Jump to content

யாழ் இணையத்தின் சண்டித்தனம்


Recommended Posts

... மே 18இற்கு ஓரிரு தினங்களுக்கு முன்னம், பிரித்தானியா பா.உ முன்றலில் நின்றிருந்தவேலை, ஐங்கரன் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்(ஐ.பி.சி) ஊடாக சிங்களத்தினால் சரணடையும்போது சுட்டுக்கொல்லப்பட்ட புலிகளின் முன்னால் அரசியல் பொறுப்பாளர் நடேசரின் செய்தி ... " .... நாங்கள் ஏறக்குறைய சிங்களத்தின் முதன்மை படையணிகளை அழித்து விட்டோம், இனி இங்குள்ள மக்களே மீதமுள்ளவர்களை அடித்து துரத்துவார்கள் ..." ... நாமும் கோட்டை கட்டினோம் ஆனால் ..???

... ஓரிரு வருடங்களுக்கு முன்பு ஈரோஸின் முன்னால் தலைவரும், புலிகளின் உறுப்பினருமாகிய கா.வே.பாலகுமார், ரீ,ரீ.என்னில் ஒளிபரப்பப்பட்ட ஓர் உரையாடலில் ... "... தலைவர் புன்சிரிப்புடன் உலக மாற்றங்களை அவதானித்துக் கொண்டிருக்கிறார் ..." ....

... இப்படி புலத்தில், ஒருபுறம் தமிழ்த்தேசியம் எனும் பெயரில் கற்பனாவாதங்களை கட்டவிழ்த்து விட்டு, மக்களின் எழுச்சியை போலியான இராணுவ/ அரசியல் பித்தலாட்டகளால் மழுங்கடித்த ஊடகங்கள்!

... மறுபுறத்தே, ஓட்டும்/ஒட்டில்லாத மாற்றுக்கருத்து மாமணிகளாலும், சிங்கள புலனாய்வுத்துறையினராலும் நடத்தப்பட்ட புலி எதிர்ப்பு ஊடகங்கள்! புலி முடிந்ததும் இவ்வூடகங்கள்/செயற்பாட்டாளர்களின் இன்றைய நடவடிக்கைகள், இவ்வளவு காலமும் மேற்கொண்டது புலிகளுக்கு எதிராகவல்ல, தமிழர்களின் சுதந்திரமான வாழ்வு/எதிர்காலம் என்பவற்றையே அழிப்பதையே குறிக்கோளாக கொண்டிருததை அம்பலப்படுத்துகிறது.

இவர்கள் சொந்த சகோதரி சிங்களத்தினால் கற்பளித்து கொல்லப்பட்டால் அவளை விபச்சாரி என கூசாமல் கூறுவார்கள்(கடந்த காலங்களில் பல தடவை நடைபெற்றிருக்கிறது), கடத்தல்கள், கப்பங்களுக்குமே நியாயம் கற்பிப்பார்கல், மேலாக இனவழிப்பையே தவிர்க்க முடியாதது என்பார்கள். மொத்தத்தில் இக்கூட்டத்தவர்களுக்கும் அதனை அண்டிய ஊடகங்களுக்கும் கொள்கைகளும் இல்லை கோதாரியும் இல்லை!

..... நான் இங்கு யாழில் எழுதுகிறேன், எனக்கு உன் எழுத்துக்களில் அது பிழை/ இது சரியல்ல என்று யாராவது கூறாதுவிடின் நான் நினைத்துக் கொண்டிருப்பேன் நான் எழுதுவதெல்லாம் சரி என்றுதான். இதை போலத்தான் நாம் இவ்வளவு காலமும் எம் அரசியலை நடத்தினோம்! அதற்கு எம் தமிழ்த்தேசிய ஊடகங்கள் என இருந்தவை துணை புரிந்தவை என்ன புதை குளிகளை தோண்டின!!!

இதுவரை நாம் ... என்ன? எவ்வாறு? எது? எதற்கு? எங்கு? எப்படி? .... கேட்கத்தவறியதனாலேயே, இன்று எமது போராட்டம் புதைக்கப்பட்டிருக்கிறது. சரி/பிழை சொல்லவோ/கேட்கவோ ஆட்களில்லாது போய் விட்டது!!! இனியும் இப்பிழைகளை நாம் தொடர்ந்து விட்டு எம் எஞ்சியிருப்பவர்களையும் புதையாது தடுப்போம்!

... இன்றைய யாழ்களத்தின் பாதை/பயணம், காலத்தின் தேவை கருதியது!... கூக்குரலிடுபவர்கள் இடட்டும், அவர்களால் அதுதான் இனி முடியுமானதும்! நேரிய பார்வையுடன் உன் பயணத்தை தொடரு யாழ்களமே! ...

Link to comment
Share on other sites

  • Replies 110
  • Created
  • Last Reply

அனைத்துலக தொடர்பகத்தின் வால்பிடிப் புலிகள் மாத்திரம் தனிநபர்களையும் தமிழ்த் தேசியத்துக்காக உழைத்தவர்களையும் விமர்சித்து கறுப்பு எனும் பெயரில் மின்னஞ்சல் ஊடாகவும் புளக்சின் வழியாக தேசப்புயல் எனும் பெயரில் அவதூறுப் பரப்புரை செய்யலாம். மற்றவர்கள் செய்தால் மாத்திரம் தமிழ்த் தேசியத்துக்காக பாடுபட்டவர்கள் மீது அவதூறு பரப்புகின்றார்கள் எனக்கூப்பாடு போட்டு கொதித்தெழுகின்றனர். பச்சையாக கேட்பது எனில் உங்கள் அம்மா என்றால் அம்மா; மற்றவர்களின் அம்மா என்றால் சும்மாவா?

