Jump to content

வேண்டும் என்றே 'நோ பால்'- ஷேவாக்கிடம் மன்னிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

.

வேண்டும் என்றே 'நோ பால்'- ஷேவாக்கிடம் மன்னிப்பு கேட்டது இலங்கை கிரிக்கெட் வாரியம்

தம்புல்லா: இலங்கையின் தம்புல்லாவில் நேற்று நடந்த ஒரு நாள் போட்டியின் போது வேண்டும் என்றே நோபால் வீசியதற்காக இலங்கை சுழற்பந்து வீச்சாளர் சூரஜ் ரந்தீவும், இலங்கை கிரிக்கெட் போர்டும் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளனர்.

இலங்கையில் நடந்து வரும் முத்தரப்புத் தொடரில் முதல் போட்டியில் இந்தியா , நியூசிலாந்திடம் 200 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. இதனால் நேற்று நடந்த 2வது போட்டியில் அது இலங்கைக்கு எதிராக ஆக்ரோஷமாக ஆடியது. குறிப்பாக பந்து வீச்சாளர்கள் பிரமாதமாக பந்து வீசினர்.

இந்தியாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை திணறியது. இதனால் 46.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 170 ரன்கள் மட்டுமே எடுத்தது இலங்கை.

இந்தியத் தரப்பில் பிரக்யான் ஓஜா 3 விக்கெட்களை வீழ்த்தினார். பிரவீன் குமார், ரவீந்திர ஜடேஜா, இஷாந்த் சர்மா ஆகியோருக்கு தலா 2 விக்கெட்கள் கிடைத்தன. ஆசிஷ் நெஹ்ராவுக்கு ஒரு விக்கெட் கிடைத்தது.

இதையடுத்து பேட்டிங்கைத் தொடங்கியது இந்தியா. தொடக்க ஆட்டக்காரர் திணேஷ் கார்த்திக் தடுமாறியபடி ஆடினார். 10 ரன்கள் மட்டுமே எடுத்து அவர் ஆட்டமிழந்தார். அதேபோல விராத் கோலி டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அவரைத் தொடர்ந்து ரோஹித் சர்மாவும் டக் அவுட் ஆக இந்தியா அதிர்ந்தது.

இருப்பினும் ஷேவாக்கும், கேப்டன் டோணியும் இணைந்து மூழ்கத் தொடங்கிய கப்பலை நிலைநிறுத்தி ரன் குவிக்கத் தொடங்கினர். ஆரம்பத்தில் மெதுவாக ஆடி வந்த ஷேவாக் பின்னர் அதிரடிக்குத் தாவினார். படு வேகமாக ஆடிய அவர் 99 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். டோணியும் அவுட் ஆகாமல் 23 ரன்களைச் சேர்த்தார்.

இதனால் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்தியா. இதை 34.3 ஓவர்களில் சாதித்தது இந்தியா.

ரந்தீவின் 'சின்னப்புள்ளைத்தனம்':

நேற்றைய போட்டியின்போது இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ரந்தீவ் சின்னப்புள்ளைத்தனமாக நடந்து கொண்டார்.

35வது ஓவரின் தொடக்கத்தில் இந்தியா 5 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலை. ஷேவாக் 99 ரன்களுடன் இருந்தார். அவர் ஒரு ரன் எடுத்தால் சதம் கிடைக்கும் என்ற நிலை.

இந்த நிலையில் ரந்தீவ் பந்து வீச வந்தார். முதல் பந்தை ஷேவாக் எதிர்கொண்டார். அதை அவர் அடிக்கவில்லை. பந்தை விக்கெட் கீப்பர் சங்கக்காரா பிடிக்கத் தவறியதால் அது நேராக பவுணட்ரிக்குப் போய் விட்டது. இதையடுத்து ஷேவாக் சதமடிக்கவும், இந்தியா வெல்லவும் ஒரு ரன் மட்டுமே தேவைப்பட்டது.

