Jump to content

பரோட்டா + வெஜிடபிள் குருமா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பரோட்டா

P9200215.JPG

தேவையான பொருள்கள்

மைதா மாவு

உப்பு

எண்ணெய்

செய்முறை:

முதலில் மைதா மா‌வி‌ல் தேவையான அள‌வு உப்பு சேர்த்து, கொ‌ஞ்ச‌ம் கொ‌ஞ்சமாக தண்ணிர் விட்டு சப்பாத்தி‌க்கு மாவு ‌பிசைவது போ‌ல் ‌பிசை‌ந்து கொ‌ள்ளவு‌ம்.

கொ‌ஞ்ச‌ம் தளதளவெ‌ன்று இரு‌க்க வே‌ண்டு‌ம். ‌பி‌ன்ன‌ர் அரை மணி நேரம் ஊற‌வி‌டவு‌‌ம்.

ஊ‌றிய மாவை உரு‌ண்டைகளாக‌ப் ‌பிடி‌த்து சப்பாத்தி‌க்கு ‌திர‌ட்டுவது போ‌ல் பெ‌ரிய அள‌வி‌ல் அனை‌த்து ஊரு‌ண்டைகளையு‌ம் ‌எ‌ண்ணெ‌ய் ‌வி‌ட்டு திரட்டி‌க் கொள்ளவும்.

‌பிறகு கொ‌ஞ்சமாக மைதா மாவை எடு‌த்து ‌சி‌றிது எண்ணெய் ஊற்றி பசைப்போல் செய்து கொள்ளவும்.

திரட்டி வைத்துள்ள மாவை ஒன்றன் மீது ஒன்று பசைத்தடவி அடுக்க வேண்டும். பிறகு அனைத்தையும் ஒன்றாக சுருட்டி சிறு சிறு துண்டுகள் செய்து கொள்ள வேண்டும்.

பிறகு லேசாக திரட்டி கொ‌ள்ளவு‌ம். அழுத்தி திரட்ட வேண்டாம், மாவு ஒ‌ன்றாக ஒ‌ட்டி‌க் கொள்ளும்.

அடுப்பில் தோசைகல்லினை வைத்து சுடானதும் மிதமான தீயில் ஒவ்வொன்றாக போட்டு இருபுறமும் எண்ணெய் விட்டு வெந்ததும் எடுக்கவும். இத‌ற்கு கா‌ய்க‌றிக‌ள் போ‌ட்ட குருமா ச‌ரியான இணை உணவாக இரு‌க்கு‌ம்.

http://tamil.webdunia.com/miscellaneous/cookery/indian/0808/25/1080825011_1.htm

+

வெஜிடபிள் குருமா

vegetable-kurma-small.jpg

வெஜிடபிள் குருமா செய்வது எப்படி? இதோ எளிய செய்முறை.

தேவையான பொருள்கள்:

உருளைக் கிழங்கு - 3

கேரட் - 1

குடமிளகாய் - 2

தேங்காய்த்துருவல் - 1 கப்

பட்டை - சிறிதளவு

பூண்டு - 10 பல்

கொத்துமல்லித்தழை - சிறிதளவு

மிளகாய்த்தூள் - 1 1/2 டீஸ்பூன்

சீரகம் - சிறிதளவு

பெரிய வெங்காயம் - 2

பட்டாணி - 1 கப்

காலிஃப்ளவர் - சிறியது

கசகசா - 1 டீஸ்பூன்

சோம்பு - சிறிதளவு

எண்ணெய் - 4 டீஸ்பூன்

மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

* காய்கறிகளைச் சிறு துண்டுகளாக நறுக்கி, தண்ணீர் சேர்த்து, 5 நிமிடம் மைக்ரோ ஹையில் மூடி வேகவிடவும்.

* ஒரு மைக்ரோ வேவ் பாத்திரத்தில் எண்ணெயையும் மசாலாப் பொருள்களையும் போட்டு 3 நிமிடம் மைக்ரோ ஹையில் வைக்கவும்.

* இதில் பூண்டு, வெங்காயம், தேங்காய் சேர்த்து 3 நிமிடம் மைக்ரோ ஹையில் வைக்கவும்.

* இவற்றை மிக்சியில் விழுதாக அரைத்து, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு, மல்லித்தூள் ஆகியவைகளையும், காய்கறிகளையும் கலந்து 5 நிமிடம் மைக்ரோ ஹையில் சமைக்கவும்.

* கொத்துமல்லித் தழை தூவி அழகுபடுத்தவும்.

http://rvijayakumar.page.tl/%26%232997%3B%26%233014%3B%26%232972%3B%26%233007%3B%26%232975%3B%26%232986%3B%26%233007%3B%26%232995%3B%26%233021%3B-%26%232965%3B%26%233009%3B%26%232992%3B%26%233009%3B%26%232990%3B%26%233006%3B-.htm

இது புரோட்டா பிரியர் தோழர் தமிழ்சிறி அவர்களுக்கு :D

s_grands-31%5B1%5D.gifs_grands-31%5B1%5D.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி PTT. குருமாவுக்கு சோயா ஊற வைத்து சேர்த்தால் நன்றாக இருக்கும்! :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரோட்டா குருமாவிற்கு நன்றி புரட்சி அண்ணா

வாத்தியார்

*********

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தோழர்கள் வாத்தியார் மற்றும் சுவி... செய்து பார்த்துவிட்டு நன்றாக இருந்தது என்று சொன்னால்தான் நான் திருப்தி அடைவேன் :wub:

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இந்த பரோட்டாவும் எங்கட வீச்சு ரொட்டியும் ஒன்டே

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.