Archived

This topic is now archived and is closed to further replies.

நிலாமதி

b]அந்தஸ்த்து ........( தகமை)[/b]

Recommended Posts

சின்ன வயதில் இருந்தே பால குமாரனும் ஆனந்த ராஜாவும் நண்பர்கள்.ஆரம்ப பாடசாலை முடித்து கல்லூரி சென்று பின் பல்கலை கழகம் வரை ஒன்றாகவே படித்தார்கள். பின்பு வேலை பார்க்கும் காலத்தில் பாலகுமாரன் ரயில்வேயிலும் ஆனந்த ராஜன் குடிவரவு குடியகல்வு நிலையத்திலும் பணிக்கு அமைந்தார்கள். இருப்பினும் தொலை பேசி மூலமோ மடல்கள் மூலமோ நட்பை தொடர மறப்பதில்லை. பருவ வயது அடைந்ததும் ஆனந்த ராஜன் முதலில் திருமணம் செய்து கொண்டான். அவனுக்கு வாய்த்த மணமகள் சற்று வசதியானவள் ..மூன்று அண்ணாக்களுக்கு ஒரே தங்கை .

காலம் வேகமாக் தன் வேலையை செய்தது .பாலகுமாரனும் தன் தங்கை திருமணம் முடிய ஊரில் ஒரு ஆசிரியையாக் உள்ள பெண்ணை திருமணம் செய்து கொண்டான்.திருமணமான பின் அவர்கள் குடும்பம் வேலை என்று பொழுதுகள் வாய்பாக் அமையவில்லை தொடர்பு கொள்ள. இருபினும் சில மாதங்களுக்கொருமுறை கொண்ட தொடர்புகள் வருடம் ஒரு முறையாகியது. இதற்கிடையில் ஆனந்த ராஜனுக்கு லண்டனுக்கு போகும் வாய்ப்பு வரவே மனைவியின் எண்ணப்படி அங்கு சென்று விட்டான் ஆரம்பத்தில் வேலை வாய்ப்பு மிகவும் கஷ்டமாய் இருந்தது ஆனாலும் அவனது திறமையால் தபாற்கந்தோர் நிர்வாகியாக் வேலை கிடைத்து.மனைவி மாலினியும் அங்கு சென்று வாழ்க்கை சந்தோஷமாக் ஓடிக்கொண்டிருந்தது .

பாலகுமாரன்மனைவியுடன் அன்பான் வாழ்க்கை நடத்தி ஒரு பெண குழந்தைக்கு தந்தையானான். ஆனந்த ராஜன் மாலினி தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் இதுவரை கிட்ட் வில்லை . ஒரு நாள் ஆந்த ராஜனிடம் மனைவி மாலினி ..தான் வீட்டில் இருக்க பிடிக்காமல் படிக்க போவதாக கேட்டாள் . அவனும் சம்மதம் தெரிவிகக் வே அவள் மருத்துவக்கலூரியில் சேர்ந்து படித்தாள். படிப்புச் செலவுக்கு தந்தையிடம் இருந்து பணம் பெற்றுக் கொள்ள அவள் கேட்ட் போதும் கணவன் ஆனந்தராஜன் ராஜன் மறுத்து விடான். அவன் பகல் நேர பணி முடிந்து வீட்டுக்கு வந்தால் இவள் கல்லூரியில் இருப்பாள். தனது நேரத்தை பயனுள்ள முறையில் செலவு செய்யவும் வீட்டு பணத்தேவையை ஈடு கட்டவும் இரண்டாவது வேலைக்கு செல்ல தொடங்கினான் அவர்களது வாழ்வு இயந்திர மயமானது வீட்டுக்கு வந்தால் அவள் இல்லை எந்நேரமும் கல்லூரி என்று இருப்பாள். இப்படியாக் ஐந்து வருடங்கள் ஓடி விட்டது . இடையில் கரு தங்கும் சந்தர்ப்பம் வரவே மாலினி விரும்பவில்லை . கலைத்து விடாள். ஒருவாறு அவள் மருத்துவபட்ட்ம் பெற்று அயல நகரத்தில் ஒரு மருத்துவ நிலையத்தில் பணிக்கு அமார்ந்தாள் . எல்லாம் முடிந்தது தனக்கு இனி நல்ல காலம் என்று எண்ணியிருந்தான் ஆனந்தராஜன் .. காலம் விரைவாக ஓடியது திருமணமாகி பத்து பத்து வருடங்க ளாகியது மீண்டும் அவள் கருத்தரித்து ஒரு பெண குழந்தைக்கு தாயானாள். மாலினி தனது பணி நேரத்தை இரவு நேர பணியாக்கி கொண்டாள். பகலில் குழந்தையை பார்ப்பாள். பின் இரவு ஆனந்த ராஜன் குழந்தையை பார்க்க இவள் பணிக்கு செல்வாள். இப்படியாக் குழந்தை வளர்ந்து ஆறு வயதை அடைந்தாள் . பின்பு மாலினியில் வாழ்வில் மாற்றம் கண்டது. குழந்தைக்கு அப்பா தரம் குறைந்தவர் என்பது போல் காட்டிக் கொண்டாள். தனது நண்பர்கள் வீட்டு விழாக்களில் குழந்தையை மட்டும் அழைத்து செல்வாள். தனது பரம்பரை பெருமை பற்றி பெருமிதமாக் பேசிக் கொள்வாள். . ராஜனை மதிப்பதேயில்லை . ஏதும் விழாக்களுக்கு போனால் மற்றைய நட்புகளுக்கு கணவனை அறிமுகம் செய்ய மாட்டாள் . ராஜன் மிகவும் வேதனைபட்டான். ஒரு நாள் நண்பன் பாலகுமாரனுக்கு நீண்ட கடிதம் எழுதினான். அவளின் போக்கு சரிவரவில்லை என்றும். விவாகரத்து பெறபோவதாகவும் ஊருக்கு வந்து வேறு பெண்ணை கலியாணம் செய்ய போவதாகவும் எழுதினான். அதற்கு குழந்தையை காரணம் காட்டி இன்னும் சற்று பொறுக்குமாறு பால குமாரன் கடிதம் எழுதினான்.ஒரு நாள் அவனது பேருக்கு ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு குழந்தையையும் அழைத்து கொண்டு மாலினி வீட்டை விட்டு போய் விடாள். காலம் உருண்டது ஒருவருடமாகியது . ஆனந்த ராஜன் மிகவும் கவலைப்பட்டான் அவளை இரண்டு வேலை செய்து படிப்பித்தான் குழந்தையை கவனித்தான் . சமையல் வேலையும் ஒழுங்காக செய்ய மாடாள் சில நாட்கள் கடையிலும் சில நாட்கள் தனக்கு தெரிந்த முறையிலும் சமைத்து சாப்பிட்டு இருக்கிறான். குழந்தை மீது மிகவும் விருப்பம். என்ன செய்வது ...எனக்கு அமைந்த வாழ்வு என்று கவலைபட்டு கொண்டு இருக்கும்போது குடும்ப் அலுவலகத்தில் இருந்து அவனுக்கு விவாக்ரத்து விண்ணப்பம் வந்தது. அவன் என்ன செய்வது குழந்தையை பிரிய விருப்ப்மில்லை .தொடர்ந்து வாழ்வும் முடியாது .....

