளிவாய்க்காலில் இயங்கிய ஒரேயொரு மருத்துமனையும் படையினரது தாக்குதலில் இயங்க முடியாது செயலிழந்துள்ள நிலையில், படுகாயமடைந்த மக்கள் குருதி இழப்பினால் மரண அவலத்திற்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

* படையினரின் தாக்குதல்களால் முள்ளிவாய்க்கால் மருத்துமனை ஏற்கனவே செயலிழந்துள்ளது. இதனால் காயமடையும் தமிழ் மக்கள் பெரும் அவலத்தையும் நெருக்கடியையும் எதிர் நோக்கியுள்ளனர்.

* சிறிலங்கா உடனடியாக யுத்தத்தை நிறுத்தவேண்டும்: ஓபாமா அழைப்பு!

பல நூற்றுக்கணக்கான பொது மக்களைக் கொல்லும் சிறிலங்கா இராணுவத்தின் கண்மூடித்தனமான தாக்குதல்களை நிறுத்துமாறும் மற்றும் ஐ.நா. மனிதாபிமான பணிக் குழுவை மக்கள் உள்ள இடங்களுக்குச் செல்ல அநுமதி தருமாறும் சிறிலங்கா அரசுக்கு ஓபாமா அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும், தமிழீழ விடுதலைப் புலிகளிடம் ஆயுதங்களைக் கீழே போடுமாறும், மக்களை வெளியேறவிடுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

* புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்ட பின்னர் தமிழர்களின் அடுத்த நிலை என்ன என்பதை ஓபாமா விளக்கத் தவறிவிட்டார்.

* சர்வதேசம் இலங்கை பிரச்சனையில் தலையிட வேண்டுமா ? CNN கருத்துக்கணிப்பு

Link to comment
Share on other sites

ஓ! மனிதா!.....

ஓ மனிதா....

உண்மைதான் என்ன?

உரிமையிழந்த எங்கள் உயிர்

இருந்துதான் என்ன?

ஓலமிட்டோம் உலகறிய

உறவுகளின் கை ஒடிந்தபோது...

ஒன்றும் அறியாதவனாய்

உன்னில் எத்தனை பேர்...?

ஓலமிட்டோம் உலகறிய

உறவுகளின் உயிர்போகிறதென்று...

ஒன்றும் அறியாதவனாய்

உன்னில் எத்தனை பேர்...?

வல்லரசுகளாய் வாய் பொத்தி…..

அகிம்சை தேசத்தானே ஆயுதப்பொதிகளாய்...

ஊடகக் காரனே ஊமைகளாய்....

மெளனித்த மனித உரிமைக்காரனாய்..

இன்னும் இன்னும் எத்தனை எத்தனை...?

முடிவில் மடிந்தே போயினர்

எம் கையில் வீரத்தமிழன்

என்ற முகவரியைத் தந்து....

ஓ மனிதா....

இதுதான் அந்த உண்மையா...?

எஙகள் முகவரி தமிழன்

அதுதானே...

ஆறாயிரம் ஆண்டுகளாய்

சூடிக்கொண்டிருக்கிறோம்....

இழக்கமாட்டோம் இனியும்.....

முள்ளிவாய்க்காலில்

இரத்தத்தாலும் உறுதியாக

எழுதப்பட்டு இருக்கிறது......

உலகமே!

நீங்கள் எங்களை

அழிக்க அழிக்க எழுதுவோம்....

நங்கள் தமிழரென்று...

எழுவோம்....எழுவோம்.....

இன்னும் இன்னும் பன்மடங்காய்....

தோழர் சிவா - துபாயிலிருந்து

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட நான் எழுதின ஒபாமா மிலபான் காணொளி, போனவருசம் இந்த நேரம் ஒபாமா கப்பலும் போகேல்ல, ஜெ அம்மா வெல்லவுமில்ல, இந்தியா கப்பல் அனுப்பவுமில்ல, சனம் பிச்சுக்கொண்ட வெளியில வர துடங்கீட்டுது. ரண்டு நாளப் பயங்கர அமைதி. முள்ளிவாய்க்காலுக்குள்ளால சனம் வெளியில வந்தது ரிவில காட்டினம், கறுப்பு புகை மண்ணடலமும் தெரியிது. :)