அடுத்து வீசப்பட்ட 2 பந்துகளையும் ஷேவாக் சந்தித்தார். இருப்பினும் அவரால் ரன் எடுக்க முடியவில்லை. 4வது பந்தை ஷேவாக் சந்தித்தார். அப்போது பந்து லாவகமாக வந்ததால் அதைத் தூக்கி அடித்தார். பந்து சிக்சருக்குப் பறந்தது. ஆனால் நடுவர் அதை நோபால் என்று கூறி விட்டார்.

இதனால் ஷேவாக் அதிர்ச்சி அடைந்தார். அவரது சத வாய்ப்பு பறிபோனது, அதேசமயம், இந்தியா வெற்றி பெற்றது.

இந்த நிலையில், ரந்தீவ் வேண்டும் என்றே கிரீஸை விட்டு வெளியில் வந்து நோபாலாக வீசினார் என்று கிரிக்கெட் வர்னணையாளர்கள் சரமாரியாக விமர்சித்துத் தள்ளி விட்டனர். ஷேவாக் சதம் அடித்து விடாமல் தடுக்கவே இவ்வாறு அவர் நடந்து கொண்டதாகவும் விமர்சித்தனர்.

ஷேவாக்கும் கூட ரந்தீவை தனது பேட்டியின்போது விமர்சித்தார். அவர் கூறுகையில், ஒரு இளம் வீரர் இவ்வாறு நடந்து கொண்டது அழகல்ல. ஒரு வீரர் 99 ரன்களில் இருக்கும்போது அவரை சதம் எடுக்க விடாமல் தடுக்க இதுபோல பவுலர்கள் நடந்து கொள்வது புதிதல்ல. ஆனால் வேண்டும் என்றே நோபால் போடுவது கிரிக்கெட் அல்ல. வளரும் வீரரான ரந்தீவ் இதுபோல செயல்படக் கூடாது என்றார் சற்றே கோபத்துடன்.

ஆனால் ரந்தீவ் வேண்டும் என்றே பந்து வீசவில்லை என்று இலங்கை கேப்டன் சங்கக்காரா கூறினார்.

இந்த நிலையில் நேற்று போட்டி முடிவடைந்ததும், ஷேவாக்கின் அறைக்குச் சென்ற ரந்தீவ் அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். அதேபோல இலங்கை கிரிக்கெட் வாரியமும் இந்தியாவிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

இதுகுறித்து இந்தியகிரிக்கெட் அணியின் மேலாளர் ரஞ்சீவ் பிஸ்வாலை இன்று காலை தொலைபேசியில் தொடர்பு கொண்ட இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் நிஷாந்த் ரணதுங்கா, நடந்த சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டார். ரந்தீவ் குறித்து விசாரணை நடத்தப்பட்டு உரியநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.

அடுத்த போட்டி

முத்தரப்புத் தொடரில் அடுத்த போட்டி 19ம் தேதி இலங்கைக்கும், நியூசிலாந்துக்கும் இடையே நடைபெறவுள்ளது.

நன்றி தற்ஸ் தமிழ்.

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பிரச்சனையும் ஓஞ்ச பாடு இல்லை.... :lol:

Link to comment
Share on other sites

இவ்வாறு இலங்கை அணி மாத்திரமே செய்வது இல்லை. சகல அணிகளும் இவ்வாறு பலவிதமான தந்திரங்களை செய்வது வழமை. விளையாட்டில் தந்திரங்கள் எப்போதும் காணப்படும். வெற்றி என்று போட்டிபோடும்போது அங்கு ஓர் நாகரீகம் - Decencyக்கு சவால் வருவது வழமை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியாக பந்தைப் போட்டிருந்தால் சிலவேளை அவர் அவுட்டாகி இருக்கலாம், அல்லது ரன் எடுக்காமலும் போயிருக்கலாம் , இதால் எல்லோரும் இந்தியாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டியதாகி விட்டது! :lol:

Link to comment
Share on other sites

இலங்கை வீரர்கள் எப்போதுமே நாகரீகம் தெரியாதவர்கள். ‐ கங்குலி

18 August 10 10:29 am (BST)

இலங்கை வீரர்களுக்கு ஆடுகளத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற நாகரீகம் தெரியாது. என்று முன்னாள் இந்திய அணியின் தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்;.

