Jump to content

மார்க்சியம் மற்றும் தேசியம் தொடர்பான அரசியல் உரையாடல்களும் யதார்த்தமும் : யதீந்திரா - ‘வியூகம்’ – சஞ்சிகையை முன்னிறுத்தி சில குறிப்புக்கள்-


Recommended Posts

1

‘வியூகம்’ – இந்த சஞ்சிகை குறித்து சில விடயங்களை பதிவு செய்ய வேண்டுமென்று எண்ணம் சில நாட்களாகவே இருந்தது. இவ்வாறான முயற்சிகள் குறித்து ஈடுபாடுள்ள நன்பர் ஒருவரும் இது குறித்து நீங்கள் சில விடங்களை பகிர்ந்து கொள்ளலாமே என்றும் கேட்டிருந்தார், எனினும் இப்போதுதான் அதற்கான சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது. இவ்வாறான கருத்தியல் விவாதங்களில் எல்லாம் ஒரு வகையான காதல் நீடித்த காலமொன்று இருந்தது உண்மைதான் ஆனால் இப்போதெல்லாம் இதில் பெரியளவு ஈடுபாடு காட்டுமளவிற்கு மனம் ஒப்புவதில்லை. இவ்வாறு கோட்பாடு, புரட்சிகர அரசியல் என்றெல்லாம் சொற்கள் வழி நம்மை அடையாளப்படுத்த முற்படுவது ஒரு வகையில் நமது ஆத்மதிருப்தி தொடர்பான விடயங்களோ என்றும் எண்ணத் தோன்றுகின்றது.

எனினும் இந்த குழுவினரின் கடந்தகாலம் தொடர்பாக என்னிடம் ஓரளவு அவதானம் இருந்ததும், இவர்களின் மார்க்சியம் குறித்த புரிதலில் உடன்பாடு இருப்பதாலும் இந்த சஞ்சிகை அடியொற்றிய எனது சில அபிப்பிராயங்களை பதிவு செய்ய விழைகின்றேன். புலிகளின் வீழ்ச்சிக்கு பின்னர் சமூக அக்கறையும் ஈடுபாடும் உள்ளவர்கள் மத்தியில் எழுந்திருக்கும் கேள்வி, அடுத்து என்ன என்பதாகும்.

புலிகளின் அரசியல் தமிழ் மக்களை இவ்வாறானதொரு வெறுமையில் கொண்டுவந்து விடும் என்று இவர்கள் எவருமே எண்ணியிருக்கவில்லை. அந்த வெறுமையின் சுமையை உணரும் ஒவ்வொருவரும் தமக்குத் தெரிந்த முறையில் சிந்திக்க முற்படுகின்றனர். அவ்வாறான முயற்சியில் ஒன்றுதான் இந்த மே-18 உம் அதன் வெளியீடான வியூகமும்.

உண்மையில் கடந்த முப்பது வருடங்களாக தமிழ்த் தேசிய அரசியலுக்கு தலைமைதாங்கிய புலிகளின் அதிர்சிகரமான அழிவுக்கு பின்னர் ஈழத் தமிழர்களின் அரசியல் எதிர்காலம் என்ன என்ற கேள்விக்கு எவரிடமுமே ஒழுங்கான பதில் இல்லை. புலிகளின் தலைமை தமிழ் மக்களை எங்கு கொண்டுவந்து விட்டிருக்கின்றது என்பதிலும் நம்மிடம் ஒரு தெளிவான பதில் இல்லை. எனது நன்பர் ஒருவர் புலிகள் எங்களை எங்கு கொண்டுபோய் விட்டிருக்கின்றனர் என்பதனை என்னால் சரியாக விளங்கிக் கொள்ள முடியாமல் இருக்கின்றது, 49 இல் விட்டிருக்கின்றனரா அல்லது 15 அல்லலு 16 ஆம் நூற்றாண்டிற்கு கொண்டு போயிருக்கின்றனரா? சொல்லத் தெரியவில்லை என்றார்.

அந்தளவிற்கு எல்லோர் மத்தியிலும் வெறுமை குடிகொண்டிருக்கின்றது. எனவே இவ்வாறானதொரு சூழலில் ஒவ்வொருவரும் தமக்கு தெரிந்த ஏதோவொன்றை பேச முயல்கின்றனர். இவ்வாறு அவர்கள் சிந்திக்க முற்படுவதை எவரும் பிழை என்றோ அதற்கு அவர்களுக்கு உரிமையில்லை என்றோ வாதிட முடியாது. நூறு பூக்கள் (கருத்துக்கள்) பூக்கட்டுமே என்ற உயர்ந்த அரசியல் பண்பின் வழியாகவே இதனை நாம் நோக்க வேண்டும். பல முரண்பட்ட நிலைப்பாடுகள் தோன்றினாலும் இறுதியில் நிலைக்கக் கூடியது எதுவோ அது மட்டுமே நிலைக்கும். அதுவே இயங்கியல் விதி. வியூகம் – இது, தேசியவாதம் குறித்து, சூறையாடப்படும் தமிழீழ வளங்கள், தேசிய விடுதலைப் போராட்டமும் புலிகளும் மற்றும் பெண்ணியம் ஆகிய தலைப்புகளை பேசு பொருளாக்கியிருக்கின்றது.