Link to comment
Share on other sites

அட நான் எழுதின ஒபாமா மிலபான் காணொளி, போனவருசம் இந்த நேரம் ஒபாமா கப்பலும் போகேல்ல, ஜெ அம்மா வெல்லவுமில்ல, இந்தியா கப்பல் அனுப்பவுமில்ல, சனம் பிச்சுக்கொண்ட வெளியில வர துடங்கீட்டுது. ரண்டு நாளப் பயங்கர அமைதி. முள்ளிவாய்க்காலுக்குள்ளால சனம் வெளியில வந்தது ரிவில காட்டினம், கறுப்பு புகை மண்ணடலமும் தெரியிது. :)

தமிழருக்காக இரங்க மனமில்லாவிடினும், மனிதத்திற்காகவாவது இரங்க வேண்டும். இது நமது அவலம். தமிழர் வரலாறு இதை என்றைக்கும் மறக்காது.

Link to comment
Share on other sites

ஈழத்தமிழர் நினைவு -மே 15 2009

* இறுதி அழிப்பு யுத்தம் ! - 'இறுதி தாக்குதல்'

* வன்னி 'மக்கள் காப்பு வலயம்' இன்று அதிகாலை 4:30 நிமிடமளவில் தரை, வான் மற்றும் கடல் வழியான கடுமையான தாக்குதலினை சிறிலங்கா தொடங்கின.

* தரையில் நான்கு முனைகள் ஊடாகவும், கடல் வழியாகவும் உள்ளே நுழையும் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மிக நெருக்கமான சண்டைகள் பலமுனைகளில் நடைபெறுகின்றன.

அதேவேளையில் கண்மூடித்தனமான குண்டுவீச்சில் சிறிலங்கா வான் படையினரும் ஈடுபட்டனர்.

* இந்திய வெளியுறவு அமைச்சர் அமரிக்காவின் வேண்டுகேளை நிராகரித்துடன் கடல் வழியாக மக்களை காக்க அமரிக்கா எடுத்த முடிவுக்கு தடை!

* ஜோர்தானில், நேற்று நடைபெற்ற ஒரு ஊடகவியலாளர் சந்திப்பின் போது அடுத்த "48 மணிநேரத்தில் இந்த போர் முடிவுக்கு வந்துவிடும்" என சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

* வரலாற்றின் உச்ச மனிதப் பேரவலம்!

1. 'மக்கள் காப்பு வலயம்' எங்கும் நெருப்புப் பற்றி எரிவதுடன் - வான் பரப்பு புகை மண்டலமாகி இருக்கின்றது.

2. இந்த கரும்புகை மண்டலத்திற்கு மேலே பறக்கும் சிங்களப் போர் வானூர்திகள் - கீழே எதனையும் தெளிவாகப் பார்க்க முடியாத நிலையில் - கண்மூடித்தனமாக குண்டுகளை வீசுகின்றன.

3. பீரங்கி குண்டுச் சிதறல்களினாலும் இரசாயனத் திரவங்களாலும் - படுகாயமடைந்தும், உடல் அவயவங்களை இழந்தும், கொதிக்கும் எரிகாயங்களுடனும் ஆயிரக்கணக்கானவர்கள் தெருத் தெருவாகவும், பதுங்கு குழிகளுக்கு உள்ளேயும் வெளியேயும் அப்படி அப்படியே கிடந்து கதறுகின்றனர்.

4. இவர்களை தூக்கி எடுக்கவோ, சிகிச்சைகள் அழிக்கவோ எவரும் இல்லை. யாருக்கும் யாரும் உதவ முடியாமல் எல்லோர் மீதும் குண்டுகள் வீழும் பெரும் மனித அவலம் நிகழ்கின்றது.

