Jump to content

விண்ணியல் விநோதங்கள்...


Recommended Posts

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகவலுக்கு நன்றி அண்ணா......... ஒரு நிலா இருக்கிற நாம் எத்தினை கவிதை எழுதிறம் அதை வைத்து... அங்கை 33 எண்டால் அங்கு யாராவது வாழ்ந்திருந்தால்.. எவ்வளவு கஸ்டப்பட்டிருப்பார்கள் :lol:

Link to post
Share on other sites
 • Replies 419
 • Created
 • Last Reply
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகவலுக்கு நன்றி குருவிகள்.. கவிதன் விடமாட்டியளே

Link to post
Share on other sites

திருந்தமாட்டியள்....அவனவன் நிலாக்கு போறான் வாறான்...நீங்கள் தூர நின்று கவி பாடுறதில நில்லுங்கோ.... :wink:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருந்தமாட்டியள்....அவனவன் நிலாக்கு போறான் வாறான்...நீங்கள் தூர நின்று கவி பாடுறதில நில்லுங்கோ.... :wink:

அவனவன் உலகத்தை கொள்ளை அடித்து... சுறண்டி... நிலாவுக்கும் போவான்.. சனிக்கும் போவான்... செவ்வாய்க்கும் போவான்.... நாம சொந்த காலிலை நிண்டு ஒரு வேளை சோத்துக்கே தண்டி அடிக்கிறம்... அதிலை நிலாவை பார்த்து சோறு தான் தின்னமுடியும்.. மிஞ்சிப்போனால் கவிதை.... அதுவும் முடிஞ்சால் தான்..... அளவுக்கு மிஞ்சி ஆசைபடக்கூடாது...... எப்ப எப்ப செவ்வாய் , புதன், வியாழன், வெள்ளி , சனி, என்டு கிழமை வாறதே தெரியவில்லை.. அதுக்குள்ளை நிலவுக்கு அவனவன் இறங்கினால் நமக்கு என்ன.... ஒழுங்கா இந்த உலகத்திலை உள்ள பிரச்சனையை தீர்ககாணல அதுக்குள்ள அடுத்த கோளிலை என்ன வேலை... அவங்களூக்கு வக்காலத்து நீங்கள்.... நமக்கு விஞ்ஞானம் ... அறிவியல் பற்றி அறிவதிலை நாட்டம் தான்.... அதுக்காக நாமும் சந்திரனில் தான் நிண்டு கொண்டு கவிதை எழுத வேணும் என்டு இல்லை.... அவர் அவருக்கு என்ன விருப்பமோ அதை அதை அவர் அவர் செய்ய வேண்டியது தான்... உங்களுக்கு முடிஞ்சால் சந்திரனிலை இறங்குங்கோ பாப்பம்.. அதுக்கு பிறகு கவிதை எழுதுறவனை நக்கல் அடியுங்கோ :wink: :lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதன் நல்லவழியில போறதுக்கு முயற்சி செய்கிறது தானே....! உங்கள நக்கல் அடிச்சதாய் நினைக்காதேங்க...!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
கவிதன் நல்லவழியில போறதுக்கு முயற்சி செய்கிறது தானே....! உங்கள நக்கல் அடிச்சதாய் நினைக்காதேங்க...!
என்னை இல்லையே நான் கவிதையா எழுதுறன்... ஏதோ கிறுக்கிறன்.... அது கவிதையா? அப்படி எண்டால் என்னையும் தான் :lol:
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஏன் கவிதன் கவலைப்படுறீங்க.... மனிதனால இத்தனை மில்லியன் வருடக் கூர்ப்புக்குப் பிறகுதான் விஞ்ஞானம் வளர்த்து எத்தனையோ ரில்லியன் நட்சத்திரங்கள் உள்ள இந்தப் பிரபஞ்சத்தில் ஒரே ஒரு நிலவுக்குப் போக முடிந்திருக்கிறது.... இன்னும் கடக்க பலதும் இருக்கு....அதற்குள் மனிதன் பூமியில் இருப்பானோ என்பதே கேள்வி..... விஞ்ஞானி தன் வழியில் போக கவிஞன் பிறிதொரு வழியில் போகிறான்...இரண்டிலும் படிக்க நிறைய இருக்கு என்பதே யதார்த்தம்.....! :P

