Jump to content

உலகத் தமிழர் மாநாட்டின் வரலாறு திரிக்கப்பட்டு, ஈழத்தமிழர்களும் புறக்கணிக்கப்பட்டுளனர்


Recommended Posts

திகதி: 27.06.2010 // தமிழீழம்

இந்தியாவில் கோயம்புத்தூர் பகுதியில் நடைபெற்றுவரும் உலகத் தமிழர் மாநாட்டில் ஈழத்தமிழ் மக்கள் முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளதுடன், அதனை உருவாக்கியவர்களும் முற்றாக புறம்தள்ளப்பட்டு வரலாற்றை அழிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சிறீலங்காவில் இரண்டாவது பெரிய இனமாக உள்ள தமிழ் மக்கள் இந்தியாவில் நடைபெற்ற உலகத்தமிழர் மாநாட்டில் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். தமிழக முதல்வர் கருணாநிதியின் துதிபாடும் ஒரு சிலர் அழைக்கப்பட்டபோதும், ஏனைய தமிழ் மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

பேராசிரியர் சிவத்தம்பியை மட்டும் முதன்மைப்படுத்திய தமிழக அரசு ஈழத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் உள்ள ஏனைய தமிழ் அறிஞர்களை புறக்கணித்துள்ளதாக சிறிலங்காவில் இருந்து சென்ற முஸ்லீம் தலைவரான ஏச் எம் அஷ்வர் இந்திய ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களையோ, சிலோன் தொழிலாளர் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானையோ கூட தமிழக அரசு அழைக்கவில்லை.

ஈழத்தமிழரான வண சவியர் எஸ் தனிநாயகம் (1913 – 1980) என்பவரால் உலகத்தமிழர் மாநாடு 1966 ஆம் ஆண்டு மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது என்பதை கருணாநிதி நினைவில் கொள்ளல் வேண்டும்.

அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த கத்தோலிக்க மதகுரு ஒருவர் அனைத்துலக தமிழர் ஆராட்சி அமைப்பை ஆரம்பித்திருந்தார். பிரபலம் பெற்ற ஈழத்தமிழரான தனிநாயகம் அடிகளார் என்பவரே சென்னையிலும், பாரீசிலும், யாழ்ப்பாணத்திலும், மதுரையிலும் உலகத் தமிழர் மாநாட்டை நடத்தியிருந்தார். அவரை நினைவுகூரும் முகமாகவே மதுரையில் அவருக்கு சிலை ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது.

போப்பாண்டவர், கட்வெல் மற்றும் பெஸ்சி ஆகியவர்களை விட தனிநாயகம் தமிழ் மொழியை அனைத்துலகத்தில் கொண்டு சென்றதில் முதன்மையானவர் என ஸ்கொட்லாந்தின் தலைநகரில் உள்ள எடின்பரோ பல்கலைக்கழகத்தின் தமிழ் பேராசிரியரான ஆர் ஈ அசெர் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய மொழிகளில் பலவற்றில் புலமை கொண்ட அவரால் அது முடிந்துள்ளது.

கோயம்புத்தூர் மேடையில் தனிநாயகம் அடிகளின் புகைப்படம் வைக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லது அவாரின் பெயருக்கு இடமாவது விடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் எதுவும் அங்கு நிகழவில்லை என அஷ்வர் மேலும் தெரிவித்துள்ளார்.

சிறீலங்காவில் உள்ள முஸ்லீம் சமூகத்தை சேர்ந்த ராவூப் ஹக்கீம் உட்பட மூவர் அழைக்கப்பட்டபோதும், முதலாவது இஸ்லாமிய தமிழ் ஆராட்சி மாநாட்டை நடத்திய எம் எம் உவைஸ் என்பவரை கௌரவிக்க கோயம்புத்தூர் மாநாட்டில் தவறிவிட்டனர்.

தமிழ் ஆராட்சி மாநாட்டை நடத்துவதற்காக ஈழத் தமிழ் மக்கள் மிக உயர்ந்த தியாகத்தை செய்திருந்தனர். 1974 ஆம் ஆண்டு யாழில் நடைபெற்ற இந்த மாநாட்டில் சிறீலங்கா படையினர் மேற்கொண்ட தாக்குதலில் 9 தமிழ் மக்கள் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்திருந்தனர். சிறீலங்கா காவல்துறையினரே இந்த தாக்குதலை மேற்கொண்டிருந்தனர்.

இந்த மநாட்டை யாழில் நடத்தினால் அங்கு அரசியல் புரட்சிகள் ஏற்படும் என அன்றைய சிறீலங்கா பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயக்காவும், யாழ் மேயர் அல்பிரட் துரையப்பாவும் மறுப்பு தெரிவித்திருந்தனர். அதனை கொழும்பில் நடத்த அவர்கள் திட்டமிட்டனர். ஆனாலும் அது யாழில் நடத்தப்பட்டபோது அதன் மீது சிறீமா பண்டாரநாயக்கா மற்றும் துரையப்பா ஆகியோரின் வழிகாட்டலில் காவல்துறையினர் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர்.

இதனை தொடர்ந்தே துரையப்பாவை கொல்வதற்கு தியாகி சிவகுமாரன் தேடியலைந்தார். துரையப்பாவின் காரில் குண்டு பொருத்திய சம்பவத்தில் அவர் தனது உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டார்.

அதன் பின்னர் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் சிவகுமாரனின் கனவை நிறைவேற்றியதுடன், உலகத் தமிழாராட்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்களுக்கான நீதியையும் நிலை நிறுத்தியிருந்தார்.