5. சில இடங்களில் - படுகாயமடைந்து வீழ்ந்து கிடந்த மக்களுக்கு மேலாகவும், பதுங்கு குழிகளுக்குள் பாதுகாப்பு தேடி பதுங்கியிருந்த மக்களுக்கு மேலாகவும், சிங்களப் படையினர் தமது கவசப் போர் ஊர்திகளின் இரும்புச் சங்கிலிகளை ஏற்றிச் சென்றதை தாம் நேரில் கண்டதாக தப்பி வந்த மக்கள் சிலர் கதறலோடு சுறுகின்றனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரே கறுப்பு புகை மண்டலம் பஸ்சுகள் லெறியள் எல்லாம் எரியிது. சாள்ஸ் அன்டனி புலித்தேவன் நடேசன் உடலுகள் காட்டுப்படுது, வெள்ளைக்கொடியோட வந்தவைய கொண்டதா செய்தியில சொல்லுப்படுது, சிங்களவன் சொன்ன பதிலெல்லாம் மூடி மறைக்கப்பட்டு மனித உரிமை மீறல் எண்டு சுத்தல் துடங்கப்படுது. சிங்களவங்களும் தங்கட செய்திகள BBC CNN NDTV ல சொல்லுறாங்கள். சொல்கேம் பான்கி மூன் கிலறி நம்பியார் எண்டு செய்யப்பட்ட டீலுகள் எல்லாம் வெளிச்சத்துக்கு வருது. சரத் ஒருவரியில பதில டூ லேட் டு ஸ்டாப் எனிதிங் எண்டு சொல்லி எல்லார் வாயயும் அடைச்சிட்டுது. :lol:

Link to comment
Share on other sites

ஒரே கறுப்பு புகை மண்டலம் பஸ்சுகள் லெறியள் எல்லாம் எரியிது. சாள்ஸ் அன்டனி புலித்தேவன் நடேசன் உடலுகள் காட்டுப்படுது, வெள்ளைக்கொடியோட வந்தவைய கொண்டதா செய்தியில சொல்லுப்படுது, சிங்களவன் சொன்ன பதிலெல்லாம் மூடி மறைக்கப்பட்டு மனித உரிமை மீறல் எண்டு சுத்தல் துடங்கப்படுது. சிங்களவங்களும் தங்கட செய்திகள BBC CNN NDTV ல சொல்லுறாங்கள். சொல்கேம் பான்கி மூன் கிலறி நம்பியார் எண்டு செய்யப்பட்ட டீலுகள் எல்லாம் வெளிச்சத்துக்கு வருது. சரத் ஒருவரியில பதில டூ லேட் டு ஸ்டாப் எனிதிங் எண்டு சொல்லி எல்லார் வாயயும் அடைச்சிட்டுது. :lol:

அது தான் சிங்களத்தோடு நக்கும் நீங்களும் உலக வல்லரசுகளும் சேர்ந்து தந்த அப்பாவி தமிழருக்கான பரிசு.நீங்கள் சொன்ன மீடியாக்கள் எல்லாமே ஒரு பக்கம் தமிழ் மக்களின் அவல குரல் ஒரு பக்கம். புலிகள் பயங்கர வாதிகளாம்.எப்படி ஈராக் ,ஆப்கானிஸ்தான் , காஸ்மீர் மக்கள் மீது போடும் குண்டுகள் பயங்கர வாதம் இல்லையோ.வரவிலக்கணம் தேவை.தர முடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது தான் சிங்களத்தோடு நக்கும் நீங்களும் உலக வல்லரசுகளும் சேர்ந்து தந்த அப்பாவி தமிழருக்கான பரிசு.நீங்கள் சொன்ன மீடியாக்கள் எல்லாமே ஒரு பக்கம் தமிழ் மக்களின் அவல குரல் ஒரு பக்கம். புலிகள் பயங்கர வாதிகளாம்.எப்படி ஈராக் ,ஆப்கானிஸ்தான் , காஸ்மீர் மக்கள் மீது போடும் குண்டுகள் பயங்கர வாதம் இல்லையோ.வரவிலக்கணம் தேவை.தர முடியுமா?

ம்....வெஸ்மினிஸ்ரர் முன்னால கொடி புடிச்சு லைவா பயங்கவாத பரிசு குடுத்தினனம், அதாலதான் உலகநாடுகள் எல்லாம் முள்ளிவாய்க்கால எரிய விட்டு பாத்துக்கொண்டிருந்தது. உலக பயங்கவாதம் பற்றி சத்தாம் ஹவுஸ் பாத்துக்கொள்ளுமாம், தேவையில்லாமல்மூக்க நுளைச்சு கோட்டுக்கு யாழ இழுத்தா....... :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரே வெடிச்சத்தம் புகை மண்டலம் ரண்டு மணித்தியாலத்தோட மீண்டும் அமைதி...மயான அமைதி...அடுத்த ரண்டு நாளா எரியிற படங்கள் புகைமண்டல காட்சிகள்...

