யாழ்நிலவன்

யாழ்நிலவனின் மீள்வருகை...

Recommended Posts

:blink:

வல்வைசகாரா... உன் கவிதைகள் படித்திருக்கின்றேன்... உன் எழுத்தா என்று கூடத்தெரியாது ஆனாலும் மென்றிருக்கின்றேன்... கருப்பட்டி எடுத்து, கடலைமாவிற் குழைத்து உருண்டையாக்கி உண்டசுகமெனக்கு உன் கவி படிக்கையிலே. திக்கற்றிருக்கும் திருமொழியன் அவர்கட்கு, திக்கெற்றிலும் திக்கற்றிருக்கும் தமிழனுக்கு உன்வரியில் உவமை பல இட்டு, உருப்படியாய் இருவரியில் கவிதன்னும் இப்போ வரைவதற்கு மனமா வரவில்லை? உன் மானம் போகிறதே, இதற்குப்பின் எதற்குனக்குச் சேலை? கவி என்ற சேலை கட்டி நீயிருக்கிறாய், உன் கவிச்சேலை மேலேயும் மானம் பறக்கிறதே? திருடென திடீரென உணராதவன், உன் கவிவரியால் உடனடியாய் மாற்று. உத்தமனாய் உன்னால் செய்வதற்கு முடியும் என்பது எனக்குத் தெரிகிறது. உன்னால் முடியாது என்று ஏன் சோம்பிப் போயிருக்கின்றாய்? இது எமது உரிமைப்போர். இது எங்கள் நாடி நரம்புகளில் புடைக்கவேண்டிய இரத்தம். தொடரட்டும் உன்பணி, பெருகட்டும் உன் வரி. தட்டிக்கொடுப்பேன் உன் தோள்களில் நானிருக்கும் வரைக்கும். விடுதலைக்காய் எழுதினால்... எட்டி மிதிப்பேன் உன் மார்பிலே திசைகெட்டு ஓடினால்.

Share this post

Link to post
Share on other sites

கட்டிய கோவணம் காற்றிலே பறக்குது, கட்டிய வேட்டியா தேவைகள் உனக்கு?

Share this post

Link to post
Share on other sites

ஜனநாயக வேடம் போட்டு, தமிழினப் படுகொலைகளை நிகழ்த்தி

* 200,000 இற்கு மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படக்,

* 150,000 இற்கு மேற்பட்ட தமிழர் வீடுகள் தரை மட்டமாகக்,

* 1,500,000 இற்கு மேற்பட்ட தமிழர் புலம் பெயரக்,

* 800,000 இற்கு மேற்பட்ட தமிழர் இடம்பெயரக்,

* 90 பில்லியன் அமெரிக்க டாலர் இற்கு மேற்பட்ட மதிப்புள்ள தமிழரின் சொத்துக்கள் அழிக்கப்படக்

காரணமாக இருந்த வட இந்திய, சிங்கள பயங்கரவாதிகள் அழிந்து, உலகில் மனிதத்துவம், சாந்தி, சமாதானம், அகிம்சை, நீதி நிலைக்க உங்கள் பங்களிப்பு அவசியம்.

Share this post

Link to post
Share on other sites

அன்பகலா என் உறவுகள் அனைவருக்கும் சிர்ந்தாழ்த்தி வணக்கம், உங்களிடம் ஓர் கருணை வேண்டுகோள். யாழ் நிலவன் என்றும் ஒரே கொள்கை, ஒரே வழியில் எழுதுபவன். தயவுசெய்து என்னைத் துரோகிப்பட்டம் கட்டி ஒதுக்காதிருங்கள். வெட்டுவது வாளாயினும் வெட்டுபவனும் இருக்கவேண்டுமே... சரிதான். வெட்டும் வாளாக எழுதுவதற்காகக் காத்திருக்கிறேன்... வெட்டுபவனாக இருந்திடாதீர்கள். அதற்காக துரோகிகள் பட்டமோ, பக்கம் மாறியவர்கள் என்ற பக்கமோ சாராமல் என் எழுத்து என்றென்றும் தமிழ், தமிழ் ஈழம், எம் தேசம், விடுதலை என்ற ஓரச்சில் மட்டுமே என் சக்கரம் சுழலும். யார் பெயரொ... யார் ஊரோ அடங்காது எழுத ஆவலுடன் இருக்கின்றேன்... எம் உறவுகள் எனக்குறுதுணைவேண்டும் என்று மன்றாடி நிற்கின்றேன். தாங்கும் சக்தியற்றிருக்கும் எனக்கோ இப் பூமித்தாய் என்னைத் தாங்கும் வரைக்கும் தமிழ் எழுத ஆவலுடன் இருக்கின்றேன். என்றென்றும் உங்கள் பதிலுக்காய் காத்திருக்கும் உங்கள் யாழ் உறவு யாழ் நிலவன்

Share this post

Link to post
Share on other sites

ஜனநாயக வேடம் போட்டு, தமிழினப் படுகொலைகளை நிகழ்த்தி

* 200,000 இற்கு மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படக்,

* 150,000 இற்கு மேற்பட்ட தமிழர் வீடுகள் தரை மட்டமாகக்,

* 1,500,000 இற்கு மேற்பட்ட தமிழர் புலம் பெயரக்,

* 800,000 இற்கு மேற்பட்ட தமிழர் இடம்பெயரக்,

* 90 பில்லியன் அமெரிக்க டாலர் இற்கு மேற்பட்ட மதிப்புள்ள தமிழரின் சொத்துக்கள் அழிக்கப்படக்

காரணமாக இருந்த வட இந்திய, சிங்கள பயங்கரவாதிகள் அழிந்து, உலகில் மனிதத்துவம், சாந்தி, சமாதானம், அகிம்சை, நீதி நிலைக்க உங்கள் பங்களிப்பு அவசியம்.