முடிவு தெரியாமல் கலங்கு கிறான்...........

...அவளை மேலும்படிக்க் வைத்து தப்பா..........அவளின் ஆசைக்கு விட்டது தப்பா ....காலம் தான் முடிவு சொல்ல வேண்டும்.

உங்கள் முடிவு என்னவாய் இருக்கும் சொல்லுங்களேன்.............

Share this post


Link to post
Share on other sites

அவன் என்ன செய்வது குழந்தையை பிரிய விருப்ப்மில்லை .தொடர்ந்து வாழ்வும் முடியாது .....

முடிவு தெரியாமல் கலங்கு கிறான்...........

குழந்தையை பிரிய முடியாது என்றால் ......3 வேலை பார்த்து மனிசியை மேலும் மேலும் உயர் படிப்பு படிப்பிக்க வேண்டும் ...இவர் குழந்தையையும் பார்த்த மாதிரியும் இருக்கும் மனிசிக்கு பணிவிடை செய்த மாதிரியும் இருக்கும் ......எப்படி என்ட ஜடியா...

எல்லோரும் ஒரு பச்சை குத்திவிடுன்கோ என்ட ஜடியாவுக்கு

கலியாணம் கட்டி 2 வருசத்தில மனிசியின் குணத்தை புரியாட்டி என்ன மனுசன்டாப்பா

Share this post


Link to post
Share on other sites

உங்கள் ஆதங்கம் நியாயமானது l

Share this post


Link to post
Share on other sites

வரும் காலத்தில் உசாராக இருக்கவேண்டிய தங்கள் பதிவுக்கு ரொம்ப நன்றி சகோதரி... :lol:

Share this post


Link to post
Share on other sites

நெடுக்கு ஏன் பெண்களை வெறுக்கிறார் எண்டது இந்தக் கதையில இருந்து விளங்குது..! :lol::lol:

Share this post


Link to post
Share on other sites

நீளக் கயிற்றில் விடாமல் அளவாக வைத்திருந்தால் எல்லாம் சுபமாய் முடியும்.

Share this post


Link to post
Share on other sites

நீளக் கயிற்றில் விடாமல் அளவாக வைத்திருந்தால் எல்லாம் சுபமாய் முடியும்.

என்னது கயித்தில கட்டுறதா? அப்ப பெண்களெல்லாம் என்ன மாடா? :lol::lol:

Share this post


Link to post
Share on other sites

நீளக் கயிற்றில் விடாமல் அளவாக வைத்திருந்தால் எல்லாம் சுபமாய் முடியும்.

:lol::lol:

Share this post


Link to post
Share on other sites

நன்றி ....

