• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
வதனா

தமிழர்களுக்கு மானக்கேடான தீபாவளிப் பண்டிகை

Recommended Posts

தமிழர்களுக்கு மானக்கேடானதுமான பண்டிகை தீபாவளிப் பண்டிகையாகும். தமிழனைஆரியன் அடக்கி யாண்டதை நினைவுபடுத்துவதாகுமிது. இதற்கான கற்பனைக் கதையில் முக்கிய பாத்திரமாக வரும் கடவுளின் கொலைகாரத்தன்மையை மக்கள் நன்கு படித்து உணர வேண்டியதே இக்கட்டுரை)

தீபாவளிப் பண்டிகையின் தத்துவம் மகாவிஷ்ணுவான கடவுள் கிருஷ்ணன் என்கிற அவதாரமெடுத்து உலகுக்கு வந்து நரகாசுரன் என்கின்ற ஓர் அசுரனைக் கொன்றான் என்பதாகும். நரகாசூரன் என்பவன் ஒரு திராவிடன் ஆரியக் கொள்கைகளை எதிர்த்தவன் ஆகையால் தான் அவனை ஆரியப் பாதுகாவலனான கிருஷ்ணன் தன் மனைவி சத்தியபாமா உதவியுடன் கொன்றான். ஆனால், இந்தக் கடவுள் அவதாரமென்கிற கிருஷ்ணன் யார்? எப்படிப்பட்டவன் என்பதை தமிழர்கள், திராவிடர்கள் உணர வேண்டாமா? கிருஷ்ணன் அற்ப சொற்ப ஆசாமியல்ல. சாட்சாத் மகாவிஷ்ணுவின் அவதாரமாகும்.

ஏசுநாதர்

ஏசுநாதர் கிறிஸ்துவ மதத்தை உண்டாக்கியவர். இவரைப் பற்றிய கதை என்ன சொல்லுகிறது? இவர் தம்மைத் தாமே வருத்திக் கொண்டார். எதிரிகளின் தாக்குதலுக்கும் தூற்றுதலுக்கும் ஆளானார். இறுதியில் சிலுவையில் அடித்துக் கொல்லப்பட்டார்.

முகமது நபி

இதுபோல் முகமது நபியும் பல தியாகங்களுக்கு உள்ளானார். எதிரிகளின் கல்லடிக்கும் சொல்லடிக்கும் ஆளானார் என்பதுதான் அவரைப்பற்றிய கதை.

கொலைகாரன்

ஆனால், இன்று விழா கொண்டாடப்படுகின்ற கிருஷ்ணனைப் பற்றிய கதை என்ன சொல்கிறது? குழந்தைப் பருவத்தில் பூதனை சகடாசூரன் திருணாவர்த்தன் முதலியவர்களைக் கொன்றான்.

கன்றுருவத்துடன் வந்த வற்சாசுரனை விளாமரத்தில் மோதிக் கொன்றான்.

கொக்கு உருவத்துடன் வந்த பகாசுரன் வாயைப் பிளந்து கொன்றான்.

மலைப்பாம்பு உருவில் வந்த அகாசுரனின் வாயில் புகுந்து கொன்றான்!

மாட்டுருக் கொண்டு வந்த அரிஷ்டனின் கொம்பைப் பிடுங்கிக் கொன்றான்!

குதிரையுருக்கொண்டு வந்த கேசியைக் கொன்றான்.

வியாமுரசுரனின் கழுத்தை நெரித்துக் கொன்றான்.

கம்சன் வீட்டு வண்ணானைக் கொன்றான்.

கம்சனின் பட்டத்து யானையின் கொம்பை முறித்துக் கொன்று அதன் பாகனையும் கொன்றான்.

மற்போருக்கு வந்த சானூரனைக் கொன்றான்.

சுபலன் கோசனை ஆகிய இருவரையும் காலால் மோதிக் கொன்றான்!

தன் மாமனாகிய கம்சனைப் படுக்கையிலிருந்து இழுத்துத் தள்ளிச் கொன்றான்!