வடக்கிலேயிருந்தும் தெற்கிலே இருந்தும் எம்மீது திணிக்கப்பட்ட இன அழிப்பின் இரத்தச் சுவடுகளைத் தாங்கி நிற்கும் எம்மிடம் ஒற்றுமை இல்லையே... அவ்வொற்றுமையைக் கட்டியெழுப்ப வேண்டும். எழுத்தாளர்களால் பூமியைப் பிளந்தும் புதுயுகம் படைக்கலாம். நான் சொன்ன வார்த்தைகளை ஒரு நிமிடம் மீண்டும் நினைக்கின்றேன் .

களத்தில் துப்பாக்கிப் போராட்டம் மட்டுமல்ல போராட்டம்

பேனாகூட பெருந்திசை மாற்றும்

நாமும் போராளிகள்தான் துப்பாக்கி ஏந்தியவர்களல்ல

துர்ப்பாக்கியத்தால் பேனா ஏந்தியவர்கள்....

(http://yarlnilavan.wordpress.com/2009/03/07/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa/)

அடக்க இது ஒன்றும் அரையடிப்பூனையல்ல

ஆறடிப் புலி என்று உரக்கவே சொல்லுவோம்.......

(http://yarlnilavan.wordpress.com/2009/03/06/%e0%ae%85%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81-%e0%ae%92%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%9f%e0%ae%bf/)

தமிழ் வரிகள் கூட வாழ்க்கையை எழுது... வரலாறூ எழுத தமிழ் மொழியுமே போதும்... நான் மட்டுமுரைத்தால் நா மட்டும் தழுதழுக்கும் நாம் ஒன்றாய் உரைத்தால் ஐ. நாவுமே தழுதழுக்கும்....

Share this post

Link to post
Share on other sites

... நிலவு எப்பவும் பவுர்ணமிக்கு முகம் காட்டுவது போல் யாழிலும் .... <_<

Share this post

Link to post
Share on other sites

வாங்கோ அண்ணை :D

Share this post

Link to post
Share on other sites

வாங்கோ அண்ணை :D

வருகின்றேன்... என்னவோ வசந்தமாம், உதயமாம், ஒண்டுமே விளங்கேல்ல... நன்றி வரவேற்பிற்கு

... நிலவு எப்பவும் பவுர்ணமிக்கு முகம் காட்டுவது போல் யாழிலும் .... <_<

நிலவு பௌர்ணமிக்கு முகம் காட்டும் என்கின்றீர்களே. தினம் உதிக்கும் சூரியனுக்கோ இரு வாழ்வு, உதயம், மறைவு, ஆனால் தினம் தேய்ந்து தினம் வளரும் சந்திரனுக்கோ பல வாழ்வு, பௌர்ணமி, அமாவாசை, பஞ்சமி, அட்டமி, நவமி, தசமி, ஏகாதசி ஏன்? தினமும் நானுதித்தால் இப்பெயர்தான் கிடைத்திருமா என்ன? இருந்து எப்போதாவது வந்தாற்கூட உங்கள் அனைவரையும் உள்ளத்திலே சுமந்திருக்கின்றேன். :wub: :wub: :wub:

Share this post

Link to post
Share on other sites

வல்வைசகாரா... உன் கவிதைகள் படித்திருக்கின்றேன்... உன் எழுத்தா என்று கூடத்தெரியாது ஆனாலும் மென்றிருக்கின்றேன்... கருப்பட்டி எடுத்து, கடலைமாவிற் குழைத்து உருண்டையாக்கி உண்டசுகமெனக்கு உன் கவி படிக்கையிலே. திக்கற்றிருக்கும் திருமொழியன் அவர்கட்கு, திக்கெற்றிலும் திக்கற்றிருக்கும் தமிழனுக்கு உன்வரியில் உவமை பல இட்டு, உருப்படியாய் இருவரியில் கவிதன்னும் இப்போ வரைவதற்கு மனமா வரவில்லை? உன் மானம் போகிறதே, இதற்குப்பின் எதற்குனக்குச் சேலை? கவி என்ற சேலை கட்டி நீயிருக்கிறாய், உன் கவிச்சேலை மேலேயும் மானம் பறக்கிறதே? திருடென திடீரென உணராதவன், உன் கவிவரியால் உடனடியாய் மாற்று. உத்தமனாய் உன்னால் செய்வதற்கு முடியும் என்பது எனக்குத் தெரிகிறது. உன்னால் முடியாது என்று ஏன் சோம்பிப் போயிருக்கின்றாய்? இது எமது உரிமைப்போர். இது எங்கள் நாடி நரம்புகளில் புடைக்கவேண்டிய இரத்தம். தொடரட்டும் உன்பணி, பெருகட்டும் உன் வரி. தட்டிக்கொடுப்பேன் உன் தோள்களில் நானிருக்கும் வரைக்கும். விடுதலைக்காய் எழுதினால்... எட்டி மிதிப்பேன் உன் மார்பிலே திசைகெட்டு ஓடினால்.

