• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
தூயவன்

நினைவுத் தூபி அமைப்பது தொடர்பான கலந்துரையாடல்

Recommended Posts

சிறிலங்கா அரசாங்கம் எம் மாவீரர்கள், மற்றும் அனைத்து நினைவுத் தூபிகளையும் அழிப்பதற்கான நோக்கம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். எதிர்கால சமுதாயத்தில் எம் விடுதலைப் போராட்டம் தொடர்பாக எவ்வித ஆதாரங்களையும் கொண்டிருக்கக் கூடாது என்பது மட்டுமல்ல, அடுத்த தலைமுறை அறிந்து விடாமல் தடுப்பதற்குமாம். இப்படியான சூழ்நிலையில் எம் புலம்பெயர்ந்த தலைமுறையினர் இது பற்றிய தொடர்ச்சியான எழுச்சி கொண்டிருப்பதற்காக ஏன் நினைவுத் தூபி அமைக்கக் கூடாது?

அப்படி அமைக்கும் போது செயற்படுத்தக்கூடிய என் யோசனைகள்

மூடிய கட்டட அமைப்பாக அமைக்கும்போது, மாநகரசபைக்கு நிறைய விளக்கங்கள், வருடாந்திர வரி, போன்ற விடயங்களில் அதிக கவனத்தைச் செலுத்த வேண்டி வரலாம் என்பதால், ஒரு திறந்த அமைப்பாகவே கட்டலாம்.

குறைந்தது ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் நிற்கக் கூடிய அளவு இடத்தையாவது தெரிவு செய்ய வேண்டும்.

தனியார் நிலம் தான் பயன்படுத்த முடியும் என்றாலும், வீடுகள் சூழ்ந்த பிரதேசமாகவோ, ஒதுக்குப் புறமாகவோ இருக்கம் இடங்களைத் தவிர்ப்பது நன்று.

நினைவுத் தூபியின் அமைப்பினை முள்ளிவாய்க்கால் தொடர்பான ஒரு அடையாளமாகவோ, அல்லது கார்த்திகைப்பூவின் வடிவமாகவோ அமைக்கலாம்.

சந்திக்குச் சந்தி பெரிய நிலப்பரப்பில் கோவில்கள், சேர்ச்சுக்கள் அமைக்கும் வசதி புலத்தில் இருக்கும்போது, ஏன் மாவீர்களுக்கும், வீழ்த்தப்பட்ட அப்பாவி மக்களையும் நினைவுகூர ஏதும் செய்யச்கூடாது.

  • Like 9

Share this post


Link to post
Share on other sites

இன்று கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தை சிங்கள ராணுவ பயங்கரவாதிகள் அழித்துக் கொண்டிருப்பதாக இன்று மதியம் நண்பர் ஒருவர் தொலைபேசியில் கவலையுடன் குறிப்பிட்டார். அனுமதியின்றி கட்டியதாக கூறி சிங்கள ஆக்கிரமிப்பாளர்கள் அழித்துக் கொண்டிருக்கிறார்களாம். அப்படியானால் யாழ் கோட்டையையும் அழிக்க வேண்டியது தானே என்று ஆதங்கப்பட்டார்.

Share this post


Link to post
Share on other sites

எனது மனதிலும் தோனறிய யோசனை நிச்சயமாகச் செய்யலாம். ஆரம்பிப்போம்.

Share this post


Link to post
Share on other sites

நல்ல யோசனை

முன்னெடுக்கக்கூடியவர்கள் முன்னெடுத்து செல்லவும்.

இது நிச்சயம் வெற்றி பெறும்.

கோவில்களும் கோபுரங்களும் எமக்கு வேண்டாம்.

எம் இனத்திற்க்காக வாழ்ந்தவர்களுக்கும்...

உயிரை அர்பணித்தவர்களுக்கும்....

நினைவுச்சின்னங்களை அமைத்து....

எமது போராட்டத்தை முன்னெடுப்போம்.

