Jump to content

உயர்கல்விக்கான புலமைப்பரிசில்கள்.


Recommended Posts

உயர்கல்வி கற்பதற்கு பல்வேறு புலமைப்பரிசில்கள் பல நாடுகளால் வழங்கப்படுகிறது. புலம்பெயர்நாடுகளில் வாழும் தமிழ் மக்களுக்கு இவை பயன் தராவிட்டாலும் ஈழத்தில் உள்ள உங்கள் உறவுகள் பயன் பெறமுடியும் எனும் நம்பிக்கையில் எனக்கு தெரிந்த புலமைபரிசில்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

இவற்றில் பெரும்பாலனவை முதுவிஞ்ஞானமானி |(MSc )பட்டத்துக்கானவை. எனவே இலங்கையில் இளமானி (BSc, BBA, BCom, BA)பட்டத்தை பெற்றவர்களே விண்ணப்பிக்கமுடியும்.

இப்பகுதிக்குள் பொதுநலவாயபுலமைபரிசில், ஜப்பான் நாட்டின் புலமைபரிசில் ,சார்க் புலமைபரிசில் பற்றிய விபரங்களை இணைக்கவில்லை. அவை இலங்கையில் அரசபணியில் இருப்பவர்கள் மட்டும் விண்ணப்பிக்ககூடியவை. கீழே சொல்லபடுபவை அங்கு தற்கலிக பணி அனுபவமும், இளநிலை பட்டத்தில் நல்ல பெறுபேறையும் பெற்றவர்கள் விண்ணப்பிக்கமுடியும்.

1.தாய்லாந்து

ஆசிய தொழில்நுட்பநிறுவன புலமைபரிசில் (Asian Institute of Technology)

முதுவிஞ்ஞானமானி பட்டத்துக்கனது.

www.ait.ac.th

இணைய தளத்தில் புலமைபரிசிலுக்கன பாடங்களையும் அவற்றிற்கான அடிப்படை தகுதிகளையும் பார்க்கமுடியும்.

2.நோர்வே

நோராட் புலமைபரிசில்

http://siu.no/vev.nsf/o/norad

3. சுவீடன்

லுண்ட் பல்கலைகழக லுண்ட் தொழில்நுட்பநிறுவகத்தில் (Lund Institute of Technology, Lund University)

http://www.lth.se/english/master/default.html

இந்த பக்கத்தில் மேலும் பல பாடநெறிகள் பற்றிய விபரங்களை பெறமுடியும்.

http://www.sweden.se/templates/cs/SISFront...ge____4908.aspx

4.டென்மார்க்

இரண்டு கற்கைநெறிகள் The Royal Veterinary and Agricultural University இங்கு வழங்கபடுகிறன.

http://www.mli.kvl.dk/

5.பெல்ஜியம்

1. இங்கு 15க்கு மேற்பட்ட கற்கைநெறிகள் பல்வேறு பல்கலைகழகங்களினாலும் நடாத்தப்படுகிறன. அவற்றிற்கான புலமைபரிசிலை ஒரு நிறுவனம் வழங்குகிறது.

www.vlir.be

மேலுள்ள இணையதளத்தில் பாடநெறிகள் பற்றிய விபரங்களையும் விண்ணப்பபடிவங்களையும் பெறமுடியும்.

International Training Programme

Optimisation in Diagnostic Radiology EHSAL-K.U.Leuven-VUB

Scientific and Technological Information Management in Universities and Libraries - an Active Training Environment 5 (STIMULATE 5) VUB

Webmaster and interactive Visualisation for trainers and Students UGent

Engendering Development Policy, Projects and Organisations UA

Poverty Reduction Strategy Papers and Civic Society Participation UA

Environmental Impact Assessment and Information and Communication Technology Application (EIA-ICT) VUB

organised by the VLIR

Master of Science in Ecological Marine Management (ECOMAMA)