இப்படி எந்தனை பேருக்கு நடக்குமோ தெரியாது, ஆனால் வாழ்வின் சில கசப்பான முடிவுகளில் இதுவும் ஒன்று. அதற்கு மேல் யாரையும் குறைகூறுவதற்கு முன் சில விடையங்களை பார்க்கவேண்டும். கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை, என்பது போல், பலரும் வெளிநாட்டில் உள்ள வசதிகள் வாய்ப்புகளை பயன்படுத்தில் எல்லாவகையிலும் முன்னுக்கு வர விருப்பம், அதே நேரத்தில் அவர்களில் கலாச்சார வழமைகளை ஏற்றுக்கொள்ள தயக்கம். ரோமில் இருந்தால் ரோமானியனை போல் இரு என்பது போல், விரும்பிய நேரத்தில் மருத்துவம் படிக்கலாம், என்றால் ஏன் விரும்பிய ஒருவனானோடு வாழ அல்லது விரும்பாத ஒருவர் உடன் வாழ வேண்டும். அந்த பெண் செய்தது சரியோ பிழையோ தெரியாது, ஆனால் அப்படி ஒருவர் மருத்துவம் படிக்கலாம், விஞ்ஞானம் படிக்கலாம், நீச்சல் உடையுடன் கடற்கரைக்கு போகாலாம் என்றால் இதுவும் சரியே. நாங்கள் இப்பவும் விரும்புவது, எங்களில் கலாச்சாசத்தில், சிலதுதுகளை தக்க வைத்து, --அது என்ன என்னவென்பததே ஆளுக்கு ஆள், ஊருக்கு ஊர் மாறுபடும். இங்கே உள்ள நல்லனா எல்லாவற்றையும் அடைவோம் என்றும் அவர்களில் குறைகளை, அவர்களில் குறைகள் என நாங்கள் கருதுபவற்றை நாங்கள் முடிந்தளவு தவிர்ப்போம். ஆனால் இது எந்தளவு தூரம் சாத்தியப்படும் என்று அனுபவித்து பார்த்தால் தான் தெரியும்.

எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் சொன்ன கதை..இங்கே கனடாவில் உள்ள பல வயோதிபர்களிடம் (அவர் சொல்லுவது கிழவிகளிடம் ) கதைத்தால் சொல்லுவார்களாம், " கண்டறியாத கனடா, கண்ட கண்ட புதுப்புது வியாதி எல்லாம் வருகுது என", ஆனால் அப்படி வியாதி வந்தவர்களில் வயதை கேட்டால், 75 உம் 80 ஆயும் இருக்கும், அவர் சொல்லுவர் 75 அல்லது 80 வயதில் என்ன வருத்தம்தான் வராது? உரில எங்களுக்கு இப்படி வருவதில்லை, ஏனென்றால் எல்லாரும் அதுக்கு முன்னமே போய் சேர்ந்து விடுவினம். இதைத்தான் நான் சொல்லவருவது, கனடாவில வந்து 90 வயது மட்டும் இருக்க விரும்பினால் எல்லா வருத்தமும், வியாதியும் வரும். நிம்மதியாய் 50 அல்லது 60 வயதில , கம்பு மாதிரி இருந்திட்டு, 6 மாதம் அல்லது 1 வருடத்தில போக வேண்டும் என்றால்..ஊருக்குத்தான் போகவேண்டும். அதேபோல பொண்சாதி அல்லது புருஷன் கட்டின பிடியில இருக்க வேண்டும் எண்டாலும் அங்கேதான்....

நன்றி வணக்கம்..

Share this post


Link to post
Share on other sites

உங்கள் முடிவு என்னவாய் இருக்கும் சொல்லுங்களேன்.............

குழந்தையை நல்ல முறையில் வைத்துக் காப்பாற்ற படிப்பும் வேலையும் மனைவியிடம் இருப்பதால் மனைவியிடம் ரொம்ப நன்றி என்று சொல்லிவிட்டு போய்கொண்டே இருக்கவேண்டியதுதான். இதுக்கெல்லாம் மண்டையைபோட்டு உடைக்கமுடியாது. தோப்பில் இருந்தாலும் ஒவ்வொரு மரமும் தனிமரம் என்பதுபோல் மனைவி பிள்ளைகள் போன்ற எப்படியான உறவுகள் இருக்கின்றபோதும் அவனவனே அவனவனுக்கு எப்போதும் உண்மை என்பதை உணர்ந்து வாழவேண்டும். வாழ்க்கையில் ஒன்றே காதல் கலியாணம் மனைவி பிள்ளைகள் தவிர வாழ்கையே அவைகளாகிவிடமுடியாது.

Share this post


Link to post
Share on other sites

குழந்தையை நல்ல முறையில் வைத்துக் காப்பாற்ற படிப்பும் வேலையும் மனைவியிடம் இருப்பதால் மனைவியிடம் ரொம்ப நன்றி என்று சொல்லிவிட்டு போய்கொண்டே இருக்கவேண்டியதுதான். இதுக்கெல்லாம் மண்டையைபோட்டு உடைக்கமுடியாது. தோப்பில் இருந்தாலும் ஒவ்வொரு மரமும் தனிமரம் என்பதுபோல் மனைவி பிள்ளைகள் போன்ற எப்படியான உறவுகள் இருக்கின்றபோதும் அவனவனே அவனவனுக்கு எப்போதும் உண்மை என்பதை உணர்ந்து வாழவேண்டும். வாழ்க்கையில் ஒன்றே காதல் கலியாணம் மனைவி பிள்ளைகள் தவிர வாழ்கையே அவைகளாகிவிடமுடியாது.

இதுதான் இந்தப் பூமியில் உயிரின வாழ்வியல் யதார்த்தம்.

---------------------------------------------------------

எல்லாத் தனியனும் தனித்து வாழ முடியும். அதற்கான வாழ்வுத் தகவை இந்தப் பூமி அளித்துள்ளது. இடையில் மனிதன்.. நாகரிகம் என்றும்.. கலாசாரம் என்றும்.. குடும்பம் என்றும்.. சமூகம் என்றும்.. அரசியல் என்றும்.. அரசு என்றும்.. பொருண்மியம் என்றும்.. கல்வி.. தகமை என்றும்.. தனக்கு தானே போட்டுக் கொண்ட விலங்குகளை உடைக்க பயப்பிடுவது சுத்த முட்டாள் தனம்.