கறுப்பு எனும் பேரில் கே.பி., விடுதலைப் புலிகளின் வெளியகப் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் கதிர்காமத்தம்பி அறிவழகன், முன்னர் சுவிசில் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்காக உழைத்த குலம் அண்ணை, கிருஸ்ணா அம்பலவானர், நாடு கடந்த தமிழீழ அரசின் இணைப்பாளர் உருத்திரகுமாரன் உட்பட புதினத்தில் தலைவர் இறந்துவிட்டார் என்று எழுதியதற்காகவே எழுதியவரின் கருத்தோடு மோதாமல் வழுதியைப்பற்றியும் புதினம் நடத்தியவரைப்பற்றியும் அவதூறாக எழுதி புளக்சிலும் மின்னஞ்சலிலும் பரப்புரை செய்தவர்கள்தானே அனைத்துலகத்தின் வால்பிடிப் புலிகள். (இவர்கள் கருத்தை எதிர்கொள்ள வக்கற்று மிரட்டி தளங்களை மூடவைத்தது தனிக்கதை)

இதற்கு எல்லாம் வால்பிடிப் புலிகள்தான் காரணம் என எப்படி உறுதியாகக் கூறுகின்றீர்கள் என்று நீங்கள் கேள்வி எழுப்பினால், அதற்கும் பதில் இருக்கின்றது. சங்கதி இணையத்தளத்தில் வழுதியைப்பற்றி அவதூறாக எழுதிய புளக்சின் இணைப்பை பல மாதங்களாக தொங்கவிட்டிருந்தனர்.

இங்கே நான் கூறவருவது யாதெனில், இன்று ஈழம்ஈநியூசினை நடத்துகின்றவர்கள் முன்னர் ஆய்வாளப்பெருந்தகைகள் எனும் பேரில் சங்கதி, பதிவு, வீரகேசரி, தமிழ்க்கதிர், ஐபிசி, ஈழமுரசில் புலத்து மக்களுக்கு அதீத நம்பிக்கைகளை ஊட்டி தொடர்ந்தும் அந்த மக்களை மாய உலகத்தில் வைத்திருக்கின்றனர். இவர்கள் ஏன் அவற்றை அப்போதைய காலத்தில் தட்டிக்கேட்கவில்லை?

யாழை மிரட்டி மூடவைக்க முடியாது என்பதற்காக சட்டரீதியாக அணுகுகின்றோம் என்று பயம் காட்டுகின்றனர். யாழில் அண்மைக்காலமாக இந்த வால்பிடிப் புலிகளின் போலித்தனங்களை தோலுரிக்கும் வகையில் கள நண்பர்கள் பலர் கருத்துக்களை எழுதி வருகின்றனர். இதில் சிலர் உணர மறுக்கின்றனர். அவர்களை விட்டுவிடலாம். ஏனெனில் இங்கே பெரும்பான்மையானோர் வால்பிடிப் புலிகளின் போலித்தனத்துக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை வைக்கின்றனர் என்பதிலிருந்தே அறிந்துகொள்ளலாம்.

Link to comment
Share on other sites

இது எதிர்பார்ததுதான்.மற்றவர்களையெல்லாம் அழித்தபின் அடிபட ஆட்களிளில்லாவிடில் ஒண்டுக்க ஒண்டு அடி பட வேண்டியதுதான்.பிரச்சனை ஒரு போதும் சிங்களவனில்லை எமக்கு நாமே தான்.

Link to comment
Share on other sites

பலர் நகைச்சுவையுடன் நாசுக்காக விலகியதை பார்க்க சிரிப்பு வருகிறது.

மீசை வீரத்தின் அடையாளம் தானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பலர் நகைச்சுவையுடன் நாசுக்காக விலகியதை பார்க்க சிரிப்பு வருகிறது.

மீசை வீரத்தின் அடையாளம் தானே.

ஒற்றை வார்த்தை சொன்னாலும் நச்சனு ஓங்கி அடிச்சது போல இருக்கு சகோதரி.

எங்கடை வீரம் எல்லாம் தட்டச்சிலை தான்..

ஊரிலை ஒரு பழமொழி சொல்லுவாங்க‌

"வண்ணான் பெண்டிலுக்கு அடிச்ச மாதிரி என்று"

பி.கு_ எந்த சாதியையும் தரக்குறைவா சொல்லவில்லை.. அப்படி யாருக்கும் தோன்றினால் மன்னித்து கொள்ளவும்.

Link to comment
Share on other sites

குழாயடிச் சண்டைபோல் ஊடகவியலாளர்கள் என்போர் ஒரு வளையாட்டுத் தொடங்கியுள்ளார்கள். அதுவும் நகைச்சுவைதான். :rolleyes::lol:

Link to comment
Share on other sites

குழாயடிச் சண்டைபோல் ஊடகவியலாளர்கள் என்போர் ஒரு வளையாட்டுத் தொடங்கியுள்ளார்கள். அதுவும் நகைச்சுவைதான். :rolleyes::lol:

உங்களை நான் எந்தவித காரணமும் இல்லாமல் துரோகி சிங்களவன் போடும் எலும்பை தின்பவன் எண்று திட்டினால் உங்களுக்கு எப்படி இருக்கும்...

அப்படித்தான் இது... இங்கை அப்படியான அவதூறை ஆரம்பித்து பிரச்சினையை தொடங்கி விட்டு கணாமல் போய் விட்டனர் அதிலை DAM எண்டவர் மட்டும் தொடர்ந்தும் குத்தி முறிகிறார்... இப்ப அங்கையும் இங்கையும் மாறி மாறி மற்றவர்கள் குலைச்சு கொண்டு இருக்கிறீயள்...

ஆரம்பித்து வைத்தவைக்கு வெற்றிதான்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

தன்னுடைய காசிலை, தன்னுடைய வீட்டுக்கு சூனியம் வைச்சமாதிரி கிடக்குது.

:lol::rolleyes:

.

Link to comment
Share on other sites

.

தன்னுடைய காசிலை, தன்னுடைய வீட்டுக்கு சூனியம் வைச்சமாதிரி கிடக்குது.

:lol::rolleyes:

.

சொந்தக்காசிலை சூனியம் வைக்கிறது எண்டு சொல்ல வேணும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

சொந்தக்காசிலை சூனியம் வைக்கிறது எண்டு சொல்ல வேணும்...

ஓம் தயா, திருத்திய சொல்லாடலுக்கு நன்றி. :rolleyes:

.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

தாம் வெளியிடும் செய்திகள் பொய்யானவை என்று தன்னை தனே அம்பலப்படுத்துகிறது யாழ் இணையம்

Monday, June 14, 2010

செய்தியளர்: ஆர்த்தி

Yarlமுகமில்லாத முகவரியற்ற நபர்களின் பொய், பொய்யைச்சுற்றிய மேலதிக பொய், புனைவுகளினால் நிரம்பிய மொட்டைக்கடதாசிகளுக்கு ஒரு எதிர்வினையாற்றுவதென்பது மிகப் பெரிய அவலம். இந்த அவலத்தை இன்று “ஈழம்ஈநியூஸ்” சந்தித்திருக்கிறது. நவீன பிரெஞ்சு தத்துவமேதை ழான் போத்ரியாவின் மிக முக்கியமான ஒரு ஆய்வு சொல்கிறது நவீன மனிதன் இனி போலிகளுக்கும் பொய்மைகளுக்கும் எதிராகவும் போரடவேண்டியிருக்கும்.

