Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

தடுப்பூசிகள்: மருந்தா? வணிகமா?


Recommended Posts

தடுப்பூசிகள்: மருந்தா? வணிகமா?

போலியோ சொட்டு மருந்தால்தான் போலியோ உள்பட பல நோய்கள் ஏற்படுகின்றன என்றால் நம்ப முடிகிறதா? இந்த உண்மையை சொல்பவர் யாரோ, எவரோ அல்ல. போலியோ சொட்டு மருந்தை கண்டுபிடித்தவரேதான்.

''1961ம் ஆண்டுக்குப் பின், அமெரிக்காவில் ஏற்பட்ட அனைத்து போலியோவுக்கும் காரணம் போலியோ சொட்டு மருந்துதான்!'' என்று அமெரிக்க செனட் கமிட்டியில் ஒப்புக் கொண்டிருக்கிறார் ஜோனல் சால்க். இவர்தான் போலியோ சொட்டு மருந்தை கண்டுபிடித்தவர்.

''போலியோவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கொடுக்கப்பட்ட தீவிர தடுப்பு மருந்து முயற்சிக்குப் பின்னரும், இம்மருந்தால் பெருமளவு பலன் ஏதும் ஏற்படவில்லை என்பது அரசு ஆவணங்களை உற்று நோக்கும்போது தெரிகிறது...'' இப்படி சொன்னவரும் போலியோ தடுப்பு மருந்தை உருவாக்கியவர்தான். அவர், சாபின்.

அம்மை நோய்க்கான மருந்தை 1796ல் எட்வர்ட் ஜென்னர் கண்டுபிடித்தார். தன்னுடைய மகனுக்கு முதன்முதலில் இந்த மருந்தை கொடுத்து தன் கண்டுபிடிப்பை நிரூபித்தார். அனைத்து மருத்துவர்களாலும் இந்த மருந்து ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்பு அந்த வேதனையான சம்பவம் நிகழ்ந்தது. ஆமாம், சிலவருடங்களில் அம்மை தடுப்பு மருந்து முதன்முதலில் யாருக்கு போடப்பட்டதோ, அந்த ஜென்னருடைய மகனும், இன்னொருவரும் மருந்தின் வீரியத்தால் மரணமடைந்தனர். இதனால் எட்வர்ட் ஜென்னர் தன்னுடைய 2வது மகனுக்கு அம்மைத் தடுப்பூசியை போடவில்லை. ஆனால், அதற்குள் உலகம் முழுவதும் அம்மைத் தடுப்பூசி புழக்கத்துக்கு வந்துவிட்டது...

மேலே சொன்ன மூன்று சம்பவங்களும் முதலாளித்துவத்தின் கோர பசிக்கு மனிதர்கள் தடுப்பூசிகள் என்ற பெயரில் இரையாகும் கொடூரத்தின் சில மாதிரிகள்தான். இப்படி உலகையே குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளையே சுடுகாடாக மாற்றும் போக்கு முதலாளித்துவ சமூகம் எப்போது பிறந்ததோ அப்போது முதலே நடைமுறைக்கு வந்துவிட்டது. முதலாளித்துவத்தின் அடுத்தகட்டமான ஏகாதிபத்தியத்தில் இந்தப் போக்கு உச்சநிலையை எட்டியிருக்கிறது.

இது எப்படி என்பதை சுருக்கமாக பார்த்துவிட்டு தடுப்பூசிகளின் விபரீதம் குறித்து பார்ப்போம்.

எந்தவொரு அறிவியலும், தொழில்நுட்பமும் சமுதாயத்திலிருந்தே பிறக்கின்றன; கிளை பரப்பி வளருகின்றன. எனவேதான் ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒவ்வொரு உலகப் பார்வை தத்துவ ஆளுமை என்ற பெயரில் ஆட்சி செலுத்துகிறது. இந்த உலகப் பார்வை அந்தந்த சமூக - பொருளாதார கூறுகளாலேயே தீர்மானிக்கப்படுகிறது. இப்படி தோற்றமெடுத்து வளரும் அறிவியலும், தொழில்நுட்பமும் அந்தந்த சமூகத்திலுள்ள சமூக உறவுகளை - ஏற்றத் தாழ்வுகளை - தொடர்ந்து தக்கவைப்பதாகவும், மீண்டும் மறு உற்பத்தி செய்வதாகவுமே அமைகின்றன.

மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையே முரண்பாடுகள் பிரதானமாக இருந்த புராதன இனக்குழு சமூகங்களில், இயற்கை மனிதனுக்கு கட்டுப்படவில்லை. அச்சம் தருவதாக இருந்தது. எனவே இயற்கையை வணங்குவதன் மூலமாகவும், வசியம் செய்வதன் மூலமாகவும் இயற்கையை கட்டுப்படுத்த முடியும் என மனிதன் நம்பினான். அதனாலேயே அக்காலத்தில் நோய்கள் என்பவை ஆவிகளின் விளைவே என்ற கண்ணோட்டம் நிலவியது. சாமியாடிகளும், ஆவியோட்டிகளும் மருத்துவர்களாக அப்போது இருந்ததும் இந்த காரணத்தால்தான். தவிர அன்று ஒருவனே மருத்துவனாகவும், விஞ்ஞானியாகவும், கவிஞனாகவும், மந்திரவாதியாகவும் இருக்க முடிந்தது.