யாழ் நிலவன்,

இப்போது கவிதையில் சேலை நெய்து அம்மணத்தைக்காட்டுவதிலும் நிதானத்தில் நெய்யும் சேலை நிச்சயம் மானம் காக்கும்.

Share this post

Link to post
Share on other sites

யாழ் நிலவன்,

இப்போது கவிதையில் சேலை நெய்து அம்மணத்தைக்காட்டுவதிலும் நிதானத்தில் நெய்யும் சேலை நிச்சயம் மானம் காக்கும்.

நெய்யும் வரை பொறுத்திருப்பதா? நெய்யும் வரை மானத்தை மறைத்திருப்பதா மேல்?

Share this post

Link to post
Share on other sites

... நிலவன், வவை சகாரா, .... போன்றவர்கள் தொடர்ந்து கவிதை எழுத வேண்டும், பல தடவை யாழ்களத்தில் உங்கள் கவிகளை படித்திருக்கிறேன். நான் வல்வை சகாராவின் விசிறி.

வணக்கம் ராஜ் மோகன்,

வல்வை சகாரா தமிழிலே பலம் பொருந்தியவர். அவர் இன்னமும் பல படைப்புக்களைப் படைக்கவேண்டும் என்பதே எனது விருப்பமும் கூட. அதுவும் இப்போது அவர் வேலைப்பழுவின்றி இருக்கின்றார். காலத்தின் கடமையாக எண்ணி அவர் இன்னமும் படைப்புக்களைப் படைப்பார் உங்களைப்போலவே நானும் எதிர்பார்க்கின்றேன். அத்தோடு தங்களின் பதிலுக்கு என் மனங்கனிந்த நன்றிகள் உரித்தாகட்டும்

Share this post

Link to post
Share on other sites

வணக்கம் வாங்கோ நிலவன் நலமா?.

வணக்கம் காரணிகன்,

நான் நலமே, தாங்களும் நலனுடன் வாழ வாழ்த்துகின்றேன். தங்கள் பெயர் என்னவோ உண்மையானதோ அல்லது புனை பெயரோ யானறியேன். இருப்பினும் சில வார்த்தைகள் சொல்ல விருப்பம். தங்களின் பெயர் பல அர்த்தம் நிரம்பிய பெயர். தாங்கள் என்ன கருத்தில் அதனைப் பாவிக்கின்றீர்களோ தெரியவில்லை, இருப்பினும் கார் + அணிகன் = காரணிகன். அதாவது கார் என்பது கருமை என்பதையும், அணிகன் என்பது ஆண்பால் விகுதியேற்ற அணிந்திருப்போன் என்பது. எனவே இப்பெயரினை பண்டைய தமிழ் இலக்கியத்தில் உவமையாகப் பாவித்திருக்கின்றார்கள். இதிலே பல அர்த்தங்கள் பொதிந்துள்ளன. மீண்டும் ஓர் சந்தர்ப்பத்தில் இவை பற்றி மேலும் விளக்குகின்றேன். எனினும் தங்கள் அடிக்குறிப்பு என் மனதை வாட்டிவிட்டது. பணம் பதவி வாழ்விற்கு எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் உன் பிறப்பின் அடையாளம். இன்று உன் அடையாளம் எவ்வாறிருக்கின்றது? எவ்வுலகில் வாழினும், எவ்வாறு வாழினும், உனதாயினும், உன் சந்ததியின் அடையாளம் என்றுமே, தமிழன், தமிழீழத்தவன் என்பது அழியப்போவதில்லை. மானிட வர்க்கம் பல பரிணாம வளர்ச்சியினூடே வளர்ந்தது. என்றென்றும் உன் வம்சமானாலும், உனதானாலும் உன்னுடைய DNA என்று அழைக்கப்படும் "இனக்கீற்று" நீ திராவிடன் என்பதையே உரைத்து நிற்கும். உன் வாழ்வியலமைப்பு எவ்வாறு மாறினும், இனக்கீற்றில் உன் மொழி, தேசியம், உன் வாழ்வாதாரம் என்பன என்றுமே அழிக்கப்படப்போவதில்லை. மொழியும், தேசியமுமே உனக்கான அடையாளம். பணமோ பதவியோ உன் அடையாளத்தைத் தீர்மானிக்கப்போவதில்லை. தமிழனாக வாழ், ஈழத்தவனாக இரு...

Edited by யாழ்நிலவன்

Share this post

Link to post
Share on other sites

வணக்கம் ராஜ் மோகன்,

வல்வை சகாரா தமிழிலே பலம் பொருந்தியவர். அவர் இன்னமும் பல படைப்புக்களைப் படைக்கவேண்டும் என்பதே எனது விருப்பமும் கூட. அதுவும் இப்போது அவர் வேலைப்பழுவின்றி இருக்கின்றார். காலத்தின் கடமையாக எண்ணி அவர் இன்னமும் படைப்புக்களைப் படைப்பார் உங்களைப்போலவே நானும் எதிர்பார்க்கின்றேன்.