Link to comment
Share on other sites

அது தான் சிங்களத்தோடு நக்கும் நீங்களும் உலக வல்லரசுகளும் சேர்ந்து தந்த அப்பாவி தமிழருக்கான பரிசு.நீங்கள் சொன்ன மீடியாக்கள் எல்லாமே ஒரு பக்கம் தமிழ் மக்களின் அவல குரல் ஒரு பக்கம். புலிகள் பயங்கர வாதிகளாம்.எப்படி ஈராக் ,ஆப்கானிஸ்தான் , காஸ்மீர் மக்கள் மீது போடும் குண்டுகள் பயங்கர வாதம் இல்லையோ.வரவிலக்கணம் தேவை.தர முடியுமா?

ஒரு சிறு கதை.

நீங்கள் தெருவில் போகிறீர்கள். ஒரு சொறிநாய் போய்வருபவர்கள் எல்லாரையும் பார்த்து குரைக்கிறது. உங்களையும் பார்த்து குரைக்கிறது. எல்லாத்தையும் பார்த்து குரைக்கிறது. இச்சூழலில் அதை யாரும் கணக்கிலெடுக்காமல் போவதுதான் வழமை. யாராவது பாவப்பட்டு சாப்பாடு வைத்தாலும் அது வாலை ஆட்டியபடி குரைத்துக் கொண்டுதான் சாப்பிடும். அர்த்தம் இல்லாமல் குரைப்பதை சொறிநாய் நிறுத்தாது.

யாராவது சொறிநாய் மீது மதிப்பு வைத்து அதன் குரைப்புக்கு அர்த்தம் தேட வெளிக்கிட்டால் இறுதியில் மடையார் ஆகிவிடுவார். சீண்டச்சீண்ட அது குரைப்பை கூட்டுமே ஒழிய குறைக்காது. புத்திசாலிகள் சொறிநாயை அதன் பாட்டில் குரைக்க விட்டுவிட்டு தங்கள் வேலைகளை பார்பார்களே தவிர, அதனுடன் சீண்டி தமது நேரத்தையும், மதிப்பையும் இழந்த மதிகெட்டவர்களாக, விடிவெள்ளி பார்ப்பவர்களாக, DAM foolகளாக விரும்பமாட்டார்கள்.

எனவே சொறிநாயை அதுபாட்டில் குரைக்க விட்டுவிடுங்கள். உங்கள் பொன்னான நேரத்தை அதனுடன் சீண்டி வீணாக்காதீர்கள். அத்துடன் அதுகள் எல்லா இடத்திலும் சேறுகளையும், சகதிகளையும் வீச, வசதி வாய்ப்பு ஏற்படுத்தி கொடுப்பவர் ஆகிவிடாதீர்கள்.

Link to comment
Share on other sites

இந்த வாரம் முழுவதும் படுகொலை செய்யப்பட்ட எம் உறவுகளை சிந்திப்போம்.

பல்லாயிரம் அப்பாவி ஈழத் தமிழர்களை ஈவிரக்கமின்றி படுகொலை செய்த இந்திய சிங்கள இனப் படுகொலையாளர்கள் கூண்டுடன் அழியவேண்டும், தர்மம் நிலைக்க வேண்டும் என எமது பிரார்த்தனைகள் அமையட்டும்.

இந்திய சிங்கள இனப் படுகொலையாளர்களுக்கு உதவிய அனையவரும் அழியவேண்டும், தர்மம் நிலைக்க வேண்டும் என எமது பிரார்த்தனைகள் அமையட்டும்.

எமது விடிவுக்கும், சுதந்திரத்துக்கும் பிரார்த்திப்போம்.

Link to comment
Share on other sites

துவேச துவசத்தின் திவசம்!

ஆண்டாகி போனதுவோ மாண்ட கதை கேட்டு ?

பூண்டோடு கொளுத்தி கொன்றான் இனவெறியன் !

தாங்க முடியாமல் பாராளுமன்ற சதுக்கம் சென்று

இரவிரவாய் ஓலமிட்டு கதறிய காலம் அது !

