• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

கரும்பு

ஆவி அல்லது பேய் உங்கள் உடம்பினுள் மூன்று இடங்களூடாக இறங்குமாம்: 1. உச்சந்தலை 2. நெற்றிப்பொட்டு 3. கால் கட்டைவிரல்கள்

Recommended Posts

ஆவி அல்லது பேய் உங்கள் உடம்பினுள் மூன்று இடங்களூடாக இறங்குமாம்: 1. உச்சந்தலை 2. நெற்றிப்பொட்டு 3. கால் கட்டைவிரல்கள்

கனடாவில் $ 9.95 மாதக்கட்டணத்துடன் பார்க்கக்கூடியதும், பல சுவாரசிய நிகழ்ச்சிகளை உள்ளடக்கியதுமான தொலைக்காட்சி விஜய். மற்றைய தமிழ் தொலைக் காட்சிகளுக்கான மாதக்கட்டணங்கள் அதிகம்: தமிழ்வண், ஏரீஎன் தமிழ் / ஜெயா, சன் ஆகியவற்றுக்கான மாதக்கட்டணம் $ 14.95 ( நமக்கு முதுகு சொறிவதற்கு ஐந்து பைசா விட்டுக் கொடுக்கின்றார்களாம் ), தமிழ்விசன் மாதக்கட்டணம் $19.45.

கடந்தகிழமை தொலைக்காட்சி முன்னால் குந்தியபோது, விஜய் தொலைக்காட்சியில் ‘வாங்க பேசலாம் வாங்க’ எனும் நிகழ்ச்சி சென்றது. வழமைபோலவே தலை ஆட்டலும், நெளிப்புக்களும், மேளமும், தாளமும் என நிகழ்ச்சி போயிருக்க வேண்டும். ஆனால், நான் பார்க்கத்தொடங்கிய சமயத்தில் நிகழ்ச்சி விருந்தினராக வருகைதந்த காட்டு மரக்குற்றி போன்ற ஒருவர் இவ்வாறு கூறினார்:

“நான் எங்கள் மக்களுக்கு ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகின்றேன், ஆவி அல்லது பேய் உங்கள் உடம்பினுள் மூன்று இடங்களூடாகவே இறங்கும்: 1. உச்சந்தலை, 2. நெற்றிப்பொட்டு, 3. கால் கட்டைவிரல்கள். நீங்கள் பயப்படும் போதுதான் பேய் உங்களினுள் இறங்குகின்றது. அஞ்சாமல் நெஞ்சை நிமிர்த்தியபடி இப்படிச் செய்யும்போது ( கழுத்தை திருப்பி பரதநாட்டியம் ஆடும்போது பிடிக்கப்படுவது போன்ற அபிநயம் ஏதோ காட்டுகின்றார் ) பேய் உங்களினுள் இறங்காது”.

தொடர்ந்து பேசினார்: “தமிழ்சினிமாவில் பேய்கள் பற்றி மிகைப்படுத்திக் காட்டப்படுவதனால் உண்மையான பேய்களை மக்கள் அறிந்துகொள்ள முடியாமல் போகின்றது”. மேடையில் அவர் முன்னாள் உட்கார்ந்திருந்த கலைஞர் ஒருவர் “கால் கட்டை விரல்களுக்கு பிளாஸ்டர் ஒட்டினால் பேய் உடம்பினுள் உள்நுழைவதை தவிர்க்கமுடியாதா” என கேட்கின்றார்.. நெளிப்புக்களும், கதைகளுமாக வாங்க பேசலாம் வாங்க தொடர்கின்றது.