வணக்கம் யாழ்நிலவன் ,

நெஞ்சில் எப்போதுமே கனமான வலிகளும் சுமைகளும் சிம்மாசனம் இட்டு அமர்ந்திருக்கின்றன. வாய் திறந்து, எனை வெளிக்காட்டி அழுது தீர்க்க முடியாத வலிகள் அவை. எப்போதாவதுதான் கண்மடல்கள் கனத்து ஈரலிப்பை வெளிப்படுத்தும். இப்போது இந்த விசைப்பலகையில் உட்கார்ந்து எழுதும்போது விசைப்பலகையில் விழிநீர் சொரிந்து விரல்களைப் பிசுபிசுக்க வைக்கிறது. அகமும், புறமுமாக வேதனைகளும் பாரிய ஏமாற்றங்களையும் தேக்கிக் கொண்டு திணறுகிறது வாழ்க்கை. விடுதலையின் வாழ்வை யாசித்தவர்கள் விடை தெரியாத விடுகதைகளாக.... பேச முடியவில்லை. எவரையும் சேர்க்கமுடியவில்லை. புலம்பெயர் சமூகத்திடம் பகுதிபகுதியாகச் சகதி பாய்ந்து விட்டது. தெரிந்து கொண்டே தவறிழைக்கிறார்கள், புரிந்துகொண்டே பொல்லாங்கு சொல்கிறார்கள். எம்மினத்தை ஒடுக்கும், சிதைக்கும் பொது எதிரியை விட்டுவிட்டு எமக்குள் வைரிகளாக மூர்க்கடைந்து மீளாநிலை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் எனக்குப் பைத்தியம் பிடிக்கவில்லை பார்த்துக் கொண்டிருக்கிறேன். எவரை நோவது? விடுதலை நோக்கிய பயணத்திற்கு எல்லோரும் வேண்டும். என்னால் முடியுமா?.... இப்போதே பாதி செத்துவிட்டேன். என்னினத்தை நான் முழுமையாக வெறுக்கும்போது உயிரோடு இருக்கமாட்டேன். இன்றைய நாட்களில் புலத்துக்குழப்பங்களால் இடிந்துபோயிருப்பது என் இனம் மட்டுமல்ல என் தமிழுந்தான் யாழ்நிலவன்.

அன்பகலா வல்வைசகாரா,

ஓர் எழுத்தாளன் என்பவன் எவ்வலி வேதனை இருந்தாலும், அதனையும் பொறுத்து எழுதுபவனே சிறந்த எழுத்தாளன். அடக்கு முறைக்கும், கவலைக்கும், எதிர்ப்புக்களுக்கும் அடிபணியாது எவனொருவன் எழுதுகின்றானோ அங்கேதான் நீதியும், உண்மையும் பொதிந்து கிடக்கிடக்கும். அதேபோன்று ஓர் திறமையான கவிஞனும் அப்படித்தான். பெயர் குறிப்பிட விரும்பவில்லை, ஆனால் ஒரு பிரபலமான தற்போதைய பாடலாசிரியர் தனது பாடல் ஒன்றை எழுதிக்கொண்டிருக்கும்போது, அவருடைய மனைவியால் ஏற்பட்ட பிரச்சனையால் மனம் சிறிது குழம்பினார், ஆனால் அவர் குறிக்கோளோ அந்தக் கவிதையிலேயே இருந்தது. மனைவியின் திட்டுக்களுக்கும் ஏச்சுக்களுக்கும் காது கொடுக்காமல் எழுதினார். அவர் வறுமையில் இருந்தார் அப்போது, மனைவியிடம் ஏற்பட்ட தகராறும் அவரது வறுமை சம்பந்தமானதாகவே, அன்று சமையலுக்கு கூட ஏதுமில்லை என்கின்ற நிலையிலேயே ஏற்பட்டது. அவர் புலன்களைச் சிதறவிடாமல் எழுதி எப்பாடு பட்டோ அந்தக் கவிதையை ஓர் இயக்குனர் கையில் கிடைக்கும்படி கொடுத்தனுப்புகின்றார். இயக்குனர் பார்த்ததும் அக்கவிதை மிகச்சிறந்தது என்று சொல்லி பெருமளவு பணத்தைக் கொடுக்கின்றார். அதிலே பல கைமாறி சிறிதளவு பணம் இரண்டு தினங்களில் அவர் கைகளுக்கு கிடைக்கின்றது. இரண்டு தினங்களாக நா நனைத்துக் காத்திருந்த அவருக்கு அப்பணமோ பெரும் பணமாக தோன்ற மேலும் எழுதினார். அவருடைய இரண்டு பாடல்கள் ஒரே திரைப்படத்தில் இடம்பெற்றது. இரண்டுமே பிரசித்தி பெற, இன்று அவர் ஓர் சிறந்த பாடலாசிரியர் வரிசையில் இருந்து வருகின்றார்.