ஆனால் இந்த சஞ்சிகை அடிப்படையில் இவர்கள் முன்னர் வெளியிட்ட ‘உயிர்ப்பு’ கோட்பாட்டு இதழின் நீட்சியாகவே தெரிகிறது. ஒரு நோக்குடன் இயங்கியவர்கள் என்ற வகையில் இது இலகுவில் தவிர்க்கக் கூடிய ஒன்றல்ல என்பது விளங்கிக் கொள்ளக் கூடிய ஒன்றே! இந்த சஞ்சிகையில் இடம்பெற்றுள்ள ‘தேசியவாதம் குறித்து’ , ‘தேசிய விடுதலைப் போராட்டமும் புலிகளும்’, ‘பெண்ணியம்’ இப்படியான தலைப்பில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் ஏலவே உயிர்ப்பில் விவாதிக்கப்பட்ட விடயங்களை அடியொற்றியதாகவே இருக்கின்றது அந்தவகையில் இதில் ஏதும் புதிய பார்வைகள் இருப்பதாகக் கொள்ள முடியவில்லை. ஏதோ பேச வேண்டும் என்னும் மனவேதனையின்பால் உந்தப்பட்டு எழுதப்பட்டவைகள் போல்தான் இதில் உள்ள ஆக்கங்கள் இருக்கின்றன.

2

இவர்கள் குறித்து சில அடிப்படையான கேள்விகளை எழுப்புவதற்கு முன்னர் இவர்களது மார்க்சிய புரிதல் குறிப்பாக, இப்போது மே18, முன்னர் தமீழீழ மக்கள் கட்சி அதற்கு முன்னர் தீப்பொறி என இவர்களின் படிமுறைசார் இயங்குதளங்களின் போதான கோட்பாட்டுசார் பங்களிப்புக்கள் மற்றும் மார்க்சிய ஒளியில் தேசியவாதத்தை புரிந்து கொள்வதற்கான கோட்பாட்டுசார் பங்களிப்புக்கள் குறித்து சிறிது பார்த்துக் கொள்ளுவது அவசியம் என்றே கருதுகிறேன்.

எனது அவதானத்தில் மார்க்சியத்தை புதிய போக்குகளுக்கு ஏற்ப சிந்திக்கும் முறையை ஈழத்து தமிழ்ச் சூழலுக்கு அறிமுகப்படுத்திய பெருமை இவர்களையே சாரும். மரபுவழியான மார்க்சிய பார்வையே முடிந்த முடிபு என்னும் வகையான வரட்டு பார்வைகள் மேலோங்கியிருந்த சூழலில் புதிய உலக ஒழுங்கிற்கு ஏற்ப மார்க்சியத்தை புரிந்து கொள்ள முயலும் விவாதங்களை முன்னிறுத்தியவர்கள் இவர்கள் என்றால் அது மிகையல்ல.

குறிப்பாக மார்க்சியத்திற்கும் தேசியத்துக்குமான உறவை லத்தீன் அமெரிக்க பின்புலத்தில் விளங்கிக் கொள்ளும் வகையில் அந்தக் காலத்தில் பல கட்டுரைகளை இவர்கள் வெளியிட்டிருக்கின்றனர். அத்துடன் தமிழ்த் தேசிய அரசியலை மார்க்சிய பின்புலத்தில் விளங்கிக் கொள்வதற்கான இவர்களது ஆய்வுசார் பங்களிப்புக்கள் மிகவும் கனதியானவை.

இவ்வாறான கருத்தியல் விவாதங்கள் ஈழத்து தமிழ்ச் சூழலில் மேலோங்கியிருந்த குறும் மார்க்சியப் போக்கை கேள்விக்குள்ளாக்குவதில் கணிசமான பங்களிப்புக்களை வழங்கியிருக்கின்றது. ஆனால் இதில் உள்ள துரதிஸ்டவசமான நிலைமை என்னவென்றால் இன்றும் ஈழத்து தமிழ்ச் சூழலில் மேற்படி குறும் மார்க்சியப் போக்கே மார்க்சியம் என்னும் பேரில் வலம்வருவதுதான். இவ்வாறான வரட்டு மார்க்சியத் தரப்பினர் தமது தேசியம் தொடர்பான விவாதங்களில் குறுந் தேசியவாதம் என்னும் கருத்தை அடிக்கடி வலியுறுத்தி வந்திருக்கின்றனர் அவர்களது அடை மொழியையே இங்கு அவர்களது மார்க்சிய புரிதலுக்கு நான் பயன்படுத்தியிருக்கின்றேன்.