பஞ்சகன் என்பவனை கடலில் சென்று கொன்றான்!

சராசந்தனின் சேனைகளையெல்லாம் கொன்றான்!

முராசுரனையும் அவனது குமாரர்களையும் கொன்றான்!

நரகாசுரனைக் கொன்றான்

வாசுதேவனுக்குத் துணையாக வந்த பவுண்டரகனையும் சுதட்சணனையும் கொன்றான்.

சாளுவனைக் கொன்றான்! சிசுபாலனைக் கொன்றான்!

துரியோதனனின் சிங்காதனத்தின் கீழிருந்த அரக்கர்களைக் கொன்றான்!

இவ்வளவுதான் இவனது படு கொலைகள் என்று கருதாதீர்கள்! இன்னும் பலவுண்டு! இங்கு எழுத இடமில்லை.

இப்பேர்ப்பட்ட கொலை காரனைத்தான் சிலர் போற்றுகிறார்கள் "இன்னா செய்தாரை ஒறுத்தல் அவன் நாண நன்னயஞ் செய்து விடல்" என்ற உயர் கருத்து பரவியிருந்த தமிழகத்தில் கொலைகாரக் கிருஷ்ணன் கதையை புகுத்தி விட்டார்கள் தமிழகத்தில் புகுந்த அன்னியர்.

ஒழுக்கமற்றவன்

கிருஷ்ணன் கொலைகாரன் மட்டுமா? இல்லை! கற்பிற்கு அணிகலன் (?) நல்லொழுக்கத்தின் சிகரம் (?) எப்படியெனில்

குளித்துக் கொண்டிருந்த பெண்களுடைய சேலைகளையும் ரவிக்கைகளையும் தூக்கிக் கொண்டு போய் மரத்தின்மேல் ஏறிக் கொண்டான்; நிர்வாணமாகத் தண்ணீரில் நின்ற அப்பெண்கள் தங்கள் இரு கைகளையும் தலைக்கு மேலே தூக்கிக் கும்பிட்டால்தான் தருவேன் என்று கூறி அவ்விதமே செய்ய வைத்து கண் குளிரப் பார்த்தான்!

ராதை, ருக்மணி, சத்தியபாமை சாம்பவதி, காளிந்தி, மித்திரவிந்தை, சத்தியவதி பத்திரை, லட்சுமணை, நப்பின்னை சோபை பிரமை, சாந்தி, க்ஷமை ஆகிய பெண்களை மணந்து கொண்டான். பிறகு சில்லறையாக நரகாசூரன் பட்டணத்திலிருந்து கொண்டுவந்த 16,000 பெண்களையும் மணந்து கொண்டான். இவர்களும் போதாமல் பகதத்தனின் நகரத்திற்குச் சென்று அங்கு சிறையிலிருந்த 1160 இராசக்கன்னிகைகளையும் மணந்து கொண்டான். இவர்களைத்தவிர பல்லாயிரக்கணக்கான கோபி காஸ்திரீகளுடன் லீலைகள் புரிந்தான்.

கொலையும் விபசாரமும் மட்டுமல்ல! கொலை செய்யவும் தூண்டினான். கீதையின் மூலமாக! கொலை செய்யப்பட்டவர்களெல்லாம் அசுரர்கள் (திராவிடர்கள்) என்று கூறலாம் அப்படியானால் அக்கிரகாரத்தார் மட்டுந்தானே இவனைப் புகழ வேண்டும்? மற்றவர்கள் புகழலாமா?

கடவுள் தன்மைக்குப் பொருந்துமா?

