Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

பிரிவு


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

திருமணம் முடித்தவுடன் மனைவி கணவனுக்குச் சில பணிவிடைகளை செய்ய ஆரம்பிப்பார். தேனீர் பரிமாறுதல், குளிக்கும்போது துவாய் எடுத்துக் கொடுத்தல், உணவுபரிமாறுதல் என்று தொடங்கும். பின்னர் கணவன் திருமணத்திற்கு முன்ன தானாகச் செய்துகொண்டிருந்த பல கருமங்களை மனைவியே செய்ய வேண்டி வரும். வயது போகப் போக மனைவிக்கு அப் பணிவிடைகள் கடினமாக இருந்தாலும் பழகி விட்டதால் செய்தே ஆகவேண்டிய நிலைக்கு வந்து விடுவார். கணவனும் மனைவி இன்றி வீட்டில் ஒரு துரும்பைக் கூட அசைக்க முடியாது பழக்கப்பட்டு விடுவார்.

வயதானவர்களைக் கூடப் பார்த்திருக்கிறேன். இருந்த இருப்பில் அந்தக் கண்ணாடியை எடு. பத்திரிகையை எடு. தேத்தண்ணி கொண்டுவா. என்று அதட்டிக் கொண்டிருப்பார்கள்.

இருவரும் பிரியும்போது இருவருக்குமே கடினமாக இருக்கும். கணவன் நான் இல்லாமல் தனியாக எப்படி எல்லாவற்றையும் செய்கிறாரோ என்று மனைவியும், மனைவி இல்லாமல் எதையும் சரியாகச் செய்ய முடியாது கணவனும் தவிப்பார்கள்.

இதைத்தான் அன்பு என்கிறோம். :D

இணையவன் அண்ணா எல்லாம் சொன்னீங்க சரி.. கடைசியில சொன்னீங்க பாருங்க இதுதான் அன்புன்னு.. அது உலக மகா பொய்..!

அன்பு பணிவிடை செய்வதால் தான் வருமா..??! பிள்ளை தாய்க்கு எதுவும் செய்யாத போதும்.. தாய் பிள்ளை மீது காட்டுவது அன்பு. தகப்பனும் அப்படியே. சகோதரங்கள் ஒருவருக்கு ஒருவர் உதவாவிட்டாலும் அன்பு காட்டுவார்கள். அதுதான் அன்பு.

இது ஒரு வகை அடிமைத்தனம். அதில் இருந்து இருவரும் விடுபட முடியா நிலையில்.. அதற்கு இடும் பெயர் அன்பு என்ற போலி அடையாளம் என்றே நான் நினைக்கிறேன்..! :D:lol:

Link to comment
Share on other sites

 • Replies 77
 • Created
 • Last Reply
 • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன் மனைவி திரும்பி வந்தபின் ஒரு மாத இடைவெளியில் திருப்பி எங்கையாவது அனுப்பிவிடுங்கள்.பகிடிக்கு இல்லை உண்மையாகத்தான் சொல்கிறேன்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பொய்யா மெய்யா எதை எழுதுவதென்றே தெரியவில்லை.2 கிழமைகள் ஆகிவிட்டது யாழில் பல நண்பர்களின் புத்திமதியடன் சிற்றிங் ரூமிற்கு காட்வூட்டும் அடித்து பெயின்ரையும் மாத்திவிட்டேன்.தோட்டத்தில் இருக்கும் முந்திரிகை பந்தலுக்கு புது மரமும் போட்டுவிட்டேன்.முடிந்த அளவுக்கு மாற்றங்கள்செய்துகொண்டுதானிருக்கின்றேன்

இருந்தும் என்னால் மனைவியின் பிரிவை ஒரு கணமும் தாங்க முடியவில்லை என்னில் ஏதும் பிழையா அல்லது எனது மனைவி என்னை அப்படி வைத்துவிட்டாரா?

அர்ஜுன் எங்களை வைச்சுக் காமெடி பண்ணவில்லைத் தானே

எனென்டால் முந்திரிகை மரத்துக்குப் பந்தல் போடுவதை விட்டுப் பந்தலுக்கு மரத்தைப் போட்டிருக்கிறிங்கள் :lol:

வாத்தியார்

***********

Link to comment
Share on other sites

யாழில் எழுது பெரும்பான்மையானோர் 20 இல் இருந்து 40 வரை என்றுதான் எனது கணிப்பு.50 தாண்டத்தான் எனது நிலை வரும் என நினைக்கின்றேன்.

