• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
அனிதா

சினிமா கேள்வி பதில் போட்டி ...

Recommended Posts

வணக்கம் கள உறவுகளே... :P

சினிமா கேள்வி பதில் போட்டி

சினிமா பற்றிய கேள்வி பதில் போட்டி... முதலில் கீழே ஒரு கேள்வி தரப்பட்டுள்ளது. கேள்விக்கு பதில் தந்தவர் அடுத்த கேள்வியை கேட்கலாம்.. அப்படி அவர் இல்லை என்றால் வேறு யார் என்றாலும் கேள்வியை கேட்கலாம். கேட்ட கேள்விக்கு 2 நாளுக்கு மேல் பதில் தெரியாவிட்டால் கேள்வி கேட்டவரே பதிலை கூறிவிட்டு அடுத்த கேள்வியை கேக்கலாம்...

கேள்விகள்.....

* ஒரு சினிமா துறையில் இருப்பவரின் படத்தை தந்து அவர் யார் என்றோ??

* சினிமா பாடல்வரிகளை தந்து ..இந்த பாடலின் வரிகளை எழுதினது யார்? அல்லது இந்த பாடலை பாடியவர்கள் யார்? அல்லது இந்த பாடலின் இசையமைப்பாளர் யார்? என்று இப்படியான கேள்விகளை கேக்கலாம்

* பழைய புதிய திரைப்படங்களில் இருந்தோ கேட்கலாம்..

*கேள்விக்கான விடையை கண்டு பிடித்தவர் ..அடித்த கேள்வியைக் கேக்கலாம்..

இதோ முதலாவது கேள்வி

dy1919uu.jpg

தேவயாணி

இவர் நடித்த முதல் தமிழ் படம் என்ன?

Share this post


Link to post
Share on other sites

அடடா தீபாவளி ஸ்பெசலா? சரி போட்டி நிகழ்ச்சி தானே வீறு நடை போட வாழ்த்துக்கள் அனிதா... :P

இதுக்குரிய விடை வடிவா தெரியல்ல ஆனால் இதுவாகத்தான் இருக்கவேண்டும் தொட்டாச்சினுங்கி... :!: :?:

சரியா?? :roll: :? விடை பிழை எண்டால் ஒரு குளுகுடுங்க எத்தனையாம் ஆண்டு வந்தது அந்த படம் எண்டு?? வேற உறுப்பினர் சொல்ல வசதியா இருக்கும்ம்.. :wink: :idea:

Share this post


Link to post
Share on other sites

ம்ம் சரி தொட்டாச்சினுங்கி என்ற படம் தான்..:P

அடுத்த கேள்வியைக் கேளுங்க ...

Share this post


Link to post
Share on other sites

தமிழ் சினிமா வரலாற்றில் மிக அதிக நாட்கள் ஓடிய திரைபடம் எது? அது எத்தனை நாட்கள் ஓடி சாதனை படைத்தது :?:

Share this post


Link to post
Share on other sites

ஆகா இப்படி கஷ்டமாக கேள்வி கேட்டால் எனக்கு தெரியாதுங்கோ. பாட்டுல கேட்டால் சொல்லுவேனுங்கோ படத்துல கேட்டால் அவ்வளவாக தெரியாதுங்கோ. சரி சரி அனிதா வாழ்த்துக்கள்

Share this post


Link to post
Share on other sites

Dan wrote:

தமிழ் சினிமா வரலாற்றில் மிக அதிக நாட்கள் ஓடிய திரைபடம் எது? அது எத்தனை நாட்கள் ஓடி சாதனை படைத்தது

டண் சின்னப்புவா கேள்வி தந்தது.