தொடர்ந்து உற்பத்தி நடவடிக்கைகள் வழியாக கொஞ்சம் கொஞ்சமாக மனிதன் இயற்கையை கட்டுப்படுத்த முடியும் என்பதை அறிந்து கொண்டான். இந்த நடைமுறையில் அவனது அறிவு வளர்ச்சி அடைந்தது. இயற்கையை வணங்குவதற்கு பதில் ஆராயத் தொடங்கினான். சில கீரைகள், பழங்கள், கிழங்குகள், இறைச்சி வகைகள் உடற்கூற்றில் சில முக்கிய மாற்றங்களை நிகழ்த்துவதை கண்டுகொண்டான். இயற்கைக்கும் மனித உடலுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்தும் சிந்திக்க ஆரம்பித்தான்.

இந்த அடிப்படையிலேயே மேற்கு நாகரீகத்தின் தொடக்க கால அயோனியர்களின் மருத்துவக் கண்ணோட்டமும், புத்தருக்கு சற்று முற்பட்ட வேதகாலத்திய இந்திய மருத்துவ கண்ணோட்டமும் விளங்கியது என்கிறார் தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா (Science, Philosophy and Society).

இப்படி இயற்கையை மனிதன் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் தொடங்கிய பின் உற்பத்தி பெருகியது. உபரி விளைந்தது. இதன் இணையாக மனிதர்களுக்கு இடையே ஏற்றத்தாழ்வுகளும் அதிகரித்தது. ஆக, இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையிலான முரண்பாடுகளை காட்டிலும் -

மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையிலான முரண்பாடுகள் - வேறுபாடுகள் - அதிகரித்தது.

தொழிற்புரட்சியோடு தோன்றிய முதலாளியம் வாழ்வின் சகல துறைகளிலும் தனது பாதிப்புகளை பதிய வைத்தது. இதன் விளைவாக அதுநாள்வரை மனித வரலாறு கண்டிராத ஒரு புதிய வேலைப் பிரிவினை மருத்துவத்துறைக்குள் உருவாகியது. மருந்துகள் என்பன மருத்துவர்களாலேயே தயாரிக்கப்பட்டு நோயாளிகளுக்குக் கொடுக்கப்பட்ட முறை அழித்து துடைக்கப்பட்டு -

மருந்தை தயாரிக்க தொழிற்சாலைகளும், விற்பனை செய்ய மருந்துக் கடைகளும் உருவாகின. அதாவது மருந்து என்பது பண்டமாகியது. 1630ல் ஆண்டர்சன் மாத்திரைகளும், பிறகு பாட்மனின் பெக்டோரல் துளிகள், டாபியர் ரசம் முதலியனவும் சந்தையில் விற்பனையாகத் தொடங்கின. 17ம் நூற்றாண்டில் லண்டனிலும், பின்னர் அமெரிக்காவிலும் சந்தை மருந்துகள் புகழ் அடையத் தொடங்கின. 1715ல் பிளவ் கோர்ட் பார்மஸி மருந்துகளைத் தயாரித்து விற்பனை செய்யத் தொடங்கியது.

அடுத்தடுத்து நிகழ்ந்த பல விஞ்ஞான கண்டுபிடிப்புகளின் விளைவாக மருத்துவத் துறையிலும் மாற்றங்கள் நிகழ்ந்தன. 1763ல் சலிசிலிக் அமிலத்தின் மருத்துவப் பண்புகள் உணரப்பட்டன. 1817ல் அபினியிலிருந்து மார்பினும், அடுத்த ஆண்டே நக்ஸ்வாமிகாவிலிருந்து ஸ்டிரைசினும், 1820ல் சின்கோனா மரப்பட்டையிலிருந்து கொயினாவும் பிரித்தெடுக்கப்பட்டது.

சாயப் பொருள்களின் மருத்துவப் பண்புகள் உணரப்பட்டதும் சுவிட்சர்லாந்திலும், ஜெர்மனியிலும் இருந்த பல சாயக் கம்பெனிகள், மருந்துக் கம்பெனிகளாக மாறத் தொடங்கின.

உதாரணமாக சுவிட்சர்லாந்திலுள்ள பேசில் என்னும் இடம், நெசவுத் தொழிலுக்கு புகழ்பெற்றது. இங்குதான் இப்போது உலகின் 4 புகழ்பெற்ற பன்னாட்டு நிறுவனங்களாகிய கெய்சி, சிபா, காண்டஸ், ரோச் ஆகிய மருத்துவத் தொழிற்சாலைகளின் உற்பத்தி மையங்கள் உள்ளன. இந்த நான்கும் சாயத் தொழிற்சாலைகளாக இருந்து மருத்துவத் தொழிற்சாலைகளாக மாறியவை.