Share this post


Link to post
Share on other sites

நல்ல சிந்தனை. மாவீரர்களே எமது தெய்வங்கள். அவர் விதைகுழிகளே எமது கோவில்கள்.

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்துக்கள் போடவும், பச்சைக்குறி இடவும் இத்தலைப்பை எழுதவில்லை. என்ன செய்யலாம், எப்படிச் செய்யலாம் என்ற ஆலோசனை ஆக்கங்கள், போன்றவை அவசியமாகின்றன.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்துக்கள் போடவும், பச்சைக்குறி இடவும் இத்தலைப்பை எழுதவில்லை. என்ன செய்யலாம், எப்படிச் செய்யலாம் என்ற ஆலோசனை ஆக்கங்கள், போன்றவை அவசியமாகின்றன.

மூடிய கட்டடமாக இல்லாவிட்டால் அந்தக் காணியின் அபிவிருத்தியை வரையறை செய்ய முடியாது. அப்படி ஒரு நிலை வரும்போது காணி அபிவிருத்தி தடைப்படும். நகரசபையிடமிருந்து அனுமதி கிடைக்கப் பெறாது.

என் மூளைக்கு எட்டியவரையில், கோயில் மாதிரிக் கட்டிவிட்டு அதன் வளவினுள் தூபிகளை அமைக்கலாம். கோயிலில் சாமி சிலைகளையும் வைத்துவிடுவது பாதுகாப்பானது.

இப்படிச் செய்யும்போது, வரிகட்டவேண்டி வரும்தான். ஆனால் கனடா கோயில்களில் வருமானத்துக்குப் பஞ்சமா என்ன..! :)

Share this post


Link to post
Share on other sites

கனடாவில் ஒருவர் அபிவிருத்தியற்ற காணிவை வைத்திருப்பதும், அதனுள் பிடித்தமான வகையில் கட்டடம் கட்டுவதும் பிழையானதா? எனக்கு சட்ட அமைப்புக்கள் பற்றி எதும் தெரியாது.

கோவில்கள் மாதிரி உண்டியல் வைத்துப் பணம் சம்பாதிக்கும் வேலை வேண்டாம் என்றே நினைக்கின்றேன். இது மறைந்து போன புனிதர்களுக்கானது. அவர்களை வைத்து வியாபாரம் வேண்டாமே..

Share this post


Link to post
Share on other sites

வெளிநாடுகளில் தமிழகத்தில் தாயகத்தில் எம்மவர்கள் நிர்வகிக்கும் ஆலயங்கள் தேவாலயங்கள் பள்ளிகள் எங்கனும் ஈழப்போராட்டத்தில் பங்கெடுத்து வீரமரணமடைந்தவர்கள் சார்பில் ஒரு நினைவு தூபியை சிறியதாகவோ பெரிதாகவோ அமைக்க வேண்டும். இவர்களை நினைவு கூறுதல் எமது கலாசார பண்பாட்டு விழுமியங்களின் ஒரு அங்கமாக ஆக்கப்பட வேண்டும். இதைச் செய்தால் அன்றி எதிரிகளின் நாசகார வேலைகளை தடுப்பது கடினமாக இருக்கும்.

அதுமட்டுமன்றி ஒரு குட்டித் தீவை விலைக்கு வாங்கி அதை எமக்காக உயிர்தந்த மாவீரர்கள் மற்றும் மக்களின் நினைவிடமாக புனித இடமாக ஆக்க வேண்டும். எத்தனையோ தீவுகளில் தேவாலயங்கள் கோவில்கள் பெளத்த விகாரைகள் அமைத்து அவற்றை வழிபட செய்கிறார்கள். எமக்காக எமது மண்ணின் மக்களின் விடிவிற்காக உயிர்தந்த அந்த உத்தமர்களை நினைவு கூற எமது கொடூர எதிரிகளின் கரங்களுக்கு அப்பால் மனித குல விழுமியங்களை நேசிக்கக் கூடியவர்களின் பங்களிப்போடு குறித்த ஒரு தீவில் எமது மாவீரர்களுக்கான மக்களுக்கான நினைவு இடத்தை அமைக்கலாம்.