தியாகராஜபாகவதரின் கரிதாஸ் என எங்கேயோ பார்த்த ஞர்பகம்

Share this post


Link to post
Share on other sites

ஏதோ ஒருபடம் ஒருவருடத்திற்கு மேலாய் ஓடினதாய் எங்கோ அறிந்த ஞாபகம், ஆனாத் தெரியல :lol:

Share this post


Link to post
Share on other sites

ஏதோ ஒருபடம் ஒருவருடத்திற்கு மேலாய் ஓடினதாய் எங்கோ அறிந்த ஞாபகம், ஆனாத் தெரியல :lol:

அப்ப மற்றைய படங்கள் எல்லாம் 1 வருடத்துக்கு கீழாலையா ஓடினது?? சரி ஒரு குளு தாரன்.. ஆனால் அது இப்ப இல்லை நாளைக்குத்தான்,,,,, :wink: :P

Share this post


Link to post
Share on other sites

கரகாட்டக்காரன் என்று நினைக்கிறேன். இப்படம் இரண்டு வருடங்களாக ஓடியதாக அறிகிறேன்.

சரி, கன்னடத்துப் பைங்கிளி என்று அழைப்படும் நடிகை சறோஜாதேவி நடித்த முதல் படம் எது? அவர் அப்படத்தில் தோன்றிய காட்சி தொடக்கம் என்ன சிறப்பு அப்படத்திலே இருந்தது?

Share this post


Link to post
Share on other sites

செல்வமுத்து தமிழ் ஆசிரியர் கூறிய விடை 50% சரி,, அதிக நாட்கள் ஓடிய திரைபடம் கரகாட்டக்காரன், ஆனால் ஒரு வருடம் தொடர்ந்து ஒடியது என்பது சரியான விடை..வாழ்த்துக்கள் தமிழ் வாத்தியார் அவர்களே.. :lol:

Share this post


Link to post
Share on other sites

Selvamuthu wrote:

சரி, கன்னடத்துப் பைங்கிளி என்று அழைப்படும் நடிகை சறோஜாதேவி நடித்த முதல் படம் எது? அவர் அப்படத்தில் தோன்றிய காட்சி தொடக்கம் என்ன சிறப்பு அப்படத்திலே இருந்தது?

நாடோடி மன்னன். மேலதிக விபரங்கள் தெரியாது. :roll: :?:

Share this post


Link to post
Share on other sites

வினாக்களை தொடுப்பதற்கும்

விடைகளை பகர்வதற்கும்

உதவிபுரியும் இணையம்

http://www.tamilcinema.com/permanent/default.asp

Share this post


Link to post
Share on other sites

செல்வமுத்து தமிழ் ஆசிரியர் கூறிய விடை 50% சரி,, அதிக நாட்கள் ஓடிய திரைபடம் கரகாட்டக்காரன், ஆனால் ஒரு வருடம் தொடர்ந்து ஒடியது என்பது சரியான விடை..வாழ்த்துக்கள் தமிழ் வாத்தியார் அவர்களே.. :lol:

அகா... அப்படியா?? ஆனால் ஏதோ ஒரு படம் 3 தீபாவளி அல்லது 3 நவராத்திரி ஓடியதாக வாசித்த நினைவு... அதாவது 2 வருடங்கள் :roll: :roll: பட் சரியா தெரியல...

எனது கேள்வி -

நடிகையின் பெயரில் வெளியான திரைப்படம்?

நடிகரின் பெயரில் வெளியான திரைப்படம்??

இசைஅமைப்பாளரின் பெயரில் வெளியான திரைப்படம்??

இடத்தின் பெயரில் வெளியான திரைப்படம்?

ஓரே பெயரில் வெளியான 2 திரைப்படம்??

ஒரெ கதையில் வெளியான 2 திரைப்படம்?? :wink:

Share this post


Link to post
Share on other sites

அகா... அப்படியா?? ஆனால் ஏதோ ஒரு படம் 3 தீபாவளி அல்லது 3 நவராத்திரி ஓடியதாக வாசித்த நினைவு... அதாவது 2 வருடங்கள் பட் சரியா தெரியல...