அடுத்து முந்திரிகை பந்தல் .முதலில் டெக்கை சுற்றி வைத்தால் நிழலாக இருக்கும் என்று எண்ணினேன் பின்னர் அந்தளவுக்கு வளருமோ தெரிடாது என வேலியுடன் வைத்திவிட்டேன்.3 வருடங்களிலேயே வளர்ந்து தள்ளிவிட்டது.ஒரு செரியும்,ஒரு அப்பிள் மரமும் வைத்தேன்.அப்பிள் இன்னமும் காய்க தொடங்கவில்லை.செரி யூனிலெயே காய்கத்தொடங்கிவிடும்.குருவிகள் ஒன்றயும் விடாது இம்முறை மினுங்க்ல்கள் கொஞ்சம் கட்டிவிட்டேன் குருவி வந்தது குறைவு.நல்ல ருசியாக இருக்கும் வீட்டுத் தோட்டம் என்றபடியால்.

வீடு வாங்கும் போது பல வித மரங்களுடன் தான் வாங்கவேணுமென நினைத்தேன் மனைவியின் விருப்பத்திற்கு புது வீடு வாங்கியதால் எல்லாமே நாங்கள் தான் உருவாக்கியது.

நான் கொஞ்சம் அந்தக் காலத்து ஆள்பாருங்கோ.நேற்றுக்கூட சலசலப்பு இணையத்தில் ஒரு வீடியோவை உங்களயும் பார்க்க பண்ணுவமென்றால் இணக்க தெரியவில்லை.மகனிடம் கேட்டு முந்திரிகை பந்தலை இணத்துவிடுகின்றேன்.

Link to comment
Share on other sites

யாழில் எழுது பெரும்பான்மையானோர் 20 இல் இருந்து 40 வரை என்றுதான் எனது கணிப்பு.50 தாண்டத்தான் எனது நிலை வரும் என நினைக்கின்றேன்.

அடுத்து முந்திரிகை பந்தல் .முதலில் டெக்கை சுற்றி வைத்தால் நிழலாக இருக்கும் என்று எண்ணினேன் பின்னர் அந்தளவுக்கு வளருமோ தெரிடாது என வேலியுடன் வைத்திவிட்டேன்.3 வருடங்களிலேயே வளர்ந்து தள்ளிவிட்டது.ஒரு செரியும்,ஒரு அப்பிள் மரமும் வைத்தேன்.அப்பிள் இன்னமும் காய்க தொடங்கவில்லை.செரி யூனிலெயே காய்கத்தொடங்கிவிடும்.குருவிகள் ஒன்றயும் விடாது இம்முறை மினுங்க்ல்கள் கொஞ்சம் கட்டிவிட்டேன் குருவி வந்தது குறைவு.நல்ல ருசியாக இருக்கும் வீட்டுத் தோட்டம் என்றபடியால்.

வீடு வாங்கும் போது பல வித மரங்களுடன் தான் வாங்கவேணுமென நினைத்தேன் மனைவியின் விருப்பத்திற்கு புது வீடு வாங்கியதால் எல்லாமே நாங்கள் தான் உருவாக்கியது.

நான் கொஞ்சம் அந்தக் காலத்து ஆள்பாருங்கோ.நேற்றுக்கூட சலசலப்பு இணையத்தில் ஒரு வீடியோவை உங்களயும் பார்க்க பண்ணுவமென்றால் இணக்க தெரியவில்லை.மகனிடம் கேட்டு முந்திரிகை பந்தலை இணத்துவிடுகின்றேன்.

இப்படியே மனைவி வந்த பின்னும் செய்தால்(creative) சிறு பிரிவும் பெரிய விடயமாக தெரியாது.

Link to comment
Share on other sites

நன்றி. மகனுக்கு நேரம் கிடைக்கும் பொழுது இணைத்து விடுங்கள். நானும் ஒரு செரியும் ஒரு Asian Pear (ஸ்ரீலங்கா Pears - சிலோன் ஆப்பிள்) நட்டேன். செரி நன்றாக காய்த்தது. Asian Pears காய்கள் இப்பொழுது மரத்தில் பழுக்கத் தொடங்கியுள்ளன. நல்ல சுவையான கனிகள். இந்த வருடம் இதன் கிளைகளில் 3 வேறு வகையான Asaian Pears ஒட்டியுள்ளேன்.

Link to comment
Share on other sites

சிறிய இடைவேளையின் பின் மீண்டும்.