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

_39965500_milky_nasa_203.jpg

The Milky Way is one of many spiral galaxies in the Universe

எமது சூரியக் குடும்பம் அடங்கலாக உள்ளடங்கும் பால்வீதியின் வயதை இரண்டு ஒளிரும் நட்சத்திரங்களில் (two stars called A0228 and A2111 ) உள்ள பெரிலியம் (beryllium) மூலகத்தின் அளவைக் கொண்டு விஞ்ஞானிகள் ஊகித்தறிந்துள்ளனர்...! இதன் பிரகாரம் எங்கள் பால்வீதின் வயது கிட்டத்தட்ட 13,600 மில்லியன் வருடங்கள் (இதனுடன் 800 மில்லியன் வருடங்கள் கூடலாம் அல்லது குறையலாம்) என்று அறிவித்துள்ளனர். இதற்கு சிலியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள மிகப்பெரிய தொலைக்காட்டியும் (Very Large Telescope (VLT) அதனோடிணைந்த UV-Visual Echelle Spectrograph (UVES) வும் பாவிக்கப்பட்டுள்ளன...!

_39965880_ngc_eso_203.jpg

Stars in globular clusters

Our thanks to bbc.com

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகவலுக்கு நன்றிகள் .......!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒழுங்காய் இங்கு தாற புதிருக்கே விடை சொல்ல முடியலை... இவங்கள் எமது சூரியக் குடும்பத்துக்கு வயது சொல்லுறங்கள்.....

தகவலுக்கு நன்றி அண்ணா

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

புதிர்கள் பொதுக் கணிதப் பிரயோகத்துக்கு அப்பால் பாடத்துறைகள் சார்ந்த பிரயோக கணிதத்தின் தேவை கொண்டு வருமானால் அவற்றை குறித்த பாடத்துறை சார்ந்த முன்னறிவு இல்லாமல் தீர்ப்பது கடினம்.... எனவே நீங்கள் அதைப்பற்றிக் கவலைப்படாதேங்கோ கவிதன்....! உங்கள் அறிவுக்குள் உள்ள விடயத்தை மட்டும் உச்ச அளவில் பயன்படுத்தித் தீர்க்க முயலுங்கள்...முடியவில்லை என்றால் விட்டுவிடுங்கள்.... கவலைப்படாதீர்கள்....!

இவை பொது விஞ்ஞான விடயங்கள் எல்லோருக்கும் பொருத்தமானது.....! :lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்.. நன்றி :lol:

Link to post
Share on other sites

அவனவன் உலகத்தை கொள்ளை அடித்து... சுறண்டி... நிலாவுக்கும் போவான்.. சனிக்கும் போவான்... செவ்வாய்க்கும் போவான்.... நாம சொந்த காலிலை நிண்டு ஒரு வேளை சோத்துக்கே தண்டி அடிக்கிறம்... அதிலை நிலாவை பார்த்து சோறு தான் தின்னமுடியும்.. மிஞ்சிப்போனால் கவிதை.... அதுவும் முடிஞ்சால் தான்..... அளவுக்கு மிஞ்சி ஆசைபடக்கூடாது...... எப்ப எப்ப செவ்வாய் , புதன், வியாழன், வெள்ளி , சனி, என்டு கிழமை வாறதே தெரியவில்லை.. அதுக்குள்ளை நிலவுக்கு அவனவன் இறங்கினால் நமக்கு என்ன.... ஒழுங்கா இந்த உலகத்திலை உள்ள பிரச்சனையை தீர்ககாணல அதுக்குள்ள அடுத்த கோளிலை என்ன வேலை... அவங்களூக்கு வக்காலத்து நீங்கள்.... நமக்கு விஞ்ஞானம் ... அறிவியல் பற்றி அறிவதிலை நாட்டம் தான்.... அதுக்காக நாமும் சந்திரனில் தான் நிண்டு கொண்டு கவிதை எழுத வேணும் என்டு இல்லை.... அவர் அவருக்கு என்ன விருப்பமோ அதை அதை அவர் அவர் செய்ய வேண்டியது தான்... உங்களுக்கு முடிஞ்சால் சந்திரனிலை இறங்குங்கோ பாப்பம்.. அதுக்கு பிறகு கவிதை எழுதுறவனை நக்கல் அடியுங்கோ :wink: :lol:

