Jump to content

நம்புதலும் அறிந்து கொள்ளுதலும்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரண்டு வார்த்தைகள் இருக்கின்றன. ஒன்று நம்புதல். இன்னொன்று அறிந்து கொள்ளுதல். அறிவது என்றால் என்ன, நம்புவது என்றால் என்ன என்று பலதடவைகள் நாம் குழப்பமடைகிறோம். நம்புதல் என்றால் அறிவது. அறிதல் என்றால் நம்புவது என மக்கள் எண்ணுகின்றார்கள். நம்புவதிலும் அறிந்து கொள்வதிலும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கின்றது. நம்புவதற்கு பெரிதாக எதுவுமே செய்யத் தேவையில்லை, நம்பவேண்டியதுதான். ஆனால் அறிந்துகொள்வதற்கு பலதடவைகள் எவ்வளவோ செய்ய வேண்டியிருக்கும்.

சுவர்க்கம் இருக்கின்றது, நரகமும் இருக்கின்றது என முழு உலகமும் நம்புகின்றது. ஆனால் அவர்களுக்குத் தெரியாது. அங்கே ஒருவர் சென்று மீண்டும் வந்தால்தான் அறியமுடியும். புகைப்படங்கள் எடுத்துவந்தால் அறியமுடியும். நம்புவதற்கும் அறிந்துகொள்வதற்கும் உள்ள வித்தியாசம் அதுதான். யாரோ ஒருவர் கூறினார் நீங்கள் கேட்டீர்கள். ஆமாம் என்றீர்கள். அது நம்புதல். மற்றையது அறிந்துகொள்ளுதல்.

இன்ரநெற் முன்னர் ஒருபொழுதும் இருக்கவில்லை. இவ்வளவு மதங்கள் இருக்கின்றன. மதங்கள் சம்பந்தப்பட்ட புத்கங்கள் இருக்கின்றன. சாஸ்திரங்கள் இருக்கின்றன இவ்வளவு விடயங்கள் இருந்த பின்னரும் கூட, இன்றும் மனிதன் சில கேள்விகளைக் கேட்கின்றான். அவன் முன்னரும் கேட்டான். இப்பொழுதும் கேட்கின்றான். நான் யார் என்பதுதான் அந்தக் கேள்வி. இரண்டு விதமான மக்கள் இந்த உலகத்தில் இருக்கின்றார்கள். சிலர் இந்தக் கேள்வியை கேட்டிருக்கின்றார்கள். சிலர் இன்னும் கேட்கவில்லை. கேட்காதவர்கள் நிச்சயம் என்றோ ஒருநாள் கேட்பார்கள். ஒருவரும் இந்தக் கேள்வியில் இருந்து தப்ப முடியாது. இந்தக் கேள்விகளுக்கான விடை உங்களுக்கு புத்தகத்திலே கிடைக்காது. எனவே தான் இவ்வளவு புத்தகங்கள் இருந்தும் இன்னும் மக்கள் அந்தக் கேள்வியைக் கேட்கின்றார்கள். நான் யார்? எனது வாழ்வின் இலட்சியம் என்ன? அதிகம் கேள்விகள் அல்ல. நான் யார்? நான் ஏன் இருக்கின்றேன்? இவைகள் எல்லாம் என்ன? என்ற கேள்விகள்தான் உள்ளன. இறந்த பின்னர் எனக்கு என்ன நடைபெறும்? இதையும் மக்கள் அறிய விரும்புகின்றார்கள். என்ன நடைபெறும், நான் எங்கு செல்வேன் என்று அறிய விரும்புகின்றார்கள்.

நீங்கள் எவ்வாறு உயிருடன் இருக்கின்றீர்கள்? அந்த உயிர்ப்பறவை உங்கள் உள்ளே இருக்கின்ற காரணத்தால் உயிருடன் இருக்கின்றீர்கள். அதனை அறிந்து கொள்ளவில்லை என்றால் நீங்கள் ஒன்றையுமே அறிந்து கொள்ளவில்லை. அறிந்து கொள்ளவேண்டும். நான் நம்புவதைப் பற்றிக் கூறவில்லை. நான் நம்புங்கள், நம்புங்கள் என்று சொல்லவில்லை. நான் அறிந்து கொள்ளுங்கள், தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறுகின்;றேன். ஒரு உதாரணம் தருகின்றேன்.

