Jump to content

வெட்கம் தவிர்

Recommended Posts

இன்று வாசித்ததில் பகிர எண்ணியது இது

-----------------------

என்னிடம் வந்த அந்த இளைஞனின் பெயர் குமரன். தன் மனைவியைப்பற்றி புகார் வாசித்தான் இப்படி, 'என் மனைவி மேல நான் உயிரையே வெச்சிருக்கேன். நளினம், மென்மை, வெட்கம், சிணுங்கல் எல்லாம் பெண்மையின் இயல்புனு சொல்வாங்க. இதெல்லாம் என் மனைவிகிட்டே மைனஸ். நான் என்ன பண்றது டாக்டர்?'

பொதுவாக, சமுதாயத்தில் எல்லோரிடமும் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதைப் பாலினம் (Gender) சார்ந்து வரையறுத்து வைத்துஇருக்கிறார்கள். இதனை Gender Role அல்லது appropriate behaviours என்பார்கள். இவை சமுதாயம் உருவாக்கிய கட்டமைப்பு விதிகள்.

ஆணாக இருந்தால், அழக் கூடாது. தைரிய சாலியாக இருக்க வேண்டும். சம்பாதிக்க வேண்டும். வீட்டைக் காக்கும் பொறுப்பு உள்ளவனாக இருக்க வேண்டும் என்று எண்ணுவதும்; பெண்ணாக இருந்தால், குழந்தையை வளர்க்க வேண்டும். சமைக்க வேண்டும். சாதுவாக இருக்க வேண்டும் என்று பாலின அடிப்படையில் எதிர்பார்த்தார்கள். பெண் சம்பாதிக்கவில்லை என்றால்கூட யாரும் எதுவும் சொல்வது இல்லை. ஆனால், கட்டாயம் அவளுக்குச் சமையல் தெரிந்திருக்க வேண்டும். இவை எல்லாம் 50 ஆண்டுகளுக்கு முன் உள்ள சிந்தனைப் போக்கு.

இன்றைய நாளில், பெண்கள் விரல்களில் புத்த கங்கள். அவர்கள் பெயரில் வங்கிச் சேமிப்புகள். சிந்தனைத் தளங்களிலும் கலக்குகிறார்கள். பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற குறுகிய பார்வைகள் மாறிவிட்டன. இன்று குழந்தை களை ஆண்கள் பொறுப்பாகக் கவனிக்க ஆரம் பித்துவிட்டார்கள். ஆணும் சமையலுக்கு உதவி செய்கிறான். பலர் சமைக்கவும் ரெடி. ஆனால், பழங்காலச் சிந்தனைப் போக்குடன் பெண்ணைப் பார்ப்ப தனால்தான் குமரனைப் போன்றவர் களுக்குப் பிரச்னை.

உடல்ரீதியான எதிர்பார்ப்பை (Gender Role) உருவாக்கியது இயற்கை அல்ல; அந்தந்தச் சமுதாயம்தான். இதனால்தான் நாட்டுக்கு நாடு, சமுதாயத்துக்கு ஏற்ற வகையில் இந்தப் பார்வை மாறுபடுகிறது. காலகட்டங்களுக்கு ஏற்ப இவை மாறிக்கொண்டும் இருக்கும். எனவே, பழைய சிந்தனையோடு இந்தக் காலப் பெண்களைப் பார்ப்பது தவறு.

கணவன் - மனைவி உறவில் வெட்கம், கூச்சம் இருந்தால் அது சுவாரஸ்யமான தாம்பத்யம் கிடையாது. உலகம் ஜெட் வேகத்தில் மாறினாலும் இன்னும் ஜட்கா வேகத்தில் சிலர் மாறிக்கொண்டு இருக்கிறார்கள் என்பதற்கான எடுத்துக்காட்டுதான் குமரன் போன்றவர்கள்.

சிந்தனை, செயல்பாடு, மதிப்பீடு போன்றவை மாறும்போது நாமும் மாறிக்கொண்டால் சந்தோஷமாக வாழலாம்!

என்னை மெழுகி

உன்னைக் கோலமிடுகிறாய்

அதிகாலை வாசலாகிறது

படுக்கை!

நன்றி: ஆனந்த விகடன்

Link to comment
Share on other sites

நளினம், மென்மை, வெட்கம், சிணுங்கல் எல்லாம் பெண்மையின் இயல்புனு சொல்வாங்க. இதெல்லாம் என் மனைவிகிட்டே மைனஸ். நான் என்ன பண்றது டாக்டர்?'