இதிலிருந்து நாம் உணரும் உண்மை இதுதான்: முதலாளிய வளர்ச்சியோடு வணிகக் கொள்ளையும், காலனி ஆதிக்கமும் எப்படி அதிகரித்ததோ அதேபோல் மருத்துவத் துறையும் மாறியது. இந்தியாவிலிருந்து ரூபார்பும், ஆப்பிரிக்காவிலிருந்து சென்னாவும், ஜப்பானிலிருந்து பச்சைக் கற்பூரமும், கிழக்கிந்தியத் தீவுகளிலிருந்து நட்மெக்கும் லண்டனுக்கு கொண்டு செல்லப்பட்டு, அவற்றிலிருந்து வடித்தெடுக்கப்பட்ட மருந்துகள் மீண்டும் இதே நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

மருத்துவத் துறையில் இப்படி சர்வதேச வணிகம் தொடங்கியவுடன், ஏற்றுமதி நோக்குடன் - எளிதில் அனுப்பக் கூடிய வடிவத்தில் - மருந்துகளை தயாரிக்கும் அவசியம் ஏற்பட்டது. இதனையடுத்து 1787ல் மாத்திரை தயாரிக்கும் முதல் எந்திரமும், 1853ல் முதல் ஹைபோடெர்மிக் ஊசியும், 1903ல் முதல் சுழல் மாத்திரை எந்திரமும் கண்டுபிடிக்கப்பட்டன. இதனால் கடைகளில் வைத்து விற்பனை செய்வது எளிதானது (VERNON COLEMAN, The Medicine Man; அ,மார்க்ஸ், நமது மருத்துவ நலப் பிரச்னைகள்).

வியாபாரியாக நுழைந்து ஆட்சியாளர்களாக மாறும் காலனியாதிக்க போக்கு அதிகரித்ததும், ஆக்ரமிப்பாளர்கள் எதிர்கொண்ட தலையாய பிரச்னையாக காலனி நாட்டு வெப்ப நோய்கள் இருந்தது. அம்மை, மலேரியா போன்ற நோய்கள், உள்நாட்டு எதிரிகளை காட்டிலும் காலனி ஆக்ரமிப்பாளர்களுக்கு அதிகத் தீங்கை விளைவித்தன. எனவே இந்த நோய்களை தடுப்பது, வெல்வது போன்ற திசைகளில் மருத்துவ ஆய்வுகள் ஊக்குவிக்கப்பட்டன. இதனையடுத்து 1796ல் அம்மைத்தடுப்பு மருந்தும், 1884ல் காலரா தடுப்பு மருந்தும் கண்டுபிடிக்கப்பட்டன.

ஆக, தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டது இப்படியான சமூகக் காரணிகளால்தான். முதலாளித்துவத்தின் பிறப்போடு தடுப்பு மருந்தும் உருவானதால் இயல்பிலேயே இதற்குள்ளும் முதலாளித்துவத்தின் அம்சங்கள் இருக்கின்றன.

எனவேதான் 1860ல் உருவான கிருமிக் கோட்பாட்டின் படி, எந்தவொரு மனிதனும் கிருமிகளால் தாக்கப்படும்போது நோயாளியாகிறான் என்பது சுருக்கப்பட்டு நோய்க்கான காரணம், தனிமனித பிரச்னையாக காட்டப்பட்டது. நோய்க்கு காரணமான சமூகப் பொருளாதார காரணிகள் மறைக்கப்பட்டன. சுற்றுச்சூழல் காரணங்கள் எல்லாம் புறந்தள்ளப்பட்டு சோதனைக் கூட சோதனைகளின் அடிப்படையில் நோயும், சிகிச்சையும் தீர்மானிக்கப்பட்டன. முதலாளியத்தின் தனிமனித சுதந்திரக் கோட்பாடு இந்தவகையில் மருத்துவத்திலும் வேரூன்றியது.

---------------------

கி.பி.1796ல் எட்வர்ட் ஜென்னர் அம்மை தடுப்பு மருந்தை கண்டுபிடித்து அதற்கு Vaccination என்று பெயர் சூட்டினார். பசுவைக் குறிக்கும் லத்தீன் சொல்லான Vacceinusலிருந்து உருவான சொல் இது. இந்த மருந்து எப்படி தயாரிக்கப்படுகிறது என்பதை நாம் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

மனிதர்களுக்கு ஏற்படும் அம்மைக் கொப்புளங்களிலிருந்து வரும் சீழை எடுத்து பாதுகாத்து, பசுக்களுக்கு செயற்கையான காயங்களை ஏற்படுத்தி அந்த புண்களுக்குள் செலுத்துவார்கள். இதனால் இப்புண்கள் வழியே அதிகமான சீழ் வெளியேறத் தொடங்கும். இந்த சீழை எடுத்து அதோடு சில இருப்பு ரசாயனங்களைக் கலந்து அம்மை தடுப்பு மருந்தை தயாரிக்கிறார்கள்.