பச்சிளம் குழந்தை தாயின் பிணத்தினிலே பால் தேடி

புழுவோடு போட்டி போட்ட அந்த கேவலத்தை கண்டோமே !

பிறக்காத குழந்தைதனை வயிற்றை பிளந்து கொன்று

இனவெறியின் கொடுமை அதை கொதித்தபடி பார்த்தோமே !

எத்தனை கொடுமை அதை என்னால் எழுத பலமில்லை !

இன்னும் என் இமைக்குள்ளே உறுதியாய் பதிந்த படம் !

தூக்கமும் வாராமல் கண் முழித்து வலையில் தேடி பார்த்தேன்

எதாவது ஒரு "பதில்" செய்தி, அதை இன்றுவரை தேடுகிறேன் !

முள்ளிவாய்காலில் பாய்ந்து ஓடிய தமிழ் இனத்தின் ரத்தம்

கடலோடு கலந்ததுவோ? இல்லை! உலக தமிழோடு இணைந்தது!

கள்ளி பால் கொடுத்து அவன் கொன்றழிக்க நினைத்த எங்கள்

தமிழீழ குழந்தை இன்று புலம் பெயர் இளையோர் தத்தெடுத்தார்!

அங்கே கொன்றொழித்து நின்றவனை தூக்கி வைத்து ஆடினாரோ ?

சிங்களம் வெறியர் தாம் என்று உங்களுக்கு உணர்த்தி நின்றாரோ ?

ரத்தம் குடித்தவனை அரியணையில் அமர்த்தி அழகு பார்த்தாரோ !

துட்டகைமுனு தொட்டு இன்று வரை அவர் வெறி மாறவில்லை !

புரியலையோ உங்களுக்கு ? உணர்வு மரத்த சில தமிழ் அடிமையரே !

சுயநல பிறவிகளே ! கொஞ்சம் உணர்வை விதையும் உள்ளத்தில் !

கோசலம் கொஞ்சம் தந்து உம் கோவணத்தை உருவுகின்றான்!

நா சலம் ஒழுக வரிசையில் நிற்கின்றீர் "அடிமை" பட்டம் வாங்க !

சுயநலமற்ற அந்த தெய்வங்கள் முனையில் உமக்காய் காவல் நிற்க

சுயலத்தொடு வாழ்ந்த அதே மனித பிறவிகள் தானே நாங்கள் ?

இனியாவது மாற வேண்டும் ! அடிமையல்ல நாங்கள் என்று கூறும்!

ஆண்ட பரம்பரை ! தோல்வியில் இருந்து மீண்ட பரம்பரை ஆகும் இனி!!

ஓராண்டு முடிவதிலே இன்று நாங்கள் முடியவில்லை என்கின்றோம் !

உரக்க குரல் கொடுக்க உள்ளத்தில் உணர்வோடு நிமிர்ந்து முன்வாரும் !

முள்ளிவாய்காலில் அவன் கொள்ளி வைத்தது ஒரு பெரு நெருப்பு

அது தமிழன் ரத்தத்தில் நின்று எரியும் ஒரு அனுமார் வால் தீ !

சிவலிங்கம் பிடுங்கி இங்கே புத்தர் சிலை பல முளைக்குது பார் !

கோபுரங்கள் தகர்த்து இங்கே விகாரரைகள் இன்று தழைக்குது பார் !

சிலுவையிலே அறைகின்றான் எங்கள் மாவீரர் தம் கல்லறைகளை !

வெறும் உடலோடு வேடிக்கை பார்போமா இல்லை வெடிப்போமா ?

உறுதியோடு முன்னெடுப்பேன் என் உரிமை போர் இனி அடங்காது !

அறுத்தெறிந்து வீசிடுவோம் அடிமைத்தனத்தை எங்கள் உளமிருந்து !

துவக்கெடுக்க சொல்லவில்லை குண்டோ வைக்க சொல்லவில்லை !

உணர்வோடு மோதிடுவோம் ! உலகோடு இணைந்து போர் தொடுப்போம் !

தோற்றதாக நீ நினைத்தால் நீ கோழை , தோல்விகள் படிப்பினையே!

தமிழ் தாயின் சேலை தொட்டவனை தோலுரிக்க மான உணர்வு போதும்!