Master of Science in Molecular Biology

Master of Science in Physical Land Resources

Master of Science in Water Resources Engineering

Master of Science in Food Technology

Master of Architecture in Human Settlements

Master of Science in Biostatistics

Complementary Studies in Food Science and Nutrition

Master of Science in Aquaculture

Master of Science in Environmental Sanitation

Master of Science in Nematology

Master of Science in Human Ecology

organised by the Universiteit Antwerpen (UA) under the VLIR-agreement

Master en Evaluation et Gestion du Dveloppement UA

Master en Globalisation et Dveloppement Economique UA

Master en Gouvernance et Dveloppement

2. கிராம அபிவிருத்தி முதுவிஞ்ஞானமாணி

http://www.agri-econ.ugent.be/IMRD/

6.ஜேர்மனி

கீழுள்ள இணைய தளத்தில் கற்கைநெறிகளையும் விபரங்களையும் பெறமுடியும்.

http://www.daad.de/portrait/en/

7.ஐரொப்பிய நாடுகளில் கற்பதற்கான ஐரோப்பிய ஒன்றிய புலமைபரிசில்

http://europa.eu.int/comm/education/progra...s/index_en.html

மேலுள்ளவை எனக்கு தெரிந்தவை மட்டுமே. இவற்றைவிட நீங்கள் மேலும் அறிந்திருந்தால் அவற்றையும் இணையுங்கள். பலரும் பயன்பெறமுடியும்.

இப்பகுதியில் இங்கிலாந்து, கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாட்டு விபரங்களை இணைக்கவில்லை. அவை பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும்.

Link to comment
Share on other sites

நன்றி குளம் அறிவுபுூர்வமான விடயம். உங்கள் தகவல்களுக்கு மனப்புூர்வமான வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

நல்ல உருப்படியான பயனளிக்கும் தகவல்கள், தொடர்ந்து இப்படியான தகவல்களை வளங்க களம் வாருங்கள் குளம்.

Link to comment
Share on other sites

நல்ல தொருவிடயத்தை ஆரம்பித்ததுக்கு நன்றி குளம்.

இளமானிப்பட்டத்திற்கான படிப்பிற்கு சில மட்டுப்படுத்தப்பட்ட சந்தர்ப்பங்கள் உண்டு.

http://scholarships.leeds.ac.uk/Default.aspx

http://www.york.ac.uk/admin/intnat/prospec...ts/funding2.htm

http://www.cam.ac.uk/admissions/undergradu...onal/costs.html

http://hullinternationaloffice.org.uk/inde...downloadID=2048

http://hullinternationaloffice.org.uk/inde...downloadID=2051

முதுமானிப்பட்டத்துக்கு Brunel, Surrey, Queens University of Belfast போன்றவற்றிலும் கிடைப்பதாக அறிந்துள்ளேன். மேலதிக தகவல் கிடைத்தவர்கள் இணையுங்கள்.

Link to comment
Share on other sites

ஒருவிடையத்தை மேலெ குறிப்பிட மறந்துவிட்டேன்.

மேலே சொன்ன அனைத்து பாடங்களும் ஆங்கிலமொழியில் நடாத்தபடுகிறன.

Link to comment
Share on other sites

நன்றி குளக்காட்டான்...! அப்படியே பிஎச்டிக்கும் இருந்தாப் போடுங்களன்...!

Link to comment
Share on other sites

குருவிகள், பிஎச்டிக்கு என்று நேரடியாக எடுப்பது கொஞ்சம் கடினமாக இருக்கும் காரணம் பல்கலைக்கழகத்தின் பொருளாதார பொறுப்பு (funding commitment) அதற்கு அதிகம்.

ஆரம்பித்தில் ஆராச்சி சார்ந்த முதுமானிபட்டத்துக்கு (MSc by research) உங்களை ஏற்று பின்னர் உங்கள் திறமையை வெளிக்காட்டிய பின்னர் கலாநிதி தகமை நேக்கிய ஆராச்சிக்கு ஏற்றுக்கொள்வது வழமையாகி வருகிறது.