உண்மையான கடவுள் தனக்கு எதிரியான அசுரனைப் படைப்பானேன்? அதன் பிறகு அவனைக் கொல்வதற்காக அவதாரமெடுப்பானேன்? இது கடவுள் தன்மைக்கு அவரின் சர்வவல்லமைக்கு தயாபர குணத்துக்குச் சிறிதாவது பொருந்துமா? பிறமதக்காரர்களும் மதமற்ற பகுத்தறிவாளர்களும் விஞ்ஞானிகளும் பேரறிஞர்களும் இப்பேர்ப்பட்ட ஆபாசக் கற்பனைக் கதையை ஏற்றுக் கொள்வார்களா? காரித்துப்ப மாட்டார்களா? கடவுள் என்றால் கடவுள் அவதாரம் என்றால் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக அல்லவா இருக்க வேண்டும்? ஒருவனுக்கு இரண்டு மனைவிகளே இருக்கக் கூடாது என்று சட்டமிருக்கும் போது கண்டவளையெல்லாம் தன் மனைவியாக்கிக் கொண்டவனை மானமுள்ள பெண்கள் கும்பிடலாமா? அவன் சம்பந்தப்பட்ட தீபாவளியைக் கொண்டாலாமா?

சிந்திக்கவும்

ஆத்திரப்படாமல் சிறிது பொறுமையாக ஆலோசித்துப் பாருங்கள். பக்தர்களே ஆபாசக் கடவுள்களை ஒழித்துத் தலை முழுகுங்கள்! இம்மாதிரிக் கடவுள்களைக் கண்டு வெட்கப் படத்தானே லட்சக்கணக்கான மக்கள் பிறர் தங்களைத் தழுவியிருக்கிறார்கள். ஆகவே மானமுள்ள பகுத்தறிவுள்ள தமிழர்கள் திராவிடர்கள் கொலைகாரக் கிருஷ்ணன் சம்பந்தப்பட்ட தீபாவளியைக் கொண்டாடலாமா? கண்டிப்பாய் கூடாது.

சிந்தித்துப் பாருங்கள் தமிழர்களே! திராவிடர்களே!

Share this post


Link to post
Share on other sites

நன்றி: விடுதலை

Share this post


Link to post
Share on other sites

அப்பப்ப இதுதான்

அதிகம் படிக்கக்கூடாது

என்பது :lol::)

ராதை, ருக்மணி, சத்தியபாமை சாம்பவதி, காளிந்தி, மித்திரவிந்தை, சத்தியவதி பத்திரை, லட்சுமணை, நப்பின்னை சோபை பிரமை, சாந்தி, க்ஷமை ஆகிய பெண்களை மணந்து கொண்டான்.

என் வெயர் விட்டுட்டீங்க :lol::)

இனி கல்கி அவதாரத்தில்

வருவாராம்..

ம்ம்ம்ம்.. என்ன சிந்தித்து

என்ன நடக்கப்போகுது??

Share this post


Link to post
Share on other sites

மேலதிக தகவல்களை அறிந்து தெளிவு பெறுவோம்

Share this post


Link to post
Share on other sites

!

கிருஸ்னருக்கு மட்டுமா இவ்வளவு அசிங்கங்களும் இருக்கின்றன எமது எந்த கடவுளை பார்த்தாலும் பின்புலம் கொலையும் காமவிகாரமுமே தெரிகிறது. எனவே இவர்களை கடவுள் என எப்படி வணங்குவது ? எனக்கு ஒரு சந்தேகம் இவர்கள் எல்லாம் எப்படி எயிட்ஸ் வராம தப்பித்து கொண்டார்கள் :P :P :wink:

Share this post


Link to post
Share on other sites

விடுதலை போண்ற ஒரு பத்ரிக்கைலிர்ந்து ஒரு கட்டுரையை எடுத்து அதை பற்றி விமர்சனம் வேறு.

ஆரியர் படைய்டுப்பு ஒரு தவறான பிரச்சாரம் என்று எப்பொவோ பல ஆராச்சிகள் சொல்லி விட்டன. இன்னும் என்ன அதை பற்றி பெச்சுவத்ல் என்ன லாபம்

Share this post


Link to post
Share on other sites

விடுதலை போண்ற ஒரு பத்ரிக்கைலிர்ந்து ஒரு கட்டுரையை எடுத்து அதை பற்றி விமர்சனம் வேறு.