ஒரு ஜீவனுக்கு எழுத்தறிவித்தோம்.. என்று போட்டு போடி போ என்று போய்க்கிட்டிருக்க வேணுமே தவிர.. போகப் போறன் என்று நிக்கிறவளை தடுத்து வைச்சு மாரடித்து தன் சொந்த வாழ்க்கையை சீரழிக்கக் கூடாது. அதேபோல்.. அந்தப் பெண்ணுக்கும் சுயமா வாழ வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டிருந்தால் அதை தடுக்க முடியாது. அவள் நினைத்தபடி வாழ்வது என்பது அவளின் விருப்பம். :lol:

இது எல்லாத்தையும் தவிர்த்திருக்கலாம் கலியாணம் என்ற ஒன்றை செய்யாமல் விட்டிருந்தால்..! :lol::(

-------------------------------------------------------------

கதை எழுதும் அவசரமோ அல்லது தட்டச்சு பிரச்சனையோ தெரியவில்லை நிறைய எழுத்துப் பிழைகள் உள்ளன. அவற்றால் கதையின் உயிர்ப்போட்டம் சற்றுக் குறைவடைகிறது கவனியுங்கோ அக்கா. :lol:

அதுமட்டுமன்றி பாலகுமாரன்.. ஆனந்தராஜன் கதைக்குள்.. ராஜகுமாரன் என்றொருத்தனும் நுழைகிறான். அவனால் தான் இவ்வளவு பிரச்சனைகளும் போலும்....?? ! :(

Share this post


Link to post
Share on other sites

நன்றி ....

இப்படி எந்தனை பேருக்கு நடக்குமோ தெரியாது, ஆனால் வாழ்வின் சில கசப்பான முடிவுகளில் இதுவும் ஒன்று. அதற்கு மேல் யாரையும் குறைகூறுவதற்கு முன் சில விடையங்களை பார்க்கவேண்டும். கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை, என்பது போல், பலரும் வெளிநாட்டில் உள்ள வசதிகள் வாய்ப்புகளை பயன்படுத்தில் எல்லாவகையிலும் முன்னுக்கு வர விருப்பம், அதே நேரத்தில் அவர்களில் கலாச்சார வழமைகளை ஏற்றுக்கொள்ள தயக்கம். ரோமில் இருந்தால் ரோமானியனை போல் இரு என்பது போல், விரும்பிய நேரத்தில் மருத்துவம் படிக்கலாம், என்றால் ஏன் விரும்பிய ஒருவனானோடு வாழ அல்லது விரும்பாத ஒருவர் உடன் வாழ வேண்டும். அந்த பெண் செய்தது சரியோ பிழையோ தெரியாது, ஆனால் அப்படி ஒருவர் மருத்துவம் படிக்கலாம், விஞ்ஞானம் படிக்கலாம், நீச்சல் உடையுடன் கடற்கரைக்கு போகாலாம் என்றால் இதுவும் சரியே. நாங்கள் இப்பவும் விரும்புவது, எங்களில் கலாச்சாசத்தில், சிலதுதுகளை தக்க வைத்து, --அது என்ன என்னவென்பததே ஆளுக்கு ஆள், ஊருக்கு ஊர் மாறுபடும். இங்கே உள்ள நல்லனா எல்லாவற்றையும் அடைவோம் என்றும் அவர்களில் குறைகளை, அவர்களில் குறைகள் என நாங்கள் கருதுபவற்றை நாங்கள் முடிந்தளவு தவிர்ப்போம். ஆனால் இது எந்தளவு தூரம் சாத்தியப்படும் என்று அனுபவித்து பார்த்தால் தான் தெரியும்.

எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் சொன்ன கதை..இங்கே கனடாவில் உள்ள பல வயோதிபர்களிடம் (அவர் சொல்லுவது கிழவிகளிடம் ) கதைத்தால் சொல்லுவார்களாம், " கண்டறியாத கனடா, கண்ட கண்ட புதுப்புது வியாதி எல்லாம் வருகுது என", ஆனால் அப்படி வியாதி வந்தவர்களில் வயதை கேட்டால், 75 உம் 80 ஆயும் இருக்கும், அவர் சொல்லுவர் 75 அல்லது 80 வயதில் என்ன வருத்தம்தான் வராது? உரில எங்களுக்கு இப்படி வருவதில்லை, ஏனென்றால் எல்லாரும் அதுக்கு முன்னமே போய் சேர்ந்து விடுவினம். இதைத்தான் நான் சொல்லவருவது, கனடாவில வந்து 90 வயது மட்டும் இருக்க விரும்பினால் எல்லா வருத்தமும், வியாதியும் வரும். நிம்மதியாய் 50 அல்லது 60 வயதில , கம்பு மாதிரி இருந்திட்டு, 6 மாதம் அல்லது 1 வருடத்தில போக வேண்டும் என்றால்..ஊருக்குத்தான் போகவேண்டும். அதேபோல பொண்சாதி அல்லது புருஷன் கட்டின பிடியில இருக்க வேண்டும் எண்டாலும் அங்கேதான்....

நன்றி வணக்கம்..

வல்கனோ.. கதை பற்றியும் ஊர் பற்றியும் கனடா வாழ் கிழவிகள் பற்றியும் உங்கள் பார்வையில் குறைகள் இருக்கின்றன.

