Jump to content

"தமிழீழத் தேசியத் தலைவரின்" "இலட்சியத்தை" விலைபேசத் துணிந்துள்ள: “அனைத்துலகத் தொடர்பகம்”.................. ?


மக்கள் கருத்துக்கணிப்பு  

14 members have voted

You do not have permission to vote in this poll, or see the poll results. Please sign in or register to vote in this poll.

Recommended Posts

"தமிழீழத் தேசியத் தலைவரின்" "இலட்சியத்தை" விலைபேசத் துணிந்துள்ள: “அனைத்துலகத் தொடர்பகம்”.................. ?

sathi_2010.jpg

அவதூறு என்பது மோசமான பலவீனர்களின் கடைசியும் முதலுமான ஆயுதம்

* இன்று புலத்தினில் தமிழ் மக்களிடையே எதிரியை விட கொடுமையான துரோகத்தனப் பூகம்பம் பற்றி எரியத் தொடங்கியுள்ளது. இது தேசியத்தலைவரின் இலட்சியக்கனவை எரித்துச் சாம்பலாக்கப்போகிறது. இது புரியாத உணர்ச்சியும் துடிப்பும் மிக்க புலம்பெயர்ந்த இளம் சமுதாயம் இதற்குள் பலியாகிக்கொண்டிருக்கிறது. ஆனாலும் வராலாறு தன் வல்லமையை உரிய காலத்தில் நிகழ்த்திக்காட்டும். இவற்றை எதிர்கொள்வதற்கு நாம் அஞ்சத்தேவையில்லை. நாம் நியாயத்தின் பால் நிற்பவர்கள் நம்முடைய ஒற்றுமையையும், மன வலிமையையும் குலைப்பதற்கு எந்த வகையில் யார் முயன்றாலும் நாம் அவற்றை எதிர்கொள்ளுவோம். வெற்றியும் காணுவோம் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு. எப்போதும் முதுகுக்குப் பின்னால் நின்றால் குத்தமாட்டோம். கூட இருந்தே குழிபறிக்கமாட்டோம். சத்தியம் சாகாது என்ற தலைவனின் தத்துவத்தை சத்தியமாய் கொண்டவர்கள் உண்மையை எங்கும் உரைப்பதற்கு தயங்காததவர்கள். “பிரபாகரனிசம்” என்கின்ற தத்துவத்தில் பிறந்தவர்கள் இன்று அவரை வைத்து வாழ நினைப்பதுவும் அவருடன் இருந்தவர்களையே துரோகிகளாக சித்தரிப்பதுவும் அருவருக்கத்தக்கது. அவமானமானது, கோழைத்தனத்தைவிட கொடியது, இந்தக்கொடுமையை செய்பவர்கள் வேறு யாருமல்ல. அனைத்துலகத்தொடர்பகத்தின் செயற்பாட்டில் இருக்கும் சில வன்மம் கொண்டோர். இவர்களின் உண்மைக்குப்புறம்பான செய்திகள் மக்களை வேதனைப்படுத்துவதால் நாம் இந்த துச்சாதனர்களை தோலுரிக்கத் தயங்கமாட்டோம். அதேவேளை அநாகரீகமாகவும் எழுதமாட்டோம்.

ஆனால்……

நாங்கள் உண்மை சொன்னால் உலகு நம்பும்….

காரணம் எமது அடையாளம் நேரிடையானது.

எனவே வேண்டாம் இந்த விபரீதம் .

இலட்சியத்துக்காக களம் புகுந்தவர்கள் நாங்கள் சாவை சந்தோசமாக ஏற்கத்துணிந்தவர்கள்.

கூட இருந்தவனாகினும் கொலை பாதகனாகினால் உயிர்கொடுத்து மாவீரரின் இலட்சியக்கனவுகாப்போம்.

* என்ன? நேரடியாக அனைத்துலகத் தொடர்பகத்தை குற்றம் சாட்டுகிறோம் என்று உங்கள் புருவம் உயர்ந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள்.

தமிழீழ தேசியத்தலைவரின் விரலசைப்பில் வாழ்ந்து அவரால் சர்வதேச உறவுகளுக்கான செயலராய் நியமனம் பெற்ற ஒருவரை அனைத்துலகத்தொடர்பகத்தின் உத்தியோக பூர்வ இணையத்தளங்கள் புலிகளின் குரல் உட்பட துரோகி என்று எழுதிய போது உங்கள் எவருக்கும் மனம் உறுத்தவில்லை என்றால்

* நிச்சயம் எமக்கும் அதே மனவுறுத்தல் இருக்கும் என்று எண்ணிக்கொண்டு கொலைவாள் எடுத்துவிடாதீர்கள் முடிந்தால் கொடியவர்களை இனம் கண்டு விடுதலைத்தீ மூட்டுங்கள் அல்லது புலிகளின் உயர்ந்த இலட்சியத்தையும் தியாகத்தையும் கொச்சைப்படுத்தி எதிரிக்கு களம் அமைத்துக்கொடுக்காதீர்கள் "குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்கக் கொளல்".

என்று உரியவர்களுக்கு சொல்லி தலைவன் கனவை நனவாக்குங்கள்.

இனி:

நீங்கள் யார்? உங்கள் இலக்கு என்ன? உம்மை அறிந்தா இதைச்செய்கிறீர்?