போலியோ சொட்டு மருந்து தயாரிப்பும் கிட்டத்தட்ட இதுமாதிரிதான். போலியோவை ஏற்படுத்துவதாக நம்பப்படும் கிருமிகளை குரங்குகளின் சிறுநீரகத்தில் ஊசி வழியே செலுத்துகிறார்கள். சிறுநீரக சூழலிலேயே இந்தக் கிருமிகள் வளர்த்தெடுக்கப்பட்டு பின்னர் போலியோ சொட்டு மருந்தாக தயாரிக்கப்படுகிறது. இப்படி மருந்து தயாரிக்கப் பயன்படும் குரங்குகள், உரிய சோதனைக்கு பிறகுதான் தேர்வு செய்யப்படுகின்றன. என்றாலும், பரிசோதனைகளின் மூலமே வரப்போகிற அல்லது வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் நோய்கள் அனைத்தையும் கண்டுபிடித்துவிட முடியாது. இப்படி 1950களில் பரிசோதிக்கப்பட்ட குரங்குகளில் சிமியன் வைரஸ் 40 (SV40) என்ற கிருமி பாதித்திருந்த விஷயம், மருந்துகள் தயாரிக்கப்பட்ட பிறகுதான் தெரிய வந்தது.

இதனால்தான் 'இந்தியாவில் போலியோ சொட்டு மருந்து கொடுப்பதைத் தடை செய்யவேண்டும்' என்று தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் டாக்டர் சத்யமாலா வழக்கு தொடர்ந்தார். ஆனால், அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது!

அதேபோல், 2006ல் மட்டும் போலியோ சொட்டு மருந்து கொடுத்து இந்தியாவில் 1600 பேருக்கு போலியோ பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், 27,000 பேர் பாதிக்கப்பட சாத்தியம் இருப்பதாகவும் ஜூலை 11, 2008ம் ஆண்டு தேதியிட்ட 'தி இந்து' நாளிதழில் கட்டுரை எழுதினார் இந்திய மருத்துவக் கழகத்தின் தடுப்பு மருந்துப் பிரிவின் தலைவரான டாக்டர் ஜேக்கப் புலியேல் (Politics of Polio, July 11/2008). இந்தக் கட்டுரையின் விவரத்தையும் உண்மையையும் ஆளும் வர்க்கங்கள் கண்டுகொள்ளவேயில்லை...

1853ம் ஆண்டு இங்கிலாந்தில் அம்மை தடுப்பு ஊசியை குத்தும் சட்டம் கட்டாயமாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து உலகின் பல பகுதிகளுக்கும் தடுப்பு மருந்துகள் பரவின. கட்டாயச் சட்டங்களும் அமலுக்கு வந்தன. ஆனால், அம்மை நோய்த் தாக்கத்தில் இம்மருந்துகள் இந்தவிதமான மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. பதிலாக பல புதிய எதிர் விளைவுகளே ஏற்பட்டன. இதனால் 1889ம் ஆண்டு இங்கிலாந்தில் ராயல் கமிஷன் ஏற்படுத்தப்பட்டது. 7 ஆண்டுகள் விசாரணைக்கு பிறகு இக்கமிஷன் வெளியிட்ட அறிக்கையை தொடர்ந்து இங்கிலாந்தில் கட்டாயத் தடுப்பூசி சட்டம் நீக்கப்பட்டது.

1870 - 71களில் அம்மை நோய் ஜெர்மனியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சுமார் 10 லட்சம் பேருக்கு அம்மை நோய் தோன்றியது. இவர்களில் ஒரு லட்சத்து இருபதாயிரம் பேர் மரணமடைந்தனர். இறந்தவர்களில் நூற்றுக்கு 96 பேர் அம்மை நோய் தடுப்பூசியை குத்திக் கொண்டவர்கள்.

அதுமட்டுமல்ல, அம்மைத் தடுப்பூசி குத்திக் கொண்ட சிறுமிகள், வளர்ந்து தாயானதும் அவர்களுக்கு தாய்ப்பால் சுரக்கவில்லை என்பதும் கண்டறியப்பட்டது.

இந்த உண்மை வெளிப்பட்டதும் 1880ம் ஆண்டு உலக தடுப்பூசி எதிர்ப்புச் சங்கம் (International Anti-Vaccination League) உருவாக்கப்பட்டது. அந்த ஆண்டின் இறுதியில் பாரீசில் நடைபெற்ற முதல் மாநாட்டில் பல நாடுகளில் இருந்தும் பிரதிநிதிகள் கலந்துகொண்டார்கள். தடுப்பூசிகளை எதிர்க்கும், முறைப்படுத்தக் கோரும் 10 தீர்மானங்கள் அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. ஆனால்... அது நடைமுறைக்கு வர பன்னாட்டு நிறுவனங்கள் அனுமதிக்கவில்லை...