ஒருவரின் படிப்பு அவரின் வேலையை அந்தத் துறை சார்ந்த அறிவை பெறுவதற்கு உதவலாம். ஆனால் படிப்பே குடும்ப வாழ்க்கை அமைத்துக் கொடுக்க முடியாது (சில பெண்ணைப் பெத்தவங்களின் வெட்டி எதிர்பார்ப்பை கெளரவத்தை பூர்த்தி செய்யவும் உதவலாம்.).

இந்த இடத்தில் அந்தப் பெண் தான் தனித்து வாழ முடியும் என்ற நிலைக்கு வரும் போது கணவனின் தேவையை நிராகரிக்க முற்படுகிறாள். அதுதான் நடக்கிறதே அன்றி இதற்குள் படிப்பு அவளின் தனித்து வாழும் தன்மைக்கான உறுதிப்பாட்டை வழங்கி இருக்கிறதே அன்றி அது குடும்ப வாழ்வை பிரிக்கவோ சேர்க்கவோ கற்றுக் கொடுப்பதில்லை. அந்தப் பெண்ணின் மனநிலை மாற்றம் என்பது அவளின் குடும்பத்தில் இருந்த சொந்தப் பலவீனமே அன்றி.. அதற்கும் கல்விக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை.

அந்தப் பெண் கலியாணம்.. மற்றும் கணவனை ஒரு கருவிகளாக பாவித்திருக்கிறாளே அன்றி அவனைக் கூட ஒரு மனிதனாக தனக்குரியவனாக வைத்திருக்கவில்லை. அப்படி சிந்தித்திருந்தால் அவனோடு உறவு பலப்பட்டிருக்குமே அன்றி இப்படி ஆகி இருக்காது. எப்படித்தான் உயர்ந்தாலும் கூட வந்தவனை விட்டு போக மனம் இடமளித்திருக்காது. ஒட்டாத உறவுகள் போலிப் பாசங்கள் அன்புகள்.. இப்படித்தான் வேளை வரும் போது பிரிந்துவிடும். :lol:

உந்த ஊரில இருந்து வந்த கனடாக் கிழவிகள் கனடாவில இருந்தால் வருத்தம் என்றால் மீண்டும் ஊரில போய் இருக்க விருப்பமோ என்று கேளுங்கோ.. அதுக்கு விருப்பமில்ல. கட்டையில போற வயசிலும் கனடா.. சிற்றிசன் சிப் வேண்டும் என்று கேட்குங்கள். கனடா பாஸ்போட் எடுத்துத்தா என்று நிக்குங்கள்.

ஊரில பிறந்து வளர்ந்தவர்களுக்கு அந்த காலநிலை கூடிய செளகரியத்தை அளிக்கும். அவர்களே கனடா போன்ற காலநிலை வேறுபட்ட தேசங்களுக்கு நகரும் போது உடலும் தன்னை மீள ஒருங்கிசையச் செய்ய வேண்டி இருப்பதால்.. அது வயதானவர்களில் தாக்கத்தை தருவதால் நோய்கள் என்று அவர்கள் சொல்லும் உடல் உழைவுகள் மூட்டுழைவுகள் என்று பல உபாதைகள் ஏற்படலாம். இது கனடா தந்த வருத்தமல்ல.. கட்டையில போற வயசிலும் கனடா வரனும் என்ற விரும்பத்துக்கு உடல் இசையாததால் வருவது. அதுபோகப் போக சரி வந்திடும்.

அதற்காக ஊரில 60 வயதில் எல்லாரும் இறக்கினம் என்றது கொஞ்சம் ஓவர். சிறீலங்காவில் சராசரி ஆயுட்காலம் 74 வயது என்று நினைக்கிறேன். கனடாவிலும் கிட்டத்தட்ட அப்படி தான் என்று நினைக்கிறேன். :lol:

Share this post


Link to post
Share on other sites

நெடுக்கு ஏன் பெண்களை வெறுக்கிறார் எண்டது இந்தக் கதையில இருந்து விளங்குது..! :lol::lol:

பெண்களில் மட்டுமல்ல ஆண்களிலும் இப்படியானவங்க இருக்காங்க.

அந்தப் பெண் கலியாணம்.. மற்றும் கணவனை கருவிகளாக பாவித்திருக்கிறாளே அன்றி அவனைக் கூட ஒரு மனிதனாக தனக்குரியவனாக வைத்திருக்கவில்லை. அப்படி சிந்தித்திருந்தால் அவனோடு உறவு பலப்பட்டிருக்குமே அன்றி இப்படி ஆகி இருக்காது. எப்படித்தான் உயர்ந்தாலும் கூட வந்தவனை விட்டு போக மனம் இடமளித்திருக்காது. ஒட்டாத உறவுகள் போலிப் பாசங்கள் அன்புகள்.. இப்படித்தான் வேளை வரும் போது பிரிந்துவிடும். இதற்காக எவரும் வருத்தப்பட்டு அவர்களின் சொந்த வாழ்க்கையை சீரழிப்பதை தான் வெறுக்க வேண்டும்.