இயங்காத ஒரு கூட்டம் அது எதற்கும் உதவாத அந்த சுயநல கூட்டம் !

மயங்காதே , கலங்காதே , காலம் பதில் சொல்லும் அது வரை போராடு!

முள்ளிவாய்க்கால் அது எங்கள் பள்ளி! கற்று தந்த பாடங்கள் பலவுண்டு !

அதன் முடிவில் சிங்களத்தின் வெற்றி விழா, மறக்குமா தமிழா உனக்கு ?

சொல்லி அடிப்போம் இனி ஒவ்வோர் முனையிலும் சிங்கள வெறியனை!

நான் தோற்றால் என் பிள்ளை ! அடையும் வரை அடங்காது எங்கள் தாகம்!

முள்ளிவாய்க்கால் உறவுகளை மனதில் வைப்போம்!

தள்ளி நிற்கும் தருணமல்ல என உணர்ந்து நிற்போம் !

கொள்ளி வைத்தவனை எரிக்கும் நெருப்பாகி எரிவோம்!

இனி இது ஒவ்வொரு தமிழனின் போர் ஆகட்டும் !

Sujay Sujatharan

Link to comment
Share on other sites

ஈழத்தமிழர் நினைவு -மே 16 2009

* எமது மக்கள் அனைத்துலக சமூகத்தின் ஆதரவை எதிர்பார்த்துள்ளனர். எமது மக்களின் எதிர்காலம் தொடர்பான முழுப்பொறுப்பையும் அனைத்துலக சமூகம் பொறுப்பேற்க வேண்டும். -தமிழீழ விடுதலைப்புலிகள்.

* மூன்றாவது தரப்பிடம் சரணடைய தயார் - தமிழீழ விடுதலைப்புலிகள்

* 'மக்கள் பாதுகாப்பு வலயம்' மீது சிங்களப் படையினர் இன்று வெள்ளிக்கிழமை ஆட்லெறி எறிகணைத் தாக்குதல்களையும் வெள்ளைப் பொஸ்பரஸ் அடங்கிய இரசாயன ஆயுதங்களையும் கொண்டு தாக்குதல்களை நடத்திக்கொண்டிருக்கிறது. மக்கள் பாதுகாப்பு வலயப் பகுதி தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது. இங்குள்ள ஒரு லட்சத்து 65 பேரை காப்பாற்ற வேண்டுமானால் அனைத்துலக சமூகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். இதனை எமது கடைசி வேண்டுகோளாகக் கேட்டுக்கொள்கிறோம்’’என்று தெரிவித்துள்ளார் - விடுதலைப் புலிகளின் அனைத்துலக தொடர்பக பேச்சாளர் திலீபன்.

*மனித உடல் அழுகும் துர்நாற்றம் வன்னியெங்கும் பரவுகிறது, காயப்பட்டோர் கவனிப்பாரின்றி சாகவிடப்படுகின்றனர்.

* யேர்மனியின் düsseldorf நகரின் பிரதான தொடருந்து நிலையம் தமிழ் இளையோரால் முடக்கப்பட்டுள்ளது. ஐந்து தண்டவாள பாதைகள் இவ்வாறு முடக்கப்பட்டுள்ளது. 300 - 500 வரையிலான இளைஞர்கள் இதில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிகிறது.

* விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து பிரதேசங்களை முழுமையாக மீட்டெடுததை பெரும் விழாவாகக் கொண்டாத் திட்டமிட்டுள்ளது சிறிலங்கா அரசு. இந்த வெற்றி விழாவை கொழும்பு உட்பட இலங்கை முழுவதும் வாழும் தமிழ் மக்கள் பெரும் வெற்றி விழாவாகக் கொண்டாட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

* பொதுமக்களுக்கான தேவைகளைக் கவனிப்பதற்கு மனிதாபிமான அமைப்புக்களை கொழும்பு அனுமதிக்கவில்லை என்றால் அதற்கான விளைவுகளை சிறிலங்கா எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிறவுண் சிறிலங்கா அரசாங்கத்தை கடுமையாக எச்சரித்திருக்கின்றார்.

"சிறிலங்கா அரசாங்கம் தான் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்" எனவும் பிரித்தானியப் பிரதமர் கடுமையாக எச்சரித்தார்.