அதை மக்கள் தாம் விரும்பும் போதெல்லாம் போய் கண்டு அவர்களை தரிசிக்க வகை செய்ய வேண்டும். இது மாவீரர்களான தமது பிள்ளைகளை இழந்து தவிக்கும் உறவுகள் பெற்றோருக்கும் பெரும் ஆறுதலாக அமையும்.

Share this post


Link to post
Share on other sites

மூடிய கட்டட அமைப்பாக அமைக்கும்போது, மாநகரசபைக்கு நிறைய விளக்கங்கள், வருடாந்திர வரி, போன்ற விடயங்களில் அதிக கவனத்தைச் செலுத்த வேண்டி வரலாம் என்பதால், ஒரு திறந்த அமைப்பாகவே கட்டலாம்.

ஒரு திறந்த அமைப்பில் ஒரு கட்டடம் கட்டி கலாச்சார மையம் என்ற பெயரில் போரில் இறந்தவர்களை நினைவு கூரும் இடம் என்று சட்ட ரீதியாக அதை வரையறை செய்யலாம். திறந்த அமைப்பில் நினைவுச் சின்னங்கள் கலாச்சாரச் சின்னங்களை உருவாக்கலாம். படுகொலைகளை நினைவு கூரும் அருங்காட்சியகம் வரலாற்று ஆவணச் சேமிப்பு என்ற பிரிவுகளை ஏற்படுத்தலாம். இதற்கான வருமான வரி நிச்சயம் அதிகமாக இருக்கும். எமது நினைவு தினங்களுக்கும் பயன்பாட்டுக்கும் இல்லாத நாட்களை திறந்தவெளி அமைப்பை வாகனத் தரிப்பிடங்களாக்கி வாடகைக்கு விடுவதும் மண்டபங்களை பல்வேறு நிகழ்வுகளுக்காக வாடகைக்கு விடுவது போன்ற காரியங்களால் வருமானவரியை ஈடுகட்ட முடியும். இவ்வாறு வேறு இனத்தவர்களின் கலாச்சார மையங்கள் செயற்படுடகின்றது. மாவீரர்களை மைமயப்படுத்தி அமைப்பதற்குரிய சட்டரீதியான நேரடி அனுமதி சாத்தியமா என்பது கேள்விக்குறியானது. இந்த விடயத்திற்கு சட்ட வல்லுனர்களையே அணுகவேண்டும் தவிர இவ்வாறான ஒரு முயற்சி குறிக்கோளில் இருந்து விலகி வெறும் கலாச்சார மையமாக பரதநாட்டியம் ஆடுவதற்கு மட்டும் பயன்படுத்தவும் வாய்ப்பிருக்கின்றது.

Share this post


Link to post
Share on other sites

நல்ல யோசனை.

சென்ற மாதம் இது தொடர்பான கருத்தை தொலைக்காட்சி ஒன்றுக்கு தெரிவித்திருந்தேன்.

வாழும் தேசத்தின் அனுமதி பெற்று, சட்ட திட்டங்களுக்கு அமைய முன்னேடுக்கலாம்.

கோயில்கள் அதிகரிக்கும் புலம்பெயர் நாட்டில் இது போன்ற நினைவுத்தூபி அமைப்பது வரவேற்கத்தக்கது.

Share this post


Link to post
Share on other sites

புலத்தில தமிழன் கோயில் கட்டினான் ஆனால் தமிழன் என்ற பெயரில் ஒரு மண்டபமும் கட்டவில்லை .கிறிஸ்தவர்களும் ,இந்துக்களும் ஒன்றாகக் கூடி வழிபாடு செய்யக்கூடியதாகவும் இருக்கும் அப்படி மண்டபம் கட்டி மாவீரர்களை வழிபாடு செய்தால்

Share this post


Link to post
Share on other sites

கனடாவில் ஒருவர் அபிவிருத்தியற்ற காணிவை வைத்திருப்பதும், அதனுள் பிடித்தமான வகையில் கட்டடம் கட்டுவதும் பிழையானதா? எனக்கு சட்ட அமைப்புக்கள் பற்றி எதும் தெரியாது.