அந்தவளியில் முயற்சித்துப்பாருங்கள், தேடிப்பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.educationuk.org/scholarships/

http://www.britishcouncil.org/learning-fun...te-hompage-link

இங்கிலாந்து தொடர்பான தகவல்களை இங்கு பெறலாம் என்று நினைக்கிறேன். :P

Link to comment
Share on other sites

குருவிகள், பிஎச்டிக்கு என்று நேரடியாக எடுப்பது கொஞ்சம் கடினமாக இருக்கும் காரணம் பல்கலைக்கழகத்தின் பொருளாதார பொறுப்பு (funding commitment) அதற்கு அதிகம்.

ஆரம்பித்தில் ஆராச்சி சார்ந்த முதுமானிபட்டத்துக்கு (MSc by research) உங்களை ஏற்று பின்னர் உங்கள் திறமையை வெளிக்காட்டிய பின்னர் கலாநிதி தகமை நேக்கிய ஆராச்சிக்கு ஏற்றுக்கொள்வது வழமையாகி வருகிறது.

அந்தவளியில் முயற்சித்துப்பாருங்கள், தேடிப்பாருங்கள்.

தகவலுக்கு நன்று குறுக்ஸ்..!

Link to comment
Share on other sites

நன்றி குளக்காட்டான்...! அப்படியே பிஎச்டிக்கும் இருந்தாப் போடுங்களன்...!

www.ait.ac.th

www.vlir.be

http://www.daad.de/portrait/en/

மேலுள்ள இணையப்பக்கங்களில் கலாநிதி பட்டத்துக்கான புலமைபரிசில் விபரங்களும் அடங்கியுள்ளன. ஈழத்தை பொறுத்தவரை நேரடியாக கலாநிதிபட்டப்படிப்பிற்கு புலமைபரிசில் பெறுவது சிரமமாக இருக்கலாம். அத்தோடு மேற்சொன்ன இணையப்பக்கங்களை பார்த்தீர்களானால் கலாநிதி பட்டபடிப்பிற்கு முதுமாணி பட்டம் முன்நிபந்தனையாக உள்ளதை காணமுடியும். ஆகையால் தான் முதுமாணிபட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தேன்.

Link to comment
Share on other sites

தகவலுக்கு நன்றிகள்..!

கலாநிதிப் பட்டத்துக்கு எப்போதும் முதுமாணிப்பட்டம் அவசியம் என்றில்லை..! உங்கள் இளமாணிப்பட்டத்தின் தன்மையைப் பொறுத்து அதுமாறுபடும்..! குறிப்பா இலங்கையில் ஸ்பெஷல் டிகிரி வைத்திருப்பவர்கள் நேரடியாக கலாநிதிப்பட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்..! அமெரிக்கா என்றால் ஜி ஆர் ஈ ( www.gre.org/ ) எடுக்க வேண்டும் மற்றும் படி உங்கள் இளமாணிப்பட்டத்துக்குரிய ஆய்வின் அடிப்படையில் நீங்கள் நேரடியான விண்ணப்பிக்கலாம்..! சில நாடுகளின் அது கட்டாயமாக இருக்கலாம்...! இப்போ இங்கிலாந்தில் கலாநிதிப்பட்டத்துக்காக நுழைவு மார்க்கங்கள் இலகுபடுத்தப்பட்டுள்ளன...! முதுமாணி இன்றி கலாநிதிப்பட்டம் நோக்கி படிக்க வகை செய்யப்பட்டுள்ளன..! :P :idea:

Link to comment
Share on other sites

  • 1 month later...

லுண்ட் பல்கலைகழகத்தில் மூன்று பாடநெறிகளுக்கான புலமை பரிசில்களுக்கு விண்ணப்பம் கோரியுள்ளார்கள். உங்கள் யாருக்காவது தெரிந்தவர்கள் இருந்தால் இதைப்பற்றி அறியதந்து அவர்களை விண்ணப்பிக்க சொல்லுங்கள்.

Doctoral student in Solid State Physics,

For further information please contact: Dr. Jonas Tegenfeldt, E-mail: jonas.tegenfeldt@ftf.lth.se, Phone: +46-46-222 8063 or Prof. Fredrik Höök, E-mail: fredrik.hook@ftf.lth.se , Phone: +46-46-222 1494

http://www.lth.se/lthjobb/english/Annonser.aspx

Doctoral student in Immunotechnology

For further information please contact: Senior Lecturer Christer Wingren, phone: 046-222 43 23 or e-mail: Christer.Wingren@immun.lth.se

Doctoral student in Polymer Technology

For further information, please contact: Professor Frans Maurer, phone: 046-222 91 49, or e-mail: Frans.Maurer@polymer.lth.se

Link to comment
Share on other sites

  • 5 weeks later...