*இந்திய தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி (காங்கிரஸ்) : 254; தேசிய ஜனநாயக கூட்டணி (பா.ஜனதா):156; 3வது அணி: 72; மற்றவை-35 * அதிக இடங்களில் வெற்றி: மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி; மன்மோகன்சிங் பிரதமர் ஆகிறார்.

ப.சிதம்பரம் 3354 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

வைகோ 17,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி.

* "பெரும்பான்மைச் சிங்களவர்கள் தமிழர்களை ஏற்றுக்கொண்டு, அவர்களின் உயிர்வாழ்தலை அவர்களே தீர்மானிக்கும் உரிமையை அவர்களுக்கு வழங்காதவரை தமிழர்களின் இலட்சியம் சிறு நெருப்புத்துகளிலிருந்து பெரு நெருப்பாக எழுந்துவருவதைத் தடுக்க முடியாதிருக்கும்" என்று கடந்த வியாழன் வந்த தனது இதழில் பினான்ஸியல் டயிம்ஸ் ஆசிரியர் தலையங்கம் தீட்டியுள்ளது.

Link to comment
Share on other sites

இந்த வாரம் முழுவதும் படுகொலை செய்யப்பட்ட எம் உறவுகளை சிந்திப்போம்.

பல்லாயிரம் அப்பாவி ஈழத் தமிழர்களை ஈவிரக்கமின்றி படுகொலை செய்த இந்திய சிங்கள இனப் படுகொலையாளர்கள் கூண்டுடன் அழியவேண்டும், தர்மம் நிலைக்க வேண்டும் என எமது பிரார்த்தனைகள் அமையட்டும்.

இந்திய சிங்கள இனப் படுகொலையாளர்களுக்கு உதவிய அனையவரும் அழியவேண்டும், தர்மம் நிலைக்க வேண்டும் என எமது பிரார்த்தனைகள் அமையட்டும்.

எமது விடிவுக்கும், சுதந்திரத்துக்கும் பிரார்த்திப்போம்.

தமிழருக்கு பூரண சுதந்திரம் கிடைக்கும் வரை அனைவரின் பிரார்த்தனைகளும் இதுவாகவே இருக்கப்போகுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைவர் வானில தப்பி போக முயற்சி செய்யேக்க சுடுபட்டதா ஒரு வெடிய காட்டுறினம்.... மெழுகால செய்ததுமாதிரி மினுங்கிது. போர் இப்பிடி முடிஞ்சதயே நம்பேலாமல் இருக்க உந்த மெழுகு பொம்மைய நம்புவோமா. சாள்ஸ் அண்டனியில்ல காட்டினது அவரது உருவ ஒற்றுமைகொண்ட இன்னொருவர்.... சாள்ஸ் அண்டனி கனடாவில நலமா இருக்கிறா எண்டு புதிய சர்ச்சை மெழுகுசிலை தலைவரோட சேத்து நடக்கிது. புலித்தேவன் நடேசன் பற்றிய மனித உரிமை சர்ச்சை தொடருது. புகைமண்டல காட்சிகள் 2 நாள் நிசப்தம் எல்லாத்தையும் பாக்க முடிஞ்சிட்டுதோ எண்ட பயம் வந்திட்டிது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போரினால் கொல்லப்பட்ட அனைத்து இலங்கைவாழ் மக்களுக்கும் எனது அஞ்சலிகள் உரித்தாகட்டும்.

Link to comment
Share on other sites

ஈழத்தமிழர் நினைவு -மே 17 2009

* பாதுகாப்பு வலயத்தில் பொதுமக்கள் இப்போது இல்லை எனவும் அவர்கள் அனைவரும் வெளியேறிவிட்டனர் எனவும் ஒரு பிரச்சாரத்தை மேற்கொண்டடுது சிறிலங்கா அரசாங்கம்.

* போர்ப் பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேவருவதற்கு எந்தவிதமான தடையும் இல்லை என்று சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் அறிவித்து வருகின்ற போதிலும், அங்குள்ள மக்கள் வெளியேறுவதற்கு எந்தவிதமான சந்தர்ப்பத்தையும் கொடுக்காமல் தாக்குதலை நடத்திக்கொண்டது.

* முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் இரண்டு சதுர கிலோ மீற்றர் பகுதியிலேயே தற்போது கடுமையான போர் நடைபெற்று வருவதாகவும் இப்பகுதியில் பெரும் தொகையான மக்கள் கொல்லப்பட்டு, உடலங்கள் குவியல் குவியலாகக் காணப்படுவதாகவும் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை தெரிவித்தார்.

* படுகாயமடைந்த இந்த 25 ஆயிரம் பேரையும் இரட்டைவாய்க்கால் அல்லது வட்டுவாகல் பகுதி ஊடாக வெளியே கொண்டுவருவதற்கு அனைத்துலகப் பொறுப்பாளர் செ.பத்மநாதன் மூலமாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் நாம் கோரிக்கை முன்வைத்தோம். ஜெனீவாவில் உள்ள அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் கேட்டுக்கொண்டோம். நாம் அவர்களை அனுப்பிவைக்கின்றோம் நீங்கள் பொறுப்பு எடுங்கள் எனக் கேட்டோம். இருந்தபோதிலும் அதற்கு உரிய பதில் கிடைக்கவில்லை - தமிழீழ விடுதலைப்புலிகள்.

* மருத்துவர்களான வரதராஜா, சண்முகராஜா, த.சத்தியமூர்த்தி உட்பட ஆறு மருத்துவர்கள் இவ்வாறு படையினரால் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இவர்கள் தனிமையில் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாவும் இவர்களைப் பார்வையிடுவதற்கு அனைத்துலக செஞ்சிலுவைச் சங்க குழுவினருக்குக் கூட அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாக 'இன்னர் சிட்டி பிறஸ்' செய்தி வெளியிட்டிருக்கின்றது.

* இலங்கையில் 26 ஆண்டுகளாக நடந்து வரும் போர் ஒரு முடிவுக்கு வரும் கட்டத்தை எட்டியிருப்பது போல் தோன்றும் நிலையில் , அந்தப்பகுதியில் மிகவும் கடினமான சூழலில் பணியாற்றிவந்த வரதராஜா, சத்யமூர்த்தி போன்ற மருத்துவர்கள் பாராட்டப்படவேண்டியவர்கள், கௌரவிக்கப்படவேண்டியவர்கள் என்று ஐ.நா மன்ற இலங்கை அதிகாரி கோர்டன் வெயிஸ் கூறியுள்ளார்.

* அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளிண்டன், பிரிட்டன் பிரதமர் கோர்டன் பிரௌன், பிரிட்டன் வெளியுறவுச் செயலர் டேவிட் மிலிபேண்ட், ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் ஆகியோர்க்கு வைகோ (17.5.2009) மின் அஞ்சல் மற்றும் தொடர்புடைய அலுவலகங்களுக்குத் தொலைநகலில் அவசரக்கடிதம்.

* யேர்மனியில் பிராங்க்ஃபோர்ட் நகர பிராதான தொடருந்து நிலையம் தமிழர்களால் முடக்கப்பட்டது. 500 - 1000 வரையிலான தமிழ் மக்கள் தொடருந்து நிலையத்தை முற்றுகையிட்டு, தண்டவாளத்தில் இறங்கி மறித்து, கொட்டொலிகளை எழுப்பி, சிறிலங்காவில் தமிழ் மக்கள் படும் அவலத்தை தெரியப்படுத்தினர்.

* வணங்கா மண் பயணத்தை கடந்த ஏப்ரல் 20 ஆம் திகதி ஆரம்பித்தது. யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களிற்காகன அத்தியாவசிய பொருட்களுடன் புறப்பட்ட 'வணங்கா மண்' - கருணைத்திட்ட நடவடிக்கை கப்பல். தனது பயணத்தை ஐரோப்பாவில் இருந்து ஆரம்பித்தது. புலம்பெயர் வாழ் மக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற இப்பொருட்களுடன் கூடிய இக்கப்பல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2009 மே 18 கோவணத்தொட சேறு பூசின வொடி ஒண்ட காட்டி தலைவற்ற வெடியெண்டு NDTV CNN BBC நியூஸ்ல சொல்லுப்படுது. தயா மாஸ்டரும் கருணாவும் வொடிய பாத்துக்கொண்டு இருக்கினம். :o

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.