இந்த திரியை நானா தொடங்கினேன் என்று எனக்குள்ளேயே ஒரு வியப்பு.கடவுள் நம்பிக்கை அறவேயில்லாத நான். நடக்கும் ஒரு நிகழ்வுகளுக்கும் மூடநம்பிக்கையை அதற்குள் இழுக்காதீர்கள் என கத்திப்பேசும் எனக்கு இம் முறை எனது மனைவியின் பயணம் ஏனோ ஒரு சிறு தடுமாற்றத்தைக் கொடுத்தது.வயது போக எங்களின் மீது எமக்கே வரும் ஒரு விதபயம் கலந்த உணர்வு என இருந்தாலும் இந்த பிரிவு திரியை உங்களுடனும் பகிருவோம் என நினைத்தேன்.

எனது மனைவியின் தாயார் ஞாயிற்றுக்கிழமை கோவில் தேருக்கு போட்டுவந்து உணவு உண்ட கையுடன் அப்படியே மாரடைப்பில் எனது மனைவியின் கைகளில் சாய்ந்துவிட்டார்.யாழ் வைத்தியநிலையத்திற்கு உடனடியாக கொண்டு சென்றும் அவர்களின் பலத்த முதலுதவியாலும் கூட உதவமுடியவில்லை.எனது ந்ண்பரொருவர் யாழ் வைத்தியசாலையில் டொகடராக இருக்கின்றார் நன்றாக உதவிசெய்தாராம்.இருந்தும் தான் கூட்டிபோன தனது தாயாருக்கு இந்த நிலை வந்ததையிட்டு மிகவும் உடைந்து போய் போன் எடுக்கும் நேரமெல்லாம் ஒரே அழுகை.ஜேர்மனில் இருந்து ஒருவரும் கனடாவில் இருந்து இரு சகோதரர்களும் இன்றுதான் புறப்பட்டார்கள்.

என்று போன் எடுக்கும் போது சொன்னா இனி எனக்கு ஒன்றும் வேண்டாம் கனடா வந்து தனது கட்டிலில் படுத்தால் காணும் என்று.அம்மா இறந்தபின் அந்த இரண்டு நாட்களும் அங்கு இருக்கும் நடைமுறைகள்தன்னை போட்டு சிப்பிலி ஆட்டி தான் படாதபாடுபட்டுவிட்டதாக சொன்னா.

நொந்து நூலாகியிருக்கும் எனது மனைவியை நினைக்க எது என்னை இந்த திரியை எழுதத்தூண்டியது என யோசித்துப் பார்க்கின்றேன்

Link to comment
Share on other sites

உங்கள் மாமியாருக்கு அஞ்சலிகள். தெரிஞ்ச அக்கா ஒருவரின் அம்மா ஒருவரும் இப்படித்தான்.. கலியாண வீட்டு பொன்னுருக்குக்கு போயிருந்தாராம். திடீரென மயங்கி விழுந்து மரணித்துவிட்டார் இரண்டு நாட்களுக்கு முன்னர். இந்த உலகம் எவ்வளவு தூரம் மகிழ்ச்சிகளாலும் கலகலப்பினாலும் நிறைந்து உயிர்ப்பாய் காணப்படுகின்றதோ.. அவ்வளவு தூரம் பிரிவுகள், துயர்களினால் நிறைந்து சூனியமானது. உயிர்ப்பிற்கும் சூனியத்திற்கும் இடையிலான போராட்டத்தில் எங்கள் வாழ்க்கை தொடர்கின்றது.

Link to comment
Share on other sites

அர்ச்சுன், உங்கள் மாமியாரின் இழப்புக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.வாழ்க்கையே இப்படி தான் ஒன்று நினைக்க இன்னொன்று நடக்கும்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

Dear Arjun ........

...Please accept my Heart felt condolence to you and your family.

My prayers for her. always .

Nilaamathy akka .

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்...அந்த அம்மா கொடுத்து வைத்தவ ஊரில போய் இறந்திருக்கிறார்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன்,

உங்கள் குடும்பத்திற்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

வாத்தியார்

*********

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன்

உங்கள் மாமியாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.

Link to comment
Share on other sites

அர்ஜுன் அண்ணா

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

இறுதிநேரத்தில் பெற்ற தாயை மடியில் சுமக்கும் அரியவாய்பு உங்கள் மனைவிக்கு கிட்டியிருக்கிறது இதைநினைத்து நீங்கள் மனநிறைவு கொள்ளவேண்டும்.