இது ஓர் உண்மைச் சம்பவம். அது போன்றுதான், எம் மன வலிகளும் வேதனைகளுமே எமது கவிதைகளுக்கான உரம். எமது எழுத்துக்களுக்கான அடித்தளம். வலிகளையும், வேதனைகளையும் மனத்திலே சுமக்கும்போதுதான் வரிகளும் கனமாக இருக்கும். சிந்தனையை ஒருங்கிணைத்து எம் இனத்தை, எம்மினத்தின் ஒற்றுமையை ஊக்குவிக்கும் கவிதைகளை, எம் உணர்ச்சிகளை என்றுமே குன்றவிடாது தமிழனாக ஒருங்கிணைத்து வைத்திருக்க தங்கள் ஆக்கங்களும் தேவை. தங்களால் முடியாது என்று எதுவுமே இல்லை. மாபெரும் வீரன் அலெக்ஸாண்டரின் அகராதியில் முடியாது என்று ஒன்று இல்லை என்று சொல்ல கேள்விப்பட்டிருக்கின்றோம், அதுபோன்று உங்களாலும் முடியாதது என்று எதுவுமில்லை. முடியும். நிச்சயம் முடியும், ஓர் சிறு குறிப்பு, யாரையும் தாக்கி எழுதும் போதுதான் அல்லது யாரையும் சார்ந்து எழுதும் போதுதான் விமர்சனங்கள் எழும். ஒரே குறிக்கோளை மனதிலே வைத்து எழுதினால் உங்கள் எழுத்துக்கள் கூடப் பேசும். எம் தமிழன் என்கின்ற உணர்ச்சி... தமிழர்கள் எல்லோரும் ஒன்றாக ஒருமித்து எம் தேசத்தை வென்றெடுக்க வேண்டும் என்கின்ற ஓர் குறிக்கோள் மட்டுமே. வல்வை உங்களால் முடியும். எம் மக்களின் உணர்ச்சிகளை, எம் மக்களின் ஒருங்கிணைப்பிற்கு தங்கள் ஆக்கங்களால் சாதிக்க முடியும். தங்கள் கவிதைகளை நான் பலமுறை படித்திருக்கின்றேன்.

எழுதுங்கள், உங்கள் பேனா முனை மழுங்கும் வரை, உங்கள் உயிர் தமிழ் என்னும் ஒன்றைத் தாங்கி வரும் வரையும்.

Share this post

Link to post
Share on other sites

வணக்கம் யாழ் நிலவன்,

மகிழ்ச்சியளிக்கின்றது தங்களின் மீள் வருகை

வருக,வருகவென வரவேற்க விரிகிறதென் இருகை!!

வாழ்த்துக்கள்!!! :D

Share this post

Link to post
Share on other sites

name='யாழ்நிலவன்' timestamp='1294414927' post='631949']

வணக்கம் காரணிகன்,

நான் நலமே, தாங்களும் நலனுடன் வாழ வாழ்த்துகின்றேன். தங்கள் பெயர் என்னவோ உண்மையானதோ அல்லது புனை பெயரோ யானறியேன். இருப்பினும் சில வார்த்தைகள் சொல்ல விருப்பம். தங்களின் பெயர் பல அர்த்தம் நிரம்பிய பெயர். தாங்கள் என்ன கருத்தில் அதனைப் பாவிக்கின்றீர்களோ தெரியவில்லை, இருப்பினும் கார் + அணிகன் = காரணிகன். அதாவது கார் என்பது கருமை என்பதையும், அணிகன் என்பது ஆண்பால் விகுதியேற்ற அணிந்திருப்போன் என்பது. எனவே இப்பெயரினை பண்டைய தமிழ் இலக்கியத்தில் உவமையாகப் பாவித்திருக்கின்றார்கள். இதிலே பல அர்த்தங்கள் பொதிந்துள்ளன. மீண்டும் ஓர் சந்தர்ப்பத்தில் இவை பற்றி மேலும் விளக்குகின்றேன். எனினும் தங்கள் அடிக்குறிப்பு என் மனதை வாட்டிவிட்டது. பணம் பதவி வாழ்விற்கு எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் உன் பிறப்பின் அடையாளம். இன்று உன் அடையாளம் எவ்வாறிருக்கின்றது? எவ்வுலகில் வாழினும், எவ்வாறு வாழினும், உனதாயினும், உன் சந்ததியின் அடையாளம் என்றுமே, தமிழன், தமிழீழத்தவன் என்பது அழியப்போவதில்லை. மானிட வர்க்கம் பல பரிணாம வளர்ச்சியினூடே வளர்ந்தது. என்றென்றும் உன் வம்சமானாலும், உனதானாலும் உன்னுடைய DNA என்று அழைக்கப்படும் "இனக்கீற்று" நீ திராவிடன் என்பதையே உரைத்து நிற்கும். உன் வாழ்வியலமைப்பு எவ்வாறு மாறினும், இனக்கீற்றில் உன் மொழி, தேசியம், உன் வாழ்வாதாரம் என்பன என்றுமே அழிக்கப்படப்போவதில்லை. மொழியும், தேசியமுமே உனக்கான அடையாளம். பணமோ பதவியோ உன் அடையாளத்தைத் தீர்மானிக்கப்போவதில்லை. தமிழனாக வாழ், ஈழத்தவனாக இரு...

