Jump to content

நெஞ்சு எரிச்சல் ஏன்?


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வயிற்றில் செரிமானத்திற்கு பயன்படும் அமிலங்கள், வயிற்றையும் வாயையும் இணைக்கும் ஈஸோபாகஸ் எனும் பகுதியில் புகும் போது ஒரு புளிப்பு தன்மையோடு, எரிச்சல் ஏற்படுகிறது. புண்களும் ஏற்படலாம். பொதுவாக, இந்த பகுதிக்கும் வயிற்றிற்கும் இடையில் இருக்கும் ஸ்பிங்க்டர் என்ற குழாய் சரியாக வேலை செய்யாவிட்டால் நெஞ்சு எரிச்சல் ஏற்படுகிறது. குடலிறக்கம் போன்ற சில காரணங்களாலும் நெஞ்சு எரிச்சல் ஏற்படலாம்.

கொழுப்பு, மதுபானங்கள், புகை பிடித்தல் இனிப்புகள், சாக்லெட் மற்றும் மிண்டுகள், இந்த பகுதியில் திசுவை வலுவிழக்க செய்து, வயிற்றிற்கும் ஈஸோபாகஸிற்கும் உள்ள திறப்பை குறைக்கிறது. இதனால் நெஞ்சு எரிச்சல் ஏற்படும். அதிகமாக சாப்பிடுதல், வேக வேகமாக சாப்பிடுதல், ஒழுங்காக மெல்லாமல் விழுங்குதல், சரியாக சமைக்காத உணவுகளை உண்ணுதல் போன்றவற்றால் நெஞ்சு எரிச்சல் ஏற்படும். பொதுவாக, நாம் சாப்பிடும் உணவுகளால் ஏற்படுவதை சாப்பாட்டிற்கு பின் வயிற்றில் சுரக்கும் அமிலங்கள் அதிகமாக சுரப்பதால் இந்த பிரச்னை ஏற்படுகிறது.

இதனை தடுக்க நாம் சில வழிகளை கையாளலாம். முதலில், அதிகமாக இந்த பிரச்னைகளை உடையவர்கள் மூன்று வேளைகள் அதிகமாக உண்பதை விட, சிறு சிறு அளவில் அவ்வப்போது உணவை உட்கொள்ளலாம். காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்ஸ் அதிகமாக உள்ள அரிசி மற்றும் பிரட் அதிகமாக உணவில் சேர்த்து கொள்ளலாம். ஆனால் அதிகமாக உண்ண கூடாது. காபி, டீ, பியர், வைன் போன்றவை அமிலம் சுரப்பதை துõண்டுவதால் இவற்றை அதிகம் குடிக்க கூடாது. துõங்கும்முன் பால் குடிப்பது அமிலச் சுரப்பை அதிகப்படுத்துவதாக கூறப்படுகிறது.

வாசனை பொருட்கள் அதிகமுள்ள உணவு, வறுத்த உணவுகளை தவிர்க்கலாம். அழுத்தத்தை தவிர்த்து, வாழ்க்கை முறையை மாற்றுதல் நெஞ்சு எரிச்சலை குறைக்க உதவும். சாப்பிட்ட உடனே படுக்கைக்கு செல்ல கூடாது. அதிக எடையும் நெஞ்சு எரிச்சலை துõண்டுவதால், எடையை குறைக்கலாம்.

உணவிற்கிடையில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்ல பலன் தரும். வாழைப்பழத்தில் சுக்ரோஸ், பிரக்டோஸ் மற்றும் குளுக்கோசுடன் நார் சத்தும் உள்ளதால் நன்மையை தருகிறது. அதிகமாக சாப்பிட்ட பிறகு உங்கள் வாயில் புளிப்பு தன்மை ஏற்பட்டால் அதிக அமிலம் சுரந்திருப்பதை அறியலாம். இதனால் ஆபத்தான வயிற்று புண்களும், ஈஸோபாகஸில் புற்றுநோய் கூட ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, அதிக கவனம் தேவை.