தமிழீழ விடுதலைப் போராட்டம் இன்று அதிகமாகச் சம்பாதித்திருப்பது நண்பர்களையல்ல- எதிரிகளையும் துரோகிகளையும் தான். முள்ளிவாய்க்காலில் ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்த பின்னர் தமிழரின் தேசிய விடுதலைப் போராட்டம் முன்னெப்போதும் இல்லாதளவுக்கு சின்னாபின்னமாகச் சிதைந்து போயுள்ளது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் எதிர்காலம் மற்றும் அதன் தலைமையின் இருப்புத் தொடர்பாக யதார்த்தத்துக்கு முரணாகச் செயற்படுவோரின் விளைவாகவே இத்தனை சீரழிவு ஏற்பட்டிருக்;கிறது.

* தாயகத்தில் புலிகள் இயக்கம் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்ட போது ஆயிரக்கணக்கான போராளிகள் களத்தில் உயிரைக் கொடுத்தனர். எஞ்சியிருந்த போராளிகள் பலர் பிடிபட்டனர். பலர் சரணடைந்தனர். வேறு சிலர் உயிர்தப்பி வெளிநாடுகளுக்குச் சென்றனர்.

ஒரு கொடிய போரின் விளைவாக நடந்த இந்த விளைவுகளை ஏற்க மறுக்கும் தரப்பினர்-கற்பனையானதொரு கோட்டை தமக்குத் தாமே வரைந்து கொள்ள முற்படுவது சுத்த வியாபாரத்தனம்.

* இவர்கள். மரணமான போராளிகளைப் கேவலப்படுத்துவது முதற்கொண்டு பிடிபட்டவர்கள், தப்பிச் சென்றவர்களைத் துரோகிகள் என்றும் காட்டிக் கொடுப்போர் என்றும் சுலபமாகவே வெளிநாடுகளில் இருந்து கொண்டு பட்டங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தாயகத்தில் சிங்களப் படைகளுக்கு எதிராக எதையுமே சாதிக்க வக்கற்றவர்களாக இருந்தவர்களே- இன்று புலம்பெயர் தேசங்களில் பாதுகாப்பாக இருந்து கொண்டு மக்களை கற்பனைச் சாலையின் மீது நடக்க வைக்க முனைகிறார்கள்.

* அறிவுபூர்வமாகச் சிந்திக்கவோ, செயற்படவோ திராணியற்றவர்கள் தான் அவர்கள் கூறுவதை இன்னும் நம்பிக் கொண்டிருக்க முடியும்.

மே 19 பிரளயம் நிகழ்ந்து ஒரு வருடமாகப் போகிறது.

இதற்குள் தாயகத்திலும், புலத்திலும் எத்தனை மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன. எத்தனை பிரிவுகள்,பிளவுகள், வேதனைகள், சோதனைகளைத் தமிழினம் சந்தித்திருக்கிறது.

* பிரபாகரனுக்குப் பிறகு புலிகள் இயக்கத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து செயற்பட ஆரம்பித்த கே.பியை வசைபாடி அவரை சிங்கள அரசின் பொறிக்குள் சிக்க வைத்தனர். சிங்கள அரசுடன் இணைந்து அவர் செயற்படுவதாக, காட்டிக் கொடுப்பதாக வேறு பிரசாரங்கள் செய்தனர். அதை நிரூபிக்க யாரிடமும் எந்த ஆதாரங்களும் இல்லை.

* சரி அவர் காட்டிக் கொடுக்கிறார் என்றால் அதை இவர்களிடம் சொன்னது யார் என்ற கேள்வி வருகிறது.

அப்படியானால்

* கே.பியை துரோகி என்று பழிக்கும் தரப்பினருக்கும் சிங்களப் பேரினவாத அரசுக்கும் இடையில் என்ன தொடர்பு இருக்கிறது?

ஆயுதங்களை மௌனமாக்கும் முடிவை கே.பி மூலம் அறிவிக்கப்பட்டதையே இன்று கேள்வியாக எழுப்புகின்றனர். அந்த முடிவை பிரபாகரன் எடுக்கவில்லை என்று இருவேறு காலங்களுக்கிடையே ஒப்பீடு செய்கின்றனர். ஆயுதங்களை மௌனமாக்கும் முடிவை எடுத்தபோதே கே.பி சொல்வது தவறு என்று அன்றே கூறத் திராணியற்றிருந்தவர்கள் தான் இன்று, அவர் சிங்கள அரசின் சிறையில் இருக்கும் போது அப்படிச் சொல்ல முனைகின்றனர்.

முள்ளிவாய்க்காலில் நடந்தது என்ன?

* வீரஞ்செறிந்த விடுதலைப் போர் மண்டியிட நேர்ந்தது என்பதே உண்மை. அதை வரலாற்றில் யாரும் மறைக்கவோ, மறுக்கவோ முடியாது. அந்தக் கொடிய போருக்குள் இருந்தவாறு தேசியத் தலைமை எடுத்த முடிவையே இன்று கேள்வி கேட்கும் துணிவு இவர்களுக்கு எப்படி வந்தது.

அதற்குத் தூண்டுகோலாக இருப்பது யார்?

கே.பியின் வழிகாட்;டலில் உருத்திரகுமாரன் நாடுகடந்த தமிழீழ அரசை அமைக்கும் முயற்சியில் இறங்கினார். இப்போது அவரை அந்த முயற்சியில் இருந்து இறங்க வைக்கும் நோக்கில் பலமுனைகளில் இருந்து அவர் மீது தாக்குதல் தொடுக்கப்படுகிறது.