இந்த புள்ளிவிபரத்தை பாருங்கள். 1980களில் அமெரிக்காவில் குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 10. அதுவே 2008ல் 36 ஆக உயர்ந்தது. அத்துடன் 1983ல் மூளை வளர்ச்சி குறைவுள்ள அமெரிக்க குழந்தைகள் பத்தாயிரத்தில் ஒருவர்தான். ஆனால், 2008ல் அமெரிக்க குழந்தைகளின் மூளை வளர்ச்சி குறைவு விகிதம் நூற்றைம்பதில் ஒருவராக மாறியிருந்தது. அதாவது 3000 மடங்கு அதிகரித்திருந்தது. இதற்கு காரணம் தடுப்பூசிகள்தான். மூன்றாம் உலக நாடுகள் அமெரிக்கா செல்லும் பாதையைத்தான் பின்பற்றுகின்றன என்பதால் ஆசிய, ஆப்ரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஏற்பட்டுள்ள புதிய புதிய நோய் பாதிப்புக்குகளுக்கு காரணம் தடுப்பூசிகள்தான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

மஞ்சள் காமாலைக்காக விளம்பரப்படுத்தப்பட்ட தடுப்பூசியின் கதையைக் கேட்டால் வயிறு எரியும். ஹெர்படைட்டிஸ் ஏ, ஹெர்படைட்டிஸ் பி என மஞ்சள் காமாலையில் இருவகை உண்டு. இதில் ஹெர்படைட்டிஸ் பி ஆட்கொல்லி நோய். ஆனால், தொற்று நோயல்ல. அதேபோல் பரவலாக வரக் கூடியதும் அல்ல. அபூர்வமாகவே மனிதர்களை தாக்கும் இந்த ஹெர்படைட்டிஸ் பி-க்கான தடுப்பூசி வீரியமிக்கது. இதை ஹெர்படைட்டிஸ் ஏ தாக்கியவர்களுக்கு போடக் கூடாது.

உண்மை இப்படியிருக்க, 1990களில் பூதாகரமாக மஞ்சள் காமாலைத் தடுப்பூசி குறித்து (ஹெர்படைட்டிஸ் ஏ) பிரசாரம் செய்யப்பட்டது. இது ஏதோ ஆட்கொல்லி நோய் போலவும், அந்நோய் வந்தவர்கள் எளிதில் மரணமடைவார்கள் என்பது போலவும் விளம்பரம் செய்யப்பட்டது. இந்த ஏகாதிபத்திய வெறிக்கு இந்தியா போன்ற தெற்காசிய நாடுகளும் பலியாகின. மஞ்சள் காமாலைக்கு மருந்துகள் எதுவும் இல்லாமல் உணவுமுறையை ஒழுங்குபடுத்துவதன் மூலமே குணமாக்கலாம் என்ற பழம்பெரும் உண்மை மறைக்கப்பட்டது.

இதன்விளைவாக 1990களில் அமெரிக்காவில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் மஞ்சள் காமாலை தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும் என்ற சட்டம் நடைமுறைக்கு வந்தது. ஆனால், 1997ல் நடத்தப்பட்ட அமெரிக்க அரசின் ஆய்வில் மஞ்சள் காமாலை தடுப்பூசியும், அம்மைத் தடுப்பூசி போன்றே 13 விதமான புதிய நோய்களை ஏற்படுத்தும் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. வலிப்பு, ஜன்னி, கண்பார்வை பாதிப்பு, மூளைக் காய்ச்சல் போன்றவை இதில் அடங்கும். உடனே அமெரிக்க அரசு கட்டாய தடுப்பூசி சட்டத்தை அவசரமாக நீக்கியது.

இதனால் ஏராளமான தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்து வைத்திருந்த அமெரிக்க மருந்துக் கம்பெனிகள் அதிர்ந்தன. இந்த மருந்தை என்ன செய்வது? அவர்களின் துயர் தீர்க்க முன்வந்தார் பில்கேட்ஸ். தனது தொண்டு நிறுவனத்தின் மூலம் ஆந்திர மாநிலத்தில் 4.5 லட்சம் குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை தடுப்பூசிகளை இலவசமாக போட்டார். இந்த தடுப்பூசி அமெரிக்க நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்பட்டு, அமெரிக்க அரசால் 1997ல் தடைசெய்யப்பட்டவை...

தடுப்பூசிகளை ஆதரிப்பவர்கள் என்ன சொல்கிறார்கள்?

'முன்பெல்லாம் கொள்ளை நோய்கள் மக்களை கூட்டம் கூட்டமாக தாக்கியதே... தடுப்பூசிகள் வந்ததற்கு பின்னால்தானே கொள்ளை நோய்கள் கட்டுக்குள் வந்தன?' பொது புத்தியில் இப்படித்தான் பதிய வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், உண்மை இதுமட்டுமே அல்ல. பல தீவிரமான கொள்ளை நோய்களை தடுப்பூசிகள் தடுத்து நிறுத்தியது எவ்வளவு உண்மையோ... அவ்வளவு உண்மை தடுப்பூசி என்னும் பெயரில் பன்னாட்டு நிறுவனங்கள் நடத்தும் வணிகமும், இதனையடுத்து தோன்றியுள்ள புதுப்புது நோய்களும்.