Link to comment
Share on other sites

அர்ஜுன்,

உங்கள் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள பேரிழப்புக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன் உங்கள் மாமிக்கு அஞ்சலிகளும்.உங்கள் குடும்பத்தில் ஒரு முக்கிய உறவை இழந்து தவிக்கும் உங்கள் எல்லாருக்கும் எனதும் எனது குடும்பத்தினதும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

அர்ஜுன், பெற்றோரைப் பிரிந்து நினக்கும் எந்தப் பிள்ளைக்கு ஆறுதல் சொன்னாலும் இப்போதைக்கு மனம் ஏற்றுக் கொள்ளாது... இருப்பினும் உங்கள் மனைவியை நீங்கள் தான் ஆறுதல் படுத்த வேண்டும். கடவுளைத் தரிசித்து விட்டு வந்ததும் உயிர் பிரிந்துள்ளது என்று சொல்லுறீர்கள், குடுத்து வைத்தவ...

அவர்களின் ஆன்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன்., உங்கள் குடும்பத்திற்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அர்ஜின் அண்ணாவின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

அர்ஜுன் அண்ணா,

உங்கள் மாமியாரின் பிரிவுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள். அத்தோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஓம் சாந்தி!சாந்தி!!சாந்தி!!!

Link to comment
Share on other sites

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

post-7784-064442500 1282784089_thumb.gif

Link to comment
Share on other sites

அனுதாபம் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்.

அதைவிட யாழ்களத்தில் பெரும்பாலோருடன் ஒத்துபோகாத நான் யாழில் இருந்து பல பாடம் கற்றேன்.எனது அரசியல் முகம் என்றுமே மாறாது ஆனால் மனிதனுக்கு அதைவிட பல வித முகங்களும் இருக்க வேண்டும் என எனக்கு உணர்த்தியதே யாழ் தான். ஒரு நாள்கூட ஊர்புதினத்தை விட அடுத்த பக்கத்திற்கு செல்லாத நான் இப்போது நாவுறவரைக்கும் என்னை கொண்டு வந்ததே யாழின் வெற்றி.

வெள்ளிக்கிழமை மாமியின் மரணச் சடங்கு.சகோதரர்கள் அங்கு போனதால் மனைவி ஓரளவிற்கு ஆறுதல் அடைந்துள்ளார்.

மீண்டும் யாழுக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றிகள்.

Link to comment
Share on other sites

அர்ஜுன் ..உங்கள் மாமியாரின் பிரிவால் துயருறும் உங்கள் குடும்பத்தினருக்கும் உறவினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

சிலருக்கு மட்டும் தான் தாய் மண்ணில் உயிரைவிடும் பாக்கியம் கிடைக்கும். அது உங்கள் மாமிக்கு கிடைச்சிருக்கு.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

எனது மனைவியின் தாயார் ஞாயிற்றுக்கிழமை கோவில் தேருக்கு போட்டுவந்து உணவு உண்ட கையுடன் அப்படியே மாரடைப்பில் எனது மனைவியின் கைகளில் சாய்ந்துவிட்டார்.யாழ் வைத்தியநிலையத்திற்கு உடனடியாக கொண்டு சென்றும் அவர்களின் பலத்த முதலுதவியாலும் கூட உதவமுடியவில்லை.எனது ந்ண்பரொருவர் யாழ் வைத்தியசாலையில் டொகடராக இருக்கின்றார் நன்றாக உதவிசெய்தாராம்.இருந்தும் தான் கூட்டிபோன தனது தாயாருக்கு இந்த நிலை வந்ததையிட்டு மிகவும் உடைந்து போய் போன் எடுக்கும் நேரமெல்லாம் ஒரே அழுகை.ஜேர்மனில் இருந்து ஒருவரும் கனடாவில் இருந்து இரு சகோதரர்களும் இன்றுதான் புறப்பட்டார்கள்.

ஏன் பிரிவென்று தலைப்புப் போட்டிங்க.

இறுதியில்.. உங்க மாமியாரை நிரந்தரமா பிரிய வேண்டியதாப் போச்சே. ஆழ்ந்த அனுதாபங்கள். :lol:

அதேன் என் மாமியார் இறந்திட்டாங்கன்று சொல்லாம.. மனைவியின் தாயார் என்று சொல்லுறீங்க. அவர் மேல உங்களுக்கு அவ்வளவு வெறுப்போ இல்ல பாசமோ....???! அவரும் உங்க அம்மா போலத் தானே..! :):wub:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன் ..உங்கள் மாமியாரின் பிரிவால் துயருறும் உங்கள் குடும்பத்தினருக்கும் உறவினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

Link to comment
Share on other sites

நல்லதொரு கேள்வி நெடுக்ஸ்.எனது குடுப்மபத்தில் எவருக்கும் உறவு முறை சொல்லி அழைக்கும் பழக்கமில்லை.மனைவியின் குடும்பம் முழுக்க முறை சொல்லித்தான் அழைபார்கள்.நாங்கள் இன்னாரின் தாயோ , தகப்பனோ என்றுதான் அழைப்போம்.