Erasmus Mundus Masters Course - SUTROFOR - Sustainable Tropical Forestry

www.sutrofor.net

Students applying for a scholarship must submit their application no later than 1 February 2006. EU/EEA-EFTA students must apply no later than 1 June 2006

மேலுள்ள இணைப்பில் சென்று விருபுபவர்கள்/தகுதியானவர்கள் விண்ணப்பிக்கமுடியும்.

விண்ணப்ப முடிவு திகதி பெப்பிரவரி-1

உங்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது தாயகத்தில் இருந்தாலும் இதைப்பற்றி அவர்களுக்கு அறிய தரலாம்.

Link to comment
Share on other sites

குளக்காட்டான், சில வாரங்களுக்கு முன்னர் தமிழ் ஒளி இணையத்தில் எமது கடல் வளம் பற்றிய விவரணம் ஒன்று பார்க்க கிடைத்தது. அந்த நிகழ்ச்சியை தற்செயலாக பார்க்க கிடைத்த படியால் இடையில் இருந்து தான் பார்த்தேன். அதனால் நிகழ்ச்சியின் பெயர் தெரியவில்லை.

அதில் ஒரு பாதிரியார் மிகவும் தெளிவாக எமது கடல வளங்கள் சுறண்டப்படுவது பற்றி கூறினார். மீனவர்கள் கவனிக்காது கர்பிணி மீன்கள் குஞ்சு மீன்கள் போன்றவற்றையும் பிடித்து விப்பதால் உள்ள தாக்கம், மற்றது உலக சந்தையில் எமது பிரதேசங்களில் கிடைக்கு கடல் உணவு வகைகளின் மதிப்பும் எம்மவர் விற்கும் விலைக்கும் உள்ள இடவெளிகள் பற்றி மிகவும் அழகாக விளக்கி இருந்தார். அது ஒரு தொடராக வந்த நிகழ்ச்சி என நினைக்கிறேன்.

அவர் அந்த நிகழ்ச்சியில் கூறிய ஒரு முக்கிய விடையம் என்ன வென்றால் எமது சமூகத்தில் கடல்வள பாதுகாப்பு, திட்டமிடல், பக்கவிளைவுகள் குறைந்த பிடிக்கும் முறைகள், சந்தைப்படுத்தல் போன்றவற்றை ஒருவரும் கற்கை நெறியாக கருதி கவனம் செலுத்துவதில்லை என்பது. அத்தோடு எமது பிரதேசங்களில் உள்ள உயர் கல்விநிறுவனங்களும் இவை சம்பந்தமாக ஒன்றும் முயற்சிக்கவில்லை. ஆனால் நோர்வே போன்ற நாடுகளில் இவை சம்பந்தமாக உயர்கல்வி நிறுவனங்களில் ஆய்வு செய்யும் நிலை வரை கவனம் எடுக்கிறார்கள். இந்த துறை சார்ந்த விடையங்களில் புலமைப்பரிசில் கற்கைநெறிகளை வளங்கும் கல்விநிறுவனங்களும் பற்றி தெரிந்தவற்றையும் எழுதுங்கோ.

Link to comment
Share on other sites

அவர் அந்த நிகழ்ச்சியில் கூறிய ஒரு முக்கிய விடையம் என்ன வென்றால் எமது சமூகத்தில் கடல்வள பாதுகாப்பு, திட்டமிடல், பக்கவிளைவுகள் குறைந்த பிடிக்கும் முறைகள், சந்தைப்படுத்தல் போன்றவற்றை ஒருவரும் கற்கை நெறியாக கருதி கவனம் செலுத்துவதில்லை என்பது. அத்தோடு எமது பிரதேசங்களில் உள்ள உயர் கல்விநிறுவனங்களும் இவை சம்பந்தமாக ஒன்றும் முயற்சிக்கவில்லை. ஆனால் நோர்வே போன்ற நாடுகளில் இவை சம்பந்தமாக உயர்கல்வி நிறுவனங்களில் ஆய்வு செய்யும் நிலை வரை கவனம் எடுக்கிறார்கள். இந்த துறை சார்ந்த விடையங்களில் புலமைப்பரிசில் கற்கைநெறிகளை வளங்கும் கல்விநிறுவனங்களும் பற்றி தெரிந்தவற்றையும் எழுதுங்கோ.