* உருத்திரகுமாரனின் ஆற்றலையும், அறிவையும் கேள்விக்குட்படுத்தும் வகையிலும், அவருக்கு தமிழீழத் தேசிய விடுதலைப் போரை முன்னெடுக்கத் திராணியில்லை என்ற வகையிலும் பிரசாரங்கள் செய்யப்படுகின்றன.

* இவையெல்லாம் சரியென்றே வைத்துக் கொண்டாலும் கூட, அத்தகைய குற்றச்சாட்டை சுமத்துவதற்கு இவர்களில் யாருக்கு என்ன தகுதி இருக்கிறது? தகைமை இருக்கிறது?

ஆயுதப் போராட்டத்தை தாயகத்தில் அழித்து விடும் முயற்சியில் வெற்றிகண்ட சிங்கள அரசுக்கு ஒரு கலக்கம் இருந்து வந்தது. புலத்தில் தமிழ்மக்கள் பலமாக இருக்கிறார்களே அவர்களை எப்படிச் சமாளிப்பது என்பதே சிங்கள அரசின் அச்சமாக இருந்தது.

இது கடந்த வருடம் இதே காலத்தில் இருந்த அச்ச நிலைமை. ஆனால் இன்று புலத்துத் தமிழர்கள் பற்றி சிங்கள தேசத்துக்கு கொஞ்சமும் அக்கறையோ கலக்கமோ கிடையாது. இதற்குக் காரணம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தைச் சிறுமைப்படுத்தும் வகையில் நமக்குள் நாமே போட்டுக் கொள்ளும் சண்டைதான்.

* ஒருபக்கத்தில் நாடுகடந்த அரசு. அடுத்த பக்கத்தில் வட்டுக்கோட்டைத் தீர்மானம்.

* வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடந்து முடிந்து விட்டது.

அதற்குப் பிறகு என்ன நடக்கப் போகிறது என்பது யாருக்கும் தெரியாத நிலை.

இது ஒரு பக்கத்தின் நிலை.

அடுத்த பக்கத்தில் நாடு கடந்த தமிழீழ அரசின் அரசவைக்கான வாக்கெடுப்பு நடக்கப் போகிறது.

இது தான் இப்போது பிரச்சினை.

* இந்தத் தேர்தலைக் குழப்பி நாடு கடந்த தமிழீழ அரசு என்ற ஒன்று அமைய விடாமல் செய்யும் முயற்சிகள் தீவிரமாக நடக்கின்றன. நாடுகடந்த தமிழீழ அரசுக்கு வெளிநாடுகளில் ஏதாவது வாய்ப்புக் கிடைத்து விடுமோ என்ற அங்கலாய்ப்பே அந்த வசைபாடல்களுக்கும், சேற்றை வாரும் முயற்சிகளுக்கும் காரணமாக இருக்கலாம்.

* வட்டுக்கோட்டைத் தீர்மானத் தரப்பினர் இப்போது தாம் யார் என்று வெளிப்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். அவர்களுக்கான அங்கீகாரம் சர்வதேச அளவில் கிடையாது. இந்தநிலையில் நாடுகடந்த அரசுக்கு வெளிநாடுகள் இடம் கொடுத்து விடக் கூடாது என்பது அந்தத் தரப்பினரின் அச்சமாக இருக்கலாம்.

* நாடுகடந்த அரசுக்கான தேர்தலைக் குழப்புவதே அவர்களின் இப்போதைய முக்கிய தேவை. அதைத் தான் இப்போது செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஒன்றை மட்டும் புலம்பெயர் தமிழர்கள் மறந்து போய்விட்டார்கள். தமிழீழம் என்பது புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கானது அல்ல. அது தாயகத்தில் வாழுகின்ற மக்களுக்கானது.

புலம்பெயர்ந்து வாழும் மக்கள் தாமே வழிகாட்டிகள் போன்று செயற்படுவது மிகவும் முட்டாள்தனமானது.

யதார்த்தத்துக்கு முரணாக அவர்கள் இயங்கி ஒன்றுக்கு இரண்டு தேர்தல்களின் மூலம் மூக்குடைபட்டிருப்பது தான் மிச்சம்.

ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகா என்ற கொடியபாவிக்கு ஆதரவு தெரிவிக்க கூட்டமைப்பு முடிவு செய்தது மிகப் பெரிய தவறு. அதற்குத் துணை நின்றது புலம்பெயர் சமூகத்தின் ஒருபகுதியினர் என்பதை யாரும் மறுக்க முடியாது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தை வோரோடு நசுக்கிய ஒரு பாதகனுக்குத் துணைபோகும் படி தாயகம் வாழ் மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் அளவுக்கு எமது புலம்பெயர் தேசத்து மக்களில் ஒரு பகுதியினரின் இராஜதந்திரம் மிகவும் கீழ்த்தரமாக இருந்தது.

அத்தோடு விட்டார்களா?

தோற்கிற குதிரையில் பந்தயம் கட்டி தமிழரின் மானத்தை விற்றவர்கள், பொதுத் தேர்தலிலாவது புத்திசாலித்தனத்தைக் கடைப்பிடித்திருக்கலாம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவை உருவாக்கி - கஜேந்திரகுமார் தலைமையில் புதிய அணியொன்றை உருவாக்கினார்கள். இதற்குப் பின்னணி புலம்பெயர்தேசத்தின் ஒருபகுதியினர் தான்; என்பதை யாரும் மறுக்கமுடியாது.