கடவுள் என்று சொல்லப்படுகிறவரின் கீழ்த்தரமான, கேவலமான செயற்பாடுகள் பற்றியே அக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

கடவுளின் அவதாரம் அல்லது கடவுள் என சித்தரிக்கப்படுவரின் கேவலமான செய்ப்படுகளை விடுதலைப் பத்திரிகையோ அல்லது இக்கட்டுரையாளரேh கண்டுபிடித்து எழுதவில்லை. மாறாக உங்களின் புராணங்களே இவற்றை சொல்கின்றன கொஞ்சம் நாகரிகமாக....

Share this post


Link to post
Share on other sites

கடவுளின் அவதாரம் அல்லது கடவுள் என சித்தரிக்கப்படுவரின் கேவலமான செய்ப்படுகளை விடுதலைப் பத்திரிகையோ அல்லது இக்கட்டுரையாளரேக் கண்டுபிடித்து எழுதவில்லை. மாறாக உங்களின் புராணங்களே இவற்றை சொல்கின்றன கொஞ்சம் நாகரிகமாக....

எல்லாம் சரி !! ஒரு நாணய்திற்ற்கு 2 பக்கம் உண்டு. சில நல்ல விழயத்தை விடுத்து, அதில் சொன்ன கருத்துகளை விடுத்து அதற்கு தவறான சாயம் பூசுவது நாகரிகமான செயலா?