வணக்கம் அண்ணா

காரணிகன் புனைப்பெயர்தான் முன்னர் சொந்தப் பெயரில்தான் எழுதிவந்தேன்

பின்னர்தான் காரணிகன் என்ற புனைப் பெயருக்குள் புகுந்துகொண்டேன்

காரணிகன் என்பதற்கு நீங்கள் குறிப்பிட்டதுபோலும் பொருள்படலாம்

தமிழில் சில சொற்களுக்கு பல அர்த்தங்கள் உண்டு

நான் தெரிவு செய்த காரணிகன் என்ற பெயரின் அர்த்தம்

நடுவர் மத்தியஸ்த்தர்என்பதை குறிக்கிறது

ஆங்கிலத்தில் arbitrator என்று சொல்லப்படுகிறது

எனது அடிக்குறப்பிலுள்ள வாக்கியம் தங்கள் மனதை வாட்டிவிட்டதாக குறிப்பிட்டுள்ளீர்கள்

அதனை நான் எதிர்மறையாகத்தான் எழுதியுள்ளேன்

பணத்தாசை பதவி ஆசை கொண்டு நம் இனத்துக்கு எதிராக குழிபறிக்கும்நம்இனத்தை சேர்ந்தவர்களே

பணம் பதவிக்காக தமிழ் இனத்தை விற்று பிழைக்கிறார்களே அந்த ஆதங்கத்தில் இடப்பட்டதுதான்

இந்த அடிக்குறிப்பு

நான் என்றும் தமிழனாகவே வாழ்கின்றேன் ஈழத்தவனாகவே இருக்கின்றேன்

Share this post

Link to post
Share on other sites

கொல்லைக்குள்ளேயே நின்றால் எப்படி ? :D வாருங்கோ யாழ்நிலவன்.

Share this post

Link to post
Share on other sites

வணக்கம் யாழ் நிலவன்,

மகிழ்ச்சியளிக்கின்றது தங்களின் மீள் வருகை

வருக,வருகவென வரவேற்க விரிகிறதென் இருகை!!

வாழ்த்துக்கள்!!! :D

வணக்கம், தங்களின் வரவேற்பிற்கு அகமகிழ்கின்றேன்.

கொல்லைக்குள்ளேயே நின்றால் எப்படி ? :D வாருங்கோ யாழ்நிலவன்.

வணக்கம் இணையவன்,

கொல்லைக்குள்ளையே நிக்க வைச்சிடுறாங்கள். என்னத்தைச் செய்யுறது? நானும் வெளியில வந்து எழுதுவம் எண்டு யோசிச்சா, பெரும் பாணம் ஒன்று வைத்திருக்குறாங்கள், "துரோகி". எங்க எய்து விடுவார்களோ என்று பயம் வேறு, அம்பெய்தால் என்ன என்று எழுதினால் வரும் கருத்தூட்டங்களுக்குப் பதில் சொல்லியே ஆகவேண்டும். எனவே கொஞ்சம் தாமதமெடுத்து வருகின்றேன். நிச்சயம் எழுதுவேன்.

Share this post

Link to post
Share on other sites

எனது அடிக்குறப்பிலுள்ள வாக்கியம் தங்கள் மனதை வாட்டிவிட்டதாக குறிப்பிட்டுள்ளீர்கள்

அதனை நான் எதிர்மறையாகத்தான் எழுதியுள்ளேன்

பணத்தாசை பதவி ஆசை கொண்டு நம் இனத்துக்கு எதிராக குழிபறிக்கும்நம்இனத்தை சேர்ந்தவர்களே

பணம் பதவிக்காக தமிழ் இனத்தை விற்று பிழைக்கிறார்களே அந்த ஆதங்கத்தில் இடப்பட்டதுதான்

இந்த அடிக்குறிப்பு

நான் என்றும் தமிழனாகவே வாழ்கின்றேன் ஈழத்தவனாகவே இருக்கின்றேன்

வணக்கம் காரணிகன்,

தங்கள் அடிக்குறிப்புப் பற்றி சொல்லவேண்டும். அடிக்குறிப்பு என்பது, சில முக்கிய தகவல்களையோ அல்லது நற் செய்திகளையோ தாங்கி வருவதாக இருப்பதே சிறந்தது எனக்கூறுவார்கள். காரணம், தங்கள் ஒவ்வொரு மடலிலும் அது இடம்பெறப்போகின்றது. பார்ப்பவர்கள், மனதில் திரும்பத்திரும்ப பதியப்படும்போது அது அவர்கள் மனதுக்குள் மனப்பாடமாகிவிடும். அத்தோடு அது அவர்கள் வாழ்க்கையோடு ஒன்றிப்போய்விடும். அவர்கள் வாழ்வும் அவ்வாறே மாறும். எனவேதான் அதிற் சிறிது கவனத்தைச் செலுத்தினேன். இளம் சமுதாயம் முதல் முது சமுதாயம் வரை உலவும் இவ் இணையத்தில், தங்கள் கருத்தினைப் பார்க்கும் ஓர் இளம் சமுதாயப் பிள்ளை மனதில் இவ் எண்ண ஓட்டம் ஓட ஆரம்பிக்குமானால், தேசியம் என்பதுவும், தன்னாட்சி என்பதுவும், விடுதலை என்பதுவும் பின்னர் அடுத்த சமுதாயத்தின் மனக்கண்ணில் ஓர் கேலிக்கூத்தான விடயமாக மாற்றப்பட்டுவிடும்.

எனவேதான், நான் அதில் சிரத்தை எடுத்தமைக்கான காரணம்.

தங்கள் அறிவுரைக்கு நன்றி

தங்களின் எண்ணக்கருவின்படி எனது கையெழுத்தை மாற்றிவிட்டேன்

மீண்டும் நன்றி

Share this post

Link to post
Share on other sites

வடக்கிலேயிருந்தும் தெற்கிலே இருந்தும் எம்மீது திணிக்கப்பட்ட இன அழிப்பின் இரத்தச் சுவடுகளைத் தாங்கி நிற்கும் எம்மிடம் ஒற்றுமை இல்லையே... அவ்வொற்றுமையைக் கட்டியெழுப்ப வேண்டும். எழுத்தாளர்களால் பூமியைப் பிளந்தும் புதுயுகம் படைக்கலாம். நான் சொன்ன வார்த்தைகளை ஒரு நிமிடம் மீண்டும் நினைக்கின்றேன் .