இதன் விளைவாக என்ன நடந்தது?

* தமிழ்த் தேசியத்துக்கான மக்கள் முன்னணியை மக்கள் அடியோடு நிராகரித்தார்கள். ஒரு மாமனிதரின் மகனான கஜேந்திரகுமாரை தலைகுனிந்து தோல்வியடைய வைத்தார்கள்.

கடந்த முறை யாழ்ப்பாணத்தில் அதிக விருப்புவாக்குகளைப் பெற்றவர்களை தாம் எப்படி அதைப் பெற்றோம் என்று நிரூபிக்க வைத்தார்கள். இதுதான் புலம்பெயர் தேசத்தவர்களில் ஒருபகுதியினரின் இராஜதந்திரம்.

இது மட்டுமன்றி கடந்தமுறை 22 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பலத்தை 14 ஆகக் குறைத்து விட்டிருக்கிறார்கள். டக்ளஸ் வோனந்தாவையும், ஜதேகவையும் யாழ்ப்பாணத்தில் அதிகாரத்தைச் செலுத்த வைத்தது தான் மிச்சம்.

இன்று யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், ஐதேகவும் ஆசனங்களைப் பெற்றிருக்கிறது என்றால் அதற்கான முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டியது இந்தப் பிளவுக்குக் காரணமான புலம்பெயர் தேசத்தினர் தான். இப்போது அவர்கள் யாருக்காக இப்படியெல்லாம் செய்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறதல்லவா?

* சிங்கள தேசத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு உடன்பாடான வகையில் செயற்படுவது போன்ற சந்தேகம் இவர்கள் மீது ஏற்படுகிறது.

* இந்தியாவைப் பகை நாடு என்று விரோதித்துக் கொண்டும், தமிழரின் உரிமைகளுக்காக ஆக்கபூர்வமாகவும், அறிவுபூர்வமாகவும், யாதார்த்த நடைமுறையுடன் அணுகுவோரைத் துரோகிகள் என்றும் பட்டம் கட்டுவதைவிட இவர்களால் எதைச் சாதிக்க முடிந்தது?

தாயகத்தில் விடுதலைப் புலிகள் அழிவுக்குப் பிறகு இவர்கள் யாரைத் தான் விட்டு வைத்தார்கள்.

எல்லோரையுமே துரோகிகளாக்கியது தான் மிச்சம்.

ஆக தமிழீழம் என்பது துரோகிகளின் நாடு என்றாகி விட்டது.

இது தமிழர்களின் நாடு இல்லை. அப்படித் தான் இருக்கிறது இவர்களின் கதை.

* உண்மையைப் பேசுவோரும் துரோகிகள்- அதை எழுதுவோரும் துரோகிகள்- ஆனால் உண்மையை ஏற்க மறுப்போர், ஏற்கவிடாமல் தடுப்போர் தான் இவர்களைப் பொறுத்தவரையில் இன்று தியாகிகள்.

இந்தளவுக்கும் அவர்கள் தாயகத்து மக்களுக்காக புலம்பெயர்நாடுகளில் எதைச் சாதித்திருக்கிறார்கள்?

புலிகளின் அழிவுக்குப் பிறகு ஒன்றுபட்டு உழைத்திருக்க வேண்டிய புலம்பெயர் சமூகத்தைப் பிளவுபடுத்தி இன்று இக்கட்டான நிலைக்கு கொண்டு வந்திருப்பதன் மூலம் இவர்கள் சாதித்திருப்பது எதனை?

இன்று யார் யாரோ எல்லாம்- யார் யாரையோ எல்லாம் கேவலப்படுத்துவதும், துரோகி என்பதும் சர்வசாதாரணமாகி விட்டது.

* இருபது முப்பது ஆண்டுகளாக விடுதலைக்காகப் போரிட்டவர்களும், போராட்டத்தை தோளில் சுமந்தவர்களும் கூட இவர்களால் துரோகிகளாக்கப்பட்டு விட்டனர். காரணம் சுயலாபம். அதுமட்டுமன்றி இவர்கள் இப்படி செயற்படுவதன் மூலம் சாதிக்க நினைப்பது தமிழின உரிமைப் போராட்டத்தை வீறுகொள்ள வைப்பதற்கல்ல. இதை அவர்களின் செயற்பாடுகளே உணர்த்துகின்றன.

இவர்களின் செயற்பாடுகள் சிங்கள அரசின் நிகழ்ச்சி நிரலுக்குள் நின்று செயற்படுகிறார்களா என்று சந்தேகம் கொள்ள வைக்கிறது.

* புலிகளில் யார் யார் உயிரோடு இருக்கிறார்கள், அவர்கள் யாரைக் காட்டிக் கொடுக்கிறார்கள் என்ற அச்சொட்டான தகவல்களெல்லாம் இவர்களுக்கு வருகிறதென்றால்- அது சிங்கள அரசின் கைக்கூலிகளாக இயங்குவோரால் தான் முடியும், புலம்பெயர் தேசத் தமிழர்களில் ஒருபகுதியினர் இப்படிதான் மாறித் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தைச் சீர்குலைக்க முனைகிறார்களோ என்ற சந்தேகம் மக்களிடம் வருவது இயல்பு.