அதாவது நிஜத்திற்கும் போலிக்குமான இடைவெளி அருகிவருகிறது.இந்த நிஜத்திற்கும் புனைவிற்குமான இடைவெளியை ஊடகங்கள் மெல்ல மெல்ல அகற்றி வருகின்றன என்கிறார். தமிழ்ஊடகப்பரப்பில் “யாழ்” இணையம் இந்த கூற்றை மெய்ப்பித்துவருகிறது. “யாழின்” இந்த போலிக்கும் பொய்மைக்கும் புனைவிற்கும் எதிராக நாம் போராட உந்தப்பட்டுள்ளோம்.

குருரமாக தோற்கடிக்கப்பட்ட, படுகொலைக்களத்தில் எல்லோராலும் கைவிடப்பட்டு வீழ்த்தப்பட்ட, இனப்படுகொலையைச் சந்தித்த ஒரு இனம் நிஜத்திற்கு எதிராகவே போராட முடியாமல் அல்லற்படும் நேரத்தில் புனைவிற்கும் பொய்மைக்கும் போலிகளுக்கும் எதிராக போராடவேண்டியிருப்பது மிகப் பெரிய அவலம். முள்ளிவாய்க்காலின் இரண்டாம் பாகம் இது. எதிரி இப்போது எம்மைப்போலவே இருக்கிறான். எமது மொழியைப் பேசுகிறான். எமது பண்பாட்டை பேணுகிறான். எமது நிலத்திற்கு அவனும் சொந்தக்காரன். அவனும் வாய்கிழிய விடுதலை குறித்து பேசுகிறான். ஆனால் அவன் பி;ம்பம் நிஜம் அல்ல போலி. உள்ளிருந்தே கொல்ல புறப்பட்டிருக்கிறான். “யாழ்” தளத்தில் இந்த பிம்பங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி சிதறுண்டுகொண்டிருக்கின்றன. ழான் போத்ரியா மிகப்பெரிய தத்துவ மேதைதான். மே 18 இன் பிற்பாடு ஈழச்சூழல் நிஜத்திற்கும் புனைவிற்குமான எல்லைக்கோட்டை முற்றாக அழித்துவிட்டிருக்கிறது. அதற்கு ஒரே சாட்சி “யாழ்”. இங்கு எல்லோரும் மாவீரர்கள், எல்லோரும் துரோகிகள், எல்லோரும் காட்டிக்கொடுப்பவர்கள். இதற்கு எந்த வரைமுறையும் இல்லை வாய்ப்பாடும் இல்லை. இதற்குள் உண்மையைத் தேடுபவர்கள் முட்டாள்கள். குறிப்பாக சொன்னால் எல்லோரும் இந்நாட்டின் மன்னர்கள். வாழ்க ஜனநாயகம்….

அண்மையில் ஈழம்ஈநியூஸ் உட்பட பல தமிழ்ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் எதிராக “யாழ்” இணையம் கட்டவிழ்த்துவிட்டிருக்கும் பயங்கரவாதத்திற்கு எதிராக நாம் ஒரு வழக்கை கொண்டு நடத்த முற்பட்டிருப்பது எல்லோரும் அறிந்ததே. தமிழ் மக்களுக்கு இது குறித்த மேலதிக விபரங்களை தெரியப்படுத்தும் நோக்கில் இந்தப் பதிவு எழுதப்படுகிறது.

யாழ் தளத்தின் முன்னைய ஊடக எதேச்சதிகாரப்போக்கை கண்டித்து நாம் எழுதிய பதிவு இது : http://www.eelamenews.com/?p=27507

பிற்பாடு வழக்கு தொடர்பாக நாம் எழுதிய பதிவு இது: www.eelamenews.com/?p=28734

திரும்ப திரும்ப ஒரே விடயத்தை எழுதுவது அயாச்சியும் களைப்பும் தரும் விடயம். போதாததற்கு பொறுப்பற்ற இத்தகைய மொட்டைக்கடதாசிகளுக்கு விளக்கம் எழுதுவது நேரத்தை வீணடிப்பதும் சலிப்பை தருவதுமாகும். மே 18 இன் பிற்பாடு 3 தசாப்த கால போராட்டசக்திகளின் மீதும் அதன் தலைமைகளின் மீதும் சேறடித்து போராட்டத்தை மழுங்கடிக்க தலைப்பட்டிருக்கும் – உள்ளிருந்தே கழுத்தறுக்கும் இனந்தெரியாத சக்திகளின் மையமாக – போக்கிடமாக “யாழ்” மாறியிருக்கிறது. ஒரு போராட்டத்தை எதிரிகளுக்கு – அன்னிய சக்கதிகளுக்கு விலைபோய்தான் காட்டிக்கொடுக்க வேண்டும் என்றில்லை.

“யாழ்” போன்று பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வதனூடாகவும் புலிகளின் வீழ்ச்சியின் பிற்பாடு அந்த இடத்தை கைப்பற்ற துடிக்கும் உள் முரண்பாட்டு சக்திகளின் ஒரு தொகுதிக்கு ஒற்றையாகவும் பக்கச்சார்பாகவும் நடந்து கொள்வதனூடாகவும் இன்ன பிற போக்கிரித்தனங்களினூடாகவும் கூட போராட்டத்தை தோற்கடிக்கலாம். போராட்டத்தை வேரோடு புடுங்கியெறிய துடிக்கும் எதிரிகளின் -அன்னிய சக்திகளின் – தீய சக்திகளின் குருர எண்ணத்தின் பிரதிபலிப்பாக- பிம்பமாக “யாழ்” தமிழச்சமூகத்தின் மீது பட்டுத்தெறித்துக்கொண்டிருக்கிறது.