‘போடா லூசு’ என நினைத்துவிட்டு நான் மேல்மாடி அறைக்கு சென்றேன், பின்னர் கீழே வந்தேன். அன்று இரவு அனைவரும் உறங்கிய பின்னர் கணணியை பாவித்துவிட்டு ‘மூத்தா’ அடிப்பதற்காக மேல்மாடி மலசல கூடத்திற்கு சென்றேன், பின்னர் மீண்டும் கீழே இறங்கி வந்தேன். எங்கும் இருளாக காணப்பட்டது, ஓர் குத்து மதிப்பிற்கு கைப்பிடிகளை பற்றியபடி நடந்து சென்றேன், நடக்கும்போது சக், சிக், டக், டிக், கிரீச், உச்.. என பல விநோதமான ஓசைகள் கேட்டன. வாங்க பேசலாம் வாங்கவில் தோன்றிய மரக்குற்றி நினைவில் வந்தது… மூன்று இடங்களூடு பேய் இறங்குமாம்.

என்ன செய்யலாம்? ஒளிவிளக்கை போடலாமா? அல்லது ஐயோ என்று கூக்குரல் இடலாமா? அசரீரி போல் நான் நடக்கும்போது பல்வேறு ஓசைகள் என்னை பின் தொடர்கின்றன. இப்போது நான் என்ன செய்யலாம்? நான் பயப்படக்கூடாது… நான் தைரியமாய் இருக்கவேணும்… மரக்குற்றி சொன்னதுபோல் கழுத்தை 90 பாகை என்ன 360 பாகையுக்கே சக்கரமாக சுழற்றி நான் அபிநயம் பிடிக்க வேண்டும். நம்மட உடலுக்கை பேய் குடித்தனம் நடத்த நாம என்ன சத்திரமா நடத்துறம்? ம்ஹ்ம்.. விடப்படாது… பேயை உள்நுழைய விடவே மாட்டன்…

கனடாவில நாசமாப்போவார் கட்டிற வீடுகளில பல்வேறு கோளாறுகள் உள்ளன. இரண்டாம் மாடியில இலையான் நொய்ங்க் நொய்ங்க் என்று சத்தம் இட்டால் காற்றுக் குழாய்களூடாக அந்தச்சத்தம் கீழ்த்தட்டு வரை கேட்கும். மாடிப்படிகளில் ஓர் பலகையில் சிறிய தட்டு தட்டினால் முழுவீட்டிலும் உள்ள பலகைகள் குலுங்கிக் குலுங்கி ஆரவாரம் செய்யும். விநோதமான ஓசைக்கான காரணம் இவைதான்.

எமது ஐம்புலன்களின் மட்டுப்படுத்தல்கள் ( Limitations ), சூழ்நிலைகள், மற்றும் எம்முள் பதிந்துள்ள பல்வேறு விடயங்களே பேயையும், பிசாசையும், பீதியையும் கிளப்புகின்றன. எனது வினா யாதெனில் பேய் உடம்பை விட்டு வெளியேறும் பகுதிகள் எவை? கீழ்வரும் மூன்று இடங்களை இதற்காக பிரேரணை செய்கின்றேன். 1. சிறுநீர்த் துவாரம், 2. ஆசனவாயில் ( கு.துவாரம் ), 3. Underarm ( க.கட்டு )

- கலைஞன்

தகவல் மூலம்: http://karumpu.com/archives/657

Share this post


Link to post
Share on other sites

எனது வினா யாதெனில் பேய் உடம்பை விட்டு வெளியேறும் பகுதிகள் எவை? கீழ்வரும் மூன்று இடங்களை இதற்காக பிரேரணை செய்கின்றேன். 1. சிறுநீர்த் துவாரம், 2. ஆசனவாயில் ( கு.துவாரம் ), 3. Underarm ( க.கட்டு )

பேய் வந்தால் போகமாட்டுது ...கரும்பு..... :lol::lol:

மனிசனுக்கு 9 வாசல்(ஒட்டை வீடு ஒன்பது வாசல்) வாசலாலும் போக சந்தர்ப்பமுண்டு

Share this post


Link to post
Share on other sites

ஜனநாயக உலகில் மக்களை சிந்திக்க விடமால் செய்யும் 3 முக்கிய விடயங்கள்.

1. வாக்குச் சீட்டு.

2. சினிமாவும் காதலும் கலியாணமும்.

3. பேய் பிசாசு.