களத்தில் துப்பாக்கிப் போராட்டம் மட்டுமல்ல போராட்டம்

பேனாகூட பெருந்திசை மாற்றும்

நாமும் போராளிகள்தான் துப்பாக்கி ஏந்தியவர்களல்ல

துர்ப்பாக்கியத்தால் பேனா ஏந்தியவர்கள்....

(http://yarlnilavan.wordpress.com/2009/03/07/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa/)

அடக்க இது ஒன்றும் அரையடிப்பூனையல்ல

ஆறடிப் புலி என்று உரக்கவே சொல்லுவோம்.......

(http://yarlnilavan.wordpress.com/2009/03/06/%e0%ae%85%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81-%e0%ae%92%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%9f%e0%ae%bf/)

தமிழ் வரிகள் கூட வாழ்க்கையை எழுது... வரலாறூ எழுத தமிழ் மொழியுமே போதும்... நான் மட்டுமுரைத்தால் நா மட்டும் தழுதழுக்கும் நாம் ஒன்றாய் உரைத்தால் ஐ. நாவுமே தழுதழுக்கும்....

உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள்.

Share this post

Link to post
Share on other sites

வணக்கம் அண்ணா

தங்கள் அறிவுரைக்கு நன்றி

தங்களின் எண்ணக்கருவின்படி எனது கையெழுத்தை மாற்றிவிட்டேன்

மீண்டும் நன்றி

அன்பகலா பெருமதிப்புக்குரிய காரணிகன்,

நான் கூறிய கருத்துக்களை உள்வாங்கி அதற்காகக் கோபம் அடையாது தாங்கள் மாற்றத்தினை ஏற்படுத்தியமைக்காக என்றென்றும் சிரந்தாழ்த்தி நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். நான் தமிழ் மீது கருணை காட்டுவதற்குக் காரணம் யாதெனில் இன்னமும் 250 வருடங்களில் தமிழ் மொழி சிதைவடைந்து விடும் என்றும் 1000 வருடங்களுக்குள் தமிழ் மொழி இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிடும் என்று ஓர் கணிப்புக் கூறி இருக்கின்றது. தமிழ் மொழியின் அழிவை நாம் தடுக்க வேண்டுமானால் எமக்கென ஒரு நாடு வேண்டும் இல்லையேல் அது 500 வருடங்களில் கூட முற்றாக அழிந்துவிடும் என்று கூறப்படுகின்றது. இதனை நாம் தடுக்க வேண்டுமானல் நாம் தனிநாடு ஒன்றை அமைக்க வேண்டும், அல்லது அடுத்து வரும் எம் சமுதாயங்களுக்காவது எமது செம்மொழியை எடுத்துச் செல்லவேண்டும். இதனால் நாம் அதன் அழிவின் காலத்தை ஓரளவு தக்கவைக்க முடியும். நாம் எம் நாடு ஒன்றினை அமைக்கும்வரை எமக்கான தமிழ் மொழியின் பணி என்பது எம்மிடமே உள்ளது.

என்றென்றும் என் நெஞ்சிலிருந்து ஆயிரமாயிரம் நன்றிகளை உங்களுக்காக உதிர்க்கின்றேன்.

உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள்.