இருந்தாலும் வெள்ளைக்காரன் உங்களை மாதிரி சிந்தித்திருந்தால்...நீங்கள் எழுதும் கணணியும் இருந்திருக்காது.....ஏன்...எழுத யாழ் இணையமும் இருந்திருக்காது :wink:

ஏதோ கருத்துக் கந்தசாமி ஸ்ரைலில கருத்து சொன்னா.....இப்பிடி அர்ச்சனை பண்ணுறியள் அண்ணை... :P

தலைகீழா நின்றாலும் எனக்கு கவிதை வராது :cry:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடடே! வெள்ளைக்காரன் எல்லாத்துக்கையும் மூக்கை நுழைச்சு தொலைநோக்கில ஆதாயத்தைப்பற்றி சிந்திக்க.. இங்க பலதுகள் பொத்திப் பொத்தி வைச்சு தங்களோடை எல்லாத்தையும் சாம்பலாக்கிக் கொண்டிருக்குதுகளோ?!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அடடே! வெள்ளைக்காரன் எல்லாத்துக்கையும் மூக்கை நுழைச்சு தொலைநோக்கில ஆதாயத்தைப்பற்றி சிந்திக்க.. இங்க பலதுகள் பொத்திப் பொத்தி வைச்சு தங்களோடை எல்லாத்தையும் சாம்பலாக்கிக் கொண்டிருக்குதுகளோ?!

இது யாருக்கோ.... குருவே....! :P :lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொதுவாகத்தான்! முந்தி ஆயுள்வேத பரம்பரைப் பரியாரிமார் கட்டுக்கட்டாக ஏட்டுச் சுவடிகள் வைச்சிருப்பினம்.. வாரிசுகளுக்குத்தான் கொடுப்பினம். வாரிசுகளுக்கு அதிலை அக்கறை இல்லாட்டி ஏட்டுச்சுவடிகளின் கதி அவளவுதான்!

அது ஏன் சாமி! யாரோ ஒரு லெபனான்காரன் சொல்லி ஒரு லோயர் மூலமா 3 மாதத்தில சிற்றிசன் எடுத்தான் ஒருவன்.. நானும் யார் அந்த லோயர் என்று கேட்டுப் பார்த்தன்.. மூச்! :lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இருந்தாலும் வெள்ளைக்காரன் உங்களை மாதிரி சிந்தித்திருந்தால்...நீங்கள் எழுதும் கணணியும் இருந்திருக்காது.....ஏன்...எழுத யாழ் இணையமும் இருந்திருக்காது

ஏதோ கருத்துக் கந்தசாமி ஸ்ரைலில கருத்து சொன்னா.....இப்பிடி அர்ச்சனை பண்ணுறியள் அண்ணை...

தலைகீழா நின்றாலும் எனக்கு கவிதை வராது

அது எல்லாம் அர்ச்சனை இல்லை அண்ணா சும்மா உங்களை மாதிரி . ....அதே ஸ்டைல் தான்.. கோவிக்காதைங்கோ அண்ணா... :lol::D :wink:

ஜயோ .. தலை கீழாய் நிண்டு எல்லாம் கவிதை எழுதாதைங்கோ.... அது உடம்புக்கு நல்ல உடற்பயிற்சி தான்... அதுக்காக.. ஒரு கல்லிலை இரண்டு மாங்காய் அடிக்க பார்க்கிறியள்...... :wink: :D:D

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவ் அனிமேசனில் ஏராளமான விடையங்கள் இருக்கின்றன.... ஒவ்வொரு இணைப்புக்களையும் நீங்கள் அழுத்தினால்... ஒலி ... ஒளி.. மற்றும் எழுத்துக்களில் என நன்றாக விளக்கமளித்துள்ளார்கள்... அதனில் செய்மதிகள் எவ்வாறு செயற்படுகின்றன, ரொக்கற் எவ்வாறு செலுத்தப்படுகிறது என்ற விளக்கம் உட்பட பல தகவல்களை அடக்கி இருக்கிறார்கள்..... நீங்கள் ஓவ்வொருவரும் பார்க்க வேண்டிய .. அறிய வேண்டிய நல்ல ஒரு விடயம்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி கவிதன்....!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

சூரிய மண்டலத்துக்கு வெளியே புதிய கிரகம் கண்டுபிடிப்பு

வாஷிங்டன், ஆக. 28-

சூரிய மண்டலத்துக்கு வெளியே, புதிய கிரகம் கண்டுபிடிக்கப் பட்டு உள்ளது. ஐரோப்பிய வான வெளி ஆராய்ச்சியாளர்கள் இந்த கிரகத்தை கண்டுபிடித்து உள்ள னர்.