இதன் உச்ச வெளிப்பாட்டு வடிவம்தான் குறிப்பான 5 தமிழ் ஊடகங்களுக்கும் அதன் ஊடகவியலாளர்கள் மற்றும் பணியாளர்கள் சுயாதீனமாக இயங்கும் ஆய்வாளர்கள், பத்தி எழுத்தாளர்கள் மீது விடப்பட்டிருக்கும் கொலை மிரட்டலை பார்க்க முடியும். ஒரு கூட்டுக் கொலை அச்சுறுத்தலை “யாழ்” நிகழ்த்தியிருக்கிறது. நாம் முன்பே ஒரு தருணத்தில் எழுதியிருந்தோம்.” ஊடகவியலாளர்கள் என்று தம்மை அழைத்துக்கொள்பவர்களே ஊடகங்களிற்கும் ஊடகவியலாளர்களிற்கும் எதிராக அதிகாரத்தைப் பிரயோகிக்கும் அபத்தம் தமிழச் சூழலில்தான் சாத்தியம்” என்று. “யாழ்” இதன் பிற்பாடும் தன்னை ஊடகம் என்று அழைத்துக்கொள்வது வேடிக்கையாக இருக்கிறது.

இந்த வழக்கும் சட்ட நடவடிக்கையும் ஏன்?

“யாழ்” தளத்தின் இரட்டை வேடத்தையும் அதன் கபட நாடகத்தையும் குறிப்பாக ஊடக அறத்திற்கும் தர்மத்திற்கும் எத்தகைய சவாலாக அது விளங்குகின்றது என்பதை மக்களுக்கு அம்பலப்படுத்துவதே எமது முதன்மை நோக்கம். “தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவான ஊடகவியலாளர்கள் மீது யாழ் இணையத்தின் கொலை அச்சுறுத்தல்: அனைத்துலகரீதியான சட்ட நடவடிக்கையில் ஈழம்ஈநியூஸ்” என்று ஊடகங்களிற்கு நாம் செய்தி வெளியிட்ட அந்த கணத்திலிருந்தே எமது முதன்மை நோக்கத்தைச் நாம் சாதித்துவிட்டோம். சட்ட நடவடிக்கை என்பது சம்பந்தபட்ட ஊடகவியலாளர்களை அவர்களது கொலை அச்சுறுத்தலிலிருந்து பாதுகாக்கும் முயற்சி ஆகும். இன்று சம்பந்தபட்ட ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டாலோ – கொல்லப்பட்டாலோ ஐரோப்பிய காவல்துறையின் “கஸ்டடிக்குள்” கொண்டுவரப்படுகிற முதல் நபராக “யாழ்”தளக்கட்டுப்பாளர் திரு மோகன் அவர்கள் இருப்பார். நாம் எழுத்து மூலம் கேட்டும் தராத “DAM”, சுமங்களா” போன்றவர்களும் காவல்துறையின் “கஸ்டடிக்குள்” மிக வேகமாக வந்து சேர்வார்கள். மேற்படி கொலை அச்சுறுத்தலுக்குள்ளாகிய குறிப்பான 93 ஊடகத்துறை சார்ந்தவர்கள் “யாழ்” தளக்கட்டுப்பாட்டாளர் திரு மோகன் மீது பல ஐரோப்பிய நாடுகளில் (இருவர் கனடா)வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.

ஊடகத்துறை வரலாற்றிலேயே (தமிழ்ச்சூழலில் அல்ல உலகளவிலேயே) ஒரு ஊடக நிர்வாகியினால் தமக்கு கொலை அச்சுறுத்தல் என்று 93 ஊடகப்பணியாளர்கள் வழக்கு பதிவு செய்திருப்பது இதுவே முதல் தடவை. ஊடகம் என்ற போர்வையில் கட்டப்பஞ்சாயத்து செய்ததன் விளைவு இது. “அச்சுறுத்தல் என்ற அளவில்தானே அந்த பதிவு இருந்தது. உங்களது நடவடிக்கை கடுமையாக இருக்கிறது. வழக்கை மீளப்பெறுங்கள்” என்ற பல நணபர்கள் “ஈழம்ஈநியூஸ்” ஐ தொடர்பு கொண்டபடி இருக்கிறார்கள். “ஈழம்ஈநியூஸ்” ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதன் பிற்பாடு “அஞ்சலிக்குறிப்பு” எழுதுவதற்கு ஊடகம் நடத்தவில்லை. எங்கெல்லாம் ஊடக அச்சுறுத்தல் இ;ருக்கிறதோ அத்தகைய அச்சுறுத்தலை இனங்கண்டு மக்களுக்கு அம்பலப்படுத்துவதனூடாக வளமான ஊடகச்சூழலை உருவாக்க “ஈழம்ஈநியூஸ்” உறுதியெடுத்திருக்கிறது.

நாம் சட்ட நடவடிக்கையை ஊடகங்களில் வெளியிடுவதற்கு முன்பாகவே “காட்டிக்கொடுப்புக்கள் யாரால்? எங்கே?” என்ற தலைப்பில் ஊடக அச்சுறுத்தல் விடப்பட்டிருப்பதை உலகெங்கம் பரந்துவாழும் ஊடகவியலாளர்களுக்கு சுட்டிக்காட்டியிருந்தோம். அவர்கள் “யாழ்” கள பொறுப்பாளரை தொடர்பு கொண்டு தமது கண்டனத்தை தெரிவித்ததன் பிற்பாடே அது தளத்திலிருந்து நீக்கப்பட்டது. அவர்கள் சுயாதீனமாக நீக்கியதான குறிப்பு பொய் என்பதை மக்களுக்கு இந்த இடத்தில் தெரியப்படுத்த விரும்புகிறோம்.

கொலை அச்சுறுத்தலை விடுத்துவிட்டு ஒரு மன்னிப்பு கேட்ட பதிவு கூட வெளியிடப்படவில்லை. சம்மந்தப்பட்ட “DAM”, சுமங்களா” ஆகியோருக்கு கண்டனம்கூட தெரிவிக்கப்படவில்லை. ஆனால் பாதிக்கபட்ட ஊடகவியலாளர்கள் இதை எல்லாம் பார்த்துகொண்டு பேசாமல் இருக்க வேண்டும் என்று இன்றுவரை “யாழ்” வகுப்பெடுக்கிறது.