எனது மிகச் சொற்பளவான அறிவின் பிரகாரம், மார்க்ஸ் புதிய பைபிளையோ அல்லது குர்-ஆணை ஒத்த வேறு ஏதும் மதம்சார் ஒழுக்க நூல்களையோ எழுதவில்லை என்றே நம்புகிறேன். எனது துனிபு சரியாயின் மார்க்ஸ் நம்மை சுற்றி நிகழும் விடயங்களை புரிந் கொள்ளுவதற்கும். இடைவிடாத இயக்கதின் மூலம் மாற்றங்களை நோக்கிச் செல்லுவதற்குமான சிந்தனை முறைமை ஒன்றையே வழங்கியிருக்கின்றார். மார்க்சின் காலத்தில் இருந்தது போன்று இன்று மார்க்சியத்தை நாம் பார்க்க முடியாது. மார்க்சியம் புதிய சூழலில் பிரயோகிக்கப்படும் போது அது அந்த சூழலுக்கு ஏற்ப புதுவகை பொலிவைப் பெற முடியும் என்று நம்புவர்களில் நானும் ஒருவன். இதற்கு சிறந்த உதாரணங்களாக ரஸ்ய, சீன அனுபவங்களைக் கொள்ள முடியும்.

மார்க்சின் வாதம் லெனினால் செயற்பாட்டுத் தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டபோது, அது சோவியத் அனுபவங்களின் வழியாக, லெனினிசமாக வெளிப்பட்டது. அதுவே மவோவால் கையாளப்பட்ட போது சீன அனுபவங்களின் வழியாக மவோயிசமாக அடையாளம் கானப்பட்டது. இப்படியே லத்தீன் அமெரிக்காவிலும் ஆபிரிக்காவிலும் அந்தந்த சூழலின் தாக்கங்களுக்கு ஏற்ப தேசியவாத அரசியல் அனுபவங்களுடன் மார்க்சியம் நிலைபெற்றது. இதில் பிரஞ்சு மார்க்சியரான ரெஜி ரெப்கேயின் வாதம் முக்கியமானது.

லத்தீன் அமெரிக்க விடுதலை அரசியல் அனுபவங்களை உள்வாங்கிச் சிந்தித்த ரெப்கே தேசியத்துடன் இணையாத சோசலிசம் இனி உயிர்வாழ முடியாது அதே போன்று சோசலிச உள்ளடக்கத்தை கொண்டிருக்காத தேசியத்தாலும் பயனில்லை என்றார். ஆனால் நமது சூழலில் நடந்ததோ வேறு. நமது ஆரம்பகால மார்க்சியர்கள் மற்றும் இன்றுவரை அவர்கள் வழி சிந்திக்கும் கனவான்கள் எவருமே ஈழத்து தமிழ்ச் சூழலுக்கு ஏற்ப மார்க்சியத்தை புரிந்து கொள்ள முயலவில்லை மாறாக தாங்கள் மார்க்சியவாதிகளாக இருக்க வேண்டும் என்னும் உணர்வுநிலை சார்ந்தே மார்க்சியத்தை புரிந்து கொள்ள முயன்றனர்.

ஒருவகையில் இவர்கள் தமது அடையாளத்துவ அரசியலுக்காகவே மார்க்சியம் பேசியவர்கள்;. இந்த சிக்கலின் வெளிப்பாடுதான் சாதியத்திற்கு எதிராக ஆயுதப் போராட்டம் தொடங்கிய இவர்களால், இன்றுவரை அதனை பெருமையாகப் பேசிக் கொள்ளும் இவர்களால் வளர்ந்துவந்த தமிழர்களின் கொதிப்பான, முதன்மையான தேசிய அரசியலை புரிந்து கொள்ள முடியாமல் போனது.

இதனை மேலும் விளங்கிக் கொள்ள வேண்டுமாயின் மார்க்சியம் குறித்து மெத்தப் படித்தவரும் சீனசார்பு கம்யூனிஸ்ட கட்சியின் தலைவருமான தோழர் சண்முகதாசன் ஈழத் தமிழ் மக்களின் தேசியத்துவ தகுதி பற்றி கூறியிருக்கும் விடயங்களை கவனியுங்கள். ‘இலங்கைத் தமிழர்கள் ஏற்கனவே ஒரு தேசிய இனமாக வளர்ந்துள்ளார்களா என்ற கேள்விக்கு இல்லை என்றுதான் பதலளிக்க முடியும். ஏனென்றால் ஒரு இன மக்களை ஒரு தேசிய இனம் என்று அழைப்பதற்கு இருக்கவேண்டிய நிபந்தனைகள் பற்றிய ஸ்டாலின் புகழ்பெற்ற வரையறைகளில் உள்ள ஒரு நிபந்தனை இலங்கைத் தமிழர்களுக்கு கிடையாது. அவர்கள் ஒரு பொதுவான பொருளாதாரத்தைக் கொண்டிருக்கவில்லை. இது மெத்தப் படித்த கம்யூனிஸ்ட் சண்முகதாசனின் புரிதல். (பார்க்க – மார்க்சிய பார்வையில் இலங்கைச் சரித்திரம்- பம்.76).