இவை மூன்றும் இல்லையேல் ஜனநாயகம் என்ற போர்வையில் ஒரு கூட்டம் மனிதர்கள் பிற மனிதர்களின் சிந்திக்கும் ஆற்றலை கட்டிப்போட்டு ஆட்சி செய்வது நடக்காத காரியம்.

இன்றைய சூழலில் தமிழர்களுக்கு முக்கியமா இவற்றை ஆழமாக கற்றுக் கொடுப்பது தமிழர்கள் ஜனநாயகத்தில் ஊறித்திழைத்து சுயசிந்தனையற்ற முட்டாள்களாக இன்னும் இன்னும் வளர உதவி செய்யும்.

நல்ல சமூகப் பணி. :lol: :lol:

Share this post


Link to post
Share on other sites

கரும்பு,

பெண் மோகினிப் பேய் எதுக்குள்ளாள உடம்புக்குள் இறங்கும்? பிழையா நினைக்க வேண்டாம். அந்த இடத்தை திறந்து வைக்கலாம் என்றுதான் கேட்கிறேன்.

Share this post


Link to post
Share on other sites

மோகினிப் பேய் ஆண்களைத் தான் பிடிக்குமாம் அதுவும் குறிப்பாய் பெண்களே வேண்டாம் பெண்கள் கூடாது சொல்பவர்களையும்,பெண்களை வெறுப்பவர்களையும் தான் அதிகம் பிடிக்குமாம்...எந்த வழியால இறங்கும் என்டால் அது வாயால தான் இறங்கும் :lol::D:lol:

Share this post


Link to post
Share on other sites

மோகினிப் பேய் ஆண்களைத் தான் பிடிக்குமாம் அதுவும் குறிப்பாய் பெண்களே வேண்டாம் பெண்கள் கூடாது சொல்பவர்களையும்,பெண்களை வெறுப்பவர்களையும் தான் அதிகம் பிடிக்குமாம்...எந்த வழியால இறங்கும் என்டால் அது வாயால தான் இறங்கும் :lol::D:lol:

அப்ப தம்பி கொடுத்துவச்சவர். :D

Share this post


Link to post
Share on other sites

சும்மாவே சனம் உளைக்கிற காசு எல்லாம் இந்த தெரு வளிய இருந்து கண்டதையும் சொல்லிக் குளப்பும் கள்ள சாத்திரி மாரிட்டக் கொட்டிக் கொண்டு இருக்குதுகள்..இப்படியான பரப்புரைகளைப் பார்த்தால் கேட்டால் போச்சு..நல்ல பணி மச்சான். :lol::lol:

Share this post


Link to post
Share on other sites

தம்பி கரும்பு.............கண்ட கண்ட காட்சிகளை பார்க்க வேண்டாம் பார்த்தமா சிரிச்சமா என இரு இருக்கவும். அதையே கற்பனை பண்ணிக் கொண்டு இருக்க வேண்டாம். டி வீ யை விட வேறு உபயோகமான் வேலைபார்க்கவும் டி வீ ஒருபொளுதுபோக்கு........பேய் பிசாசு எல்லாம் இல்லை. ஒவ்வொருவரின் மன ஓட்டம் ..மூத்தவர்களின் கற்பனைக்கதை இது உண்மையில் மனோ தத்துவம் சார்ந்தது.

Share this post


Link to post
Share on other sites

மச்சான் :lol:

நீங்க நல்லாகத்தான் பேய் க் காட்டுகின்றீர்கள் :lol:

வாத்தியார்

*********

Share this post


Link to post
Share on other sites

கனடாவில் இந்திய தொ(ல்)லை காட்சி மட்டுமல்ல கடைகளுக்கு முன்னாலும் சாத்திரிமார்கள் காவி உடையுடன் அலைகிறார்கள்.Tim Horton ல் இரண்டு வெள்ளைகள் காவியுடை தரித்த சாமியார் காப்பி வாங்க வரும் போது இவர் என்ன மக்கியில் விழுந்து விட்டார் போல என சொல்லி தங்களுக்குள் சிரிக்கிறார்கள். :lol::lol:

Share this post


Link to post
Share on other sites

கனடாவில் இந்திய தொ(ல்)லை காட்சி மட்டுமல்ல கடைகளுக்கு முன்னாலும் சாத்திரிமார்கள் காவி உடையுடன் அலைகிறார்கள்.Tim Horton ல் இரண்டு வெள்ளைகள் காவியுடை தரித்த சாமியார் காப்பி வாங்க வரும் போது இவர் என்ன மக்கியில் விழுந்து விட்டார் போல என சொல்லி தங்களுக்குள் சிரிக்கிறார்கள். :lol::lol:

அய்யோ நுணா அண்ணா..இந்த சாத்திரி மாரின் மனைவிமார் செய்யிற அனியாயம் சொல்லி மாளாது..நான் ஒரு நாள் ஒரு மோலுக்கை பாத்தேன்..எனக்குத் தெரியாது அவர்கள் இந்த சாத்திரி மாரின் மனைவிமார் எண்டு..நல்ல வடிவாக சாறி எல்லாம் உடுத்து எங்கயோ கலியாண வீட்டுக்கு போற மாதிரி வந்து மோலுக்கை ஏன் இருக்கிதுகள் எண்டு திரும்பி பார்த்துட்டன்..உடன் என் பின்னால் வர தொடங்கீட்டுதுகள்..அப்புறம் தான் எனது சிறிய தாயார் சொன்னா சாத்திரம் சொல்கிறவையளின்ட மனைவிமாராம்..மோலுக்கை வந்து இருந்து ஆக்கள் சேர்த்துக் குடுக்கிறவையாம்.இந்தக் குளப்படிக்கு பிறகு நான் எங்காவது போனால் அங்காலை இங்காலை திரும்பிப் பாக்கிறது இல்லை.. :D:D

Share this post


Link to post
Share on other sites

குருஜி! இது நல்ல ஆராச்சி , முன்பு ஐங்கரன் தொலைக்காட்சியிலும் இது சம்பந்தமாய் ஒரு நிகழ்சிப் போட்டியே நடந்தது, ஒரு அரவாணிப் பெண்மணி இதை நடத்தினார்.இடையில் நிப்பாட்டி விட்டார்கள் . முடிவு தெரியாது. பிறகு நடத்தினார்களோ அதுவும் தெரியாது. மொத்தத்தில் பேய்க்காட்டிப் போட்டார்கள்! :D

Share this post


Link to post
Share on other sites

யாரது போகிற போக்கில் எங்கட சாத்திரியையும் இழுப்பது ?

[

எனது வினா யாதெனில் பேய் உடம்பை விட்டு வெளியேறும் பகுதிகள் எவை?

- கலைஞன்

தகவல் மூலம்: http://karumpu.com/archives/657

எனக்குத் தெரிந்து கொட்டாவியும் குசுவும் தான் எம்மிடம் இருந்து வெளியேறும் ஆவிகள் :D

Share this post


Link to post
Share on other sites

சனம் எல்லாம் உசாராய்த்தான் இருக்கிது, நல்லது.