ஏதோ ஒரு படம் இல்லை டன்னும் மகோஸ்******* நடித்த

படம் வடிவா தெரியும் :P

வினித்

பொறுப்பாளர் கரவெட்டி

புதிய சுய தனிக்கை பொறுப்பாளர்

Share this post


Link to post
Share on other sites

Danklas wrote:

செல்வமுத்து தமிழ் ஆசிரியர் கூறிய விடை 50% சரி,, அதிக நாட்கள் ஓடிய திரைபடம் கரகாட்டக்காரன், ஆனால் ஒரு வருடம் தொடர்ந்து ஒடியது என்பது சரியான விடை..வாழ்த்துக்கள் தமிழ் வாத்தியார் அவர்களே.. :lol:

டண் தவறான பதிலை (கரகாட்டக்காரன்) களத்தில் ஏற்றுக் கொண்டதால் அவரைத் தற்காலிகமாகத் தடைசெய்யுமாறு பரிந்துரை செய்கின்றென். :oops: :oops:

நான் சொன்ன கரிதாஸ் படம்தான் 110 வாரங்கள் ஓடிச் சாதனை புரிந்துள்ளது. விபரம் கீழேயுள்ள இணையத்தளத்திலுள்ளது.

http://www.tamilcinema.com/permanent/default.asp

Share this post


Link to post
Share on other sites

டண்க்கு மப்புப்பா பாவம் விட்டுடுங்க.

Share this post


Link to post
Share on other sites

சா சா மப்போடை விடுறதுதான் தப்பு. :lol::lol:

Share this post


Link to post
Share on other sites

எனது கேள்வி -

நடிகையின் பெயரில் வெளியான திரைப்படம்?

நடிகரின் பெயரில் வெளியான திரைப்படம்??

இசைஅமைப்பாளரின் பெயரில் வெளியான திரைப்படம்??

இடத்தின் பெயரில் வெளியான திரைப்படம்?

ஓரே பெயரில் வெளியான 2 திரைப்படம்??

ஒரெ கதையில் வெளியான 2 திரைப்படம்?? :wink:

அடடா நிறைய கேள்வி கேட்டிருக்குறீர்கள் போல இருக்கே எதுக்கு சொல்லுற எண்டு தெரியல .. :lol:

இதில ஒரு கேள்விக்குத்தான் பதில் தெரியும் அதுவும் சரியோ தெரியா... :roll:

நடிகரின் பெயரில் வெளியான திரைப்படம்??

அன்புள்ள ரஜனிகாந்த்...

Share this post


Link to post
Share on other sites

நடிகையின் பெயரில் வெளியான திரைப்படம்?

ரோஐா

நடிகரின் பெயரில் வெளியான திரைப்படம்??

சிவாஐி

இசைஅமைப்பாளரின் பெயரில் வெளியான திரைப்படம்??

தேவா

இடத்தின் பெயரில் வெளியான திரைப்படம்?

பம்பாய்

ஓரே பெயரில் வெளியான 2 திரைப்படம்??

ஒரெ கதையில் வெளியான 2 திரைப்படம்??

கிட்லர்(மம்முட்டி நடித்தது) ரைகர் (சத்தியராஐ் நடித்தது)

Share this post


Link to post
Share on other sites

நடிகையின் பெயரில் வெளியான திரைப்படம்?

ரோஐா

நடிகரின் பெயரில் வெளியான திரைப்படம்??

சிவாஐி

இசைஅமைப்பாளரின் பெயரில் வெளியான திரைப்படம்??

தேவா

இடத்தின் பெயரில் வெளியான திரைப்படம்?

பம்பாய்

ஓரே பெயரில் வெளியான 2 திரைப்படம்??

ஒரெ கதையில் வெளியான 2 திரைப்படம்??

கிட்லர்(மம்முட்டி நடித்தது) ரைகர் (சத்தியராஐ் நடித்தது)

அட அட நல்லா யோசித்து கண்டுபிடித்திருக்குறீங்க .. ம்ம் நானும் யோசித்தன் ஒண்டும் நினைவில் வரயில்லை..சரி விஸ்ணு வந்து சரியா என்று சொல்லட்டும்... :P

Share this post


Link to post
Share on other sites

ம்ம் சரி தான் அனிதா... ஆனால் ஒரே பெயரில் வெளியான திரைப்படம் தான் தெரியல... நாளைக்கு விஷ்ணு என்ன சொல்கின்றார் என்று பார்ப்போம்....

Share this post


Link to post
Share on other sites

சிவாஜி திரைப்படம் இன்னும் வெளிவரவில்லையே. எனவே அதனைப் பதிலாக எடுக்க முடியாது. அன்புள்ள ரஜனிகாந்த் எடுக்கலாம்.