முள்ளந்தண்டை போல்ஷவிக்குகளிடமும். செஞ்சேனையிடமும் அடகு வைத்திருந்த இவர்களால் இறுதிவரை அதனை தாண்டி நமது சூழலுக்கு ஏற்ப சிந்திக்க முடிந்திருக்கவில்லை. இதன் சிறந்த குறியீடுதான் இவர்கள் தங்களை சீனசார்பு கம்யூனிஸ்ட் கட்சி என்று பெருமையாக அழைத்துக் கொண்டமையாகும். இன்னொரு நாட்டின் பெயரில் எவ்வாறு இலங்கையில் தொழிற்பட முடியும், ஈழத்தில் செயலாற்ற முடியும் என்று இவர்கள் சிறிதளவு கூட சிந்தித்திருக்கவில்லை அந்தளவிற்கு முள்ளந்தண்டு இல்லாதவர்களாக இருந்திருக்கிறார்கள். உண்மையில் இங்கு நிகழ்ந்திருக்க வேண்டியது என்னவென்றால் மார்க்சிய, லெனினிச மற்றும் மாவோயிச அனுபவங்களானது நமது சூழலுக்கு ஏற்ப, அது சன்முகதாசனிசமாக நிலைபெற்றிருக்க வேண்டும். ஆனால் அப்படி நிகழ முடியாதளவிற்கு சுயசிந்தனை அற்றவர்களாக இவர்கள் இருந்திருக்கின்றனர்.

இதன் விழைவுதான் ஸ்டாலின் கூறியவற்றுள் ஒன்று இல்லை என்பதால் ஈழத் தமிழர்கள் தேசிய இனம் இல்லை என்னும் சிறுபிள்ளைத்தனமான வாதத்திற்கு சண்முகதாசனால் செல்ல முடிந்தது. என்னளவில் சொல்வேன், மார்க்சிய சிந்தனைகள் புதிய தலைமுறையினர் மத்தியில் பரவுவதை தடுத்து, அதனை இருட்டடிப்புச் செய்த பெருமை இவ்வாறானவர்களையே சாரும். அடிப்படையில் இவர்கள் மார்க்சிய விரோதிகள். சண்முகதாசன் வழி வந்த இவ்வாறான மார்க்சியர்கள், மார்க்சியம் குறித்த பிற்கால விவாதங்கள் எதனையுமே கருத்தில் கொள்ளவில்லை. விவாதத்திற்கு அப்பாற்பட்ட ஒரு மதவாதமாகவே மார்க்சியத்தை சுருக்கினர். பிற்கால மார்க்சிய விவாதங்களில் செல்வாக்குச் செலுத்திய கிராம்சிய, அல்தூசரிய சிந்தனைகளை இவ்வாறானவர்கள் இன்றுவரை விளங்கிக் கொண்டதேயில்லை. (‘அமைப்பியல் வெளிச்சத்தில் தேசியவாத்தை விளங்கிக் கொள்ளல்’ என்னும் தலைப்பில் உயிர்ப்பு -4 இல் மிகச் சிறந்ததொரு கட்டுரை அப்போது வெளியாகியிருந்தது.) தேசியவாதத்தை வெறுமனே குட்டி முதலாளித்துவ வாதமாக விளக்க முற்பட்ட இந்த வகை குறும் மார்க்சியர்கள் லத்தீன் அமெரிக்க அனுபவங்களை ஆரம்பத்தில் கருத்தில் எடுத்திருக்கவில்லை.

ஆனால் இவர்களால் பிரஸ்தாபிக்கப்பட்ட மரபுவழி மார்க்சியம் காலாதிவதியாகிவிட்ட பின்னர், இன்று போக்கிடமற்று கியுபா குறித்து விவாதிக்க முற்பட்டிருக்கின்றனர். இந்த இடத்தில் மீண்டும் சண்முகதாசனின் கருத்தொன்றை நினைவு கொள்ளலாம். ஜே.வி.பி குறித்த தனது விமர்சனத்தில் சண் சேகுவேரா குறித்து இவ்வாறு கூறுகின்றார். ‘இலங்கையில் வளரும் மாஓசேதுங் சிந்தனையின் செல்வாக்கை எதிர்க்க இந்த இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது என்பதில் சந்தேகம் இல்லை.

ட்ரொட்ஸ்கியின் தத்துவங்களும், சமாதான சகவாழ்வு, பாராளுமன்றம் மூலம் சமாதான மாற்றம் ஆகிய திரிபுவாதத் தத்துவங்களும் மென்மேலும் அவமானத்தைச் சந்தித்துள்ள படியால், இளைஞர்களை மாஓசேதுங் சிந்தனையின் புரட்சிகர உண்மைகளிலிருந்து திசை திருப்பி விடுவதற்காக பிற்போக்குவாதிகள் ‘சேகுவேரா’ என்ற நாமத்துடன் தொடர்பான போலிப் புரட்சித் தத்;துவத்தை துணைக்கு அழைக்க வேண்டியிருந்தது.