எந்தச் சந்தர்பத்திலும் இப்படியெல்லாம் ஆகக் கூடாது என்று வாழ்வது நல்லது தானே. வாழும் வாழ்க்கையை இனியதாக தீர்மானிக்க அவனனால மட்டும் தான் முடியும். இன்னொருவரால் அது முடியாது. அதைத்தான் இந்தக் கதை உணர்த்துகிறது. அதையே நம் முன்னோரும் சொல்லி உள்ளனர். எவன் கேட்டான். பாழாங்கிணற்றுக்குள் விழுந்துவிட்டுத்தான்.. ஐயோ விழுந்திட்டனே.. என்று கதறுகிறான். :lol:

Share this post


Link to post
Share on other sites

ஒரு நாள் அவனது பேருக்கு ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு குழந்தையையும் அழைத்து கொண்டு மாலினி வீட்டை விட்டு போய் விடாள். காலம் உருண்டது ஒருவருடமாகியது . ஆனந்த ராஜன் மிகவும் கவலைப்பட்டான் அவளை இரண்டு வேலை செய்து படிப்பித்தான் குழந்தையை கவனித்தான் . சமையல் வேலையும் ஒழுங்காக செய்ய மாடாள் சில நாட்கள் கடையிலும் சில நாட்கள் தனக்கு தெரிந்த முறையிலும் சமைத்து சாபிட்டு இருக்கிறான். குழந்தை மீது மிகவும் விருப்பம். என்ன செய்வது ...எனக்கு அமைந்த வாழ்வு என்று கவலைபட்டு கொண்டு இருக்கும்போது ..குடும்ப் அலுவலகத்தில் இருந்து அவனுக்கு விவாக் ரத்து விண்ணப்பம் வந்தது. அவன் என்ன செய்வது குழந்தையை பிரிய விருப்ப்மில்லை .தொடர்ந்து வாழ்வும் முடியாது .....

முடிவு தெரியாமல் கலங்கு கிறான்...........

கணவனை மதிக்கத் தெரியாத மனைவி வீட்டில் என்னத்துக்கு..... சனி*ன் தொலைஞ்சுது என்று தலைமுழுகி விட்டு,

மாலினி மனம் மாற முதல் விவாகரத்தை ஆனந்தராஜன் ஏற்றுக் கொண்டு புதிய கலியாணத்தை செய்வதே புத்திசாலித்தனம்.

பிள்ளைக்காக அவர் மாலினியுடன் தொடர்தும் வாழ முற்பட்டால்.... ஆனந்தராஜன் மேலும் பல அவமானங்களை சந்திக்க வேண்டிவரும்.

Share this post


Link to post
Share on other sites

தமிழைப் பிச்சு உதறி இருக்கிறமாதிரி தெரிகிறது, எழுத்துப் பிழைகளைச் சொன்னேன்.

மருத்துவப் படிப்புப் புனிதமானது என்று சொல்லிக் கேள்விப்பட்டு இருக்கிறேன். பல உயிர்களைக் காப்பதற்காகப் படிக்கும் படிப்பு அது. அப்படி இருக்கும் போது உங்கள் கதையில் வரும் மாலினி தனது கருவை (ஒரு உயிரை) கொன்றது ஏன்? படிப்பு தேவை தான் ஆனால் படிப்பு ஒன்றே தேவை என்ற நிலையில் அவள் தனது கருவைக் கலைத்திருந்தால் மனைவியின் மனநிலையை அப்போதே கணவன் கருத்தில் வைத்திருந்து செயல் பட்டு இருக்க வேண்டும். (ஒரு நோக்கத்திற்காக கருவைக் கலைப்பதற்குக் கூட மன திடனான ஒரு பெண், இன்னொரு நோக்கத்திற்காக கணவனை பிரிந்தும் வாழக் கூடியவள் என்று விளங்கி இருக்க வேணும்)

மனைவியுடன் சேர்ந்து வாழாவிட்டாலும், தகப்பன் உண்மையில் ஆசைப் பட்டால் பிள்ளையின் வாழ்வில் தகப்பன் எல்லா உரிமையையும் சட்டப் படி எடுக்கலாம் தானே? பிரிந்து போறது என்று முடிவேடுத்தவர்களை திரும்பி வாவென்று அழைத்து வாழ்க்கை நடத்த முடியாது. ஆனந்த ராஜனுக்கும் ஒரு நல்ல காலம் வரும். அடுத்த முறையாவது அவர் நிதானத்தோடு செயல் பட வாழ்த்துக்கள்.

Share this post


Link to post
Share on other sites

தமிழைப் பிச்சு உதறி இருக்கிறமாதிரி தெரிகிறது, எழுத்துப் பிழைகளைச் சொன்னேன்.

--------

குட்டி, நிலாமதி ரீச்சர் எழுத்துப் பிழை விட்டதை என்னாலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. :lol:

Share this post


Link to post
Share on other sites

என் கதைக்கு கருத்துபகிர்ந்த புத்தன்...... புரட்சி..... இசை .....யாயினி .....வல்கனோ .....சுகன் ....நெடுக்ஸ் .... சிறி .....குட்டி யாவருக்கும் நன்றி ......என் எழுத்துப் பிழை திருத்தி வாசிப்பீர்கள் என்ற நம்பிக்கை ...அவசரம் ...மற்றும் கணனியின் சதி ..

. manivi ...மனைவி .kaloori கலூரி கல்லூரி ..............இப்படி பிழைகள் குட்டி சிறீ நெடுக்ஸ் ..........இனி கவனித்து எழுதுகிறேன். ( இவ இப்படிதான் சரியான் அசட்டை )

Share this post


Link to post
Share on other sites

வாழ்க்கையின் வழுக்கல்களை கதையாகத்தரும் ரீச்சருக்கு நன்றிகள்

எனக்கும் இங்கு பலர் எழுதியதுபோல்...