கற்பை தூக்கி தலையில் வைத்திருக்கும் சமுதாயத்தில் மென்மை வெட்கம் சிணுங்கல் இல்லாமல் வெளிப்படையா பெண் இருந்தால் அவளுக்கு பாலியல் உறவில் முன் அனுபவம் இருக்கின்றது. வேலி பாயக்கூடத் தயங்கமாட்டாள் என்று மறுவளத்தே கணவன் சந்தேகப்படும் அமைப்பை இந்தக் கலாச்சாரம் காலாகாலம் போதித்து நிற்கின்றது. இதனால் பெண்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் அடக்கி வாசிப்பதே ஒழுக்கம் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. என்னுமொரு புறம் இவ்வாறு பெண்கள் அடக்கிவாசித்தால் சுவார்சியமற்றவளாய் உணரப்பட்டு வைப்பாட்டி தேவைப்படுகின்றது. கிளிமாதிரி பொண்டாட்டி குரங்குமாதிரி வைப்பாட்டி தத்துவம் இப்படித்தான் முனைப்புக்கொள்கின்றது. இந்த மனோபாவத்தில் இருந்து விடுதலையானது யதார்த்தத்தில் அவ்வளவு எளிதல்ல.

Link to comment
Share on other sites

கட்டின கணவனிடம் போலியான வெட்கம் ,நளினம், காட்டுறதில் எந்த அர்த்தமும் இல்ல. இந்த காலத்தில் அனேகமான ஆண்கள் மனைவியோட விருப்பங்கள், ஆசைகளுக்கு ஏற்பத்தான் நடப்பார்கள் என நினைக்கிறன்.அப்படி இல்லாமல் பெண் என்றால் இப்படித்தான் இருக்கவேணுமென்ற மாயையை உருவாக்கினால் கடைசியில் சுகன் சொன்னமாதிரி கிளிமாதிரி பொண்டாட்டியிருக்க குரங்கு மாதிரி வப்பாட்டி இருக்கிற கதையாகத்தான் முடியும்.நிச்சயம் பெண்கள் தனது கணவன் மாரிடம் தாம்பத்தியத்தைப்பற்றி மனம்திறந்து கதைக்க கூடிய மனப்பக்குவத்தை வளர்த்துக்கணும் அதற்கு ஆண்களும் மனைவி மாருக்கு எதையும் மனந்திறந்து கதைக்கும் உரிமையை வழங்கனும். அப்படிபட்ட வாழ்க்கை நிச்சயம் அன்னியோன்யம் நிறைந்ததாக இருக்கும்.

Link to comment
Share on other sites

ஓய் நிழலி...... கிளுகிளுப்பான திரியை ஆரம்பிச்சு வைச்சதுக்கு ஆண்கள் சார்பாக பாராட்டுக்கள்.

ஆனா... எனக்கு ஒரு பெரிய குழப்பம் இருக்கு அதை ஆராவது தீர்த்து வைச்சால் நல்லம் இவளுகளை... ஊப்ஸ்... ஹிஹி இவளை புரிஞ்சு கொள்ளவே முடியல்லை.

நான் தொட்டால் இவள் துவண்டாள்

நான் துவண்டால் இவள் படர்ந்தாள்

இதில அச்சத்தையும் நாணத்தையும் தேடிப்பார்க்கிறன் அடையாளம் பிடிபடுதில்லையே.... அச்சத்தையும் நாணத்தையும் எப்படிக் கண்டு பிடிப்பது?

Link to comment
Share on other sites

இதில அச்சத்தையும் நாணத்தையும் தேடிப்பார்க்கிறன் அடையாளம் பிடிபடுதில்லையே.... அச்சத்தையும் நாணத்தையும் எப்படிக் கண்டு பிடிப்பது?

இடுப்பில கிள்ளி பார்க்கலாமோ

பளார் எண்டு ஒரு அறை விழுந்தால் அச்சப்படாத பார்டியாய் இருக்கலாம். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அச்சத்தையும் நாணத்தையும் எப்படிக் கண்டு பிடிப்பது?

சகலவற்றையும் கழற்றி எறிந்துவிட்டு பிறந்தமேனியாக தெருவில் ஒரு பொடி நடைபோட்டு வாருங்கள். பெண்களிடம் மட்டுமல்ல ஆண்களிடம் கூட அச்சம் நாணம் இருப்பதைக் கண்டுபிடித்து விடுவீர்கள்!

தர்ம அடிக்கும் சிறைச்சாலைக்கும் பயமில்லாதவர்தானே.. தைரியமாய் புறப்படுங்கள்.

Link to comment
Share on other sites

அண்மையில ஒரு தமிழ்ப்படம் பார்த்தன். அதில காதலன் அப்பிடித்தான் தன்ர காதலை நிரூபிக்க தெருவில உரிஞ்சுபோட்டு ஓடறான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில ஒரு தமிழ்ப்படம் பார்த்தன். அதில காதலன் அப்பிடித்தான் தன்ர காதலை நிரூபிக்க தெருவில உரிஞ்சுபோட்டு ஓடறான்.