ஒப்பீட்டளவில் ஒரு சிறிய கூட்டம், ஆயுதம் தாங்கிய வீரசிகாமணிகள் அல்லது கொரில்லாக்கள் அரசு இயந்திரத்தை கைப்பற்றிவிட்டு அதன் பின்னர் மக்களை தம் பக்கம் வென்றெடுக்கலாம் என்ற சேகுவேரா தத்துவத்தை அவர்கள் பரப்பினர். இது பலமான தனிநபர் வாதமும், தொழிலாளி வர்க்கத்தின் மீது நம்பிக்கையற்ற குட்டி முதலாளித்துவ நிலைப்பாடுமாகும்.’ (பார்க்க – மார்க்சிய பார்வையில் இலங்கைச் சரித்திரம்) இந்த சண்முகதாசனின் வழித்தோன்றல்கள்தான இப்போது கியூபா குறித்து கலந்துரையாடல்களை நடாத்திவருகின்றனர். 3 இந்த வகையில் பார்த்தால் இன்று மே18 ஆக வெளிப்படும் இவர்களின் மார்க்சிய புரிதல் மிகவும் முன்னேறிய நிலையில் இருக்கின்றது என்பதில் ஜயமில்லை.

ஆனால் இவ்வாறான உரையாடல்கள் கருத்தியல் அர்த்தத்தில் சரி ஆனால் நடைமுறையில் இது மிகவும் சிக்கலானது பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இது நம்மை வெறும் கற்பனாவாதத்தில் திருப்தியுறச் செய்துவிடுகிறது. இவ்வாறு மார்க்சிய பின்புலத்தில் ஈழத் தமிழ் மக்களின் பிரச்சனையை விளக்க முற்படும் குழுவினர். ஈழத் தமிழ் மக்களின் பிரச்சனைக்கான தீர்வாக எதனை முன்மொழிய விரும்புகின்றனர்? மே 18 குழுவினர் தமிழீழம் என்னும் கோட்பாட்டில் நிலைகொண்டிருப்பதாகவே தெரிகிறது. இந்த சஞ்சிகையில் அந்த சொற்பதத்தை iயாண்டிருப்பத்தில் இருந்து இவர்களிடம் புலிகளிடம் இருந்தது போன்றதொரு தமிழீழம் குறித்த கனவே எஞ்சியிருப்பதாகக் கொள்ளலாம்.

புலிகளின் அர்த்தத்தில் தமிழ் ஈழம் என்பது பிரிந்து சென்று தனியான நாடொன்றை ஸ்தாபிப்பதாகும். இறுதிவரை புலிகள் அந்த இலட்சியத்திற்காக போராடி அழிந்திருக்கிறார்கள். இதற்காக புலிகள் அமைப்பின் போராளிகள் அளப்பரிய உயிர்தியாகங்களை செய்திருக்கின்றனர். நமது மக்கள் பெரும் விலையைக் கொடுத்திருக்கின்றனர். உலக விடுதலைப் போராட்ட வரலாறுகளை எடுத்துக் கொண்டால் ஈழத் தமிழர் தேசத்தில் நிகழ்ந்தது போன்ற தியாகங்களை வேறு எங்கும் நாம் கானமுடியாது. அந்தளவிற்கு ஒரு சிறிய தேசிய இனம் தனது சக்திக்கு மீறி தியாங்களைச் செய்து இன்று உருக்குலைந்து போயிருக்கின்றது. ஆனால் இத்தனை தியாகங்களாலும், உழைப்பாலும் குறிக்கப்பட்ட அந்த இலக்கை நோக்கி சிறிதளவு தூரம் கூட முன்னேற முடியவில்லை. ஏன்? இதன் அரசியல் உள்ளடக்கம் என்ன? ஈழத் தமிழர்களுக்காக போராட புறப்பட்ட அனைத்து இயக்கங்களும் ஆரம்பத்தில் தனிநாடு உருவாக்கவே புறப்பட்டனர் என்பது ஒன்றும் இரகசியமல்ல. ஆனால் அதில் புலிகளைப் போன்று உறுதியாக வேறு எந்தவொரு இயக்கமும், அரசியல் கட்சியும் இருந்ததில்லை. மாற்று ஏற்பாடுகளை நோக்கிப் போகக் கூடிய பல வாய்ப்புக்கள் புலிகளுக்கு கிடைத்த போதும் அதன் தலைமை அனைத்தையும் நிராகரித்து தமிழீழம் என்னும் ஒன்றிலேயே ஒருமித்திருந்தது.