தெளிவாக அதில் உள்ள கருத்தை பார்க்கவும்.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • அமெரிக்கன்ர அரசியல் எப்படியோ போக .. உந்த ஆய்வாளர்கள் தொல்லை தங்காதே..!😢 பசுபிக் கடலை தொட்டு அண்டார்டிகாவை றச் செய்வினம்.. தலைப்பு அருமை ..! 😊 .. இன்னும் குறை கட்டுரைகள் வருவதற்குள் ஊரை காலி செய்குக..! ☺️
  • நீங்களும் கவிதைதானா ?? சரி எழுதுங்கோ தொடர்ந்து
  • எல்லாரும் வெள்ளணவே தொடங்கியாச்சாக்கும். அவசரக் குடுக்கைகள். கவிதை நன்று அண்ணா.   😃
  • நல்ல தொடக்கம்; தொடரட்டும் நல்லபடியாக... காரை துர்க்கா   / 2020 பெப்ரவரி 18 வடக்கு, கிழக்கின் பொருளாதாரம், சமூக அபிவிருத்தி மேம்பாட்டை முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்துடன், ‘மக்கள் அபிவிருத்தி மேம்பாட்டு மன்றம்’ என்ற அமைப்பு, புதிதாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.    யாழ். ஆயர் அதிவணக்கத்துக்குரிய ஜஸ்டின் பேணார்ட் ஞானப்பிரகாசம் ஆண்டகை, நல்லை ஆதீன குரு ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் ஆகியோரின் இணைத் தலைமையில், வடக்கு, கிழக்கைச் சேர்ந்த ஐம்பதுக்கும் அதிகமான துறைசார் நிபுணர்கள், பேராசிரியர்கள், புலமை சார்ந்தோர் இணைந்து, மேம்பாட்டு மன்றத்தில் செயற்பட முன்வந்துள்ளனர்.   இந்தப் பூமிப்பந்தில், பிரச்சினைகள் இல்லாத தனிநபர்கள் இல்லை. பிரச்சினைகள் இல்லாத குடும்பங்கள் இல்லை. பிரச்சினைகள் இல்லாத சமூகங்கள் இல்லை. ஆகவே, பிரச்சினைகள் எல்லோருக்கும் பொதுவானவையே.  இவ்வாறாக, பிரச்சினைகள் அனைவருக்கும் பொதுவானவைகளாக இருந்தாலும், போர் அரக்கன் மூர்க்கத்தனமாகக் கோரத்தாண்டவம் ஆடிய மண்ணில் வாழும் தமிழ் மக்களது பிரச்சினைகள், வேறு விதமானவைகளாகவும் சிக்கல்கள் நிறைந்தவைகளாகவும் காணப்படுகின்றன; தொடர்கின்றன.  ஆயுதப் போர் நிறைவுக்கு வந்து, பத்து ஆண்டுகள் ஓய்ந்துவிட்ட போதிலும், தமிழ் மக்களது அன்றாடப் பிரச்சினைகள் ஓய்ந்தபாடில்லை; தீர்வதற்கான அறிகுறிகளையும் காணவில்லை. மாறாக, பிரச்சினைகள் மேலும் சிக்கலுக்குள் சென்று கொண்டிருக்கின்றன. இதற்குக் காரணம், அடிப்படைப் பிரச்சினையான அரசியல் பிரச்சினை அப்படியே இருப்பதாகும். அதுகூட, மேலும் சிக்கலுக்குள்ளேயே சிக்கியுள்ளது.  மறுவளமாக, இன்று தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற, அனுபவிக்கின்ற அடிப்படைப் பிரச்சினைகளுக்கு, அரசியல் பிரச்சினையே பிரதான காரணமாகவும் அமைந்துள்ளது.  உதாரணமாக, யாழ்ப்பாணம், வலிகாமம்  வடக்கு உயர்ப் பாதுகாப்பு வலயத்துக்குள் ஒருவரது வீடும் விவசாயக் காணியும் கையகப்படுத்தப்பட்டு இருப்பின், அவரது இருப்பும் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி, அவர் அன்றாடப் பிரச்சினைகளுக்குள் அகப்பட்டிருப்பார்.ஆனால், அவரது வீடும் காணியும் விடுவிக்கப்படாமைக்குக் காரணம், அடிப்படைப் பிரச்சினையான அரசியல்  பிரச்சினையே ஆகும்.  இவ்வாறாக, 72 ஆண்டுகால இனப்பிணக்கான அரசியல் பிணக்கு தீராத வரை, நாளாந்தம் தமிழ் மக்கள் அனுபவிக்கும் அன்றாடப் பிரச்சினைகளும் தீரப்போவது இல்லை.  ஆனாலும், அடிப்படைப் பிரச்சினையான அரசியல் பிரச்சினை தீர்க்கப்படுமா? அதற்காக, இன்னும் எத்தனை ஆண்டுகாலம் தமிழினம் காத்திருக்க வேண்டுமென்று எவருக்கும் தெரியாது.  