முத்தரப்பு கிரிக்கெட்டில் இந்தியா இலங்கை இடையே நடந்த போட்டியில் சேவாக்கை சதம் அடிக்க விடாமல் ரன்தீவ் நோ பால் வீசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்ட இலங்கை கிரிக்கெட் வாரியம் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் இலங்கை வீரர் தில்ஸ்hன், ரன்தீவிடம் நோபால் போட சொன்னது ஸ்டம்புக்கு கீழே உள்ள மைக்ரோ போன் மூலம் பதிவாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே இந்த விவகாரத்தில் அணியின் தலைவர் என்ற முறையில் தான் பொறுப்பேற்பதாகவும், தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று இலங்கை அணித் தலைவர் சங்ககரா தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் ஒரு நோபால் கூட ரன்திவ் வீசவில்லை. நான் சதம் அடிப்பதை விரும்பாததால் வேண்டுமென்றே நோ பால் போட்டு வாய்ப்பை கெடுத்துவிட்டார் என்று சேவக் குற்றம் சாட்டினார். ரன்தீவின் இந்த செயலுக்கு முன்னாள் வீரர்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்திய அணியின் முன்னாள் தலைவர்; சவுரவ் கங்குலி கூறியதாவது: விளையாட்டில் வெற்றி, தோல்வி சகஜம். முதலில் அதைப் புரிந்து கொள்ள வேண்டும். இலங்கை வீரர்கள் எப்போதுமே நாகரீகம் தெரியாதவர்கள். வெற்றி பெறும்போது ஆர்ப்பரிக்கும் அவர்கள் தோற்கும் நிலையில் இருந்தால், எது வேண்டுமானாலும் செய்வார்கள்.

சேவக் சதம் அடிக்கக்கூடாது என்று வேண்டுமென்றே நோபால் வீசி கிரிக்கெட்டை அவமதித்து விட்டார்கள். அணித் தலைவர்; மற்றும் சகவீரர்கள் சொல்லாமல் ரன்தீவ் அப்படி செய்திருக்க மாட்டார்.

ஒருமுறை கண்டி டெஸ்டில் நான் 98 ரன் எடுத்திருந்தேன். அப்போதும் நோ பால் வீசி என்னை சதம் அடிக்க விடாமல் தடுத்தனர். இந்த மாதிரி வீரர்களை ரசிகர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று கங்குலி கூறினார்

http://globaltamilnews.net/tamil_news1.php?nid=28652&cat=4

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியாக பந்தைப் போட்டிருந்தால் சிலவேளை அவர் அவுட்டாகி இருக்கலாம், அல்லது ரன் எடுக்காமலும் போயிருக்கலாம் , இதால் எல்லோரும் இந்தியாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டியதாகி விட்டது! :lol:

கையோடை...... "தமிழக அரசியல் வாதிகள் கோமாளிகள்" எண்டதுக்கும் மன்னிப்பு கேட்டிருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

