Jump to content

போர்க்குற்றம் – மற்றொரு ஆதாரம்


Recommended Posts

இலங்கைப் பேரினவாத அரசின் இனப்படுகொலை போர்க் குற்றங்கள் குறித்த ஆவணங்கள், பல்வேறு வேறு தரப்பிலிருந்து வெளியாகின்றன. கீழேயுள்ள காணொழி ஆவணத்தில் புலிகள் இயக்கத்தைச் சார்ந்த இறந்த பெண்போராளிகளை விலங்குகள் போன்று இலங்கை இராணுவத்தினர் நடத்துவதையும் இரசாயன ஆயுதங்களை இலங்கை அரச படைகள் பயன்படுத்தியதற்கான எரிகாயங்களையும் காணக்கூடியதாக உள்ளது.

போரில் ஈடுபட்ட இராணுவத்தினரின் கைத் தொலைபேசி ஊடாக படமாக்கப்பட்டதாக எமக்கு அனுப்பிவைக்கப்பட்ட இந்த ஆவணத்தினை தொழில்னுட்பம் சார்ந்த உண்மைகளை நிரூபிக்க எமக்கு வளங்கள் இல்லை. இந்த ஆவணம் சில மனித் உரிமை அமைப்புகளுக்கும், சர்வதேச ஊடகங்களுக்கும் இனியொருவால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்செய்தியை வாசிப்பவர்கள் இந்த ஆவணத்தை தமக்குத் தெரிந்த ஊடகங்களுக்கும், மனித உரிமை அமைப்புகளுக்கும் அனுப்பிவைக்கலாம்.

இலங்கையில் நடந்த இந்தக் கோர அழிப்பு ஆளும்வர்க்கத்தைச் சார்ந்தவையான மனித உரிமை அமைப்புகள் தகுந்த வகையில் அம்பலப்படுத்தவும், குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கான முன்னடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தவறிவிட்டன.

உலகில் உரிமைக்காகப் போராடும் ஒடுக்கப்பட்ட பெரும்பான்மையினருக்கு எதிராக ஒடுக்கும் சிறுபான்மையினர் இலங்கைப் போர் உதாரணத்தைப் பிரயோகிக்க வாய்ப்புண்டு என்பதால் இந்தப் போர் அவர்களுக்கு முன்னுதாரணமாகவே திகழ்கிறது. இந்தியாவில் அழிக்கப்படும் பழங்குடி மக்களின் போராட்டம் இதற்கு சிறந்த உதாரணம். அரசுகளுக்கு குறைந்த பட்சம் எம்மோடிணைந்த மக்கள் சார்ந்து அழுத்தங்களையாவது பிரயோகிக்கலாம். இவ்வாறு இந்தக் காணொளி பயன்பட வாய்ப்புள்ளதால் இதனைப் பொதுத் தளத்தில் முன்வைக்கிறோம்.

http://inioru.com/?p=13079

Link to comment
Share on other sites

Wife of victim in Channel-4 photo identifies husband

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=31820

.... இன்று மனிதத்தை தொலைத்து விட்டு, லங்கா மாதாவை கட்டி எழுப்புவோம் எனும் கூக்குரலுடன் திருயும் ஒரு கும்பலில் உள்ள முன்னால் புலிப்போராளியும், இடைநாள் புலி புலனாய்வுத்துறை உறுப்பினரும், கே.பியின் முக்கியஸ்தகரும், இன்னால் மகிந்த/பசில் சிந்தனையாளரும் கூறிய கூற்றொன்று ...

.. "அடேயப்பா அவங்கள் ஜேவிபி பிரட்சனை மூட்டம் இலட்சத்துக்கு கிட்ட சிங்களவனையே கொண்டவங்கள், இண்டு புலி பிரட்சனையை அடக்க எங்களைக் கொல்கிறான். உதை தமிழனுக்கு எதிரானது என்று நாங்கள் எடுக்கக்கூடாது! ..." ....

இப்பதான் தெரிகிறது ஏன் புலி அழிந்தது என்று! இப்படியானதுகள் எல்லாம் புலியில் இருந்துள்ளார்களே? ... புலியின் ஆயுதம் சிங்களவனை நோக்கி திரும்பியது 77ம் ஆண்டளவில், ஆனால் சிங்களவனின் ஆயுதம் 48 முதல் ஆண்டாண்டாக தமிழனின் இரத்தைத்தை குடித்த வரலாற்றையெல்லாம் எம்மவர்கள் எவ்வளவு சுலபமாக மறக்கிறார்கள்!! இது புலி அழிவிற்குப்பின்னும் நின்றதா???? இல்லை இந்த இனவழிப்பு நிற்கத்தான் போகிறதா???

... இன்று எம்மவர்கள் ஒன்று இரண்டாகி, இரண்டு நாலாகி, ... நூறு பிளவுகள், இது மே18 இற்குப்பின்னம். ஏதோ சாபம்!

என்னத்தை செய்கிறோம், ஏதை செய்கிறோம் என்றாலும் ... 60 வருடங்களுக்கு மேலான இவ்வினவழிப்பின் சூத்திரதாரிகளில் ஒருவரையாவது எம் காலத்தில் சர்வதேச கூண்டில் ஏற்றுவோம்! இது நடைபெறுமா????

Link to comment
Share on other sites

ஐம்பதினாயிரம் கையொப்பம் கிடைத்தால் ஐனா இந்த கோரிக்க்கையை நிராகரிக்கமுடியாது - அம்னெஸ்டி இன்ரனசனல்

http://www.amnestyusa.org/emails/E1005A01.html

( நீங்கள் அமெரிக்காவில் வசிக்காவிடின் Not in USA- என்பதினை தெரிவு செய்யவும் )

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.