2009ம் ஆண்டு சீனாவிலிருந்து உலகம் முழுக்க சார்ஸ் (பறவைக்காய்ச்சல்) பரவுவதாக பிரசாரம் செய்தார்கள். இந்த சளிக்காய்ச்சலை கட்டுப்படுத்தவோ, பரவாமல் தடுக்கவோ எந்த மருந்தும் கண்டுபிடிப்பதற்கு முன்பே அக்காய்ச்சல் படிப்படியாக குறைந்தது. இதேநிலைதான் இந்தியாவில் ஏற்பட்ட சிக்குன்குனியா காய்ச்சலுக்கும் ஏற்பட்டது. பன்றிக்காய்ச்சலையே எடுத்துக் கொள்வோம். ஏதோ கொள்ளை நோய் போல உலகம் முழுவதும் பேசப்பட்ட இந்நோய்க்கான தடுப்பு மருந்து தாமிஃப்ளூ விற்பனைக்கு வரும் முன்பே இந்நோய் குறைந்துவிட்டது.

எந்தவொரு நோயானாலும் மக்களின் உடல் நிலை மற்றும் சுற்றுப்புற சமூக காரணிகளை வைத்து தானாகவே ஏற்படும். குறிப்பிட்ட இடைவெளியில் தானாகவே மறையும். இந்த அறிவியல் உண்மை மறைக்கப்பட்டு, ஆனால், இதன் சாராம்சத்தை - அதாவது தானாகவே மறையும் தன்மை - மட்டும் எடுத்துக் கொண்டு ஆளும் வர்க்கங்களும், பன்னாட்டு நிறுவனங்களும் ஏதோ தங்களால்தான் - தாங்கள் அறிமுகப்படுத்திய தடுப்பூசியால்தான் - நோய்களை கட்டுப்படுத்த முயன்றது போல் பிரசாரம் செய்கின்றன.

சில பழைய பக்கங்களை பார்ப்போம். 1950களில் போலியோ நோயின் தாக்கம் உலகெங்கும் 40 மில்லியனாக இருந்தது. அப்போது போலியோவிற்கான எந்த தடுப்பு மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. 1952ல் 19 மில்லியனாகவும், 1954ல் 8 மில்லியனாகவும் தன்னால் இது குறைந்த பிறகு 1956ல் போலியோ தடுப்பு மருந்து கண்டறியப்பட்டது. இப்போது என்ன சொல்கிறார்கள்? இந்த தடுப்பு மருந்தால்தான் போலியோ கட்டுக்குள் இருப்பதாக...

தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத டைபாய்டு காய்ச்சல் 1910ல் 500 மில்லியனுக்கு மேல் உலகெங்கும் பாதிப்பு ஏற்படுத்தியது. தடுப்பூசி பயன்படுத்தாத நிலையில் 1920ல் அதுவே 200 மில்லியனாகவும், 1930ல் 100 மில்லியனாகவும் குறைந்துவிட்டது.

இப்படி இயற்கையாகக் குறைந்த பல நோய்களைத் தங்கள் வரைபடத்தில் ஏற்றி வருமானமாக மாற்றும் தந்திரத்தைத்தான் தடுப்பூசி தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் செய்கின்றன.

இப்போது தடுப்பூசி மருந்துகள் குறித்த ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதற்கு பதிலாக -

இந்த மருந்துகளை தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் என்ன சொல்கின்றன என்று பார்ப்போம். அதாவது 'புகைப்பிடிப்பது உடல் நலத்துக்கு கேடு...' என்று அச்சிடுகிறார்கள் இல்லையா? அதேபோல் தடுப்பூசி மருந்துடனும் சில எச்சரிக்கைகளை பன்னாட்டு நிறுவனங்கள் அச்சிடுகின்றன. அவை என்ன தெரியுமா?

1. அதிகப்படியான காய்ச்சல் (105 டிகிரி அல்லது அதற்கு மேல்)

2. மந்தமாக இருத்தல்; நீடித்த அசதி

3. மூளை வளர்ச்சி குறைபாடு; மூளை பாதிப்பு

4. எப்போதாவது வலிப்பு; மயக்கம்

5. கண் நரம்புக் கோளாறுகள்; நரம்பு தொடர்பான நிரந்தக் கோளாறுகள்

... ஆகியவை தடுப்பூசிகள் போட்டுக் கொண்டால் ஏற்படலாம் என எச்சரிப்பது அந்த தடுப்பூசி தயாரித்த நிறுவனங்கள்தான். ஆனால், எந்த மருத்துவரும் இதைக் குறித்து நோயாளிகளிடம் சொல்வதில்லை. அதுமட்டுமல்ல, உச்சபட்ச விளைவாக SIDS (Sudden Infant Death Syndrom) ஏற்படுத்துவதாக தடுப்பூசியை தயாரிக்கும் நிறுவனங்கள் சொல்கின்றன. இதன் அர்த்தம் என்ன தெரியுமா? குழந்தை திடீரென இறந்து போகும்...

