Jump to content

விண்ணியல் விநோதங்கள்...


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

_40270647_phoebeside_nasa_203.jpg

இது என்ன தெரியுமா...சனிக் கோளின் சந்திரன்...அதாவது சனிக்கோளைச் சுற்றிவரும் உபகோள்களில் ஒன்று (Phoebe)...இதை நாசா அனுப்பிய Cassini எனும் விண்கலம் அவ்வுபகோளை நெருங்கிச் சென்று

சுமார் 2078 கிலோமீற்றர்கள் தொலைவிலிருந்து எடுத்த புகைப்படம்....!

_40262801_casini_inf203.gif

இதுதான் பூமியில் இருந்து 1997 ஐப்பசியில் விண்ணோக்கிப் புறப்பட்டு கடந்த வெள்ளி அன்று சனிக்கோளின் உபகோளை சுமார் 2078 கிலோமீற்றர்கள் இருக்கத்தக்கதாக நெருங்கிச் சென்று அதைப்படம் பிடித்த Cassini எனும் விண்கலம்....!

தகவல் BBC.com மற்றும் http://kuruvikal.blogspot.com/

Link to post
Share on other sites
 • Replies 419
 • Created
 • Last Reply
 • கருத்துக்கள உறவுகள்

laun.jpg

SpaceShipOne carried a pilot but no passengers on its first journey into space

_40297275_takeoff203b.jpg

SpaceShipOne was carried by White Knight

images from bbc.com

ஒரு செலுத்துனருடன் SpaceShipOne (உந்து வாகனம்) ஆனது அதன் சாதனை இலக்கான 100 km களை ( தரையில் இருந்து ஆகாயம் நோக்கி ) கிட்டத்தட்ட பூமியின் ஈர்ப்பு எல்லையின் கடைசி நிலை வரைக்கும் சென்று மீண்டும் பத்திரமாகத் தரையிறங்கியுள்ளது...இது ஒரு விண்வெளி நோக்கிய பறப்புகளில் புதிய வரலாற்றுப் பறப்பாகும்...இந்த உந்துவாகனம் இன்னுமொரு உந்துவாகனக் காவி (White Knight) மூலம் பூமியில் இருந்து சுமார் 15 km தூரம் வரை சென்றடைந்ததும் அங்கிருந்து தனது சொந்த ரொக்கட் இயந்திரத்தின் உந்துவிசை கொண்டு தனது பறப்பிலக்கை எட்டி மீண்டும் பூமி திரும்பி இருக்கிறது....!

இந்த SpaceShipOne எனும் உந்துவாகனம் தனியாருக்குச் சொந்தமானதும் aviation pioneer Burt Rutan எனும் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டதும் ஆகும்...இந்த நிறுவனம் ஒரு அமெரிக்க நிறுவனம் ஆகும்....!

இந்தச் சாதனைப் பறப்பைச் செய்த விண்வெளிவீரரின் பெயர் Mr. Mike Melvill ஆகும்...!

[url=http://news.bbc.co.uk/1/hi/sci/tech/3811881.stm]For more details...click here

(This is an exclusive post in tamil for yarl forum by kuruvikal)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மேலே இடப்பட்ட செய்தி தொடர்பான மேலதிக படங்கள்...இங்கே... http://kuruvikal.blogspot.com/

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

mdf607816.jpg

இன்று (24-06-2004) International Space Station (ISS) இல் இருந்து நிகழ்த்தப்பட்ட குறுகிய நேர விண்வெளி நடையின் போது அமெரிக்க வீரர் தனது ரஷ்சிய நண்பருடன் கைச்சைகை மூலம் உரையாடியதைப் படத்தில் காணலாம்....!

மேலதிக தகவல் இங்கே.. http://kuruvikal.blogspot.com/

Link to post
Share on other sites
 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

saturn_cassini.jpg

saturn_cassini%202.jpg

சனிக்கோளை ஆய்வு செய்யும் நோக்கோடு அனுப்பப்பட்ட விண்கலமான Cassini spacecraft எடுத்த சனிக்கோளை அண்மித்து சுற்றிக் காணப்படும் வளையங்கள் தொடர்பான ultraviolet (ஊதாகடந்த கதிர்கள்) கதிர்ப்படங்கள்...!