கோவில்கள் மாதிரி உண்டியல் வைத்துப் பணம் சம்பாதிக்கும் வேலை வேண்டாம் என்றே நினைக்கின்றேன். இது மறைந்து போன புனிதர்களுக்கானது. அவர்களை வைத்து வியாபாரம் வேண்டாமே..

கனடாவின் சட்டவிதிகளின்படி அபிவிருத்தியற்ற காணியில் குடிசை போடுவதாக இருந்தாலும், இருப்பதை இடிப்பதாக இருந்தாலும் அனுமதி (Building Permit / Demolition Permit) வாங்கியிருக்க வேண்டும். அப்படி ஒரு அனுமதியை வாங்க நகரசபைக்கோ கிராமசபைக்கோ செல்லும்போது அது எத்தகைய ஒரு கட்டுமானம் என்பதை வரையறை செய்திருக்கவேண்டியது விண்ணப்பிப்பவரின் பொறுப்பாகும்.

அப்போது ஒரு சிக்கல் வருகிறது, இது என்னவகையான கட்டடம் என்பதை வரையறை செய்வதில். எல்லா இடங்களிலும் எல்லாவகையான கட்டடங்களையும் கட்டிவிட முடியாது. Zoning என்று ஏற்கனவே இடங்களை வரையறை செய்திருப்பார்கள். தொழிற்சாலைகளுக்கு சிலபகுதிகள், வீடுகளுக்கு சிலபகுதிகள் இப்படி இருக்கும்.

எங்கள் ஆட்கள் ஏற்கனவே கோயில் கட்டி அனுமதியெல்லாம் வாங்கியிருப்பதால்தான் கோயிலைச் சொன்னேன். கோயில் என்றால் சைவக் கோயிலாகக் கட்டாமல் தமிழன்னைக்கு என்று கட்டிவிடலாம். :)

இந்தமாதிரி விடயங்களைச் செய்யும்போது, முதல்தடவையே சரியாகச் செய்துவிட வேண்டும். ஒருதடவை நகரசபையில் பிசகினால், பிறகு அனுமதி கொடுப்பதில் சிக்கல்கள் பண்ணுவார்கள். :)

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்துக்கள் போடவும், பச்சைக்குறி இடவும் இத்தலைப்பை எழுதவில்லை. என்ன செய்யலாம், எப்படிச் செய்யலாம் என்ற ஆலோசனை ஆக்கங்கள், போன்றவை அவசியமாகின்றன.

உங்களைப்போன்றவர்களின் வார்த்தை பிரயோகங்களினால் தான் பல விடயங்கள் பின்னெடுக்கப்பட்டுள்ளன.

முதலில் வார்த்தைகளால் மக்களை அரவணைக்க பழகுங்கள். :)