ஒரே பெயரில் வந்த திரைப்படங்கள்:

உத்தமபுத்திரன் - பி.யு.சின்னப்பா நடித்தது.

உத்தமபுத்திரன் - சிவாஜி நடித்தது.

இருவரும் இரு வேடங்களில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

நல்லதம்பி - என்.எஸ்.கிருஷ்ணன் நடித்தது.

நல்லதம்பி - கார்த்திக் நடித்தது.

Share this post


Link to post
Share on other sites

சதிலீலாவதி என்ற பெயரிலும் இரு தமிழ்ப்படங்கள் வெளிவந்துள்ளன.

இறுதியாக வந்த சதிலீலாவதி கமல், கோவை சரளா, ஹிரா நடித்த பாலுமகேந்திராவின் படம். முந்தையது பற்றித் தெரியவில்லை.

அதிக நாட்கள் ஓடிய தமிழ்ப்படம் கரகாட்டக்காரன் அன்று.

தியாகராஜபாகவதர் நடித்த 'ஹரிதாஸ்' என்ற திரைப்படம்தான் அதிகநாட்கள் ஓடிய தமிழ்த்திரைப்படம். ஏறத்தாள 3 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஓடிச் சாதனை படைத்தது இப்படம்.

Share this post


Link to post
Share on other sites

சரி. நானொரு கேள்வி கேட்கிறேன்.

தமிழ்ச்சினிமாவில் பெண்கவிஞர் ஒருவர் முதன்முதல் எழுதிய பாடல் எது? அதை எழுதியவர் யார்?