கருத்துக்கள விதிமுறைகள் என்று ஒரு பட்டியலை தற்போது “தொங்க” விட்டுள்ளார்கள். (http://www.yarl.com/forum3/index.php?showtopic=22182) “காட்டிக்கொடுப்புகக்கள் யாரால்? எங்கே?” என்ற பதிவு அதன் ஒரு விதிமுறைக்குள்ளாவது வருகின்றதா என்பதை நீங்களே ஒப்பிட்டு பார்த்துகொள்ளுங்கள். “பொய்யான ஆதாரமற்ற தனிநபர் தாக்குதலை மையமாக கொண்டுள்ளதால் அது நீக்கப்பட்டதாக” இப்போது ஒரு குறிப்பை வெளியிட்டு அந்த பதிவை எடுத்திருக்கிறார்கள். கருத்துக்கள விதிமுறையை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போட்டுள்ளர்கள். ஆனால் மேற்படி நபர்கள் தற்போதும் தளத்தில் ஊடகவியலாளர்களை எச்சரித்துக்கொண்டே இருக்கிறார்கள். இது எல்லாம் என்ன ஊடக அறம் – என்ன விதிமுறை?

“யாழ்” தளத்தின் அயோக்கியத்தனத்தினதும் அடாவடித்தனத்தினதும் உச்சம் இது. அவர்களது குழுவே உருவாக்கிய கதைக்கு யாரை தண்டிப்பது?

தற்போது புதிதுபுதிதாக எல்லாம் யாழ் தளத்தின் ஓரங்களில் ஏதேதோ தொங்குகிறது. பின்வரும் குறிப்பு புதிதாக முளைத்திருக்கிறது. ஒரு முறை ஊன்றி படியுங்கள்,

“யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல - பொறுப்பேற்காது. அதே போன்று – இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே- உறுப்பினருடையதே – அன்றி – யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல.

எனவே – எழுதப்படும் கருத்துகளின்- ஆக்கங்களின்- கட்டுரைகளின்- செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம்.”

இதைத்தான் நாம் எதிர்பார்த்தோம். அவர்கள் வாயாலேயே அவர்கள் தங்களது நிலைப்பாட்டை ஒத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் எங்களது வழக்கின் முக்கிய நேர்ககம். மேற்படி குறிப்பினூடாக எல்லாம் முடிவுக்கு வருகிறது.

தங்களது தளம் பொய்யானது . பொய் செய்தியும் வரும் – முழுமையில்லாத செய்தியும் வரும் -அதற்கு பொறுப்பு அதை எழுதும் “முகமூடி” நபர்கள்தான். எதற்குமே நாங்கள் பொறுப்பெடுக்க மாட்டோம் என்பதே அவர்களது “முழுமையான” செய்தி. எனவே சக ஊடகங்களும் மக்களும் “யாழ்” இல் வரும் செய்திகள் குறித்து “சீரியசாக” எடுத்து கொள்ள வேண்டாம். பொய்யன செய்திகள் இருக்கும் என்பதை அவர்களே ஒத்துக்கொள்கிறார்கள். எனவே “யாழ்” குறித்து மக்களும் ஊடகங்களும் ஒரு விவாதத்தை வளர்த்து செல்ல வேண்டாம் என்று கேட்டு கொள்கிறோம். பொய்யான – ஆதாரமற்ற – அந்த தளம் பொறுப்பு எடுக்காத ஒரு செய்தியை – தகவலை நாம் ஒரு விவாதமாக வளாத்து செல்வது ஆரோக்கியமானதல்ல. அவர்களே அதை தற்போது வெளிப்படையாக அறிவித்திருக்கும் நிலையில் நாம் அதை பின்பற்றுவது முட்டாள்தனம் ஆகும்.

இதில் நகைச்சுவையின் உச்சம் என்னவென்றால் “யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம்.” என்கிறார்கள். நாம் உத்தியோகபூர்வமாக எழுதிய 3 கடிதங்களுக்கு எதுவும் பதிலும் இல்லை நடவடிக்கையும் இல்லை ஒரு மண்ணும் இல்லை. என்ன ஊடகம் நடத்துகிறார்கள் என்று மேற்படி குறிப்பை வாசித்ததன் பிற்பாடுதான் எல்லாம் புரிகிறது.

முக்கிய குறிப்பு : “யாழ்” என்பது ஒரு தளம். நாம் அந்த தளத்தின் பொறுப்பற்ற போக்கிரிதனத்தை அம்பலப்படுத்த முற்பட்டபோது யாழ் களத்தில் கருத்து எழுதும் சில நணபர்கள் எம்மை எச்சரிப்பதும் கண்டிப்பதும் வேடிக்கையாக இருக்கிறது ஓரு வகையில் வேதனையும்கூட.

நாம் “யாழ்” களத்தின் பொறுப்பற்ற போக்குக்குதான் எதிரிகள். அந்த தளத்திற்கு அல்ல. நாம் “யாழ்” ஐ மூட முயற்சிப்பதாகக் கூட சில குறிப்புக்களை அவதானித்தோம். மிகவும் தவறான பார்வை அது. ஒரு ஊடகத்தை எந்த கட்டத்திலும் நாம் மூட முயற்சிக்க மாட்டோம். யாரும் அதற்கு முனைந்தால் அதை அனுமதிக்கவும் மாட்டோம். ஆரோக்கியமான முறையில் உண்மையான செய்திகளை இணைத்து எமது விடுதலைக்கு உரம் சேர்க்கும் வகையில் அங்கு விவாதங்கள் மேலெழ வேண்டும் எனறே விரும்புகிறோம்.

அவதூறுகளையும் கொலைமிரட்டல்களையும் பார்த்து நாம் அமைதியாக இருக்க வேண்டும் என்பது கருத்தியல் வன்முறை ஆகும். அங்கு கருத்து எழுதும் பலர் தமிழீழ விடுதலையின் மீது அதன் தலைமை மீது அளப்பற்ற நம்பிக்ககையும் பரிவும் கொண்டவர்கள் என்பது எமக்கு தெரியாததல்ல.

உங்கள் தளக்கட்டுப்பாட்டாளருக்கு தளத்தின் தவறை சுட்டிக்காட்டுங்கள். அவர்களை கருத்துகள விதி முறைகளை கடுமையாக பின்பற்றும்படி வற்புறுத்துங்கள். உங்களில் ஒருவர்கூட பொய் செய்தியை பரப்பி சக ஊடகவியலாளர்களை எச்சரித்த “DAM” “சுமங்களா” போன்றவர்களை ஏன் பொய் செய்தியை இணைத்தீர்கள் என்று கேட்காதது எவ்வளவு கொடுமையானது. அவர்களிடம் ஏன் ஆதாரங்களை வெளியிடும்படி கேட்கவில்லை.