  • Like 4

Share this post


Link to post
Share on other sites

இவ்விடையம் ஒட்டுமெத்தத் தமிழர்களதும் உணர்வுடன் சம்பந்தப்பட்ட விடையம். மற்றது இவ்விடையத்தை நிறைவேற்றவதற்கு நிறுவனமயப்படுத்தப்பட்ட ஒரு அமைப்பு முதலில் தேவை சும்மா சாந்தகப்பையை எடுத்தோமா வெட்டியாக ஏதாவது ஒரு கட்டிடத்தைக் கட்டிணோமா என்பதாகவிருக்கக் கூடாது அப்படியொரு நினைவகமோ அன்றேல் மாவீரர்களது புகழ்பாடுவதற்கும் அவர்களைப் போற்றுவதற்குமான அமைவிடத்தை நிர்மானிக்கவேண்டுமாகவிருந்தால் அவ்வமைவிடம் உலக கட்டிடக்கலை வடிவமைப்பின் ஒரு மைல்கல்லாக இருத்தல்வேண்டும் இந்தவிடையத்தைச் செயவதற்குரிய ஆற்றல் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திடம்தான் இருக்கின்றது என நான் நினைத்ததுண்டு ஆனால் நோற்றைய தினம் நடைபெற்ற அதனது அங்குரார்ப்பண நிகழ்வில் தொழல்நுட்பரீதியில் பல சொதப்பல்களை நேரடி ஒலிபரப்பின்மூலம் அவதானிக்கக் கூடியதாகவிருந்தது. மிகுதியைத் பின்பு தொடர்கிறேன்.....

Share this post


Link to post
Share on other sites

கனடா மாணவர் சமூகம் ஏற்கனவே ஒரு இது பற்றிய காட்சியகத்தைப் Nபுணுகின்றார்கள். அவர்களுக்கு வலு போதாமல் இருப்பினும் கடினப்பட்ட முயல்கின்றார்கள். அவர்களோடு இணைந்தும் முன்னெடுக்கலாம்.

நாடுகடந்த அரசு என்பது பெரிய வருமானத்தில் இயங்கும் அமைப்பல்ல. அது தனிப்பட்ட ஒவ்வொருவரின் உழைப்பிலும் தான் தங்கியிருக்கின்றது. வருமானம் இல்லாத தன்னார்வ அமைப்பிடம் நேரத்தியை நாங்களும் உதவுவதினூடகத் தான் பெற முடியும்.

Share this post


Link to post
Share on other sites

மேலும் நாடுகடந்த தமிழீழ அரசானது அடிப்படையில் அரசியல் கட்டமைப்பாக இருந்தாலும், ஒரு நிறுவனமயப்படுத்தப்பட்ட கிழக்கிந்தியக்கம்பனிபோன்ற சர்வதேச சட்டநடைமுறைகளுடன் இயங்கக்கூடிய அமைவாக இருப்பதையே நான் விரும்புகிறேன் அதன்மூலமே தமிழர்களது தேவையற்றவித்தில் முடங்கியுள்ள செல்வங்களை பாரிய முதலீடாக்குவதிலும் உலகில் தமிழர் தமக்கென ஒரு சட்டபூர்வமான நிதி நிறுவனத்துக்கு உரித்துடையோராகவிருப்பதற்கும் புலத்தில் நாம் பாரிய முதலீடுகளை மேற்கொள்ளவும் வழிவகுக்கும் (புலத்தில் முதலீடுகளை மேற்கொள்வதென்பது யூதர்களது ஸியோனிசச் சிந்தனைக்கு ஒத்ததாகவோ அன்றேல் அதைவிடக் கடினமாக எமது எதிரிக்கு எதையும் விட்டுக்கொடுத்துவிடா கடும் போக்கானதாவோ இருத்தல்வேண்டும்); இச்சட்டபூர்வமான தமிழர் நிதிநிறுவனத்தின் சொத்துக்களில் ஒன்றாக எமது மாவீரர்களது நினைவகம் அமைந்திடலாம். நெடுக்காலபோவான் கூறியதுபோல் உலகில் எமக்குப் பாதுகாப்பானதாக உணரும் மற்றும் அரசியல் திருகுதாளங்கள் இல்லாத அதுவும் தமிழர்கள் நினைத்தவிடத்தே பயணத்தை மேற்கொள்ளக்கூடியதுமான ஒரு நாட்டில் இந்நினைவகத்தை அமைக்கலாம் இவை ஒன்றும் இயலாத விடையமில்லை. ஆனால் புலம்பெயர் தமிழர்கள் அனைவரும் தங்களது இருப்பினை நிறுவனமயப்படுத்தல் வேண்டும் அதற்குத் தோதான ஒரு அமைப்பே நாடுகடந்த தமிழீழ அரசாங்கமாகும்.