நீங்கள் சொன்ன பாடங்கள் சம்பந்தமான மேலோட்டமான விபரங்கள் ஏற்கனவே கொடுத்திருந்தேன்

ஆசிய தொழில்நுட்பநிறுவன புலமைபரிசில் (Asian Institute of Technology)

முதுவிஞ்ஞானமானி பட்டத்துக்கனது.

www.ait.ac.th

Master of Science in Aquaculture இணைய

தளத்தில் புலமைபரிசிலுக்கன பாடங்களையும் அவற்றிற்கான அடிப்படை தகுதிகளையும் பார்க்கமுடியும்.

2.நோர்வே

நோராட் புலமைபரிசில்

http://siu.no/vev.nsf/o/norad

5.பெல்ஜியம்

www.vlir.be

மேலுள்ள இணையதளத்தில் பாடநெறிகள் பற்றிய விபரங்களையும் விண்ணப்பபடிவங்களையும் பெறமுடியும்.

organised by the VLIR

Master of Science in Ecological Marine Management (ECOMAMA)

Master of Science in Aquaculture

6.ஜேர்மனி

கீழுள்ள இணைய தளத்தில் கற்கைநெறிகளையும் விபரங்களையும் பெறமுடியும்.

http://www.daad.de/portrait/en/

7.ஐரொப்பிய நாடுகளில் கற்பதற்கான ஐரோப்பிய ஒன்றிய புலமைபரிசில்

http://europa.eu.int/comm/education/progra...s/index_en.html

.

மேலே சொன்ன www.vlir.be புலமை பரிசில் முடிவு திகதியும் பெப்பிரவரி 1 என்பது கவனத்துக்குரியது.

ஜேர்மனியின் daad,(http://www.daad.de/portrait/en/ )ஐரொப்பிய ஒன்றியத்தின் Erasmus Mundus(http://europa.eu.int/comm/education/programmes/mundus/index_en.html

)திட்டத்திலும் கடல்வளம் பற்றிய கற்கை நெறிகள் உண்டு. எனக்கு போதிய நேரமின்மையால் அவற்றை தனித்தனியே தேடி இடமுடியவில்லை. ஆர்வமானவர்கள் அங்கு இருக்கும் தேடுபொறியில் அல்லது பாடப்பட்டியலில் அவை பற்றிய விபரங்களை கண்டு கொள்ள முடியும்.

நீங்கள் கேட்ட நோர்வே நோராட் புலமை பரிசிலுடனும் கடல்வளம் சம்பந்தமான பாடங்கள் உண்டு.

1.University of Tromsø

Master in International Fisheries Management

2.University of Bergen

Master of Science in Fisheries Biology and Fisheries Management

http://siu.no/vev.nsf/o/norad

லுண்ட் பலகலைகழகத்தில் உள்ள கற்கை நெறிகளுக்கும் முடிவுதிகதி பெப்பிரவரி 1 என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

http://www.lth.se/english/education/master/

Master of Science in Aquaculture

நேரடியாக கடல்வளம் சம்பந்தமற்றது ஆயினும் எமது நாட்டிற்கு பயன் தரக்கூடியது.

நீர்கொழும்பு, சிலாபம், புத்தளம் பகுதிகளில் பல இறால் பண்ணை அமைத்து அதிக விளைச்சலை பெறுவதோடு மிக நல்ல பெறுமதிக்கு உலகில் பல நாடுகளிற்கும் ஏற்றுமதி செய்கிறார்கள். அவற்றில் சில தமிழர்களாலும் நடாத்தப்படுவதாக அறிய முடிந்தது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.