காதலை நிரூபிக்க கதாநாயகனை அம்மணமாய் ஓடவிட்ட இயக்குநர் கதாநாயகியையும் ஒட்டுத்துணி இல்லாமல் ஓடவிட்டிருந்தால் படம் பிச்சிக்கினு போயிருக்கும் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில அச்சத்தையும் நாணத்தையும் தேடிப்பார்க்கிறன் அடையாளம் பிடிபடுதில்லையே.... அச்சத்தையும் நாணத்தையும் எப்படிக் கண்டு பிடிப்பது?

அவைகள் அங்கேதான் இருக்கும், ஆனால் அந்தர்யாமியாக!

தண்ணில சீனியை கரைத்தால் சீனி மறைந்து விடும், மீண்டும் சூடேற்றினால் இரண்டும் தனித்தனியாக தெரியும்! எல்லாம் சயன்ஸ் தான்! :lol:

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கற்பை தூக்கி தலையில் வைத்திருக்கும் சமுதாயத்தில் மென்மை வெட்கம் சிணுங்கல் இல்லாமல் வெளிப்படையா பெண் இருந்தால் அவளுக்கு பாலியல் உறவில் முன் அனுபவம் இருக்கின்றது. வேலி பாயக்கூடத் தயங்கமாட்டாள் என்று மறுவளத்தே கணவன் சந்தேகப்படும் அமைப்பை இந்தக் கலாச்சாரம் காலாகாலம் போதித்து நிற்கின்றது. இதனால் பெண்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் அடக்கி வாசிப்பதே ஒழுக்கம் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. என்னுமொரு புறம் இவ்வாறு பெண்கள் அடக்கிவாசித்தால் சுவார்சியமற்றவளாய் உணரப்பட்டு வைப்பாட்டி தேவைப்படுகின்றது. கிளிமாதிரி பொண்டாட்டி குரங்குமாதிரி வைப்பாட்டி தத்துவம் இப்படித்தான் முனைப்புக்கொள்கின்றது. இந்த மனோபாவத்தில் இருந்து விடுதலையானது யதார்த்தத்தில் அவ்வளவு எளிதல்ல.

சாட்டைஅடி ஆண்களுக்கும் இந்த சமுதாயத்துக்கும்...

ஆனால் நான் இதிலிருந்து விடுபட்டேனா என்பதே என் கேள்வி

பதில்

மன்னிக்கவும்

இல்லை என்பதுதான்.

Link to comment
Share on other sites

காதலை நிரூபிக்க கதாநாயகனை அம்மணமாய் ஓடவிட்ட இயக்குநர் கதாநாயகியையும் ஒட்டுத்துணி இல்லாமல் ஓடவிட்டிருந்தால் படம் பிச்சிக்கினு போயிருக்கும் :D

எங்கை தியட்டரை விட்டோ...?? :)

Link to comment
Share on other sites

  • 4 years later...
  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு பதிவு, இன்றுதான்.....என் கண்ணில் பட்டது. :rolleyes: 
பதிந்தவர் யார், கருத்துப் பகிர்ந்தவர்கள் யார்.... என்று பார்த்தால், ஆச்சரியப் பட்டுப் போவீர்கள். :D 
ஹ்ம்ம்... எல்லாம், அந்தக் கனாக்காலம். :lol:  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு பதிவு, இன்றுதான்.....என் கண்ணில் பட்டது. :rolleyes:

பதிந்தவர் யார், கருத்துப் பகிர்ந்தவர்கள் யார்.... என்று பார்த்தால், ஆச்சரியப் பட்டுப் போவீர்கள். :D

ஹ்ம்ம்... எல்லாம், அந்தக் கனாக்காலம். :lol::icon_idea:

இன்னாடா இது?

தல கண்ணில இம்புட்டு நளா படேல்லையாமே!

நிசமாலுமா? :D

Link to comment
Share on other sites

இதை பதிந்த அந்த நல்ல மனுசன் இப்ப எங்க என்று தெரியவில்லை..... :D பிழம்பு வேற வெள்ளிக்கிழமைகளில் வருவதும் இல்லை... :icon_idea:

Link to comment
Share on other sites

நல்லதொரு பதிவு, இன்றுதான்.....என் கண்ணில் பட்டது. :rolleyes:

பதிந்தவர் யார், கருத்துப் பகிர்ந்தவர்கள் யார்.... என்று பார்த்தால், ஆச்சரியப் பட்டுப் போவீர்கள். :D

ஹ்ம்ம்... எல்லாம், அந்தக் கனாக்காலம். :lol::icon_idea:

நேற்று பொழுது போகலை என்று 5 வருடத்திற்கு முன்பு என்ன பதில்கள் போட்டிருக்கன் என்று தேடிப்பார்த்தன் அது உங்கட கண்களிலும் பட்டிட்டுதா ... நானும் ஆச்சரியப்பட்டுப்போனன்...
Link to comment
Share on other sites

உணர்வுகள் திட்டமிட்டு வருவதில்லை.தானாக வருவது.ஆண் பெண் எல்லாம் அதற்கு அப்பால் தான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.