இறுதியில் புலிகளின் கனவு ஈழத் தமிழர்களை நடுவீதியில் கொண்டு நிறுத்துவதிலேயே முடிந்திருக்கிறது. எனவே புலிகளின் அழிவின் மூலம் நாம் உள்வாங்கிக் கொள்ள வேண்டிய செய்தி என்னவென்றால் புலிகளின் அழிவுடன் அவர்கள் மாற்றுத் தெரிவுகளற்று முன்னிறுத்திய தமிழீழம் என்னும் நிலைப்பாடும் தோல்வியடைந்துவிட்டது என்பதே. எனவே மீண்டும் அதற்கு தூசுதட்ட முற்படுவது பிறிதொரு வகையிலான அரசியல் படுகுழியாகவே அமையும். எனவே மே18 ஆக இருக்கலாம் அல்லது மார்க்சியத்தின் வழி ஈழத் தமிழ் மக்களின் பிரச்சனைகளை விளக்க முற்படும் ஏனையோராக இருக்கலாம் அவ்வாறானவர்கள் முதலில் இந்த விடயத்தை கருத்தில் கொள்வது கட்டாயமானது. மே18 தரப்பினரின் தமிழீழம் என்னும் நிலைப்பாட்டை எடுத்துக் கொண்டால் இவர்கள் மார்க்சியத்தை சமகால நிலைமைகளுக்கு ஏற்ப பிரயோகிப்பது பற்றி பேசிக் கொண்டாலும், தமிழீழம் பற்றிப் பேசும் போது ஒரு வகையான கடந்தகாலத்தில் சிறைப்பட்டு சிந்திப்பவர்களாகவே இருக்கின்றனர்.

தீப்பொறியாக இயங்கிய இவர்கள் பின்னர் தனித்து இயங்கிய ஏனைய பல இயக்க உறுப்பினர்களை உள்வாங்கி தமிழீழ மக்கள் கட்சியாக தங்களை அடையாளப்படுத்தினர். இவர்கள் தமீழம் பற்றிப் பேசிய காலம்தான் விடுதலைப்புலிகளின் காலமும். இவர்களது தமிழீழம் என்னும் நிலைப்பாட்டை ஒரு கட்டுடைப்பு விமர்சனத்திற்கு உள்ளாக்கினால், களத்தில் விடுதலைப்புலிகள் தமிழ் ஈழத்திற்காக போராடிக் கொண்டிருந்ததால் புலிகளுக்கு சமாந்தரமானவர்களாக அதே வேளை அரசியலில் அவர்களைவிட முன்னேறியவர்களாக தம்மை நிலைநிறுத்த வேண்டுமாயின் புலிகள் உயர்த்திப்பிடித்த தமிழீழம் என்னும் ஒற்றை நிலைப்பாட்டையே தாமும் பற்றிப்பிடித்திருக்க வேண்டும் என்னும் உணர்வுநிலையே இவர்களிடம் இருந்திருக்கின்றது. தெற்காசிய பிராந்தியத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கைக் தீவில் வெறுமனே போராட்டம் நடாத்துவதன் மூலம் அதிலும் பிராந்திய வல்லரசான இந்தியாவிற்கு சண்டித்தனம் காட்டிக் கொண்டு ஒரு தனிநாட்டை பெற்றுவிட முடியுமென்று இவர்களை நம்பும்படி எது தூண்டியிருக்க முடியும். நிட்சயமாக இவர்கள் மிகவும் முன்னேறிய விஞ்ஞான பூர்வமான கோட்பாடொன்றை தாம் பின்பற்றுகிறோம் என்று வாதிட முயல்வார்களாயின் இவர்களால் பிராந்திய, புவிசார் அரசியல் நிலைமைகள் குறித்து துல்லியமான அவதானம் இல்லாமல் இயங்க முடியாது. உண்மையில் அந்தக் காலத்தில் இவ்வாறானவர்களிடம் நிலவிய புலியெதிர்ப்பு நிலைப்பாடே எந்தவிதமான ஆய்வுக் கண்ணோட்டமுமில்லாமல் புலிகளைவிட தம்மை முன்னேறிய பிரிவினராக காட்ட வேண்டுமென்னும் உணர்வுநிலைச் சிக்கலுக்குள் தள்ளியது. இதன் காரணமாவே இவர்களும் புலிகள் உயர்த்திப்பிடித்த தமிழ் ஈழம் என்னும் மறுபரிசீலனையற்ற நிலைப்பாடொன்றை நோக்கிச் சிந்திக்கத் தலைப்பட்டனர். இவர்கள் முன்னர் வெளியிட்ட உயிர்ப்பு-4 (ப.ம் -12) இல் தமிழ் ஈழ விடுதலைப்புலிகளை காகிதப் புலிகள் என்று வாணித்திருந்தனர். ஆனால் காகிதப்புலிகள் முன்னிறுத்திய அதே வழிமுறையின் முலமே தாமும் சிந்தித்தனர். மாவோவிடம் இருந்து கடன் எடுத்த ‘காகிதப்புலி’ வாதத்தை இவர்கள் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு பிரயோகித்த காலத்தில் உண்மையில் அவர்கள் காகிதப் புலிகளாக இருக்கவில்லை, நிஜப் புலிகளாகவே இருந்தனர்.