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • நீங்களும் கவிதைதானா ?? சரி எழுதுங்கோ தொடர்ந்து
    • எல்லாரும் வெள்ளணவே தொடங்கியாச்சாக்கும். அவசரக் குடுக்கைகள். கவிதை நன்று அண்ணா.   😃
    • நல்ல தொடக்கம்; தொடரட்டும் நல்லபடியாக... காரை துர்க்கா   / 2020 பெப்ரவரி 18 வடக்கு, கிழக்கின் பொருளாதாரம், சமூக அபிவிருத்தி மேம்பாட்டை முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்துடன், ‘மக்கள் அபிவிருத்தி மேம்பாட்டு மன்றம்’ என்ற அமைப்பு, புதிதாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.    யாழ். ஆயர் அதிவணக்கத்துக்குரிய ஜஸ்டின் பேணார்ட் ஞானப்பிரகாசம் ஆண்டகை, நல்லை ஆதீன குரு ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் ஆகியோரின் இணைத் தலைமையில், வடக்கு, கிழக்கைச் சேர்ந்த ஐம்பதுக்கும் அதிகமான துறைசார் நிபுணர்கள், பேராசிரியர்கள், புலமை சார்ந்தோர் இணைந்து, மேம்பாட்டு மன்றத்தில் செயற்பட முன்வந்துள்ளனர்.   இந்தப் பூமிப்பந்தில், பிரச்சினைகள் இல்லாத தனிநபர்கள் இல்லை. பிரச்சினைகள் இல்லாத குடும்பங்கள் இல்லை. பிரச்சினைகள் இல்லாத சமூகங்கள் இல்லை. ஆகவே, பிரச்சினைகள் எல்லோருக்கும் பொதுவானவையே.  இவ்வாறாக, பிரச்சினைகள் அனைவருக்கும் பொதுவானவைகளாக இருந்தாலும், போர் அரக்கன் மூர்க்கத்தனமாகக் கோரத்தாண்டவம் ஆடிய மண்ணில் வாழும் தமிழ் மக்களது பிரச்சினைகள், வேறு விதமானவைகளாகவும் சிக்கல்கள் நிறைந்தவைகளாகவும் காணப்படுகின்றன; தொடர்கின்றன.  ஆயுதப் போர் நிறைவுக்கு வந்து, பத்து ஆண்டுகள் ஓய்ந்துவிட்ட போதிலும், தமிழ் மக்களது அன்றாடப் பிரச்சினைகள் ஓய்ந்தபாடில்லை; தீர்வதற்கான அறிகுறிகளையும் காணவில்லை. மாறாக, பிரச்சினைகள் மேலும் சிக்கலுக்குள் சென்று கொண்டிருக்கின்றன. இதற்குக் காரணம், அடிப்படைப் பிரச்சினையான அரசியல் பிரச்சினை அப்படியே இருப்பதாகும். அதுகூட, மேலும் சிக்கலுக்குள்ளேயே சிக்கியுள்ளது.  மறுவளமாக, இன்று தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற, அனுபவிக்கின்ற அடிப்படைப் பிரச்சினைகளுக்கு, அரசியல் பிரச்சினையே பிரதான காரணமாகவும் அமைந்துள்ளது.  உதாரணமாக, யாழ்ப்பாணம், வலிகாமம்  வடக்கு உயர்ப் பாதுகாப்பு வலயத்துக்குள் ஒருவரது வீடும் விவசாயக் காணியும் கையகப்படுத்தப்பட்டு இருப்பின், அவரது இருப்பும் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி, அவர் அன்றாடப் பிரச்சினைகளுக்குள் அகப்பட்டிருப்பார்.ஆனால், அவரது வீடும் காணியும் விடுவிக்கப்படாமைக்குக் காரணம், அடிப்படைப் பிரச்சினையான அரசியல்  பிரச்சினையே ஆகும்.  இவ்வாறாக, 72 ஆண்டுகால இனப்பிணக்கான அரசியல் பிணக்கு தீராத வரை, நாளாந்தம் தமிழ் மக்கள் அனுபவிக்கும் அன்றாடப் பிரச்சினைகளும் தீரப்போவது இல்லை.  ஆனாலும், அடிப்படைப் பிரச்சினையான அரசியல் பிரச்சினை தீர்க்கப்படுமா? அதற்காக, இன்னும் எத்தனை ஆண்டுகாலம் தமிழினம் காத்திருக்க வேண்டுமென்று எவருக்கும் தெரியாது.  இந்நிலையில், ஒருபுறம் அரசியல் பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற வேளையில் மறுபுறம், அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் காணவேண்டிய தேவைப்பாடுகள் நிறையவே இருக்கின்றன.  