இன்னமும் ஒரு ஓட்டம் பெற்றால் வெற்றி என்கின்ற நிலையில், அந்த நேரத்தில் no ball போடப்பட்டமையால், அவர் ஆறு ஓட்டங்கள் அடித்தாலும் அந்த ஆறு தனிநபர் ஓட்டத்தில் சேர்க்கப்படவில்லையா? வழமையில் no ball க்கு அடிக்கும் ஓட்டங்கள் தனிநபரின் ஓட்ட எண்ணிக்கையில் சேர்க்கப்படும் தானே? அவர் 99 நிலையில் இருந்தபோது அந்தநேரம் இன்னமும் 50, 100 ஓட்டங்கள் வெற்றி பெறுவதற்கு இருந்தால் அந்த நிலையில் no ball க்கு ஆறு ஓட்டங்கள் அடித்தால் அவையும் தனிநபர் ஓட்டத்தில் உள்ளடக்கப்படாதா? நுணுக்கமான விதிகள் விளங்கவில்லை. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னமும் ஒரு ஓட்டம் பெற்றால் வெற்றி என்கின்ற நிலையில், அந்த நேரத்தில் no ball போடப்பட்டமையால், அவர் ஆறு ஓட்டங்கள் அடித்தாலும் அந்த ஆறு தனிநபர் ஓட்டத்தில் சேர்க்கப்படவில்லையா? வழமையில் no ball க்கு அடிக்கும் ஓட்டங்கள் தனிநபரின் ஓட்ட எண்ணிக்கையில் சேர்க்கப்படும் தானே? அவர் 99 நிலையில் இருந்தபோது அந்தநேரம் இன்னமும் 50, 100 ஓட்டங்கள் வெற்றி பெறுவதற்கு இருந்தால் அந்த நிலையில் no ball க்கு ஆறு ஓட்டங்கள் அடித்தால் அவையும் தனிநபர் ஓட்டத்தில் உள்ளடக்கப்படாதா? நுணுக்கமான விதிகள் விளங்கவில்லை. :lol:

போன ஜபியல்ல சுரஸ் ரெயினா கடசி கட்டத்தில 'நோ போல்லுக்கு சிக்ஸ் அடிக்க 6 ரன்ஸ்சும் குடுத்து பிறக்கு நோ போல்லுக்கும் ஒரு ரன்ஸ் குடுத்தவை :D:D

Link to comment
Share on other sites

No Ball

1. Mode of delivery

(a) The umpire shall ascertain whether the bowler intends to bowl right handed or left handed, over or round the wicket, and shall so inform the striker.

It is unfair if the bowler fails to notify the umpire of a change in his mode of delivery. In this case the umpire shall call and signal No ball.

(b) Underarm bowling shall not be permitted except by special agreement before the match.

2. Fair delivery - the arm

For a delivery to be fair in respect of the arm the ball must not be thrown. See 3 below.

Although it is the primary responsibility of the striker's end umpire to ensure the fairness of a delivery in this respect, there is nothing in this Law to debar the bowler's end umpire from calling and signalling No ball if he considers that the ball has been thrown.

(a) If, in the opinion of either umpire, the ball has been thrown, he shall

(i) call and signal No ball.

(ii) caution the bowler, when the ball is dead. This caution shall apply throughout the innings.

(iii) inform the other umpire, the batsmen at the wicket, the captain of the fielding side and, as soon as practicable, the captain of the batting side of what has occurred.

(b) If either umpire considers that after such caution a further delivery by the same bowler in that innings is thrown, the umpire concerned shall repeat the procedure set out in (a) above, indicating to the bowler that this is a final warning.

This warning shall also apply throughout the innings.

© If either umpire considers that a further delivery by the same bowler in that innings is thrown,

(i) the umpire concerned shall call and signal No ball. When the ball is dead he shall inform the other umpire, the batsmen at the wicket and, as soon as practicable, the captain of the batting side of what has occurred.

(ii) the umpire at the bowler's end shall direct the captain of the fielding side to take the bowler off forthwith. The over shall be completed by another bowler, who shall neither have bowled the previous over nor be allowed to bowl the next over.

The bowler thus taken off shall not bowl again in that innings.

(iii) the umpires together shall report the occurrence as soon as possible to the Executive of the fielding side and any Governing Body responsible for the match, who shall take such action as is considered appropriate against the captain and bowler concerned.

3. Definition of fair delivery - the arm

A ball is fairly delivered in respect of the arm if, once the bowler's arm has reached the level of the shoulder in the delivery swing, the elbow joint is not straightened partially or completely from that point until the ball has left the hand.

This definition shall not debar a bowler from flexing or rotating the wrist in the delivery swing.