ஆரம்பத்தில் அமெரிக்காவை காகிதப்புலி என்று வர்ணித்த சீனப் பெருந்தலைவர் மாவோ 1972 களில் அமெரிக்கா காகிதப்புலி அல்ல நிஜப்புலிதான் என்று உணர்ந்து நிக்சனுடன் கைகுலுக்கிக் கொண்டார். அத்துடன் மவோசியத்தின் கதையும் முடிந்தது. புலிகள் இராணுவ ரீதியில் உச்சமாக இருந்தகாலத்தில் அவர்களின் வரலாற்று வெற்றியாகக் கருதப்பட்ட ஆணையிறவு வெற்றிக்கு பின்னர், புலிகள் காகிதப்புலிகள் அல்ல நிஜப்புலிகள்தான் என்பதை உணர்ந்து இவர்களில் பலரும் விடுதலைப் புலிகளை நோக்கி வந்தனர் என்பதே உண்மை. எனவே இவர்களிடம் ஈழத் தமிழ் மக்களின் தேவை என்ன என்பது குறித்து ஒரு தீர்க்கமான நிலைப்பாடு இருக்கவில்லை. இதன் விழைவுதான் இவர்கள் இப்போதும் புலம்பெயர் சூழலில் இருந்து கொண்டு தமிழ் ஈழம் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கின்றனர்.

இன்னும் வரும்..

இனியொரு

Link to comment
Share on other sites

சரி புலிகளிடம் தான் ஒரு நிலைப்பாடு இல்லை, உங்களின் ஈழத் தமிழ் மக்களின் தேவை என்ன என்பது குறித்து ஒரு தீர்க்கமான நிலைப்பாடு எது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாக்சியம் என்றால் என்ன? யாராவது சொல்ல முடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாக்சியம் என்றால் என்ன? யாராவது சொல்ல முடியுமா?

புத்தகங்கள் நிறைய உள்ளன அல்லது பல தளங்கள் உள்ளன!

மார்க்சியம் என்றால் என்ன?

மார்க்சியம் என்பது மூன்று துறைகளை உள்ளடக்கியது,

1. மார்க்சிய மெய்யியல்

2. மார்க்சிய பொருளியல்

3. மார்க்சிய அரசியல்

கம்யூனிசம் என்றால் என்ன?

கம்யூனிசம் என்பது பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கான சூழ்நிலைகள் பற்றிய கொள்கை விளக்கம் ஆகும்.

பாட்டாளி வர்க்கம் என்றால் என்ன?

பாட்டாளி வர்க்கம் என்பது சமுதாயத்தில் நிலவுகிற, முற்றாகத் தனது உழைப்பை விற்பனை செய்வதன் மூலம் மட்டுமே வாழ்ந்து வருகிற, எந்த வகையான மூலதனத்திடம் இருந்தும் லாபம் பெற்றுக் கொள்ளாத ஒரு வர்க்கமாகும். இந்த வர்க்கத்தின் இன்பமும் துன்பமும், வாழ்வும் சாவும், இதன் இருப்பும்கூட உழைப்புக்கான தேவையின் மீதே சார்ந்திருக்கின்றன. அதன் காரணமாக, மாறிக்கொண்டே இருக்கும் வணிக நிலைமையின் மீதும், கட்டுப்பாடற்ற வணிகப் போட்டியின் புரியாத போக்குகளின் மீதும் சார்ந்திருக்கின்றன. ஒரு சொல்லில் கூறுவதெனில், பாட்டாளி அல்லது பாட்டாளி வர்க்கம் என்பது 19-ஆம் நூற்றாண்டின் உழைக்கும் வர்க்கத்தைக் குறிக்கிறது

Link to comment
Share on other sites

நமது சூழலில் நடந்ததோ வேறு. நமது ஆரம்பகால மார்க்சியர்கள் மற்றும் இன்றுவரை அவர்கள் வழி சிந்திக்கும் கனவான்கள் எவருமே ஈழத்து தமிழ்ச் சூழலுக்கு ஏற்ப மார்க்சியத்தை புரிந்து கொள்ள முயலவில்லை மாறாக தாங்கள் மார்க்சியவாதிகளாக இருக்க வேண்டும் என்னும் உணர்வுநிலை சார்ந்தே மார்க்சியத்தை புரிந்து கொள்ள முயன்றனர்.

ஒருவகையில் இவர்கள் தமது அடையாளத்துவ அரசியலுக்காகவே மார்க்சியம் பேசியவர்கள்;. இந்த சிக்கலின் வெளிப்பாடுதான் சாதியத்திற்கு எதிராக ஆயுதப் போராட்டம் தொடங்கிய இவர்களால், இன்றுவரை அதனை பெருமையாகப் பேசிக் கொள்ளும் இவர்களால் வளர்ந்துவந்த தமிழர்களின் கொதிப்பான, முதன்மையான தேசிய அரசியலை புரிந்து கொள்ள முடியாமல் போனது.