ஆனால், இந்த உண்மையை - அதாவது தடுப்பூசியை தயாரித்த நிறுவனம் சொல்லும் எச்சரிக்கையை - எந்த மருத்துவரும் நோயாளிகளிடம் சொல்வதில்லை. பதிலாக சிரஞ்சியில் ஏற்பட்ட மருந்தையே கண்ணுக்கு காட்டுகிறார்கள்.

தடூப்பூசியில் கலக்கப்படும் ரசாயனங்கள்:

வெவ்வேறு தடுப்பூசிகளில் கலக்கப்படும் ரசாயங்களும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் தெரிந்து கொள்வோம்.

1. அம்மோனியம் சல்பேட் - வயிறு குடல், கல்லீரல் மற்றும் நரம்பு மண்டலத்தில் விஷம் பரவும்.

2. பீட்டா பிராபியோலாக்டோன் - கல்லீரல், வயிற்று புற்றுநோய்களை ஏற்படுத்தும்.

3. லாட்டக்ஸ் ரப்பர் - திடீர் அதிர்ச்சி மற்றும் இறப்பு.

4. எம்.எஸ்.ஜி. - பிறவிக் கோளாறு மற்றும் ஒவ்வாமை.

5. அலுமினியம் - அலிமியர்ஸ் நோய், டிமெண்ட்சியா, வலிப்பு, கொமா.

6. ஃபார்மால்டிஹைட் - மூளை மற்றும் குடல் புற்று நோய்.

7. பாலிசோர்பேட் 60 - நிரூபிக்கப்பட்ட புற்றுநோய் காரணி.

8. டிரைபுடைல் பாஸ்பேட் - சிறுநீரக மற்றும் நரம்பு மண்டல பாதிப்புகள்.

9. குளுதரால்டிஹைட் - பிறவி குறைபாடுகள்.

10. பாதரசம் - உலகிலேயே கொடிய விஷமாக கருதப்படுகிறது

11. பினால் (கார்பாலிக் அமிலம்) - செல்களை பாதிக்கும் விஷம்.

12. நியோமைசின் சல்பேட் - சத்துகள் உறிஞ்சப்படுவதில் தடையை ஏற்படுத்தும்... (அ.உமர்பாரூக் மற்றும் இரா.ஞானமூர்த்தி எழுதிய 'தடுப்பூசி: வெளிப்படும் உண்மைகள்' நூலிலிருந்து)

தடுப்பூசிகளின் விபரீதங்கள்:

டாக்டர் வில்லியம் ட்ரெப்பிங், 2000ம் ஆண்டில் Good - Bye Germ Theory என்ற நூலை வெளியிட்டார். அமெரிக்காவில் கட்டாய தடுப்பூசிச் சட்டம் அமலில் இருந்தபோது வெளிவந்த நூல் இது. இதுவரை லட்சக்கணக்கான பிரதிகள் விற்பனையாகியுள்ள இந்நூலிலிருந்து சில குறிப்புகள்:

1. அமெரிக்கக் குழந்தைகளுக்கு அரிதாக ஏற்படும் மூளை வளர்ச்சிக் குறைபாடு (Autism) தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்த பிறகு 3000 மடங்கு அதிகரித்துள்ளது.

2. அமெரிக்கக் குழந்தைகளில் வாரத்துக்கு 3 பேர் தடுப்பூசியினால் மரணமடைகிறார்கள் என்று பெடரல் கவர்மெண்ட் அறிக்கை கூறுகிறது.

3. 1975களிலிருந்து ஐரோப்பிய நாடுகளிலும், ஜப்பானிலும் டிபிடி தடுப்பூசி அதன் அதிகப்படியான நச்சுத்தன்மை காரணமாகத் தடை செய்யப்பட்டுள்ளது. கொடிய நஞ்சுள்ள இந்த ஊசி, அமெரிக்காவிலும், இந்தியாவிலும் இன்றும் பயன்படுத்தப்படுகிறது.

4. சாதாரண நிலையில் கக்குவான் இருமலால் இறப்பவர்கள் ஆண்டுக்கு 10 பேர்தான். ஆனால், கக்குவான் இருமலுக்கான தடுப்பூசிக்கு பிறகு ஆண்டுக்கு 950 பேர் கக்குவான் இருமலால் இறக்கிறார்கள். இந்த கக்குவான் இருமல் தடுப்பூசியை மருந்துக் கம்பெனிகள் தங்கள் ஆய்வுக் கூடங்களில் எதற்கு பயன்படுத்துகிறார்கள் தெரியுமா? பரிசோதனை விலங்குகளுக்கு மூளைக் கோளாறையும், மூளைத் திசு வீக்கத்தையும் ஏற்படுத்துவதற்காக.