இது இவ்வாறு நிற்க, இதுவரையான காலப்பகுதியில், எமது அரசியல்வாதிகளால் அன்றாடப் பிரச்சினைகளைக் கணிசமான அளவில்கூடப் பூர்த்திசெய்ய முடியவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டியே உள்ளது.  2010ஆம் ஆண்டில் போர் நிறைவுபெற்ற காலங்களில், ஆட்சியில் இருந்தவர்களுடன் ஐக்கியமாக இருந்தவர்களாலும் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதியிலிருந்து 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் திகதி வரையிலான நல்லாட்சி காலப்பகுதியில் ஆட்சி அமைக்கவும் அவ்வாறாக அமைத்த ஆட்சியை நடத்தவும் ஆதரவு வழங்கியவர்களாலும், தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாரியளவில் உயர்த்த முடியவில்லை. அன்றாடப் பிரச்சினைகளைப் பெருமளவில் தீர்க்க முடியவில்லை.  இதற்கிடையே, இன்று தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அன்றாடப் பிரச்சினைகள், வெறுமனே அரசியல்வாதிகளாலும் அரச திணைக்களங்களாலும், அரச சார்பற்ற நிறுவனங்களாலும் மாத்திரம் தீர்க்கப்படக் கூடியதும் அல்ல என்பதையும், நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.  ஆகவே, இந்நிலையில் இதுபோன்ற அபிவிருத்தி மன்றங்களது வருகை அவசியமானதே; வரவேற்கக்கூடியதே. ஆனால், மறுபுறத்தில் அவற்றினது இயலுமை, தொடர்ச்சித் தன்மை என்பன குறித்துக் கவனத்தில் கொள்ளவேண்டி உள்ளது.   புதிதாக அமைப்புகளைத் தொடங்குவது மிகச் சுலபம். ஆனால், அவற்றை வினைத்திறன் உள்ளதாகத் தொடருவது ரொம்பக் கடினம். ஆகவே, இன்று இவ்வாறு சமயத் தலைவர்களாலும் புத்திஜீவிகளாலும் உருவாக்கப்பட்ட அமைப்பு, பத்தோடு பதினொன்றாக இருக்க முடியாது. இவற்றுக்குப் பாரிய சமூகப் பொறுப்பு உள்ளது.  இன்று தமிழ் மக்கள் மத்தியில் பல சமூக அமைப்புகள் இயங்கி வருகின்றன. இதற்கு, கணிசமான புலம்பெயர்ந்த உறவுகள், பெரும் பங்களிப்புச் செய்து வருகின்றார்கள்.  ஆனாலும், இவ்வாறான அமைப்புகளுக்கு இடையிலான புரிந்துணர்வு, குறைவாகவோ, இல்லாமலோ உள்ளது என்றுகூடக் கூறலாம். ஆகவே, புதிதாகத் தற்போது உருவாக்கம் பெற்றுள்ள மக்கள் அபிவிருத்தி மேம்பாட்டு மன்றம், சமூக அமைப்புகளுக்கான ‘தாய்’ அமைப்பாக மிளிர வேண்டும்.  தமிழ் மக்களிடையே ஆங்காங்கே அவ்வப்போது, மதம் சார்ந்த முரண்பாடுகள் தோன்றுகின்றன அல்லது, தோற்றுவிக்கப்படுகின்றன.இது போன்ற நிலைமைகள், போர் நடைபெற்ற காலங்களில் வடக்கு, கிழக்கு மண்ணில் காணப்படவில்லை; தோன்றவில்லை. தமிழ் மக்கள் அப்போது மதத்தால் இரண்டாக இருந்தாலும், இனத்தால் (தமிழ்) ஒன்றுபட்டிருந்தோம். ஆனால், இன்று ஏற்பட்டுள்ள இவ்வாறான சி(று)ல முறுகலுக்குள் எண்ணெய் வார்க்க, பல தரப்புகள் கங்கணம் கட்டி வரிசையில் நிற்கின்றன. ஆகவே, இந்து - கிறிஸ்தவ மத அமைப்புகளின் தலைவர்கள் இணைத் தலைவர்களாகச் செயற்படுகின்றபோது, இவ்வாறு ஏற்படுகின்ற பிரச்சினைகளை முளையிலேயே கிள்ளி எறியலாம்; கிள்ளி எறிய வேண்டும்.  அதுபோல, வடக்கு, கிழக்கின் அனைத்து மாவட்டங்களிலும், இவ்வாறான இணைத் தலைமையிலான உறவு ஏற்படுத்தப்பட வேண்டும். இந்த இணைத் தலைமை, பிறப்பில் இந்துவாகவோ கிறிஸ்தவராகவோ வாழுபவர்களை அடிப்படையில் தமிழர்களாக இணைக்க வேண்டும்.  