Share this post


Link to post
Share on other sites

மிக அவசியமான ஆலோசனையாகும்.தமிழர்கள் தாம் வாழும் நாடுகள் தோறும் அமைக்க வேண்டியது. அதற்கென நாம் நாடுகள் தோறும் செயற்குழுக்களை நிறுவி அதற்கான சட்டச் சிக்கல்களை ஆராய்ந்து அதனை தமிழர் பண்பாட்டுக்கமைய மண்டப வடிவிலே அமைத்து, கூம்புவடிவாக மேலேழுந்து அதிலே கார்த்திகைப்பூ விரிந்திருப்பதுபோன்று இருந்தால் பொதுவானதாக இருக்கும். மண்ணில் விதையான பெரும்பாலானவர்கள் விடுதலைக்காக வீழ்ந்தவர்களே. பொதுமக்களுட்பட. உள்ளே 1958 இல் இருந்து தற்போதுவரை தொடரும் இன அழிப்பிற்குள்ளானோரது பெயர்களையும் பதியவேண்டும்.

Share this post


Link to post
Share on other sites

மாவீரர்களுக்குப் புலம் பெயர் நாடுகளில் நினைவுத்தூபி அமைக்கப்படுவது காலத்தின் கட்டாயம்.

ஒவ்வொரு நாடுகளிலும் அங்கு வாழும் ஈழத்தமிழ் மக்கள் மாவீரர்களை நினைவு கூருவதற்காக

அமைக்கப்படும் நினைவுத்தூபியுடன் ஒரு உள்ளரங்கம் அமைப்பதும் சிறந்தது.

இதற்கு ஏற்கனவே இருக்கும் ஒரு உள்ளரங்கத்தை வாங்கிப் புதுப்பித்து அதன் முன் ஒரு நினவுத்தூபியை அமைக்கலாம்.

ஈழத்தமிழர்களின் இன்விடுதலை சம்பந்தமான நிகழ்வுகளை இந்த உள்ளரங்கில் நடத்தலாம்.

இனவிடுதலை தொடர்பாக நடைபெறும் நிகழ்வுகளுக்காக அமைப்பாளர்களிடம் ஒரு சிறு தொகையை அறவிட்டு அதன் மூலம் நினைவுத்தூபியையும் உள்ளரங்கினையும் பராமரிக்கலாம்.

அல்லது ஈழத்தில் இருக்கும் மாவீரர் குடும்பங்களுக்கு உதவி செய்யலாம்.

பதிவு செய்து ஒரு பொது அமைப்பாக உருவாக்கினால் வரிச்சலுகைகள் நிச்சயமாகக் கிடைக்கும்.

வாத்தியார்

...............

Share this post


Link to post
Share on other sites

பிரமாண்டமான அமைப்பாக அமைக்கின்றபோது சில விடயங்களில் அவதானம் அவசியமானதே. மாதந்த நிதியை மக்களிடம் பெற்று கட்டுகின்றபோது, மக்களிடம் இருந்து வருவாய் இல்லாதபோது மூடிவிட்டுப் போகின்ற நிலைமை வந்து விடும். எனவே குறைந்தபட்சம் வருவாயைக் பெறக்கூடிய வகையில் அமைத்தால் தான் ஈடுசெய்ய முடியும்.

எனவே ஒன்று மண்டபம், நூலகம், போன்றவற்றை உள்ளடங்கியதாகப் பிரமாண்டமான விதத்தில் அமைக்கலாம். அல்லது திறந்தவெளித் தூபியாக அமைக்கலாம்.

தன்னைத் தானே நிவர்த்தி செய்யாமல், மக்களை நம்பிக் கொண்டு கட்டினால் வருவாய் இல்லாத சந்தர்ப்பங்களில் அதை இடைநடுவே கைவிட வேண்டி வரலாம்.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this