இதனை மேலும் விளங்கிக் கொள்ள வேண்டுமாயின் மார்க்சியம் குறித்து மெத்தப் படித்தவரும் சீனசார்பு கம்யூனிஸ்ட கட்சியின் தலைவருமான தோழர் சண்முகதாசன் ஈழத் தமிழ் மக்களின் தேசியத்துவ தகுதி பற்றி கூறியிருக்கும் விடயங்களை கவனியுங்கள். ‘இலங்கைத் தமிழர்கள் ஏற்கனவே ஒரு தேசிய இனமாக வளர்ந்துள்ளார்களா என்ற கேள்விக்கு இல்லை என்றுதான் பதலளிக்க முடியும். ஏனென்றால் ஒரு இன மக்களை ஒரு தேசிய இனம் என்று அழைப்பதற்கு இருக்கவேண்டிய நிபந்தனைகள் பற்றிய ஸ்டாலின் புகழ்பெற்ற வரையறைகளில் உள்ள ஒரு நிபந்தனை இலங்கைத் தமிழர்களுக்கு கிடையாது. அவர்கள் ஒரு பொதுவான பொருளாதாரத்தைக் கொண்டிருக்கவில்லை. இது மெத்தப் படித்த கம்யூனிஸ்ட் சண்முகதாசனின் புரிதல். (பார்க்க – மார்க்சிய பார்வையில் இலங்கைச் சரித்திரம்- பம்.76).

முள்ளந்தண்டை போல்ஷவிக்குகளிடமும். செஞ்சேனையிடமும் அடகு வைத்திருந்த இவர்களால் இறுதிவரை அதனை தாண்டி நமது சூழலுக்கு ஏற்ப சிந்திக்க முடிந்திருக்கவில்லை. இதன் சிறந்த குறியீடுதான் இவர்கள் தங்களை சீனசார்பு கம்யூனிஸ்ட் கட்சி என்று பெருமையாக அழைத்துக் கொண்டமையாகும். இன்னொரு நாட்டின் பெயரில் எவ்வாறு இலங்கையில் தொழிற்பட முடியும், ஈழத்தில் செயலாற்ற முடியும் என்று இவர்கள் சிறிதளவு கூட சிந்தித்திருக்கவில்லை அந்தளவிற்கு முள்ளந்தண்டு இல்லாதவர்களாக இருந்திருக்கிறார்கள். உண்மையில் இங்கு நிகழ்ந்திருக்க வேண்டியது என்னவென்றால் மார்க்சிய, லெனினிச மற்றும் மாவோயிச அனுபவங்களானது நமது சூழலுக்கு ஏற்ப, அது சன்முகதாசனிசமாக நிலைபெற்றிருக்க வேண்டும். ஆனால் அப்படி நிகழ முடியாதளவிற்கு சுயசிந்தனை அற்றவர்களாக இவர்கள் இருந்திருக்கின்றனர்.

இதன் விழைவுதான் ஸ்டாலின் கூறியவற்றுள் ஒன்று இல்லை என்பதால் ஈழத் தமிழர்கள் தேசிய இனம் இல்லை என்னும் சிறுபிள்ளைத்தனமான வாதத்திற்கு சண்முகதாசனால் செல்ல முடிந்தது. என்னளவில் சொல்வேன், மார்க்சிய சிந்தனைகள் புதிய தலைமுறையினர் மத்தியில் பரவுவதை தடுத்து, அதனை இருட்டடிப்புச் செய்த பெருமை இவ்வாறானவர்களையே சாரும். அடிப்படையில் இவர்கள் மார்க்சிய விரோதிகள். சண்முகதாசன் வழி வந்த இவ்வாறான மார்க்சியர்கள், மார்க்சியம் குறித்த பிற்கால விவாதங்கள் எதனையுமே கருத்தில் கொள்ளவில்லை. விவாதத்திற்கு அப்பாற்பட்ட ஒரு மதவாதமாகவே மார்க்சியத்தை சுருக்கினர். பிற்கால மார்க்சிய விவாதங்களில் செல்வாக்குச் செலுத்திய கிராம்சிய, அல்தூசரிய சிந்தனைகளை இவ்வாறானவர்கள் இன்றுவரை விளங்கிக் கொண்டதேயில்லை.

மறுக்க முடியாத கருத்துக்கள். அடயாளத்தேடலை பிரதானமாகக் கொண்ட இந்த மெத்தப்படித்த கூட்டம் எக்காலத்திலும் மக்களிடம் இருந்து அன்னியப்பட்டே இருக்கின்றது. சீனாவரை சென்று மாவோவை சந்தித்த சண்முகதாசனை 95 வீதத்துக்கும் அதிகமான தமிழ்மக்களுக்கு இன்றுவரை தெரியாது என்பதே உண்மை. ஈழத்து உழைக்கும் வர்க்கத்துக்கும் இவர்களுக்கும் ஒரு வீத உறவு கூட இருந்ததில்லை. இனியும் இருக்கப்போவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கிருபன்...நானும் இது பற்றி அறிந்து கொள்ள முயற்சிக்கிறேன் ஆனால் இது வரை முழுமையாக என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை :o

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.