தமிழ் மக்களது வெளிச் சூழலை, பிறிதொருவர் நிர்ணயித்தல் (சுதந்திரம்) அடிமைத்தனம் எனப்படும். ஆனால் இன்று, எங்கள் அரசியல்வாதிகளுக்கு  இடையே புரிந்துணர்வுகள் அ(றுந்து)ற்று, எங்களது உளச்சூழலைக் கூட (மனதை), வெளியே இருப்பவர்கள் நிர்ணயிக்கும் நிலை ஏற்படுத்தப்பட்டு உள்ளது.  இவற்றின் தோற்றக் காரணத்தைக் கண்டுபிடித்தாலே, வெற்றிக்கான திறவுகோலை வடிவமைத்துக் கொள்ளலாம்.  ஆகவே, வடக்கு, கிழக்கின் பொருளாதாரம், சமூக அபிவிருத்தி மேம்பாட்டை முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்துடன் அமைக்கப்பட்ட மக்கள் அபிவிருத்தி மேம்பாட்டு மன்றம், தமிழ் அரசியல்வாதிகளால் உதாசீனம் செய்ய முடியாத பலம்கொண்ட அமைப்பாக எழுச்சி பெறவேண்டும். தமிழ் மக்கள், தங்களது அரசியல்வாதிகள் மீது முழுமையாக நம்பிக்கை இழந்துவிட்டார்கள். யார் உண்மையானவர்கள்; யார் உண்மை போல நடிக்கின்றார்கள் என, முழுமையாகக் குழம்பிய நிலையில் உள்ளார்கள்.  முன்பு போல இல்லாது, அரசியல் விமர்சனங்கள் நிறைந்த உலகத்தில், தற்போது நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இதனை விட, சமூக வலைத்தளங்கள் வழியாக நாளாந்தம் பல கருத்துகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதனது உண்மைத் தன்மை தொடர்பிலும், மக்கள் குழப்பமடைந்து வருகின்றனர். ஒரு பொதுமகன், யாருக்கு வேண்டுமானாலும் வாக்களிக்கலாம். அது அவரது தெரிவு விருப்பம். ஆனால், அவ்வாறு வாக்களித்து வெற்றி பெறுபவர் அடுத்து வருகின்ற ஐந்து ஆண்டுகள் ஆசனத்தில் இருக்கப் போகின்றார். ஆகவே, பிழையானவர்களைத் தெரிவுசெய்தால், மீண்டும் சரியானவர்களை மீளத் தெரிவுசெய்ய, ஐந்து ஆண்டு காலம் காத்திருக்க வேண்டும்.  இன்று அனைத்துச் செயற்பாடுகளிலும் அரசியல் நுழைந்துவிட்டது. நகர சபையினர் குப்பையை எடுக்கும்போது, சில கட்சிகளைச் சார்ந்தவர்களின் வீடுகளில் மாத்திரமே குப்பைகளைச் சேகரிப்பதாக மக்கள் தன்னிடம் முறையிட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் அண்மையில் தெரிவித்துள்ளார்.  ஆகவே, குப்பை அள்ளுவது வரை அரசியல் சென்று நாற்றம் அடிக்கின்றது. இவ்வாறு நாற்றம் அடிப்பதாலேயே, நல்லவர்கள், கௌரவமானவர்கள், சமூகநோக்கில் நடுநிலை நிற்பவர்கள் போன்றோர் அரசியலுக்குள் வர அச்சப்படுகின்றார்கள்.  ஆகவே, நாற்றம் எடுக்கும் அரசியலை மாற்றத்துக்குள் கொண்டுசெல்ல, இவ்வாறான பொது அமைப்புகள் முயற்சி செய்யவேண்டும்.  தென்னிலங்கையில், தங்களது மதம் சார்ந்து பௌத்த அமைப்புகள் நடந்து கொள்வது போல, மக்கள் அபிவிருத்தி மேம்பாட்டு மன்றமும், தங்களது இனம் சார்ந்து நடந்துகொள்ள வேண்டும்.  போரால் தமிழ்ச் சமூகம் தலைகீழாகப் புரட்டிப் போடப்பட்டுள்ளது. அந்தச் சமூகத்தின் கட்டமைப்புகள் சிதைவடைந்து கிடக்கின்றன. ஒழுங்கமான சமூக அமைப்புகள் ஒழுங்கின்றிச் சிதறிக் கிடக்கின்றன.  இந்நிலையில், இருக்கின்ற இந்த நிலையிலேயே, எமது சமூகம் தொடர்ந்தும் இருக்க முடியாது. அல்லது, “இந்த நிலையையே, இவ்வாறு ஏற்று வாழ வேண்டும்” என எவரும் சொல்லவில்லை; சொல்லவும் முடியாது.  http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/நல்ல-தொடக்கம்-தொடரட்டும்-நல்லபடியாக/91-245663