தங்கள் நன்றிகளுக்காக உவகை கொள்ளுகின்றேன்

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Topics

 • Posts

  • வவுனியாவில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா இல்லை! – அறிக்கை வெளியானது In இலங்கை     April 2, 2020 11:25 am GMT     0 Comments     1032     by : Litharsan வவுனியா, கற்குழியை சேர்ந்த பெண்ணொருவர் உயிரிழந்த நிலையில் அவர் நிமோனியா காய்ச்சல் காரணமாகவே உயிரிழந்துள்ளதாக வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். வவுனியா வைத்தியசாலையில் நேற்று காய்ச்சல் காரணமாக பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (புதன்கிழமை) அவர் மரணமடைந்திருந்தார். இதேவேளை இந்தப் பெண், கொரோனா நோய்த் தொற்றுக்குள்ளாகி மரணமடைந்திருந்தாரா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவரது இரத்த மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைகளுக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவரது பரிசோதனை அறிக்கையின் பிரகாரம் அவருக்கு கொரோனோ வைரஸ் தொற்றவில்லை என்று வைத்தியர்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறித்த பெண் நிமோனியா காய்ச்சல் காரணமாகவே மரணித்ததாகவும் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். குறித்த சம்பவத்தில் வவுனியா கற்குழி பகுதியை சேரந்த 56 வயதுடைய அருட்செல்வன் கலாராணி என்பவரே உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/வவுனியாவில்-உயிரிழந்த-ப-2/
  • ஒருவரின் உயிரிழப்பு 2 ஆயிரத்து 800 பேரை முடக்கியது- மருதானையில் சில பகுதிகள் முடக்கம்! In இலங்கை     April 2, 2020 5:41 am GMT     0 Comments     2165     by : Benitlas மருதானையிலுள்ள இமாமுல் அரூஸ் மாவத்தையில் உள்ள 230 குடும்பங்களைச் சேர்ந்த 819 பேரைக் கொண்ட பகுதி முடக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மருதானையினைச் சேர்ந்த ஒருவர் நேற்றைய தினம் உயிரிழந்தார். இந்தநிலையில் கொரோனா தொற்று நோயாளி வசித்த பகுதி என்ற அடிப்படையிலேயே குறித்த வீதி முடக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மருதானையிலுள்ள ஆர்னோல்ட் ரத்நாயக்க மாவத்தையில் உள்ள இரண்டாயிரம் பேர் வசிக்கும் பகுதியும் இதே காரணத்தின் அடிப்படையில் முடக்கப்பட்டுள்ளது. http://athavannews.com/ஒருவரின்-உயிரிழப்பு-2-ஆயி/
  • கொரோனா வைரஸ் தாக்கம்! வடக்கு - கிழக்கு மக்களுக்கு உதவ முன்வருமாறு அழைப்பு மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் உள்நாட்டு போரானது மிகப்பெரிய அழிவுகளை ஏற்படுத்தியிருந்தது. இதில் வடக்கு, கிழக்கில் வாழும் பெரும்பாலான குடும்பங்கள் குறைந்தது ஒரு உயிரையாவது காவு கொடுத்திருந்தன. இதனால் மனதளவிலும் பொருளாதார நிலையிலும் இந்த குடும்பங்கள் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளன. என்றபோதும் கூட இன்றும் அதன் தாக்கம் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றானது சமூக தொலைவு, முடக்கம், ஊரடங்கு உத்தரவு என்பவற்றை ஏற்படுத்தி இன்னும் இன்னல்களை எதிர்கொள்ள செய்துள்ளது. அதிலும் குறிப்பாக நாள் கூலிக்காக வேலை செய்து ஒரு நேர உணவிற்காக பாடுபட்டு வந்த குடும்பங்கள் அதுவும் இல்லாத நிலையில் நிர்க்கதி நிலையை அடைந்துள்ளன. இது குறித்து அரசாங்கம் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது ஒருபுறம் இருந்தாலும் கூட இலங்கையர்களாகிய நாமும், எமது உறவுகளாகிய புலம்பெயர்ந்த மக்களும் தம்மால் முடிந்த உதவிகளை செய்ய முன் வருவது அவசியமாகும். அந்த வகையில் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாத இந்த குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கப்படுவது கட்டாயமாகும். https://www.ibctamil.com/srilanka/80/140341?ref=home-imp-flag
  • யாழ். மாவட்டத்தில் நேற்று புதிதாக 3 நோயாளர்கள் கொரோனா தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ள நிலையில் சுவிஸ் போதகருடன் நெருங்கிப் பழகியிருந்தவர்களில் மேலும் 10 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “யாழ்ப்பாணம், அரியாலையில் அமைந்துள்ள தேவாலயத்தில் கடந்த 15ஆம் திகதி இடம்பெற்ற ஆராதனையை நடத்திய சுவிஸிலிருந்து வருகை தந்திருந்த மதபோதகருடன் நெருங்கிப் பழகிய 20 பேரை காங்கேசன்துறையிலுள்ள ஓர் தனிமைப்படுத்தல் மையத்தில் கடந்த 23 ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தி கண்காணித்து வந்தோம். இவர்களில் கொரோனா நோய்த் தொற்றுக்கான எந்தவொரு அறிகுறிகளும் இதுவரை தமக்கு ஏற்பட்டதாக எவராலும் அறியப்படுத்தப்படவில்லை. இருப்பினும் இவர்களில் முதற்கட்டமாக 10 பேருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய கொரோனா தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நேற்று மாலை இவர்களில் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இம்மூன்று பேரும் சுவிஸ் நாட்டிலிருந்து வருகைதந்த போதகருடன் நெருங்கிப் பழகியவர்களாவர். இவர்கள் சிகிச்சைக்காக வெலிக்கந்த கொரோனா தொற்று சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். மேலும் மேற்படி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கியுள்ள ஏனைய 10 பேருக்குமான பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஏற்கனவே, கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ஏனையவர்களுக்கும் இப்பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது. இந்நிலையில், வட மாகாணத்தில் மேற்படி ஆராதனையில் பங்குபற்றி சுயதனிமைப்படுத்தலில் தத்தமது வீடுகளில் தங்கியுள்ள 326 பேரையும் சுயதனிமைப்படுத்தல் விதிகளை இறுக்கமாகக் கடைப்பிடித்து வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாமென கேட்டுக்கொள்கின்றோம். இவர்களில் யாருக்காவது காய்ச்சல், வறண்ட இருமல் மற்றும் தொண்டைநோ போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக உங்கள் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அல்லது பொதுச் சுகாதாரப் பரிசோதகருக்கு அறிவிப்பதுடன் உடனடியாக அருகிலுள்ள அரச வைத்தியசாலைக்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்கின்றோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. http://athavannews.com/யாழில்-சுவிஸ்-போதகருடன்/
  • இது ஓய‌த‌ அலை 3மூன்றில் அடிச்ச‌ அடி போல‌ இருக்கு /  இத‌ வாசித்த‌ பிற‌க்கு கொரோனா வ‌ந்த‌ பாதையால‌ திரும்பி பார்காம‌ ஓட‌ போகிறார் 😁/