உங்களில் ஒருவர் அதை செய்திருந்தால் இன்று வழக்கு வரை விடயம் வந்திருக்காது. கருத்தை கருத்தால் எதிர்கொள்வோம். வன்முறைகளை தவிர்ப்போம். வளமான ஊடகத்துறையை வளாத்து எமது விடுதலையை விரைவுபடுத்துவோம்.

பின்குறிப்பு: “யாழ்” தளத்தில் தமிழ்வின், அதிர்வு தளச் செய்திகளை இணைப்பது தடை செயய்யப்பட்டுள்ளதாக ஒரு குறிப்பு இருக்கிறது. ஏன் என்று சிலரிடம் விசாரித்தபோது “ஆதாரமில்லாத – உண்மைத்தன்மை இல்லாத செய்திகள் அவர்கள் தளத்தில் இருக்கிறதாம். அதுதான் தடையாம்.” அடப்பாவிகளா, தமிழ் மக்களையும் தமிழ் ஊடகவியலாளர்களையும் வைத்து ஏதும் “காமடி கீமடி” பண்ணுறியளோ.. நாங்கள் விசயம் தெரியாமல் கண்டனம், வழக்கு என்று நேரத்தை செலவழித்து விட்டோமோ என்று யோசனையாக இருக்கிறது.

நன்றி

ஈழம்ஈநியூஸ் நிர்வாகம்.

http://www.eelamenews.com/?p=29445

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப்பொறுத்தவரை

எல்லோரும் சேர்ந்து கலந்து பேசுதலே இதற்கான தீர்வாக அமையமுடியும்.

இப்படி ஆளாளுக்கு நான் நேர்மையானவர் நீ பொறுக்கி என்பது எம்மினத்தை காக்காது.

தப்பென்றால் மன்னிக்கவும் எழுதாமல் இருக்கமுடியவில்லை.

நன்றி

Link to comment
Share on other sites

கருத்துச் சுதந்திரத்தின் அடிப்படையில், யாழ் களம் தமிழர்களின் அடிப்படை உரிமைகளை விவாதிக்க, நீதியான கருத்துக்களை நிலைநாட்ட, இனப்படுகொலையாளர்களை - போர்க்குற்றவாளிகளை வெளிக்கொணர உதவும் ஒரு களமாகவும் இருக்கிறது. இனப்படுகொலையாளர்களுக்கும் - போர்க்குற்றவாளிகளுக்கும், அவர்களது காவடிகளுக்கும் வேண்டுமானால் யாழ் களம் அச்சத்தைக் கொடுக்கலாம்.

அங்கு இங்கு செய்திகளை திருடி வெளியிட்டு, இடையிடையே போலிச் செய்திகளையும் வெளியிட்டு தமிழரை குழப்பி இழி பிழைப்பு நடத்துபவர்களுக்கும் யாழ் களம், அதில் எழுதப்படும் karuththukkal அச்சத்தைக் கொடுக்கலாம்.

யாழ் களத்தில் உறவுகளுடன் நாம் கருத்து ரீதியாக மோதிக்கொண்டாலும், நாம் ஒரு குடும்பத்தினர். எம்மவர் எவரையும் (அது DAM ஆக இருந்தாலும், சுமங்கலாவாக இருந்தாலும் சரி) மிரட்டுவதையோ, எச்சரிப்பதையோ எம்மால் வெறுமனே பார்த்துக்கொண்டிருக்க முடியாது.

மேலும் யாழ்களம் போல் கருத்துக்களை சுதந்திரமாக (சில வெட்டுதல் கொத்துதல் எமக்கு பிட்டிக்கவில்லை எனினும்) எழுதுவதற்கு வாய்ப்பு வழங்கும், நன்கு வடிவமைக்கப்பட்ட தமிழ் களங்கள் வேறில்லை எனலாம். யாழ் களத்தை நடத்தும் அனைவரையும் (தொடங்கியவர்கள், பொறுப்பாளர்கள்) எவரையும் மிரட்டுவதையோ, எச்சரிப்பதையோ, கருத்துச் சுதந்திரத்தை முடக்க நினைப்பதையோ எம்மால் வெறுமனே பார்த்துக்கொண்டிருக்க முடியாது.

தேவைப்பட்டால், சர்வதேச மன்றில் போலிகளின் முகத்திரைகளை கிழிக்க, அவர்களின் பயங்காரவாத பின்னணிகளை வெளிப்படுத்த என சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க நாம் பின்னிக்க மாட்டோம்.

தமிழினத்தை சிதைக்க கங்கணம் கட்டி நிற்கும் தீய சக்திகளை எம்மினம் என்றும் மன்னிக்காது.

தாம் நல்லவர்கள் என, தாமே தம்மை பிரகடனப்படுத்தும் வெற்றுக் கோஷம் நீர்க்குமிழியாக மறைந்துவிடும்.

100 கொலைகாரர்கள் ஒன்றிணைந்து கூப்பாடு போட்டாலும் - தர்மம் தான் ஈற்றில் ஜெயிக்கும்.

Link to comment
Share on other sites

வணக்கம் ஆழவந்தான்,

நீங்கள் திருப்பித்திருப்பி ஈழம் ஈ நியூஸின் பதிவுகளை யாழ் வலைத்தளத்தில் கொண்டுவந்து இணைப்பதன் உண்மையான நோக்கம் என்ன என்பதை விளக்க முடியுமா? நீங்கள் ஈழம் ஈ நியூஸ் நிருவாகத்தில் இருக்கிறீர்களா? அல்லது அவர்களது விசிறியா? அல்லது...?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களின் கருத்துக்களை யாழ்களத்தில் இணைக்கத் தேவை இல்லை என்று நினைக்கின்றேன். யாழ்களத்தை முடக்கி வைக்க முயல்கின்றார்கள் என்பது மட்டுமே தெரிகின்றது. புதினத்திற்கு எவ்வாறன மிரட்டல்கள் செய்து முடக்கப்பட்டதோ அந்த வகையில் தான் நடப்பது போலத் தோன்றுகின்றது. ஏதோ சட்டங்கள் தெரியாத பாப்பாக்கள் போல, வழக்குப் பதிந்தால் மிரண்டு விடும் என நம்பிக்கை கொண்டுள்ளார்கள் போலும்.