தாயகத்தில் என்ன நடக்கப் போகிறது, மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதையே சரியாகத் தெரிந்து கொள்ளாமல், புரிந்து கொள்ளாமல் புலம்பெயர்நாடுகளில் இருந்து அவர்களை வழிநடத்த முற்படுவது முட்டாள் தனம் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அதேவேளை அறிவுபூர்வமான ஒரு கட்டமைப்பு தாயகத்தின் உரிமைக்காக குரல் கொடுப்பதற்காக உருவாக வேண்டியது காலத்தின் கடடாயம்.

இதற்கு முட்டுக்கட்டை போடுவதும், சேற்றைவாரி இறைப்பதும் தேசவிடுதலையை நிராகரிப்பவர்களின் செயலாகவே இருக்கும். அதற்கு விரோதமானவர்களாகவே அவர்களைக் கருதநேரிடும். இப்படி இரண்டுபட்டு நின்று நாம் மோதிக் கொண்டிருந்தால் எம்மையாரும் கணக்கில் எடுக்காத நிலை விரைவில் வரும்.

அதைத்தான் சிங்கள அரசு விரும்புகிறது. சிங்கள அரசின் விருப்பங்களை நிறைவேற்றிக் கொடுப்பதே எம்பணியாக இருக்கப் போகிறதா? என்பதை புலம்பெயர் தேசத்து உறவுகள் அனைவரும் தீர்மானித்துக் கொள்ள வேண்டிய தருணம் இது.

ஆறிலும் சாவு நூறிலும் சாவு தாயகம் காத்தல் கடமை என்ற தத்துவக் கவிஞனின் வரியை வாழ்வாக்கியவர்கள்

* வாருங்கள் தமிழர்களே வாழ்வா சாவா துரோகத்தை ஒருகை பார்ப்போம்….

மண்ணை இன்னும் நேசிப்பவன் அதற்காய் மரணத்தையே யாசிப்பவன்

பின்னிணைப்பு

சில ஊர்ஜிதப்படுத்தப்படாத தகவல் நீக்கப்பட்டுள்ளது

1.வெளியிருந்து "கே.பி" காட்டிக்கொடுத்து இயக்கத்தை அழித்தார் என்பது எதிர்வினை வாதமென்றால் உள்ளிருந்தே "காஸ்ரோ" இயக்கத்தைக் காட்டிக்கொடுத்தா?

2.பிள்ளையைக் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும்: "தமிழ் நெற் ஆசிரிய குழுவின்" "கோயபெல்ஸ்" [கிட்லர் பாணி] வகைப் பிரச்சாரம்

3.நீதிக்கு இது ஒரு போராட்டம்: உருத்திராவுக்கு எதிராக! நோர்வேயில் வகுக்கப்படும் சதி! அதிர்ச்சித் தகவல்கள்!!

thanks infotamil

தற்போது பரப்பப்பட்டவரும் வதந்திகள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.இது போன்ற செய்திகளை வெளியிடும் பத்திரிகைகள் இணையத்தளங்கள் தமிழ்த்தேசியத்தை கட்டிக்காப்பது போல் தமிழ்த்தேசியத்துக்கு தங்களை அறியாமலே துரோகம் செய்கிறார்கள்

இதில் மிகவும் வேதனையான விடயம் என்னவென்றால் இறுதிக்கட்டபோரின்போது முன்னின்று உளைத்த இளையசமுதாயமும் குறிப்பாக சாளினி போன்றோர் இவர்கள் பிடியில் சிக்கியிருப்பதும்

முக்கியமாக குறிப்பிடவேண்டிய விடயம் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்

சிங்கள தேசத்தின் நிகழ்ச்சி நிரலுக்குள் செல்கின்றதா நாடு கடந்த தமிழீழ அரசு?

சார்ள்ஸ் டார்வினும் ஈழமுரசும்

தகுதிவாய்ந்தவர்கள் முன்னே செல்லட்டும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தில் என்ன நடக்கப் போகிறது, மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதையே சரியாகத் தெரிந்து கொள்ளாமல், புரிந்து கொள்ளாமல் புலம்பெயர்நாடுகளில் இருந்து அவர்களை வழிநடத்த முற்படுவது முட்டாள் தனம் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.அதேவேளை அறிவுபூர்வமான ஒரு கட்டமைப்பு தாயகத்தின் உரிமைக்காக குரல் கொடுப்பதற்காக உருவாக வேண்டியது காலத்தின் கடடாயம். இதற்கு முட்டுக்கட்டை போடுவதும், சேற்றைவாரி இறைப்பதும் தேசவிடுதலையை நிராகரிப்பவர்களின் செயலாகவே இருக்கும். அதற்கு விரோதமானவர்களாகவே அவர்களைக் கருதநேரிடும். இப்படி இரண்டுபட்டு நின்று நாம் மோதிக் கொண்டிருந்தால் எம்மையாரும் கணக்கில் எடுக்காத நிலை விரைவில் வரும். அதைத்தான் சிங்கள அரசு விரும்புகிறது. சிங்கள அரசின் விருப்பங்களை நிறைவேற்றிக் கொடுப்பதே எம்பணியாக இருக்கப் போகிறதா? என்பதை புலம்பெயர் தேசத்து உறவுகள் அனைவரும் தீர்மானித்துக் கொள்ள வேண்டிய தருணம் இது.

ஆறிலும் சாவு நூறிலும் சாவு தாயகம் காத்தல் கடமை என்ற தத்துவக் கவிஞனின் வரியை வாழ்வாக்கியவர்கள்

* வாருங்கள் தமிழர்களே வாழ்வா சாவா துரோகத்தை ஒருகை பார்ப்போம்….