5. 95% நோய்வாய்ப்பட்டவர்கள் அதே நோய் வராமல் இருப்பதற்காக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள்தான்.

6. 'கிருமிகளால்தான் நோய் பரவுகிறது' என்று கூறும் கிருமித் தத்துவம், எந்தவொரு அறிவியல் பூர்வமான ஆதாரத்தை கொண்டும் நிரூபிக்கப்படவில்லை. கிருமித் தத்துவத்தை வெளியிட்டவர் லூயி பாஸ்டர். இவருடைய பெரும்பாலான கண்டுபிடிப்புகள் சொந்த முயற்சியால் ஆனதல்ல. டாக்டர் பீச்சாம்பின் கண்டுபிடிப்புகளை தழுவியவை. கிருமிகளால் நோய் ஏற்படும் என்ற கருத்தை பீச்சாம்ப் எதிர்த்தார். ஆய்வுகள் மூலம் நிரூபிக்கவும் செய்தார். தடுப்பூசிக்கான பாஸ்டரின் முந்தைய கண்டுபிடிப்புகள் அனைத்தும் பேரழிவிலேயே முடிந்தன.

7. பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை ஆகியவை ஒரே உயிரிடமிருந்து வந்தவை. அவை அனைத்து உயிர்களுக்கும் நன்மை செய்பவை என்பதே நுண்ணுயிர்கள் குறித்த ஆரம்பக்கால ஆய்வு முடிவுகள்.

8. உலகில் பல அரசாங்கங்களால் பின்பற்றப்படும் கட்டாயத் தடுப்பூசிச் சட்டங்கள் அனைத்தும் அந்தந்த நாட்டு அரசியல் சாசனத்துக்கும், இறையான்மைக்கும் எதிரானவை. அமெரிக்காவின் சுகாதார நிலையங்கள் அனைத்தும் குழந்தைகளின் உயிரை பணயம் வைத்து தடுப்பூசித் திட்டங்கள் மூலம் அரசிடமிருந்து பணம் பறிக்கின்றன.

9. அமெரிக்க மத்திய அரசு எஃப்டிஏ அறிக்கையின் படி, 90% டாக்டர்கள் தடுப்பூசி தொடர்பான மோசமான விளைவுகளை அறிவிப்பதில்லை.

10. உலகில் எந்த நாட்டு மக்களானாலும் சரி, நோய்வாய்ப்பட்டவர்களில் பெரும்பாலோர் தடுப்பூசி போடப்பட்டவர்களே. தடுப்பூசி போடாதவர்கள் மிக ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்பதை ஆய்வுரீதியாக சுலபமாக நிரூபிக்க முடியும்.

11. மூளைத்திசு வீங்கி சேதமடையும் நோய்தான் தடுப்பூசியின் விளைவுகளில் மிக முக்கியமானதாக தடுப்பூசி பற்றிய பெரும்பாலான ஆய்வுகள் கூறுகின்றன.

12. நான்கு கிலோ எடையுள்ள ஒரு குழந்தைக்கு ஒரு நாளில் ஒரு தடுப்பூசி போடுவது என்பது 40 கிலோ எடையுள்ள மனிதனுக்கு 40 தடுப்பூசிகளை போடுவதற்கு சமம்.

13. உலக மருத்துவ வரலாற்றிலேயே அதிகம் தடுப்பூசி போடப்பட்டவர்களும், அதிக நோய் பாதிப்பு உள்ளவர்களும் அமெரிக்கர்கள்தான். சரிபாதி அமெரிக்கர்கள் ஏதாவதொரு நாள்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டவர்கள். ஐந்தில் ஒரு பங்கு அமெரிக்கர்கள் நீடித்த இரண்டு நோய்களால் அல்லது அதற்கு மேலும் பாதிக்கப்பட்டவர்கள். 70% அமெரிக்க இறப்புக்கு நீடித்த நோய்களே காரணம்....

இப்போது சொல்லுங்கள்... மனித உடலில் இயற்கையாகவே இருக்கும் எதிர்ப்பு சக்தியை மேலும் மேலும் வளர்க்கும் ஆரோக்கியமான உணவை அனைத்து மக்களுக்கும் வழங்காமல் -

சுற்றுப்புற சீர்கேட்டை களையாமல் -

ஏகாதிபத்தியங்களுக்கு கூஜா தூக்கியபடி வலம் வருகிறதே ஆளும் வர்க்கம்...

இவர்களால்தான் தடுப்பூசி வணிகம் கொடி கட்டிப் பறக்கிறது. கொள்ளை லாபமும் பன்னாட்டு நிறுவனங்கள் அடைகின்றன. மக்களும் கொத்து கொத்தாக பலவித நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள்.

இதை இனியும் அனுமதிக்கத்தான் வேண்டுமா?

http://naayakan.blogspot.com/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.