அதை விட முக்கியமானது இவ்வாறன செயல்களைச் செய்வதற்கு மற்றய நோக்கம், தமிழ் மக்கள் மத்தியில் யாழ்களத்தை அந்தியப்படுத்துவதற்கே. அந்த வகையில் தான் இவர்களது செயற்பாடுகள் நடக்கின்றன. எனவே யாழ்களத்தைப் பலப்படுத்துவதும், அதற்கான முழுமையான ஆதரவை நாம் வெளிப்படுத்துவதும் அவசியமானதாகும்.

இவர்களின் இச் செயற்பாடுகளால் சில நன்மைகளும் இருக்கின்றன. நிர்வாகம் நினைத்தால் ஒரு தசாப்த இணையத்தின் மீது தவறான செய்தியை வெளியிட்டு அவதூறை ஏற்படுத்த முனைந்தமைக்காக நஸ்டஈடு பெற வழி இருக்கின்றது. அதற்காக இவர்களது தூற்றல்களை இன்னமும் கொஞ்சம் பொறுத்துக் கொள்வதோடு, அவர்களின் இணையத்தளச் செய்திகள் மின்னஞ்சல்களை ஆதாரப்படுத்தி வைப்பது நன்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த விடயத்தையும் உருப்படியாகவும, ஒழுங்காவும் செய்யமாட்டார்களா??

இந்தக் குறிப்பு வலைஞனால் 2007ம் ஆண்டு, 4ம் மாதம் 12ம் திகதி பதிவிடப்பட்டிருக்கின்றது. ( 3 வருடங்கள், 2 மாதங்களுக்கு முன்) ஏதோ தங்களுக்காகத் தான் என உச்சக் கொம்பில் ஏறி நிற்பது தகுமா?? மேலும் இது போன்ற செய்தி யாழின் பழைய தளங்களிலும் உண்டு.

தங்கள் மீதான கொலை மிரட்டல் என்று பூச்சாண்டி காட்டுபவர்கள், அதைப் பற்றிக் கதைக்காமல் யாழ்களத்தின் செயற்பாடுகள் குறித்து விமர்சனம் செய்வதை அவதூறாக யாழ்களம் நஸ்டஈடு கோர முயலவேண்டும்.

Link to comment
Share on other sites

இதில் மோகன் அண்ணாவை குறை கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது... அவரால் களம் 24 மணிநேரமும் கண்காணிப்பது சாத்தியமும் அண்று...!

அதோடு மற்றவர்கள் கருத்துக்களத்தின் விதிகளை ஏற்று வந்தவர்கள் என்பதால் அதை கடைப்பிடிக்க வேண்டும்...

Link to comment
Share on other sites

ஈழம் ஈ நியூஸ் மீது வழக்குப் போடுவதோ நட்டைஈடு கோருவதோ இயலாத காரியம்.

ஏனென்றால் அத் தளத்தில் ஆசிரியர் என்றோ நிர்வாகம் என்றோ ஒன்றும் இல்லை. காப்புரிமை பற்றியோ அதை நடத்துபவர்கள் பற்றியோ எந்த விதமான தகவலும் இல்லாது அநாமதேயமாக நடத்தப்படும் தளத்தின் மேல் சட்ட நடவடிக்கை எடுப்பது சுலபமானதல்ல. அத்துடன் இத் தள முகவரி Praba karan என்ற பெயரில் பதிவாக்கப்பட்டுள்ளது. இது கூட பொய்யானதாக இருக்கலாம்.

Link to comment
Share on other sites

ஈழம் ஈ நியூஸ் மீது வழக்குப் போடுவதோ நட்டைஈடு கோருவதோ இயலாத காரியம்.

ஏனென்றால் அத் தளத்தில் ஆசிரியர் என்றோ நிர்வாகம் என்றோ ஒன்றும் இல்லை. காப்புரிமை பற்றியோ அதை நடத்துபவர்கள் பற்றியோ எந்த விதமான தகவலும் இல்லாது அநாமதேயமாக நடத்தப்படும் தளத்தின் மேல் சட்ட நடவடிக்கை எடுப்பது சுலபமானதல்ல. அத்துடன் இத் தள முகவரி Praba karan என்ற பெயரில் பதிவாக்கப்பட்டுள்ளது. இது கூட பொய்யானதாக இருக்கலாம்.

ஆக பிரச்சினை எண்டு வந்தால் கச்சையை கட்டி கொண்டு கோதாவிலை இறங்கிறதாக தான் நிக்கிரீர்கள்... ! ஓசியிலை களத்தை உருவாக்கி உங்களை நிர்வாகியாக வைத்து இருக்கும் மோகன் அண்ணாவுக்கு இதுக்கு மேலையும் தேவை...!

கள விதிகள் எங்களுக்கு மட்டும் இல்லை உங்களுக்கும் பொருந்தும்...

சிங்களவனுக்கு எதிராக இவ்வளவு வீரம் உங்களுக்கு வருமோ எண்டது எனக்கு சந்தேகம் தான்...

Link to comment
Share on other sites

தலை என்ன ஈழம் ஈ நியூஸ் உங்கட தளமோ? எனக்கு என்னமோ இஞ்ச யாழுக்கை இருந்த, அல்லது இருக்கிற ஆக்கள்தான் டபிள் கேம் விளையாடுறமாதிரி இருக்கிது. :lol:

அத்துடன் இத் தள முகவரி Praba karan என்ற பெயரில் பதிவாக்கப்பட்டுள்ளது. இது கூட பொய்யானதாக இருக்கலாம்.

அவையள் தாங்கள் தமிழ்தேசிய ஊடகமாம். என்றபடியால உப்புடியான பெயரில தங்கடை தளத்தை பதிவு செய்து இருக்கிறதில ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. :lol:

Link to comment
Share on other sites

ஈழம் ஈ நியூஸ் மீது வழக்குப் போடுவதோ நட்டைஈடு கோருவதோ இயலாத காரியம்.

ஏனென்றால் அத் தளத்தில் ஆசிரியர் என்றோ நிர்வாகம் என்றோ ஒன்றும் இல்லை. காப்புரிமை பற்றியோ அதை நடத்துபவர்கள் பற்றியோ எந்த விதமான தகவலும் இல்லாது அநாமதேயமாக நடத்தப்படும் தளத்தின் மேல் சட்ட நடவடிக்கை எடுப்பது சுலபமானதல்ல. அத்துடன் இத் தள முகவரி Praba karan என்ற பெயரில் பதிவாக்கப்பட்டுள்ளது. இது கூட பொய்யானதாக இருக்கலாம்.