மண்ணை இன்னும் நேசிப்பவன் அதற்காய் மரணத்தையே யாசிப்பவன்

இன்றுதான் இதைப்பார்த்தேன் சூரியா

எனது கருத்தும் இதுதான்

என்னிடம் சில உதவிகள் கேட்டுவந்தபோது... இரு தரப்பும்

ஒன்றாக வாருங்கள்

உங்களால் முடியாது போனால் விலகி ... புது ஆட்களுக்கு இடம் கொடுங்கள்

இல்லையென்றால் எம்மை அதாவது மக்களை விட்டுவிடுங்கள் என்று சொல்லி அனுப்பிவைத்தேன்

இதைத்தான் தற்போது எனது நண்பர்களும் சொல்ல ஆரம்பித்துள்ளனர்

மக்கள் திருத்துவார்கள்

Link to comment
Share on other sites

கிளிநொச்சி நீதிமன்றுக்கு சாவகச்சேரி, யாழ்ப்பாணம் ஆகிய நீதிமன்றங்களில் கடமையாற்றிய அலுவலர்கள் கடந்த முதலாம் திகதி முதல் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த இப்பிரதேசத்தில் சுமார் 30 வருட காலத்தின் பின்னர் இந்த நீதிமன்றம் இயங்க ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது!!!!

நாடுகடந்த தமிழீழத் தேர்தல் கூட்டம் ஒரு பார்வை. - பத்மநாதன்

சென்ற 24.04.2010 அன்று வெயிற்வெற்(veitvet) பாடசாலையில் நடைபெற்ற நாடுகடந்த தமிழீழக் கூட்டத்திற்குச் சென்றிருந்தேன். அவர்களது கருத்தை அறிய ஆர்வமாகச் சென்றிருந்தேன்.

அங்கு நடைபெற்ற விரும்பத்தகாத பேச்சுகள் தான் என்னை இது எழுதத் தூண்டியது. இது மக்களவைத் தேர்த்லை நடாத்திய TCC இனால் ஒழுங்கு படுத்தப் பட்டிருந்தது. முதலில் தொடக்கமே பிழையாக இருந்தது. ஒட்டுக்குழுக்களாலும், இலங்கை இராணுவத்தினராலும் கொலை செய்யப் பட்டவர்களிற்கு மௌன அஞ்சலி என்று தொடங்கியது. பின்பு பேசிய திருமதி.யெயசிறி என்பவர் நாடுகடந்த திரு.உருத்திரகுமாரன் அவர்களது ஆதரவாளர்களை ,இலங்கை அரசு , இந்திய அரசு போன்றவற்றின் உளவாளர்கள் என்றும் குறிப்பிட்டார். அவர்களையும் துரோகி ஒட்டுக்குழு என்ற சொற்பிரயோகம் நேரடியாகப் பாவிக்காவிட்டலும், இந்திய உளவு , இலங்கை அரசின் சதிக்குள் வீழ்ந்தது என்பது அதையே குறிக்கிறது. மக்களாகிய உங்களால் செய்யக்கூடியது வாக்குப் போடுதல் மட்டுமே என்றும் குறிப்பிட்டு இருந்தார். மக்கள் முட்டாள்களாக இருந்து தாங்கள் செய்வதற்கு தலையாட்டினால் போதும் என்பதே அதன் கருத்து

இந்தப் பெண்ணை விட பல வருடங்கள் விடுதலைப் புலிகளுக்காக வாழ்ந்தவர்களை துரோகி என்று முத்திரை குத்துவது அவரால் எப்படி செய்ய முடிகின்றது. ஒருமாதத்தின் முன்பு திரு.உருத்திரகுமாரன் அவர்கள் நடாத்திய கூட்டத்தில் மக்களவை உறுப்பினர் வந்து குழப்பம் செய்தனர். திரு.உருத்திரகுமாரனது பேச்சில்- மக்களவையில்(TCC) புலிகளுடன் நேரடியாகச் சம்பந்தப் பட்டவர்கள் கூடுதலாக இருப்பதால், நாடுகடந்த தமிழீழத்தில் புலிகளின் நேரடி பதவி வகிக்காதவர்களை பெரும்பான்மையாகக் கொண்டு அமைத்தாலே குத்தப்பட்ட பயங்கரவாத முத்திரையில் இருந்து வெளிவரமுடியும். என்றும் குறிப்பிட்டிருந்தார். நாடுகடந்த தமிழீழமும், மக்களவையும் ஒற்றுமையாச் செயற்படுவோம் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

நான் நாடுகடந்த தமிழீழத்தையோ, மக்களவையையோ ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் நாடுகடந்த தமிழீழத்தினர் ஜனநாயக வழிக்கு வரும் விருப்பத்திற்கு ஆதரவு தெரிவிக்கின்றேன்.

அவர் யாப்பு ஒன்றும் எழுதி ஜனநாயகத்தைக் கொச்சைப் ப்டுத்தவில்லை. அது வரவேற்கக் கூடியதே. ஆனால் ஜனநாஜகத்தை விரும்பாத மக்களவையினர் அந்தப் பதவிகளையும் தாங்கள் எடுக்க விரும்பியே பொய்ப் பிரச்சாரம் செய்ய விரும்புகின்றனர். அவர்களின் குற்றாச்சாட்டு யாப்பு எழுதவில்லையென்பதே.