4. Bowler throwing towards striker's end before delivery

If the bowler throws the ball towards the striker's end before entering his delivery stride, either umpire shall call and signal No ball. See Law 42.16 (Batsmen stealing a run). However, the procedure stated in 2 above of caution, informing, final warning, action against the bowler and reporting shall not apply.

5. Fair delivery - the feet

For a delivery to be fair in respect of the feet, in the delivery stride

(i) the bowler's back foot must land within and not touching the return crease.

(ii) the bowler's front foot must land with some part of the foot, whether grounded or raised, behind the popping crease.

If the umpire at the bowler's end is not satisfied that both these conditions have been met, he shall call and signal No ball.

6. Ball bouncing more than twice or rolling along the ground

The umpire at the bowler's end shall call and signal No ball if a ball which he considers to have been delivered, without having previously touched the bat or person of the striker,either (i) bounces more than twiceor

(ii) rolls along the ground before it reaches the popping crease.

7. Ball coming to rest in front of striker's wicket

If a ball delivered by the bowler comes to rest in front of the line of the striker's wicket, without having touched the bat or person of the striker, the umpire shall call and signal No ball and immediately call and signal Dead ball.

8. Call of No ball for infringement of other Laws

In addition to the instances above, an umpire shall call and signal No ball as required by the following Laws.

Law 40.3 - Position of wicket-keeper

Law 41.5 - Limitation of on side fielders

Law 41.6 - Fielders not to encroach on the pitch

Law 42.6 - Dangerous and unfair bowling

Law 42.7 - Dangerous and unfair bowling - action by the umpire

Law 42.8 - Deliberate bowling of high full pitched balls.

9. Revoking a call of No ball

An umpire shall revoke the call of No ball if the ball does not leave the bowler's hand for any reason.

10. No ball to over-ride Wide

A call of No ball shall over-ride the call of Wide ball at any time. See Law 25.1 (Judging a Wide) and 25.3 (Call and signal of Wide ball).

11. Ball not dead

The ball does not become dead on the call of No ball..37

12. Penalty for a No ball

A penalty of one run shall be awarded instantly on the call of No ball. Unless the call is revoked, this penalty shall stand even if a batsman is dismissed. It shall be in addition to any other runs scored, any boundary allowance and any other penalties awarded.

13. Runs resulting from a No ball - how scored

The one run penalty for a No ball shall be scored as a No ball extra. If other penalty runs have been awarded to either side, these shall be scored as in Law 42.17 (Penalty runs). Any runs completed by the batsmen or a boundary allowance shall be credited to the striker if the ball has been struck by the bat; otherwise they also shall be scored as No ball extras.

Apart from any award of a 5 run penalty, all runs resulting from a No ball, whether as No ball extras or credited to the striker, shall be debited against the bowler

.

14. No ball not to count

A No ball shall not count as one of the over. See Law 22.4 (Balls not to count in the over).

15. Out from a No ball

When No ball has been called, neither batsman shall be out under any of the Laws except 33 (Handled the ball), 34 (Hit the ball twice), 37 (Obstructing the field) or 38 (Run out).

http://www.sheetudeep.com/cricket/rule_noball.html

Link to comment
Share on other sites

ஐபிஎல் விதிகள் ஒருநாள் சர்வதேச போட்டி விதிகளில் இருந்து மாறுபாடு கொண்டதாய் காணப்படலாம் பையா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை வீரர்கள் எப்போதுமே நாகரீகம் தெரியாதவர்கள் : கங்குலி

:lol::wub:

[ வியாழக்கிழமை, 19 ஓகஸ்ட் 2010, 08:47.47 மு.ப GMT ]

இலங்கை வீரர்களுக்கு ஆடுகளத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற நாகரீகம் தெரியாது. என்று முன்னாள் இந்திய அணியின் தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