    • மத ரீதியான எந்த வித பேதங்களும் எமது சபையினால் மேற்கொள்ளப்படுவதில்லை -ஊர்காவற்றுறை பிரதேச சபை மத ரீதியான எந்த வித பேதங்களும் எமது சபையினால் மேற்கொள்ளப்படுவதில்லை. அனைவரும் சமமாகவே எம்மால் பார்க்கப்படுகின்றது. வீதி இலக்கம் மாற்றப்பட்டமை தொடர்பில் குறித்த விளம்பரம் பெயர் மாற்றம் என பிரசுரிக்கபட்டமை தொடர்பில் திருத்தமான பதில் விளம்பரம் விரைவில் செய்யப்படும் என ஊர்காவற்றுறை பிரதேச சபை தெரிவித்துள்ளது. ஊர்காவற்றுறை முகாம் வீதியில் அமைந்துள்ள கதிரேசன் கோவில் வீதிக்கும் பண்ணை வீதியில் அமைந்துள்ள சென் மேரிஸ் வீதிக்கு எந்த தொடர்பும் இல்லை இரண்டுக்கும் இரண்டு கிலோ மீற்றர் வரையான தூர வித்தியாசம் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. எந்த சைவ வீதிகளும் கிறிஸ்தவ பெயரால் மாற்றம் செய்யப்படவில்லை என்பதே தெளிவு. எனவே உண்மையான நிலவரம் அறிந்து கொண்டு செயல்பட பத்திரிக்கை மற்றும் ஊடகங்கள் பொது அமைப்புகளை தயவுடன் கேட்டு கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெயர் மற்றம் செய்யும் போது குறித்த வீதி வாழ் மக்கள் பொது அமைப்புகள் ஆலோசனை அபிபிராயம் பெறப்பட்டு எந்த வித சிக்கலும் இல்லாமலே இடம் பெற்றது. குழப்பமான வீதிகள் இன்று வரை பெயர் மற்றம் செய்யப்படவில்லை.இவை தவிர முன்னர் குறிப்பிட்ட வகையில் வீதிகளே இல்லாமல் பெயர் குறிப்பிடபட்டு இருந்த வீதிகளுக்கு வழங்கபட்ட வீதி இலக்கங்கள் புதிதாக பதியபட்ட வீதிகளுக்கு வழங்கபட்டது. வீதி பெயர் பதிவு புத்தகத்தில் காணபட்ட உண்மையில் பிரதேசத்தில் காணப்படாத வீதி கதிரேசன் கோவில் முதலாம் ஒழுங்கைக்குரிய இலக்கம் புனித மரியாள் வீதியில் ஆரம்பித்து சென் ஜோசெப் வீதியில் நிறைவடையும் புதிதாக பதியபட்ட புனித மரியாள் முதலாம் ஒழுங்கை என பெயரிடப்பட்ட வீதிக்கு வழங்கபட்டது.அந்த வகையிலான மாற்றங்கள் தொடர்பிலே தினக்குரல் பத்திரிகையில் பெயர் மாற்றம் என குறிப்பிடபட்டு விளம்பரமாக பிரசுரிக்கபட்டு இருந்தது. எந்த வீதியின் பெயரும் மாற்றம் செய்யவில்லை. பெயர் குறிப்பிடப்பட்ட பதிவு இலக்கங்களுக்கான பெயர் மாற்றங்கள் தான் பத்திரிகையில் குறிப்பிடபட்டு இருந்தது. இங்கு எந்த வீதியும் பெயர் மாற்றம் செய்யப்படவில்லை. எனவே தகவல் எதையும் தெளிவில்லாமல் குழப்பத்தையும் சபைக்கு அபகீர்த்தியும் ஏற்படுத்த வேண்டாம் என அன்பாக கேட்டு கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊர்காவற்றுறை பிரதேச சபை எல்லைக்குள் பிரதேச சபைக்கு சொந்தமான வீதிகள் தொடர்பில் முன்னர் தயாரிக்க பட்ட வீதி பதிவு புத்தகத்தில் உள்ள வகையில் ஒவ்வொரு வீதிகளுக்கும் இலக்கங்கள் வழங்கபட்டு இருந்தமை குறிப்பிட தக்கது. இராணுவ கட்டுப்பாட்டு பகுதி மற்றும் ஆட்களற்ற பகுதி என்பன தவிர்த்த ஏனைய பகுதியில் இனம் காணபட்ட வீதிகள் பெயர் மற்றும் இலக்கங்கள் வழங்கப்பட்டு வீதி பதிவு புத்தகம் தயாரிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.(15)   http://www.samakalam.com/செய்திகள்/மத-ரீதியான-எந்த-வித-பேதங்/