பொன்னாலையில் கிருஷ்ணபரமாத்மாவின் காலடியில் இருந்து தீயவர்களை ஒழிக்கவும், அப்பாவிகளை காப்பதற்குமான பாரதப்போரின் அடுத்த கட்டம் ஆரம்பமாகியது.

ஆனால் இன்று வரலாற்றை திரிப்பது, அதனை அழிப்பது என்ற செயல்களை சிறீலங்கா அரசு மட்டுமல்ல தமிழக அரசும் மேற்கொண்டு வருவதாகவே தமிழ் ஆவலர்கள் கவலை தெரிவத்து வருகின்றனர். அதன் முதற்படியாகவே உலகத்தமிழாராட்சி மாநாட்டின் ஆரம்பகால தலைவர்கள் முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளதடன் கருணாநிதியை தலைவராக்கும் வரலாற்று சிதைவுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஆனால் தனது குடும்பத்தின் நலனைத் தவிர தமிழர் என்றால் என்ன என தெரியாத கருணாநிதியையும், அவருக்கு பல்லாக்கு தூக்குபவர்களும் மேற்கொள்ளும் வரலாற்று திரிபுகள் ஒருபோதும் நிலைக்கப்போவதில்லை. 75,000 தமிழ் மக்கள் கோரமாக படுகொலை செய்யப்பட்ட தடையங்கள் அழியவில்லை, கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் எழும்பும் மரண ஓலங்களும் அடங்கவில்லை, ஆனால் சினிமா விழாவாக கோயம்புத்தூர் மாநாடு கொண்;டாடப்பட்டு வருகின்றது.

பல ஆயிரம் தமிழ் மக்கள் சிறையில்வாட கோயம்புத்தூரில் வரலாற்றை திரிக்கும் இவர்களின் இந்த மாநாட்டின் நினைவுகள் ஒருபோதும் வரலாற்றிலும், தமிழர் மனங்களிலும் நிலைக்கப்போவதில்லை.

http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=9879&cntnt01origid=52&cntnt01detailtemplate=fullarticle&cntnt01returnid=51

Link to comment
Share on other sites

கருணானிதி எமது விடுதலைப் போராட்டத்தை அழிக்க உதவியது தனது அரசியல், பொருளாதார நலனை மட்டுமல்ல தமிழினதிற்கு தான் மட்டுமே தலைவன் வேறு ஒர்வரும் இருக்கக் கூடாது என்ற என்னமும் கூட, ஒரு வேலை எமது தேசியத் தலைவர் தலைமையில் ஈழம் வெல்லப்பட்டால் தன்னை ஒரு நாயும் மதிக்காது என்பத் தெரியும், இன்னமும் கூறப் போனால் அது தான் முக்கிய காரனம் என்று கூட நான் சொல்வேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருணானிதி எமது விடுதலைப் போராட்டத்தை அழிக்க உதவியது தனது அரசியல், பொருளாதார நலனை மட்டுமல்ல தமிழினதிற்கு தான் மட்டுமே தலைவன் வேறு ஒர்வரும் இருக்கக் கூடாது என்ற என்னமும் கூட, ஒரு வேலை எமது தேசியத் தலைவர் தலைமையில் ஈழம் வெல்லப்பட்டால் தன்னை ஒரு நாயும் மதிக்காது என்பத் தெரியும், இன்னமும் கூறப் போனால் அது தான் முக்கிய காரனம் என்று கூட நான் சொல்வேன்.

இருக்கலாம்

கருணாநிதி எப்ப மன்டையை போடுதோ அன்டைக்குத் தான் என்ர மனம் கொஞ்சம் ஆறுதல் அடையும்

Link to comment
Share on other sites

Karunanidhi wants solution

DMK president and Tamil Nadu Chief Minister M. Karunanidhi today said Tamils in Sri Lanka were put to "untold sufferings" and urged the Centre to insist on the island nation to settle "once and for all" the problem faced by them in that country.

"Tamils in Sri Lanka are put to untold sufferings...they are unable to return home. They are still kept in camps. Those who were sent back to their homes have not yet been provided sufficient safety as promised," he said at the concluding session of the World Classical Tamil Conference in Coimbatore today.

"No political solution has been found yet for Tamils in Sri Lanka, despite periodic assurances...this is a matter of pain and deep concern to the people who had gathered at the conference," Karunanidhi added. (PTI)

Link to comment
Share on other sites

... நாம் விரும்புகிறோமோ இல்லையோ இனி தமிழகத்தை ஆழப்போவது திமுகதான், ஏதோ ஒன்றிரண்டு தடவை அதிமுக வந்தால் சரி! ... முன்பு வேறொரு பக்கத்தில் வ.செ.ஜெயபாலன் எழுதியது போல் ... நாம் கருணாநிதியையோ, ஜெயலலிதாவையோ ஒதுக்கி ஒன்றும் நடந்தேறப்போவதில்லை!!!

எம்க்கான எதிரிகளை உருவாக்குவதிலும், எமக்குள்ளேயே குழப்பங்களை உருவாக்கி உடக்க சிங்களவன் முற்படுகையில் ... நாமே அவனது வலையில் போய் விழுவதற்கு சமனானது இது போன்ற கட்டுரைகள்!!!

இதன் மூலம் என்னத்தை சாதிக்கப் போகிறோம்???????????????????????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்றுதொடக்கம்..

எம்மவரின்....

கவிதைகள்,கட்டுரைகள்,கடிதங்கள்,தந்திகள்.....

கருத்துக்கள்...

எதுவுமே..

இந்தியாவிற்கு எதிராக இருந்ததில்லை!

ஆனால்...

இன்று

ஏன்?

எதற்காக?

எப்படி?

எதனால்?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.