இன்று பொழுதுபோகவில்லை பேஸ்மன்ட்டிற்குள்ளிருந்த பழைய அல்பங்களை கொண்டுவந்து புரட்டிப் பார்த்தேன்.பழைய நினைவுகளை மீட்டுவதில் தான் எத்தனை சுகம்.எமது வாழ்க்கை என்பது இன்னொருவரால் எழுதமுடியாதது நாமே அதன் நாயகர்கள்.ஒவ்வொரு படங்களையும் பார்க்க நானா இப்படி இருந்திருக்கின்றேன் என ஒரு வியப்பு..வீடியோ இன்னுமொரு மீடியம் ஆனல் புகைபடம் பார்க்கும் சந்தோசம் எதிலும் வரமாட்டாது.

லண்டனில் நடந்த எனது கலியாணவீட்டில் இப்போது பேர் அடிபடுக் கொண்டிருக்கும் அரைவாசிப் பேர்கள் நிற்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • போராட்டங்களின் வடிவம் மாறினாலும் இலக்கு என்றும் மாறாது – இரா.சாணக்கியன் உதய கம்மன்பில திரியின் தலைப்பு மாறிட்டோ?
  • அனைவருக்கும்நன்றி
  • ஜே ஆர் இன் பரிசு - தடை  அமிர்தலிங்கத்தின் தட்டச்சுப்பொறியில் தட்டச்சு செய்யப்பட்ட புலிகளின் கடிதம்   பஸ்டியாம்பிள்ளையைக் கொன்ற புலிகளின் குழு அவரின் காரில் கிளிநொச்சி வரை சென்றுவிட்டு, அடர்ந்த காட்டுப்பகுதியில் அதனை எரித்துவிட்டுத் தலைமறைவாகியது. சிறு குழுக்களாகப் பிரிந்து சென்ற அவர்கள் இறுதியில் வவுனியா பூந்தோட்டம் முகாமை அடைந்தார்கள். தாக்குதலில் ஈடுபட்ட குழுவை முகாமில் பிரபாகரன் வரவேற்றார். செல்லக்கிளியைக் கட்டித் தழுவிய பிரபாகரன் அவரைப் பார்த்து, "தமிழர்கள் உன்னால் பெருமையடைந்துவிட்டார்கள்" என்று கூறியதாக உமா என்னிடம் தெரிவித்தார்.  தமது இயக்கம் வெளிப்படையாக இயங்குவதுபற்றிய விவாதத்தினை மத்திய குழுவில் தான் ஆரம்பித்துவைத்ததாக உமா என்னிடம் கூறினார். "நாம் தொடர்ந்தும் இரகசிய அமைப்பாக இயங்கிக்கொண்டிருக்க முடியாது. நாங்கள் வெளியே வரவேண்டும். இதுவே அதற்கான சரியான தருணம். நாடுமுழுவதுமே எம்மைப்பற்றிப் பேசுகிறார்கள்" என்று மத்தியகுழுவில் தான் கூறியதாக அவர் என்னிடம் தெரிவித்தார். பல தாக்குதல் சம்பவங்களின் பிறகு மக்கள் மத்தியில் வெளித்தெரிந்த பல கெரில்லா இயக்கங்களை உமா சுட்டிக்காட்டிப் பேசியதாகத் தெரிகிறது.  தான் கூறியதை பிரபாகரனும் ஏற்றுக்கொண்டதாகக் கூறிய உமா, "பலஸ்த்தீன விடுதலை இயக்கம், ஐரிஸ் விடுதலை இராணுவம் போன்று நாமும் இப்போது தெரியவந்திருக்கிறோம்" என்று பிரபாகரன் கூறியதாக உமா மேலும் தெரிவித்தார். ஆகவே, தம்மால் நடத்தப்பட்ட கொலைகளுக்கு உரிமை கோரும் முடிவினை அவர்கள் எடுத்தார்கள். கொலைக்கான காரணங்கள் அடங்கிய கடிதத்தினை வரைவது மற்றும் அதனைப் பிரசுரிப்பது ஆகிய கடமைகள் அமைப்பின் அரசியல்த்துறைத் தலைவரான உமாவிடம் வழங்கப்பட்டது.  கொழும்பிற்கு இரகசியமாகச் சென்றிறங்கிய உமா, லண்டனில் இருக்கும் தனது தொடர்பாளருடன் தொடர்புகளை ஏற்படுத்தினார். லண்டனுக்குத் தொலைபேசி அழைப்புக்களை மேற்கொள்வதென்பது அந்நாட்களில் அவ்வளவு இலகுவான காரியமல்ல. கொழும்பிலிருக்கும் மத்திய தொலைத்தொடர்புப் பரிவர்த்தனை நிலையத்திற்குச் சென்ற உமா, லண்டனுக்கான தனது தொலைபேசி அழைப்பிற்கு அனுமதியைப் பெற்று சுமார் 3 மணித்தியாலங்கள் காத்திருந்து பேசினார். லண்டனிலிருந்த புலிகளின் ஆதரவாளர்கள் உமாவை உற்சாகப்படுத்தியிருந்தனர். உலகிலுள்ள மற்றைய கெரில்லா அமைப்புக்கள் செய்த விடயங்களை அவர்கள் உமாவுக்குத் தெரியப்படுத்தினர்.  