போர்ச்சுக்கீசிய ஆராய்ச்சி யாளர் நினினோசான்டோஸ் கூறுகையில், "பூமியை விட 14 மடங்கு பெரிதாக இந்தக் கிரகம் உள்ளது. இது 50 ஒளி ஆண்டு களுக்கு அப்பால் உள்ளது என்று குறிப்பிட்டார். அவர், மேலும் கூறியதாவது:வ்

இது மு ஆரே என்ற நட்சத் திரத்தை சுற்றி வருகிறது. ஒரு முறை சுற்ற 10 நாட்கள் ஆகிறது. இந்த நட்சத்திரத்துக்கு அருகில் இருப்பதால், மிகுந்த வெப்பம் உடையதாக இருக்கிறது.

இதுவரை கண்டுபிடித்த கிரகங்களைவிட இதுதான் நமது சூரிய மண்டலத்துக்கு அருகே உள்ள கிரகம் ஆகும். இதுவரை சூரிய மண்டலத்துக்கு வெளியே 120 கிரகங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு போர்ச்சுக்கீசிய அறிஞர் கூறினார்.

நன்றி

கூடல் இணையம்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகவலுக்கு நன்றிகள் கவிதன்....! :lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நான்கு புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு.

கோடை காலத்தில் வான்வெளியில் புதிய கிரகங்களைத் தேடும் பணியில் வானவியலாளர்கள், வானவியல்ப் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்கள் ஈடுபட்டு வருவது வழமை.

இந்த வகையில் சுமார் மூன்று கிரகங்கள் அமெரிக்க வானவியலாளர்கள் குழுக்களாலும், ஒரு கிரகம் இங்கிலாந்து வானவியளாலர்களாலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவற்றில் எந்தக் கிரகமும் பூமியை ஒத்த தன்மையைக் கொண்டிருக்கவில்லையென்றெ தற்போது அனுமானிக்கப்பட்டாலும் ஓரிரு கிரகங்கள் சூரியன், செவ்வாய் போன்றவற்றின் தன்மையுடைய கலவைகளை இதுவரைக் கண்டுபிடிக்கப்பட்ட இதர கிரகங்களிலும் பார்க்க அதிகம் கொண்டிருக்கின்றன.

நெப்ரியூன், யூரனஸ் கிரகங்களை ஒத்த அளவை உடையனவையாகவே இரண்டு கிரகங்கள் காணப்படுகின்றன. அதாவது பூமியைப் போல 14 மடங்கு பெருப்பமுடையனவாக இரு கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்களில் ஒன்று வேற்று சூரியக் குடும்பத்தை சேர்ந்த ஒன்று என்பதும் அதற்கான பால்வட்டப் பாதையில் அச் சூரியனைச் சுற்றி வருகிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. வேற்று சூரியக்குடும்பங்கள் பல இருப்பதாக ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டாலும் அச்சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த கிரகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதற்தடவையாகும்.

கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்களில் ஒன்று சாதாரண உருப்பெருக்கியினூடாகவே பார்க்கக்கூடியது என்பதும், வேற்றுச் சூரிய குடும்பத்தைச் சேர்ந்த கிரகமான அதிசிறந்த பூமி என்ற கிரகம் 50 ஒளியாண்டுகளிற்குப் பின்னாலேயே உள்ளது என்பதும் இங்கு நோக்கத்தக்கது.

puthinam.com

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப இன்னும் கண்டுபிடிப்பார்கள்... தகவலுக்கு நன்றிகள் குருவிகளே....!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இருந்த பூமியையே குண்டு வெடிப்பாலை கண்டுபிடிக்கமுடியாமல் கிடக்கு.. இவங்கள் வேறை புதுசு புதுசாய் கண்டு பிடிக்கிறாங்கள்...

தகவலுக்கு நன்றி அண்ணா

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.