எடுத்தெறிந்து விட்டு அடுத்த கட்டத்தைப்பற்றி சிந்திப்பதுதான் சரியாகப்படுகிறது

எப்போ மனம் ஒத்துப்போகவில்லையே

மீண்டும் வலிந்து அல்லது கெஞ்சி ஒட்டவைப்பதால் அது ஒட்டிவிடாது

வாழ்க்கை என்பது வாழ்வதற்கே

அதை புரியாதவர்களுடன் பங்கு போட்டு என்ன பலன்.

நிச்சயம் வைத்தியர் உணர்வார் தன் தவறை.

ஆனால் அதுவரை மற்றவர் காத்திருக்கவேண்டியதில்லை

Share this post


Link to post
Share on other sites

கொடுத்து வைத்த மனிசன் வீட்டுக்குள்ள இருந்து கொண்டு நொய் நொய் என்டு கொன்டு இருப்பதைவிட வெளியேறியது இருவருக்கும் நல்லது.

Share this post


Link to post
Share on other sites

எதுவாக இருந்தாலும் இல்லறவாழ்வில் தாம்பத்திய உறவு என்பது மிக முக்கியமானதும், அவசியமானதும்கூட ! மனிதர், விலங்குகள் என்று ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் , ஏழை,பணக்காரன் என்று இருந்த போதிலும் இதில் மட்டும் எல்லாரும், எல்லாமும் பாரபட்சமின்றி ஒரேயளவு சந்தோசத்தையே அனுபவிக்கின்றன. "கண்ணை விற்று ஓவியம் வாங்குவதும் / இதை ஒதுக்கிவைத்து வாழ்க்கை வசதியை தேட முயல்வதும் " ஒன்றுதான்.

ஆனந்தராஜனின் குடும்பத்தில் இந்த அலைவரிசை குழம்பியதால்தான் அவரின் ஆனந்தமே பறிபோனது.

நீங்களும் பல ஏழ்மையான குடும்பங்களை கவனித்திருப்பீங்கள், பகல்முழுதும் அரிசியில்லை, சீனியில்லை, அது இல்லை, இது இல்லை என்று சண்டை பிடிப்பார்கள் . ஆனால் அடுத்தநாள் காலையில் அந்தப் பெண் அதிகாலையில் தலைமுழுகி அடுப்புமூட்டி தேத்தண்ணி வைத்துக் கொண்டிருக்கும் . அந்த சந்தோசம் பணத்தால் வாறதில்லை, இரவு சந்தோசமாய் இருந்ததால் வந்தது.

வெளிநாடுகளிலும் பல குடும்பங்கள் பிரிய இதுவும் முக்கிய காரணமாகும்! :lol:

Share this post


Link to post
Share on other sites

சுவி என்ன சொல்ல வாறீர்கள்

அவர்களுக்குள் அந்த பிரச்சினை என்று எப்படி....???

வீட்டில இன்றைக்கு ஏதும் பிரத்தியேகமாக நடந்ததோ... :lol:

Share this post


Link to post
Share on other sites

அவள் கேட்ட் போதும் கணவன் ஆனந்தராஜன் ராஜன் மறுத்து விடான். அவன் பகல் நேர பணி முடிந்து வீட்டுக்கு வந்தால் இவள் கல்லூரியில் இருப்பாள். தனது நேரத்தை பயனுள்ள முறையில் செலவு செய்யவும் வீட்டு பணத்தேவையை ஈடு கட்டவும் இரண்டாவது வேலைக்கு செல்ல தொடங்கினான் அவர்களது வாழ்வு இயந்திர மயமானது வீட்டுக்கு வந்தால் அவள் இல்லை எந்நேரமும் கல்லூரி என்று இருப்பாள். இப்படியாக் ஐந்து வருடங்கள் ஓடி விட்டது

இதுதான் விசுகு!

உங்களுக்குத் தெரியாதா இப்ப யாழ் கோவில்களில் மாறி மாறித் திருவிழாக்கள் நடப்பது! :lol:

Share this post


Link to post
Share on other sites

பாலகுமாரன்மனைவியுடன் அன்பான் வாழ்க்கை நடத்தி ஒரு பெண குழந்தைக்கு தந்தையானான். ஆனந்த ராஜன் மாலினி தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் இதுவரை கிட்ட் வில்லை . ஒரு நாள் ஆந்த ராஜனிடம் மனைவி மாலினி ..தான் வீட்டில் இருக்க பிடிக்காமல் படிக்க போவதாக கேட்டாள் . அவனும் சம்மதம் தெரிவிகக் வே அவள் மருத்துவக்கலூரியில் சேர்ந்து படித்தாள். படிப்புச் செலவுக்கு தந்தையிடம் இருந்து பணம் பெற்றுக் கொள்ள அவள் கேட்ட் போதும் கணவன் ஆனந்தராஜன் ராஜன் மறுத்து விடான். அவன் பகல் நேர பணி முடிந்து வீட்டுக்கு வந்தால் இவள் கல்லூரியில் இருப்பாள். தனது நேரத்தை பயனுள்ள முறையில் செலவு செய்யவும் வீட்டு பணத்தேவையை ஈடு கட்டவும் இரண்டாவது வேலைக்கு செல்ல தொடங்கினான் அவர்களது வாழ்வு இயந்திர மயமானது வீட்டுக்கு வந்தால் அவள் இல்லை எந்நேரமும் கல்லூரி என்று இருப்பாள். இப்படியாக் ஐந்து வருடங்கள் ஓடி விட்டது . இடையில் கரு தங்கும் சந்தர்ப்பம் வரவே மாலினி விரும்பவில்லை . கலைத்து விடாள். ஒருவாறு அவள் மருத்துவபட்ட்ம் பெற்று அயல நகரத்தில் ஒரு மருத்துவ நிலையத்தில் பணிக்கு அமார்ந்தாள் . எல்லாம் முடிந்தது தனக்கு இனி நல்ல காலம் என்று எண்ணியிருந்தான் ஆனந்தராஜன் .. காலம் விரைவாக ஓடியது திருமணமாகி பத்து பத்து வருடங்க ளாகியது மீண்டும் அவள் கருத்தரித்து ஒரு பெண குழந்தைக்கு தாயானாள். மாலினி தனது பணி நேரத்தை இரவு நேர பணியாக்கி கொண்டாள். பகலில் குழந்தையை பார்ப்பாள். பின் இரவு ஆனந்த ராஜன் குழந்தையை பார்க்க இவள் பணிக்கு செல்வாள். இப்படியாக் குழந்தை வளர்ந்து ஆறு வயதை அடைந்தாள் . பின்பு மாலினியில் வாழ்வில் மாற்றம் கண்டது. குழந்தைக்கு அப்பா தரம் குறைந்தவர் என்பது போல் காட்டிக் கொண்டாள். தனது நண்பர்கள் வீட்டு விழாக்களில் குழந்தையை மட்டும் அழைத்து செல்வாள். தனது பரம்பரை பெருமை பற்றி பெருமிதமாக் பேசிக் கொள்வாள். . ராஜனை மதிப்பதேயில்லை . ஏதும் விழாக்களுக்கு போனால் மற்றைய நட்புகளுக்கு கணவனை அறிமுகம் செய்ய மாட்டாள் . ராஜன் மிகவும் வேதனைபட்டான்.