இந்நிலையில், ஒருபுறம் அரசியல் பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற வேளையில் மறுபுறம், அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் காணவேண்டிய தேவைப்பாடுகள் நிறையவே இருக்கின்றன.  இது இவ்வாறு நிற்க, இதுவரையான காலப்பகுதியில், எமது அரசியல்வாதிகளால் அன்றாடப் பிரச்சினைகளைக் கணிசமான அளவில்கூடப் பூர்த்திசெய்ய முடியவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டியே உள்ளது.  2010ஆம் ஆண்டில் போர் நிறைவுபெற்ற காலங்களில், ஆட்சியில் இருந்தவர்களுடன் ஐக்கியமாக இருந்தவர்களாலும் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதியிலிருந்து 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் திகதி வரையிலான நல்லாட்சி காலப்பகுதியில் ஆட்சி அமைக்கவும் அவ்வாறாக அமைத்த ஆட்சியை நடத்தவும் ஆதரவு வழங்கியவர்களாலும், தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாரியளவில் உயர்த்த முடியவில்லை. அன்றாடப் பிரச்சினைகளைப் பெருமளவில் தீர்க்க முடியவில்லை.  இதற்கிடையே, இன்று தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அன்றாடப் பிரச்சினைகள், வெறுமனே அரசியல்வாதிகளாலும் அரச திணைக்களங்களாலும், அரச சார்பற்ற நிறுவனங்களாலும் மாத்திரம் தீர்க்கப்படக் கூடியதும் அல்ல என்பதையும், நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.  ஆகவே, இந்நிலையில் இதுபோன்ற அபிவிருத்தி மன்றங்களது வருகை அவசியமானதே; வரவேற்கக்கூடியதே. ஆனால், மறுபுறத்தில் அவற்றினது இயலுமை, தொடர்ச்சித் தன்மை என்பன குறித்துக் கவனத்தில் கொள்ளவேண்டி உள்ளது.   புதிதாக அமைப்புகளைத் தொடங்குவது மிகச் சுலபம். ஆனால், அவற்றை வினைத்திறன் உள்ளதாகத் தொடருவது ரொம்பக் கடினம். ஆகவே, இன்று இவ்வாறு சமயத் தலைவர்களாலும் புத்திஜீவிகளாலும் உருவாக்கப்பட்ட அமைப்பு, பத்தோடு பதினொன்றாக இருக்க முடியாது. இவற்றுக்குப் பாரிய சமூகப் பொறுப்பு உள்ளது.  இன்று தமிழ் மக்கள் மத்தியில் பல சமூக அமைப்புகள் இயங்கி வருகின்றன. இதற்கு, கணிசமான புலம்பெயர்ந்த உறவுகள், பெரும் பங்களிப்புச் செய்து வருகின்றார்கள்.  ஆனாலும், இவ்வாறான அமைப்புகளுக்கு இடையிலான புரிந்துணர்வு, குறைவாகவோ, இல்லாமலோ உள்ளது என்றுகூடக் கூறலாம். ஆகவே, புதிதாகத் தற்போது உருவாக்கம் பெற்றுள்ள மக்கள் அபிவிருத்தி மேம்பாட்டு மன்றம், சமூக அமைப்புகளுக்கான ‘தாய்’ அமைப்பாக மிளிர வேண்டும்.  தமிழ் மக்களிடையே ஆங்காங்கே அவ்வப்போது, மதம் சார்ந்த முரண்பாடுகள் தோன்றுகின்றன அல்லது, தோற்றுவிக்கப்படுகின்றன.இது போன்ற நிலைமைகள், போர் நடைபெற்ற காலங்களில் வடக்கு, கிழக்கு மண்ணில் காணப்படவில்லை; தோன்றவில்லை. தமிழ் மக்கள் அப்போது மதத்தால் இரண்டாக இருந்தாலும், இனத்தால் (தமிழ்) ஒன்றுபட்டிருந்தோம். ஆனால், இன்று ஏற்பட்டுள்ள இவ்வாறான சி(று)ல முறுகலுக்குள் எண்ணெய் வார்க்க, பல தரப்புகள் கங்கணம் கட்டி வரிசையில் நிற்கின்றன. ஆகவே, இந்து - கிறிஸ்தவ மத அமைப்புகளின் தலைவர்கள் இணைத் தலைவர்களாகச் செயற்படுகின்றபோது, இவ்வாறு ஏற்படுகின்ற பிரச்சினைகளை முளையிலேயே கிள்ளி எறியலாம்; கிள்ளி எறிய வேண்டும்.  அதுபோல, வடக்கு, கிழக்கின் அனைத்து மாவட்டங்களிலும், இவ்வாறான இணைத் தலைமையிலான உறவு ஏற்படுத்தப்பட வேண்டும். இந்த இணைத் தலைமை, பிறப்பில் இந்துவாகவோ கிறிஸ்தவராகவோ வாழுபவர்களை அடிப்படையில் தமிழர்களாக இணைக்க வேண்டும்.  