முத்தரப்பு கிரிக்கெட்டில் இந்தியா இலங்கை இடையே நடந்த போட்டியில் சேவாக்கை சதம் அடிக்க விடாமல் ரன்தீவ் நோ பால் வீசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்ட இலங்கை கிரிக்கெட் வாரியம் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் இலங்கை வீரர் தில்ஸ்hன், ரன்தீவிடம் நோபால் போட சொன்னது ஸ்டம்புக்கு கீழே உள்ள மைக்ரோ போன் மூலம் பதிவாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே இந்த விவகாரத்தில் அணியின் தலைவர் என்ற முறையில் தான் பொறுப்பேற்பதாகவும், தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று இலங்கை அணித் தலைவர் சங்ககரா தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் ஒரு நோபால் கூட ரன்திவ் வீசவில்லை. நான் சதம் அடிப்பதை விரும்பாததால் வேண்டுமென்றே நோ பால் போட்டு வாய்ப்பை கெடுத்துவிட்டார் என்று சேவக் குற்றம் சாட்டினார். ரன்தீவின் இந்த செயலுக்கு முன்னாள் வீரர்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்திய அணியின் முன்னாள் தலைவர்; சவுரவ் கங்குலி கூறியதாவது: விளையாட்டில் வெற்றி, தோல்வி சகஜம். முதலில் அதைப் புரிந்து கொள்ள வேண்டும். இலங்கை வீரர்கள் எப்போதுமே நாகரீகம் தெரியாதவர்கள். வெற்றி பெறும்போது ஆர்ப்பரிக்கும் அவர்கள் தோற்கும் நிலையில் இருந்தால், எது வேண்டுமானாலும் செய்வார்கள்.

சேவக் சதம் அடிக்கக்கூடாது என்று வேண்டுமென்றே நோபால் வீசி கிரிக்கெட்டை அவமதித்து விட்டார்கள். அணித் தலைவர்; மற்றும் சகவீரர்கள் சொல்லாமல் ரன்தீவ் அப்படி செய்திருக்க மாட்டார்.

ஒருமுறை கண்டி டெஸ்டில் நான் 98 ரன் எடுத்திருந்தேன். அப்போதும் நோ பால் வீசி என்னை சதம் அடிக்க விடாமல் தடுத்தனர். இந்த மாதிரி வீரர்களை ரசிகர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று கங்குலி கூறினார்.

Link to comment
Share on other sites

பையன் இணைத்த காணொளியில் சேவாகின் முகபாவனையே பல கதைகள் சொல்லுது..! ஆறு அடித்தவுடன் 32 பல்லும் தெரிய இளித்தவர் நோபோல் எண்டு தெரிஞ்ச உடன சுதி இறங்கி சப்பெண்டு ஆயிட்டார்..! :wub: நாடு வெண்ட சந்தோசம் கூட இல்லை..! இந்திய ஆட்டக்காரர் எல்லாரும் சுயநலவாதிகள் எண்டதும் சிங்களக்கூட்டம் எல்லாம் நயவஞ்சகக் கூட்டம் எண்டதும் நல்லாவே தெரியுது..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரண்டு பேருமே கள்ள பயலுகள், இப்படி நாகரீகம் இல்லாமல் இளையாடும் இரு நாட்டினரையும் சர்வதேசம் சகல விளையாட்டில் இருந்தும் ஒதுக்கி வைக்க வேண்டும். :wub::lol::D:D

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

இந்திய ஆட்டக்காரர் எல்லாரும் சுயநலவாதிகள் எண்டதும் சிங்களக்கூட்டம் எல்லாம் நயவஞ்சகக் கூட்டம் எண்டதும் நல்லாவே தெரியுது..!

மிக நல்ல கருத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா விளையாட்டுகளிலும் இப்ப நல்ல முன்னேற்றம் தெரிகிறது. இதுவரை லாட்டரி சீட்டு அளவுக்கு வந்துட்டுது. இனி விரைவில் குதிரை ரேசுக்கு வந்திடும். பிறகு என்ன பவிலியனில் இருந்து கொண்டு கவுண்டரில் பணத்தை கட்டிவிட்டு " கமான் , கமான் வன் நோபோல் பிளீஸ் எண்டு பைனாகுலரில பார்த்து கத்த வேண்டியதுதான். :rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.