நன்றி: தினமலர்

Link to comment
Share on other sites

  • 2 years later...
  • கருத்துக்கள உறவுகள்

சாப்பிட்டதும் நெஞ்சு எரிச்சலா? பிரச்னையே நம்மிடம் தான்

'உணவு உண்டதும் நம்மில் பலருக்கு நெஞ்சில் எரிச்சல் ஏற்படுவது வழக்கம். மக்கள் தொகையில் 30 முதல் 50 சதவீதம் பேருக்கு நெஞ்சு எரிச்சல் உள்ளது. இவர்களில் 100ல் 20 பேருக்கு இது அன்றாடப் பிரச்னையாகவும்இ மீதிப் பேருக்கு மழைக் காலக் காளான் போல் வரும்.

காரணம் என்ன?: நெஞ்சு எரிச்சலுக்கு அடிப்படைக் காரணம் இரைப்பையில் இருக்கும் ஹைட்ரோகுளோரிக் அமிலம் தன் எல்லைக் கோட்டைக் கடந்து உணவுக் குழாய்க்குள் தேவை இல்லாமல் நுழைவது தான். உணவுக் குழாயின் தசைகள் காரமானஇ சூடானஇ குளிர்ச்சியான உணவுகளைத் தாங்குமே தவிர அமிலத்தின் வீரியத்தைத் தாங்கும் சக்தி அவற்றுக்கு இல்லை. இந்த அமில அலைகள் அடிக்கடி மேலேறி வரும்போது அங்குள்ள திசுப்பலத்தை அரித்துப் புண்ணாக்கிவிடும். இதனால் நெஞ்சு எரிச்சல் ஏற்படும்.

மிகவும் இனிப்பானஇ காரமானஇ கொழுப்பு மிகுந்த உணவுகளை அடிக்கடி சாப்பிட்டால் உணவுக் குழாயின் கீழ் முனைக் கதவு பழசாகிப் போன சல்லடை வலை போல "தொள தொள' வென்று தொங்கி விடும். விளைவுஇ இரைப்பையில் இருக்கும் அமிலம் மேல்நோக்கி வரும்போது அதைத் தடுக்க முடியாமல் உணவுக் குழாய்க்குள் அனுமதித்துவிடும்.

இரைப்பையில் அளவுக்கு அதிகமாக அமிலம் சுரந்தாலும் அது உணவுக் குழாயின் கீழ்ப்பகுதிக்குச் சென்று காயத்தை ஏற்படுத்தும். "அல்சர்' எனப்படும் இரைப் பைப் புண் உள்ளவர் களுக்கு இப்படித் தான் நெஞ்சு எரிச்சல் ஏற்படுகிறது.

இறுக்கமான உடையால்...: வயிற்றில் அதிக அழுத்தம் இருந்தாலும் நெஞ்சு எரிச்சல் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். உடல் பருமனாக உள்ளவர்கள்இ கர்ப்பிணிகள்இ இறுக்கமாக உடை அணிபவர்கள்இ வயிற்றில் கட்டியைச் சுமந்து கொண்டிருப்பவர்கள் ஆகியோருக்கு நெஞ்சு எரிச்சல் உண்டாக இதுவே காரணம். வழக்கமாகஇ பெண்கள் சாப்பிட்ட பின்பு வீட்டை சுத்தம் செய்கிறேன் என்று குனிந்துஇ நிமிர்ந்து வேலை செய்வர். இதனால் வயிற்றில் அழுத்தம் அதிகரித்துஇ அமிலம் மேலேறிஇ நெஞ்சு எரிச்சலை உண்டாக்கிவிடும்.