இங்கு எனக்கு அருகிலே, இவ்விடத்திலே, ஒரு பசு நிக்கின்றது என நம்புங்கள். 2,3 நிமிடங்களுக்கு மட்டும் நம்புங்கள். இங்கு ஒரு பசு நிக்கின்றது. நல்ல பசு. அழகான பசு. சாதுவான பசு. காலைக் கட்டாமலே பால் கறக்கக்கூடிய பசு. இவ்வளவு நல்ல பசு, இங்கே நிற்;பதைப் பற்றி நம்புவதில் ஏதாவது பிரச்சினை இருக்கின்றதா? அது சாணம் போடாது. சலம் கழிக்காது. அந்தப் பசு இங்கே நிக்கின்றது என நம்புவதில் எந்தவிதச் சிக்கலும் இல்லை. இங்கே நிற்கின்றதென்று நம்பிக் கொள்ளுங்கள். காலையில் எழுந்து ஒரு கிளாஸ் பால் வேண்டும் என்று கேட்க வரும் பொழுதுதான்; சிக்கல் வரும். இந்தப் பசு எல்லாம் தரும். ஆனால் உண்மையிலே அல்ல. உங்களுக்கு ஒரு கிளாஸ் கற்பனை பால் தேவையென்றால் இந்தப் பசு நிச்சயம் தரும். ஆனால் உண்மையான வெள்ளை நிற நல்ல பால் வேண்டுமென்றால், இந்தப் பசுவால்; தரமுடியாது. இதுதான் நம்புவதற்கும் அறிந்து கொள்வதற்கும் உள்ள வித்தியாசம். தேனீர் கசப்பாக இருக்கும் பொழுது கொஞ்சம் பால் விட்டால் கசப்புத் தன்மை குறைந்து நிறமும் மாறி நன்றாக இருக்கும். உங்களின் தேனீரிலே பால் தேவையென்றால் இந்த கற்பனை பசுவின் பாலை ஊற்றினால் அந்தத் தேனீரின் நிறமும் மாறாது கசப்பும் அப்படியே இருக்கும். இதுதான் நம்புதலுக்கும் அறிந்து கொள்ளுதலுக்கும் உள்ள வித்தியாசம்.

அந்தக் கடவுளை அறிந்து கொள்ளுங்கள் உங்கள் வாழ்வை அறிந்து கொள்ளுங்கள் உங்கள் மூச்சை அறிந்துகொள்ளுங்கள். இந்த உயிர் வாழ்வை அறிந்து கொள்ளுங்கள். புரிந்துகொள்ளுங்கள். வெறுமனே நம்பாதீர்கள். நம்புவதற்கான நேரம் முடிந்துவிட்டது. இப்பொழுது அறிந்துகொள்வதற்கான நேரம் வந்திருக்கின்றது. தோட்டக்காரனிடம் தோட்டம் எப்படி இருக்கின்றதென்று கேட்டால், அவன் கண்ணாலே பார்த்ததைதான் கூறுவான். எங்கேயோ ஒரு இடத்திலே வாசித்ததைப் பற்றிக் கூறமாட்டான். விதை போட்டபடியால் எல்லாம் நல்லாக இருக்கும். நான் செய்ய வேண்டியதைச் செய்து விட்டேன். எல்லாம் கடவுளின் கையிலேதான் இருக்கின்றது என்று சொல்லமாட்டான். கடவுள்தான் எல்லாம் செய்வார் என்று தோட்டக்காரன் சொல்ல மாட்டான். ஏதாவது பறவை தென்பட்டால் கடவுள் பார்த்துக் கொள்வார் என்று சொல்ல மாட்டான். அவன் கெற்றபோலை எடுப்பான்; மரத்தின் மேலே ஏறி அந்தப் பறவையைத் துரத்துவான். தண்ணீர் இல்லையென்றால், மழை வரவில்லை என்றால், வயலுக்கு ஏதோ ஒரு வழியிலே தண்ணீரைக் கொண்டுவர முயற்சிப்பான். அதுதான் அவன் கடவுளில் வைத்திருக்கும் நம்பிக்கை. உங்களுடைய கடவுளின் நம்பிக்கை எவ்வாறு இருக்கின்றது.

நம்புவதற்கும் அறிவதற்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று நீங்கள் அறிந்திருப்பீர்கள் என நான் நம்புகின்றேன். அறிந்து செல்லுங்கள். இந்த வாழ்விலே நம்பியல்ல, அறிந்து நடவுங்கள். அறிந்து சென்றால் உங்களது வாழ்விலே சிக்கல் ஏற்படாது. நம்பிச் சென்றால் பிரச்சினைதான் ஏற்படும். அறிந்து சென்றால் உங்களது வாழ்வில் ஆனந்தம் கிடைக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி அகதி! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் பல்வேறு முறைகளிலும் அறிந்து கொண்ட விடையத்தை ஆராய்ந்து அது உண்மையா பொய்யா என ஏற்றுக் கொள்வதும் நம்பிக்கை என்ற அடிப்படையில்த் தான்.

எவ்வளவை நாம் அறிந்து கொண்டாலும் அவற்றை நாம் நம்பாவிட்டால் அறிந்து கொள்வதில் என்ன பயன்.

நம்பிக்கை என்பது எம் மனதில் இருந்தால் தான் அறிந்து கொள்வதை நாம் ஏற்றுக் கொள்வோம்.

அதாவது நம்பிக்கையுடன் அறிந்து நட. மற்றவனை நீ அறிந்தாலும் அவனை நம்பி நடவாதே. உன்னையே நம்பி நட.

வாத்தியார்

**********

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.