தமிழ் மக்களது வெளிச் சூழலை, பிறிதொருவர் நிர்ணயித்தல் (சுதந்திரம்) அடிமைத்தனம் எனப்படும். ஆனால் இன்று, எங்கள் அரசியல்வாதிகளுக்கு  இடையே புரிந்துணர்வுகள் அ(றுந்து)ற்று, எங்களது உளச்சூழலைக் கூட (மனதை), வெளியே இருப்பவர்கள் நிர்ணயிக்கும் நிலை ஏற்படுத்தப்பட்டு உள்ளது.  இவற்றின் தோற்றக் காரணத்தைக் கண்டுபிடித்தாலே, வெற்றிக்கான திறவுகோலை வடிவமைத்துக் கொள்ளலாம்.  ஆகவே, வடக்கு, கிழக்கின் பொருளாதாரம், சமூக அபிவிருத்தி மேம்பாட்டை முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்துடன் அமைக்கப்பட்ட மக்கள் அபிவிருத்தி மேம்பாட்டு மன்றம், தமிழ் அரசியல்வாதிகளால் உதாசீனம் செய்ய முடியாத பலம்கொண்ட அமைப்பாக எழுச்சி பெறவேண்டும். தமிழ் மக்கள், தங்களது அரசியல்வாதிகள் மீது முழுமையாக நம்பிக்கை இழந்துவிட்டார்கள். யார் உண்மையானவர்கள்; யார் உண்மை போல நடிக்கின்றார்கள் என, முழுமையாகக் குழம்பிய நிலையில் உள்ளார்கள்.  முன்பு போல இல்லாது, அரசியல் விமர்சனங்கள் நிறைந்த உலகத்தில், தற்போது நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இதனை விட, சமூக வலைத்தளங்கள் வழியாக நாளாந்தம் பல கருத்துகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதனது உண்மைத் தன்மை தொடர்பிலும், மக்கள் குழப்பமடைந்து வருகின்றனர். ஒரு பொதுமகன், யாருக்கு வேண்டுமானாலும் வாக்களிக்கலாம். அது அவரது தெரிவு விருப்பம். ஆனால், அவ்வாறு வாக்களித்து வெற்றி பெறுபவர் அடுத்து வருகின்ற ஐந்து ஆண்டுகள் ஆசனத்தில் இருக்கப் போகின்றார். ஆகவே, பிழையானவர்களைத் தெரிவுசெய்தால், மீண்டும் சரியானவர்களை மீளத் தெரிவுசெய்ய, ஐந்து ஆண்டு காலம் காத்திருக்க வேண்டும்.  இன்று அனைத்துச் செயற்பாடுகளிலும் அரசியல் நுழைந்துவிட்டது. நகர சபையினர் குப்பையை எடுக்கும்போது, சில கட்சிகளைச் சார்ந்தவர்களின் வீடுகளில் மாத்திரமே குப்பைகளைச் சேகரிப்பதாக மக்கள் தன்னிடம் முறையிட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் அண்மையில் தெரிவித்துள்ளார்.  ஆகவே, குப்பை அள்ளுவது வரை அரசியல் சென்று நாற்றம் அடிக்கின்றது. இவ்வாறு நாற்றம் அடிப்பதாலேயே, நல்லவர்கள், கௌரவமானவர்கள், சமூகநோக்கில் நடுநிலை நிற்பவர்கள் போன்றோர் அரசியலுக்குள் வர அச்சப்படுகின்றார்கள்.  ஆகவே, நாற்றம் எடுக்கும் அரசியலை மாற்றத்துக்குள் கொண்டுசெல்ல, இவ்வாறான பொது அமைப்புகள் முயற்சி செய்யவேண்டும்.  தென்னிலங்கையில், தங்களது மதம் சார்ந்து பௌத்த அமைப்புகள் நடந்து கொள்வது போல, மக்கள் அபிவிருத்தி மேம்பாட்டு மன்றமும், தங்களது இனம் சார்ந்து நடந்துகொள்ள வேண்டும்.  போரால் தமிழ்ச் சமூகம் தலைகீழாகப் புரட்டிப் போடப்பட்டுள்ளது. அந்தச் சமூகத்தின் கட்டமைப்புகள் சிதைவடைந்து கிடக்கின்றன. ஒழுங்கமான சமூக அமைப்புகள் ஒழுங்கின்றிச் சிதறிக் கிடக்கின்றன.  இந்நிலையில், இருக்கின்ற இந்த நிலையிலேயே, எமது சமூகம் தொடர்ந்தும் இருக்க முடியாது. அல்லது, “இந்த நிலையையே, இவ்வாறு ஏற்று வாழ வேண்டும்” என எவரும் சொல்லவில்லை; சொல்லவும் முடியாது.  http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/நல்ல-தொடக்கம்-தொடரட்டும்-நல்லபடியாக/91-245663