1976 ஆம் ஆண்டு சென்னையில் புலிகளால் உருவாக்கப்பட்ட கடிதத் தலைப்பில் உமா தண்டனைக்கான விளக்கக் கடிதத்தினைத் தயாரித்தார். கடிதத் தலைப்பின் இடதுபக்க மேற்புறத்தில் புலிகளின் இலட்சினையும், தமிழீழ விடுதலைப் புலிகள் எனும் பெயரும் தடித்த எழுத்துக்களில் பதியப்பட்டிருந்தது. கீழே ஆங்கிலத்திலும் அப்பெயர் இருந்தது. தன்னால் தயாரிக்கப்பட்ட கடிதத்தையும், புலிகளின் இலட்சினைக் கொண்ட கடிதத் தலைப்பையும் தன்னுடன் வைத்திருந்த உமா, கொழும்பில் கண்ணாடிக் கடையொன்றில் பணிபுரிந்து வந்த ஊர்மிளா தேவி எனும் தனது தூரத்து உறவுப் பெண் ஒருவரைச் சந்தித்தார். விவாகரத்தாகியிருந்த அந்தப் பெண் கொழும்பில் இயங்கிவந்த தமிழர் இளைஞர் பேரவையில் மிகுந்த ஆர்வத்துடன் செயற்பட்டு வந்ததுடன், பொன் சிவகுமாரனின் தாயாரான அன்னலட்சுமி பொன்னுத்துரையின் தலைமையில் இயங்கிவந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் மகளிர் அமைப்பிலும் உறுப்பினராக இருந்தார். இந்த மகளிர் அமைப்பின் செயலாளராக அமிர்தலிங்கத்தின் துணைவியார் மங்கையற்கரசி பதவி வகித்தார். தான் கையில் கொண்டுவந்திருந்த கடிதத்தினை ஊர்மிலா தேவியிடம் காட்டிய உமா, அக்கடிதத்தின் 8 நகல்கள் தனக்கு வேண்டுமென்று கூறியதுடன், இது ஒரு இரகசியமான பணி என்றும் கூறினார். அதனை வாங்கிக்கொண்ட ஊர்மிளா, பழைய பாராளுமன்றக் கட்டிதத்தில் இருந்த எதிர்க்கட்சித் தலைவருக்கான அலுவலகத்திற்குச் சென்றார். அமிர்தலிங்கத்தின் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திற்கு நன்கு பரீட்சயமான ஊர்மிளா, அங்கு பல தடவைகள் சென்றிருந்ததுடன், அமிருக்கும், அவரின் செயலாளரான பேரின்பநாயகத்திற்கு பல தட்டச்சு வேலைகளை முன்னர் செய்து கொடுத்திருக்கிறார். ஆகவே, உமா தன்னிடம் கொடுத்த கடிதத்தினைத் தட்டச்சுச் செய்வதற்கு, அமிரின் அலுவலகமே பாதுகாப்பானது என்று அவர் நினைத்தார். ஆகவே, பாராளுமன்றம் இயங்காத வேளை ஒன்றில் அமிருக்கோ பேரின்பநாயகத்திற்கோ தெரியாமல் அங்குசென்று புலிகளின் கடிதத்தினைத் தட்டச்சுச் செய்தார். கணிணிகள் அக்காலத்தில் பாவனையில் இருக்கவில்லை, போட்டோப் பிரதி இயந்திரங்களும் அதிகம் புழக்கத்தில் அப்போது இருக்கவில்லை. அமிர்தலிங்கத்தின் அலுவலகத்தில் இரு தட்டச்சு இயந்திரங்கள் மாத்திரமே இருந்தன. அமிர்தலிங்கத்தின் காரியதரிசி உபயோகிக்கும் தட்டச்சியந்திரத்தையே ஊர்மிளா அன்று பாவித்தார். பிரதிகளை எடுக்க காபன் தாள்களை அவர் பாவித்தார். கடிதங்கள் தயாரிக்கப்பட்டதும், செயலகத்திற்கு அருகில் பேரூந்து நிலையத்தில் காத்து நின்ற உமாவிடம் அவற்றைக் கொடுத்தார்.   ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்த்தலத்திற்கு முன்னால் அமைந்திருந்த கொழும்பு பெரிய தபாலகம் நோக்கி நடந்துசென்ற உமா, அக்கடிதங்களை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர், ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர், காங்கேசந்துறைப் பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி, வல்வெட்டித்துறை பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி, குற்ற விசாரணை திணைக்களத்தின் இயக்குநர் மற்றும் வீரகேசரிப் பத்திரிக்கையின் ஆசிரியர் ஆகியோருக்கு அனுப்பி வைத்ததுடன், மூலப் பிரதியை தன்னுடனேயே வைத்துக்கொண்டார்.    சித்திரை 28 இல் இக்கடிதத்தினை சிறிய செய்தியாக வீரகேசரி பிரசுரித்திருந்தது. "சம்பந்தப்பட்டவர்களுக்கு" என்று தலைப்பிடப்பட்டு, சித்திரை 25, 1978 அன்று வரையப்பட்ட இக்கடிதம் பின்வருமாறு கூறியது. "புதிய தமிழ்ப் புலிகள் எனும் ஆரம்பப் பெயரினையும், தமிழீழ விடுதலைப் புலிகள் எனும் புதிய பெயரையும் கொண்ட நாம் பின்வரும் கொலைகளுக்கு உரிமை கோருகிறோம்".  திரு அல்பிரெட் துரையப்பா - யாழ்ப்பாண மேயரும், சுதந்திரக் கட்சியின் வடமாகாண ஒருங்கிணைப்பாளரும் திரு என். நடராஜா - உரும்பிராய் எரிபொருள் நிலைய உரிமையாளரும் சுதந்திரக் கட்சியின் கோப்பாய்ப் பகுதியின் ஒருங்கிணைப்பாளரும், குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டார். திரு ஏ. கருநாநிதி - காங்கேசந்துறைப் பொலீஸ் நிலைய உளவுப்பிரிவு, சுட்டுக் கொல்லப்பட்டார் திரு சண்முகனாதன் - காங்கேசந்துறைப் பொலீஸ் நிலைய உளவுப்பிரிவு, சுட்டுக் கொல்லப்பட்டார் திரு சண்முகனாதன் - வல்வெட்டித்துறை பொலீஸ் நிலைய உளவுப்பிரிவு, சுட்டுக் கொல்லப்பட்டார் திரு தங்கராஜா - முன்னாள் நல்லூர் சுதந்திரக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் அருளம்பலத்தின் செயலாளர் திரு கனகரட்ணம் - முன்னாள் பொத்துவில் தொகுதி தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினரும், இந்நாள் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினரும்,  திரு பஸ்டியாம்பிள்ளை - பொலீஸ் பரிசோதகர், உளவுப்பிரிவு திரு பேரம்பலம் - உப பொலீஸ் பரிசோதகர், உளவுப்பிரிவு திரு பாலசிங்கம் - பொலீஸ் சார்ஜெண்ட், உளவுப்பிர்வு திரு சிறிவர்த்தனா - பொலீஸ் சாரதி   1978 ஆம் ஆண்டு சித்திரை 7 ஆம் திகதி, பஸ்டியாம்பிள்ளையும் அவரது குழுவினரும் புலிகளைத் தேடியழிக்கும் நடவடிக்கை ஒன்றிற்காக உப இயந்திரத் துப்பாக்கி, ரைபிள்கள், சுழற்துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள் சகிதம் வந்திருந்தனர். ஆனால், தமக்கு உயிரிழப்போ, காயங்களோ ஏற்படாவண்ணம் அக்குழுவை முற்றாக புலிகள் அழித்துவிட்டனர். அவர்கள் பயணம் செய்த காரும் புலிகளால் எரியூட்டப்பட்டது.   "வேறு எந்தச் அமைப்புக்களோ, தனிநபர்களோ இந்தத் தாக்குதல்களுக்காக உரிமை கோர முடியாது. புலிகளைத் தவிர  இலங்கையிலோ அல்லது வெளிநாட்டிலோ எவரும் இத்தாக்குதல்களுக்கு உரிமை கோரினால் கடும்னையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதற்கு முன்னர் நடத்தப்பட்ட கொள்ளைச் சம்பவங்களுக்கும் எமக்கும் எந்தவித தொடர்பும் இல்லை" இப்படிக்குச் செயலாளர், மத்திய குழு" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.  