விடுதலை வாழ்வோடு இணைந்து வந்தது யாழ் களம்.இதென்ன ஈழம் நீயூஸ் இப்ப முளைத்தது. எந்த கள்ளர் காடர் புலிகள் போனா பின் தமிழருக்கு வாழ்வு சொல்ல வந்திருக்கினம். ஈழம் என்று வைத்தா போல தமிழன் நம்ப மாட்டான்..30 வருசமாக நம்பினவரே மூச்சையும் காட்டாமல் போய் விட்டார்.

இப்ப வந்திட்டினம் ஈழம் நீயூஸ்,ஈ நீயூஸ் ,

முதல் ஈ நீயூஸ் ஆசிரியர் படத்துடன் நான் தான் இதன் இனையஆசிரியர் என்று வெளிய வரட்டும்.

பிற்கு நம்புவம் யார் உண்மை பொய் என்று.

இன்னமும் தமிழன் மேல் குதிரை ஓடத்தான் எல்லாரும் நிற்கினம்.

Link to comment
Share on other sites

தலை என்ன ஈழம் ஈ நியூஸ் உங்கட தளமோ? எனக்கு என்னமோ இஞ்ச யாழுக்கை இருந்த, அல்லது இருக்கிற ஆக்கள்தான் டபிள் கேம் விளையாடுறமாதிரி இருக்கிது. :lol:

உங்களுக்கை தான் அடிபடுகிறது எண்டு முடிவெடுத்தா பிறகு கேக்கிறதுக்கு நான் யார் மச்சான்...???

சொந்தக்காசை போட்டு தனக்கு தானே சூனியம் வைச்சு கொண்ட மோகன் அண்ணையின் பாவமான முகம் தான் எனக்கு கண்ணுக்கு முன்னாலை வந்து நிக்குது...! அவர் எதுக்கு இந்த தளத்தை ஆரம்பித்தார்..?? அவரின் நோக்கம் எங்கை வந்து கடைசியாக நிக்குது எண்டு நினைச்சு பாத்தன்.. மிகவும் கஸ்ரமாக இருக்கு...

அவர் நினைத்து ஆரம்பித்ததுக்கு எதிர் திசையிலை உங்களுக்கை அடிபட ஒரு தளம் அமைச்சு குடுத்தது போல ஆக்கி கொண்டு இருக்கிறீயள்... இதை சொல்ல வந்தால் நீ எதிர் தரப்பு ஆளோ எண்டு என்ன பாத்து கேக்கிறீயள்.... எல்லாம் காலம்... :lol:

இப்பதான் மோகன் அண்ணா இன்னும் ஒருவருடத்துக்கான காசை போட்டு தளத்தின் உரிமத்தை புதுப்பிச்சு இருக்கிறார் போல கிடக்கு...

( மோகன் அண்ணாவுக்கு- உங்களின் பணத்தையும் நேரத்தையும் விரயமாக்க நான் ஏது வகையிலும் காரணமாக இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்... )

Link to comment
Share on other sites

இல்லையே, நீங்கள்தான் ஈழம் ஈ நியூஸிற்கு வக்காளத்து வாங்குவது போல கருத்து எழுதி இருந்தீங்கள். அதனால அப்படி சொன்னன். ஈழம் ஈ நியூஸ் உங்கட தளம் இல்லையோ. மெய்யாத்தான் சொல்லுறீங்களோ. சரி பரவாயில்லை. :lol:

Link to comment
Share on other sites

நானும் யாழ் இணையத்துக்கை கடந்த மூன்று வருசங்களாய் படுத்து எழும்பறன். ஒவ்வொரு நாளும் எழுதாவிட்டாலும் ஒவ்வொரு நாளும் யாழில எழுதப்படுகிற பெருமபலான பதிவுகளை மேலோட்டமாக என்றாலும் பார்வையிடுவது வழமை. உந்த ஈழம் ஈ நியூஸ்காரருக்கு கடுப்பு ஏத்தின - டாம், சுமங்களா எழுதின பதிவுகளை - ஈழம் ஈ நியூஸ்காரர் பார்வையில டாம், சுமங்களாவின்ர எச்சரிக்கையை நான் வாசிக்க இல்லை. டாமும், சுமங்களாவும் அப்பிடி என்னதான் எழுதிச்சீனம். டாம், சுமங்களா எழுதினதுகளை யாராச்சும் வாசிச்சீங்களோ? நிருவாகம் அதை ஒருக்கால் திரும்ப போடுவீங்களோ வாசிச்சு பார்க்கிறதுக்கு.

யோவ் டாம், சுமங்களா..

குற்றவாளிக்கூண்டில விசாரணைக்காக வந்து நிக்கும்படி அழைக்கப்படுகின்றீர்கள்..

டாம் ஒருதரம்

டாம் இருதரம்

டாம் மூன்றுதரம்

சுமங்களா ஒரு தரம்

சுமங்களா ரெண்டுதரம்

சுமங்களா மூன்றுதரம்..

எனக்கு என்னமோ சுமங்களா எழுதின கீழ்க்கண்ட பதிவே ஈழம் ஈ நியூஸ்காரருக்கு - ஐ மீன் அவர்கள் பின்னால் நின்று ஆட்டுபவர்களுக்கு எரிச்சலை ஊட்டி இருப்பதாய் படுகிது:

வெட்டி ஒட்டி ஓட்டு கேட்கும் கேவல அரசியல் செய்யும் பாரிஸ் ஈழநாடு பாலச்சந்திரன்

வெட்டி ஒட்டி ஓட்டு கேட்கும் கேவல அரசியல் செய்யும் பாரிஸ் ஈழநாடு பாலச்சந்திரன். இவர்களிற்கு ஓட்டு போடப்போகிறீர்களா????????

28464_117439104951433_1000005603357.jpg

தகவல் மூலம்: http://www.yarl.com/forum3/index.php?showtopic=71378&st=0&p=584505&fromsearch=1&#entry584505

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.  
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
    • இருக்கலாம்.  இருக்க வேண்டும் என்பதே என் பிரார்தனையும் கூட🙏
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.