சனிக்கோளைச் சுற்றிக் காணப்படும் வளையத்தில் அங்கு காணப்படும் இரசாயனக் கூறுகளின் செறிவின் அடிப்படையில் பல வர்ண நிற வேறுபாட்டு உப வளையங்களை (கோளின் மேற்பரப்புத் தொடர்பாக உள்ளிருந்து வெளியாக) நீங்கள் அவதானிக்கலாம்...! இந்த படங்களைக் கொண்டு சனிக் கோளைச் சுற்றி பனிக்கட்டிகளாலும் (பனிக்கட்டிகள் - ice - வெளிப்புற உப வளையங்களில் செறிந்து காணப்படுகிறதாம்) இதர கூறுகளாலும் (தூசுகள் துகள்கள்- dirty materials - உட்புற உப வளையங்களில் செறிந்து காணப்படுகிறதாம்) ஆக்கப்பட்ட இந்த வளையங்களின் ஆரம்பம் பற்றி அறிய விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர்...!

நன்றி... http://kuruvikal.blogspot.com/

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பூமியில் இருந்து கிட்டத்தட்ட 140 ஒளியாண்டுகளுக்கு அப்பால் சூரியக் குடும்ப வியாழக் கிரகத்தைப் போன்று 2.8 மடங்குள்ள கோள் ஒன்றை விண்ணியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்...! இது சூரியக் குடும்பத்துக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட கோள்களில் 123வது ஆகும்....!

Exclusive report in tamil for yarl.com by kuruvikal

Link to post
Share on other sites
 • 4 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

_39915216_launc_nasa_203bod.jpg

விண்கலத்தைக் காவிக் கொண்டு விண்ணில் பாயும் உந்துவாகனம்...!

மூன்று தசாப்தகால இடைவெளிக்குப் பின்னர் சூரியக் குடும்பத்தில் சூரியனுக்கு அருகாமையில் உள்ள கோளான புதனை நோக்கி ஒரு விண்கலத்தை அமெரிக்க விண்ணியல் ஆய்வு நிறுவனம் இன்று விண்ணுக்கு ஏவிவைத்துள்ளது....! செலுத்தப்பட்ட விண்கலம் ஏழாண்டு நீண்ட பயணத்தின் (2011) பின் புதனை அண்மித்துச் சென்று குறித்த ஒரு ஒழுக்குப் பற்றிச் சுழன்று கொண்டு புதன் பற்றிய தகவல்களை ஆராய்ந்து வெளியிடவுள்ளதாகவும் செய்திகள் தெருவிக்கின்றன...!

மேலதிக தகவல் இங்கே...!

(This is an exclusive post for yarl forum by kuruvikal...!)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நீங்களாவது ஒருத்தர் விஞ்ஞானம் படிக்கிறீங்களே...அந்தளவில சந்தோசம்...! :P

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்களாவது ஒருத்தர் விஞ்ஞானம் படிக்கிறீங்களே...அந்தளவில சந்தோசம்...!

______________

நாங்களும் பாக்கிறனாங்கள்... நன்றி சொன்னாத்தான் பாத'ததாக அர்த்தமா என்ன...?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்களும் பாக்கிறனாங்கள்... நன்றி சொன்னாத்தான் பாத'ததாக அர்த்தமா என்ன...?

அது தனே....

நன்ன்றி அண்ணா .. தகவலுக்கு..... :)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பாத்தியளோ....அவர் நன்றி சொன்னபடியாத்தான்... நீங்கள் இஞ்சாலையும் தலைகாட்டி இருக்கிறீயள்...எல்லாம் அந்த வசியின் வசீகரம் தானே ஒழிய விஞ்ஞானத்தில என்ன கிடக்கு....! :P :)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் போட்ட உடனையே நாம் களத்துக்கு வந்த போது பார்த்துவிட்டம்.. ஆனால் ஒன்டும் எழுதல... அவ்வளவு தான் இனி எழுதுறம் என்ன தம்பி...!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓம் :)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எப்ப தொடக்கம் வில்லிசை தொடங்கினீங்க... கவிதன்.... விஞ்ஞானம் வாழ வேண்டும் என்றா....! :P :)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
எப்ப தொடக்கம் வில்லிசை தொடங்கினீங்க... கவிதன்.... விஞ்ஞானம் வாழ வேண்டும் என்றா....! :P :)
ஆளை விடுங்கோ.... விஞ்ஞானத்தை தமிழிலை எலுதினால் படிப்பம்.... இங்கிலீஸ் எண்டால் வாசிக்க தெரியாது..... அதாலை உங்கடை பக்கத்திலை தான் ஒண்டு , இரண்டு பொறுக்கிறது..... சரியாய் எழுதுங்கோ அப்படி என்டால் தான் எங்களிட்டை விஞ்ஞானம் வாழும்...... நன்றி :D
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஏன் பிழையாக் குருவிகள் எழுதியிருக்கோ.... எழுதியிருந்தாச் சொல்லுங்கோ.... கட்டாயம் திருத்த வேணும்... இது விஞ்ஞானம் விளையாட்டில்ல....! :P :)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

குருவி பிழை விடுமா..பேச்சுவாக்கிலை சொன்னன்...சரியாய் எழுதுங்கோ என்டு..வேறை ஒன்டும் இல்லை........ :D:)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மனிசரே பிழை விடேக்க குருவிகள் ரெம்பப் பிழைவிடுங்கள்... எதுக்கும் கண்டாச் சொல்லுங்க திருத்துவம்....! :P

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

_39930232_hubble_nasa_203.jpg

விண்ணில் சஞ்சரிக்கும் கபிள் தொலைக்காட்டி....!