உமா எதிர்பார்த்துபோலவே வீரகேசரி பிரசுரித்த இச்செய்தி பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்தது. பொதுமக்கள், குறிப்பாகத் தமிழர்கள் சிங்கள ஆக்கிரமிப்பினை எதிர்த்துப் போராடுவதற்கு அமைப்பு ஒன்று உருவாகிவிட்டதை அறிந்துகொண்டார்கள். யாழ்ப்பாணத்தில் அக்காலத்தில் வெளியாகி வந்த ஈழநாடு மற்று Saturday Review ஆகிய பத்திரிக்கைகளின் ஊடகவியலாளர்கள் இச்செய்தி மக்களிடம் பெருமையுடன் உள்வாங்கப்பட்டிருந்ததாக என்னிடம் கூறினார்கள். "எங்கட பெடியன்கள் செய்துபோட்டாங்கள்" என்கிற பெருமையான உணர்வே அனைவரிடம் காணப்பட்டது. உளவுப்பிரிவிற்கு அனுப்பப்பட்ட கடிதங்கள் ஜனாதிபதியின் பார்வைக்கும் கொண்டுசெல்லப்பட்டது. புலிகளின் கடிதத்தைக் கண்ணுற்றபோது ஜே ஆர் மிகவும் ஆத்திரப்பட்டார். எதிர்பார்த்ததுபோலவே உடனடியாக அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அத்துடன் நின்றுவிடாமல் உள்ளூர் அலுவல்கள் அமைச்சரான தேவநாயகத்திடம் புலிகளையும் அவர்களைப்போன்ற ஏனைய அமைப்புக்களையும் தடைசெய்யும் சட்டத்தினை உடனடியாக வரையுமாறு உத்தரவிட்டார். தனது இன்னொரு அமைச்சரும் பெயர்போன சிங்கள இனவாதியுமான சிறி மத்தியூவிடம் தமிழருக்கெதிரான தாக்குதல்களை ஒருங்கிணைக்குமாறும் உத்தரவிட்டார்.  தாக்குதலில் இறங்கிய டெலோ அமைப்பு  புலிகளின் நடவடிக்கைகளால் தாம் ஓரங்கட்டுப்பட்டுவிடுவோமோ என்று தங்கத்துரை குழுவினர் நினைத்திருந்த வேளை, குட்டிமணியின் மீள்வருகை அவர்களுக்குப் புதுதெம்பினை அளித்திருந்தது. ஜெயவர்த்தனா பிரதமராகிய பின்னர் ரோகண விஜேவீரவுடன் குட்டிமணியையும் விடுதலை செய்திருந்தார்.  பொலீஸ் பரிசோதகர் பத்மநாதன் புலிகளால் கொல்லப்பட்ட பஸ்டியாம்பிள்ளைக்கு அடுத்தபடியாக தமிழ் ஆயுத அமைப்புக்கள் மீது கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தவர். தமிழ் இளைஞர்கள் தொடர்பாக அதிகம் அறிந்துவைத்திருந்தவர். ஆகவே பஸ்டியாம்பிள்ளையின் இழப்பின் பின்னர் யாழ்ப்பாணத்தில் புலனாய்வுத்துறையின் வேலைகளுக்குப் பொறுப்பாக பத்மனாதன் நியமிக்கப்பட்டார். ஆகவே பதமானதனைக் கொல்வதன் மூலம் தமிழ் ஆயுத அமைப்புக்களின் உறுப்பினர்களை வேட்டையாட பொலீஸார் அமைத்திருந்த கட்டமைப்பு பாதிப்படையும் என்று தங்கத்துரை எண்ணினார்.  
  • கத்தோலிக்கர் புரட்டஸ்தான்து என்று  அவர்கள் தங்களுக்குள்  பார்க்கிறார்களோ தெரியவில்லை பிரான்ஸ் லூர்து மாதவிடமும் வொசிங்கம் சேர்சிலும் அழுது பிரார்தனை  செய்து சேவிப்பவர்கள்  இலங்கை சைவர்கள் தான் அதிகம் .  புறாவுக்கு  தெரியாது அடிக்கிற மணி சேர்சில் இருந்து வருதா இல்லை சைவ கோயிலில் இருந்து வருதா என்பது போல் இருந்த இலங்கை தமிழர்களுக்குள் புலிகள் இல்லாமல் போன காலத்துக்குள் பிரிவினைகளை உருவாக்க மறவன் புலவு .. வேலன் சுவாமி  போன்றவர்கள் இந்திய இலங்கை அரசுகளால் இறக்கி விடபட்டுள்ளார்கள் .   
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.