மக்களவைத் தேர்தலில் யாப்பு எழுதி, மக்களால் தெரிவு செய்யாமல் தாங்களே ஐவரைத் தெரிவு செய்தார்கள். அதிகாரங்கள் இல்லாத மிகுதிபேரையே மக்கள் தெரிவு செய்தார்கள். சில உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று ஜனநாயக விரோத யாப்பு எழுதினார்கள். அங்கு ஜனநாயகம் என்பது வெறும் கேலிக்கூத்தாகவே இருந்தது. இக்கேலிகூத்துக்கு 20 - 25% மக்களே வாக்களித்திருந்தனர்

திரு.உருத்திரகுமாரன் அவர்கள் நினைத்திருந்தால் , தாங்கள் விரும்ம்பியவர்கள் நேரடியாக வரவும், திரு.முரளி போன்றவர்கள்(புலியில் நேரடியாகப் பதவி வகித்தவர்கள்) தேர்தலில் பங்கு பற்றாது இருக்கும்படி யாப்பு அமைத்திருக்க முடியும். அவர் அவ்வாறு ஜனநாயக விரோதச்செயல் செய்யவில்லை. அந்தளவில் வரவேற்கக் கூடியதே. யாப்பு எழுதாதது முரளி போன்றவர்கள் தேர்தலில் நிற்க வளி வகுத்தது.

முரளியின் ஏனைய குற்றச்சாட்டு திரு.பாஸ்கரன் அவர்கள் 50% சம்பளம் பெற்று தமிழ் பாடசாலைக்கு வேலை செய்ய்வது. இந்தப் பெரிய பாடசாலைக்கு திரு.முரளி போன்றவர்கள் ஓரிரு மணித்தியாலங்கள் வேலை செய்து நிர்வாகத்தை நடாத்த முடியாதென்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். அவர் இப்பொழுது தான் அந்த வேலையைச் செய்யவில்லை. அந்த 50% ஐ சேமிக்க விரும்பினால் ஏன் இவ்வளவு காலமும் அதை திரு.முரளி போன்றவர்கள் பொறுப்பெடுத்துச் செய்யவில்லை. இபாடியான கீள்த்தர தேர்தல் பிரசாரம் -இருக்கின்ற பாடசாலையையும் இல்லாது செய்துவிடும்

அடுத்த குற்றச்சாட்டு,Rødt கட்சிதான் தமிழீழத்திற்கு ஆதரவு வழங்கியதாகவும், SV , Arbeidparti ஆகிய கட்சிகள் தமிழீழத்தை ஆதரிக்காத பொழுதும் ஏன் தமிழர்கள் அந்தக் கட்சியில் அங்கம் வகிக்கிறார்கள் என்று ஒருவர் கேட்டார். கேள்விக்கு பதில் அளித்த திரு.முரளி அவர்கள் - தான் SV கட்சியில் அங்கத்தவராக இருந்ததாகவும், அக்க்ட்சி தமிழீழத்திற்கு ஆதரவு தெரிவிக்காததால் அதிலிருந்து விலகியதாகவும், திரு.பாஸ்கரன், திரு.புலேந்திரன் போன்றவர்களும் விலக வேண்டும் என்று கேட்டிருந்தார்.

முரளி அவர்கள் சாதாரண அங்கத்தவர். அவர் விரும்பினால் சேரலாம், பிரியலாம் . ஆனால் மக்களால் தெரிவு செய்யப் பட்ட புலேந்திரனும், பாஸ்கரனும், ஆதித்தனும் அக்கட்சிகளில் இருந்து பிரிந்தால் பின்பு தமிழருக்காக அரசியல் கதைப்பதற்கு வேறு எவரும் கட்சிகளில் இல்லை. இது இலங்கையா- தந்தை (எனக்கு அல்ல) செல்வநாயக்தின் காலமா- சவால் விட்டு மறு தேர்தல் வைப்பதற்கு? அவர்கள் கட்சிகளில் இருந்தால் தான் எமக்காக ஒரு வார்த்தையாவது கதைக்க முடியும். மற்றவ்ர்களை கதைக்கவிட்டால் என்ன கதைப்பார்கள் என்பது தெரியும் தானே? உஙளுக்குச் சும்மா கதைத்தால் விளங்காது துப்பாக்கி கொண்டு வாறேன் என்று விட்டு வந்து விடுவார்கள். நோர்வேயிய அரசியலில் ஜனநாயக வளியில் பழக்கப் பட்டவர்களே எங்கள் பிரச்சனையை தெளிவாக துப்பாகியில்லாமல் விளங்கப் படுத்த முடியும். இப்படியாக மறு பக்கத்தையும் ஆராயாது கூறிய முரளியின் கருத்துக்கள் சிறுபிள்ளைத்தனமானதே.

அங்கு பிரச்சாரத்திற்காக் வந்திருந்த பாஸ்கரன் இவர்களின் கூட்டம் காரணமாக பார்வையாளர்களாக வந்திருந்தார். இது கூட நல்லதொரு ஜனநாஜக முன்னேற்றமே. அவரை நோக்கி வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க அவருக்கு போதிய நேரம் கொடுக்காதது ஜனநாஜக விரோதமே. நண்பன் முரளி அவர்கள் எனது நட்பை தனது பிரச்சாரத் துணைக்கு கொண்டு வந்த படியால் தான் நானும் கதைத்தேன். போதியளவு நேரமிருந்தும் 12:00 மணிக்கு முடிக்க வேண்டிய கூட்டத்தை, 11:30 முடித்து விட்டார்கள். முரளி அவர்களும் அவர்களுக்கு வால் பிடித்தவர்களும் முரளிக்கு சார்பாகக் கதை அல்லது கதையாதே என்ற ஜனநாஜக விரோதப் போக்குடனே நடந்து கொண்டார்கள்.