உலகின் கண்களுக்கு விண்வெளி அதிசயங்கள் பலவற்றை படம் பிடித்துக்காட்டும் விண்வெளியில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் அமெரிக்க கபிள் தொலைக்காட்டியின் ஆயுளை மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீடிக்கும் வகையில் அதைத் திருத்தி அமைக்கவென ஆட்கள் இன்றி ரோபோக்களை அனுப்பி அவற்றின் மூலம் தேவையான திருத்தங்களைச் செய்ய அமெரிக்க விண்ணியல் ஆய்வு நிறுவனம் முயன்றுவருகிறது....!

Thanks bbc.com

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

கபிளுடன் வந்திருக்கிறன குருவிகள்... தகவலுக்கு நன்றிகள்...!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகவலுக்கு நன்றி... இரண்டு நாளாய் காணவில்லை... இங்கு தான் வேலையோ.. சிறகிருக்க பேந்து என்ன வேணும்....என்ன.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

10092050.jpg

International Space Station (ISS)

சர்வதேச விண்ணியல் நிலையத்திற்கும் (ISS) அங்குள்ள இரண்டு விண்வெளி வீரர்களுக்குமான அத்தியாவசியப் பொருட்களுடன் கடந்த புதன்கிழமை பூமியில் இருந்து புறப்பட்ட ரஷ்சிய தன்னியக்க வழங்கற் கலம் சனிக்கிழமை சர்வதேச விண்ணியல் நிலையத்துடன் போய்ச் சேர்ந்து கொண்டுள்ளது...! கொலம்பிய விபத்துக்குப் பின்னர் ரஷ்சியாவே சர்வதேச விண்ணியல் நிலையத்திற்கு உயிர்ப்பளித்து வருகிறது....!

இதற்கிடையில் கொலம்பிய விண்ணோட விபத்துக்கு அது பூமியில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களுக்குள் கொலம்பிய ஓடத்தின் கீழ் பகுதியில் நிகழ்ந்த வெளிப்புற எரிப்பொருள் வழங்கல் தாங்கியில் இருந்தான போம் மொத்துகைதான் காரணம் என்று நாசா கூறி இருக்கிறது...!

(describe how a piece of insulation foam from an external fuel tank hit the underside of the shuttle during the craft's liftoff, during a NASA briefing in Houston February 5, 2003. The process of applying foam, that struck the space shuttle Columbia soon after liftoff resulting in the deaths of seven astronauts, was defective, Neil Otte, NASA's chief engineer for the external tanks project, said August 13, 2004. The fault apparently was not with the chemical makeup of the foam, instead, Otte said NASA concluded that the process of applying some sections of foam by hand with spray guns was at fault. (Jason Reed/Reuters))

(Exclusive message in tamil for yarl forum)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகவலுக்கு நன்றி

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

_39962448_moons_nasa_203.jpg

Saturn's total tally of natural satellites to 33.

சூரியக் குடும்பத்தில் நம்ம பூமிக்கு ஒரு நிலாத்தான்.... ஆனா சனிக்கிரகத்துக்கு மொத்தம் 33 நிலாக்கள்....! தற்போது சனியை நெருங்கி அதை ஆய்வு செய்துவரும் கசினி (Cassini) விண்கலம் சமீபத்தில் கண்டு பிடித்த இரண்டு புதிய நிலாக்களும் இதனுள் அடக்கம்.

S/2004 S1 என்றும் S/2004 S2 என்றும் பெயரிடப்பட்டுள்ள அந்த இரண்டு நிலாக்களும் முறையே 3 மற்றும் 4 கிலோமீற்றர்கள் விட்டமுடைய சிறிய நிலாக்களாகும்....! அவை சனியின் மையத்தில் இருந்து 194,000km, 211,000km எனும் இடைத்தூரங்களில் நிலை கொண்டு சனியைச் சுற்றி வருகின்றன...!

_39962600_mimas_nasa_203.jpg

The moons orbit between Mimas (above) and Enceladus

Our thanks to bbc.com

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.