Share this post


Link to post
Share on other sites

 • Topics

 • Posts

  • ரக்ஸ் கடத்தலில் ஈடுபட்ட பொலிஸாருக்கு மரண தண்டனை – பொலிஸார் நம்பிக்கை!.   போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடைய போதைப்பொருள் ஒழிப்பு பணியகப் பொலிஸார் குற்றவாளிகளாக காணப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படும் என்று நம்புகிறோம் என பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். 1979ம் ஆண்டுக்கு பின்னர் நாட்டில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதில்லை என்றபோதிலும் எந்தவொரு பொலிஸாரும் குற்றவாளிகளா காணப்பட்டால் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்குமாறு நீதிமன்றில் கோருவோம் என்றும் அவர் கூறினார். 18 பொலிஸ் போதைப்பொருள் பணியக அதிகாரிகளின் இழிவான நடத்தை முழு பொலிஸாரையும் தலைகுனிய வைத்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.   https://newuthayan.com/ரக்ஸ்-கடத்தலில்-ஈடுபட்ட/
  • 24 மணிநேரத்தில் 256 பேருக்கு தொற்று; ஒருவர் குணமடைந்தார்       இலங்கையில் கடந்த 24 மணித்தியாலத்தில் ஒருவர் மாத்திரமே கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளார். அதற்கமைய இலங்கையில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1980ஆக உயர்ந்துள்ளது. ஐ.டி.எச்-இல் சிகிச்சைப்பெற்று வந்த ஒருவரே இறுதியாக குணமடைந்துள்ளார். இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டில்  256 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களில் 253 பேர் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்தவர்கள் என்பதுடன், மேலும், வெளிநாடுகளில் இருந்த வந்த இருவர் மற்றும் கடற்படை வீரர் ஒருவர் ஆகியோர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இலங்கையில் இதுவரை 2350 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தற்போது,  359பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/செய்திகள்/24-மணநரததல-256-பரகக-தறற-ஒரவர-கணமடநதர/175-253015  
  • சிங்கள நீதிபதிகளும் சளைத்தவர்கள் அல்ல. பாரிய குற்றசெயல்களில் ஈடுபடும் இளம் குற்றவாளிகளுக்கு தீர்ப்பு வழங்கும்போது நன்னடத்தை நிலையங்கள் சீர்திருத்தப்பள்ளிகள் போன்ற புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பாமல் நேரடியாகவே கட்டாய சமுதாய சேவை (Compulsory community service) என்ற போர்வையில் அவர்களை துறவிகளுக்கான புத்த மடாலயங்களுக்கு அனுப்பிவைக்கும்படி தீர்ப்பு வழங்குகிறார்கள்.
  • குழந்தைக்கு வித்தியாசமாகப் பெயரிட்ட உசைன் போல்ட்!   மின்னல் வேக மனிதர் என்று புகழப்படும் உசைன் போல்ட், தனது பெண் குழந்தைக்கு வித்தியாசமான முறையில் பெயரிட்டுள்ளார். ஜமைக்காவைச் சேர்ந்த பிரபல ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட், 100 மீ. ஓட்டத்தை 9.58 விநாடிகளில் ஓடி உலக சாதனை செய்தவர். 100 மீ. ஓட்டம், 200 மீ. ஓட்டம், 4*100 தொடர் ஓட்டம் ஆகியவற்றில் உலக சாதனை படைத்து தன்னிகரற்ற தடகள வீரராக உள்ளார். ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் 8 முறை தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். 2008, 2012, 2016 என மூன்று ஒலிம்பிக்ஸ் போட்டிகளிலும் 100 மீ. ஓட்டம், 200 மீ. ஓட்டம் ஆகிய இரண்டிலும் தங்கப் பதக்கங்களை வென்று அரிய சாதனையையும் படைத்தவர். 2017 உலக சாம்பியன்ஷிப் போட்டிக்குப் பிறகு ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார். உசைன் போல்ட்டின் காதலி காசி பென்னட்டுக்குக் கடந்த மே 17 அன்று பெண் குழந்தை பிறந்தது. உசைன் போல்ட் தந்தையானது குறித்த தகவலை ஜமைக்கா பிரதமர் ஆண்ட்ரூ ஹோல்னஸ், தனது ட்விட்டர் வழியாகத் தெரிவித்தார். உசைன் போல்ட் – காசி பென்னட் ஆகிய இருவரும் 2014 முதல் காதலித்து வருகிறார்கள். இந்நிலையில் தனது குழந்தைக்கு ஒலிம்பியா லைட்னிங் என்று பெயர் சூட்டியுள்ளார் போல்ட். குழந்தையின் புகைப்படத்தையும் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். http://kisukisu.lk/?p=38124
  • சர்தாரே நாகூர் பதிக்கரசே... பாரும் என் முகம்