ஜனநாயகத்தை மறுத்த இவர்களால்(TCC) ஆதரவு அளிக்கப்பட்ட கட்சிகள் கடந்த காலத்தில் படு தோல்வியே அடைந்திருக்கின்றது.ஜெயலலிதாவிற்குக் கொடுத்த ஆதரவால் அவர் படு தோல்வியடைந்தார். அடுத்து இரு ஆசனங்களைப் பெறும் என்று கருத்துக்கணிப்பு கூறிய பொழுதும் Rødt கட்சியானது இவர்களின் கடைசி நேர வெளிப்படை ஆதரவால் அது படு தோல்வியடைந்தது.பின்பு கடைசித் தேர்தலில் இவர்களது இணையத்தளங்கள் ஆதரவளித்த திருமதி.பத்மினி சிதம்பரநாதன், திரு கஜேந்திரன் குழுவினர் மண்னைக் கவ்வினர். மக்கள் தற்பொழுது ஜனநாஜக வாதிகளையே விரும்புகின்றன்ர் என்பதற்கு இவை சிறந்த உதாரணங்களாகும்.

நான் நாடு கடந்த தமிழீழத்திற்கோ , மக்களவைக்கோ ஆதரவு இல்லை. ஆனால் அவர்கள் விரும்பிய கருத்துக்களை அடைய அமைப்பை உருவாகுவதற்கு அவர்களுக்கு ஜனநாயக்ம் உண்டு. அந்த ஜனநாயகத்திற்காக அவர்களுக்காகக் கொடுக்கும் குரலே இது.

இப்படிக்கு

ஜனநாயக விரும்பி

பத்மநாதன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கிருபனின் மணிக்கூடு என்ன சொல்லுதோ தெரியாது?
    • உங்க‌ளுட‌ன் சேர்த்து 17 உற‌வுக‌ள் போட்டியில் க‌ல‌ந்து இருக்கின‌ம்🙏🥰................................  
    • நித‌ர்ச‌ன‌ உண்மை ப‌ற‌க்கும் ப‌டை இல்லை தூங்கிம் ப‌டை...................இந்த‌ தேர்த‌ல் ஜ‌ன‌நாய‌க‌ முறைப்ப‌டி ந‌ட‌ந்த‌ தேர்த‌ல் மாதிரி தெரிய‌ வில்லை சென்னையில் போட்டியிட்ட‌ நாம் த‌மிழ‌ர் வேட்பாள‌ர் ஈவிம் மிசிலில்  மைக் சின்ன‌த்தை ஒரு ஜ‌யா அம‌த்த‌ மைக் சின்ன‌ம் வேலை செய்ய‌ வில்லை இவ‌ர்க‌ள் அதை த‌ட்டி கேட்க்க‌ ப‌தில் இல்லை  கைது செய்து பிற‌க்கு விடுவித்த‌ன‌ர்.................எம்பி தேர்த‌லில் நிக்கும் வேட்பாள‌ர் அவ‌ரின் தொகுதியில் மைக் சின்ன‌த்துக்கு ஓட்டு விழ‌ வில்லை என்றால் அது தேர்த‌ல் ஆணைய‌த்தின் பிழை............................விவ‌சாயி சின்ன‌ விடைய‌த்தில் ம‌ற்றும் வைக்கோவுக்கு திருமாள‌வ‌னுக்கு ந‌ட‌ந்த‌ ச‌ம்ப‌வ‌ம்  அனைத்தும் உண்மை புல‌வ‌ர் அண்ணா....................அந்த‌ ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சி த‌மிழ் நாட்டில் ஏதாவ‌து ஒரு தொகுதியில் பிர‌ச்சார‌ம் செய்த‌தை பார்த்திங்க‌ளா ஒரு ஊட‌க‌த்திலும் காண‌ வில்லை..................எல்லாம் போலி நாட‌க‌ம்................................
    • 09.59 இற்குப் போடடியில் குதித்து விட்டேன்.வேலை முடிந்து வந்து அவசரமாகப் பதிந்த படியால் சில தவறுகளும் ஏற்பட்டிருக்கலாம்.
    • பொதுவாக கிராமப்புறங்களில் அதிக வாக்கு சதவுதமும் நகர்ப்புறங்களில் குறைந்த சதவீதமும் வாகக்குப்பதிவு இருக்கும். கிராம்புற அப்பாவிப் பொதுமக்கள் அரசியல்வாதிகள் சொல்லும் வாக்குறுதிகளை நம்பி வாக்குப் போடுவார்கள். அவர்களின் வாக்குச் சாவடிகள் அவர்களின்  வசிப்பிடங்களுக்கு அருகிலேயே இருக்கும். சென்னையில் இருப்பவர்கள் வாக்குச் செலுத்துவதை பெரிய அளவில் விரும்புவதில்லை. இந்த முறை வழமைக்கு மாறாக சென்னையில் வாக்கு சதவுpதம் அதிகரித்திருப்பது. மாற்றத்தை விரும்பி அவர்கள் கோபத்தில் வாக்களித்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இது ஆளும்வர்க்கங்களுக்கு எதிரானதாகவே பார்க்க வேண்டும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.