ஒவ்வொருவரும் எதிர்பார்ப்புடனும், ஏராளமான கனவுகளுடனும் தங்கள் திருமண வாழ்வைத் தொடங்குகின்றனர். இந்த எதிர்பார்ப்புகள், கனவுகள் சின்னச்சின்னப் பிரச்னைகளால் சிதைந்து போகும்போது கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. இதனால் விவாகரத்து என்ற அவசர முடிவை எடுக்கின்றனர். ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் தன்மை இல்லாததாலும், சந்தேக எண்ணங்களாலும் பல குடும்பங்கள் பிரிகின்றன. கணவன் மனைவியிடையே தாம்பத்ய உறவுச் சிக்கலால் விவாகரத்து கோருகின்றனர்.

இன்றைய அவசர உலகில் காலை முதல் இரவு வரை வேலை செய்வதால் கணவன் மனைவி தங்களின் எண்ணங்களையும் உணர்வுகளையும் பகிர்ந்துகொள்ள நேரமில்லாமல் போகிறது. உணர்வுகளை மட்டுமல்லாமல் அவர்களிடையே ஏற்படும் சிறுசிறு பிரச்னைகளைக்கூட ஒருவருக்கொருவர் பேசித் தீர்த்துக்கொள்ள முடியாமல் போகிறது. இதனால் சிறு பிரச்னைகூட பூதாகரமாகிறது. மேலும் பொருளாதாரத்தில் இருவரும் சமமாக இருப்பதால் உன்னை நம்பி நான் இல்லை என்று மனதளவில் கௌரவ எண்ணம் வந்து தங்கள் பிரச்னையை பெரியவர்களிடம் கூறாமல், தங்களுக்குள்ளேயே பிரிவு என்னும் ஒரு முடிவை எடுக்கின்றனர்.

இந்த நிலையைத் தவிர்க்க கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழப் பழகிக்கொள்ள வேண்டும். ஒருவர் மற்றவர் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். இருவருக்கும் ஏற்படும் சின்னச்சின்னப் பிரச்னைகளை மனம்விட்டுப் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும். மணமுறிவு என்பது தங்களைச் சார்ந்தவர்களையும் பாதிக்கும் என்பதை தம்பதிகள் உணரவேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மண முறிவு ஏற்பட்டால் அது அந்தக் குடும்பத்தை வெகுவாகப் பாதிக்கும்.

ஒரு குழந்தை நன்கு வளர வேண்டுமானால் அந்தக் குடும்பத்தில் அன்பான, அமைதியான சூழ்நிலையும், அனுசரணையான பேச்சும், அறிவார்ந்த வழிகாட்டலும் மிகவும் தேவை. அதைத் தரவேண்டிய பெற்றோர்களே ஆளுக்கொரு திசையில் இருந்தால் எதையுமே பெறமுடியாத அந்தக் குழந்தையின் தளிர் மனது எவ்வளவு வேதனை அடையும். இதனால் குழந்தைகளின் எதிர்காலமே வீணாகிவிடும்

வாத்தியார்

*********

Share this post


Link to post
Share on other sites

வாத்தியார்..உங்கள் அழகான் ஆழமான் கருத்துக்கு நன்றி :D

Share this post


Link to post
Share on other sites

ஒவ்வொருவரும் எதிர்பார்ப்புடனும், ஏராளமான கனவுகளுடனும் தங்கள் திருமண வாழ்வைத் தொடங்குகின்றனர்...

வாத்தியார்

*********

இது தானே பெரிய பிரச்சனை, அளவான யதார்த்தமான ஆசைகளை மனுசர் எதிர் பார்க்கிறதில்லையே... வைச்சால் குடும்பி, அடிச்சால் மொட்டை என்று தானே இப்ப கனபேர் வெளிக்கிட்டு இருக்கினம்.

Share this post


Link to post
Share on other sites