சிலருக்கு இரைப்பையின் சிறு பகுதி மார்புக்குள் புகுந்து உணவுக் குழாயை அழுத்தும். இதன் விளைவாக குழாயின் தசைகள் கட்டுப்பாட்டை இழந்துவிடஇ இதற்காகவே காத்திருந்தது போல் இரைப்பை அமிலம் உணவுக் குழாய்க்குள் படையெடுக்கஇ அங்கு புண் உண்டாகி நெஞ்சு எரிச்சல் தொல்லை கொடுக்கும். பலருக்கு உணவு சாப்பிட்ட உடன் நெஞ்சு எரிச்சல் ஏற்படும். சிலருக்குப் பசிக்கும்போது ஏற்படும். பொதுவாக இந்தத் தொல்லை இரவு நேரத்தில் தான் அதிகமாக இருக்கும்.

என்ன பரிசோதனை செய்வது?: அடிக்கடி நெஞ்சில் எரிச்சல் உள்ளவர்கள் நோயின் துவக்கத்திலேயே அகநோக்கி (எண்டோஸ்கோப்) மற்றும் இதய மின்னலை வரைபடம் (இ.சி.ஜி.இ) பரிசோதனை செய்து கொண்டால் காரணம் தெரிந்து விடும்.

ஆரம்ப நிலையில் உள்ள நெஞ்சு எரிச்சலை மிக எளிதில் குணப்படுத்தி விடலாம். மசாலா கலந்தஇ எண்ணெய் மிகுந்தஇ கொழுப்பு நிறைந்தஇ புளிப்பேறிய உணவுகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். ஒரே நேரத்தில் வயிறு நிறையச் சாப்பிடுவதை விட மூன்று அல்லது நான்கு மணி நேர இடைவெளிகளில் சிறிது சிறிதாக சாப்பிடலாம். டாக்டர் கு. கணேசன்இ ராஜபாளையம்.

நன்றி: தினமலர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணைப்புக்கு நன்றி கறுப்பி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அ"றோ"கரா,,,,

என்னடா உண்டியலோடு நிற்கிரவன் இங்கு வந்து விட்டானே? என்று நீங்கள் யோசிக்கலாம்!!! என்ன செய்கிறது ....

நெஞ்சு எரிச்சல்:

இதற்கு ...

* வயிற்றுப்புண்(அல்சர்)

* நேரகாலத்திற்கு உணவுண்ணாமை

* சிலருக்கு, இரைப்பையில் சமிபாட்டுக்கு சுரக்கும் அமிலத்தின் கூடுதலான அளவு

* ...

* பரம்பரையைக் கூட கூறுவார்கள்!!!

.... ஆனால் அண்மையில் சில சில மாரடைப்பினால் பாதிக்கப்பட்ட எம்மவர்கள் சிலர் "இந்த நெஞ்செரிவு, மாரடைப்பின் முன் கூட்டிய அறிகுறி" சொல்லக் கேட்டிருக்கிறேன். எனக்கு இது எந்த அளவிற்கு நவீன மருத்துவத்துடன் ஒத்துப் போகுதோ தெரியவில்லை! அண்மையில் இளம் வயதிலேயே(41) மாரடைப்பினால் பாதிக்கப்பட்ட எனது நெருங்கிய உறவினர் ஒருவரும் நீண்ட காலமாக இதே நெஞ்செரிவினால் பாதிக்கப்பட்டருந்தார்!!!

நானும் இந்த நெஞ்செரிவினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறேன். தொடர்ச்சியாக "கவிஸ்கோன்" போன்ற மருந்துகளினாலேயே கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறேன். இதற்கு அடிக்கடி பால் அருந்துவதால் கட்டுப்படுத்தலாம்!!!! குறிப்பாக "உறைப்பு, எண்ணை, ஊறுகாய் போன்ற புளிப்புத்தன்மையானவைகள், மதுவகை, .." தவிர்ப்பது நல்லது!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ܼ¡¾ º¢§É¸õ, ¿¡ðÎ ¿¼ôÒ ±øÄ¡õ À¡÷òÐ §¸ðÎ ÀƸ¢Â¾¡ø ¾¡ý ¯ó¾ ¦¿ï¦ºÃ¢× ²üÀðÊÕìÌõ

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.