Jump to content

எங்கே போகிறது தமிழ் நாடு ??


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில வடலிக்க இருந்து அகதியா மேலை நாடுகளுக்கு வந்த மூதாட்டிகளே.. பேர்த் டே பாட்டி என்று தாத்தாக்களை கூப்பிட்டு பியரும் வைனும் ஊத்திக் குடுக்கினம்... இது என்ன பெரிய.. விசயமே.

எப்ப பார் கலாசாரம் என்ற உடன .. தமிழ் நாடு.. யாழ்ப்பாணத்தைதைத் தான் கூர்ந்து கவனிக்கிறீங்க. நீங்க நீங்க செய்யுறதுகளுக்கு தனி விளக்கங்கள் வைச்சிருப்பியள்..! :D

Link to comment
Share on other sites

எப்ப பார் கலாசாரம் என்ற உடன .. தமிழ் நாடு.. யாழ்ப்பாணத்தைதைத் தான் கூர்ந்து கவனிக்கிறீங்க. நீங்க நீங்க செய்யுறதுகளுக்கு தனி விளக்கங்கள் வைச்சிருப்பியள்..! :D

இதிலென்ன வெட்கம் நண்பரே . பார் கலாச்சாரத்தை உலகிற்கு அறிமுகம் செய்தவனும் தமிழனே .

பொதுவாக கீற்று கொட்டகைகளும் மர நாற்காலியும் நமது சமுதாயத்தில் பார் போல இருந்தது. பெரும் பாலும் என்பது தொன்னூறுகளில் ஊருக்கு ஒதுக்கு புறமாக மண் சுவர் அமைத்து மர பெஞ்சுகளில் உட்கார்ந்து குடிக்கும் பழக்கம் இருந்தது.

பாரம்பரியமாக தென்னந்தோப்பு நிழல், ஆற்றோர மரங்கள், அல்லது குறைந்த நீர் போகும் நதியின் அக்கரை, சில இடங்களில் ரோட்டோர புளியமரம் மற்றும் குட்டி சுவர்கள் அல்லது அடைத்து கிடக்கும் அரசு சம்மந்த கட்டிடங்கள் பல நமது பார் கலாச்சாரத்தை பறைசாற்றின.

நாங்களெல்லாம் சிறு வயதில் திருட்டுத்தனமாக கள் குடிக்க கருவேல முட்காடுகள் தேர்ந்தெடுப்போம். ( அதற்கு ஏதுவாக கடையில் கிடைக்கும் கருமை நிறம் மற்றும் பசை போல இருக்கும் பூண்டு ஊறுகாய், இலந்தை வடை மற்றும் சிலர் சிசர் / கோல்ட் பிளாக் சாதா எனப்படும் பில்ட்டர் இல்லாத சிகரட்டுகளோ சிலர் பனாமா பில்ட்டர் டிலைட் வாங்கி குடித்த பின்னர் கொய்யா இலையை நன்றாக வாயில் மென்று விட்டு, அய்யனார் குளத்திலோ யாரும் இல்லையேல் நல்லதண்ணி குளத்திலோ கும்மாளம் போட்டுவிட்டு ஆற்றோர மரங்களில் வந்து எழந்த பலம் பறித்து தின்று விட்டு பாய் கடைக்கு போயி ஒன்னும் தெரியாதது போல அவர் சொல்லும் சில வேலைகளை செய்வோம். அந்த பாய் தான் ஊர் சம்மந்தப்பட்ட பல வேலைகளை கவனிப்பார். வீட்டில் யாரும் கேட்டால் பாய் கடையில இருந்தோம் என்று கூறி தப்பித்து கொள்வோம்.

Link to comment
Share on other sites

:lol::lol: அப்பாடா அருமையான காட்சி கண்கொள்ளாக்காட்சி நம்மட ஏரியா போல .......... அட சொந்த ஏரியாவுக்க நிக்கிறது போல ஒரு பீலிங் ......
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.